பாரதியின் அனைத்து எழுத்துகளையும் எரித்து விடுவார்! ஏன்?

57 views
Skip to first unread message

தமிழ் ஓவியா

unread,
Jan 13, 2015, 9:05:51 AM1/13/15
to beyo...@googlegroups.com

13.1.15

பாரதியின் அனைத்து எழுத்துகளையும் எரித்து விடுவார்! ஏன்?

பெரியார், பாரதியார், பாலசந்தர்

கேள்வி: பொதுவாக, பெண் விடுதலை பேசும் உங்கள் படங்களில் பாரதியாரையும், அவரது பாடல்களையும் அதிகம் பயன்படுத்தி இருக்கிறீர்கள். பாரதியாரைவிட தீவிரமாகப் பெண்ணியம் பேசியவர் பெரியார். ஆனால், உங்கள் படங்களில் ஏன் பெரியாரைப்பற்றிய சித்திரிப்புகள் இல்லை?


நேரிடையான, சிறப்பான, இந்தக் கேள்வியை திருவில்லிபுத்தூர் தோழர் எம். அமல்ராஜ் கேட்டிருக்கிறார். பாராட்டுக்குரியவர். 14.9.2011 தேதி ஆனந்தவிகடன் இதழில் இந்தக் கேள்வி இடம் பெற்றுள்ளது.


வாசகர் கேள்வி - பதில் பகுதியில், இயக்குநர் கே.பாலசந்தரிடம் கேட்கப்பட்ட வேள்வி இது.


திரையுலகில் நன்றாகவே காலூன்றிவிட்ட முக்கிய பார்ப்பன புள்ளி திரு.கே. பாலசந்தர் மத்திய அரசு ஏ.ஜி. அலுவலகத்தில் பணியாற்றி, நாடகத்தில் ஈடுபாடு கொண்டு, மெதுவாக மெதுவாக நகர்ந்து திரையுலகில் குடில் அமைத்துக் கொண்டவர்.

 தமிழர் தலைவர் அவர்கள், பெரிதும் வெளியில் அறியப்படாத இருந்த பெரியாரின் கருத்துக்களை, தந்தை பெரியாரின் கலை இலக்கியச் சிந்தனைகள் என்ற வித்தியாசமான தலைப்பில் தொடர் சொற்பொழிவு. ஆற்றிய, அரிய பல செய்திகளை நமக்கு வழங்கியுள்ளார். அதில் கூறப்பட்ட ஒரு செய்திக்கு எடுத்துக்காட்டாக பாலசந்தரின் பதில் அமைந்துள்ளது. 

பார்ப்பனரை எதிர்ப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை அழிப்பதுதான் பார்ப்பன தர்மம் என்ற கருத்தை சொற்பொழிவு வாயிலாக விளக்கியுள்ளார்.


இனி, வாசகர் கேட்ட கேள்விக்கு, நேரிடையாக தந்தை பெரியார்போல், நான் பார்ப்பனர் ஆதிக்க எதிர்ப்புப் போராளியாகிய பெரியாரைப்பற்றி என் படங்களில் சித்திரிப்பு செய்வது, என்னுடைய குலதர்மத்துக்கு விரோதமானது என்று கூறியிருக்கலாம். மாறாக, மேதாவிதனத்தில் பாரம்பரிய பாதுகாவலராக, பேதமை வெளிகாட்டி, பாரதியைத் தூக்கிப் பிடிக்கும் பதிலை கூறியுள்ளார். 

