#நாச்சியார்கோவில்_கல்கருடன்_அமைந்த_விதம்.
தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த காற்றை சுவாசிக்கும் கல் கருடன்.
#கோசெங்கணான் என்ற "செம்பியர்கோன்" (சோழ மன்னர்) காவிரிக்கரையெங்கும் எழுபது மாடக் கோயில்களைக் கட்டிய மாமன்னர் ஆவார். இவனது தாயார் இவரைப் பிரசவிக்கும் நேரம் வருகையில், இன்னும் சில நாழிகைக் கழித்துப் பிறந்தால், இக்குழந்தை மாபெரும் சிவபக்தனாக இருப்பான்; சிவபெருமானுக்கு நிறைய கோயில்களைக் கட்டி வைப்பான்! என ஜோதிட வல்லுநர்கள் கூறினராம். எனவே குழந்தைப் பிறக்கும் நேரத்தைத் தள்ளிப் போடுவதற்காகத் தன்னைத் தலைகீழாகக் கட்டித் தொங்க விடும்படி அவ்வரசியார் கூறினாளாம்.
அதைப்போல செய்து குறித்த நேரத்தில் குழந்தைப் பிறந்த தாம். ஆனால் தலை கீழாகக் க ட்டி தொங்கவிட்டதால் குழந்தையின் கண்களுக்கு அதிக அளவு இரத்தம் சென்றுவிட்டதால், அக்குழந்தையின் கண்கள் சிவப்பாக இருந்ததாம். எனவே *கோச்செங்கணான் என அனைவரும் அவரை அழைத்தனர்.
இந்தக் கோச்செங்கட்சோழனே காவிரி கரையெங்கும் சிவபெருமானுக்கு எழுபது மாடக்கோயில்களை (யானை ஏற முடியாதவாறு உயரமான படிகளைக் கொண்ட கோயில்கள்) கட்டி வைத்தான்.
திருச்சி திருவானைக்காவல் கோயில் தலவரலாற்றிலும் இம்மன்னனைப் பற்றிய குறிப்பு உண்டு. முற்காலத்தில் நாவல் மரத்தடியில் எழுந்தருளியிருந்த சிவலிங்கத்தின் மீது சருகுகள் விழாதிருக்க, வலைபின்னி காத்தது சிலந்தியொன்று அதை அசுத்தமாக நினைத்து, சுத்தப்படுத்தி மலர்களைவைத்து வழிபட்டது யானை ஒன்று.
இதனால் கோபம் கொண்ட சிலந்தி, யானையின் துதிக்கையினுள் சென்று அதைக் கடித்துக் கொன்றது.தன்மீது பக்திக் கொண்ட இரு உயிர்களுக்கும் அன்போடு அருளினார் சிவபெருமான். யானைக்கு முக்தியளித்தார்; தனக்குக் கோயில் கட்ட விரும்பிய சிலந்தியை மறுபிறவியில் சோழ மன்னன் கோசேங்கணான் எனப் பிறக்க வைத்தார் சிவபெருமான்.
இம்மன்னன், பெருமாளுக்கும் ஓர் ஆலயம் அமைத்து, அவருக்கு ஒரு கருட வாகனம் அமைக்க முடிவெடுத்து
#மயூரசன்மன் என்ற சிற்பி ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
‘செந்தளிர் கோதிக் குயில் கூவும்’ திருநறையூரின் ஆலயத்தை மன்னனுடன் அடைந்த மயூரசன்மனின் பார்வை, திருக்குளத்தை ஒட்டி அடுக்கப்பட்டிருந்த பாறைகளின் மேல் விழுந்தது. பார்த்தவுடன் அவை கங்க நாட்டிலும் குவளாலபுரியிலும் விளையும் நீரோட்டமிக்க அடுக்குப்பாறைகள் என்பது புரிந்தது அவனுக்கு.
மயூரசன்மனின் விழிகள் பாறைகளை வெறிப்பதையும், அவற்றில் விரிந்த கனவையும் கவனித்த மன்னன், அவனை நெருங்கினான். மயூரா! ஏன் அந்தப் பாறைகளை அப்படிப் பார்க்கிறாய்? என்றான் மன்னன். மன்னவா! இந்த ஆலயத்தில் நான் செய்ய வேண்டிய சிற்பம் எது ? என்றான் மயூரன்.
எம்பெருமானுக்கு திருமணத்தை நடத்திவைத்த பெரிய திருவடியான கருடனைத்தான் வடிக்க வேண்டும்! என்றார் மன்னர். "மூலவரின் உயரமான ஆகிருதிக்கு ஏற்ற வடிவில் வடிக்க வேண்டும்" என்றார் மாமன்னர் *கோசெங்கணான். மன்னவா, இந்த அடுக்குப் பாறைகள் பூமியின் நீரோட்டங்களுக்கு நடுவிலிருந்தவை. இவற்றுள் சில வற்றில் நீரோட்டம் கடந்து சென்ற மெல்லிய பாதைகள் இருக்கும்.
