Fwd: 25 பெப்ரவரி-2011 ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் ஜொலிக்குமா?

28 views
Skip to first unread message

Jeya Bright

unread,
Feb 23, 2011, 10:15:06 AM2/23/11
to bat...@googlegroups.com, fir...@googlegroups.com, mainfr...@googlegroups.com, mainfr...@googlegroups.com, mapl...@googlegroups.com, cmcmfchennai, mapleses...@yahoogroups.co.in, maples...@googlegroups.com
---------- Forwarded message ----------
From: Kanniyakumari District Railway User's Association <kkd...@gmail.com>
Date: Mon, 21 Feb 2011 16:47:18 +0400
Subject: 25 பெப்ரவரி-2011 ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் ஜொலிக்குமா?
To:

*25 பெப்ரவரி-2011 ரயில்வே பட்ஜெட்டில் தமிழகம் ஜொலிக்குமா?
**
மத்திய அரசின் ரயில்வே பட்ஜெட் 25 பெப்ரவரி-2011
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்ட இரயில்
பயணிகள் சங்கத்தின் சார்பாக இரயில்வே அமைச்சர், தமிழகத்தில் உள்ள அனைத்து
பராளுமன்ற உறுப்பினர்கள்; மற்றும் இரயில்வே அதிகாரிகளுக்கும் ரயில்வே
பட்ஜெட்டில் கீழ் குறிப்பிடபட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற கோரிக்கை மனு
அளிக்கபட்டது. ரயில்வே துறையால் தென் மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கபட்டு
வருகிறது. ஓவ்வொரு ஆண்டும் ரயில்வே துறை பட்ஜெட்டும் தென் மாவட்ட மக்களுக்கு
பலத்த ஏமாற்றத்தையே தந்து வருகிறது. குமரியின் நலைநகர் நாகர்கோவிலிருந்து
வருகின்ற இரயில்வே பட்ஜெட்டில் (பெப்ரவரி-2011) சென்னை, ஹைதரபாத், பெங்கÙர்
மற்றும் மங்கÙர்க்கு தினசரி ரயில்கள் இயக்க வேண்டும் என்பதே நமது தென் மாவட்ட
மக்களின் நீண்டநாள் கோரிக்கை ஆகும். தென் மாவட்டத்தை சார்ந்த பெருவாரியான
இளைஞர்கள் சென்னை, ஹைதரபாத் மற்றும் பெங்கÙரில் பணிபுரிந்து வருகின்றனர். அது
போல எண்ணற்ற மக்கள் கேரளாவுக்கு தொழில் நிமித்தம் செய்து வருகின்றனர். இவர்களை
கருத்தில் கொண்டு கீழ்கானும் ரயில்களை வருகின்ற இரயில்வே பட்ஜெட்டில்
(பெப்ரவரி-2011) இயக்கும் பட்சத்தில் தென் மாவட்ட பயணிகளுக்கு பேருதவியாய்
இருக்கும்.

இரயில்கள் இயக்கம்

• நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி, விருதுநகர்,மதுரை, திண்டுக்கல், ஈரோடு,
சேலம், ஓசூர் வழியாக பெங்களுருக்கு செல்லும் வராந்திர இரயிலை 16538/16537
தினசரி இரயிலாக இயக்க கோரிக்கை. இந்த இரயில் காலை 9 மணிக்கு முன் நாகர்கோவில்
வந்துசேரவேண்டும், பெங்களுருக்கு காலை 8 மணிக்கு முன் போய்சேருமாறு இயக்கபட
வேண்டும்.

• வேளாங்கண்ணி, நாகூர், தஞ்சாவூர், திருவாருர்; கோயிலுக்கு செல்லும்
பக்தர்களின் வசதிக்காக கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம், நாகர்கோவில்,
திருநெல்வேலி, விருதுநகர், புதுக்கோட்டை, காரைகுடி, திருச்சி, தஞ்சாவூர்,
திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு தினசரி இரவு நேர இரயில்
இயக்க கோரிக்கை. இந்த ரயில் திருவனந்தபுரத்திலிருந்து இரவு 7:00 மணிக்கு
புறப்படுமாறும் திருச்சிக்கு அதிகாலை 5 மணிக்கு செல்லுமாறும் கால அட்டவணையை
அமைத்து மாவட்டத்தின் முக்கிய இரயில் நிலையங்களில் நிரந்தரமாக நின்று
செல்லுமாறு இயக்க கோரிக்கை

