Sundarar and Kailasam சுந்தரர் கண்ட கைலாசம்

112 views
Skip to first unread message

Sundara rajan

unread,
Jul 24, 2009, 6:40:30 AM7/24/09
to bangalor...@googlegroups.com
அப்பர், சம்பந்தர், மாணிக்கவசகர் பற்றி சொன்னோம். சுந்தரரை பற்றி சொல்லவேண்டாமா?
 
அப்பரரை திருவையாரில் கயிலை தரிசனம் செய்யவித்தான் அந்த சிவபிரான். சம்பத்தரோ 
காளஹஸ்த்தியிலிருந்தே கயிலை காணும் பேறு பெற்றார். மாணிக்கவாசகரோ பொன்னம்
பலத்தயே கயிலையாய் கண்டு சிவபதம் பெற்றார். சமயக்குரவராகிய இன்னும் ஒருவர் எப்படி
கயிலை பார்த்தாரென பார்கலாமா
?
 
பசியுடன் ஒரு வீட்டு வாசலில் உட்கார வீடுதோறும்  அவனுக்காக உணவு கேட்டு இறைவன் 
போனது வேறு எவராக இருக்க முடியும்?. வீட்டில் மனைவியுடன் ஊடல். சமரசம் செய்விக்க
தூது போக இறைவனேயே அனுப்ப வேறு எவருக்கு தைரியம் வரும்? ஊர் எல்லைகளை
காப்பாற்றமுடியாமல் இங்கு ஏன் உட்கார்ந்து இருக்கீர்கள் என்று ஆண்டவனை வேறு யாரால்
கேட்க முடியும்? இவைகளை ( நெல் மூட்டைகளை) இங்கே கொடுத்தால் யாரால் எடுத்துக்கொண்டு
போகமுடியும். என் வீட்டுக்கே கொண்டு போய் கொடும் ஐயா என ஆண்டவனை வேறு யாரால்
அதட்ட முடியும்? இதைவிட ஆச்சரியம் என்னவென்றால் அதையெல்லாம் செய்தானே
ஆண்டவன் அதுதான். அதனால்தான் அந்த தொண்டன் ஆண்டவனை
பித்தா என்றாறோ?
 
தொண்டருக்கே தொண்டனாகிய இறைவனின் கருணையை என்னென்பது.? 
ஆவுரித்துத் தின்று உழலும் புலையராயினும்   கங்கைவார் சடைக்கரத்தாருக்கு அன்பராகில் 
அவரே நாம் வணங்கும் கடவுள்
என்றாறே அது போல் என் அடியாராயின் நான் என்னதான்
செய்யமாட்டேன்
என உலகுக்கு தெரிவிக்க ஆடின விளையாட்டா?

 
சம்பந்தர் குழந்தையாக இறைவனை நேசித்தார் அப்பர் தனனை ஒரு தாசனகாக கருதி பக்தி 
செலுத்தினார். மாணிக்கவாசகருக்கோ இறைவன் ஒரு ஞான குரு.
இறைவன் பால் செலுத்தும்
பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற
வழிகளில் தோழமை வழி  ஒன்று.  இறைவனைத் தனது
தோழனாகக் பாவிப்பது. தனக்குத்
தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக்கொண்டாராம் சுந்தரர்.
சுந்தரருக்கும் இறைவனுக்கும் நேருக்கு நேர் நடந்த சம்பாஷணைகளை கேட்க இரு செவி போதா.

சேராமான் நாயனர் ஒரு சிறந்த சிவ பக்தர். அவர் சிவ வழிபாடு செய்யும் பொழுது நித்தம்
தில்லை நடராஜபெருமானின் சிலம்பொலியை
(எப்படி கேட்குமா?  விந்து ஒலி கத்த,
சங்கோதை நாதமொடு என்று அருணகிரி சொல்லவில்லையா?) கேட்பாராம். ஒருநாள்
பூஜையில் சிலம்பொலி
தாமதமாக கேட்டது. ஏன் தாமதம் என கேட்டாராம் சேராமான் நாயனர்.
 
தில்லை கோயிலில் என் நண்பன் சுந்தரன் வந்து பாடிக் கொண்டிருந்தான். கேட்கும்
மகிழ்ச்சியில் வர தாமதம்
என்றானாம் இறைவன். யார் அந்த சுந்தரன்?’ என விசாரித்து
அவரை அடைந்து இருவரும் நெருங்கிய நண்பராகி விட்டனர்.
 
