363 views
Skip to first unread message

Raghunathan Iyer

unread,
Apr 13, 2016, 3:52:37 AM4/13/16
to arunalaya

 
Krishnan Seshadri's photo.
 
 

இன்று ஒரு அற்புதமான விஷயத்தை பகிர்ந்துள்ளீர்கள். தமிழ் நாட்டை பொறுத்தவரை கடந்த 3 தலைமுறையை சேர்ந்த பிராமணர்கள் படக்கூடாத பல கஷ்டங்களையும் பட்டு விட்டார்கள். தமிழ் நாட்டில் பெரியாரில் தொடங்கி, கருணாநிதி இன்றைய திருமாவளவன் வரை பல அவசியல்வாதிகள் தங்களை அரசியலில் ஸ்திரப்படுத்திக் கொள்ள பிராமண எதிர்ப்பு என்ற ஒரு கேவலமான விஷயத்தை கையில் எடுத்து மக்களின் மனதில் விஷத்தை பரப்பி தங்களையும் தங்கள் குடும்பத்தையும் வளப்படுத்திக் கொண்டு விட்டார்கள்.

பத்து காசுக்கு பெறாத அரசியல்வாதி கூட பார்ப்பான் என்று திட்டுவான். 1950 களில் தொடங்கி தமிழகத்தில் பிராமணர்கள் சந்தித்த கொடுமைகள் பலப்பல. நானும் ஒரு பிராமண, புரோகித குடும்பத்திலிருந்து வந்ததால் என்னால் அந்த மறக்க முடியாத கருப்பு நாட்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். வைதீக பிராமணர்களுக்கு குடுமி முக்கியம்.

தி.க. வீரமணியும் அவர்களது சிஷயர்களும் அப்போது பிராமணர்களின் குடுமியையும், பூணூலையும் அறுப்பதை ஒரு பெரிய சாதனைகளாகவே கருதினர். திருச்சியில் கொள்ளிடக் கரையில் ஒரு ஆவணி அவிட்டத்தன்று செய்த அழிச்சாட்டியம் மறக்க முடியாத ஒன்று. இதை தட்டிக் கேட்ட ஒரு பிராமணர் கொலையே செய்யப்பட்டார்.

அன்று எந்த மனித உரிமை காரகளும் அன்று இந்த அயோக்கியத் தனங்களை கண்டிக்கவில்லை. கருணாநிதியும் அவர் கூட்டமும் பேசிய பேச்சுக்களும், போட்ட ஆட்டமும் அப்படி. கிட்டத்தட்ட இன்னொரு முகலாய சாம்ராஜ்ய ஆட்சிதான் அப்போது நடந்தது.

இந்த பிரச்சினை கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் தமிழ் நாட்டில் நீடித்தது. 1977 ஆம் ஆண்டு திரு. எம்.ஜி.ஆர். அவர்களின் ஆட்சி அமைந்த பிறகுதான் பிராமணர்களுக்கு சற்று நிம்மதி கிடைத்தது. இடைப்பட்ட காலத்தில் தான் பல பிராமண குடும்பங்கள் பாதுகாப்பு கருதியும், பிழைப்பு தேடியும் வேறு மாநிலங்களுக்கும் போக துவங்கினர்.

ஆலய பூஜைகளை செய்து வந்த சிவாச்சார்யார்களும், ஸ்ரீ வைஷ்ணவ பட்டாச்சார்யார்களுக்கும் இந்த நிலைமை ஏற்பட்டது. தமிழகத்தில் மட்டும்தான் இந்த நிலை. பிராமணர்கள் வெளியேறியதால் பல ஆலயங்கள் இன்று ஒருவேளை பூஜை கூட இன்றி ப்ரிதாப நிலையில்.

இதனால் வெறுத்துப் போன கொஞ்ச நஞ்ச பேரும் இந்த வைதீகம் நம்மோடு போகட்டும் என்று முடிவெடுத்து தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்து ஏதேனும் வேலை தேடிச்சென்று விடும்படி அறிவுறுத்தினர். இப்போது பல கிராமங்களில் புரோகிதர்களே இல்லை. பிராமணக் குடும்ப்ங்களே இல்லாத கிராமங்கள் இன்று தமிழகத்தில் பல உண்டு.

தற்போது தான் பிராமணர்களுக்கு சற்று நிம்மதியும் தைரியமும் வந்து உள்ளது. இப்போதைய தேவை ... நம்மைப் போன்றவர்கள் வைதீகர்களை ஆதரிக்க வேண்டியது. எது எதற்கோ லட்சக்கணக்கில் செலவு செய்கிறோம். ஆண்டுக்கு ஒரு முறையேனும் 10 வைதீகர்களை வீட்டுக்கு அழைத்து ஏதேனும் ஒரு பூஜையோ, ஹோமமோ செய்து நம்மால் ஆன, அதே நேரத்தில் அவர்களை கௌரவிக்கும்படியான ஒரு தக்ஷிணையும் தந்து நமஸ்கரித்தால் அவர்களும் திருப்தியுறுவார்கள்.

ஜாதி இல்லை ஜாதி இல்லை என்று சொல்லிக்கொண்டே இப்போது அவனவனும் ஜாதியை வைத்துத் தான் பிழைப்பை நடத்திக் கொண்டு இருக்கிறான். ஆனால் நம்மவர்கள்...? சற்று சௌகரியம் வந்து விட்டால் தம்பியே அண்ணனை திரும்பி பார்ப்பது இல்லை. ஒரு குடும்பத்தில் ஒருவன் வைதீகத்தில் இருந்து, கஷ்டப்படுகிறான் என்றால் கைகொடுத்து தூக்கி விடுவதில்லை. அப்புறம் எப்படி நிலைமை மாறும்..?

பெண்ணைப் பெற்ற ஒவ்வொரு பிராமணனும் ஒரு பிராம்மண பையனுக்கு பெண்ணை தந்தால் போதும். நமக்கு வேறு யாரும் உதவ தேவையில்லை.

படித்த ஒவ்வொரு பிராமணப் பெண்ணும் தான் படிப்பது அறிவை வளர்த்துக் கொள்ள மட்டுமே என்று உணர வேண்டும். வைதீகத்தில் உள்ள பிராமணனை கல்யாணம் செய்து கொள்வதை பெருமையாக கொள்ள வேண்டும். அதை விட்டு விட்டு ஒரு கிறிஸ்தவனையோ, முஸ்லிமையோ காதலித்து திருமணம் செய்து கொள்கிறவர்களை என்ன வென்று சொல்ல...?

இன்றைய நிலையில் பிராமணப் பெண்கள் திருமதி. விஷாகா ஹரியைப் போன்றவர்களை ஒரு முன்னுதாரணமாக கொள்ள வேண்டும். ஸ்ரீமதி. எம்.எஸ். சுப்புலக்ஷ்மிக்கு பிறகு நம் கண் முன்னே வாழும் ஸ்த்ரீ ரத்னம் இவர்.

இந்த பிரச்சினையில் ஒரு நல்ல மாற்றம் வெகுவிரைவில் வரும். அந்த நம்பிக்கையை உண்டாக்க வேண்டிய சமுதாய கடமையும் நமக்கு இருக்கிறது.


Raghunathan Iyer

unread,
Apr 13, 2016, 3:59:24 AM4/13/16
to arunalaya



Sridharan Sivaraman's photo.
Sridharan Sivaraman's photo.
Sridharan Sivaraman's photo.
Sridharan Sivaraman's photo.
Sridharan Sivaraman added 4 new photos — with SV Palanisamy.
  நிறைய விரதங் களை கடைபிடிக்கிறார்.அது மட்டுமல் லாமல் சைவஉணவினையே உண்கிறார்.எந்த நாடு சென்றாலும் இந்துகோயில்களுக்கு செல்வதையே விரும்புகிறார்.
மற்ற மதத்தினை மதிக்கிறார்.தன்னுடைய மதத்தின் படி
வாழ்கிறார்.மோடி தெய்வத்துக்கு பயப்படுகிறார். அதனா ல்தான் அவருடைய ஆட்சியில் ஊழல் இல்லை.அவர்
தன்னு டைய மனசாட்சிக்கு பயப்படுகின்றார். அதனாலே வாக்க ளித்த மக்களுக்கு இயன்ற வரை டார்கெட் வைத் து வேலைசெய்து வருகிறார்
காவி கட்டிய எல்லோருமே மகா யோகிகள் அல்ல. ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்தும் சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ தான் அவதரிக்கி றார்கள்.அப்படி தான் மோடியும்.இவர் காலத்தில் நாமும்
வாழ்ந்தோம் என்பதே கடவுள் நமக்கு கொடுத்த வரமே.

Raghunathan Iyer

unread,
Apr 13, 2016, 4:01:26 AM4/13/16
to arunalaya


.வயிற்றுப்பசியைப் போக்குகின்ற அன்னதானமே தானத்தில் சிறந்தது என்று நடைமுறையிலும் தானத்தில் சிறந்தது நிதானம்தான் என்று தத்துவரீதியாகவும் நாம் வாதம் செய்தாலும், இருக்கின்ற தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகாதானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது இந்த கன்னிகாதானத்தைதான்
உண்மைதான் ஆணுக்கு கன்னியைதானம் செய்ததால்தான் அந்தவீட்டில் அன்னதானம் சிறந்தோங்கும்

Amurthi Navaneetham's photo.

Raghunathan Iyer

unread,
Apr 13, 2016, 4:03:52 AM4/13/16
to arunalaya


பிராமணர்கள்'s photo.
பிராமணர்கள்

காசியில் திதி கொடுப்பது எப்படி ?
முழுமையாக தந்திருகின்றேன் , பொறுமையாக படித்து பாருங்கள் .

அன்பின் உள்ளங்களே, உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வணக்கங்கள்.
நமது மூதாதையருக்கு தலைமுறை தாண்டி திதி கொடுக்காமல் அல்லது திதி கொடுக்க மறந்திருந்தால் வாழ்வில் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாமையான ஒரு சூழல் அதாவது காரணமின்றி தொடர் நஷ்டங்களும், கஷ்டங்களும் வந்து அதனை சரி செய்யமுடியாத நிலையும் ஏற்படும். இந்த நிலை அவரவர் வாழ்க்கைக்கு ஏற்றாற்போல் பல்வேறு, மாறுபட்ட, வெவ்வேறு விஷயங்களாக வெளிப்படும்.
இதனை பித்ரு தோஷம், பித்ரு சாந்தி என்று சொல்வார்கள்.
திதி என்பது மூதாதையரின் ஆன்மா சாந்தி அடைய மூதாதையரின் (இறந்தபின் எரித்த) சாம்பலை வைத்து கொடுக்கபடுவது.
இப்போது ஒருவர் தனது மூதாதையருக்கு திதி கொடுக்க எண்ணுகிறார். அவருக்கு அவரது மூதாதையரின் சாம்பல் எங்கிருந்து கிடைக்கும். ? இறந்து பல வருடங்கள் கழிந்த பின் எங்கே போவது சாம்பலுக்கு ?
அதனால் அவர் காசி யாத்திரை புறப்படும் நாளுக்கு பத்து நாட்கள் முன்னதாக ராமேஸ்வரம் செல்ல வேண்டும்.
அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் ஒரு ஐயரிடம் சென்று அவரிடம்,
ஐயா, நான் காசிக்கு சென்று எனது மூதாதையருக்கு திதி கொடுக்கப் போகிறேன், எனக்கு மூதாதையரின் சாம்பல் வேண்டும் அதனால் இங்கு அவர்களுக்கு திதி கொடுத்து மண் வாங்க வந்துள்ளேன் என்று சொல்லி திதி தர வேண்டும்.
அவர்கள் சம்பிரதாயப்படி எல்லாம் செய்து அக்னி தீர்த்தக் கடலிலிருந்து மூன்று கை மண் எடுத்து அதனை ஒன்றாக்கி பிறகு அதனை மூன்று சம பாகமாக்கி ஒன்று மகாவிஷ்ணு, ஒன்று மகாசிவன், ஒன்று நமது மூதாதையர் என பிரித்து அதற்கு பூஜை செய்து மகாவிஷ்ணு, சிவன் எனும் இரு பாகங்களை அங்கேயே அக்னி தீர்த்தத்திலேயே விட்டு விட்டு நமது மூதாதையர் பாகமான மணலை மட்டும் ஒரு துணியில் நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவேண்டும்.
இந்த மணலை வீட்டுக்கு கொண்டு சென்று காசிக்கு புறப்படும் நாள்வரை மலர் (பூ) வைத்து பூஜை செய்யவேண்டும்.
இந்த நாட்களில் உறவினர் இறந்தால் இருப்பது போல துக்கம் அனுஷ்டிக்கவேண்டும்.
இந்த மணல் காய்ந்தபின் பார்த்தால் இடுகாட்டு சாம்பலுக்கு சற்றும் மாறாமல் இருக்கும்.

2. காசி யாத்திரை தொடங்கும் நாளில் நீங்கள் திதி கொடுக்க இருக்கும் நாளின் நட்சத்திரம், திதி, நாம் திதி கொடுக்க இருப்பவர் பெயர், அவருக்கு நாம் என்ன உறவு என்பது போன்ற விபரங்களுடன் இந்த மணல், தேன் 50Ml , பச்சரிசி மாவு 250g, எள் Rs.3.00 ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளவும்.
இப்போது நாம் திதி கொடுக்க தயார்.
முதலில் அலகாபாத் செல்ல வேண்டும் அங்குள்ள த்ரிவேணி சங்கமத்தில்தான் இந்த மணலை விடவேண்டும்.
திதி கொடுப்பவர் இங்கே முடியை எடுத்துக்கொள்ளவேண்டும்.
(மொட்டையடித்துக் கொள்ளவேண்டும்). பின்னர் குளித்து விபூதி சந்தனம் பூசிக்கொண்டு ஒரு படகில் ஏறி கங்கை,யமுனா,சரஸ்வதி சங்கம இடத்திற்கு சென்று அங்கு மிக ஆழமாக இருக்கும் அதனால் படகுகளை இணைத்துக்கட்டி ஒரு திறந்தவெளி பாத்ரூம் போல அமைத்திருப்பார்கள்.
அங்கே நாம் சென்று இறங்கி இடுப்பளவு நீரில் நின்றுகொண்டு அந்த மணலில் கொஞ்சம் கையில் எடுத்துக்கொண்டு, அதில் சிறிது பூவை வைத்து வருடம், மாதம், அன்றைய கிழமை, அன்றைய திதி, அன்றைய நட்சத்திரம், தான் இன்னார் மகன் அல்லது மகள், திதி தருபவருக்கு என்ன உறவு போன்றவைகளை சொல்லி என்னால் கொடுக்கப்படும் இந்த திதியை ஏற்று அவர்களின் ஆன்மாவை கைலாயத்திற்க்கோ வைகுண்டத்திற்கோ சேர்த்து ஆன்மாவிற்கு விடுதலை தரவேண்டும் தாயே என்றவாறு
அந்த மணலை கையில் ஏந்தி நம் தலையில் வைத்து கங்காதேவி, யமுனாதேவி, சரஸ்வதி தேவியை நினைத்து மனமுருகி வேண்டி அப்படியே நீரில் மூழ்கி விட்டு விடவேண்டும்.
( நம் தலையில் நேரடியாக மணலை வைக்கக்கூடாது, மணல் நம் தலையில் படக்கூடாது, கையில் வைத்து மூடிக் கொள்ளவேண்டும்).
இப்படியே நமது அத்தனை உறவினர்களுக்கும் ஒவ்வொருவராக சொல்லி சொல்லி மணலை த்ரிவேணி சங்கமத்தில் கரைக்க வேண்டும்.
நினைவில் இல்லாதவர்களுக்கும் இறுதியில் எனது வம்சம்,எனது தாயார் வம்சம், எனது தந்தையார் வம்சம் எல்லோருக்கும் என்று சொல்லி விட்டு விடலாம். நமக்கு விரோதமான சொந்தமாக இருந்தாலும் இங்கே கோபம் பாராட்டாமல் விரோதம் பாராட்டாமல் கொடுக்கவேண்டும்.
ஆத்மாக்களுக்கு சொந்தமில்லை நாமெல்லோரும் உறவுகளே !!!
எல்லோருக்கும் கொடுத்து முடித்தவுடன் நன்றாக குளித்துவிட்டு படகில் ஏறி இன்னும் கொஞ்சம் நதியின் உள்ளே சென்று ஒரு கேன் அல்லது ஒரு பிளாஸ்டிக் பாட்டிலில் த்ரிவேணி தீர்த்தம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
அடுத்து நாம் செல்வது வாரனாசி எனப்படும் காசி மாநகரம்.
இரண்டாவது கட்டமாக நமது திதி கொடுக்கும் நிகழ்வில் நாம் இப்போது அலகாபாத்தில் இருந்து சுமார் 220km தொலைவில் இருக்கும் வாரணாசிக்கு வந்துவிட்டோம். கங்காதேவி இங்கு ஆர்ப்பரித்து ஆனந்தமாக பாய்ந்து செல்கிறாள். இங்கேதான் பல ஆயிரம் முனிவர்களும் மகரிஷிகளும் தினசரி அரூபமாக வந்து ஸ்ரீ காசி விஸ்வநாதரை தரிசிப்பதாக வாரனாசி க்ஷேத்ர புராணம் கூறுகிறது.
மேலும் எம்பெருமான் சிவன் கேதார்நாத்தில் இருப்பதை காட்டிலும் காசியில் இருப்பதை விரும்புகிறார் என்கிறது.
இங்கே நாம் கங்கையில் ஆனந்தமாக நீராடி (நமது அன்னையின் மடியில் தவழ்வதுபோல்) மகிழ்வுடன் ஸ்ரீ காசி விஸ்வநாதரை தரிசித்து அங்கே சாஷ்ட்டாங்கமாக வீழ்ந்து தண்டனிடவேண்டும். ( நமஸ்கரிக்கவேண்டும் ) அப்போது நாம் “ ஐயனே எனக்கு தெரிந்தவகையில் எனது மூதாதையருக்கு என்னால் ஆன வகையில் திதி தந்துள்ளேன். பெருமான் அதனை ஏற்று எனது மூதாதையரின் ஆன்மாக்களை திருக்கைலாயமோ, ஸ்ரீவைகுண்டமோ எது அவர்களின் இருப்பிடமோ அங்கு சேர்க்க வேண்டும் என்று மனதில் ஆழமாக சிந்தித்து தண்டனிட வேண்டும் என்பார் பெரியோர்கள்.
இங்கு ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருமேனியில்(சிவலிங்கத்தில்) நமது சிரம் வைத்து வணங்கி வேண்டுதல் செய்யலாம். இங்கு பார்க்க வேண்டிய கோயில்கள் ஏராளம், ஏராளம். ஸ்ரீ அன்னை அன்னபூரணி, ஸ்ரீ காசி விசாலாட்சி, ஸ்ரீ மகாகால பைரவர் என நிறைய கோயில்கள் உள்ளன. சந்திரமுகி, அரிச்சந்திரா கட்டம் என நிறைய படித்துறைகள் உண்டு. கங்கை கரை ஓரங்களில் முதலைகள் உண்டு. ஜாக்கிரதை.
அடுத்து நாம் செல்லவேண்டியது கயா எனும் நகரம்.
மூன்றாவதாக நாம் செல்ல இருப்பது கயாசுரன் எனும் அரக்கனால் நமக்கு கிடைத்த “பித்ரு பிண்டார்ப்பன ஸ்தலம்”
இங்கு நாம் ஒரு தமிழ் தெரிந்த ஐயரை பார்த்து பேசிக் கொள்ள வேண்டும். ( இரயில்வே ஸ்டேஷனிலேயே நம்மை அவர்கள் மடக்கி விடுவார்கள்.) நாம் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இல்லையென்றால் காசு கறந்து விடுவார்கள்.
இங்கு பல்குனி எனப்படும் ஆறு ஓடுகிறது. அதில் குளித்து விட்டு வந்து விடவேண்டும். ஐயர் நம்மிடம் எள், பச்சரிசி மாவு, தேன் தந்து அதனை கலக்கி பிசைந்து தயார் செய்ய சொல்வார், நாம் வைத்துள்ள எள், தேன், பச்சரிசி மாவுடன் அதையும் சேர்த்து நிறைய மாவாக்கி அதனை பிசைந்து கொள்ளவேண்டும்.
அதனை மூன்று பாகமாக்கி ஒவ்வொரு பாகத்தையும் முப்பத்திரண்டு சிறு சிறு உருண்டைகளாக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது தனித்தனியாக நம்மிடம் மூன்று முப்பத்திரண்டு உருண்டைகள் உள்ளது.
நாம் நிர்மாணித்த ஐயர் மந்திரங்கள் சொல்லி பூஜைகள் செய்வார், பிறகு நம்மிடம் நமக்கு மிகவும் பிடித்த ஒரு இலை, ஒரு காய், ஒரு பழம் இவைகளை நமது மூதாதையருக்காக இனி பயன்படுத்தமாட்டேன் என்று விட்டுவிட சொல்வார்.
சரி என்று நாம் ஏதாவது ஒரு இலை, ஒரு காய், ஒரு பழம் விடவேண்டும். அதனை நாம் என்றுமே உண்ணவே கூடாது.
(நான் எனக்கு மிகவும் பிடித்தமான ஆப்பிளை விட்டேன், மிகவும் ருசித்து உண்ணும் பாகற்காயை விட்டேன், இலை ஆலமரத்தின் இலையை விட சொன்னார்கள் விட்டேன்.)
ஒன்று.
முதல் முப்பத்திரண்டு உருண்டைகளை பல்குனி ஆற்றில் கொஞ்சம் கொஞ்சமாக விடவேண்டும், மீன்களுக்கு உணவாகும்.

இரண்டு
இரண்டாவது முப்பத்திரண்டு உருண்டைகளை கயாசுரன் மார்பில் மகாவிஷ்ணுவின் ஒரு பாதம் மீது ஒவ்வொரு உருண்டையாக நமது உறவினர்களின் பெயரைச் சொல்லி சொல்லி விட வேண்டும், அப்போதும் நாம் “எம்பெருமானே! என்னாலான வகையில் எனது மூதாதையருக்கு திதி தந்துள்ளேன், இதனை மனமுவந்து ஏற்று அவர்களின் ஆன்மாவை திருக்கைலாயமோ, ஸ்ரீவைகுண்டமோ அங்கு அழைத்துச் செல்வாயாக” என்று மனமுருக வேண்டிக் கொண்டே ஒவ்வொன்றாக அந்த திருவடியின் மீது விடவேண்டும்.

