[04/09, 07:35] Ashogun: -@-
மின்னல் மீதேறி வந்த பூஜ்யர்.
--
அடிநெஞ்சின் குரல்
காதிலே கேட்டது.........
அதிலே வைரம் பாய்ந்திருந்தது...
பின்னர்...
அதுவாய் பிறந்த ஒன்று
எனது முன் ஓடிவந்து
தனது பெயர்
பேசா அனுபூதி என்றது.........
பிறந்த அது என்னைப் பார்த்தது..
அடிவயிற்றிலே பாலை வார்த்தது
நெஞ்சைத்தொட்ட பின்னர்.....
முழுதும் அழகிய வடிவு காட்டி
தனது பெயர்
பேசா அனுபூதி என்று சொன்னது..
இன்னும் கேளுங்கள்....
கிணற்றில்
கங்கை பொங்கி வழிந்தது......
வீடுதேடி ஆறு வந்தது.....
தன்னீரில் விளக்கெறிந்தது....
சேற்றின்சுகம் இனித்தது....
முருகவாசம்
அதிலே கலந்திருந்தது.......
பித்தம் தலைக்கேறியது...
பின்னர்.. அனைத்துமே
தத்தம் பெயர் பேசா அனுபூதி என்றே சொல்லிச் சென்றதுவே...
என்னவென்று சொல்லுவது...
நினைவுகள் கனத்துப் போனது..
அதிலே நிஜம் ததும்பி வழிந்தது..
ஆயின்...
அனைத்தையும் கடந்த ஒன்று
மின்னல் முதுகேறி.....
எனது முன் வந்தமர்ந்து.....
உன்தாயும் உனக்கருள் தந்தையும்...எனது ஷண்முகன்
என்று சொல்லிச்சொல்லியே
எனக்கும் கட்டியம் கூறியது ....
அதிசயம்..ஆஸ்ச்சர்யம்.. ... என்றே
இவ்உலகம்
மெய்சிலிர்த்துப் போனது......
மின்னல் முதுகேறி வந்தது
இவ்வரவிந்தத்தின் பூஜ்யர்
என்று....சொல்லிச் சொல்லியே
தன்னை மறந்துக்கூத்தாடியது....
கெட்டி மேளம் கெட்டி மேளம்
எனும் குரல்கள்
தொடர்ந்து கேட்டது......அது
பூஜ்யரின் பெரிய குடும்பத்திலே
என்று .....சொல்லிச் சொல்லியே
மீண்டும் இந்த உலகம்
வியப்பில் ஆழ்ந்து போனது.....
பின்னர்..... அதுவும்
ஜபிக்கத்தொடங்கியது.......
கெட்டி மேளம் கெட்டி மேளம்...
கந்தனுக்கு அரோஹரா
முருகனுக்கு அரோஹரா...
எனும் மெட்டுடன்தானே........
இது வேலவன் தந்தது
______+_________+________
Note:
பூஜ்யர்= நமது குருஜி அவர்கள்.
கிணற்றில் கங்கை=
ஐயாவாள் சரித்திரம்.
சேற்றின் சுகம்=
சேஷாத்ரி சுவாமிகள் சரித்திரம்.
வீடுதேடி வந்த ஆறு=
ஆதிசங்கரர் சரித்திரம்.
தன்னீர் விளக்கு=ஷீரடி சரித்திரம்.
முருகவாசம்=ஆண்டவன் பிச்சை அம்மாள் சரித்திரம்.
மின்னல் முதுகேறி வந்தது= அபிராமி பட்டர் சரித்திரம்.
பித்தம்=
வள்ளிமலை சுவாமிகள் சரித்திரம்
அதிசயம்..ஆஸ்ச்சர்யம்= Ref.
திருப்புகழ் "சுடரணய திருமேனி"