பெரியாருக்குமுன் பாரதியார் பிறந்து விட்டாராம். அதனால் பெரியார் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாதவராய் விட்டாராம். சிவாஜி கணேசனுக்குப் பின் பிறந்த நடிகர்களை இவர் தொடர்புடைய படங்களில் ஒதுக்கி வைக்கவில்லையே! அவர் கூறியுள்ள பதில்:


ஒரு வேளை பெரியார் பாடல்கள் எழுதியிருந்தால் பயன்படுத்தி யிருப்பேனோ? (இவரின் கருணையில் வர வேண்டும்) பெரியாருக்குமுன் பாரதி பிறந்து விட்டதாலும், அவருடைய பெண்ணியக் கருத்துக்களில், பாரம்பரியத்தின் நல்ல அம்சங்களும் (பார்ப்பனத் தன்மைக்கு பக்கபலமாக இருப்பதுதான் பாரம்பரியத்தின் நல்ல அம்சம்) புதுமையின் அவசியமும் சேர்ந்து இருந்ததாலும் (பகுத்தறிவுப் பகலவன் பெரியார் எடுத்துக் கூறாத புதுமைகளை, பாரதியார் கூறினார் போலும்) அதுவே எனக்கு போதுமானதாக இருந்தது வழவா என்ற பதிலைவிட வெறுப்பைக் கொட்டும் பதில்.


பாரதியாரைவிட தீவிரமாகப் பெண்ணியம் பேசியவர் பெரியார் என்று கேள்வியில் வாசகர் அழுத்தம் கொடுத்து கூறியுள்ளாரே. பாராமுகம் ஏனோ, பாலசந்தர் அய்யர்வாளே? பாரதிக்குப் பின்னால் பிறந்ததால், தீவிரமாகப் பெண்ணியம் பேசிய பெரியார், தீண்டப்படாதவராகி விட்டாரோ? பின்னால் பிறந்த பெரியாருக்குத்தானே, பெண்குலம் பெரியார் என்று பட்டம் அளித்தது? தாதாசாகேப் பால்கே விருது, பொன்னாடை, 10 லட்ச ரொக்கம் பெற்ற பாலசந்தருக்கு, இந்த பெரியார்விருது பற்றிய பின்னணி தெரியாது. பெரியார் இவருக்கு முன்பே பிறந்து விட்டாரே. இவருக்கு எப்படி தெரியும்?


பாரதியார் நமக! எல்லா நல்ல அம்சங்களும் கொண்ட பாரதியின் துதிபாடும் பாலசந்தருக்கு, எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாசிரியர், நாடகாசிரியராக விளங்கியவர். இவருக்குமுன் பிறந்தவர் கல்கி கிருஷ்ணமூர்த்தி, இவர் பிரஸ்தாபிக்கும் பாரதியாரைப்பற்றி, பாரதியார் வாழ்ந்த காலத்திலேயே என்ன கருத்துத் தெரிவித்துள்ளார் என்பதை அவர் அறிந்து கொள்ள வேண்டும்.


இதற்குமுன்னதாக, தந்தை பெரியாரை மிஞ்சும் வகையில் பெருமை பெற்றவர் பாரதி என்று பேசும் பாலசந்தர், கல்கிக்கும், பெரியாருக்கும் தொடர்புடைய ஒரு நிகழ்ச்சியையும் தெரிந்து கொள்வது நல்லது. அதன்மூலம் பெரியாரின் மேன்மையை உணர்ந்து, அவரைப்பற்றி இனி அவரின் திரைப்படத்தில் சித்திரிக்க வேண்டிய எண்ணம் வரலாம்.


1948இல் கல்கி தன் மகள் திருமணத்திற்கு பெரியாரை அழைத்திருந்தார். அவர் வசதிப்படி பகல் 12 மணிக்கு பெரியார், திருமண வீட்டிற்குச் சென்றார். மணமக்கள் காலில் விழுந்து வாழ்த்துப் பெற வந்தழைத்த பெரியார் தடுத்தார். விபூதியை நீட்டினார். இதை செய்தித்தாளில் வர இருப்பதை கல்கி தடுத்து நிறுத்தினார் (கல்கி நூற்றாண்டு நினைவுகள் கங்கை பகீரதன், ஆதாரம்)


சுப்பிரமணிய பாரதி, செப்டம்பர் 11ஆம் தேதி 1921இல் இறந்த பிறகு, அவருடைய கவிதா திறமை, புகழ்பற்றி 1935இல் ஒரு விவாதம் நடைபெற்றுள்ளது. இந்த விவாதத்தில், அன்றைய காங்கிரஸ் இயக்கத்தைத் சேர்ந்தவர்களும், எழுத்தாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இதுபற்றிய செய்தியை தி இந்து 4.9.2011 தேதியிட்ட இதழில் கே.ஆர்.ஏ. நரசய்யா என்பவர் விரிவாக தந்துள்ளார்.