மூன்று
மூன்றாவது முப்பத்திரண்டு உருண்டைகள் கோயிலுள்ளே இருக்கும் ஆலமரத்தின் வேர்களில் இடவேண்டும். (இந்த ஆலமரத்தின் வேர்பகுதி அலகாபாத்திலும், நடுப்பகுதி ஸ்ரீகாசியம்பதியிலும் , கடைசிப்பகுதி (கயாவழியாக - கயாசுரன் வேண்டுதல்படி- படிக்க : கயாசுரன்-கதை) இறைவனாரின் தோட்டத்திலும் இருப்பதாகவும் நமது மூதாதையரின் ஆன்மாக்கள் எல்லாம் அந்த மரத்தின் விழுதினைப் பிடித்து கொஞ்சம் கொஞ்சமாக நாம் இங்கே தரும் திதியைப் பருகி மேலேறுவதாகவும் ஐதீகம்.
நாம் திதி தரமறந்தாலோ, தராமல் இருந்தாலோ அவர்களால் கீழேயேதான் இருக்கமுடியும், மேலேறும் மற்ற ஆன்மாக்களைப் பார்த்து அழுதுகொண்டிருப்பர்கள், இங்கே அவர்கள் அழ அழ நாம் அங்கே மிகுந்த கஷ்டங்களுக்கு ஆளாவோம் என்பார்கள், அந்த ஆன்மாக்களின் உறவுகளின் வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் உடனே இவனாவது நமக்கு திதி தந்து மேலேற்றுவானா என்று எண்ணுவார்களாம்.
நாம் இப்படி திதி கொடுப்பதனால் அவர்கள் உடனே மரத்தின் உச்சிக்கு சென்று தங்களின் இருப்பிடம் சேர்ந்து விடுவதாக ஐதீகம்.
இதனை அலகாபாத்தில் முண்டம் (முடிஎடுத்தல் ) காசியில் தண்டம் (சுவாமியை தண்டனிடுதல்) கயாவில் பிண்டம் (பிண்டார்ப்பணம் செய்தல் ) என்பார்கள்.
பின்னர் அங்குள்ள ஒரு ஐயரை அழைத்து நாம் நிர்மாணித்த ஐயர் கேட்பார் “ இவர்களின் மூதாதையர் சொர்க்கம் சென்று விட்டார்களா? அவர்கள், ஆம், சென்று விட்டார்கள், நமது ஐயர், அவர்கள் இவர்களின் செய்கையினால் சந்தோஷப்பட்டார்களா? அவர்கள், ஆம், மிகவும் சந்தோஷப்பட்டார்கள், நமது ஐயர், சரி, இவர்களை ஆசீர்வதியுங்கள்.
அந்த ஐயர், உங்கள் உறவினர்கள் சார்பில் உங்களை ஆசிர்வதிக்கிறேன்,
உங்கள் செய்கையினால் அவர்கள் மிக சந்தோஷம் அடைந்து சொர்க்கம் சென்றார்கள். உங்களுக்கு ஆசீர்வாதம், இனி நன்றாக இருங்கள், என்று சொல்வார்கள் . இதற்கு “சொஸ்தி சொல்வது” என்பார்கள்.
அடுத்தது நாம் செல்ல இருப்பது இராமேஸ்வரம்.
நாம் அடுத்து மீண்டும் இராமேஸ்வரம் வரவேண்டும், இராமேஸ்வரம் வந்து நாம் அலகாபாத்தில் நாம் எடுத்த தீர்த்தத்தை கோயிலில் கங்கா அபிஷேகம் என்று சொல்லி இரசீது போட்டு அதனை இங்குள்ள கோயில் ஐயரிடம் தரவேண்டும், அவர் உங்களை உள்ளே அமரச்செய்து உங்கள் கங்கை நீரினால் சுவாமிக்கு அபிஷேகம் செய்வதை நீங்கள் காணச்செய்வார்.
அப்போது நீங்கள் “ ஐயனே என் அறிவுக்கு தெரிந்தவாறு எனது மூதாதையருக்கு திதி தந்துள்ளேன், அதனை ஏற்று அவர்களை நின் மலர்ப்பதத்தில் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று மனமுருகி வேண்டிக் கொள்ளவேண்டும். பின்னர் அங்கே வரும் கோடித் தீர்த்தம் பிடித்து வந்து வீட்டில் எல்லோருக்கும் தரவேண்டும். வீட்டிலும் வைத்துக்கொள்ளலாம். காசியிலும் கங்காதீர்த்தம் பிடித்து வந்து வைத்துக் கொள்ளலாம். கங்காதீர்த்தம் வீட்டில் இருப்பது நன்றாகும்.
இப்படியாக இராமேஸ்வரத்தில் துவங்கி இராமேஸ்வரத்திலமுடிகிறது மூதாதையருக்கு திதி தரும் காசி யாத்திரை.
ஸ்ரீஅலகாபாத், ஸ்ரீகாசி மாநகரம், ஸ்ரீகயா நகரம் இங்கெல்லாம் மலர்கள் மணப்பதில்லை, காகம், பல்லிகள் சப்தமெழுப்புவது இல்லை, மாடுகள் முட்டுவதில்லை, பிணம் எரியும் வாடை வருவதில்லை.
காரணம் என்ன ? அங்கு லட்சோப லட்சம் முனிவர்களும் ரிஷி பெருமக்களும் தவமியற்றிகொண்டே இருக்கின்றார்கள். அவர்களின் தவம் கலைந்து விடக்கூடாதென்று எண்ணியே எம்பெருமான் கருணை கொண்டு அருளியதே காரணம்.
காசி யாத்திரை செல்லுங்கள், மூதாதையருக்கு திதி கொடுங்கள். அவர்களின் ஆத்மாவை சாந்தப்படுத்தி நீங்கள் சந்தோஷமாகுங்கள் , உங்கள் சந்ததிகளுக்கும் நல்வழி அமைத்துக் கொடுங்கள் .

*வளமோடு வாழுங்கள் வாழும் நாளெல்லாம்.*

Like
Like
Love
Haha
Wow
Sad
Angry
Comment

Raghunathan Iyer

unread,
Apr 13, 2016, 4:05:05 AM4/13/16
to arunalaya


  
17 hrs · 
Chennai Dreams's photo.

Raghunathan Iyer

unread,
Apr 13, 2016, 6:48:03 AM4/13/16
to arunalaya


பெரியவா சரணம் !!!

""அறுபதுக்கு அறுபது பொருத்தம்தானே ""

மகா பெரியவா மனதுள் என்ன நினைக்கிறார் என்பது எவராலும் கண்டறியமுடியாத ஒன்று. அவர் தான் நினைப்பதைப் பக்தர்களின்மூலம் நடத்திக்கொண்டு விடுவார்” என்கிறார் அகிலா கார்த்திகேயன்.

”மகாபெரியவா பீடாரோஹணம் செய்த மணிவிழாவைக் கொண்டாடும் வகையில், மணிகள் பொருந்திய தங்கத்தாலான மகுடத்தை அவருக்குச் சூட்டவேண்டும் என்பது, ஆந்திர பக்தர்கள் சிலரின் விருப்பம். மணிமகுடம் மட்டுமின்றி, இரண்டு லட்சம் ரூபாய் நிதியும் திரட்டி, காஞ்சி மடத்துக்குக் கொடுக்கத் தீர்மானித்தனர். இது தொடர்பாக மகாபெரியவாளிடம் அனுமதியைப் பெறுவதற்காக, காஞ்சி மடத்துக்கு வந்தனர்.

சுவாமிகளைத் தரிசித்து நமஸ்கரித்துவிட்டு, தங்களது நிதி காணிக்கை குறித்து மெள்ளத் தெரிவித்தனர். உடனே பெரியவா, ”வசூல் பண்றதை உடனே நிறுத்திடுங்கோ!” என்றார். அந்த வார்த்தையில் கடுமை இல்லை; ஆனால், உறுதி இருந்தது. ஓர் உத்தரவு போன்று, தெலுங்கு மொழியிலேயே அதனைச் சொன்னார்.

மடாதிபதி என்பவர், பண பலமோ ஆள்கட்டோ இல்லாமல் ஒதுங்கி நிற்கும்போதுதான், அவர் தனது தவத்தாலும் ஒழுக்கத்தாலும் சமூகத்தில் மதிப்பைப் பெறமுடியும். சந்நியாசி என்பவர், எந்த உடைமையும் இல்லாதவராக இருக்கவேண்டும்; தனது ஊர் என்று எதையும் சொல்லிக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே, ஊர் ஊராகத் தேசாந்திரம் செய்யவேண்டும் என வலியுறுத்துகிறது சாஸ்திரம்.

”சாதுக்களும் சந்நியாசிகளும்தான் தர்மாச்சார்யர்களாக, செய்யவேண்டியதைச் செய்யமுடியும். அவர்களுக்கென்று ஸ்தாபனம் இருந்தால்தான், இது சாத்தியமாகும். மடாதிபதி எனும் பொறுப்பை ஏற்பது இதற்காகத்தான். அவசியத்துக்கு அதிகமாக எங்களிடம் ஏதும் இருந்துவிடக்கூடாது. அந்தக் கட்டுப்பாடு இருக்கவேண்டும் என்பதற்காகத்தான், கண் குத்திப் பாம்பாகக் கணக்குகளில் கவனமாக இருக்கிறோம். மடத்தைக் கட்டி ஆளுகிற சாமர்த்தியம் மட்டும் போதாது; தன்னைத்தானே கட்டி ஆளுகிற மனோபலமும் வேண்டும்!

இந்த மடம் அவசியமான செலவுகளுக்கே வழியின்றித் திண்டாடிய காலமும் உண்டு. ஆனால், போதிய அளவுக்கு திரவியங்கள் கிடைப்பதற்கு, ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர் அருள் புரிந்திருக்கிறார். சில தருணங்களில், கொஞ்சம் நிறையவே பண்ணிவிடுகிறபோது சுவாமி நம்மைச் சோதனை பண்ணுகிறாரோன்னு தோணும். பணம் சேரச் சேர, ஏதாவது பணிக்கு அந்த நிதியைக் கொடுக்கச் சொல்லிடுவேன். மீதின்னு எதுவும் மிஞ்சாமலே மடம் நடக்கிறபடி சர்வ ஜாக்கிரதையா இருந்துட்டு வரேன். இப்போ பணம், தேவைக்கு ஏத்த அளவுக்கு இருக்கு. அதை இன்னும் கூட்ட வேண்டாமேன்னு பார்க்கறேன். எத்தனை நிதி வந்தாலும், அதை உபயோகப்படுத்தறதுக்கு நல்ல காரியங்கள் நிறையவே இருக்கு. ஆனா, அதிலே மடம் நேரடியா ஈடுபட்டுச் செய்தால், சுய பாத்தியதை மாதிரியான அம்சம் வந்துடும். அதனால், தானே எல்லாத்தையும் பண்ணணும்னு அட்சதை போட்டுக்காமல், மத்த சத்சங்கங்கள், ஸ்தாபனங்களைக் கொண்டு அந்த நல்ல காரியங்களைச் செய்யலாம். மடம், அவங்களுக்கு அட்வைஸ் பண்றதோட நிறுத்திக்கலாம்!” – பெரியவா சொல்வதை, கவனமாகக் கேட்டுக்கொண்டனர் அவர்கள்.

பெரியவர் தொடர்ந்தார்… ”ஆகையினால லட்சக் கணக்கில் பணம் எதுவும் வசூல் பண்ணவேண்டாம். நாளைக்கே ஏதேனும் பெரிய திட்டம் மடத்திலே செய்றதுக்குத் தீர்மானமாகும்போது, வெக்கப்படாம நானே உங்ககிட்டே கேக்கறேன். நம்ம முயற்சியை நிறுத்திட்டாரேனு நீங்க வருத்தப்பட வேண்டியதே இல்லே. உங்க மனசும் ஆர்வமும் எனக்குத் தெரியாம போயிடலே. அதனால நிறைய ஆசீர்வாதம் பண்றேன்!” என காஞ்சி மகான் விளக்கிய விதத்தில், ஆந்திர பக்தர்கள் நெகிழ்ந்து போனார்கள். ஆனாலும், ஏற்கெனவே வசூலித்துச் சேர்ந்த தொகையை என்ன செய்வது எனக் குழம்பித் தவித்தனர். தங்கள் குழப்பத்தையும் பெரியவரிடமே தெரிவித்தனர்.

”இதுவரை எவ்ளோ வசூல் பண்ணியிருக்கேள்?” – பெரியவா கேட்டார்.

”அறுபதினாயிரம் ரூபாய்!” என்றனர் பக்தர்கள்.

”அறுபதுக்கு அறுபது பொருத்தம்தானே!” என்று சொல்லிவிட்டு, குழந்தை மாதிரி சிரித்தார் பெரியவா. ”பீடாதிபத்ய அறுபதாம் ஆண்டு நிறைவுக்கு அறுபதாயிரமோ? சரிதான்… பொருத்தமான கட்டத்தில்தான் நிறுத்தச்சொல்லி அம்பாள் உங்களை இங்கே அனுப்பியிருக்கா. வசூல் பண்ணினதை அப்படியே வெச்சிருங்கோ. நானே தேவைங்கிறபோது உங்ககிட்டேர்ந்து வாங்கிக்கறேன்!” என்று அன்பும் கருணையும் பொங்கச் சொன்னார். இதையடுத்து அந்தக் குழுவினர், மணி மகுடம் செய்து வைத்திருப்பதைச் சொல்லி, அதை மட்டுமேனும் தட்டாமல் ஏற்கவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

அவர்களின் மனசை அறியாதவரா, பெரியவாள்?! தனக்கே உரிய வாஞ்சையுடன் தலையசைத்துச் சம்மதித்தார். ஆனாலும் துறவியாக இருப்பவர், நேராகப் பொன் மகுடம் தரிக்கலாகாது எனக் கருதி, பிரதோஷத்தின்போது பூஜை வேளையில் தான் அணிகிற ருத்திராட்ச கிரீடத்தின் மேலேயே அந்தப் புதிய கிரீடத்தை வைக்கச் சொன்னார்.

இது நடந்து பதினைந்து நாள் கழித்து, வசூல் செய்து வைத்திருந்த 60,000 ரூபாயை குருக்ஷேத்திரத்தில் கீதோபதேசக் காட்சியும், கீதாபாஷ்யம் செய்த ஆச்சார்யருக்கு சலவைக் கல்லில் பிம்பம் செய்யும் நற்பணிக்குமாக அனுப்பிவைக்கும்படி, பெரியவா உத்தரவிட்டார். ஆந்திர பக்தர்களும் அப்படியே செய்தனர். அப்படியெனில், ருத்திராட்ச கிரீடத்தின்மீது வைக்கப்பட்ட பொற்கிரீடத்தை ஏற்றுக்கொண்டுவிட்டாரா மகாபெரியவா?! ம்ஹூம்… அதுதான் இல்லை. பிறகு..?

ஸ்ரீபிரகதீஸ்வரருக்குத் தஞ்சைத் தரணியில் கோயில் எழுப்பியவனும், தேவாரத் திருமறைகளைக் கண்டறியப் பாடுபட்டு, அவற்றைத் தினமும் ஓதுவதற்கு வழிசெய்தவனுமான மாமன்னன் ராஜராஜசோழனிடம் மகாபெரியவாளுக்கு அளவற்ற அபிமானம் உண்டு. மன்னனின் ஆயிரமாவது ஆண்டு விழா 1984-ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போது மகாபெரியவா, ”ராஜா என்றாலே முடி சூடணும். அதுவும் இந்த ராஜராஜன், சிவபாதசேகரன். சிவனாரின் பாதத்தை முடியில் கொண்டவன். அவனுக்கு நாம் முடிசூட்டியே ஆகணும்!” எனக் கூறி, தஞ்சை ராஜராஜ சோழனுக்கு அணிவிக்க, தன் தங்கக் கிரீடத்தில் சற்றே மாறுதல் செய்து அனுப்பி வைத்தார். இதை, அப்போதைய பாரதப் பிரதமர் இந்திராகாந்தி, ராஜ ராஜசோழனுக்குச் சூட்டி மகிழ்ந்தார். சந்திரசேகரரே, தனது பக்தனான சிவபாதசேகரனுக்கு மகுடம் சூட்டிப் பெருமைப்படுத்திய அதிசயம் இது.

ஆக, தாம் பெற்றுக் கொள்ளவிருந்த 60,000 ரூபாயும், பெற்றுக்கொண்ட பொற்கிரீடமும், தன் சந்நியாச தர்மத்தைச் சிறிதும் மீறாத வகையில், ஒரு பொதுவான நற்பணிக்குப் போய்ச் சேருகிறபடி செய்தது மகா பெரியவாளின் செயல்.

------------------------------------------------------
பெரியவாள் வாழும் காலத்திலே நாமும் வாழ்கிறோம் என்பதுதான் எத்தனை பெரிய பாக்யம் !

அவரைப் பார்ப்பதற்கும் அவரது அருள் வாக்கைக் கேட்பதற்கும் என்ன தவம் செய்தோமோ?.

காமகோடி தரிசனம்

காணக்காணப் புண்ணியம்.


Raghunathan Iyer

unread,
Apr 14, 2016, 8:22:04 AM4/14/16
to arunalaya

துர்முகி எனறால்குதிரைமுகம்
இந்த தழிழ் புத்தாண்டில்
அகந்தை அழிந்து அறிவுதிறக்க ஹயக்ரீவர் பெருமானை வணஙகுவோமாக
அகத்திய முனிவருக்கு "லலிதா சகஸ்ர நாமத்தின் பெருமையை எடுத்துரைத்தவர் ஹயக்ரீவர் .
இதைக் கேட்டு மகிழ்ந்த அகத்தியர்,எந்த தலத்திற்கு சென்று இதை அம்மன் முன் சொல்வது ?என்று ஹயக்ரீவரிடம் வேண்டினார் .அகத்தியரை திருமியச்சூர் கோவிலுக்கு சென்று சொல்ல சொன்னார் ஹயக்ரீவர் .அதன்படியே ,அகத்தியரும்,அவர் மனைவியும் திருமியச்சூர் சென்று லலிதாம்பிகையை தரிசித்து லலிதா சகஸ்ர நாமத்தை சொன்னார்கள் .

அம்பாள் மகிழ்ந்து நவரத்தினங்களாக காட்சி தந்தாள் .அப்போது பாடியதுதான்
"நவரத்தின மாலை"

ஹயக்ரீவர் ஸ்தோத்திரம்

"ஞானானந்த மயம் தேவம் நிர்மல
ஸ்படிகாக்ருதிம் ஆதாரம்
ஸர்வ வித்யானாம்
ஹயக்ரீவம் உபாஸ்மஹே "

பிள்ளைகள் அனைவரும் மன அமைதியுடன் கல்வி கற்று ,சிறப்புடன் தேர்ச்சி அடைய இந்த பாடலை பாடி பயன் பெறுங்கள்.

ஹயக்ரீவருக்கு வேக வைத்த கடலை பருப்பில் வெல்லம் ,தேங்காய் கலந்து நெய்வேத்தியம் செய்து வழிபட்டால், குறைவற்ற கல்வியை அள்ளி தருவார் .

என்ன நண்பர்களே !உங்க குழந்தைகள் நன்றாகப் படிக்க ஹயக்ரீவரை வணங்குவீர்கள்

Raghunathan Iyer

unread,
Apr 15, 2016, 1:30:29 AM4/15/16
to arunalaya

ராம கதை சுருக்கம்

இதை கண்ணுற்று 
படித்து பார்த்த அனைவருக்கும் ராமனின் அருள் கடாஷம்
கிடைக்கட்டும்

மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும். அறமே வாழ்வின் 
ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார்.ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர், பங்குனி மாதம் வளர்பிறை சுக்லபட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். அன்றைய தினமே ராமநவமியாக கொண்டாடப்படுகிறது. ராவணனை அழிப்பதற்காக பூமியில் தோன்றிய ஸ்ரீராமனின் அவதார வரலாறு மகிமை வாய்ந்தது.அயோத்தியை ஆண்டுவந்த தசரத சக்கரவர்த்திக்கு கோசலை, சுமித்ரா, கைகேயி ஆகிய மூன்று மனைவிகள் உண்டு. ஆனால் நாட்டை ஆள ஆண் வாரிசு இல்லாதது அவருக்கு பெரும் மனக்குறை. வசிஷ்ட முனிவரின் ஆலோசனைப்படி, மகரிஷி ருஷ்யஷ்ருங்கர் உதவியுடன் புத்திரகாமேஸ்டி யாகம் செய்தார்.

அந்த யாகத்தில் கிடைத்த பாயாசத்தை தசரதர் தனது மனைவிகளுக்கு கொடுத்தார். சில நாட்களுக்கு பிறகு கோசலை, கைகேயி, சுமித்ரா ஆகிய மூவரும் கர்ப்பமுற்றனர். பங்குனி மாதம் நவமியன்று கோசலை ராம பிரானை பெற்றார். கைகேயிக்கு பரதனும், சுமித்ராவுக்கு லட்சுமணன், சத்ருகனன் ஆகியோர் பிறந்தனர்.தசரதனுக்கு புத்திரனாக அவதரித்த ராமன், வசிஷ்டரிடம் வித்தைகளை கற்றார். விஸ்வாமித்திரருடன் சென்று தாடகையை வதம் செய்தார். மிதி லையை அடைந்து வில்லை ஒடித்து ஜானகியை மணம் புரிந்தார். கூனியின் சூழ்ச்சியால் கைகேயி தசரதனிடம் பெற்ற வரத்தால் கானகம் சென்றார். சீதையை கவர்ந்து சென்ற ராவணனை தேடிச் செல்லும் வழியில், வாலியை வதம் செய்தார்.

