மேலும் எங்களை தொடர சிரிக்கலாம் வாங்க !
நேற்று இரவு 10.30 அளவில் விஜய் டி.வி கலக்கப்போவது யாரு
நிகழ்ச்சியிலிருந்து...
ஆசிரியர்: டேய் 1000கிலோகிராம் 1 டன். அப்போ 3000கிலோகிராம் எத்தனை டன்?
மாணவன்: டன் டன் டன்
ஆசிரியர்: !!!! ???? !!!!
கிராமத்து அப்பா: எப்படியோ நாலு வருஷம் C படிப்ப
முடிச்சுட்டே... அடுத்து என்ன பண்ணப் போரே....?
மகன்: அரியர்ஸுனு ஒரு மேல் படிப்பு இருக்குப்பா...அதப் படிக்கணும்...
'சரி, எங்களுக்கு மாப்பிள்ளையை ரொம்ப பிடிச்சுப் போச்சு... என்ன போடணும்னு
எதிர்பார்க்கறீங்க..?''
''முன் ஜாமீன் பேப்பர்ல கையெழுத்து போடணும்..!''
சர்தார்ஜியிடம் அவரது நண்பர்: என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் ஷாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக் கலர் ஷாக்சும் அணிந்திருக்கிறாய்.
சர்தார்ஜி: சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.
ஏன் ஸ்கூட்டரை திருடினே...?"
"டிராபிக் போலீஸ்காரர்தாங்க சீக்கிரம் வண்டிய எடு வண்டிய எடுன்னு
அவசரப்படுத்தினாரு எசமான்..!"
*காதலர்கள் நகைச்சுவை*
உங்க இதயத்துல ஒரு உருவம் உக்கார்ந்திருக்கிர மாதிரி எக்ஸ்ரேல தெரியுது.
ஒரு பொண்ணு என் இதயத்துல இடம் பிடிச்சுட்டானு சொன்னேல, அவளா இருக்கும் டாக்டர்.
ஓடிப்போயிடலாமா டார்லிங்?
ஏன் இப்படி பயந்து சாகிறீங்க நடந்தே போகலாம்.
எத்தனை தடவை திரும்பி சொன்னாலும் ஏன் உனக்கு புரியவே மாட்டேங்கிறது?
திருப்பிச் சொன்னா எப்படி புரியும்? நேரா சொல்லுங்க.
அரசியல்வாதியின் மகளைக் காதலித்தது தப்பாப் போச்சு
ஏன்?
காதலை வாபஸ் வாங்கிக் கொள்வேன் என்று அடிக்கடி மிரட்டுகிற ரள்.
காதலியை பார்க்க போகும் போதெல்லாம் அவர் ஏன் கற்பூரம், வாழைப்பழம், தேங்காய் வாங்கிட்டு போகிறார்?
அது தெய்வீக காதலாம்.
எதுக்குடா கால்குலேட்டருடன் அந்த பொண்ணு பின்னாடி சுத்துறே?
கணக்கு பண்ணிட்டு இருக்கேன்.
என் காதலர் ரொம்ப சஞ்சத்தமா இருக்காரு
என்னாச்சு?
பீச்சுல பாதி சுண்டலை சாப்பிட்டு, மீதியை மணல்ல புதைச்சு வை நாளைக்கு எடுத்து சாப்பிடலாம்னு சொல்லாரு...!
என்ன தொடாம காதலிங்கசுரேஷ்
சரி கோவிச்சுக்காத, சுண்டல் வாங்கித் தர்றேன்.
முன்னெல்லாம் என் லவ்வர் பீச்சுக்கு கூட்டிட்டு போனா கடலை வாங்கித் தருவாரு. இப்ப
இப்படி எப்படி?
கடலை காண்பிக்கிறதோட சரி!
ஒவ்வொரு பண்டிகைக்கும் என் காதலிக்கு ஒரு சேலை வாங்கித் தருவேன்னு தெரியுமா?
நான் அவளுக்கு மேட்சா ஜாக்கெட் துணி வாங்கித் தருவேன்னு தெரியுமா?
டார்லிங் நம்ம கல்யாணம்?
சுண்டல்காரனுக்கு தரவேண்டிய பாக்கி கடன் தீர்ந்ததும்.
நேத்து நீயும் நானும் பயர் படம் பார்த்ததை என் லவ்வர் பார்த்துட்டான்.
அப்படியா? என்ன சொன்னான்
என்னை மறந்துடுன்னுட்டான்!
என் காதலர் ரொம்ப கஞ்சண்டி
எப்படி சொல்றே?
அவர் வீட்டிலிருந்தே சுண்டலை ரெடி பண்ணிக் கொண்டு வந்துட்டாரு...!
மரகதம்: எங்கவீட்டு வேலைக்காரி பணம் நகையோட ஓடிட்டா
அம்புஜம்: “அப்படியா உன் கணவரிடம் சொல்லி பொலிசிலே புகார் கொடுக்க வேண்டியது தானே”
மரகதம்: “அவ எல்லாத்தையும் எடுத்திட்டு ஓடினதே என் கணவரோட தான்”
டாக்டர்: கஸ்டப்பட்டு காப்பாத்தினேனே பீஸ் தரலியே
நோயாளி: நீங்கதானே டாக்டர் அந்த ஆண்டவன்தான் காப்பத்தணும் என்னீங்க…… ஆதனால் நான் பீஸை உண்டியல்ல போட்டிட்டன்
டாக்டர்: என்னையா உன் இதயத்திலே பாட்டுச்சத்தம் கேட்குது?