பாரதியின் கவிதையில் உள்ள நல்ல அம்சங்களில் மனநிறைவு கண்ட பாலசந்தர் அவர்கள், விவாதத்தில் வெளிப்பட்ட கருத்துகளின் மூலம், பாரதியாரைப் பற்றி அவர் மேலும் அறிவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுகிறது.
வ.ரா. என்று பலருக்கும் அறிமுகமான வ. ராமசாமி அய்யங்கார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, சிட்டி சுந்தர்ராஜன், கு.பா. ராஜகோபாலன் விவாதத்தில் கருத்து பரிமாறிக் கொண்டவர்கள்.


வ.ரா. அவர்களைப் பற்றி, தமிழர் தலைவர் அவர்கள், அவருடைய தந்தை பெரியாரின் கலை இலக்கியச் சிந்தனைகள் சொற்பொழிவில், சிறப்பாக குறிப்பிட்டு கூறியுள்ளார்கள். அக்கிரகாரத்து அதிசய மனிதர், வ.ரா. என்று குறிப்பிட்டுள்ளார். பாரதியாரைப்பற்றிய வாழ்க்கை வரலாற்றை முதலில் எழுதியவர் வ.ரா. டி.எஸ். சொக்கலிங்கம் அவர்களால் வெளியிடப்பட்டு வந்த மணிக்கொடி என்ற தமிழ் இதழில், வ.ரா. நீண்ட நாள்கள் பணியாற்றினார். மணிக்கொடியின், ஆகஸ்ட் 1934இதழில் என். ராமரத்தினம் என்ற கட்டுரையாளர், ஒரு பிரச்சார கூட்ட பேச்சில்., வ.ரா. பேசியதாகக் கூறப்பட்ட பேச்சை குறிப்பிட்டிருந்தார். நான் ஷேக்பியர், ஷெல்லி போன்ற சிறந்த ஆங்கிலக் கவிஞர்களின் கவிதைகளைப் படித்துள்ளேன். நோபல் பரிசு பெற்ற இந்தியக் கவிஞர் தாகூர் கவிதைகளையும் படித்துள்ளேன். ஆனால் அவர்களுடைய அனைத்து கவிதைகளையும் ஒன்று சேர்த்து பார்த்தாலும், பாரதியார் எழுதிய பாட்டின் ஒரு வரிக்கு இணையாகாது என்று கூறுவேன் வ.ரா. பேசிய இந்த பேச்சை மேற்கோள்காட்டி, நெல்லை நேசன் என்ற பெயரில், சிறீ ஆச்சார்யா என்பவர், தினமணி 1935, பாரதி மலரில், வ.ரா. பேசிய கருத்தை மறுத்து, பாரதி ஒரு நல்ல கவி, ஆனால் சிறந்த கவிஞர் அல்ல (Bharati is a good Poet but not a great poet) என்று எழுதினார்.


கல்கி கிருஷ்ணமூர்த்தி ஆனந்தவிகடன் இதழின் ஆசிரியராக இருந்த காலம். அவரது இலக்கிய மாணவன் என்று, தன் பெயரைக் குறிப்பிடாமல், ஆசிரியருக்கு கடிதம் என்று ஒரு கடிதத்தை இதழில் (3.11.1935) வெளியிட்டிருந்தார். அதில், காரைக்குடி கூட்டத்தில் ஒருவர் கூறிய கருத்து (வ.ரா.வின் பெயர் குறிப்பிடப்படவில்லை) சரியான கருத்தா என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த கருத்து சரி, அல்ல என்பது இந்த கடிதம் எழுதுவோர் கருத்து என்று கூறப்பட்டிருந்தது. அந்த கடிதத்தின் கருத்துக்கு இதழாசிரியரின் கருத்து என்ற முறையில் ஆசிரியர் (கல்கி) கருத்தை வெளியிட்டார்.