பின்னர் சுக்ரீவன், அனுமன் ஆகியோர் உதவியுடன் கடலுக்கு நடுவில் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்று போரில் ராவணனை அழித்து விபிஷணனை இலங்கையின் அரசனாக நியமித்தார். சீதையை தீக்குளிக்க செய்து புஷ்ப விமானத்தில் அழைத்து கொண்டு, அயோத்தி சென்று முடிசூடி நல்ல முறையில் அரசாண்டார்.ராமன் பிறந்த காலத்தில் ஐந்து கிரகங்களும் மிகவும் உச்சநிலையில் இருந்தது. அதனால் ராமருடைய ஜாதகத்தை எழுதி, பூஜை அறையில் வைத்து பூஜை செய்பவர்களுக்கு ஜாதக ரீதியாக ஏற்படக்கூடிய நவக்கிரக தோஷம் நீங்கும். வியாதிகள் குணமாகும். ஐஸ்வர்யங்கள் பெருகும் என்பது நம்பிக்கை.

காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ஸ்ரீராமநவமி விரதம் இருந்து ஸ்ரீராமபிராணை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.

ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழியும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும். ‘நாளும், கோளும் நலிந்தோருக்கு இல்லை‘ என்பது பழமொழி. இருப்பினும் பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் சென்று மக்கள் எங்களை புறக்கணிக்கின்றனரே என்று கூறி கண்ணீர் விட்டு முறையிட்டனர்.

இதனால் உங்கள் இரு திதிகளையும் கொண்டாட ஏற்பாடு செய்கிறேன் என்று பகவான் வாக்களித்தாராம். இதனால் ஸ்ரீராமர் அவதரித்த நவமி ஸ்ரீராமநவமி என்றும், ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீராமருக்கு எல்லோரும் சேவை செய்ய வேண்டும் என்பதற்கு அடையாளமாகதான் விசிறி வழங்கப்படுகிறது. மேலும் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடை, பருப்பு போன்றவற்றையும் கொடுப்பதுண்டு. ஸ்ரீராமர் மகரிஷி விஸ்வமித்திரரோடு சென்ற போதும், 14 ஆண்டுகள் வனவாசம் செய்த காலத்திலும் வெயிலில் அலைந்து கஷ்டப்பட்டார். அவர் பிறந்ததோ சித்திரை மாதம் கோடைக்காலத்தில். இதனால் ஸ்ரீராமரை பார்க்க வந்தவர்களுக்கு எல்லாம் அவரது தந்தை தசரதர் முதலில் நீர்மோரும், பானகமும் கொடுத்து உபசரித்தார்.

கூடவே விசிறியும் கொடுத்தார். இதனால் ராமநவமியன்று இவற்றை பிறருக்கு கொடுக்கும் வழக்கம் உருவானது. மேலும் பக்தர்கள் அன்று தங்கள் சக்திக்கு ஏற்றப்படி பொன், வெள்ளி, செம்பு முதலியவற்றால் வடிக்கப்பட்ட ஸ்ரீராமர் சிலையை ஒருவருக்கு தானமாக வழங்கலாம். ஏகபத்தினி விரதன் ஸ்ரீராமனை வணங்கி வழிபட்டால் நோய், நொடி விலகும். பாவங்கள் தீரும். வாழ்வில் அனைத்துச் செல்வங்களும் நம்மை வந்து சேரும்.

Raghunathan Iyer

unread,
Apr 20, 2016, 2:39:03 AM4/20/16
to arunalaya

 

ஆசமனம் என்பது நமது ப்ராஹ்மணர்களின் நித்ய வாழ்க்கையில் ஒரு மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. செய்வதும் ரொம்பவும் ஈஸி. ஆனால் இதைகூட நம்மில் பெரும்பாலும் பலர் ஏனோதானோவென்று ’இயந்திரத்தனமாகத்தான்’ செய்து வருகிறோம். இதற்கு உண்டான முக்கியத்துவத்தை அனேகமாகத் தருவதில்லை என்பதுதான் வாஸ்தவமான இன்றைய நிலமை.

சிலர் ஆசமனம் ஒரு தடவை செய்தாலே போதும் அவர்கள் செய்த இடத்தில் ஒரு ‘குளமே’ உருவாகி இருக்கும். . அவர்கள் உட்கொண்ட ஜலத்தை விட கீழே கொட்டியிருக்கும் ஜலத்தின் அளவு அதிகமாகவே இருக்கும். உடனே ஒரு துணியை போட்டு அந்த இடத்தை துடைக்க வேண்டியிருக்கும். சிலர் ஆசமனம் என்ற உடனேயே கீழே ஒரு தாம்பாளத்தையும் ரெடியாக வைத்துக்கொள்ளுவார்கள். ஆசமனம் செய்யும்போது முதலில் நாம் கவணிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் ஜலத்தை உட்கொள்ளும்போது ஜலம் கீழே சிந்தாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முயற்சி செய்தால் இது சாத்யமே.

சரி, அந்த ஜலத்தின் அளவு ஏதாவது சொல்லப்பட்டுள்ளதா என்றால் அதற்கும் விதி உள்ளது. ஜலம் நிறைய நம் இஷ்டத்துக்கு எடுத்துக் கொள்ளக்கூடாது. கொஞ்சம்தான் எடுத்து பருக வேண்டும். அதாவது முழு உளுந்து முழுகும் அளவுதான் ஜலத்தை மூன்று தடவை உட்கொள்ள வேண்டும். அதுவும் எச்சப்பண்ணாமல்.

ஆசமனம் என்பது மிகவும் உசத்தியான ஒரு விஷயம். நம் மனதையும் உடல் உறுப்புக்களையும் சுத்தப் படுத்துவதற்காகவும், பகவான் நாமாக்களை முடிந்தளவு அதிகமாக நாம் உச்சரிப்பதற்கு ஒரு சந்தர்பமும் இதன் மூலம் நமக்கு தினமும் பலதடவை கிடைக்கின்றது. இதை நாம் யதோக்தமாக செய்யப் பழகவேண்டும்.

தெற்கு அல்லது மேற்கு திசையை நோக்கி ஆசமனம் செய்யக்கூடாது என்பதையும் நாம் கவணத்தில் கொள்ளவேண்டும்.

மற்றும் ஆசமனத்தை நின்றுகொண்டு செய்யக் கூடாது.

ஆசமனத்தில் மூன்று ‘ஸ்டெப்ஸ்’ கள் உள்ளன என கூறலாம். அவைகளை பார்ப்போம்.

1. ஆசமனம் செய்யும்போது வலது கையில் சுண்டு விரலையும் கட்டை விரலையும் நீக்கி மீதி விரல்களுக்குக் கீழே பகுதியில் ஜலத்தை உத்ரணியால் எடுத்து பருக வேண்டும். இம்மாதிரி மூன்று தடவை செய்ய வேண்டும். ஒவ்வொரு தடவையும் பருகும்போது சொல்லியுள்ள ஒவ்வொரு விஷ்ணுவின் நாமத்தை மனதிற்குள் சொல்ல வேண்டும்.

2. தொடர்ந்து மூன்று தடவை பருகியபிறகு. உதடுகளை மூடிக்கொண்டு வலதுக் கட்டை விரலின் அடிப் பகுதியால் இரண்டு தடவை உதடுகளை (பக்கவாட்டால்) துடைத்துக்கொள்ள வேண்டும். பிறகு எல்லா விரல்களையும் சேர்த்து ஒரு தடவை உதடுகளை வலது பக்கத்திலிருது இடது பக்கமாக துடைத்துக்கொள்ள வேண்டும்.

3. பிறகு விதிப்படி பண்ணிரண்டு இந்திரியங்களையும் அந்தந்த விரல்களால் விஷ்ணுவின் 12 நாமாக்களை மனதுற்குள் கூறியப்படித் தொட வேண்டும்.

இதுதான் ஆசமனத்திற்கு உண்டான சிஷ்டாச்சாரம்.

இந்த ஆசமனத்தை பற்றியும் ஒரு சிறிய நூல் ஒன்று தனியாக எழுதி அன்பளிப்பாக விநியோகிக்கலாமா என யோசனை வந்துள்ளது.


Raghunathan Iyer

unread,
Apr 20, 2016, 5:46:38 AM4/20/16
to arunalaya


ராம் ராம், இனிய காலை வணக்கம், இந்த நாள் இனிமையாக அமைய நம் ஸ்ரீகாஞ்சி பெரியவா அவர்கள் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.'

தெய்வத்தின் குரல் 
(ஐந்தாம் பாகம்) 82

பௌத்த சமண மதங்களும் ஹிந்து மதமும்

நான் இப்போது பௌத்த, ஜைன மதங்களை ‘க்ரிடிஸைஸ்’ பண்ணிச் சொல்கிறேனென்று உங்களுக்கு வருத்தமாயிருக்கலாம். ஏனென்றால் நம்முடைய ஹிஸ்டரி புஸ்தகங்களில் புத்தரையும், ஜினரையும் (மஹா வீரரையும்) பற்றி உயர்வாகப் படித்திருப்பீர்கள். அந்த அளவுக்கு உயர்வாக நம்முடைய மத புருஷர்கள் யாரைப் பற்றியாவது பாட புஸ்தகத்தில் சொல்லியிருக்குமா என்பது ஸந்தேஹம். காந்தீயம், முன்னேற்றக் கொள்கைகள் என்றெல்லாம் தற்காலத்தில் சொல்லுவதில் அஹிம்ஸை, ஸகல ஜனங்களுக்கும் வர்ணாச்ரம பேதமில்லாமல் ஸமமாக எல்லா உரிமைகளும் கொடுப்பது ஆகியவற்றுக்கு பௌத்த, ஜைன மதங்கள் இடம் கொடுத்திருப்பதாலேயே அவற்றுக்கு உயர்வு கொடுக்கப்படுகிறது. யஜ்ஞத்தில் ஹிம்ஸை இருக்கிறது, ஜனங்களைப் பிறப்பினால் பிரித்து வெவ்வேறு அதிகாரங்களைக் கொடுத்திருக்கிறது என்பதால் ஹிந்து மதத்திடம் ஒரு குறைவான அபிப்ராயம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் ஜன ஸமுதாயம் ஒழுங்காக வளர்வதற்குப் பல விதமான கார்யங்கள் நடக்கவேண்டியிருக்கிறது என்பதையும், ஜனங்கள் தேஹ ரீதியாகவும் மனோ ரீதியாகவும் பலதரப் பட்டிருக்கிறார்கள் என்பதையும் கவனித்துத் தான் அத்தனை பேருக்கும் ஒரே போன்ற தர்மங்களை வைக்கக்கூடாது, ஒரே போன்ற அநுஷ்டானங்களையும் பணிகளையும் கொடுக்கக் கூடாது என்று தீர்மானம் பண்ணி அவரவரும் இருக்கிற இடத்திலிருந்து மேலே போவதற்கு வசதியாக வர்ண விபாகம் (‘ஜாதிப் பிரிவினை’ என்று நடைமுறையில் சொல்லுவது) என்று நம் மதத்தில் பண்ணியிருப்பது. இது ஸமூஹ ஒழுங்கு. ஜன ஸமுதாயத்துக்குத் தேவையான அத்தனை பணிகளும் போட்டா போட்டியில்லாமல் தலைமுறை க்ரமமாகத் தட்டின்றி நடந்துவருவதற்கு ஏற்றபடி இந்த ஒழுங்கில் கார்யங்களைப் பிரித்துக் கொடுத்தார்கள். இதே மாதிரி ஒரு தனி மநுஷ்யனுக்கும் வாழ்க்கையில் ஒழுங்கான முன்னேற்றம் ஏற்படவேண்டுமென்றே அவன் ஒவ்வொரு ஸ்டேஜாகப் பக்வமாகிக்கொண்டு போவதற்கு வசதியாக ப்ரஹ்மசர்யம், கார்ஹஸ்தயம் (இல்லறம்), வானப்ரஸ்தம், ஸந்நியாஸம் என்று ஆச்ரம விபாகம் செய்யப்பட்டது.
அஹிம்ஸை போன்ற உயர்ந்த தர்மங்களை ஸகலருக்கும் உடனடி அநுஷ்டானமாக வைத்தால் எவருமே அநுஷ்டிக்க முடியாமல் தான் போகும்; அதனால் ஜனங்களுக்கு ஐடியலாக ஒரு பிரிவை வைத்து அவர்களுக்கு மட்டும் அதைத் தீர்மானமாக வைத்தால் அவர்கள் அதை ரொம்ப உஷாராக, ஒரு பெருமிதத்துடன் காப்பாற்றி வருவார்கள்; ‘இந்த ஐடியல்படி நாமும் செய்து பார்க்கணும்’ என்று மற்றவர்களும் ஓரளவுக்காகவது நிச்சயம் பின்பற்றுவார்கள் — என்று தான் தர்மங்களைப் பாகுபடுத்தியது. ப்ரத்யக்ஷத்தில் பார்த்தால் இன்றைக்கு பௌத்த தேசங்களில்தான் பிக்ஷுக்கள் கூட மாம்ஸ போஜனம் செய்கிறார்கள். அங்கேயெல்லாமும் ஸைன்யம், யுத்தம் என்று ராஜாங்க ரீதியிலும், கொலை, கொள்ளை என்று தனி மநுஷ்ய ரீதியிலும் நடந்துகொண்டு தானிருக்கின்றன. நம் தேசத்திலேயே அசோகனைத் தவிர பௌத்த, ஜைன ராஜாக்களாக இருந்தவர்கள் யாரும் சண்டையே போடுவதில்லை என்று இருந்துவிடவில்லை. ஆனாலும் தங்களுடைய மதக் கொள்கைக்கு இது ஸரியாக வரவில்லையே என்று அவர்கள் guilty-யாக feel பண்ணிக் கொண்டு, இரண்டுங்கெட்டானாக இருந்த ஸமயங்களில்தான் தேசத்திலே வலுவாய்ந்த பேரரசுகள் இல்லாமல்போய் அந்நிய தேசத்தார் படையெடுத்து வந்திருக்கிறார்கள்.
அப்புறம் அவர்களும் (பௌத்த, ஜைன அரசர்களும்) யுத்தம் செய்வது என்றுதான் ஆரம்பிக்கவேண்டி வந்தது. அதாவது, தங்களுடைய மதத்திற்கு விரோதமாகப் போக வேண்டி வந்தது. பாகுபாடு செய்யாமல் ‘எல்லா தர்மமும் எல்லாருக்கும்’ என்று வைத்த மதங்களில், இப்படிப் பாகுபடுத்திய நம் மதத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவாவது தர்மங்களை உறுதியாக நடத்திக்காட்டி, அதனாலேயே மற்றவர்களையும் ஓரளவு அவற்றில் போகச் செய்வது போலக்கூட இல்லாமல், அத்தனை பேரும் தர்மங்களை விடுவதில்தான் ஸமமாக இருக்கிறார்கள் என்று ஆகியிருப்பதோடு, அவர்கள் யாவரும் தங்களுடைய மத விதிகளைப் புறக்கணித்தார்கள் என்ற பெரிய தோஷத்திற்கு ஆளாகும்படியும் ஏற்பட்டிருக்கிறது.
வைதிக மதத்தில் அதிகாரி பேதம் என்பதாகப் பாகுபடுத்தி தர்மங்களையும் கார்யங்களையும் கொடுத்திருப்பதுதான் ஏதோ ஒரு ஜாதியாருக்கு மாத்திரமின்றி ஸகலருக்குமே நிரம்ப ஆத்ம ச்ரேயஸை அளித்திருக்கிறது என்பதற்கு ஒன்று சொன்னால் போதும்: இந்த ஒரு மதத்தில் தான் ஸகல ஜாதிகளிலும், ஒவ்வொரு ஜாதியிலுமே, மஹான்களும், ஞானிகளும் ஏகமாகத் தோன்றி, லோகம் பூராவிலுமே நம் நாட்டைத்தான் Land of saints (மஹான்களின் நாடு) என்று கொண்டாடும்படியாகப் பெருமை ஏற்பட்டிருக்கிறது. ஸமூஹ வாழ்வு நின்று நிலைத்த மஹோன்னதமான கலாசாரமாக நம் நாடு ஒன்றிலேயே எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக உறுதிப்பட்டிருப்பதும், நம் மதம் பாகுபடுத்திக் கொடுத்துள்ளபடி ஸமூஹத்தில் பல வர்க்கத்தினருக்கும் தங்கள் தங்கள் கார்யங்களை செவ்வனே செய்துகொண்டு, மொத்த ஸமுதாயமும் கட்டுக்கோப்புடன் ஒழுங்காக முன்னேறும்படி செய்ததால்தான். பாபிலோனியன் ஸிவிலிஸேஷன் (நாகரிகம்), ஈஜிப்ட் ஸிவிலிஸேஷன், க்ரீக் ஸிவிலிஸேஷன் என்று ஆதி காலத்தில் கொடிகட்டிப் பறந்த பெரிய ஸமுதாய மரபுகளெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோயிருக்க, வெளியேயிருந்தும் உள்ளேயிருந்தும் எத்தனையோ தாக்குதல்களைப் பெற்றும் இந்த ஹிண்டு ஸிவிலிஸேஷன் மாத்திரம் ‘சாவேனா பார்!’ என்று ஜீவனோடேயே இருந்துகொண்டிருக்கிறதென்றால், இப்படி இதற்கு ஸ்பெஷலாகச் சக்தி ஊட்டுவதற்கு மற்ற ஸிவிலிஸேஷன்களில் இல்லாததாக என்ன இருக்கிறது? — இந்த விஷயத்தைக் கொஞ்சம் ஆற அமர நடுநிலையிலிருந்து கொண்டு ஆலோசித்துப் பார்த்தால், நம் ஸிவிலிஸேஷனில் மட்டுமே உள்ள வர்ணாச்ரம விபாகம்தான் காரணம் என்று தெரியும்.*
அதாவது இந்த ஏற்பாடுதான் ஒரு பக்கம், தனி மநுஷ்யர்களின் ஆத்மாபிவிருத்திக்கு போஷணை கொடுத்து இத்தனை மஹான்கள் தோன்றும்படிப் பண்ணியிருக்கிறது. ஐடியல் நிலைக்கு என்றே ஒரு பிரிவை மட்டும் வைத்தால் அதில் நிறைய மஹான்கள் தோன்றுவதும், அவர்களைப் பார்த்து மற்றப் பிரிவினரிலும் பலர் ப்ரயத்னம் பண்ணி அந்த மாதிரி ஆவதும் இயற்கைதானே? ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்றாலும் அவர்கள் கண்ட ஞானமும் பக்தியும் சாந்தமும் அன்பும் அந்த பிரிவுக்கு மாத்திரம் ஸொந்தமாக நின்றுவிடாமல் ஸமூஹம் பூராவும் ‘ரேடியேட்’ ஆவதால் எல்லாப் பிரிவுகளிலும் மஹான்கள் தோன்ற வழி கோலுகிறது. இன்னொரு பக்கம், வர்ணாச்ரம விபாகம்தான் இந்த தேசத்தின் பெரிய ஜன ஸமுதாயம் முழுவதையுமே ஜீவசக்தி குன்றாத பெரிய நாகரிக மரபாக வலுப்படுத்திக் காத்துக் கொடுத்திருக்கிறது.

* வர்ணா்ச்ரம தர்மங்களைப் பற்றிய விரிவான விளக்கம் “தெய்வத்தின் குரல்” முதற் பகுதியில் “நம் மதத்தின் தனி அம்சங்கள்” என்ற உரையின் இறுதிப் பாகத்திலிருந்து “என் காரியம்” என்ற உரை முடிய சுமார் நூறு பக்கங்களிலும், இரண்டாம் பகுதியில் “ஜாதி முறை” என்ற உரையிலும் காண்க.
அனைவருக்கும் ஒரே வித தர்மங்களை விதிப்பதையும் பாகுபடுத்தி வெவ்வேறாக விதிப்பதையும் குறித்து மூன்றாம் பகுதியில் “ஆசார விஷயங்கள்” என்ற உரையில் “ஆசாரமும் வர்ணாஸ்ரமங்களும்” என்பதிலிருந்து “விதிவிலக்கின்மையின் விளைவுகள்” முடியவுள்ள உட்பிரிவுகளைப் பார்க்க.

