சிரிக்கலாம் வாங்க ! , செப்டம்பர்,25, 2015

0 views
Skip to first unread message

Friends Team

unread,
Sep 24, 2015, 12:09:55 PM9/24/15
to

என்ன எல்லா ப்ளேயர்சும் பேப்பரும், பேனாவுமா வந்துருக்காங்களா?
இன்னிக்கு டெஸ்ட் மேட்சுங்கறத தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க.

http://bit.ly/TamilJokes

உங்களுக்கு வந்திருக்கறது திருட்டுக் காய்ச்சல்

எத வச்சு டாக்டர் இதை திருட்டுக் காய்ச்சல்னு சொல்றீங்க?

நீங்கதான சொன்னீங்க, வீட்டுல யாருமே இல்லாதபோது நடு ராத்திரி
வந்துச்சுன்னு...

http://bit.ly/TamilJokes


டாக்டர்! டாக்டர்! என் நாக்கு வெளில தொங்கிகிட்டே இருக்கு..

கொஞ்சம் அப்டியே இருங்க என் ஸ்டாம்பையும் கவரையும் கொஞ்சம் ஒட்டிக்கறேன்.

http://bit.ly/TamilJokes

டாக்டர் : உன் ஹஸ்பன்ட் இனிமே குடிச்சார்னா எலியாயிடுவேன்னு
பயமுறுத்தியிருக்கேன். எஃபெக்ட் எப்படி இருக்கு?

மனைவி : ஒண்ணுமில்ல டாக்டர், நான் எலியாயிட்டா, அந்த ஓட்டை பக்கத்துல
கொஞ்சம் பிராந்தி ஊத்திவை வந்து குடிச்சுட்டு போயிடறேன்னு கெஞ்சறார்.

http://bit.ly/TamilJokes

""செருப்பு பெரிய சைஸô இருக்கே!''

""20 சதவீதம் எக்ஸ்ட்ரா ஆஃபர் செருப்பு இது!''

-பி.கவிதா, கோவிலாம்பூண்டி.

 http://bit.ly/TamilJokes

""உங்க மனைவிதான் உங்களை ஓட்டலில் சாப்பிடச் சொல்லிவிட்டு ஊருக்குப் போய்ட்டாங்களே, பின்னே ஏன் சமைக்கறீங்க?''

""டச் விட்டுடக்கூடாது பாருங்க!''

-ஆர்.ஆர்.பூபதி, திண்டுக்கல்.

 http://bit.ly/TamilJokes

""ஏன் சார் ரொம்ப சோகமாக இருக்கீங்க?''

""என் மனைவி ஒரு மாசத்துக்கு என்னோட பேச மாட்டேன்னுட்டா!

""அதுக்கு சந்தோஷம்தானே படணும், சோகம் ஏன்?

""அவ சொன்ன ஒரு மாசக் கெடு இன்றோட முடியுது! அதான்.

 -ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

http://bit.ly/TamilJokes
 

""உங்ககிட்ட ஐநூறு ரூபாய்க்குச் சில்லறை இருக்கா?''

""இருக்கு டாக்டர்... வேணுமா?''

""வேண்டாம்! கையில இருக்கிற பணத்துக்குத் தகுந்த மாதிரி மருந்து எழுதறதுக்குத்தான் கேட்டேன்''.

-எஸ்.மாரிமுத்து, சென்னை.

 http://bit.ly/TamilJokes

மனைவி: கணவன் - மனைவி சண்டைன்னா நாலு சுவத்துக்குள்ளேதான் இருக்கணும்.

கணவன்: அப்ப தப்பிச்சு ஓட எனக்கு உரிமை இல்லையா?

-துரை.ஏ.இரமணன், துறையூர்.

 http://bit.ly/TamilJokes

""ஏன்டி உன் பொண்ணு வயசுக்கு வந்ததை கமுக்கமா அமிக்கிட்டே''

""அவ பள்ளிக்கூடத்துக்கு போறவ. இந்த காலத்து ஆம்பிளைங்கள நெனைச்சா பயமா

கீதுக்கா!''

-என்.கிருஷ்ணவேணி, திருவண்ணாமலை.

http://bit.ly/TamilJokes

""அத்தே... உங்க ஒடம்புக்கு ஒண்ணுமில்லேன்னு டாக்டரே சொல்லிட்டாரு. அப்புறமும் நீங்க பிடிவாதமா பெட்லேயே கிடந்தீங்கன்னா...

நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது?''

""என்ன செய்வே?''

""எனக்கும் உடம்புக்கு முடியலைன்னு படுத்துக்குவேன்''

விசாலாட்சி, சென்னை-33.

http://bit.ly/TamilJokes

"முனி மூன்' போயிட்டு வந்தியா! என்ன சொல்றே?