நோயாளி: டாக்டர் நீங்க காதுல மாட்டியிருக்கிறது வாக்மன்
நோயாளி: டாக்டர் இந்த ஆப்பரேசனால் எனக்கு பின்னாடி ஏதும் பரொபளம் ஒண்ணும் வராதே?
டாக்டர்: நீங்க வயித்தில தானே ஆப்பரேசன் பணணிக்கப்போறீங்க அப்புறம் பின்னாடி எப்படி ப்ரொபளம் வரும்
ஆசிரியர்: கோபு நீ மட்டும் ஏன் ஹோம் வேக் பண்ணலே?
கோபு: சேர் நான் ஹாஸ்டலே அல்லா தங்கி இருக்கேன்
1. இன்னைக்குத் தூங்கினா நாளைக்கு எந்திரிக்கலாம். ஆனால் நாளைக்குத்
தூங்கினா இன்னைக்கு எந்திரிக்க முடியுமா?
2. பஸ்சுல கலெக்டரே ஏறினாலும், முதல் சீட்டு டிரைவருக்குத் தான்.
3. சைக்கிள் கேரியர்ல டிபன் கேரியரை வெச்சி எடுத்துட்டுப் போகலாம். ஆனால்
டிபன் கேரியர்லே சைக்கிளை வெச்சு எடுத்துட்டுப் போக முடியாது
4. டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனா அது சினிமா தியேட்டர். ஆனால் உள்ளே
போய்ட்டு டிக்கெட் வாங்கினா அது ஆபரேஷன் தியேட்டர்.
5. என்னதான் மீனுக்கு நீந்தத் தெரிஞ்சாலும், அதால மீன் குழம்புலே நீந்த முடியாது.
6. அயர்ன் பாக்ஸ்லே அயர்ன் பண்ண முடியும். ஆனா பென்சில் பாக்ஸ்லே
பென்சில் பண்ண முடியுமா? இதுதான் வாழ்க்கை.
7. நீ என்ன தான் காஸ்ட்லி மொபைல் வச்சிருந்தாலும், அதுல எவ்வளவு தான்
ரீசார்ஜ் பண்ணாலும், உன்னால உனக்கு கால் பண்ண முடியாது.
8. க்ரீம் பிஸ்கட்லே க்ரீம் இருக்கும், ஆனா நாய் பிஸ்கட்லே நாய் இருக்குமா?
9. ஒரு எறும்பு நினைச்சா 1000 யானைகளைக் கடிக்கும். ஆனால் 1000 யானைகள்
நினைச்சாலும் ஒரு எறும்பைக் கூட கடிக்க முடியாது.
10. குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புற படுக்கலாம். ஆனால் குப்புற
படுத்துக்கிட்டு குவார்ட்டர் அடிக்க முடியாது.
11. செல்போனுலே பாலன்ஸ் இல்லைன்னா கால் பண்ண முடியாது. ஆனால் மனுசனுக்கு
கால் இல்லைன்னா பாலன்ஸ் பண்ண முடியாது.
12. ரயில்வே ஸ்டேஷன்லே போலீஸ் ஸ்டேஷன் இருக்கலாம். ஆனால் போலீஸ்
ஸ்டேஷன்லே ரயில்வே ஸ்டேஷன் இருக்க முடியாது.
13. என்னதான் கராத்தேயிலே பிளாக் பெல்ட் வாங்கினாலும், சொறி நாய்
தொரத்தினா ஓடித்தான் ஆகணும்.
ஒரு காலேஜ்ல பசங்க பொண்ணுங்க ஹாஸ்டலுக்குள்ள போறாங்கன்னு நிறைய கம்ப்ளைன்ட்.அதுக்கு ஸ்ட்ரிக்ட்டா நடவடிக்கை எடுக்க முடிவு பண்ணி அதை சொல்ல பிரின்ஸிபால் ஒரு கிளாஸ்க்குள்ள போனாரு.மாணவர்கள் எல்லாரும் அமைதியாயிட்டாங்க,"நீங்க லேடீஸ் ஹாஸ்டலுக்குள்ள அடிக்கடி போறதா கம்ப்ளைன்ட் வந்திருக்கு இனி யாராவது அப்படி நுழையறது கண்டுபிடிக்கப்பட்டா 500 ரூபா ஃபைன்" அப்டின்னுட்டு நிறுத்தினார்.பசங்களுக்குள்ள பரபரன்னு சத்தம், "இரண்டாவது தடவ போறது தெரிஞ்சா 1000 ரூபா அபராதம்" லேசா பசங்களுக்குள்ள முணுமுணுப்பு வந்தது
ரியாக்ஷன்ல திருப்தியான பிரின்ஸிபால் திரும்ப கடுமையான குரல்ல சொன்னார் "அதையும் மீறி திரும்ப மாட்டினா 2000 ரூபா கட்டணும்"
பின்னால இருந்து ஒரு பையன் கேட்டான்,
"ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
--