31-7-2017 “News Letter” from Avvai Tamil Sangam

3 views
Skip to first unread message

Avvai Tamil Sangam Noida

unread,
Jul 30, 2017, 11:03:52 PM7/30/17
to indrayakural, dinamorukural, avvaitam...@googlegroups.com, avvaitamils...@blogger.com

31-7-2017 News Letter from Avvai Tamil Sangam

Is this mail not displaying correctly? View it in your browser

   

அவ்வைதமிழ்ச்சங்கம்

ஆடி 15, (திங்கள்), திருவள்ளுவராண்டு 2047,

Web: http://www.avvaitamilsangam.org/indexE.html

Email: avvaitam...@gmail.com

Be a member of ATSFriend on Facebook  |     Forward to a Friend

அவ்வை தமிழ்ச் சங்கம் வழங்கும்

கோடை விழா 2017!

இசை, நாட்டியம் & நாடகம் - முப்பெரும் விழா!

 

நாள்: 27.08.2016, ஞாயிற்றுக்கிழமை

மாலை 4 - 8 மணி வரை

இடம்: ஸ்ரீ அரபிந்தோ பவன், C-56/36, செக்டர் 62, நொய்டா

Google location: https://goo.gl/maps/2E2t4RYU4NL2

 

குறைந்த இடங்களே இருப்பதால், உடனே முன் பதிவு செய்ய இங்கே சொடுக்குங்கள். இரண்டு நிமிடத்தில் பதியுங்கள்!

https://goo.gl/forms/3WXVt5kgcs1F2m8d2

அவ்வை தமிழ்ச் சங்கம் மின்னஞ்சல் சேவை – புதுப்பொலிவுடன் வாசிக்க தயாரா? தங்கள்  மேலான எண்ணங்களை பகிருங்கள்!

அவ்வை தமிழ்ச் சங்கத்தின் இந்த மின்னஞ்சல் சேவை பல ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது (சென்ற ஒரு மாதமாக ஏற்பட்டதைப்போல) இதில் தடங்கல் ஏற்பட்டாலும் இதை விடாமல் தொடர்ந்து செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். அடுத்த கட்டமாக இந்த மின்னஞ்சல் சேவையை ஆகஸ்ட் 1 முதல் புதுப்பொலிவுடன் வாசகர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். வாசகர்கள் தங்களின் மேலான எண்ணங்களை avvaitam...@gmail.com  என்ற மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நூல் அறிமுகம் -  சீதை பேசுகிறேன்”

வெங்கட் கிருஷ்ணமாச்சாரி எழுதிய "சீதை பேசுகிறேன்" எனும் நூல் இப்போது விற்பனையில். இந்தியாவில் விலை: ரூ.65.00 + தபால் செலவு ரூ.35.00 . மொத்தம் ரூ. 100.00. ஒவ்வொரு நூலின் விற்பனைத் தொகையிலிருந்தும் ரூ.13.00 அவ்வை தமிழ்ச் சங்கத்திற்கு நன்கொடையாக வழங்கப்படும். நன்னூல் படித்து சங்கத்திற்கும் உதவுங்கள். இந்நூலை வாங்க 9818092191 என்ற எண்ணுக்கு ரூ.100 PAYTM செய்து பின் குறுஞ்செய்தியில் 9818092191 என்ற எண்ணுக்கு உங்கள் முகவரியை அனுப்பவும்.

மேலும் படிக்க

திரிகடுகம் பாடல் -93

இருளாய்க் கழியும் உலகமும், யாதும்

தெருளாது உரைக்கும் வெகுள்வும், பொருள் அல்ல

காதற்படுக்கும் விழைவும், - இவை மூன்றும்

பேதைமை, வாழும் உயிர்க்கு.

விளக்கம்

அறிவில்லாதவர் இடமும், நன்மை, தீமை தெரியாது சொல்கின்ற கோப பேச்சுக்களும், நற்பொருள் அல்லாதவற்றில் விருப்பமும், அறியாமையைத் தருவதாகும்.

பொருள்

(இ-ள்.) இருளாய் - (அறிவில்லாதவர்க்கிடமாய் அதனால்) இருட்டாய், கழியும் - நாள்கழிக்கின்ற, உலகமும் - இடமும், யாதும், (நன்மை தீமைகளில்) ஒன்றும், தெரியாது - தெரியாமல், உரைக்கும் - சொல்கின்ற, வெகுள்வும் - கோபமும்; பொருள் அல்ல - நற் பொருள் அல்லாதவற்றில், காதல் படுக்கும் - அன்புவைக்கச் செய்யும், விழைவும் - விருப்பமும், இவை மூன்றும் - ஆகிய இம் மூன்றும், வாழும் உயிர்க்கு - உடலோடு கூடி வாழ்கின்ற உயிர்கட்கு, பேதைமை - அறியாமையைத் தருவனவாம்; (எ-று.)