ஆமாங்கிறேன்! ஹனிமூன் போன இடத்துல என் மனைவிக்கு முனி (பேய்) பிடிச்சிடுச்சே!?

-பால.கோவிந்தராஜ், மதுரை.

http://bit.ly/TamilJokes

டிசம்பர் 31க்கும் ,
ஜனவரி 1 க்கும்
ஒரு நாள்தான் வித்தியாசம்.
ஆனால் ,
ஜனவரி 1க்கும் ,
டிசம்பர் 31க்கும்,
ஒரு வருசம் வித்தியாசம்.
இதுதான் உலகம்.

http://bit.ly/TamilJokes

நண்பர் : இதுங்க ரெண்டும் எனக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!"

மொக்கை : "அப்படியா! அவனுக்கென்ன வயசு, இவனுக்கென்ன வயசு?"

http://bit.ly/TamilJokes

வந்தவர் : என்ன டாக்டர், இந்த நடு ராத்திரியிலே டிஸ்பென்ஸரியைத் திறந்து
வச்சுக்கிட்டு இருக்கீங்க?

டாக்டர் : தூக்கத்துலே நடக்கற வியாதிக்காரன் எல்லாம் இப்பதான் பீஸ் கொண்டுவந்து
தருவாங்க.

http://bit.ly/TamilJokes

ஒருவர் : இந்தச் சின்ன ஆபரேஷனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பீஸா? சரியான பகல்
கொள்ளையாயிருக்கே! டாக்டர் யாரு?

மற்றவர் : தெரியலைங்களே! முகமுடி போட்டிருந்தாரு!

http://bit.ly/TamilJokes

ஆஸ்பத்திரி நிர்வாகியிடமிருந்து டாக்டருக்கு இப்படி ஒரு குறிப்பு வந்தது :

"டாக்டர்! இந்த மாதத்தில் நீங்கள் இரண்டாக வெட்டிய பதினேழாவது ஆபரேஷன் டேபிள்
இது. தயவுசெய்து ஆபரேஷன் செய்யும்போது இத்தனை அழுத்தமாக வெட்டாதீர்கள்."

http://bit.ly/TamilJokes

வளர்ப்புப் பறவைகள் விற்கும் கடையில்...

அட..இந்தக் கிளி அழகா இருக்கே.. என்ன விலை..?

அது வேணாம்மா.. அதுக்கு வாய் ஜாஸ்தி..

நீ ஏம்பா கவலைப் படறே.. நான் சமாளிச்சுக்கறேன்..

இல்லம்மா.. அது வளர்ப்பு சரியில்லே.. குடும்பத்திலே குழப்பம் ஏற்படுத்திடும்..! டிவோர்ஸ் வரைக்கும் கூட கொண்டு போய் விட்டுடும்..!

பாவம்பா அது.. எல்லாரும் அதை வெறுத்தா அது என்ன பண்ணும்.? சரி .. விலையைச் சொல்லு..!

சொன்னா கேளுங்க.. இதுக்கு முந்தி நிறைய வீட்டுக்கு போயிட்டு உடனே திருப்பி கொண்டாந்து விட்டுட்டாங்க..ரிஸ்க் எடுக்கறீங்க.. சரி.. இந்த சனியனைக் கொண்டு போங்க..விலையப் பத்தி பிற்பாடு பேசிக்கலாம்..!

வீட்டுக்கு வந்த பிறகு.. வீட்டைப் பார்த்த கிளி..புது வீடு.. புது எஜமானியம்மா.. ப்ரமாதம்..!

எஜமானிக்கு ஆச்சர்யம்..! பள்ளி விட்டுப் பிள்ளைகள் வந்தனர்..கிளி.." புது வீடு.. புது எஜமானியம்மா.. புது குழந்தைங்க.. ப்ரமாதம்..

கார் வரும் ஓசை கேட்கவே, எட்டிப்பார்த்த கிளி சொன்னது...புது வீடு..புது எஜமானியம்மா..புது குழந்தைங்க..புது காரு... அடடே.. வாங்க பார்த்த சாரதி.. நீங்கதான் இங்கேயும் புருஷனா..???

http://bit.ly/TamilJokes

''ஒரு வாரமா என் காது சரியாக கேட்கவே மாட்டேங்கது டாக்டர்!''

''நீங்க சொல்லியே கேட்காத காது, நான் சொன்னா மட்டும் கேட்கவா போகுது!.''

மேலும் எங்களை தொடர சிரிக்கலாம் வாங்க !
1.Whats App : http:/bit.ly/TamilJokes
2.Google Groups : http:/bit.ly/Tamiljokes
3.Google Plus: http://bit.ly/TamilJoke
4.Facebook: http://bit.ly/சிரிக்கலாம்_வாங்க
5.Twitter : https://twitter.com/tamiljoke

--
Reply all
Reply to author
Forward
0 new messages