அவற்றைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தினால் காற்று ஊடே செல்லும் பாதைகிட்டும். காற்று சென்று வரக்கூடிய வழி கிடைத்தால் இவைச் சுவாசிக்கும் பாறைகளாகும். மனிதருக்கு சப்த நாடிகள் உள்ளது போல் இவற்றுக்கும் நாடிகள் உண்டு. காற்றை சுவாசிக்கும் எந்த ஜீவனும் பூமியின் விசையை எதிர்த்து நடமாடக்கூடியது. நாம் செய்யக் கூடிய சிற்பத்தின் நாசியில் அந்தப்பாதை வருமாறு அமைத்தால், சந்திரனின் ஒளியை உள்வாங்கும் *சந்திர காந்தக் கல்லைப்போல் இவை பூமியின் விசைக்கெதிராக சக்தி பெறும்.
பின்னர். ‘யந்திரசர்வாஸ’ மந்திரமும் வடிக்கும் சிற்பத்துக்குண்டான மந்திரத்தையும் பிரயோகிக்கும்போது அவை உயிர்பெற்று விடும்." என்றான் சிற்பி. மன்னனுடன் ஆலயத்துள் நுழைந்த மயூரசன்மன் மூலவரின் இடப்புறம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்தான். மன்னவா, அந்தப் பாறைகளைக் கொண்டு இங்கு மண்டபத்தை அமைக்கிறேன்.
இங்கிருந்து பிரகாரத்தில் இறங்கும் வழிநெடுக நான் கூறும்படி அந்தப் பாறைகளைக் கொண்டு பாதை அமைத்து விடுங்கள்; மண்டபத்தின் பீடத்தில் பூமியின் விசை எதிர்ப்புறம் இருக்கும்படி அமைத்து விட்டால், கருட சிற்பத்தின் எடை மிகக் குறைவாகவே இருக்கும். அதே பாறைகளைக்கொண்டு வெளிப் பிரகாரம்வரை பாதையாக அமைத்து விடலாம்! என்றான் மயூரசன்மன். சரி! மயூரா! அதனால் என்ன நிகழும் என்றார் மன்னர்.
மன்னா, மூலவரின் உயரத்துக்கும் ஆகிருதிக்கும் ஏற்றபடி சுமக்கும் கருடனுக்கும் உருவம் அமைத்தால் ஆயிரம் மடங்கு எடையும் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த எடை இந்த மண்டபத்தில் பத்து மடங்கு குறை வாகவே இருக்கும். #கருடன் புறப்பாடு காணும் போது கருடனைத் தூக்க நால்வரே போதும். மண்ட பத்தை விட்டுக் கீழிறங்கினால் தூக்குபவர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும்.
பாதை நெடுக நான் அமைக்கும் அடுக்குப்பாறைத் தளத்தில் ஈர்ப்பு விசை பாதிப்பாதியாகக் குறைந்துகொண்டே வரும். எனவே, மேற்கொண்டு செல்லச் செல்ல கருடன். தன் சுய எடையைப் பெற்றுவிடுவார். அப்போது தூக்கு பவர் எண்ணிக்கையும் இரண்டிரண்டு மடங்காக உயர்ந்துகொண்டே செல்லும். மீண்டும் மண்டபத் துக்குத் திரும்பி வரும்போது அதே எண்ணிக்கையில் எடை குறைந்துகொண்டே வரும்! என்றான் *மயூரசன்மன்.
கோசெங்கட்சோழனின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. அப்படியே செய்துவிடு மயூரா; உனக்கு உதவியாக கல் தச்சர்களையும், ஆட்களையும் இப்போதே ஏற்பாடு செய்கிறேன்" என்றான் மன்னன். தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் #மயூரசன்மன் வடித்த அந்தக் கல் கருடன் இன்றளவும் #திருநறையூரில் அழகுற காட்சி யளிக்கிறது.
மார்கழியிலும், பங்குனியிலும் இக்கோயிலில் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. கருட சேவையின் போது பிரம்மாண்ட மான அந்தக் கல் கருடனை முதலில் நால்வரும், மண்ட பத்தை விட்டு இறங்கியதும் எண்மரும், பின் வெளிப் பிராகாரத்துக்கு வரும்வரை இரண்டிரண்டு மடங்காக அறுபத்திநான்கு பேர் வரை தூக்கி வருவார்களாம்.
அதுமட்டுமின்றி, ஆலயத்தை விட்டு வெளி வந்ததும், கல்_கருடனின்_உடலில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது. அதிசயங்கள் பல நிறைந்தது நாச்சியார் கோயில் கல்கருடன். 🙏
#ஓம்நமோநாராயணா 🙏
#கருடாழ்வாரே_போற்றி.