யார் குரு?

4 views
Skip to first unread message

Sundara Rajan

unread,
Dec 2, 2024, 1:25:38 AM12/2/24
to
திருவண்ணாமலையில் வாழ்ந்த ஒரு முரடர் இறந்துவிட்டார். அங்கிருந்த ஜனங்களுக்கு எல்லாம் ஒரே சந்தோசம். இத்தனை மக்களை மிரட்டி, பொருள் பறித்து வாழ்ந்த தீயவன் ஒழிந்தான் என்று நிம்மதியால் மகிழ்ந்தார்கள்.

 ஊர் மக்கள் எல்லோரும் அதுபற்றி ரமணரிடம் வந்து சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்கள். நிஷ்டையில் இருந்த ரமணர் இதுபற்றி எந்த எதிர்வினையும் ஆற்றாது இருந்தார். நேரம் கடந்தது.

மாலையில் இறந்த நபருடைய பூத உடல் மயானத்திற்குச் செல்லும்பொருட்டு ரமணரின் ஆஸ்ரமத்தைத் தாண்டிச் சென்றது. அப்போது ரமணர் எழுந்து நின்றவாறு கைகூப்பி அந்த உடலுக்கு மரியாதை செய்தார். இதுகண்டு அவர் பக்தர்களுக்கு கோபம் வந்துவிட்டது. 'அயோக்கியனுக்கு ஏன் மரியாதை' என்று பொங்கிவிட்டார்கள். ரமணர் ஒன்றும் சொல்லவில்லை.

பக்தர்களின் ஓயாத நச்சரிப்பால் ரமணர் தன் மெளனத்தைக் கலைத்தார். ‘இறந்தவர் என்னுடைய குரு’ என்றார். எல்லோரும் வியந்தார்கள். 'வாழவே தகுதி இல்லாத இந்த கொடியவனா, இந்த மகானுக்கு குரு' என்று குழம்பினர். ரமணர் சோகத்தோடு சொன்னார்.

'நான் திருவண்ணாமலைக்கு வரும்போது என் வயது 12. அதுவரை என் அம்மாதான் எனக்கு முதுகுத் தேய்த்து, தண்ணீர் ஊற்றிக் குளிப்பாட்டுவார். தன்னாலே குளிக்கும் விதம் எனக்குத் தெரியாது. அதனால் இங்கு வரும்வரை எப்படி குளிக்க வேண்டும் என்பது கூட எனக்குத் தெரியவில்லை. இங்கு ஒருமுறை கிரிவலப் பாதையில் இருந்த ஒரு குளத்தில் இவர் குளித்ததைப் பார்த்தேன்.

எப்படி நாமே முதுகைத் தேய்ப்பது, கை-கால் விரல்கள், காது மூக்கு என ஒவ்வொரு இடத்தையும் எப்படி அழுக்குப் போக சுத்தம் செய்வது என்று இவரிடம் கவனித்தேன். நானும் அதுபோலவே குளிக்க இவரைப் பார்த்துத்தான் கற்றுக்கொண்டேன்.

 எனக்கு உடல் சுத்தம் பற்றி கற்றுக் கொடுத்த குரு இவர். அதனால் இவரை வெறுக்க மனம் விரும்பவில்லை’ என்றார். 

எல்லோரும் தீயவராகப் பார்த்த ஒருவரை ரமணர் மட்டுமே குருவாகப் பார்த்தார். அதனால்தான் அவர் மகானாக நிலைத்தார்
Reply all
Reply to author
Forward
0 new messages