கிருஷ் ராம்'s photo.
  தெய்வத்தின் குரல் 

(ஐந்தாம் பாகம்) 83

யாகத்தில் ஹிம்ஸை

ஸாத்விகமான வாழ்முறைக்கென்று குறிப்பாக ஏற்பட்ட பிரிவினரிடமே ஹிம்ஸையம்சம் இருப்பதாகத் தோன்றும் யாக கர்மாவை வேதங்கள் கொடுத்திருக்கின்றன என்றால் அதில் ந்யாயமில்லாமலிருக்குமா? ‘யஜ்ஞ பலியால் சில தேவ சக்திகள் ப்ரீதி அடைந்து லோகத்துக்கு நல்லது செய்கின்றன. பலியாகும் ப்ராணியும் ஸத்கதி அடைகிறது’ என்று சாஸ்த்ரம் சொல்கிறது. (இதை) ‘ப்ரூவ்’ பண்ணிக்காட்ட வேண்டுமென்று சொன்னால், சொல்பவர்களிடம், “நீங்கள்தான் இப்படி இல்லை என்று ‘ப்ரூவ்’ பண்ணிக் காட்டுங்களேன்” என்று திருப்பிச் சொன்னால் என்ன பண்ணுவார்கள்? லோக க்ஷேமத்தையே உத்தேசித்து ஏற்பட்ட ஒரு சாஸ்த்ரத்தில், தத்வார்த்தங்களிலும் ஆத்மாநுபவத்திலும் உச்ச நிலைகளைச் சொல்வதாக உலகமே கொண்டாடும் ஒரு சாஸ்த்ரத்தில் வீணுக்கு இப்படி ஒரு ப்ராணியை அக்னியில் ஆஹுதி செய்யும்படிச் சொல்லியிருக்குமா?
யாகம் என்ற பெயரில் கூட்டங்கூட்டமாக ப்ராணிவதை பண்ணி ப்ராம்மணர்கள் தின்றிருந்தால் தப்புத்தான். ஆனாலும் வெறும் ஆடம்பரத்துக்காக பிம்பிஸாரன் மாதிரி எவனாவது ராஜா ப்ராம்மணர்களைக் கொண்டு இப்படிச் செய்திருக்கலாமே தவிர, வாஸ்தவத்தில் எந்த யஜ்ஞத்திலும் இத்தனை ப்ராணி பலிக்கு அவச்யமே கிடையாது. ஏராளமாக ப்ராணிவதை செய்து யாகம் செய்வது தப்பு என்பதற்கு பாகவத்தில் ஒரு உபாக்யானமே இருக்கிறது:
ப்ராசீன பர்ஹிஸ் என்று ஒரு ராஜா. அவன் ஏகப்பட்ட பசு (ஆடு) வதை பண்ணி யாகங்கள் செய்தான்.
நாரதர் அவனைத் தடுத்து நல்லறிவு புகட்டுவதற்காக வந்தார். வந்தவர் என்ன பண்ணினாரென்றால் ஸ்வர்க்க லோகத்தில் நடக்கும் ஒரு காட்சியை அவனுக்குக் காட்டினார். அதிலே ஒரு பெரிய ஆட்டுக்கூட்டம். ஒவ்வொரு ஆட்டுக்கும் கெட்டியாக இரும்பு கொம்பு நல்ல கூராக இருக்கிறது. அந்த ஆடுகள் ஸாதுவான ஆடுகளாக இல்லாமல் புலி, சிங்கம் மாதிரி உக்ரமாக, தங்களுடைய இரும்புக் கொம்புகளைத் தீட்டிக்கொண்டு எதையோ கிழித்துப் போடுவதற்கு ஆயத்தமாக இருக்கின்றன. “ஐயையோ! இதுகள் ஏன் இப்படி விபரீதமாகப் பண்ணுகின்றன? எதை குத்திக் கிழிப்பதற்காக இவ்வளவு முஸ்தீபாக இருக்கின்றன?” என்று ப்ராசீனபர்ஹிஸ் கேட்கிறான். அதற்கு நாரதர், “உனக்காகத் தாண்டா இதுகள் காத்துக்கொண்டிருக்கின்றன! கணக்கு வழக்கில்லாமல் யஜ்ஞபலி கொடுத்த ஆடுகள் தான் இதுகள். இவற்றுக்கு ஸ்வர்கப் பிராப்தி கிடைத்திருப்பது வாஸ்தவந்தான். ஆனாலும் நீ மிதமிஞ்சி ஜீவஹத்தி பண்ணினது பாபந்தான் என்பதால், நீ எப்போது அங்கே வருவாய், உன் குடலைக் கிழித்துப் போடலாம் என்றே காத்துக்கொண்டிருக்கின்றன” என்றார்– என்று (பாகவதக்) கதை.
ப்ராம்மணர்கள் தின்னுவதென்பது யஜ்ஞ ப்ரஸாதம் என்ற மரியாதைக்காக ஒரு குன்றிமணி அளவுதான். வயிறு புடைக்க அல்ல.*
அஹிம்ஸை, ஸமத்வக் கொள்கை என்பவற்றுக்காகத் தற்காலத்தில் பௌத்த-ஜைன மதங்களை ஹிந்து மதத்தை விட உயர்வாக நினைத்துக் கொண்டாடுவதைப் பற்றிச் சொல்ல வந்தேன்.

* இவ்விஷயமாக “தெய்வத்தின் குரல்” இரண்டாம் பகுதியில் “வேதம்” என்ற உரையில் “ஜீவஹிம்சை செய்யலாமா?” என்ற உட்பிரிவு பார்க்க.


Raghunathan Iyer

unread,
Apr 21, 2016, 5:08:17 AM4/21/16
to arunalaya


சித்ரகுப்தன் கதை சூட்சுமமும் பௌர்ணமி தினமகிமையும்

சித்ரகுப்தன் என்பவர் நம் வாழ்வில் நாம் செய்த பாவ, புண்ணிய பலன்களைக் கணக்கிட்டு நமது வாழ்நாள் மற்றும் வாழ்க்கை முடிந்தபின் சொர்கவாழ்வா? நரக வாழ்வா? என தீர்மானித்து எமனுக்கு சொல்பவர். சுருங்கச்சொன்னால் எமதர்மராஜனின் கணக்குப்பிள்ளை. இவரைப்பற்றிய கதைகளை கீழ்வருமாறு வகைப்படுத்தலாம். 
பார்வதி தேவி வரைந்த சித்திரம் அவராலேயே உயிர் கொடுக்கப்பட்டது, சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதினால் சித்திரகுப்தா என பெயர் பெற்றார்.
சித்திரை மாதத்தில் பிறந்த புத்திரன் ‘சித்திரபுத்திரன்’ சித்ரகுப்தன் எனப்பட்டார். 
இவற்றை விட இவரது பெயர் கூறும் இன்னொரு விடயம் என்ன வெனில் "சித்ரம்" என்றால் வரையப்பட்டது என்று பொருள், குப்தம் என்றால் மறைக்கப்பட்டது என்று பொருள். 
இனி இவர் பற்றிய மேற்கூறிய புராணக்கதை பற்றிய சூட்சுமத்திற்கு வருவோம்; 
முதலாவது பார்வதி தேவி வரைந்த சித்திரத்திற்கு உயிர் கொடுக்கப்பட்டார் என்பது, பார்வதி தேவி உலகினை படைத்த சக்தி, அந்த சக்தியின் ஒருபகுதி தான் மனச்சக்தி, மனச்சக்தி தெய்வமனம் (divine mind), ஆகாய மனம் (Cosmic mind), மனித மனம் (Human mind) என இயங்குகிறது. தெய்வமனத்தின் ஒரு கூறுதான் ஆகாய மனம், ஆகாய மனத்தின் ஒரு கூறுதான் மனித மனம். ஆக மனித மனம் எண்ணும் எண்ணங்கள் ஆகாயமனத்தில் பதியப்பட்டு சேமிக்கப்படுகிறது. இவ்வாறு சேமிக்கப்பட்ட எண்ணங்கள் பிரபஞ்சமனதிற்கு செல்லும் போது அதன் செயலாக்கம் நடைபெறுகிறது. இவ்வாறு மூன்று மனங்களும் இணைக்கப்படும் போது ஒருவனுடைய பாவ புண்ணிய கணக்குகள் செயல் பெறத்தொடங்குகிறது. ஆக இந்த மூன்று மனங்களை இணைக்கும் சக்தி அல்லது சேமிப்பகம் தான் "சித்ரகுப்தன்" - அதாவது மனித எண்ணங்கள் சேமிக்கபடும் சித்தம் எனப்படும் ஆழ்மனம் (Subconsciousness mind) சித்ரகுப்தரின் ஒரு பகுதி, இது போல் ஆகாய மனத்தில் சேமிக்கப்படும் "ஆகாய சித்தம்" சித்ரகுப்தனின் ஒரு பகுதி. பார்வதி தேவி வரைந்த சித்திரத்திலிருந்து தோன்றினார் என்பது பிரபஞ்ச மனசக்தியிலிருந்து பகுக்கப்பட்ட ஒரு பகுதி என்பதேயாகும். நவீன உளவியல் சற்று தெரிந்தவர்களுக்கு புரியும் மனம் என்பதின் ஒரு கூறுதான் "சித்தம்" எனும் ஆழ்மனம் என்று. அதாவது பகுக்கமுடியாதபடி மனமும் சித்தமும் இரண்டறக்கலந்தவை. ஆக சித்ரகுப்தன் என்பது நம் எல்லாருடைய சித்தம் எனப்படும் ஆழ்மனமேயாகும். 
இரண்டாவது சித்திரை மாதம் தொடர்பான கதை, நாம் எல்லோரும் அறிவோம் சித்திரை மாத பௌர்ணமி சித்ரகுப்தரிற்கு விஷேடம் என்று. சோதிடம் அறிந்தவர்களுக்கு தெரியும் சந்திரன் மனக்காரகன், அதாவது பூமியில் வாழும் மனிதரனைவரது மனமும் சந்திரனால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது. பௌர்ணமி அன்று மனச்சக்தி அதிகரிக்கும். அதனால் தான் அதனை தாங்கும் வலிமையற்ற நோயாளிகளுக்கு நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. சித்தபிரமை பிடித்தவர்களுக்கு அதிகமாகிறது. அதே நேரம் மனதினை அடக்கி ஆளதெரிந்தவர்களுக்கு சாதனை புரிய ஏற்ற நாள். இதனால் தான் பௌர்ணமி அம்பிகைக்கு விஷேடமாக கருதப்படுகிறது. ஏனேனில் மனச்சக்தி தான் அனைத்திற்கும் அடிப்படை. ஆக பௌர்ணமி அன்று நாம் மனதில் எண்ணும் எண்ணம் அதிக வலிமையுடையதாக எமது சித்தத்திற்கூடாக ஆகாய மனத்தில் பதியப்பட்டு, பின்பு பிரபஞ்ச மனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு காரியம் நிறைவேறுகிறது. இதனால் தான் பௌர்ணமி அன்று விரத நாளாகவும், புனித நாளாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. புத்தர் ஞானம் பெற்ற வழிமுறையும் இதுதான். இது சித்ராபௌர்ணமி அன்று மட்டும் என்பதில்லை, எந்த பௌர்ணமி தினத்திலும் இதே விளைவுதான். குறைந்தது வருடம் ஒருமுறையாவது இந்த இரகசியத்தினை பயன்படுத்தி மக்கள் பயன்பெறட்டும் என்று சித்தர்கள், ரிஷிகள் இவ்வாறு கதைகளாக கூறியுள்ளார்


Raghunathan Iyer

unread,
Apr 21, 2016, 5:20:11 AM4/21/16
to arunalaya

வம்ச விருத்தி பூஜை:

பஞ்சாங்க சுத்தி உள்ள ஒரு சுபநாளில், புன்னை மரக் கிளை ஒன்றை எடுத்துவந்து, வீட்டு பூஜையறையில் வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர்ச்சரம் சார்த்துதல் வேண்டும்.
அருகில்... பஞ்சவர்ண நூல் சுற்றிய பித்தளைச் சொம்பில் கலசமும், ஆலிலை கிருஷ்ணர் படமும் வைத்து, நெய்தீபம் ஏற்ற வேண்டும். பின்னர், ஓம் சந்தான கணபதியே நம: என்று மூன்று முறை கூறி நீலோத்பலம் மற்றும் சாமந்திப் பூக்களால் அர்ச்சித்து கணபதியை வழிபட்டுவிட்டு, கிருஷ்ணனை பூஜிக்க வேண்டும்.
'ஓம் ஸ்ரீகிருஷ்ணாய கோவிந்தாய கோபி நேசாய வாசுதேவாய, வம்ச விருத்திகராய ஸ்ரீம் பாலகிருஷ்ணாய நம:’ என்று 12 முறை கூறி, கலசத்துக்கு மலர்கள் சமர்ப்பித்து வணங்க வேண்டும். அடுத்து அவல் பாயசம், பால், கற்கண்டு நிவேதனம் செய்து, ஆரத்தி காட்டி வழிபட வேண்டும்.
மேலும், பூஜையறையில் வைத்திருக்கும் ஆலிலை கிருஷ்ணர் படத்துக்கு... இலையின் காம்புப் பகுதி துவங்கி, தினம் ஒன்றாக 45 தினங்களுக்கு பொட்டு வைத்துவர வேண்டும். தினமும் வம்ச கவசம் படிக்க வேண்டும். இந்த பூஜையின் பலனால், உங்கள் வீட்டில் விரைவில் தொட்டில் சத்தம் கேட்கும்.
தினமும் உணவில் வாழைப்பூ சேர்த்துக்கொள்ள வேண்டும். அத்துடன், கிழக்கில் தலைவைத்துப் படுத்து உறங்குவதையும் வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.
வம்ச பூஜை செய்து வரும் தம்பதிகள், தங்களுடய பெற்றோர்கள் பால் உள்ள நட்சத்திரங்களைச் சேர்ந்துள்ளனரா? ஒரே தசையில் ஆண், பெண் இருவருக்கும் திருமணம் செய்ததால் திசா சந்தி ஏற்பட்டுள்ளதா? ஜாதகங்களைப் பொருத்தியபோது நாடிப் பொருத்தம் பார்க்கப்பட்டதா? புத்திர சந்தான பாவகம் சரியாகப் பார்க்கப்பட்டு ஜாதகங்கள் இணைக்கப்பட்டதா என்று உறுதி செய்து கொண்டு, அதற்கான தெய்வ பரிகாரமும் செய்துவிட வேண்டும்.
அதி சீக்ர சத்சந்தான பிராப்திரஸ்து!
- வழிபடுவோம்...
வம்ச கவசம்!
ஓம் நமோ தேவ்யை மகாதேவ்யை
துர்க்காயை ஸததம் நம:
புத்ரபாக்யம் தேஹி தேஹி
கர்ப்ப விருத்திம் குருஷ்வந:
ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம் ஸ்ரீம்
ஜம் ஜம் ஜம் மகாகாளீ மகாலக்ஷ்மீ
மகா சரஸ்வதீ ரூபிண்யை நவகோடி மூர்த்யை நம:
ஹ்ரீம் ஹ்ரீம் ஹ்ரீம் துர்கார்த்தி நாசினீ
ஸந்தான சௌக்யம் தேஹி தேஹி
வந்த்யத்வம் ம்ருதவத் ஸத்வம் சார ஹர ஹர
கர்ப்ப ரட்சாம் குரு குரு
குலஜாம் பாஹ்யஜாம் க்ருதாம் க்ருதாம்ஸ
நாஸய நாஸய ஸர்வகாத்ராணி ரக்ஷ: ரக்ஷ:
கர்ப்பம் போஷய போஷய சர்வோ பத்ரவம்
சோஷய சோஷய ஸ்வாஹா
அனேன கலைசேனாங்கம் ஸப்த வாராபி மந்த்ரிதம்
ருதுஸ்நாதா ஜலம் பீத்வா பவேத கர்ப்பவதீத்ருவம்
கர்ப்ப பாதபயே பீத்வா த்ருட கர்ப்பா ப்ரஜாயதே
அனேன கவசேனாத மார்ஜீதாய நிசாகமே
ஸர்வ பாதா விநிர்முக்தா கர்ப்பிணி ஸ்யாநீந ஸம்சய:
அனேன கவசேன ஹக்ரந்திதம் ரக்த தோரகம்:

Amurthi Navaneetham's photo.
Amurthi Navaneetham's photo.
Amurthi Navaneetham's photo.
Amurthi Navaneetham's photo.

Raghunathan Iyer

unread,
Apr 21, 2016, 5:21:49 AM4/21/16
to arunalaya


சித்ரா பவுர்ணமியும் சித்திரகுப்தனும்

ஒருவரின் பாப புண்யங்களுக்கு தக்கபடி தண்டனைகள் வழங்கி தனி ஆளாக தர்ம பரிபாலனம் செய்து வந்தார் யமதர்மராஜன். அப்பொழுது கலி பிறந்தது. அதர்மங்கள் அதிகரித்தது. அதர்மங்களின் எண்ணிக்கையும் வேகமும் அதிகரித்ததால் யமதர்மராஜனால் பாப புண்ணிய கணக்குகளை தனியாக சரியாக நிர்வகிக்க முடியவில்லை.

அவர் சிவபெருமானை அணுகி தனக்கு வேலை அதிகரித்துவிட்டதால் தனியாக செய்யமுடியவில்லை ஆகவே ஒரு உதவியாளர் தேவை என்று விண்ணப்பித்துக்கொண்டார்.

அந்த விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட சிவபெருமான் பார்வதி இருக்கும் இடம் நோக்கி சென்றார் . சக்தி இல்லையேல் ஏது சிவம்?. அப்பொழுது பார்வதி தேவியார் தங்க தாம்பாளம் ஒன்றில் ஒரு உருவத்தை வரைந்துகொண்டிருந்தாள். அந்த உருவம் தனது கையில் ஒரு நோட்டு புத்தகத்தையும் எழுத்தாணியையும் வைத்திருந்தது. இதைப்பார்த்த சிவபெருமான் லோக மாதாவிடம் அந்த சித்திரத்திற்கு உயிர் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார். பார்வதியும் தான் தங்க தாம்பாளத்தில் எழுதி வைத்திருந்த சித்திரத்தை பார்த்து வாயினால் ஊத அந்த உருவம் உயிர்பெற்றது. 
சிவபெருமான் அந்த உயிர்பெற்ற உருவத்திற்கு ரகசியத்தை காக்கும் சக்தியை கொடுத்து எமதர்மராஜனுக்கு உதவியாக இருக்க பணித்தார். அவரும் மனிதர்களின் பாப புண்ணிய கணக்குகளை சரியாக எழுதி அதன் ரகசியத்தையும் காத்து வந்தார்.

சித்திரத்திலிருந்து வந்ததாலும் ரகசியத்தை காப்பவராக இருந்ததாலும் அவர் சித்திரகுப்தன் ( குப்தன் என்றால் ரகசியத்தை காப்பவன் என்று பொருள்) என்ற பெயர் பெற்றார்.

இவ்வாறு உருவான சித்திரகுப்தன் பாப புண்ணிய கணக்கு வழக்குகளை பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது பூலோகத்தில் பலர் அறியாமல் செய்த பாபங்களின் கணக்கு மிக அதிகமாக இருந்தது.

அறியாமல் செய்த பாபங்களுக்கு நாம் தண்டனை கொடுக்கிறோமே என்று விசனப்பட்டு அறியாமல் செய்த பாபங்களை பொறுத்து மக்களை காத்து ரஷிக்கவேண்டும் என்று பரமசிவனிடம் வேண்டுகிறார். அதற்கு சிவபெருமான் சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தனை வேண்டுபவர்களுக்கு அறியாமல் செய்த பாவங்களிலிருந்து விலக்கு அளிக்கும் சக்தியை சித்திரகுப்தனுக்கு அளித்தார். சித்திரகுப்தனும் ஜனங்களை அறியாமல் செய்த பாபங்களிலிருந்து காத்தருளிவருகிறார்.
.
சித்ரா பவுர்ணமியன்று சித்திரகுப்தனை வணங்கினால் அறியாமல் செய்த பாவங்கள் மலையளவாக இருந்தாலும் அது கடுகளவாக மாறும். அதுபோலவே அன்று செய்யும் தானம் கடுகளவாக இருந்தாலும் அது மலையளவாக மாறுவதும் உறுதி.

சித்ரா பவுர்ணமியன்று தானங்கள் பல செய்யவேண்டும். முக்கியமாக நோட்டுப்புத்தகம், பேனா, பென்சில் முதலிய எழுத பயன்படும் பொருட்களை தானமாக வழங்கினால் வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை.

சித்திரகுப்தனுக்கென்று தனி கோவில் ஒன்று காஞ்சிபுரத்தில் இருக்கிறது. முடிந்தவர் நேரில் அந்த கோவிலுக்கு சென்றும் முடியாதவர் மனதளவிலும் நாளை வரும் சித்ரா பவுர்ணமி (21.4.2016 வியாழக்கிழமை) அன்று சித்திரகுப்தனை வணங்கி நாம் அறியாமல் செய்த பாபங்களிலிருந்து விமோசனம் பெறுவோம்.

கிருஷ்ணதாஸ் வெங்கடேஸ்வரன்'s photo.

Raghunathan Iyer

unread,
Apr 22, 2016, 1:01:46 AM4/22/16
to arunalaya


ஏன் மாமா ஆண்கள் மீசை வைத்துக் கொள்ளுவதை பற்றி ஒன்றும் சொல்லுவதில்லையே நீங்கள்....’ என்று ஆதங்கத்துடன் கேட்கிறார்.
ஏற்கனவே சொல்லியுள்ளேன். ‘வேதமும் பண்பாடும்’ என் புஸ்தகத்திலும் இதன் விவரங்களை பார்க்கலாம்.

மீசையை வைத்துக்கொள்ளுவது அப்படி ஒன்றும் பெரிய தோஷம் இல்லை. ஆனால் ஒரு விஷயம்.

நமது தேசாச்சாரத்தின்ப்படி, ’த்விஜன்ம’ பிராப்தம் கிடைத்துள்ளவர்களும், ஆச்சார அனுஷ்டானத்தில் விஸ்வாசம் உள்ளவர்களும், ஓய்வு நேரங்களில் வேதம் கற்றுக் கொள்ளுபவர்களும் , பஞ்சாயதன மாதிரி பூஜை புனஸ்காரங்களில் ஈடுப்பட்டுள்ளவர்களும் அவைகளின் பூர்ண பலன் கிடைக்க வேண்டுமென்றால் மீசையை அகற்றுவது ஸ்லாக்யம்.

யோசித்து பாருங்கள் நமது பெரியோர்கள், நமது பெரியோர்கள், உங்கள் முன்னோர்கள், மீசையை ைத்துக்கொண்டிருந்தார்களா? இது நடுவில் அதாவது ஒரு 50, 60, வருஷங்களுக்கு முன்பு சிலரிடம் தொற்றிக்கொண்ட பழக்கம்தான்.

மேலும் ஸ்லோகங்கள், பஞ்சாயதன பூஜை, வ்ரதம், குரு கடாக்ஷம் முதலியவைகளின் பூர்ண பலன் கிடைப்பதற்கும் மீசை தடைதான். சந்தேகமே வேண்டாம்.

உத்யோகத்தில் இருக்கும்போதாவது ஒரு பேச்சுக்காவது ஒத்துக் கொள்ளலாம். அப்போதும்கூட தேவையில்லைதான். யாரும் நம்மை கட்டாயப்படுத்த முடியாது. ரிடைர் ஆன பிறகாவது அந்த மீசையை எடுத்தால் என்ன? யோசிக்க வேண்டாமா ?

மீசையை எடுத்துதான் பாருங்களேன். ஆரம்பத்தில் சிறிது சங்கடம் இருக்கத்தான் இருக்கும். ஆனால் பிறகு உங்களுக்கே அதில் ஏற்படும் ஆனந்தத்தை கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீர்கள், சந்தோஷப்படுவீர்கள்.

Sarma Sastrigal's photo.

Raghunathan Iyer

unread,
Apr 22, 2016, 1:10:59 AM4/22/16
to arunalaya


 
Sathanoor Srinivasan Ramamoorthy's photo.



