தள்ளு தள்ளு தள்ளு...
பாகிஸ்தானின் முசாபர்கார் பகுதியில் உள்ள கான் பர் பக்கா ஷெர்ரின் உள்ளூர் மத தலைவரான மௌலவி இப்ராஹிம் சிஸ்தி, போலியோ சொட்டு மருந்து விஷம் என்றும், அதை குழந்தைகளுக்கு கொடுப்பது இஸ்லாத்திற்கு எதிரானது என்றும் அறிவித்தார். மேலும் யாரையாவது வற்புறுத்தி மருந்து கொடுத்தால் அவர்களுக்கு எதிராக புனிதப் போர் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் அறிவித்தார்.
மேலும், போலியோ மருந்து கொடுத்து மக்களை மலட்டுத் தன்மை உடையவர்களாக்க மேற்கத்திய நாடுகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாகக் கூறி மதத் தலைவர் தங்களை நம்ப வைத்துவிட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
பின்னர் போலீஸ் துணையுடன் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் குழு கான் பர் பக்கா ஷெருக்கு மீண்டும் சென்றது.
மனிதநேயமற்ற மாந்தர்கள்
மக்கள் தொகையில் உலகிலேயே முதலிடத்தில் இருக்கும் சீனாவில் ஒரு குழந்தை தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அதையும் மீறி 2வது முறையாக கர்ப்பமானால் அரசுக்கு பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டும். ஷான்க்சி மாகாணத்தில் உள்ள ஜென்பிங் கவுன்ட்டியைச் சேர்ந்த பெங் ஜியாமி என்ற பெண் அபராதத் தொகையை செலுத்தவில்லை
இதையடுத்து அரசு அதிகாரிகள் 7 மாத கர்ப்பிணியாக இருந்த பெங்கை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு இழுத்துச் சென்று கருக்கலைப்பு செய்துள்ளனர். இது தொடர்பான படங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படங்களைப் பார்த்து சீன மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இவருக்கு பதில் இவர்
சீனாவின் மறைமுகக் கட்டுப்பாட்டில் வட கொரியாவில்இந்தியத் தூதரகத்துக்கு மிக மிக முக்கியமான பணிகள் உள்ளன. சீனக் கடல் பகுதியை கட்டுப்படுத்துவது உள்பட பல்வேறு விஷயங்களில் வட கொரியாவின் உறவு இந்தியாவுக்கு மிக மிக முக்கியம்.
ஆனாலும், அங்கு பணிக்குச் சென்றால் வாழ்க்கையை என்ஜாய் செய்ய முடியாது என்பதால் முக்கியமான ஐஎப்எஸ் அதிகாரிகள் யாரும் அங்கு தூதராகச் செல்ல விரும்புவதில்லை. இந்தியாவின் பாதுகாப்பு விஷயத்தில் மிக முக்கியமான அந்த தேசத்துக்கு டம்மியாக யாரையாவது தூதராக நியமித்துவிட்டு மூத்த அதிகாரிகள் எஸ்கேப் ஆகி வருகின்றனர்.
அந்த வகையில் தான் பிஜீ தீவுகளில் உள்ள இந்தியத் தூதரகத்தில் சுருக்கெழுத்தாளராக இருந்த அஜய் கே. ஷர்மாவை, வட கொரியாவுக்கு தூதராக நியமித்தனர் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரிகள்.
வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு இது தொடர்பாக அனுப்பிய பைலில், ஷர்மா பிஜீ தீவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் கவுன்சிலர் பதவியில் இருந்தவர் என்று குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து அவரை வட கொரியாவுக்கான தூதராக நியமித்துக்கு கையெழுத்தும் போட்டுவிட்டார் கிருஷ்ணா. பின்னர் அது பிரதமர் அலுவலம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்துக்கும் அனுப்பப்பட்டுவிட்டது.
ஆனால், ஷர்மா ஒரு சாதாரண சுருக்கெழுத்தாளர் என்ற விவரம் வெளியானதையடுத்து அவரது நியமனத்தை கிருஷ்ணா ரத்து செய்துள்ளார்.
BUGS BUNNY
வழக்கமாக பாலா படங்களில் வினோதமான, வித்தியாசமான கதாபாத்திரங்களைப் பார்க்கலாம். நந்தாவில் லொடுக்குப் பாண்டி அதற்கு ஒரு உதாரணம். அதேபோல பரதேசி படத்திலும் இப்படி ஒரு கிராக்குத்தனமான கேரக்டர் இருக்கிறதாம். அதற்கு யாரைப் போடலாம் என்று யோசித்தபோது யார் அவருக்கு ஐடியா கொடுத்தார்களோ தெரியவில்லை, நம்ம பவர் ஸ்டார் சீனிவாசன் பெயரைப் பரிந்துரைத்துள்ளனர். பாலாவும் சீர்தூக்கிப் பார்த்ததில், அதேதான் ... என்று பிக்ஸாகி பவர் ஸ்டாரை கூப்பிட்டு புக் செய்துள்ளார்.
சும்மாவே பஞ்சாக பறக்கும் பவர் ஸ்டார்,. சமீபத்தில் படப்பிடிப்புக்குப் போயுள்ளார். வழக்கமாக அவருடன் அடிப்பொடி, அடியடிப்பொடி என கிட்டத்தட்ட பத்துக்கும் மேற்பட்டோர் கும்பலாக போவதுதான் வழக்கம். அண்ணன் சிங்கம்ல, கூடமாட ஒத்தைக்கு போகனும்ல...
இதைப் பார்த்த பாலா டென்ஷனாகி விட்டாராம். அவர்களுக்கு உறைப்பது போல வேற ஒருவரை திட்டி தீர்த்து விட்டார். பாலா கோபத்தைப் பார்த்த பவர் ஸ்டார், பங்சராகிப் போய் உடனே தனது கேங்கோடு எஸ் ஆகி விட்டாராம் அந்த இடத்தை விட்டே.
கரு விக்னேஷ் ஜானகிராம்