அங்கு (காரைக்குடியில்) பேசியவரின் பெயர் குறிப்பிட்டிருந்தது. அதை நான் வேண்டுமென்றே குறிப்பிடவில்லை. காரணம் அவர் அப்படிக்ஷீயீ சொல்லி இருக்க மாட்டார் என்ற எண்ணத்தால், அப்படி யாரேனும் சொல்லியிருந்தால், அவருக்கு இலக்கியத்தைப்பற்றியோ அல்லது கவிதைநீளீயீபற்றியோ ஏதும் அறியாதவர் என்பதை உணர வேண்டும். அவர் கல்வியறிவு இல்லாதவர் என்று முடிவு செய்ய வேண்டியதாக உள்ளது. அவர் ஷெல்லி, தாகூர், ஷேக்ஸ்பியர் கவிதைகளைப் படித்திருப்பாரா என்பது சந்தேகமே. அப்படி அவர் படித்திருந்தால், அவை அவருக்கு விளங்கியிருக்காது. பாரதி யாரின் கவிதைகளைக்கூட அவர் விளங்கிக் கொண்டிருப்பாரோ என்பது சந்தேகமே
ஆனந்த விகடனில் வந்த இந்த கல்கியின் கருத்தைத் தொடர்ந்து, வ.ரா. 30.11.1935 தேதி சுதேசமித்திரன் இதழில், பாரதியும், இலக்கிய விமர்சனமும் என்ற தலைப்பில் விரிவான கட்டுரை எழுதினார். அதே இதழில் கல்கி, வ.ரா.வின் கருத்துக்கு 7.12.1935 இதழில் மறுப்பை எழுதினார். அதில், டால் ஸ்டாய் பாரதியின், வள்ளி பாட்டை படித்தால், பாரதியின் அனைத்து எழுத்துகளையும் எரித்து விடுவார்


இந்த நிலையில், வ.ரா. கொழும் பிலிருந்து (வ.உ.சி.யின் வேண்டுகோளுக் கிணங்க, வ.ரா. அக்டோபர் 1934இல், கொழும்பிலிருந்து வெளிவந்த வீரகேசரி இதழில் பணியாற்ற சென்றிருந்தார்) கு.பா. ராஜகோபாலனுக்கு வருத்தப் பட்டு ஒரு கடிதம் எழுதினார். அதில், பாரதி ஒரு நல்ல கவிஞர், ஆனால் சிறந்த கவிஞர் அல்ல என்ற கல்கியின் கருத்தை மறுத்து எவரும் எழுத வில்லையே என்று, எழுதினார். அதைத் தொடர்ந்து, சிட்டி, கு.பா.ரா. கல்கியின் கருத்தை எதிர்த்து நீண்ட கட்டுரைகள் எழுதினார்கள். அவை, கண்ணன் என் கவி என்ற தலைப்பில் 1937இல் சங்கு கணேசன் அவர்களால் வெளியிடப் பட்டது.

பிற்காலத்தில், கல்கி, சிறப்பு மிக்க கவிஞராக இல்லாவிட்டாலும், நல்ல கவிஞராக இருந்த பாரதியின் பற்றாள ராக இருந்து, அவருக்கு எட்டாய புரத்தில் மணிமண்டபம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டார்.

பார்ப்பன அக்ரகார சொந்த பந்தமான ராமாயண காலட்சேபம், கீதா உபதேசம், லலித சகஸ்ரநாமம், பாகவதம், தேவி மகாத்மியம், பட்டியலில் உள்ளவர்தான் சுப்பிரமணிய பாரதி. இவற்றின் திருகூட்ட துதிபாடியாக பாலசந்தர் இருப்பதில் வியப்பேது மில்லை. 

                          ---------------------------மு.வி. சோமசுந்தரம் "விடுதலை” 10-3-2012
Reply all
Reply to author
Forward
0 new messages