Jaya Jaya Shankara Hara Hara Shankara – Another fantastic incident where Sri Periyava teaches us a lesson not to judge people by their looks along with his everlasting Karunyam! Thanks to Sri Dinesh SS, our Sathsangam volunteer seva member for the translation. Ram Ram
உருவத்தை வெச்சு எடை போடாதே!
1979-ல் வடதேஸத்துக்கு பாதயாத்ரையாக பெரியவா கிளம்பியபோது, கர்நாடகாவில் ஒரு க்ராமத்தில் முகாமிட்டிருந்தார். பெரியவாளுக்கு இயற்கை சூழலில் வஸிக்க மிகவும் பிடிக்கும் என்பதால், அங்கிருந்த ஒரு குளக்கரையில்  
 அமர்ந்து தர்ஶனம் தந்து கொண்டிருந்தார். மெட்ராஸிலிருந்து ஒரு பெரிய டாக்டர், தன் குடும்பத்துடன் பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்திருந்தார்.
அப்போது பெரியவாளை தர்ஶனம் செய்ய ரெண்டு ப்ராஹ்மண பையன்கள் வந்தனர். குடுமியையும், பூணூலையும் வைத்துத்தான் அவர்கள் ப்ராஹ்மணர்கள் என்று சொல்ல முடியும்!
காரணம், அவர்கள் அணிந்திருந்த வேஷ்டியும், மேல் வஸ்த்ரமும் மஹா அழுக்கு! முகமும் உடம்பும் பார்த்தாலே தெரிந்தது, குளிக்காமலேயே வந்திருக்கிறார்கள் என்று! படிப்பறிவே இல்லாத களைத்த முகத்தோடும் இருந்த அவர்களை பார்த்த அந்த டாக்டர் ‘மேற்கூறிய’ எண்ணத்தால், முகம் சுளித்தார்.
” என்ன பஸங்க? பெரியவாளை பாக்க வரச்சே இப்டியா வரது? அட்லீஸ்ட் குளிச்சுட்டு ஶுத்தமா வரணும்கற ‘பேஸிக் நாலேட்ஜ்’ கூட இல்லியே?” …..
இருவரும் நேரே பெரியவாளிடம் போய், பெரியவாளை நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்ததும், அவர்கள் குளித்தார்களா? அழுக்காக இருக்கிறார்களா? என்பதெல்லாம் பெரியவா கண்களுக்குத் தெரியவில்லை. அவர்களிடம் உள்ள விலைமதிப்பே இல்லாத ஒன்று, அவர்களுடைய ஹ்ருதயத்திலும், நாவிலும் இருந்த ஒன்றே ஒன்றுதான் பெரியவாளுக்குத் தெரிந்தது!
ஆம்! வேதம்தான் அது!
“அத்யயனம் ஆய்டுத்தா?”
தலையை ஆட்டினார்கள்.
“ரிக்வேதம் சொல்லுங்கோ”
பெரியவா சொன்னதுதான் தாமதம், அப்படியே உயரமான மலையிலிருந்து “ஹோ!” வென்று கொட்டும் [பெரியவா சொல்வது போல் “ழும்” என்ற ஶப்தத்தோடு கொட்டும்] அருவி, ப்ரவாஹமாக பெருக்கெடுத்து வந்தது போல் ரிக் வேதத்தை கணீரென்று சொல்லத் தொடங்கினார்கள்.
ஆஹா! ஆனந்தமான காக்ஷியாக பெரியவா கண்களை மூடியபடி ஆனந்தமாக கேட்டுக் கொண்டிருந்தார். கைலாஶத்திலும், ஶ்ரீவைகுண்டத்திலும் பகவான் எப்படி ஆனந்தமாக வேத பாராயணத்தை கேட்டுக் கொண்டிருப்பான் என்பதை, இந்த காக்ஷி மூலம், நம் மனஸில் கல்பனை பண்ணி மெய் சிலிர்க்கலாம்.
பெரியவா கொஞ்ச நேரம் கழித்து, அவர்களை ஆஸிர்வதிப்பதாக, கையமர்த்திய பின்புதான் ஓதுவதை நிறுத்தினார்கள்.
“எங்கேர்ந்துடா…. கொழந்தேளா… வரேள்?”
பெரியவாளுடைய குரலில், வேதத்தின் மேல் உள்ள காதலும், வேத வித்யார்த்திகள் மேல் இருந்த ப்ரேமையும், இந்தக் காலத்திலும் தான் சொல்லியபடி வேதத்திலும், வேஷத்திலும் இருக்கும் குழந்தைகளிடம் பொங்கிய பரிவும் எல்லாமாக சேர்ந்து, அப்படியொரு குழைவு…. குரலில் பொங்கியோடியது!
ஏதோ ஒரு க்ராமத்தின் பேரை சொன்னார்கள்.
“இங்கேர்ந்து எத்தன தூரம்?….”
“அநேகமா…..இருவது மைல் தூரம் இருக்கும் பெரியவா…..”
“எப்டிப்பா வந்தேள் கொழந்தேளா ?”
” பெரியவாளை பாக்க நடந்துதான் வந்தோம்”
“திரும்பி எப்டிடா போவேள் ?”
“நடந்துதான் போவோம் பெரியவா….”
என்ன ஒரு பக்தி! ப்ராஹ்மணன், தன் கையில் காஸில்லாமல்தான் இருக்க வேண்டும் என்று பெரியவா சொல்வதை கனகச்சிதமாக பின்பற்றி, கையில் காஸில்லாததால், அதை ஒரு சாக்காகவோ, குறைவாகவோ எண்ணாமல், மனஸ் முழுக்க பெரியவாளை எப்படியாவது தர்ஶனம் பண்ணிவிட வேண்டும் என்ற ஒரே ஆசையால்….. பாவம்! இருபது மைல் நடந்தே வந்திருக்கிறார்கள்!!
பின்னே….அப்போதுதான் மலர்ந்த ரோஜா புஷ்பம் போலவா இருப்பார்கள்? உடம்பில் அழுக்கும், துணியில் புழுதியும், கலங்கிய முகமும் ஏன் இருக்காது?
“போங்கோப்பா….கொழந்தேளா…..போயி மொதல்ல ஸ்நானம் பண்ணிட்டு, ஸாப்டுங்கோ…..”
அவர்களிடம் அன்பொழுகக் கூறிவிட்டு, பாரிஷதரிடம் “இவாளை அழைச்சிண்டு போயி, ஸ்நானம் பண்ணச் சொல்லு, வேஷ்டி, அங்கவஸ்த்ரம் புதுஸு ஆளுக்கு ரெண்டு குடு… நன்னா வயராற ஸாப்பாடு போடு…”
“ஸெரி…..பெரியவா…..”
அவர்கள் நகர்ந்ததும், மெதுவாக டாக்டரின் பக்கம் திரும்பினார் பெரியவா.
“எப்பவுமே….. மனுஷாளோட…. வெளில தெரியற உருவத்த வெச்சு, அவாளோட நெஜமான யோக்யதையை புரிஞ்சுக்காம மனஸை கொழப்பிக்கப்டாது”
டாக்டர் மனஸில் நினைத்த தவறுக்கு பதில் கொடுக்கும் சாக்கில், நம் எல்லாருக்கும் ஏற்ற உபதேஸமாக கூறினார்.
Ramalingam Narayanan's photo.

Raghunathan Iyer

unread,
Apr 22, 2016, 1:26:46 AM4/22/16
to arunalaya



 
Poova Raghavan Iyengar's photo.


பேசும் தெய்வம் - HAPPY MONDAY MORNING.

நம்மில் சில பேருக்கு மரணம், இறப்பு என்ற வார்த்தைகள் கட்டோடு பிடிக்காது. சீ என்ன அப சகுனம். போய் வாயை அலம்பு. என்று சொல்வார்கள். ஐயா, மரணம் எல்லோருக்கும் ஒருநாள் கிட்டுவது தான். அதை எதற்காக நினைக்க வேண்டும், அது பற்றி பேசவேண்டும் என்போரும் உண்டு.

இல்லை, இறந்தவுடன் மனிதன் யார்? அவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன? -- ஒரு கணம் சிந்தித்து பார்க்க வேண்டாமா? இதை நமக்காக பெரியவாளே சிந்தித்து தெளிவாக சொல்லி இருப்பதை தான் இன்று தெரிந்து கொள்ளப் போகிறோம்.

'இறந்த உடலுக்கு ஏன் காரியம் செய்ய வேண்டும்? இப்படி ஒரு கேள்வி தோன்றும், உடம்பை விட்டுப் போன ஜீவனின் த்ருப்திக்காக ச்ராத்தம் முதலானவை செய்வது பரோபகாரம் என்றால் ஸரிதான். ஆனால் ஜீவன் (உயிர்) போன இந்த வெறும் உடம்புக்கு எதற்கு ஸம்ஸ்காரம்? 
.
”உயிரோடு இருக்கிறவர்களுக்கே உபகாரம் பண்ணமுடியாமலிருக்கிறது. செத்துப்போனபின் பிணத்துக்கு என்ன ஸேவை வேண்டிக் கிடக்கிறது?
ஏதோ ஸம்பிரதாயம் என்று வந்தவிட்டதால், அதை விடுவதற்கு பயமாயிருப்பதால் அவாளவாள் வீட்டில் மரணம் நடந்தால் ப்ரேதஸம்ஸ்காரம் பண்ணத்தான் வேண்டி யிருக்கிறது. இது போதாதென்று, யாரோ அநாதை போய்விட்டானென்றால், அவன் உடம்பை முனிஸிபாலிடிக் காரர்கள் அடக்கம் செய்யப் போகும்போது, நாமெதற்கு வலுவிலே தடுத்து, ‘ஸம்ஸ்காரம்’பண்ணுகிறேன் என்று இழுத்துவிட்டுக் கொள்ள வேண்டும்?

பிரேதமென்றாலே ஒரு பயம், கூச்சம் இருக்கிறது. இதில் ஸம்பந்தமில்லாததை எதற்காக நாமாக எடுத்துப்போட்டுக் கொள்ளவேண்டும்?

உயிர்போன வெறும் கட்டையான உடம்புக்கு என்ன பரோபகாரம் வேண்டியிருக்கிறது?”
சாஸ்திரங்களைக் கூர்ந்து பார்த்தால் ஒரு ஜீவன் சரீரத்தை விட்டுப் போய்விட்டாலும், அதன் அங்கங்களில் 
கண்ணில் ஸூர்யன்,

வாயில் அக்னி,

கையில் இந்திரன்

என்றெல்லா மிருக்கும் தேவாம்சங்கள் உடனே அதனதன் மூலஸ்தானத்துக்குப் போய்விடவில்லை என்றுதெரிகிறது. பிரேத ஸம்ஸ்காரத்தின் மூலம்தான் அவற்றை அதனதன் ஸ்தானத்துக்கு அனுப்பி வைக்கிறோம். அபர மந்த்ரங்களைப் பார்த்தால் இது புரியும். தெரியும்.

ஜீவாத்மா என்கிற புருஷன் பதினாறு கலை உள்ளவன் என்பார்கள். இதில் பதினைந்து கலைகள் மட்டுமே உயிராக இருப்பது என்றும், உடம்பும் ஒரு கலை என்றும், எனவே உயிர் போன பின்னும் ஒரு கலை உள்ள அந்த உடலை ஈஸ்வரார்ப்பண மாக்கவே பிரேத ஸம்ஸ்காரம் தேவைப்படுகிறது என்றும் ஒரு அபிப்ராயம் உண்டு.
சாஸ்த்ரங்களில் தஹனம் பண்ணுவதை ‘அந்த்யேஷ்டி’- அந்திய இஷ்டி – அதாவது ‘இறுதியான வேள்வி’ என்றே ரொம்பவும் உயர்த்திச் சொல்லியிருக்கிறது. கர்ப்பம் தரிப்பிலிருந்து ஒரு ஜீவனை ஒவ்வொரு பருவத்திலும் எப்படி சுத்தி பண்ண வேண்டும் என்பதற்காக சாஸ்த்ரங்களில் நாற்பது ஸம்ஸ்காரங்களைச் சொல்லியிருக்கிறது.

‘ஸம்ஸ்காரம்’என்றால் ‘நன்றாக ஆக்குவது’ என்று அர்த்தம். (‘நன்றாக ஆக்கப்பட்ட’பாஷைதான் ‘ஸம்ஸ்க்ருதம்’.) உபநயனம், விவாஹம் ஆகியஎல்லாமே ஜீவனை அந்தந்த நிலையில் பக்குவப் படுத்துவதற்காக ஏற்பட்ட ஸம்ஸ்காரங்கள்தான். வாழ்நாள் கர்மா முழுவதையும் வேள்வியாக ஈஸ்வரனிடம் ஆஹூதி செய்துகொண்டே இருக்கிற ரீதியில் இந்த நாற்பது ஸம்ஸ்காரங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன.
இப்படி வாழ்க்கையையே யாகமாகச் செய்த ஒருத்தனுக்கு, வாழ்க்கை முடிந்தபிறகு கடைசியில் மற்றவர்கள் செய்கிற யாகம்தான் – அதாவது அந்திய இஷ்டியே ப்ரேத ஸம்ஸ்காரமாகும். எந்த உடம்பை வைத்துக் கொண்டு பாக்கி யஜ்ஞங்களை ஒருத்தன் பண்ணினானோ, அந்த உடம்பையே சிதாக்னி (சிதை) யில் ஹோமம் பண்ணி விடுவதுதான் இது. ப்ரேத ஸம்ஸ்கார மந்த்ரங்களில் அப்படித்தான் சொல்லியிருக்கிறது. ஹோமத்துக்குரிய மற்ற வஸ்துக்களை நெய்யினால் சுத்தி செய்து அக்னியில் 
போடுகிற மாதிரி தான் ப்ரேதத்தையும் சுத்தம் பண்ணி, தஹனம் செய்யச் சொல்லியிருக்கிறது. உடம்பு ஈஸ்வரனுக்கு அர்ப்பணம் செய்யப்படுகிறது. மண்ணில் அடக்கம் பண்ணுவதானாலும் ஈஸ்வரார்ப்பணமே ஆகிறது.

இதைப்பற்றி இன்னும் கொஞ்சம் சொல்கிறேன்.
‘தேஹம் ரொம்ப இழிவானது. இதிலிருந்து விடுபடவேண்டும்’ என்று பெரியவர்கள் பாடி வைத்திருப்பதெல்லாம் உண்மைதான். ஆனால் இன்னொரு நிலையில் பார்த்தால் இந்த தேஹம் என்பது ஒரு மஹா அத்புதமான மெஷின். ஒரே மெஷினில் ஒவ்வொரு பாகம் ஒவ்வொரு தினுஸான கார்யத்தைச் செய்கிறது. கண் என்று ஒன்று வெளிச்சத்தையும், வர்ணங்களையும் பார்க்கிறது. காது என்று ஒன்று சப்தங்களைக் கேட்கிறது. இருக்கிறதெல்லாம் ஒரே ஆத்மா- இத்தனை அவயவங்களுக்குள்ளேயும் ஒரே ஜீவன்தான் இருக்கிறது என்றாலும்,கண்ணும், காதும் கிட்டக்கிட்ட இருந்துங் கூட கண்ணால் கேட்க முடிவதில்லை; காதால் பார்க்க முடிவதில்லை! பக்கத்திலேயே வாய் என்றுஒன்று அதற்குத்தான் ருசி தெரிகிறது. பேசுகிற சக்தியும் அதற்கே இருக்கிறது. தொண்டையில் பல தினுஸாகக் காற்றைப் புரட்டி அழகாக கானம்செய்ய முடிகிறது.

பல வஸ்துக்களைப் பிடிப்பதற்கு ஏற்றமாதிரி கையும் விரல்களும் அமைந்திருக்கின்றன. இந்த அமைப்பு கொஞ்சம் வேறுவிதமாகஇருந்தாலும் இப்போது நாம் பண்ணுகிற கார்யங்களைப் பண்ண முடியாது. அடி எடுத்து வைத்து மேலே போவதற்கு வசதியாகக் காலின் அமைப்பு இருக்கிறது. நடக்கிறபோது கூடியமட்டும் ஜீவராசிகள் நசுங்காதபடி, பூரான் மாதிரியானவற்றின் மேலேயே நாம் பாதத்தை வைத்தால்கூட அவை நெளிந்துகொண்டு ஓட வசதியாக உள்ளங்கால்களில் குழித்தாற்போன்ற ஏற்பாடு, சப்பணம் கூட்டி உட்கார வசதியாக முழங்காலில் எலும்பு நரம்புகளின் அமைப்பு – என்று இப்படி ஒவ்வொன்றைப் பார்த்தாலும் பராசக்தி எத்தனை ஸூ¨க்ஷ்மமான கல்பனையோடுஒரு சரீரத்தைப் பண்ணியிருக்கிறாள் என்று ஆச்சரியமாக இருக்கிறது!

ஆஹாரத்தை ஜெரிக்க ஒரு அங்கம், ஜெரித்ததை ரத்தமாக்க ஒரு அங்கம். மூச்சுவிட ஒன்று, ரத்தத்தை ‘பம்ப்’ பண்ண ஒன்று- எல்லாவற்றுக்கும்மேலே ஸகல கார்யங்களையும் டைரக்ட் பண்ணி கன்ட்ரோல் பண்ணும் மூளை – என்றெல்லாம் விசித்ர விசித்ரமாக பகவான் சரீரத்தைக்கல்பித்திருக்கிறான். சதை, ரத்தம், மஸில்ஸ், நரம்பு, எலும்பு என்ற ஒவ்வொன்றுக்கும் ஒரு ‘பர்பஸ்’ இருக்கிறது. எலும்புக்குள்ளேகூட மஜ்ஜை என்ற ஜீவஸத்து ஓடுவது ஒரு அதிசயம். மனித சரீரத்தில் இருக்கும் கோடிக்கணக்கான ஸெல்களில் ஒவ்வொன்றும் ஒரு அத்புத லோகம்.

இப்படித் தனித்தனியாக ஒவ்வொரு பாகமும் ஒரு அத்புதமான மெஷினாக இருப்பதோடு மட்டுமல்லாமல், எல்லாமாக ஒன்றுக்கொன்றுஇசைவாக ஸஹாயம் செய்து போஷித்துக் கொள்வதும் மஹா அதிசயமாக இருக்கிறது. ஆனபடியால், எவனோ லக்ஷத்தில் ஒருவன் தேஹம் பொய், மனஸ் பொய் என்று புரிந்துகொள்ளும் ஞானியாக ஆனாலும், பாக்கி எல்லாரும் பகவான் தந்திருக்கிற இந்த அத்புதமான மெஷினைவைத்துக் கொண்டு தர்மமாக வாழத்தான் முயற்சி பண்ண வேண்டியவர்களாக இருக்கிறோம். இந்த தர்ம வாழ்க்கையிலிருந்துதான் அப்புறம் ஞானத்துக்குப் போக வேண்டியவர்களாயிருக்கிறோம்.

யோசித்துப்பார்த்தால், சரீரத்தை ஏன் மட்டம் என்று திட்டவேண்டும்? அது என்ன பண்ணுகிறது? அது மனஸின் கருவி மட்டும்தானே? கையையும் காலையும் கண்ணையும் வாயையும் மனஸ் நல்லபடி ஏவினால் சரீரம் நல்லதே செய்யும். கை பரோபகாரம் பண்ணும்; அல்லது அர்ச்சனை பண்ணும். கால் கோயிலுக்குப் போகும். கண் ஸ்வாமி தர்சனம் பண்ணும், வாய் ஸ்தோத்ரம் சொல்லும், அல்லது எல்லோருக்கும் ப்ரிய வசனம் சொல்லும். ஆனதால் ‘நிஷித்தம்’ என்று சரீரத்தைக் திட்டுவதுகூட தப்புத்தான். ”தர்மத்தைச் செய்ய சரீரம்தானே ஸாதனமாயிருக்கிறது?”- சரீரம் ஆத்யம் கலு தர்ம ஸாதனம் – என்று வசனமே இருக்கிறது. ” தேஹோ தேவாலய : ப்ரோக்தா ” – உள்ளே இருக்கிற பரமாத்மாவுக்கு இந்த உடம்பே ஆலயம் என்கிறோம். ‘ காயமே கோயிலாக ‘ என்று அப்பரும் சொன்னார். திருமூலரும் இப்படியே, ”முன்னே உடம்பு ரொம்ப நிஷித்தம் என்று மட்டமாக நினைத்தேன். அப்புறம் அதற்குள்தான் ஈஸ்வரன் குடிகொண்டிருக்கிறான் என்றுதெரிந்துகொண்டதும், உடம்பை ஓம்பலானேன்” என்று திருமந்திரத்தில் சொல்கிறார்.

இப்படிப்பட்ட அத்பதமான, பகவான் கொடுத்த மெஷினை விட்டு உயிர் போனதும் அதைக் கன்னாபின்னா என்று ‘டிஸ்போஸ்’ பண்ணக் கூடாதுதான். மஹா ச்மாசான வாஸியான பரமேஸ்வரனுக்குத் தான் அதை ஆஹூதி பண்ண வேண்டும். எவன் இந்த உடம்பைக் கொடுத்தானோ அவனுக்கே அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும். உலகத்தில் எந்த தேசத்திலுமுள்ள காட்டுக்குடிகள் உள்பட எல்லோரும் ஏதோ ஒரு தினுஸில் இதைத் தெரிந்து கொண்டிருப்பதால்தான் எங்கே பார்த்தாலும் ப்ரேத ஸம்ஸ்காரம் என்பது ஒரு பெரிய ஸமயச் சடங்காகஇருக்கிறது.

செத்துப்போனபின் ஒரு உடம்புக்குள் தேவதாம்சங்கள் ஒட்டிக்கொண்டிருப்பதாக நம்பாவிட்டாலுங்கூட ஒன்றை நினைத்துப் பார்க்க வேண்டும்.இத்தனை நாள் அதற்குள் இருந்த ஜீவன் ஈஸ்வர சைதன்யத்தின் ஒரு திவலையல்லவா? எப்போதோ ஸ்வாமி விக்ரஹம் வைத்த புறை என்றால்கூட, இப்போதும் அதில் கண்ட கண்டதுகளை வைக்காமல் ஒரு அகலை ஏற்றிவைக்க வேண்டும் என்று தானே தோன்றுகிறது? அப்படியிருக்க ஈஸ்வர சைதன்யத்தின் அம்சம் இருந்த body -ஐ மரியாதை தந்து மந்த்ர பூர்வமாகதானே dispose செய்ய வேண்டும்?
ஒருத்தன் தன்னுடைய சரீரத்தால் அநேக நன்மைகளைச் செய்தானென்றால், உயிர்போன பின்னும் அந்த சரீரத்துக்கு மரியாதை பண்ணத்தான்வேண்டும். நாஸ்திகர்கள் கூடத் தங்கள் தலைவர்களின் ம்ருத சரீரத்துக்கு மலர்வளையம் வைக்கிறார்களே! ஒருவன் சரீரத்தைக் கெட்டத்திற்கே பயன்படுத்தினான் என்றாலும்கூட, அவனுக்கு அந்த சரீரத்தை இயக்கியது ஈஸ்வர சக்தி என்று தெரியாவிட்டாலும் நமக்குத் தெரிவதால் அதற்குரிய ஸம்ஸ்கார மரியாதையைப் பண்ணத்தான் வேண்டும். ”அவனாக இந்த சரீரத்தைக் கொண்டு ஈஸ்வரார்ப்பணமாக எந்த நல்லதும் செய்யாமல் போய் விட்டாலும், அதற்கும் ஈடாக, ப்ராயச்சித்தமாக இப்போது நாமாவது இதையே ஈஸ்வரனுக்கு அர்ப்பணம்செய்வோம்.