• தமிழ்நாட்டின் தென்பகுதியிலிருந்து ஹைதரபாத்துக்கு செல்ல வேண்டுமனால்
காலையில் சென்னை சென்று மாலையில் சென்னையிலிருந்து ஹைதரபாத்துக்கு செல்லும்
இரயிலில் செல்ல வேண்டும். இதனால் பகல் நேரம் முழுவதும் சென்னையில் வீணாகி;றது.
சென்னையிலிருந்து ஹைதரபாத் செல்ல மூன்று இரயில்கள் இயங்கிவருகின்றது. அதில்
எதாவது ஒரு இரயிலை விழுப்புரம், திருச்சி, மதுரை, நாகர்கோவில் வழியாக
கன்னியாகுமரி; வரை நீட்டித்து இயக்க கோரிக்கை இந்த தினசரி இரயில் நீட்டிப்பு
செய்யும் போது தமிழ்நாட்டின் கன்னியாகுமரி முதல் சென்னை வரை உள்ள அனைத்து
மாவட்டங்களிலிருந்து ஹைதரபாத்துக்கு நெரடி ரயில் வசதி கிடைக்கும் என்பது
குறிப்பிடதக்கது.

• சென்னையிலிருந்து விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மைலாடுதுறை,
கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி,
நாகர்கோவில், வழியாக திருவனந்தபுரத்துக்கு புதிய தினசரி ரயில் இயக்க கோரிக்கை.
**தெ**ன் மாவட்டத்திலிருந்து அண்ணாமலை பல்கழைகழகத்தில் படிக்கும் மாணவர்கள்
மற்றும் அதனை சார்ந்த காவேரி டெல்டா மாவட்டங்களில் பணிபுரிபவர்கள் மிகவும்
உதவியாக இருக்கும்

• சென்னை எழும்பூர்– நாகர்கோவில் (12667/12668) வராந்திர இரயிலை தினசரி
இரயிலாக மாற்றி தற்போது இயங்கும் நேரத்திலே இயக்க கோரிக்கை

• தென் மாவட்டதிலிருந்து கேரளாவிற்கு பல்வேறு தொழில் நிமித்தம்;
செல்பவர்களின் வசதிக்காக திருவனந்தபுரத்திலிருந்து மாலை நேரத்தில் மங்களுர்
புறப்படும் திருவனந்தபுரம் - மங்களுர் 16603/16604 மாவேலி எக்ஸ்பிரஸ் இரயில்
கன்னியாகுமரி வரை நீட்டிப்பு செய்ய கோரிக்கை

• கன்னியாகுமரியிலிருந்து மதுரை, திருச்சி, சென்னை வழியாக நிசாமுதீன்
(நியுடில்லி) செல்லும் திருக்குறள் அதி சூப்பர் பாஸ்டு வண்டி வாரத்துக்கு
ஒருமுறை செல்லும் ரயில் ஆகும், இந்த ரயிலை இரயிலை தினசரி இரயிலாக கோரிக்கை.

திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு
• கன்னியாகுமரி – சென்னை 742 கி.மி பகுதி ரயில் வழி தடம் இருவழிப்பாதையும்
மின்சார மயமாக மாற்றுவதற்கு தேவையான நிதி ஓதுக்க கோரிக்கை.
• கன்னியாகுமரியிலிருந்து திருச்செந்தூர் - தூத்துகுடி - இராமனாதபுரம்
வழியாக காரைகுடி வரை கிழக்கு கடற்கரை புதிய ரெயில் பாதை திட்டம் உடனடியாக
நிறைவேற்றபடவேண்டும்.
• நாகர்கோவில் இரயில் நிலைய விரிவாக்கத்துக்கு கூடுதலாக இரண்டு
பிளாட்பாரங்கள்; (24 பெட்டிகள் நீளம்), புதிதாக இரண்டு பிட்லைன்கள, முன்றாவது
பிட்லைனை 24 பெட்டிகள் நீளம் கொண்டதாக மாற்றுதல், குறைந்த பட்சம் பத்து
ஸ்டேபளின் லைன்கள் அமைக்க நிதி ஒதுக்க கோரிக்கை.
• கன்னியாகுமரி இரயில் நிலைய விரிவாக்கத்துக்கு பிளாட்பாரங்களின்
எண்ணிக்கையை 6 ஆக உயர்த்துதல் மற்றும் புதிதாக ஐந்து ஸ்டேபணின் லைன்கள் அமைக்க
நிதி நிதி ஒதுக்க கோரிக்கை.