 

(க-ரை.) அறிவில்லாதவர் இருக்கும் இடமும், நன்மை தீமை தெரியாது கோபித்துரைப்பதும், தீயவற்றில் செல்லும் விருப்பமும் மேன்மேலும் அறியாமைக்கு ஏதுவாகிய காரியங்களாம் என்பது.

 

இருள் : அறியாமைக்கு உவமையாகுபெயர். இடத்தின் நிகழும் உயிர்களின் தன்மையை அவ்விடத்தின்மே லேற்றி இலக்கணையால் இருளாய்க் கழியும் உலகம் என்றார். அல்ல : பண்படியாகப் பிறந்த பெயர்.

வரலாற்றில் இன்று

·         781 - பியூஜி மலையின் பதிவு செய்யப்பட்ட முதல் குமுறல் இடம்பெற்றது.

·         1498 - தனது மூன்றாவது பயணத்தின் போது கொலம்பஸ் டிரினிடாட் தீவை அடைந்தார்.

·         1658 - அவுரங்கசீப் இந்தியாவின் முகலாயப் பேரரசின் மன்னர் ஆனார்.

·         1865 - உலகின் முதலாவது குறுகிய அகல தொடருந்துப் பாதை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலத்தில் அமைக்கப்பட்டது.

·         1954 - ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமையிலான இத்தாலிய குழு ஒன்று கே-2 கொடுமுடியை எட்டியது.

·         1964 - சந்திரனின் முதலாவது மிக அருகில் எடுக்கப்பட்ட படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.

·         1971 - அப்போலோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் ரோவர் வண்டியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்தனர்.

·         1976 - வைக்கிங் 1 விண்கலத்தினால் செவ்வாய்க் கோளில் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற மனித முகம் படத்தை நாசா வெளியிட்டது.

மேலும் படிக்க

செய்திகள்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி..! - விகடன்

15 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை ... - தினத் தந்தி

நவீன ஹெலிகாப்டர் வாங்க இந்தியா - ரஷ்யா இடையே ஒப்பந்தம் - தினமலர்

3500 கோடி ரூபாய் மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: அசத்திய ... - விகடன்

கரன்சி நோட்டுகளை ஆய்வு செய்ய - தினமலர்

விரைவில் துபாயை விட இந்தியாவில் தங்கம் விலை குறைவாக ... - தமிழ்வின்

கூகுளை தொடர்ந்து ஆல்ஃபாபெட் நிறுவனத்தில் சுந்தர் பிச்சை - மாலை மலர்

வீடு வாடகைக்கு

 

2 BHK (2 Bedroom,1 Big Drawing/Dinning Room), 2 Big Varandah, at C Block Sector 19 Noida

Contact N K IYER, 9873711601

 

நம்மை சுற்றி

 

Date & Time

Venue

Program Details

Organized by

Contact

 

7th August, 2017,  Monday

Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

Aadi Paurnami

Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240, 26520202, 41802507

 

8th August, 2017,  Tuesday

Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

83rd Jayanthi Celebrations of H.H. Sri Sri Jayendra Saraswathi Sankaracharya Swamigal

Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240, 26520202, 41802507

 

11th August, 2017,  Friday

Sri Devi Kamakshi Mandir, A-11, Aruna Asaf Ali Marg, New Delhi

Maha Sankatahara Chaturthi

Sri Devi Kamakshi Mandir, Delhi Kamakoti Kamakshi Meditation & Cultural Centre

011-26867240, 26520202, 41802507

 

17 - 26 Aug'17

Arulmigu Varasiddhi Vinayagar Thirukkoil, G-Block Park, Sector 22, Noida

SRI GANESH CHATHURTHI MAHOTSAVAM 2017

VEDIC PRACHAR SANSTHAN (REGD).

9711020528

 

Disclaimer: The information published in Nammaich Chutri are based on the requests send by various sources to us for publishing in this newsletter. Avvai Tamil Sangam doesnt perform any validity check before publishing.,This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India, To ensure that you continue receiving our emails, please add us to your address book or safe list. View this Newsletter on the web here. To unsubscribe, send an email to avvaitam...@gmail.com

 

 


 

 

 

 

 

 

 

 

 

Reply all
Reply to author
Forward
0 new messages