Raghunathan Iyer

unread,
Apr 23, 2016, 1:44:31 AM4/23/16
to arunalaya


உறவு

வாழ்ந்தால் சிரிக்கிறாரகள். வறண்டால் ஒதுங்குகிறார்கள். செத்தப்பின் ஒப்புக்காக அழுகிறார்கள்.

இரண்டு ஆத்மாக்கள் ஐக்கியமாகி, ஓர்ஆத்மா தாக்கப்படும்போது இன்னொரு ஆத்மாவும் இயற்கையாகத் துடிக்குமானால், அந்த உறவே புனிதமான உறவு.

பிறப்பில் சொந்தமிருந்தாலும் சரி, இல்லா விட்டாலும் சரி.

எங்கே பந்தம் ஏற்றத்தாழ்வுகளில் சேர்ந்து வருகிறதோ, அங்கேதான் உறவிருக்கிறது

இப்படிபட்ட உறவு இப்போ
காண்பது அரிது குடும்பமே நாடககூடமாய்
அமைந்து விட்டது

Raghunathan Iyer

unread,
Apr 25, 2016, 1:53:12 AM4/25/16
to arunalaya


ஆதியை நோக்கி பயணம்

என்னதான் மாற்றத்தை மனிதன் விரும்பினாலும் ஒரு நிலைக்கு மேல் அதில் புதுமையை அவனால் உணரமுடிவதில்லை மீண்டும் பின்னோக்கி செல்கிறான் உணவிலும் உடைகளிலும் ஆடைகளும் கூட முன்னோர்களின் வாழ்க்கைமுறையை மீண்டும் தோண்டி எடுக்கிறான் பச்சை காய்கறிகளையும் பழங்கதைகளையும் தேடுகிறான் .இன்று செவ்வாய் கிரகத்தில் கால் பாதிக்கும்அளவிற்கு அறிவியலில் உயர்ந்து நின்றாலும் தனி மனிதனாக அவனால் சாதிக்க முடிவதில்லை பல மனிதர்கள் இணைந்த குழுக்கள் நிறைந்த இந்த சமூகம் இல்லையெனில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான தடயங்கள் கூட எஞ்சாது. ஆதியில் ஒரு மனிதன் மட்டுமே இருந்திருந்தால் இந்த உலகம் எப்படி உருவாகியிருக்கும் ஒரு ஆண் பெண் சேர்க்கையின் மகத்துவத்தை இயற்கை மனிதனுக்கு அளித்ததால்தான் இன்று உயிர்கள் இந்த பூமியில் உருவாகிகொண்டிருகின்றன .
அன்பை நோக்கி பயணம் 
எத்தனை சாதனைகள் புரிந்தாலும் அறிவியல் வளர்ந்தாலும் எல்லாரும் கடைசியில் அன்பை தேடித்தான் அலைந்துகொண்டிருகிறோம் இன்று அலைபேசி வாயிலாகவும் , மின்னஞ்சல் மூலமாகவும் முக நூல் மூலமாகவும் உலகின் ஏதோ ஒரு மூளையில் இருந்து கொண்டு ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு பேசுகிறோம் எதற்காக உலக வளர்சிககவா? நாட்டின் நன்மைககவா ? இல்லை மனதிற்கு சந்தோசத்தை தரும் , ஆறுதல் வார்த்தைகளை சொல்லும் அன்பான உள்ளம்கொண்ட நண்பர்களையும் காதலர்களையும் , அன்பானவர்களையும் தேடித்தான் அந்த பயணம் செல்கிறது என்பதை மறுக்க இயலாது. இதை முழுமையாய் அறியாததால் தான் நமக்குள் பொறாமை ,பகை , போன்ற தீய எண்ணங்களை வளர்த்துகொண்டு ஒருவரை ஒருவர் அழித்து கொண்டு இருக்கிறோம் இன்னும் நமக்குள் ஒருவரை ஒருவர் அடிமை செய்வதும் மீண்டும் விலங்கு நிலைக்கு மாறிக்கொண்டு இருக்கிறோம் எனவே மனிதனை மனிதனாக மதியுங்கள்.
.

Raghunathan Iyer

unread,
Apr 25, 2016, 5:37:28 AM4/25/16
to arunalaya

 
தமிழ் செய்திகள்'s photo.
 

கறுப்பு தங்கத்தை வெள்ளையாக்கும் மத்திய அரசு-

மத்திய அரசு 1% கலால் வரி விதித்துள்ளதால் ஏதோ
தங்க வியாபாரிகளை மத்திய அரசு அழிக்க நினைக்கிறது என்று வியாபாரிகள் போராடுகிறார்கள். ஏற்கனவே தங்க த்தின் இறக்குமதிக்கு 10% வரி மத்திய அரசுக்கும்1% வாட் வரியை மாநில அரசுக்கும் தங்கம் விற்பனையாளர்கள் செலுத்தி வருகிறார்கள்.

தற்பொழுது மத்திய அரசு இன் னொரு 1% கலால் வரி போட்டுள்ளார்கள்.எனக்கு தெரிந் து தங்கத்தின் இறக்குமதி வரி 2% ஆக இருந்து சில வரு டங் களில் 10% உயர்ந்துள்ளது.அப்போதெல்லாம் போரா ட தவர்கள் இப்பொழுது ஏன் கடுமையாக போராடுகிறா ர்கள் என்றால் அவர்களின் தொழில்ரகசியம் இனி
வெளி வந்து விடும் என்பதாலே..

எதற்காக மத்திய அரசு இந்த 1% கலால் வரியை விதித்து ள்ளது என்றால் தங்க வியாபாரத்தில் புழங்கும் கறுப்பு பணத்தை தடுப்பதுதான்.

இந்திய மக்களின் வீடுகளிலும் மற்றும் கோவில்களி லும் சுமார் 22,000 டன் தங்கம் முடங்கியுள்ளது இதனு டைய மதிப்பு சுமார் 53 லட்சம் கோடியாகும். இருந்தாலும் இன்னமும் நம் நாட்டில் தங்கத்தின் இறக்குமதி அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. ஒரு வருடத்தில் குறைந்தது 900 டன் தங்கம் இறக்குமதியாகி கொண்டே இருக்கிறது.

நம் நாட்டில் தங்கம் அதிக அளவில் இறக்குமதி செய்யப் படுவதால், அது நமது பொருளாதாரத்தை வெகுவாகப் பாதிக்கிறது. இந்தியா சுதந்திரம் அடையும்பொழுது இந்தியாவின் ஒரு ரூபாயின் மதிப்பு ஒரு அமெரிக்க டாலராகும்.

ஆனால் இப்பொழுதுஒரு அமெரிக்க டாலருக்கு இந்தியாவின் ரூபாய் 66ரூபாய் 76 பைசாவாகும். எதனால் நம்முடைய ரூபாயின் மதிப்பு குறைந்ததுஎன்றால் தங்கம் மற்றும் பெட்ரோலிய பொருள்களின் இறக்குமதியே இதற்கு கா ணமாகும்.

ஆதலால் இந்தியாவில் தங்க இறக்குமதியை குறைக்க அதன் இறக்குமதி வரி அதிகரிக்கபட்டது இருந்தாலும் மக்கள் தங்கத்தை வாங்காமல் இருக்கமுடிய வில்லை. இந்நிலையில் தான் மோடி அரசுதங்கத்தில் முதலீடு செய்வதை தவிர்க்க தங்க பத்திரங்களைவெளியிட்டு அதில் தங்கத்தை முதலீடு செய்ய வைத்து அதற்கு வட்டியும் தர முன் வந்தது.

மக்களை தங்கத்தில் முதலீடு செய்வதில் இருந்து எப்படி யாவது மாற்றி தங்க இறக்குமதியை குறைக்க வேண்டும் என்று மோடி அரசு துடிப்பாக உள்ளது.

அதனால் தான் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் தங்கம் வாங்குபவர்கள் பான் கார்டு நம்பரை குறிக்க வேண்டும் என்பதே கறுப்பு பணபரிமாற்றத்தை தடுப்பதற்க்காகவே கொண்டு வரப்பட்டது.. ஏன் அரசாங்கத்திடம் கறுப்புபணம் என்னாச்சு என்று கேள்வி எழுப்புபவர்கள் முதலில் தாங்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டுமல்லவா.. அதற்குதான்.

தற்பொழுது தங்க நகைகளின் மீது 1%கலால் வரியை மத்திய அரசு விதிதத்தற்க்கு ஒட்டுமொத்த தங்க நகை
வியாபாரிகள் பொங்கி எழுந்துள்ளார்கள் அல்லவா. இதன் முழு காரணம் கறுப்பு பண பதுக்கல் இனி நடைபெற வாய்ப்பில்லை என்பதால்தான்.

இந்தியாவிலேயே தங்க த்தில் தான் கறுப்புபணம் அதிகளவில் முடங்கியுள்ளது.
அதை வெளிக்கொண்டு வரவே தங்கத்தின் மீது கலால் வரியை விதித்துள்ளது மோடி அரசு.
இந்த கலால் வரியினால் என்ன பயன் என்கிறீர்களா..

நம் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் தங்கத்துக்கு இறக்குமதிவரி என்ற பெயரில் மத்திய அரசுக்கும் விற்பனையாகும் தங்கத்துக்கு வாட் வரி மூலமாக மாநில அரசுக்கும் வியாபாரிகள் செலுத்தி வருகிறார்களே இதற்கும் மேல்வரி எதற்கு என்ற கேள்வி நமக்கு வருவது இயல்பே..

இங்கதாங்க இருக்குது வியாபார தந்திரம்.. இந்த தங்க வியாபாரிகள் இறக்குமதி செய்கிற தங்கத்துக்கும் விற்பனை செய்கிற தங்கத்துக்கும் நிறைய வித்தியாசம்
இருக்கிறது.மத்திய மாநில அரசுகளுக்கு இடையே வரி விதிப்பில் இணைப்பு இல்லாததால் 100 கிலோ தங்கம் இறக்குமதி செய்யும் ஒரு வியாபாரி மத்திய அரசுக்கு 100 கிலோ தங்கத்துக்கு உண்டான இறக்குமதி வரியை மட்டும் கட்டிவிடுவார்.அதேபோல அவர் விற்பனை செய்கிற 120 கிலோ தங்கத்துக்கு வாட் வரி மூலம் மாநில அரசுக்கு செலுத்தி விடுவார்.

இந்த இடையில் இருக்கிற 20 கிலோ தங்கத்தை அவர்கள் கள்ள மார்க்கெட்டில் வாங்கி வைத்துக் கொண்டு மத்திய அரசை ஏமாற்றி வருகிறார்கள். கேட்டால் சேதாரத்தில் வந்தது என்று சொல்லி விடுவார்கள்.இந்தியாவில்தான் தங்க விற்பனையில் கறுப்பு பணம் அதிகமாக புழங்குகிறது. 
இங்கே தான் மத்திய அரசு கறுப்பு பணத்துக்கு செக் வைக்கிறது

தற்பொழுது தங்கத்துக்கு கலால் வரியை விதித்ததன் மூலம் தங்க வியாபாரிகள் விற்பனை செய்யும் தங்கத்தின்அளவு மத்திய அரசுக்கு தெரிய வரும். அவர்கள் இறக்குமதி செய்யபட்ட தங்கத்தின் அளவுடன் ஒப்பிட்டு பார்ப்பார்கள். ஏதாவது கோல்மால் செய்திருந்தால் மத்திய அரசுக்கு தெரிந்துவிடும் உடனே நடவடிக்கை எடுப்பார்கள். வியாபாரிகளும் பயந்து நேர்மையாக வியாபாரம் செய்வார்கள்.

ஆரம்பத்தில் கஷ்டமாகத்தான் இருக்கும்.ஆனால் போகப்போக கடத்தல் மூலம் வரும் தங்கத்தை வாங்கி வியாபாரம் செய்தால் அரசுக்கு தெரிந்து விடும் என்பதால் அவர்கள் கறுப்பு தங்கத்தை தவிர்த்து ஒழுங்காக இறக்குமதி செய்து அதற்கு வரியுடன் கலால் வரியையும் சேர்த்து செலுத்துவார்கள். இதனால் மத்திய அரசுக்கு தங்க இறக்குமதியின் மூலம் உண்டாகும் பண வீக்கம் குறைந்து அதற்கு இணையாக நியாயமான வரி கிடைப்பதுடன் கறுப்புபணம் புழங்குவதும் தடுக்கப்படுகிறது.

சரி இதனால் மக்களுக்கு என்ன நன்மை என்கிறீர்களா..
வாங்கும் தங்கத்துக்கும் விற்கும் தங்கத்துக்கும் கணக்கு ஒத்து போக வேண்டும் என்பதால் நம்ம தலையினில் சேதாரம் என்ற பெயரில் நம்முடைய பணத்தினை தங்க வியாபாரிகள் சேதாரப்படுத்த முடியாது...


Raghunathan Iyer

unread,
Apr 26, 2016, 1:20:04 AM4/26/16
to arunalaya

Kumar Ramanathan's photo.
 
 

காஞ்சீபுரத்தில் காமாட்சி அம்மன் தமிழ்நாட்டில் வேறு எந்த தலத்திலும் இல்லாத விசேஷமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி ஆகியோரின் ஒரே உருவமாக இருக்கிறாள். பார்வதியின் (காமாட்சி) இரு கண்களாக லட்சுமியும் சரஸ்வதியும் உள்ளார்கள். எனவே பவுர்ணமி, நவராத்திரி போன்ற முக்கிய தினங்களில் இத்தலத்துக்கு வந்து அம்மனை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமாகும்.

சாந்த சொரூபமாக காட்சியளிக்கும் காமாட்சி அன்னை இத்தலத்தில் மூன்று ஸ்வரூபமாக அதாவது காரணம் (பிலாஹாசம்) பிம்பம் (காமாட்சி) சூட்சமம் (ஸ்ரீசக்கரம்) ஆக வீற்றிருக்கிறாள்.

அவள் வீற்றிருக்கும் இடம் காயத்ரி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. அந்த மண்டபத்தில் பல ரிஷிகள் தவம் இருந்து காமாட்சியின் அருள் பெற்றுள்ளனர். இந்த மண்டப பகுதியில் இருந்து பார்த்தால் அன்னை முன்பு ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருப்பதை பார்க்க முடியும்.

காமாட்சிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும் போது, இந்த ஸ்ரீசக்கரத்துக்கு தான் குங்கும அர்ச்சனை நடத்தப்படும். இந்த சக்கரத்தை சிலாரூபமாக இங்கு ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார். இதனால் இத்தலத்தில் ஸ்ரீவித்யா உபாசன வழிபாடு நடத்தப்படுகிறது.

இது ஸ்ரீசக்கரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதிசக்தி வாய்ந்த இந்த ஸ்ரீசக்கரத்தை சுற்றி 64 கோடி தேவதைகள் வீற்றிருக்கிறார்கள். இந்த ஸ்ரீசக்கரம் 9 ஆவரணங்களைக் கொண்டது. ஆவரணம் என்றால் பிரகாரம் அல்லது சுற்று என்று பெயர்.

ஸ்ரீசக்கரத்தின் ஒவ்வொரு சுற்றிலும் அதாவது ஒவ்வொரு ஆவரணத்துக்குள்ளும் ஒரு முத்ரா தேவதை, ஆவரண தேவதைகள், யோகினி தேவதைகள், பரிவாரம் தரும் சக்தி தேவதைகள், மற்றும் சித்தியை தரும் அணிமா, லகிமா, மகிமா, ஈப்சித்வ், வசித்வ, பிரகாம்ய, புத்தி, கிச்சா, பிராப்தி ஆகிய 9 சித்தி தேவதைகள் உள்ளனர்.

பவுர்ணமி தினத்தன்று இந்த 9 நவாவரண சுற்றுக்கும் ஒவ்வொரு சுற்று வீதமாக சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 9 சுற்றுக்களுக்கும் பூஜை நடக்கும் போது சங்கு தீர்த்தமும் இடம் பெற்றிருக்கும்.

9 ஆவரணத்துக்கும் பூஜைகள் முடிந்த பிறகு பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் காமாட்சி அம்பிக்கைக்கு ஆராதனைகள் நடைபெறும்.இதுதான் நவாவரண பூஜை ஆகும். இந்தப் பூஜை மிகச் சிறப்பானது. விசேஷமான பலன்களைத் தரவல்லது.

நன்கு உபதேசம் பெற்றவர்கள்தான் இந்த பூஜையை செய்ய முடியும். நவாவரண பூஜையின் அளவிடற்கரிய பலன்களை ஏழை-எளியவர்களும், சாதாரண மக்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில்தான் காமாட்சி அன்னை முன்பு ஸ்ரீசக்கரத்தை ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்துள்ளார்.

அந்த ஸ்ரீசக்கரத்தை சாதாரணமாக தரிசனம் செய்தாலே பலன்கள் வந்து சேரும். அப்படி இருக்கும் போது புனிதமான பவுர்ணமி தினத்தில் ஸ்ரீசக்கரத்தின் 9 சுற்றுக்களிலும் உள்ள தேவதைகளுக்கு பூஜைகள் நடப்பதை கண்டு தரிசனம் செய்தால் கோடான கோடி பலன்கள் நம்மை நாடி வரும் என்பதை புரிந்து கொள்ளலாம். அது மட்டுமல்ல. ஸ்ரீசக்கரத்தை சுற்றியுள்ள கவசங்களில் அஷ்ட லட்சுமிகள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். எனவே ஸ்ரீசக்கரத்தில் இருந்து பெறப்படும் குங்குமத்துக்கு எல்லையற்ற சக்தி உண்டு. இந்த குங்குமத்தை பெற்ற பிறகு நவாவரண பூஜையில் படைக்கப்பட்ட சங்கு தீர்த்த பிரசாதத்தையும் நீங்கள் பெற்று விட்டால் பாக்கிய சாலிதான்.

Raghunathan Iyer

unread,
Apr 26, 2016, 8:35:05 AM4/26/16
to arunalaya


 
 
Viswam Lingam's photo.
Viswam Lingam's photo.
 
 

அகோரிகள் யார்?
===============

அகோரிகள் என்றாலே நம்மில்
பலருக்கு பலவகையான
கருத்து உண்டு.புத்தகங்கள் ,ஊடகங்கள் ,இணையம் ,செவிவழி செய்தி என பலவாறாக
அவர்களை பற்றி அறிந்திருப்போம்.

சில நேரங்களில் அவர்களை பற்றி உண்மைக்கு புறம்பான
செய்திகளும் வருவதுண்டு.
உண்மையில் அகோரிகள் என்பவர்
யார் ?அவர்களை பற்றி நான் அறிந்த
தகவல்.

உடலில் ஆடைகள் இல்லாமல், நீண்ட
முடியுடன்.முகத்திலும மார்ப்பிலும் முடிகள் இல்லாமல் இருப்பவர்கள் அகோரிகள்.

தலை பகுதிகள் தவிர பிற
இடங்களில் இவர்களுக்கு முடிகள்
இருக்காது. இவர்கள்
உலகை வெறுத்து தனியாக
வாழ்பவர்கள் கிடையாது.
சிறு சிறு குழுக்களாகவும்
தலைமை யோகியின் பின்னால்
இவர்கள் இருப்பார்கள்.
தங்களை விளம்பரபடுத்திகொள்ளவோ,
தங்களுக்கு இருக்கும் அமானுஷ
ஆற்றலை வெளிகாண்பிக்கவோ மாட்டார்கள் .உடல் முழுவதும் சாம்பல்
அல்லது மண்கொண்டு பூசியிருப்பார்கள் .மத பொருட்கள் எதையும் கைகளில்
வைத்திருக்க மாட்டார்கள்.
அகோரிகள் குழுக்களாக
இருக்கும் சூழலில் யார்
தலைமை யோகி அல்லது குரு என
கண்டறிவது சிரமம்.அனைவரும் ஒரே போல இருப்பார்கள். ஆண் மற்றும்
பெண் அகோரிகள் இருவரும்
இருப்பர்கள்.நிர்வாணமாக இருந்தாலும் பெண்யோகிகளை கண்டறிவது கடினம்.

இவர்களின் தலைமுடி வயதானாலும்
வெள்ளை ஆகாது. உடல்
பயில்வானை போல
இல்லாமல்,உடல் சீரான நிலையில்
இருக்கும்.ரிஷிகேசம் அல்லது இமாலய
மலையின் வனங்களில் இருப்பார்கள்.
பன்னிரு வருடத்திற்கு ஒரு முறை கும்பமேளாவிற்கு வந்து கூடுவார்கள்.

இமாலயவனத்திலிருந்து நடந்தே அலாகாபாத் எனும் இடத்திற்கு வருவார்கள்,மீண்டும்
நடந்தே சென்றுவிடுவார்கள்.
வாகனத்தை பயன்படுத்த
மாட்டார்கள்.வாகனத்தில் சென்றால் குறைந்த பட்சம்
பன்னிரெண்டு மணி நேர பயணம்.

ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்லும்
பொழுது கட்டுகோப்பாக
வரிசையில் செல்வார்கள். வரிசையின்
முன்னாலும் ,பின்னாலும் இருக்கும் அகோரிகள் பாதுகாப்பு அரணாக
இருப்பார்கள். நீண்ட முடியும்,
மண் அல்லது சுடுகாட்டு சாம்பலை பூசி இருந்தாலும்
அவர்கள் மேல் எந்த விதமான
வாசனையும் இருக்காது. நறுமணமும்
இருக்காது,நாற்றமும் இருக்கது.