*
*சென்னை – கன்னியாகுமரி 742 கி.மீ பகுதி இருவழி பாதையாக மாற்ற கோரிக்கை:*

* இந்தியாவின் கடைசி பகுதியான கன்னியாகுமரியிலிருந்து தமிழ்நாட்டின்
தலைநகரான சென்னை செல்லும் வழிதடம் மிக முக்கியமான ரயில் வழி தடம் ஆகும். இந்த
ரயில் தடம் தமிழகத்தின் ரயில் போக்குவரத்துக்கு முதுகெலும்பாக உள்ளது. இந்த வழி
தடம் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி நாகர்கோவில், திருநெல்வேலி,
வாஞ்சிமணியாச்சி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம்,
விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூரை சென்றடைகிறது. இந்த வழி
தடம் வழியாக தென் தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் அனைத்து ரயில்களும்
இயங்குகின்றன. இந்த வழி தடத்திலிருந்து தமிழ்நாட்டின் இதர பகுதிகளுக்கு ரயில்
வழி தடங்கள் பிரிந்து செல்கிறது. இந்த வழி தடத்தில் நாகர்கோவில் - திருநெல்வேலி
103.8 சதவிகிதம் (2008-09) நெருக்கடி நிறைந்ததாகவும், திருநெல்வேலி – மதுரை
112.6 சதவிகிதம் (2008-09) நெருக்கடி நிறைந்ததாகவும் நெருக்கடி நிறைந்ததாகவும்
அமைந்துள்ளது. இந்த வழி தடம் ஒரு வழி பாதையாக இருப்பதால் புதிய ரயில்கள்
இயக்குவதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. மற்றும் கன்னியாகுமரி –
சென்னை ரயிலில் 742 கி.மீ பயண தூரத்தை பயண நேரமாக 13:30 மணி நேரம் எடுத்து
கொள்கிறது. கன்னியாகுமரியிலிருந்து சென்னை செல்லும் ரயில் வழி தடம் இருவழிபாதை
மற்றும் மின்மயமாகும் பட்சத்தில் பயண நேரம் கணிசமான அளவில் குறைவதற்கு
வாய்ப்புக்கள் உள்ளன. கன்னியாகுமரியிலிருந்து மதுரை வழியாக வடஇந்தியாவிற்கு
அதிக ரயில்கள் இயக்குவதற்கு இந்த வழி தடத்தை இருவழி பாதையாக மாற்றினால் மட்டுமே
முடியும்.
தமிழ்நாட்டின் முக்கிய வழி ரயில் தடமாக கன்னியாகுமரி – சென்னை 742
கி.மி பகுதி அமைந்துள்ளது. இந்த வழி தடத்தில் தற்போது சென்னை எழும்பூர் -
செங்கல்பட்டு 56 கி.மி மற்றும் மதுரை – திண்டுக்கல் 66 கி.மி வழி தட பகுதிகள்
சுமார் 20 சதவிகிதம் மட்டுமே இருவழித் தடமாக மாற்றபட்டுள்ளது. மீதமுள்ள 620
கி.மீ பகுதிகள் அதாவது சுமார் 80 சதவிகித ரயில் பாதை ஒரு வழி பாதையாகவே உள்ளன.
அதில் செங்கல்பட்டு – விழுப்புரம் 103 கி.மீ பகுதிகள் மட்டும் மீட்டர் கேஜ்
பாதையை அகலபாதை பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளும் தேவைக்குக் குறைந்த
நிதி ஒதுக்கீடு காரணமாக மந்தமாக நடைபெற்று வருகிறது. இதைபோல் விழுப்புரம் -
திண்டுக்கல் 273 கி.மீ பகுதிகள் ரயில்வே நிதி நிலை அறிக்கையில் அனுமதி
அளிக்கபட்ட பகுதி ஆகும். ஆனால இந்த பணிகளும் குறைந்த நிதி ஓதுக்கீடு காரணமாக
மந்தமாக நடைபெறுகிறது. தமிழக பகுதிகளான கன்னியாகுமரி - மதுரை (246 கி.மீ)
வழித்தடங்களை இரு வழிப் பாதைகளாக மாற்றுவதற்கு நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும்
இதுகாலும் எடுக்கப்படவில்லை. கன்னியாகுமரி - மதுரை, வழித் தடத்தில் இருவழிப்
பாதை மற்றும் மின்மயமாக்கும் திட்டம் போன்றவை பல ஆண்டுகளாக கிடப்பில்
வைக்கபட்டு உள்ளன. கன்னியாகுமரி – சென்னை 742 கி.மீ வழி தடம் இருவழிப்பாதையும்
மின்சார மயம் ஆகும் பட்சத்தில் ரயில்வே துறையில் தமிழகம் வளர்ச்சி பெறும்.

