*நவகிரகங்களுடைய உப கிரகங்கள்*
இந்து சமயத்தில் உபகிரகங்கள் எனப்படுவது நவக்கிரகங்களின் புத்திரர்கள் ஆவர்.
குளிகாதி நால்வர்
குளிகன் - சனி யுனுடைய புத்திரர்
எமகண்டன் - குருவி னுடைய புத்திரர்
அர்த்தப்பிரகரணன் -
புதனுடைய புத்திரர்
காலன் - சூரிய னுடைய புத்திரர்
தூமாதி ஐவர்
தூமன் - செவ்வாயுடைய புத்திரர் - புகை சம்பந்தப்பட்ட வால் நட்சத்திரம் ஆகும்.
வியதீபாதன் இராகு வுடைய புத்திரர் - கொள்ளிக்கட்டை நெருப்பைப் போல் காணப்படுவான்.
பரிவேடன் - சந்திரனுடைய புத்திரர் - சூரிய சந்திரர் அவர்கள் உதிக்கும்போது, அவர்கள் மண்டலத்தைச் சுற்றி பலவித வர்ணங்களுடன் வட்ட வடிவாகக் காணப்படுவான்.
இந்திரதனுசு - சுக்கிரனுடைய புத்திரர் - பலவித வர்ணங்களுடன் அந்தியில் கிழக்கிலும் , அதிகாலையில் மேற்கிலும் வில்லைப்போல உலகப்பிரசித்தமாகக் காணப்படுவான்.
தூமகேது - கேதுவுடைய புத்திரர் - ஒரோர்காலத்தில் வால் நட்சத்திரமாகக் காணப்படுவான்.
மூலநூல்
ஜாதக அலங்காரம் (ஜோதிட நூல்)
🌺