அழகியைப் பற்றி மலர்ந்த கவிதை !

400 views
Skip to first unread message

Gayathri

unread,
Jan 18, 2009, 2:12:48 AM1/18/09
to அழகி (Azhagi)
தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் நீறு பூத்த நெருப்பாக இருந்தது. ஆனால்
அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று தெரியவில்லை. அப்பொழுது
பயன்பாட்டில் இருந்த வந்த மென்பொருளைப் பயன்படுத்தி வந்தாலும் ஸ்ரீ, ஞா
போன்ற வார்த்தைகளை தட்டச்சு செய்வது சிரமமாய் இருந்தது. 2007-ல் நண்பர்
ஒருவர் அழகியை அறிமுகப் படுத்தினார். அழகியின் சிறப்பு அம்சம் அதன்
எளிமை. கணினியின் பயன்பாடு முழுமையாகத் தெரியாதவர்களும் அவர்கள்
சொல்லியுள்ள விதிமுறைகளைக் கடைபிடித்தால் , அழகி நம் கணினியை
அழகாக்குவாள். அழகியை நான் பயன்படுத்திக் கொண்டிருந்த போது அதன் சிறப்பு
அம்சம் என்னவென்றால் கணினியை பார்மட்டிங்க் செய்த பின் அழகிக்கான
ஆக்டிவேஷன் கோர்டை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். இப்பொழுதோ இன்னும் எளிமை!
அழகி 6.0.2 என்பதை பயன்படுத்தினால் அந்த ஆக்டிவேஷன் கோர்டும் தேவையில்லை.
காந்தி போட்ட நோட்டுக்காக உலகமே ஆலாகப் பறந்து கொண்டிருக்கையில் .
கணினி மற்றும் கன்னித் தமிழின் மேல் உள்ள காதலால் அழகியை இலவசமாக தந்து
கொண்டிருக்கும் திரு.விஸ்வநாதன் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பர்ராட்டைக் கவிதையாய் ஆக்கி விட்டேன்.
அழகியைப் பற்றி மலர்ந்த கவிதை இதோ!
அகரத்தில் ஆரம்பித்த அவள் பயணம் இன்று
சிகரத்தை நோக்கி வீறு நடையாய் விருதுகளோடு!
மொழியைத் தாயாகக் கொள்ளும் மரபை அடியொற்றி
மென்பொருளுக்கு அழகியே அழகிய பெயரானது!
தமிழ் கூறிடும் நல்லுலகிற்கு மற்றொரு மைல்கல்லாய்
தனிச் சிறப்பாய் அருமை அழகி அவள் திகழ்கிறாள்!
பிறந்த இடம் சிங்காரச் சென்னை என்றாலும்
புகுந்த இடமோ தமிழ் இதயமெனும் பெரிய இடம்!
தமிழ் வளர்த்த சங்கரனுக்கு மூன்றாம் கண்.
தமிழ் வளர்க்கும் அழகிக்கும் சின்னம் கண்!
விரலசைப்பில் வேண்டியது பெற விரும்பியது தர
வழி வகை செய்து தரும் அட்சய பாத்திரம் அவள்!
மூன்றெழுத்துதன் என்று நினைக்க வேண்டாம்
மோதுபவரை வீழ்த்தவும் அவளிடம் ஆயுத எழுத்து உண்டு!
கட்டுரை, மின்னஞ்சல், கவிதை -எது வேண்டும் என்றாலும்
கருத்துக்களைக் கோர்க்க கை கொடுப்பாள் அவள்!
எங்கிருந்தாலும் தீந்தமிழ் என்னும் மாலையில்
அனைவரையும் இணைக்கும் அழகு கண்ணி (கன்னி) அவள்!
அழகியாய்ப் பிறந்து, "மழலை"யாய் வளர்ந்து "இல்லம்" புகுந்த
அவள் நம் உள்ளத்திலும் அமர்ந்து விட்டாள் அழகாய்!
பாகம் பிரியாள்.