*
*மின்மயமாக்குதல்*

* தற்போது சென்னை முதல் திருச்சி வரை மட்டுமே உள்ள ரயில் பாதை
மின்மயமாக்கபட்டுள்ளன. இரட்டை ரயில்பாதை திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர்
தொடர்ந்து வெளி வந்த பட்ஜெட் அறிவிப்புகளில்; நாகர்கோவில் - மதுரை (230கி.மீ)
மின்மயமாக்கும் திட்ட அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த அறிவிப்புகளும்; வெற்று
அறிவிப்புகளாகவே தொடர்கின்றன. இதே நிலையில் கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம்
முதல் மங்கÙரூ வரை இரட்டை ரயில் பாதை மற்றும் மின்மயமாக்கும் திட்ட பணிகள்
முழுமை பெற்று நிறைவடையும் நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதைப்போன்று கன்னியாகுமரி – மதுரை - திருச்சி வழித் தடம் மின்மயமாக்கும்
திட்டமும் குறைந்த நிதி ஒதுக்கீடு காரணமாக ஆமை வேகத்தில் பணிகள் நடைபெற்று
வருகின்றன.

தமிழகத்தில் உள்ள மத்திய அமைச்சர்கள் , பாராளுமன்ற
உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி பாகுபாடு இல்லாமல் அனைவரும்
இணைந்து ரயில்வே அமைச்சர் மற்றும் ரயில்வே வாரியத்தின் தலைவர் அவர்களை நேரடியாக
சந்தித்து இந்த கோரிக்கையை ரயில் பட்ஜெட்டில் நிறைவேற்றி தருமாறும் நடைபெற்று
கொண்டிருக்கும் ரயில்வே திட்ட வளர்ச்சி பணிகளுக்கு தேவையான நிதியை உடனடியாக
பட்ஜெட்டில் அறிவிக்க கோரி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

ரயில்வே துறை தற்போது நிதி நெருக்கடியில் தவித்து வருகிறது. புதிய
திட்டங்களுக்கு 50 சதவிகித நிதியை மாநில அரசு செலுத்தவேண்டும் என கூறிவருகிறது.
நமது பக்கத்து மாநிலமான கர்டநாடகம் தனது மாநில ரயில்வே வளர்ச்சிக்கு அதிக
முக்கியத்துவம் கொடுத்து 50 சதவிகித நிதியை அளித்து பல்வேறு புதிய ரயில்வே
திட்டங்களை பெற்று வருகிறது. இதை போல் தமிழக அரசம் தமிழக ரயில்வே வளர்ச்சி
திட்டங்களுக்கு 50 சதவிகித நிதியை அளிக்க வேணடும் என தமிழக மக்கள்
எதிர்பார்க்கின்றனர்.


*
*இந்தியா சுதந்திரம் கிடைத்தது முதல் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள புதிய ரயில்
பாதைக்கான சர்வே*