ஒரு நாள் கைலையீசனை நினைத்து சுந்தரர் பாடிக்கொண்டிருந்தார். அதை கேட்ட ஈசன் 
அழைத்து வா சுந்தரனை என ஐராவத்தை அனுப்பி விட்டான். சுந்தரும் அதில் ஏறி
கைலைக்குப் பயணமானர்.
எங்கே சேரமான் என ஒரு கணம் நினைக்க அதை சேரமான்
அறிய
(பிறர் எண்ணத்தை அறியும் ஆற்றல் அவருக்குண்டு) தன் குதிரையின் காதில் பஞ்சாட்சரம்
ஒத அதுவும் அவரை ஏற்றிக்கொண்டு காற்றில் பறந்து சுந்தரரை பிடிக்க இருவரும் கைலை
சென்றனர் அழையா விருந்தாளி சேரமான். உள்ளே செல்ல அனுமதியில்லை. சுந்தரர் மட்டும்
உள்ளே சென்றார். இறைவனை தொழுதார். பிறகு ஒரு நல்ல நண்பனுக்கு எடுத்துக்காட்டாக
சேரமான் வெளியில் காத்திருப்பதைச் சொன்னார்.
அவரை உள்ளே விடும் நந்திக்கு உத்தரவு பிறந்தது ஆண்டவனிடமிருந்து. 
உள்ளே சென்றார் சேரமான். 
 
என்ன செய்துகொண்டிருந்தீர் வெளியில்
 
கைலை உலா பாடினேன்
 
இங்கு மறுபடியும் பாடும்
 
அன்பர்களே, இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் என்று நீங்கள் கேட்பது எங்களுக்கு 
காதில் விழுகிறது.   நாங்கள் ஒன்றும் புதிதாக சொல்லவில்லையே. எத்தனைத் தடவை பாடி
விட்டோம். புரிய வில்லையா!
 
ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே முன்நாளினில்
ஆடல் வெம்பரி மீதேறிமா கயிலையில் ஏகி
ஆதி அந்த உலா ஆசு பாடிய
சேரர் கொங்குவை காவூர் நல் நாடதில்...
 
ஆரூரர் -  சுந்தரர்
தோழமை சேர்தல் கொண்டவரோடே - சேரமான்
வெம்பரி  வெள்ளைக் குதிரை
ஆதி அந்த உலா ஆசு  உலா கவிதையை ஆசு கவிதையாக 
(முதன் முதல் தமிழ் கவிதையில் உலா பாட்டானாதால் அது ஆதி உலா)
Instant Composition  அதனால் ஆசு கவி
 
இது சுந்தரர் கண்ட கயிலை அருணகிரி நாதர் வார்த்தைகளில். இதைவிட சுருக்கமாகவும், 
தெளிவாகவும் வேறு எந்த கவிஞனும் இதுவரை சொன்னதில்லை, சொல்லப்போவதுமில்லை
.
 
சுந்தரர் வானவெளியில் கைலையை நோக்கி தெற்கிலிருந்து வடக்கே பயணம் செய்த பொழுது 
அவர் உடல் சகஸ்ர சூரியனின் ஒளியை ஒன்றாகத் திரட்டி உருவாக்கியது போன்று இருந்ததாம்.
அதை கண்டவர் உபமன்னிய முனிவர்.  சிவனைத் தவிற வேறொரு தெய்வத்தை
வணங்காதவர் அவர். இரு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி அவர் கூறியது
நம்பி ஆருரன் நாம் வணங்கும் தன்மையன் 
 
அவரே நாமும் வணங்கும் தெய்வாமாகும். 
 
July 29, 2009  சுந்தரர் பிறந்த நாள் ஆடி ஸ்வாதி நன்நாளாகும்

Brought to you by Shantha and Sundararajan



Asato ma sad gamaya- Lead me from the unreal to the Real;
Tamaso ma jyotir gamaya-Lead me from darkness to Light;
Mrtyor mamrtam gamaya-Lead me from death to Immortality.

Asogan

unread,
Jul 24, 2009, 7:03:50 AM7/24/09
to bangalor...@googlegroups.com

Thanks Mama and Mami.

 

I may not have access to the kind of quality and devotions that people like Appar and all had. BUT, I am proud and has lot of “ GHARVAM “ for living and having lived during the period of people like you.

 

Namaskaram and namaskarams again.

 

T.Asogan.

99455 05401.


P.Ayappan

unread,
Jul 24, 2009, 9:41:30 AM7/24/09
to bangalor...@googlegroups.com
Super Amma Super
 
nam Thamar
 
Ayappan
Muruga saranam

Sowmini Ramakrishnan

unread,
Jul 29, 2009, 9:44:06 AM7/29/09
to bangalor...@googlegroups.com
very interesting & informative. thanks naNbare-naNbiye!
sowmini

2009/7/24 Sundara rajan <sudar...@gmail.com>

Sowmini Ramakrishnan

unread,
Aug 1, 2009, 8:22:00 AM8/1/09
to bangalor...@googlegroups.com
recently we (Hema,&myself )had been to Thiru annamalai, & the whole temple town was full of decorations & the temple was also decorated coz-  Sundarar vizha was celebrated. & we were thrilled to have the darsan of 1008 Sankhabhishekam.
sowmini

2009/7/24 Sundara rajan <sudar...@gmail.com>
--
An Excellent Credit Score is 750
See Yours in Just 2 Easy Steps!
Reply all
Reply to author
Forward
0 new messages