புத்தாண்டாம் ஆங்கில புத்தாண்டு
கொண்டாட்டமாய் பிறந்த புத்தாண்டு
அதை மகிழ்வுடன் வரவேற்போம் ..
கடந்தகால சோதனைகளை துடைத்து விட்டு
சூழ்ந்துள்ள வேதனைகளை தொலைத்து விட்டு
புத்தாண்டில் பதிப்போம் சாதனை கல்வெட்டு
சாதியின் பெயரால் சண்டையிட வேண்டாம்
மதத்தின் பெயரால் மண்டை உடை பட வேண்டாம்
அனைவரும் சமம் என்று உரக்க சொல்வோம்
அனுதினமும் மனதில் நிலைநிறுத்துவோம்
கடினமாய் உழைத்தே பிழைத்திடுவோம்
சோம்பல் எண்ணங்களை அழித்திடுவோம்
தீவிரவாத எண்ணங்களை கைவிடுவோம்
அமைதியை கை கொண்டு ஆனந்தம் கொள்வோம்
அனைவரின் வாழ்விலும் அமைதி நிலைத்திருக்க
என்றென்றும் அந்த ஆண்டவனை நினைத்திடுவோம்!