பாரம்பரியமிக்க குடும்பங்களில் குழந்தைக்கு முதல் பிறந்த நாள் அன்று ஆயுஷ்ய ஹோமம் செய்வதை பார்க்கலாம்.ஆனால் இன்று பல குடும்பங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிறந்தநாள் என்ற பெயரில் கேக் வெட்டி கேண்டில் அனைத்து கேக்கை முகத்தில் பூசி கொண்டாட்டம் என்ற பெயரில் சமுதாய சீர் கேட்டினை செய்து வருகிறார்கள்.
குழந்தை பிறந்து 12-மாதங்கள் முடிந்து 13-வது மாதம் குழந்தை பிறந்த அதே தமிழ் மாதமாகும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்த அதே நக்ஷத்திரம் வரும் தினத்தில் சுபவேளையில் அப்தபூர்த்தி ஆயுஷ்ய ஹோமம் செய்யப்படுகிறது. அப்த என்றால் ஒன்று, பூர்த்தி என்றால் நிறைவு. எனவே அப்த பூர்த்தி என்பதை 'ஆண்டு நிறைவு” என்றும் சொல்வார்கள்.
ஜன்ம நக்ஷத்திரத்தில் குழந்தைக்கு புண்ணிய தீர்த்தங்களை கொண்டு ஸ்நானம் செய்து வைத்து, புது ஆடைகள் அணிவித்து, ஆபரணங்களை கொண்டு அலங்காரம் செய்வித்து, குழந்தையின் அம்மான் குழந்தையை தோளில் தூக்கி கொண்டு வீட்டிற்குள் பிரவேசிக்க வேண்டும். பின்னர் ஹோமம் வளர்த்து, 'ஆயுஷ்ய சூக்தம்” என்னும் மந்திரத்தை கொண்டு ஆயிரத்தெட்டு முறை நல்ல நெய்யை கொண்டு ஹோமம் செய்ய வேண்டும். 'மிருத்யூ” பயமின்றி குழந்தை தீர்க்காயுளாக வளர வேண்டுமென்பதற்காகச் செய்யப்படும் ஹோமமாகும். இதனால் 'ஆயுஷ்ய ஹோமம்” என்று இது பெயர் பெற்றது.
ஆயுள் அபிவிருத்திக்கு சர்வேஸ்வரனை வேண்டி செய்யும் ஹோமமாகும். இத்துடன் கலசத்தால் கும்பம் அமைத்து, வருணனையும், குழந்தையின் நக்ஷத்திர தேவதையையும் ஆவாஹனம் செய்து நக்ஷத்திர சூக்தம் எனும் 27 நக்ஷத்திரங்களை போற்றும் மந்திரங்களை ஜெபித்து அக்கலச தீர்த்தத்தை குழந்தைக்கு அபிஷேகம் செய்வித்து தீர்த்தத்தை உள்ளுக்கும் கொடுக்க வேண்டும். ஹோமம் செய்த நெய்யின் மிச்சத்தில் அன்னத்தை கலந்து அதை மந்திர பூர்வமாக குழந்தைக்கு கொடுக்க வேண்டும். இந்த ஆண்டுநிறைவு, நடப்பு மாதத்தில் இரு நக்ஷத்திரங்கள் வருமானால் பின் வருகிற ( இரண்டாவதாக வருகின்ற ) நக்ஷத்திரத்திலேயே இதை செய்ய வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. சில சமயம் ஒரே நக்ஷத்திரம் இரண்டு தினங்களில் வரும். இதனால் என்று அனுஷ்டிப்பது என்ற குழப்பமும் வரும். என்றைய தினத்தில் சூரிய உதயத்திலிருந்து உச்சிப் பொழுதுக்குள் குறைந்தது 12-நாழிகை அதாவது 4-மணி 48-நிமிட நேரம் என்று நக்ஷத்திரம் இருக்கிறதோ அன்றைய தினம் அனுஷ்டிக்க வேண்டும்.
இதே முறையில்தான் ஒவ்வொரு பிறந்தநாளையும் அனுஷ்டிக்க வேண்டும். வருடா வருடம் பிறந்தநாளில் ஆயுஷ்ய ஹோமம் செய்யும் பொழுது குடும்பத்தோடு சிறிய அளவில் செய்து கொள்ளலாம். என்றாலும் கீழ்க்கண்ட வயதுகளில் பெரிய அளவில் நண்பர்கள் உறவினர்கள் சூழ பெரியார் ஆசிபெற செய்து கொள்வது சிறப்பாகும்.
1 ) பீம சாந்தி = 55-வது வயது ஆரம்பம்.
2 ) உக்ரரத சாந்தி = 60-வது வயது ஆரம்பம்,
3 ) சஷ்டியப்த பூர்த்தி சாந்தி = 61-வது வயது ஆரம்பம்.
4 ) பீமரத சாந்தி = 70-வது வயது ஆரம்பம்.
5 ) ரத சாந்தி = 72-வது வயது ஆரம்பம்.
6 ) விஜய சாந்தி = 78-வது வயது ஆரம்பம்.
7 ) சதாபிஷேகம் = 80-வருஷம் 8-மாதம் முடிந்து உத்தராயண சுக்லபக்ஷம் நல்லநாளில்.
8 ) ப்ரபௌத்ர ஜனன சாந்தி ( கனகாபிஷேகம் ) = பௌத்ரனுக்கு புத்ரன் பிறந்தால்.
9 ) ம்ருத்யுஞ்ஜய சாந்தி = 85-வது முதல் 90-க்குள்.
10 ) பூர்ணாபிஷேகம் = 100-வது வயதில் சுபதினத்தில்.
இதையெல்லாம் இழந்துவிட்டு ஆங்கில தேதியில் கொண்டாடுவது காலம் காலமாக கடைபிடிக்கும் நமது உன்னதமான மரபுகளையும் கலாச்சாரத்தையும் விட்டொழித்து அன்னிய கலாச்சாரத்தில் ஊறி திளைப்பது சரியா❓
சிந்திப்பீர்! மேலும் நேர்மறை எண்ணங்கள் நிறைந்த பிறந்த தினத்தில் எதிர்மறையை பரப்பும் விதமாக மைதாவில் செய்த கேக்கை வெட்டுவதும் மெழுகு வர்த்தியை ஊதி அனைப்பதும் என்ன நன்மையை தர போகிறது❓ முன்னோர்கள் வழியில் நாம் நடக்க வேண்டும்
திரு.ரமேஷ் சிவம்
आकाशात् पतितं तोयं यथा गच्छति सागरम् |सर्वदेवनमस्कारं
केशवं प्रति गच्छति ||
As all the raindrops falling from the sky ultimately meet their end in the ocean, the worship of any divine God ultimately reach the one Supreme Lord.