சிரிக்கலாம் வாங்க ! , செப்டம்பர்,24, 2015

0 views
Skip to first unread message

Friends Team

unread,
Sep 23, 2015, 11:23:29 PM9/23/15
to

நாராயணசாமி ஒரு தூக்கு தண்டனைக் கைதி.

நாராயணசாமி தனது முதல் ஆசையாக மாம்பழம் கேட்டார்.

அப்போது மாம்பழ சீசன் இல்லை. எனவே தூக்கு தண்டனை ஆறு மாதம் ஒத்தி வைக்கப்பட்டது.

ஆறு மாதத்திற்குப்பி ன் மாம்பழம் வாங்கிக் கொடுத்து இரண்டாவது ஆசையைக் கேட்டனர். செர்ரிப் பழம் என்று பதில் வந்தது.

அப்போது செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும் தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு. பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது .

மூன்றாவது ஆசையாக நாராயணசாமி சொன்னார்,
“என் உடல் தற்போதைய அதிபரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும்.”

அதிகாரிகள் அதிர்ந்துவிட்டன ர்,
“என்ன சொல்கிறாய்நீ? அதிபர் உயிருடன் அல்லவா இருக்கிறார்!”.

நாராயணசாமி அமைதியாகச் சொன்னார்,
“அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்.”

விவரமானவன்டா நீ…

http://bit.ly/TamilJokes

நியூட்டனின் சிந்திக்க வைத்த சிரிப்பு ..!


நியூட்டனின் காலத்தில் அவர் புகழ் கொடிகட்டி பறந்துகொண்டிருந்த காலம் ..அவர் பெயர் சகலருக்கும் தெரியும் அவரின் முகம் ஒருசிலருக்கே தெரியும் …!

புகைப்படங்கள் புழக்கத்தில் மிக குறைவு. ஒருமுறை ஒரு பல்கலைக்கழகம் அவரது விஞ்ஞான கண்டுபிடிப்புக்களை விளக்கவும் தமது சந்தேகங்களை கேட்கவும் ஒரு அறிவியல் கருத்தரங்கை ஒழுங்கு செய்தது கடிதத்தொடர்பு மூலம் ..அவரும் சம்மத்தித்து விழாவுக்கு சென்றார் தனது காரில் பின் இருக்கையில் அமர்ந்திருக்க சாரதி வழமைபோல் வண்டியை ஓட்டிச்சென்றார்

மிக நீண்ட தூர பயணம் .. இடம் நெருங்கி வந்த போது நியூட்டன் சாரதியிடம் சொன்னார் நான் கார் ஓடுகிறேன் நீ பின்னுக்கு இரு ..சாரதி தயங்கினாலும் இறுதியில் சம்மத்தித்து இருந்தார் பல்கலைக்கழகம் வந்தது ..

நியூட்டன் சாரதிக்கு சொன்னார் ஒன்றும் சத்தம் போடாமல் நடப்பதை எல்லாம் நீயே செய் என்றார் ..

விழாஒருங்க்கிணைப்பாளர் கார் கதவை திறந்து சாரதியை நியூட்டன் என கருதி ராஜ மரியாதை கொடுத்து மேடையில் அமரவைக்க ..நியூட்டன் மேடைமுன் உள்ள முதல் வரிசையில் பார்வையாளர் இருக்கையில் இருந்தார் …

மேடையில் இருக்கும் நியூட்டனிடம் (சாரதி) விஞ்ஞான சந்தேக கேள்விகள் தொடங்கின முதலாவது வினாவை மாணவர் ஒருவர் கேட்டார் ….

அப்போது மேடையில் இருந்த நியூட்டன் (சாரதி) சொன்னார் இந்த சின்ன கேள்விக்கு எல்லாம் எனது -சாரதி பதில் சொல்வார் என்று கூறி மேடையை விட்டு இறங்கிச்சென்றார் –

பூவுடன் சேர்ந்த நாரும் நாறும் என்பார்களே அதுதான் இதுவே …

http://bit.ly/TamilJokes

ஒரு காட்டில் கிழட்டு சிங்கம்
வசித்து வந்தது அதனால்
போராடும் குணம் குறைந்து கொண்டே வந்தது …!

இந்த நிலையில் நரி ஒன்றின் உதவியை நாடி ..உனது தந்திர மூளையை பயன்படுத்தி நாள் ஒன்றுக்கு ஒருமிருகத்தை தனக்கு உணவாக கொண்டுவர கட்டளையிட்டது…!
நரியும் உடன்பட்டு தன் உயிரைக்காப்பாற்றியது …

தினம் தோரும் ஒரு மிருகத்தை தன் தந்திர புத்தியூடாக உணவளித்து வந்தது ..இறுதியில் நரியின் தந்திரம் மிருகங்களுக்கு விளங்க உணவு தேடுவதில் பிரச்சனை ஏற்பட ..எருமை மாட்டிடம் சென்று தன் தந்திரத்தை பயன்படுத்தியது

எருமை மாட்டை பார்த்து நரி கேட்டது …

காட்டுக்கு யார் ..? ராஜா …? என்று ..?