Tthamizth Tthenee

unread,
Jan 18, 2009, 3:30:33 AM1/18/09
to azh...@googlegroups.com
ஆஹா அழகியை வர்ணிக்க வார்த்தைகள் போதாது
 
அழகிய தமிழ் மகள் இவள்
தமிழ் வளர்க்கும் மருமகள்
வளரட்டும் இவள் புகழ் 
பாடுவோம் திருப்புகழ்
 
அன்புடன்
தமிழ்த்தேனீ

 
--
மனிதமும்,உலகமும் காப்போம்,

மௌனம் உணர்த்தாத பொருளை வார்த்தை உணர்த்தாது

அன்புள்ள
தமிழ்த்தேனீ
peopleofindia.net@gmail.com
http://www.peopleofindia.net
rkc...@gmail.com
http://thamizthenee.blogspot.com

benedict aloysius

unread,
Jan 18, 2009, 4:55:29 AM1/18/09
to azh...@googlegroups.com
என்னால்  அழகியை பாவிக்க இயலவில்லை,  தாங்கள் அழகியை வென்று
கொண்டீர்கள்.  நன்று.  வாழ்த்துக்கள்.

2009/1/18 Gayathri <astrog...@gmail.com>--
Acquire  a  lot  and  Share  with  Everyone

AKR

unread,
Jan 18, 2009, 7:49:56 AM1/18/09
to azh...@googlegroups.com
அழகியை பாவிக்க வேண்டுமென்ற எண்ண்ம் இருந்தால் போதும். செயல்படுவது மிகவும் சுலபம். அழகியில் உள்ள ஒலிபெயர்ப்பு வசதிகள் வேறு எந்த மென்பொருளிலும் இல்லாத அளவுக்கு உள்ளங்கை நெல்லிக்கனிபோல் கீழ்க்கண்ட சிறு படத்தில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. இப்படம் அழகியை உபயோகிக்கையில் அழகியின் திரையில் தோன்றுவதாகும்.
 
என் 13 வயதுடைய மகளும் கடந்த 3 வருடங்களாக இம்மென்பொருளைத் தானே உபயோகிக்கப் பழகி என் இணையதளங்களுக்குத் தேவையான தமிழ்க் கட்டுரைகளைத் தட்டெழுதித் தருகிறாள்.
 
முயன்று பாருங்கள். பிரம்மப் பிரயத்தனம் ஏதும் தேவையில்லை.
 

Raghavan

unread,
Jan 19, 2009, 10:53:38 AM1/19/09
to அழகி (Azhagi)
அழகிக்கு அழகு கூடி 'விஸ்வ"ரூபம் எடுத்தது அதன் அழகான
அம்ஸங்களும் அதன்னாதிக்கலிதிலிருந்து விடுபட முடியாத
நண்பர்களும்தானே. !!!

அன்புடன்

விஸ்வநாதன்

unread,
Jan 20, 2009, 4:04:21 AM1/20/09
to அழகி (Azhagi)
அழகிய கவிதை இதயத்திற்கு இதம்.
மிக்க நன்றி.

கருத்துக்கள் தெரிவித்த அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.

அன்புடன்
விஸ்வநாதன்

On Jan 18, 12:12 pm, Gayathri <astrogayat...@gmail.com> wrote:
தமிழில் எழுத வேண்டும் என்ற ஆர்வம் நீறு பூத்த நெருப்பாக இருந்தது.
ஆனால்
அதனை எப்படி நடைமுறைப்படுத்துவது என்று தெரியவில்லை. அப்பொழுது
பயன்பாட்டில் இருந்த வந்த மென்பொருளைப் பயன்படுத்தி வந்தாலும் ஸ்ரீ, ஞா
போன்ற வார்த்தைகளை தட்டச்சு செய்வது சிரமமாய் இருந்தது. 2007-ல் நண்பர்
ஒருவர் அழகியை அறிமுகப் படுத்தினார். அழகியின் சிறப்பு அம்சம் அதன்
எளிமை. கணினியின் பயன்பாடு முழுமையாகத் தெரியாதவர்களும் அவர்கள்
சொல்லியுள்ள விதிமுறைகளைக் கடைபிடித்தால் , அழகி நம் கணினியை

அழகாக்குவாள். ... ... ..

Thiyagarajan Devarajan

unread,
Jan 20, 2009, 11:57:42 PM1/20/09
to azh...@googlegroups.com
Dear Gayathri,

Very nice your poetry. I am not yet install the அழகி 6.0.2 Software. When I  install the software i will write poetry like you.

Thanking you

Thiyagarajan Devarajan 

2009/1/18 Gayathri <astrog...@gmail.com>--
Thanks and Regards
Thiyagarajan.D
Accountant
HiH AdminStop Child Labour
Any Children out of school is a child labourer
Reply all
Reply to author
Forward
0 new messages