முருகா சரணம்
இன்று தரணிதரன் பூமி நாயகன் செவ்வாய். அவனுக்கு அதிபதி செந்தில் ஆண்டவன். அந்த செவ்வாயினுடைய நல்ல நாளில் இந்த வருடத்தின் கடைசி நாளில், நாம் திரும்பிப் பார்த்து அந்த பரம் பொருள் நமக்கு செய்த சகல நன்மைகளையும் ஓர்ந்து ஓர்ந்து திருப்புகழ் பாடி பாடி அவனை துதிப்போம்.
அடுத்து வரும் புது வருடத்தில் எவ்வளவோ நல்ல காரியங்கள் அந்த பரம்பொருள் நமக்கு ஆக்கித் தர தயாராக இருக்கிறது. அதற்கு நாம் அவன் அருள் பெறு திருப்புகழ் பாடி பாடி பாடி பாடி நம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். தகைமை இல்லையேல், தகுதி இல்லையேல் அவன் அருள் கிட்ட தாமதப்படலாம். இதை நன்கு உணர்ந்து பரமனின் பாத மலர் மூது போது மலர் தூவி மறக்காமல் திருப்புகழ் பாடி மனது செம்மைப்படுத்தி, மற்றவர்களையும் செம்மைப்படுத்த உதவி, நல்வாழ்வு வாழ்வோமாக.
பேரருள் மிக்க இறையாற்றலே! பெரும் கருணை உள்ளம் கொண்ட எங்கள் குருநாதா!, தேவாதி தேவர்களும், தேவ தூதர்களும், நவக்கிரகங்களும், பஞ்சபூதங்களும், ஐம்பூத கணங்களும், இரவும் பகலும் இப்பொழுதும் எப்பொழுதும் வாழ்நாள் முழுவதும் எம்முடனே இருந்து வழி நடத்தி இரட்சித்து அருள் வேண்டுவோம்.
முருகா சரணம்