எருமை சொன்னது இது என்ன புதுக்கேள்வி ..?
சிங்கம் தானே என்றது …

நரி சொன்னது …

அது நேற்று வரை இன்றுமுதல் உன்னை தான் ராஜாவாக்க சிங்கம் நினைத்துள்ளது உன்னை அழைத்துவர சொல்லியே நான் வந்தேன் ..என்று தந்திரமாக எருமையை அழைத்து சென்றது

அங்கு சிங்கம் கடும் பசியுடனும் கோபத்துடனும்
காத்துக்கொண்டிருந்தது ..எருமை கிட்ட வரமுன்
அதன் மேல் பாய எருமை சற்று விலகி தப்பி ஓடியது …அவசரப்பட்டதால் சிங்கத்துக்கு உணவு கிடைக்கவில்லை ….

சிங்கத்தை பார்த்து நரி பேசியது -உனக்கு ஒரு கூடாத பழக்கம் அவசரப்படுவது ..நான் கஸ்ரப்பட்டு கூட்டிக்கொண்டு வர நீ குழப்பி விட்டியே என்று திட்டியது …!

சரி சரி போய் எருமையை கூட்டியா என்று கட்டளையிட நரி எருமையிடம் சென்று …

ஏப்பா…. ஓடி வந்த …? சிங்கம்… புதிய ராஜாவை கட்டிப்புடித்து முத்தமிட பாய்ந்ததை நீ கொல்லவருவதாக நினைத்து ஓடிவந்திட்டையே
பயப்பிடாமல் வா என்று மீண்டும் கூட்டிச்சென்றது

சிங்கம் இப்பொது கவனமாக எருமையைக் கொன்று சாப்பிட்டது ..சிங்கம் எருமையின் பெரிய காலை சாப்பிட்டு …நரியை பார்த்து சொன்னது
நீயும் கொஞ்சம் சாப்பிடு ..என்று சொல்லிவிட்டு தூங்கியது …..!

நரிக்கோ மூளையென்றால் தான் விருப்பம் அது எருமையின் மூளையை சாப்பிட்டது ..

சிறிது நேரத்தில் சிங்கம் எழுந்து எருமையை சாப்பிட தொடங்கியது ..அப்போது நரியிடம் கேட்டது ..எருமையின் மூளையை காணவில்லையே எங்கே என்று …?

நரி சொன்னது -எருமைமாட்டுக்கு மூளையிருந்தால் நான் கூப்பிட திருப்பி வந்திருக்குமா …?…
*
*
*
*
*
*
மிருகங்கள் குண இயல்புகள் …

சிங்கம் ; அவசரப்புத்தி
யானை ; பொறுமை
புலி ; குறி தப்பாது
நரி ;தந்திரம்
குரங்கு ;கொள்கை உடையது
……….இப்படி பல குணங்கள் கொண்ட மிருகத்தின்
கலவைதான் மனிதன் அதுதான் -கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவைதான் மனிதனோ …..?

http://bit.ly/TamilJokes

ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்க ஒரு நபருக்கு இருநூறு ரூபாய் என்று போட்டிருந்தது.நிறையப்பேர் பணம் கொடுத்து சுற்றி வந்தனர்.கஞ்சனுக்கும் அவன் மனைவிக்கும் ஹெலிகாப்டரில் சுற்ற ஆசை.அதே சமயம் இவ்வளவு செலவாகுமே என்று நினைத்து வெறுமே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவர்களின் தயக்கத்தைப் பார்த்த ஹெலிகாப்டர் இயக்குபவர் அவர்களை அழைக்க,அவர்கள் வேண்டாம் என்றனர்.அவரும் விடாமல்,”நீங்கள் ஹெலிகாப்டரில் ஏறுங்கள்.நீங்கள் பணம் கொடுக்க வேண்டாம்.ஆனால் ஒரு நிபந்தனை.நீங்கள் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது சிறிது கூட சப்தம் போடக் கூடாது.சப்தம் போடாதிருந்தால் பணம் வேண்டாம்.ஆனால் சப்தம் போட்டால் உரிய கட்டணம் மட்டும் செலுத்தினால் போதும் என்றார்.உடனே மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரும் ஹெலிகாப்டரில் ஏறினர்

.ஹெலிகாப்டர் இயக்குனர் வானில் என்னென்னவோ வித்தைகள் செய்ய ஆரம்பித்தார்.குட்டிக் கரணம் போட்டார்.வேகமாக இயக்கினார்.ஆனாலும் சிறு சப்தம் கூட வரவில்லை. கீழே இறக்கியதும் இயக்குனர் அந்தக் கஞ்சனிடம், ”எப்படிங்க,நான் இவ்வளவு செய்தும் நீங்கள் சிறு சப்தம் கூட செய்யவில்லை?”என்று வியப்புடன் கேட்டார்.

அந்தக் கஞ்சனும் பெருமையாக,எனக்கே ஒரு சமயம் கத்த வேண்டும் போல இருந்தது.ஆனாலும் சமாளித்து விட்டேன், என்றான்.அவரும் எந்த தருணத்தில் என்று கேட்க,

கஞ்சன் சொன்னான்,என் மனைவி ஹெலிகாப்டரில் இருந்து தவறிக் கீழே விழுந்தபோதுதான்.

# நீதி
என்னதான் இருந்தாலும்… காசேதான் கடவுளடா…

--
Reply all
Reply to author
Forward
0 new messages