*1. மதுரை – கோட்டையம் - 234 கி.மீ
2. திண்டுக்கல் - சபரிமலை – 201 கி.மீ
3. அரக்கோணம் - திண்டிவனம் வழி வலாஜாபெட், ராணிபெட், ஆர்காட் -96 கி.மீ
4. ஆவடி – ஸ்ரீபெரும்புதூர் - 25 கி.மீ
5. சென்னை - ஸ்ரீபெரும்புதூர் வழி பூந்தமல்லி – 38 கி.மீ
6. சிதம்பரம் - ஆத்தூர் வழி அரியலூர், பெரம்பலூர் - 167 கி.மீ
7. திண்டுக்கல் - கூடலூர் - 131 கி.மீ
8. திண்டுக்கல் -குமிழி 134 கி.மீ
9. ஈரோடு – சத்தியமங்கலம் 63 கி.மீ
10. ஜொலார்பேட்டை - ஓசூர் வழி கிருஷ்ணகிரி 101 கி.மீ
11. காட்பாடி – சென்னை வழி கிண்டி, பூந்தமல்லி 212 கி.மீ
12. கும்பகோணம் - நாமக்கல் 178 கி.மீ
13. மதுரை – காரைக்குடி வழி மேலூர், திருப்பத்தூர் 91 கி.மீ
14. மதுரை- தூத்துகுடி 144 கி.மீ
15. மைலாடுதுறை –திருகடையூர் -தரங்கம்பாடி –திருநள்ளார் -காரைக்கால் 47
கி.மீ
16. மானாமதுரை - தூத்துகுடி 126 கி.மீ
17. மொரப்பூர் - தர்மபுரி வழி முக்கனூர் 36 கி.மீ
18. நீடாமங்கலம் - புதுக்கோட்டை வழி மன்னார்குடி 54 கி.மீ
19. ராமேஸ்வரம் - தனுஷ்கோடி 17 கி.மீ
20. சத்தியமங்கலம் - மேட்டூர் 90 கி.மீ
21. தஞ்சாவூர் - சென்னை எழும்பூர் வழி அரியலூர் 315 கி.மீ
22. தஞ்சாவூர் - புதுக்கோட்டை 47 கி.மீ
23. திண்டிவனம் - கடலூர் வழி புதுச்சேரி 77 கி.மீ
24. திருவண்ணாமலை – ஜோலார்பேட்டை 85 கி.மீ
25. வில்லிவாக்கம் - காட்பாடி 153 கி.மீ
26. மேட்டூர் - சேம்ராஜநகர் 182 கி.மீ


*
*தமிழ்நாட்டில் பணிகள் நடைபெற்றுகொண்டிருக்கும் திட்டங்கள்:-*
*ஈரோடு – பழனி புதிய வழி தடம்
கரூர் - சேலம் புதிய வழி தடம்
திண்டிவனம் - செஞ்சி – திருவண்ணாமலை
புதிய வழி தடம்
திண்டிவனம் - நகரி புதிய வழி தடம்
பெங்கÙர் - சத்தியமங்கலம் புதிய வழி தடம்
திண்டுக்கல் - பொள்ளாச்சி – பாலக்காடு ரூ பொள்ளாச்சி – கோயம்பத்தூர் கேஜ்
மாற்றுதல்
மதுரை – போடிநாயக்கனூர் கேஜ் மாற்றுதல்
மாநாமதுரை – விருதுநகர் கேஜ் மாற்றுதல்
மைலாடுதுறை – காரைகுடி ரூ திருதிறைப்பூண்டி – அகஸ்தியம்பள்ளி கேஜ் மாற்றுதல்
கொல்லம் - திருநெல்வேலி கேஜ் மாற்றுதல்
திருச்சி – நாகூர் - காரைக்கால்
நாகப்பட்டினம் - திருதிரைபூண்டி வரை நீட்டிப்பு
விழுப்புரம் - காட்பாடி கேஜ் மாற்றுதல்
அத்திபட்டு – கொருக்குபேட்டை
செங்கல்பட்டு – விழுப்புரம் -திருவண்ணாமலை
விழுப்புரம் - திண்டுக்கல் இருவழிபாதை

** தமிழ்நாட்டில் உள்ள அனைத்து M.L.A மற்றும் M.P –க்கள் இணைந்து மேற்குறிப்பிட
பட்டுள்ள அனைத்து ரயில் திட்டங்களையும் நிறைவேற்ற தமிழக அரசு 50 சதவிகித நிதியை
அளிக்க வற்புறுத்தி திட்டங்களை விரைந்து நிறைவேற்ற நடவடடிக்கை எடுக்குமாறு
தமிழக மக்கள் எதிர்பார்க்குகிறார்கள்.*


*Thanks & Regards,
**P.Edward Jeni
Secretary
*Kanniyakumari District Railway User's Association
IInd Floor, 4 Gandhi Street,
Kottar,
Nagercoil -629002,
Kanniyakumari District

--
P.Jeya Bright
Porur,
chennai-600116
PH:044-22522560
Mob:9941540250

Reply all
Reply to author
Forward
0 new messages