முக்கியமாக இவர்கள் பிறருடன்
பேசுவது குறைவு.தங்களுக்குள்
பேசிக்கொள்ளவே மாட்டார்கள்.
குழுவாக வட்டவடிவில்
உற்கார்ந்து கொண்டு ஒரு மூலிகையை புகைப்பார்கள்.இம்மூலிகை கஞ்சா என பிறர் எண்ணுகிறார்கள். கும்ப
மேளாவில்
கஞ்சா எல்லாஇடத்திலும்
கிடைக்கும், சிலர் இலவசமாக
பிறருக்கு வழங்குவார்கள்.
ஆனால் இவர்களிடம் யாரும்
கொடுக்க மாட்டார்கள், இவர்களும்
வாங்க மாட்டார்கள். தாங்கள்
இருக்கும் வனத்திலிருந்து சில
மூலிகைகளை கொண்டுவருவார்கள்.
வட்டமாக உட்கார்ந்திருக்கும்
இவர்கள் வட்டத்தின் மையத்தில் அந்த
மூலிகையை வைத்து ப்ரார்த்தனை செய்த பின் புகைப்பார்கள்.
மூலிகை குழாயில்
வைத்து ஒரு முறை மட்டுமே உள்ளே இழுப்பார்கள்.பிறகு அடுத்தவருக்கு கொடுப்பார்கள்.
இப்படியாக வட்டம் முழுவதும்
புகைகுழாய் வட்டமடிக்கும்.

ரிஷிகேசத்திலும்,கும்ப மேளாவிலும் 1
டிகிரி செண்டிகிரேட் குளிராக
இருந்தாலும் நிர்வாணமாக
உற்கார்ந்து தியானம்
செய்வார்கள்.இப்படி பட்ட
யோகிகளை புரிந்து கொள்வது கடினம்.
இமாலய மலை பகுதிகளில்
( யமுனோத்தரி,கங்கோத்தரி மற்றும் நேப்பாளம்) இவர்களின்
முக்கிய இடமாக இருக்கிறது.

கும்பமேளா தவிர பிற காலங்களில் இவர்கள் குழுவாக
வெளியே வலம் வருவதில்லை.
குழுவிலிருந்து தனியே சில
பணிகளுக்காக செல்லும் அகோரிகள் தங்கும் இடம் மயானம்.
எந்த ஊருக்கு சென்றாலும் நாம்
ஹோட்டலை தேடுவது போல
இவர்கள் மயானத்தில்
இருப்பதை விரும்புவார்கள்.

அகோரிகளுக்கு தங்கள்
உடலின் சக்தி நிலை மிகவும்
முக்கியமானது. இங்கே உடல் சக்தி என
குறிப்பிடுவது பூஸ்ட்,காம்ளாண்
குடித்து வருவதில்லை. யோக
சக்தியின் உயர் நிலையை எக்காரணத்திலும்
இழக்க அவர்கள் தயாரக இருக்க
மாட்டார்கள்.
இயற்கையிலிருந்து எப்படி சக்தியை பெறுவது எனபது இவர்களுக்கு அத்துப்படி.மயானம்,
ஆறு மற்றும் வனங்களில் தங்கள்
உடல்சக்தியை மேம்படுத்துவார்கள்.
தங்கள் யோக சக்தியை பிறருக்கு அநாவசியமாக காட்ட மாட்டார்கள். சமூகத்தில் தர்மம் தடுமாறும்
பொழுது சூட்சமமாக
செயல்பட்டு தர்மத்தை நிலைநிறுத்துவார்கள்.

கும்பமேளா என்பது ஒரு சிறப்பு மிக்க
நிகழ்வு.பூமியில் வேறு எந்த
பகுதியிலும் நிகழாதவண்ணம்
அதிக மக்கள் கூடும்
ஒரே விழா கும்பமேளா.
2007ஆம் ஆண்டு நடைபெற்ற
கும்பமேளாவில்
ஒரு கோடிக்கும் மேலாக மக்கள்
கலந்து கொண்டார்களாம்.
அழைப்பிதல் இல்லை,
அமைப்பாளர்கள் இல்லை,
தொண்டர்படை ஒருங்கினைப்பில்லை அப்படி இருக்க ,இந்த விழா எப்படி சிறப்பாகநடைபெறுகிறது?
ஏதோ ஒரு சூட்சுமசக்தி அனைவரையும்
வரவழைக்கிறது. பல லட்சம் மக்கள்
இணையும் இடத்தில் உணவுக்கோ,
தண்ணீருக்கோ பஞ்சம் இல்லை.
உயிர்சேதம் இல்லை.

யாரோ ஒருவர் பெரிய லாரியில்
கம்பளிகளை கொண்டுவந்து அனைவருக்கும்
இலவசமாக தானம் செய்கிறார்.
மற்றொருவரோ அனைவருக்கும்
உணவுபொட்டலங்களை வினியோகம்
செய்கிறார்.இவர்களை தூண்டியது எந்த சக்தி?தங்கள் அர்ப்பணிப்பு உணர்வால் இவர்கள் செய்யும் தியாகமும்,வைராக்கியமும்
அலாதியானது. தங்கள்
குழுக்களில் பிறரை சுலபமாக சேர்க்க
மாட்டார்கள்.அகோரிகளின் ராணுவ அமைப்பின் தலைவர் பதவியை ஏற்கும்
முறை விசித்திரமானது. புதிய
தலைவரை வணங்கிவிட்டு , பழைய
தலைவர் தன்னை மாய்த்துக்கொள்ளுவார்­…!

காசி நகரம் ஆன்மீக நாட்டம் கொண்டர்களின் சரணாலயம். ஊருக்கு ஒரு மயானம் இருப்பது போல
உலகிற்கே ஒரு மயானம்
என்றால் அது காசி என
சொல்லலாம். தினமும் சராசரியாக
எழுநூறு முதல் ஆயிரம்
பிணங்கள் எரிக்கப்படுகிறது.
சன்யாசிகள், யோகிகள்,
தாந்திரீகர்கள், மாந்திரீகம் செய்பவர்கள் என
அங்கே கூட்டம் அதிகம்.
காக்கி சட்டையில் வரும்
ஒருவர் வாட்சுமேனா அல்லது போலீஸா என தெரியாமல் முழிப்பவர்கள் போல,
மக்கள் அகோரிகளுக்கும்
மாந்திரீகர்களுக்கும்
வித்தியாசம் தெரியாமல் அனைவரையும் ஒரே தலைப்பில்
அடைத்துவிடுவார்கள்.

மேலைநாட்டுகாரர்களுக்­­­
கு இந்தியாவில் நரமாமிசம்
சாப்பிடும் மாந்திரீகர்களை படம்
பிடித்து அவர்களை நாக
சன்யாசிகள், அகோரிகள் என
கூறிவது வருந் ததக்கது

அகோரிகள் மயானத்தில் தியானம்
செய்வார்கள், எரியும் உடல் மேல்
அமர்ந்து தியானிப்பார்கள்.
ஆனால் மனித உடலை உண்ணமாட்டார்கள்.
உணவு தேவை என்பதே இவர்களுக்கு இல்லை என்பது தான் உண்மை. சில
மூலிகைகளை வைத்து கொண்டு பசியற்ற நிலையில் இருக்கிறார்கள்.
உடலில் எந்த ஒரு மத
சின்னங்களோ அடையாளமோ இருக்காது.ருத்திராட்சம் , சங்கு மற்றும்
ஆயுதம் இவற்றில்
ஏதாவது ஒன்று கைகளில்
வைத்திருப்பார்கள்.ஆபரணம், மோதிரம் அணியமாட்டார்கள்.

தலை மூடி நீண்டு இருக்குமே தவிர
முகத்திலும்,மார்ப்பிலும் முடி இருக்காது.கெளபீணமோ அல்லது நிர்வாணமாகவோ இருப்பார்கள்.
உடை உடுத்துவது இவர்கள்
மரபு அல்ல .( நிர்வாணத்திற்கான காரணம் ஆசை ,பாசம் , பொருள்
ஆடை என்று எல்லாவற்றையும்
கடந்து பிறவிச்சுழற்சியிலிரு­
யந்து விடுதலை அடைந்து முற்றும்
துறந்த நிலை என்று கூறலாம்.)
.சுடுகாட்டு சாம்பலை கும்பமேளா தவிர
பிற நாட்களில் / இடங்களில் பூச


மாட்டார்கள்.

LikeShow More Reactions
Comment

Raghunathan Iyer

unread,
Apr 28, 2016, 5:15:44 AM4/28/16
to arunalaya

நண்பர்களே, மிகுந்த பக்தியுடன் கடவுளை வணங்கி வந்தால் எதுவும் எங்களை தாக்காது ,அனாவசியமாக நாங்கள் கவலைப்பட வேண்டியதில்லை என்பதை கந்தரலங்காரத்தில் அருணகிரிநாதர் எப்படி மனமுருகி தமிழ் கடவுளாம் முருகப்பெருமானை நோக்கி பாடுகிறார் என்று பாருங்கள்!

''நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றன் செயுங் குமரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையுந் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்கு முன்னே வந்து தோன்றிடினே.''

விளக்கம்: - எல்லாம் வல்ல முருகபெருமானின் குஞ்சித பாதங்களும்,கால்சிலம்பும்,'ஜல் ஜல்' என ஜலஜலக்கும் கால் சதங்கையும்,தண்டையும்,அழகிய ஷண்முகனின் தோள்களும்,கடம்பும் எனக்கு முன்னாடி தெரியும் போது நாள், நக்ஷத்ரம்,கொடிய விதி என்று எதுவுமே என்னை எதுவும் பண்ணமுடியாது!.

Raghunathan Iyer

unread,
May 6, 2016, 2:40:07 AM5/6/16
to arunalaya

 
1 hr · 

“டேய், நீ வாங்கி வந்த சாக்லெட்டுக்கள் கசப்பாக கசக்கறதுடா”

வெளிநாட்டு பயணத்தை பற்றி சிந்திக்கும் இந்த சமயத்தில் ஒன்றை துவக்கத்திலேயே சொல்லிவிடுகிறேன். வெளிநாட்டில் வாழ்ந்துவரும் நம்மவர்களிடம் எனக்கு நட்பும், அன்பும் உண்டு.

வெளிநாட்டுக்கே எக்காரணம் கொண்டும் போகக்கூடாதென்று ஒட்டுமொத்தமாக நாம் அபிப்ராயப்படுவதாக நினைக்க வேண்டாம்.

தர்ம பிரசாரத்தாகாகவும். அல்லது தற்காலத்தில் பல விதமான ‘கன்சல்டேஷன்’ போன்ற விஷயங்களுக்காகவும் அல்லது வியாபார அல்லது நிர்வாக காரணங்களுக்காகவும் ”ஃபாரின் ட்ராவெல்ஸை” யாரும் எதிர்க்கவில்லை.

பிரச்னை எங்கு வருகிறதென்றால் ‘க்வாலிடி ஆஃப் லைஃப்’ அங்கு ஃபாரினில்தான் உள்ளது என்று நினைத்து எந்த வேலை கிடைத்தாலும் பரவாயில்லை என வெளிநாட்டில் செட்டில் ஆக நினைப்பவர்களை பற்றிதான்.

வெளிநாட்டுக்கு தேவைப்பட்டால் போய்விட்டு வருவோம். ஆனால் நாம் அவசியம் அங்கு ‘செட்டில்’ ஆகத்தான் வேண்டுமா? இதை பற்றி நாம் சற்று யோசித்தால் நல்லது.

இந்த வெளிநாட்டுக்கு போய் செட்டில் ஆகிரவர்களுக்கு அனேகமாக பணம் ஒன்றுத்தானே குறி? வேறு ஏதாவது இருக்கா? இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஏராளமாக சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு வெளிநாட்டில் இவர்கள் கடைசியில் என்ன செய்யப்போவதாக உத்தேசம். புரியவில்லை. ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் வாஸ்தவம். ஸ்ரேஷ்டமான நமது ‘திவிஜன்ம’ அடையாளத்தை இழந்துவிட்டு பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்யப் போகின்றோம் ?

மீண்டும் சொல்லுகிறோம். வெளிநாட்டு பயணத்தையே நாம் எதிர்ப்பதாக யாரும் நினைக்கவேண்டாம். ஏதோ காரணகாரியமாக சென்று வருவதை யாரும் குறை கூறப்பொவதில்லை. த்ரவ்யம் திரட்டுவதிலும் தவறில்லை. ஆனால் அங்கேயே நிரந்தரமாக செட்டில் ஆவது மூலம் நமது ஆச்சார அனுஷ்டானங்களை தள்ளிவைத்துவிட்டு தங்களது வளரும் குழந்தைகளையும் அந்நிய கலாசாரத்தில் வளரவிட்டு நாம் எதை சாதிக்கப்போகின்றோம்.

இந்த புண்ணிய பூமியில் இருந்தாலாவது ஆச்சார அனுஷ்டானங்களை முழுமையாக செய்கின்றோமோ இல்லையோ குறைந்தது ஜன்ம பூமியிலாவது வாழ்க்கை ஓடுமே. இது ஒன்று போதாதா?. இந்த கர்ம பூமியில் வாழ்வதே உசத்தியான விஷயம் அல்லவா.

பணம் வேண்டாம் என நான் சொல்லவில்லை. அந்த பணம் எந்த அளவிற்கு என்பதைதான் நாம் முடிவு செய்யவேண்டும். சொந்த பந்தங்களை விட்டுவிட்டு, குழந்தைகளை அந்நியர்களாக வளரவிட்டு, சொந்த அப்பா அம்மாவை கவணிக்கமுடியாமல் அலக்ஷியப்படுத்தி விட்டு அங்கு ‘பர்மணென்டாக’ குடியேற வேண்டுமா? யோசிப்போம்.

இதில் ஒரு வேடிக்கையான அம்சமும் உண்டு. பையனுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்ததும் அவனை விட அதிகம் முதலில் சந்தோஷப்படுவது யார் தெரியுமா? இந்த பெற்றோர்கள்தாம். ஊர் முழுக்க பெருமையாக சொல்லிக்கொள்ளுவார்கள். ஆனால் போகப்போக இவர்கள் படும் கஷ்டம் இவர்களுக்கும் அந்த கடவுளுக்கு மட்டும்தான் வெளிச்சம். சொல்லமுடியாமலும் மெல்லமுடியாமலும் தவிப்பது நிச்சயம்.

இவர்கள் வெளிநாட்டில் செட்டில் ஆனதை தொடர்ந்து நடைபெறும் பல காட்சிகள் வருத்தத்தை தருகின்ற மாதிரி அரங்கேற்றமாகும். ஒன்றிறண்டை மட்டும் இங்கு பார்ப்போம்.

கல்யாணமாகி மகன் மனைவியோடு அமெரிக்கா சென்றிருப்பான். சில வருடங்கள் கழித்து அவன் தனது பையனுக்கு உபநயனம் செய்ய அப்பா அம்மாவுக்கு அங்கிருந்து தகவல் சொல்லுவான். ” நாங்கள் நமது கல்சரை விட்டுவிட மாட்டோம்” என தம்பட்டத்தோடு. நான்கு நாட்களுக்கு முன்னாடி மனைவி குழந்தையோடு வந்து இறங்குவான். பாவம், இந்த தாத்தா பாட்டி அந்த குழந்தையோடு ஆசையாக கொஞ்சுவதற்கும் பேசி விளையாடுவதற்கும் தங்கள் பேரனை அருகே கூப்பிடுவார்கள். அந்த குழந்தை பேசும் மொழி, தமிழோ ஆங்கிலமோ எதுவாக இருந்தால் என்ன, அந்த ‘ஸ்டைல்” இவர்களுக்கு புரியாது. இவர்களின் பாச பேச்சுக்கள் அந்த குழந்தைக்கு புரிய வாய்ப்பில்லை. தாத்தா பாட்டியின் நிலமை பரிதாபமாக இருக்கும். அதோடு நாட்கள் ஓடி விடும். பையன், மாட்டுபெண், குழந்தைகள். பூணுல் முடிந்த கையோடு கிளம்பி விடுவார்கள்.

அவர்கள் வெளிநாட்டிலிருந்து வரும்போது வாங்கி வந்த சாக்லெட்டுகள் சீந்துவார் இன்றி ஒரு மூலையில் கிடக்கும். “டேய், நீ வாங்கி வந்த சாக்லெட்டுக்கள் கசப்பாக கசக்கறதுடா” என வெளிப்படையாக சொல்ல மனம் வராமல் பெற்றோர்கள் தவித்துக்கொண்டிருப்பார்கள்.

கேட்டால் ”நாங்கள் என்ன அப்பா அம்மாவுக்கு செய்யாமலா இருக்கும்? கோடி கணக்கில் பணம் செலவழித்து ஃப்ளாட் வாங்கி அவர்களை குடி வைக்கவில்லையா? 3, 4 வருஷத்துக்கு ஒரு தடவையாவது அவர்களை வந்து பார்க்காமல் இருக்கிறோமா, நீங்கள் என்ன பேச்சு பேசுகிறீர்கள்? உங்களுக்குத் தெரியுமா அவ்வப்போது அவர்களுக்கு பணமும் அனுப்பி வருகிறோம், தர்ம காரியங்களுக்கும் நிறைய செய்து வருகிறோம். .” இப்படி பதில்கள் அவர்களிடமிருந்து வந்துக்கொண்டே இருக்கும். இதை மறுப்பதற்கில்லை. அங்கு சென்றவர்கள் தாராள மனசுடன் இருப்பதும் உண்மைதான். இதில் மற்றவர்களுக்கு லாபமே தவிறே இவர்களது சொந்த ’பிராஹ்மண’ வாழ்க்கை திருப்திகரமாக உள்ளதா என்பது கேள்விகுறிதான்.

சில இல்லங்களில் பெற்றோர்களது அந்திம காலம் நெருங்கும்போதோ அல்லது ஜீவன் பிரிந்துவிட்டாலோ அதுசமயம் நடப்பது மிகவும் வேதனைக்குறியதாக இருக்கும். அந்தமாதிரி குடும்பங்களில் நடப்பது எப்படித் தெரியுமா? . ஏதோ கடமைக்கு வெளிநாட்டிலிருந்து வரவேண்டியது, அதுவும் காலம் தாழ்ந்து வரவேண்டியது, கர்மாக்களை செய்யவேண்டியது, அம்மாவோ அப்பாவோ தனியாக இருப்பார்கள் அல்லவா அவர்களிடம் ’உடம்பை பார்த்துக்கொள், அடிக்கடி ஃபோன் செய்கிறேன்’ என்று சொல்லிவிட்டு அடுத்த ஃப்ளைட்டில் கிளம்ப வேண்டியது. அவ்வளவுதான். வருஷாந்திர காரியங்களான சோதகும்ப மாசிகாதிகள் எல்லாம் காற்றில் பறந்து விடும்.

இம்மாதிரி பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அங்கு பிறந்து வளர்ந்த குழந்தைகளும் பெரும்பாலும் நமது பாரம்பர கலாசாரத்தை விட்டு பலதூரம் போய் இருப்பார்கள் என்பது நிதர்ஸனம். அந்நிய நாட்டு கலாசாரத்தில் அந்நியர்கள் நடுவில் வளர்க்கப்பட்டு ‘அந்நியர்களாகவே’ அவதாரமெடுப்பதில் நமக்கு என்ன சந்தோஷம் வேண்டி கிடக்கு? யோசிப்போம். ஒரு வயசுக்கு பிறகு அங்கு செட்டில ஆன பெற்றோர்கள் மனசு மாறி நாடு திரும்ப முடிவு செய்தாலும் அங்கு வளர்ந்த குழந்தைகள் நம் நாடு திரும்புவார்களா என்பது கேள்விக்குறிதான். ‘க்வாலிடி ஆஃப் லைஃப்’ இந்தியாவில் இல்லை என்று சொல்லிவிடுவார்கள். அவ்வளவு ஏன் வெளிநாட்டில் சில வருடங்கள் தங்கிய நமது பையன் மற்றும் மாட்டுப்பெண்ணே இப்படி அபிப்ராயப்பட வாய்ப்புண்டல்லவா.

’மாமா, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நாங்கள் வசிக்கும் நாட்டில் வேத பாராயணங்களும், ஸ்ரீ ருத்ர ஜபம் போன்றவைகளும், ராதா கல்யாணங்களும், சத்சங்கங்களும் நன்கு தொடர்ந்து அமோகமாக நடக்கின்றது.’ என்பதுபோல் பேசுவதும் காதில் நிறைய விழுகின்றன. ஓரளவிற்கு சந்தோஷம் தரக்கூடிய விஷயம்தான் இது. சந்தேகம் இல்லை. ஆனால் என்னதான் அவர்கள் பெருமையாக இம்மாதிரி வெளிப்படையாக பேசிக்கொண்டாலும் அவர்களது மனசுக்கு முழு திருப்தி இதில் இல்லை என்பதும்; மனசில் ஏதோ ஒரு இடத்தில் ‘வலியும்’ ஏற்படுவது அவர்களுக்கு நன்கு தெரியும். பாவம் மனசை தேற்றிக் கொள்ளுவார்கள். அவர்களுக்கே மனதுக்கு நன்கு தெரியும் என்னதான் பிரஹ்மாண்டமாக நடந்தாலும் ஏதோ ஒன்று முக்கியமானது, சாந்நித்யம் மாதிரி ஏதோ ஒன்று, ‘மிஸ்ஸிங்; என்று. ’

க்ஷேமமாக இருக்கட்டும்.

மற்றொரு ’டெவலெப்மெண்டும்’ நடக்கும். பொதுவாக அங்கு வளரும் குழந்தைகளில் பெரும்பாலும் அந்நிய நாட்டு மக்களையே கல்யாணம் செய்துகொள்ளுவது சம்பவிக்கும். அதை அங்கு செட்டில் ஆன பெற்றோர்கள் வாய்மூடி அங்கீகரிப்பதையும் நாம் பரவலாக பார்க்கலாம். கல்யாணத்தை நமது ஹிந்து கலாசாரத்தின்ப்படி எந்த சடங்கையும் விடாமல் செய்தோம் என பெருமையான பேச்சு வேறே இருக்கும். ’மடிசார், பஞ்சகச்சம் எல்லாம்கூட இருந்தது தெரியுமா உங்களுக்கு’ என நம்மிடம் மார் தட்டிக் கொள்ளுவார்கள். ஒருவேளை யாராவது இதை வருத்தப்பட்டு கேட்டால் அப்போதுகூட தங்களது தவற்றை வெளிப்படையாக ஒத்துக்கொள்ளாமல் ‘இங்கு இந்தியாவில் மட்டும் கலப்புத் திருமணம் நடக்கவில்லையா என்ன?’ என்று பாய்வார்கள்.

ஏராளமாக சம்பாதித்த பணத்தை வைத்துக்கொண்டு வெளிநாட்டில் இவர்கள் கடைசியில் என்ன செய்யப்போவதாக உத்தேசம். புரியவில்லை. ஒன்றும் செய்ய முடியாது என்பதுதான் வாஸ்தவம். ஸ்ரேஷ்டமான நமது ‘திவிஜன்ம’ அடையாளத்தை இழந்துவிட்டு பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்யப்போகின்றோம் ?

போவதில் தவறில்லை; திரும்பி வராமல் இருப்பதுதான் தவறு.

”பாரத பூமியை விட்டு நான் வெளிநாட்டில் செட்டில் ஆகமாட்டேன்; அப்படி ஒரு வேளை ஏற்கனவே என் வாழ்வில் நடந்திருந்தால் எவ்வளவு விரைவில் தாய்நாடு திரும்ப முடியுமோ அவ்வளவு சீக்கிரம் திரும்புவேன் ” என்று நம்மால் உறுதிமொழி எடுத்துக் கொள்வதில் நிறைய நல்ல விஷயங்கள் அடங்கியுள்ளது.

जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी 
ஜனனீ ஜன்மபூமிஸ்ச ஸ்வர்காதபி கரியஸி 
(ஸ்வர்கத்தை காட்டிலும் எனது தாயும் தாய்நாடும் உசத்தி) எனும் அருமையான வாக்யத்தை நாம் நினைவில் வைத்துக்கொள்ளுவோம்.


Raghunathan Iyer

unread,
May 6, 2016, 2:51:51 AM5/6/16
to arunalaya




 
Charulatha Anand's photo.
 

தயவு செய்து பொறுமையா படிங்க நண்பர்களே!
என்னை கவர்ந்த கவிதை.........................
"..பெண்ணல்ல நீ எனக்கு.."
..
நாள் தவறி போனதே என
நீ வெட்கத்தோடு உரைத்ததும்..
மார்பில் முகம் புதைத்ததும்
மேடிட்ட வயிறு கண்டு
முத்தமிட்டு சிரித்ததும்..
புளிப்பு மாங்காய் வேண்டுமென
காதோரம் சொன்னதும்
கண்ணுக்குள் ஆடுதடி..
மூன்றாம் மாதம் முதல்
நீர் இறைக்க தடை போட்டேன்..
ஐந்தாம் மாதம் முதல்
கனம் தூக்க தடை போட்டேன்..
ஏழாம் மாதம் தனில்
சீமந்தம் செய்தார்கள்..
மஞ்சள் பூசி, வளவி இட்டு
திருஷ்டி சுற்றி போட்டாலும்
போய்விடுமா உன் அழகு தாய்மையில்..
ஆண்டவன் இருந்திருந்தால்
அப்பொழுதே கேட்டிருப்பேன்
ஏன் படைத்தாய்
ஆண் எனவே மண்ணில் என்னை?
தினமும் மாலை கை கோர்த்து
நடை பயின்று..
இரவெல்லாம்
கண் விழித்து மடி மீது
உறங்க வைத்தேன் தாயென்றே உனை..
நாட்கள் நெருங்க, நெருங்க
கலவரம் கண் மறைத்து
நம்பிக்கை கை பற்றி
மார்பனைப்பேன் என் உயிரே..!
இறுதியாய் பல் கடித்து
வலியென நீ புலம்புகையில்
ஊர்தி கொண்டு அவசரமாய் மருத்துவமனை
வரும் முன்னே
வியர்த்தொழுகும் முகமெல்லாம்..
சில நொடி பொழுதுகளில்
வந்தனரே உன் தாயும், என் தாயும்
உறவினரும் நண்பருமாய்..
தனியறைக்குள் நீ செல்ல
கதறும் ஒலி கேட்டு தாங்கவும்
முடியாமல் தனியிடம்
அமர்ந்திருந்தேன், கண்ணீரும் இல்லாமல்
நினைவெல்லாம் உன் பிம்பம்..
அவசரமாய் தாதி பெண் எனை அழைக்க
ஓடி வந்தேன்
உள் வர சொன்னாயாம்..
சொல்லி விட்டு போய் விட்டால் மின்னல் கீற்று போல..
பல் கடித்து வேதனையில்
பக்கத்தில் வாவெனவே முககுறி தனில் எனை
அழைத்து கைபற்றி கொண்டாய்..
இறுக்கும் கைகளில் உன் வேதனை நான் உணர்ந்தேன்
இருந்தும் என்ன செய்ய இயலவில்லை
உன் வலி நான் பெறவே,
ஆர்ப்பரித்து அடங்கியதும்
அரை நினைவில் நீ சிரித்தாய்
பிஞ்சு முகம் காணும் முன்னே
நெற்றி ஒதுக்கி முத்தமிட்டேன்
ம்ம்ம்.. நீ எனக்கு உயிரடி..!!
பெண் குழந்தை நீ பெற்றாய்
பேரின்பம் நான் பெற்றென்..
முகமெல்லாம் உன் வடிவம்
நிறம் மட்டும் பொன் எழிலாய்
நீ கொஞ்சம் கண்ணயர்ந்த வேளையில்
வெளியே வந்தேன்..
அதுவரை கட்டி வைத்த
கண்ணீர் எல்லாம் கரை தாண்டும்
காரணம் நான் அறியேன்
புரியவில்லை அக்கணம்..
வாரி எடுக்க வந்தார்கள்
உன் தாயும் என் தாயும்
யாரிடம் கொடுக்க?
யாரிடமும் வேண்டாம்
முதல் சொந்தம் அவளுக்கே
சொல்லி விட்டேன் என் முடிவை..
30 வினாடிகள்
கண் விழித்து தேடினாய்
மகளை அல்ல என்னை
கை பற்றி மூத்த மிட்டாய்
பின் ஏந்தினாய் பெண் பூவை..
பெருமையாய் பார்த்தாள் என் தாய்
பொறாமையாய் பார்த்தாள் உன் தாய்..
இருவரும் பெற்றதில்லை
இந்த பாக்கியம் என..
அவனைவரும் இனிப்பு கேட்டு
வாங்கி கொடுத்த பின்
கலைந்தது கூட்டம்..
தனியே நீயும், நானும்
எனக்கு எங்கே இனிப்பென்று
நான் கேட்க .. இறுக கரம் பற்றி
இதழோடு இதழ் பொருத்தினாய்..
ம்ம்ம்.. இதை விட பேரின்பம்
பெறுவேனோ சொர்க்கமதில்..???
"..பெண்ணல்ல நீ எனக்கு.."
குல தெய்வம் அல்லவோ..!!
 


Raghunathan Iyer

unread,
May 7, 2016, 1:36:33 AM5/7/16
to arunalaya, ambarisha

 
17 hrs · 

பேசும் தெய்வம்

''அனுக்ரஹம்''

களத்தூர் கண்ணம்மா என்று ஒரு படம். அந்த களத்தூரோ வேறேயோ தெரியாது. காவேரிக் கரை மண் உயிரூட்டம் கொண்டது. மக்கள், மாடு, மனை, சகலமும் அமோக செழிப்பு அல்லவா? கும்பகோணம், திருச்சி தஞ்சாவூர் பூலோகத்தில் ரம்மியமான பிரதேசங்கள், அதில் தான் எத்தனை கிராமங்கள்..எங்கும் எதிலும் மக்கள் மனத்திலும் பசுமை. அதில் ஒன்று களத்தூர்என்று வைத்துக் கொள்வோம்.!

அந்த ஊர் துர்க்கா பரமேஶ்வரி அழகானவள். சிறிய உருவம். அவள் கோவிலில் பூஜைக்கு குறைவில்லை. கோவில் தர்மகர்த்தா அம்பாள் பக்தர்.அவளுக்கு சேவையே தன் வாழ்வாககொண்டவர். நவராத்ரி சமயம் அம்பாளுக்கு ஒன்பது நாளும்கோலாகலமாக அலங்காரம், நைவேத்யம், என்று ஏகமாக செலவழிப்பார். அண்டா அண்டாவாக சுண்டலும், சக்கரை பொங்கல் தயாராகி, நைவேத்யமாகி, ப்ரஸாதமாகி அண்டை அசல் கிராமங்களில் இருந்தெல்லாம் கூட பசியோடு வருபவர்கள் வயிறு நிறையும். .

தர்மகர்த்தாவுக்கு மொத்தம் எட்டு குழந்தைகள். ஐந்து பிள்ளைகள்; மூணு பெண்கள். ஒருத்தருக்கும் கல்யாணம் ஆகவில்லை. கடைக்குட்டியான ரமணி ரொம்பச் சின்னப் பையன். 
தர்மகர்த்தா பொட்டென்று ஒரு நாள் காலமாகி துர்க்கையின் மலரடியில் புஷ்பமாகப் போய்ச் சேர்ந்து விட்டார். குடும்பமே நிலைகுலைந்தது! அவர் மனைவி, எட்டு குழந்தைகளை தன் பொறுப்பில், அந்த அம்பாளே விட்டிருப்பதாக நினைத்தாள். தர்மகர்த்தா உயிரோடு இருக்கும்போது, தேனாக பேசியவர்கள் இப்போது காணோம். வீட்டிலிருந்த அண்டான், குண்டான் கொஞ்ச நஞ்ச தங்கம், வெள்ளி, பித்தளை ஸாமான்களை விற்று சக்திக்கு ஏற்றவாறு மூன்று பெண்களுக்கும் எளியமுறையில் கல்யாணம் செய்து வைத்தாள். பையன்கள் நாலு பேரையும் காலேஜ் வரை படிக்க வைத்தாள்.

மூத்த பையன் காலேஜ் முடிந்து "அம்மா! இனிமே நீயும், தம்பிகளும் என்னோட பொறுப்பு!..." என்று தலையெடுத்து காப்பாற்றுவான் என கனவு கண்டாள். படிப்பை முடிக்கும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு, அந்த குச்சு வீட்டில், அம்மாவின் ஏழைக் கைகள், போட்ட மோர் ஸாதத்தை, அன்பின் ருசி அறியாமல், வேண்டா வெறுப்பாக சாப்பிட்டவன் படிப்பு முடிந்ததும் 'நீயாச்சு! உன் பிள்ளைகளாச்சு !' என்று 'டாடா' காட்டிவிட்டு எங்கோ போய் விட்டான். அண்ணாவுக்கு ஏற்ற தம்பிகளாக அடுத்து மூன்று பேரும் 'அண்ணாவின் வழியில்' சென்றதால் , கடைசி தம்பி ரமணியும் அம்மாவும் நிர்கதி!

ரமணி ஒன்பதாம் க்ளாஸ். தன் புத்ர ரத்னங்களை படிக்க வைக்க, அம்மாக்காரி வாங்கிய கடனோ கழுத்தை நெரித்தது! மாடி போர்ஷனை வாடகைக்கு விட்டு, ஸொல்ப பணத்தில் கஞ்சியோ கூழோ குடித்துக் கொண்டு, மீதியை கடனுக்கு செலுத்தி வந்தாள். சிறுவன் ரமணி, பேருக்கேற்றபடி ரமணீயமான குணம். படிப்பை நிறுத்திவிட்டு, உள்ளூர் மளிகைக் கடையில் வேலைக்கு சேர்ந்து, தன் ஸம்பாத்யத்தையும் அம்மாவின் கடனை அடைக்க குடுத்தான்! இவர்கள் கொடுக்கும் பணம், கடலில் கரைத்த பெருங்காயம் போல், கடன் அடைக்க முடியாததால் கடன்காரர்கள் நெருக்கினார்கள். அம்மா மடியில் தலைவைத்து அழுதான் ரமணி.

அம்பாளுக்கு எவ்வளவு ஆசை ஆசையாய் செய்திருப்பார் தர்மகர்த்தா! கைவிடுவாளா அம்பிகை? கஷ்டத்தைக் குடுத்து, மிச்சம் மீதி இருக்கும் கர்மாவை [அதுவே கடைசி பிறவி என்பதால்] கழிக்கவிட்டு, தன்னுடைய அதிரடிக் காருண்யத்தை ஒரேயடியாக சொரிந்து விடுவாளே!

ரமணியின் அம்மாவுக்கு அன்று இரவு ஒரு ஸொப்பனம்.....அதில், கரும்புவில்லுக்கு பதில் கருணை தண்டமேந்திய மகா பெரியவா .

" ஒன்னோட ஆத்துக்காரர் போனதுக்கு அப்றம் நீ......நவராத்ரி கொலுவையும் மறந்துட்டே!.....அதோட, என்னையும் மறந்துட்டே! ரமணியை ஒடனே எங்கிட்ட அனுப்பு..." யே மனஸ் படபடக்க எழுந்து உட்கார்ந்தவள் தூங்கிக் கொண்டிருந்த ரமணியை எழுப்பினாள்.

"ரமணி....கண்ணா ..பெரியவா வந்தாடா ஸொப்பனத்ல ! நாம் நவராத்ரி கொலு வெக்கணுமாம்.....ஒன்னை பெரியவா ஒடனே வரச் சொல்றாடா!.."

"அம்மா...பெரியவா இப்போ எங்கியோ வடக்குல இருக்கார்ம்மா..அங்க போக, வர செலவுக்கு நீ எங்கம்மா போவே?...."

வெறும் கனவுதானே என்று துளிகூட ஒதுக்காமல் நம்பிக்கையோடு "பெரியவாதானே கூப்டிருக்கா? கவலைப்படாத! அவரே வழி காட்டுவார்...."என்றாள் அம்மா.

விடிந்ததும், மாடி போர்ஷனில் குடியிருக்கும் ஸர்மா வந்தார். மிகவும் நல்ல மனுஷ்யர். அவரும் அவர் மனைவியும் இவர்களிடம் மிகவும் ஆதரவோடும், அனுஸரணையோடும் இருப்பார்கள்.

"அம்மா....நானும், எங்காத்துக்காரியும் நாளான்னிக்கி நார்த் இண்டியா யாத்ரை கெளம்பறோம். திரும்பி வரதுக்கு எப்டியும் ரெண்டு மாஸம் ஆகலாம். ஒன்னோட ரெண்டு மாஸ வாடகையை ஒங்கிட்ட அட்வான்ஸாவே குடுத்துடறேன்......இல்லேன்னா பாவம் நீ இதையே நம்பி இருக்கரவ, ரொம்ப ஸ்ரமப்படுவே. இந்தாத்துக்கு வந்தப்பறம் எங்களுக்கு மனஸ்ல ஒரு நிம்மதி கெடச்சிருக்கு. அதுனால, கடைசி வரைக்கும், ஒனக்கு வாடகை குடுத்துண்டு, இங்கியேதான் இருக்கப் போறோம்! செரியா?...."சிரித்துக் கொண்டே பணத்தைக் குடுத்தார்.

கரகரவென கண்ணீர் வழிந்தோட "மாமா.....பெரியவா தன்னோட லீலையை ஆரம்பிச்சுட்டார்! இன்னிக்கி காலேலதான் பெரியவா கனவுல வந்து நவராத்ரி கொலு வெக்கச் சொல்லிட்டு, ரமணியை ஒடனே அவர்கிட்ட அனுப்பச் சொன்னா.....பணத்துக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சேன். பாருங்கோ! ஒங்க மூலமா, அதுக்கும் வழி பண்ணிட்டார்!...எனக்கு, பெரியவா எங்க தங்கியிருக்கான்னு கொஞ்சம் விஜாரிச்சு சொல்றேளா?...."

ஶர்மா மாடியை நோக்கி.."வேம்பு! சித்த கீழ எறங்கி வாப்பா....." என்றதும் "இதோ வரேன் சித்தப்பா!..." என்றபடி ஒருவர் அங்கே ஆஜரானார்.

"அம்மா....இவன் என்னோட அண்ணா பிள்ளை! ரொம்ப வர்ஷமா, பெரியவாகிட்டயே இருக்கான். மடத்லேயே தங்கிண்டு பெரியவாளுக்கு ஸுஸ்ரூஷை பண்ணிண்டு இருக்கான். என்னிக்காவுது இப்டீ.....ஊர் பக்கம் வருவான். நேத்திக்கித்தான் வந்தான். இன்னிக்கி ஸாயங்காலம் அஞ்சுமணி ட்ரெயின்ல கெளம்பி, பெரியவா இருக்கற எடத்துக்குப் போறான். நீ வேணா...ரமணியை இவனோட அனுப்பி வை! பத்ரமா அழைச்சிண்டு போய் பெரியவாளை தர்ஶனம் பண்ணிவெச்சுட்டு, பத்ரமா திருப்பி அனுப்பி வெக்கச் சொல்றேன்"

இது, பெரியவாளின் அடுத்த அனுக்ரஹமா?!

" ரமணியை அனுப்பி வை! "என்றதோடு நிற்காமல், அதற்கான பணத்தை ஏற்பாடு பண்ணி, பந்தோபஸ்து பண்ணி, அழைத்துப் போக தகுந்த துணையையும் முன்னாடியே அனுப்பி வைத்து......என்னால் நம்பமுடியல்லையே என்று ஆனந்த கண்ணீர் விட்டால் தர்ம கர்த்தா மனைவி.

"அதான் பெரியவா!..." என்றார் வேம்பு சிரித்துக் கொண்டே!

பூனா பக்கத்தில் ஒரு சின்ன ஊர். அங்கே பெரியவாளுடைய முகாமுக்கு வேம்புவோடு போனான் ரமணி. நல்ல கூட்டம்! ஸ்நானத்தை முடித்துக் கொண்டு, அந்த 'க்யூ'வில் ரமணியை நிற்க வைத்துவிட்டு "இங்க பாரு ரமணி! இப்டியே கூட்டத்தோட போய்ண்டே இரு...ஒன்னோட டர்ன் வரும். பெரியவாகிட்ட, ஒன்னோட மனஸ்ல இருக்கற எல்லாத்தையும் கொட்டிடு! பயப்படாதே...எனக்கு உள்ள வேலையிருக்கு.....பெரியவாளை தர்ஶனம் பண்ணினதும், இங்கியே இரு. நா....வந்து ஒன்னை அழைச்சிண்டு போறேன். பயப்படாதே, என்ன?" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

சின்னப்பையனான ரமணிக்கோ அங்கிருந்த கூட்டத்தை கண்டதும், "இந்த 'க்யூ' எப்போ நகந்து, எப்போ நா...பெரியவாளைப் பாக்கறது!" என்ற மலைப்போடு, ஏதாவது இண்டு இடுக்கு வழியாக பெரியவாளைப் பார்க்க முடியுமா என்று முயற்சி பண்ணினான். ம்ஹூம்! இவன் குனிந்து, நிமிர்ந்து, குதித்ததுதான் மிச்சம்!

"சரி ....வேம்பு மாமா இங்கியே இருக்கச் சொல்லியிருக்கா. கட்டாயம் பெரியவாளை பாப்பேன்" என்று "ஹர ஹர ஶங்கர, ஜய ஜய ஶங்கர" என்று கண்களை மூடியபடி சொல்லிக் கொண்டிருந்தான். யாரோ அவனை லேஸாக தட்டவே கண்களைத் திறந்தான்.....

"நீ தானே ரமணி? வா....எங்கூட ! பெரியவா ஒன்னைக் கூப்பட்றா !....." முழித்தான்!

"இந்த அலைமோதற கூட்டத்ல, பெரியவா என்னை மட்டும் கூப்ட்டாரா?.." ரமணிக்கு இது "மூணாவது ஆனந்த அதிர்ச்சி "

"என்னடா முழிக்கிறே ? வேம்பு மாதிரி நானும் பெரியவாகிட்ட கைங்கர்யம் பண்றேன். பெரியவா சொல்லாம, நானா வந்து கூப்டுவேனா? வா....." என்று சொல்லி, அவனுடைய கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு, கூட்டத்தை விலக்கிக்கொண்டு, அவனை பெரியவா முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார், அந்த பாரிஷதர்.

ஒரு க்ஷணம்! குழந்தை த்ருவனுக்கு முன்னால் ஸாக்ஷாத் மஹாவிஷ்ணு ஶங்கு சக்ரதாரியாக நின்றபோது அவன் என்ன ஒரு ஸ்திதியில் இருந்தானோ, கிட்டத்தட்ட ரமணியும் பெரியவாளை அவ்வளவு அருகில் தர்ஶனம் பண்ணியதும், அப்படியொரு அநிர்வசநீயமான நிலைக்குத் தள்ளப்பட்டான்.

பெரிய கூட்டத்தில் அம்மாவின் கையைவிட்டு விட்டு, தொலைந்து போன குழந்தை, கதறி அழுது, மறுபடியும் தன் அம்மாவைப் பார்த்ததும், முதலில் சிரிக்காது, ஸந்தோஷப்படாது. மேலும் பலமாக அழும் ! அம்மா, அதைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு, கட்டிக்கொண்டு, தட்டிக் கொடுத்து ஸமாதானம் பண்ணினாலும், அதன் அழுகை ஓய நேரமெடுக்கும். இப்போது ரமணி த்ருவனாகவும், கூட்டத்தில் தொலைந்து போன குழந்தை போலவும், இரண்டும் கலந்த மனநிலையில், பெரியவாளைப் பார்த்ததும், "பெரியவா!......ஓ!....என்னோட பெரியவா!" என்று வாய்விட்டு அலறிக்கொண்டு, ஸாஷ்டாங்கமாக அவர் முன் விழுந்து விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தான்.....

"ரமணி!....அழாதேப்பா...எந்திரு. ஒனக்கு என்னடா கொறை? என்னடா வேணும்?..." தாயின் குரலைக் கேட்டதும் அழுகை ஜாஸ்தியாகி, திக்கித் திக்கி எல்லாவற்றையும் சொன்னான்.

"பெரியவா..எங்கப்பா தர்மகர்த்தா....அம்பாள்கிட்ட ரொம்ப பக்தியா இருப்பார். திடீர்னு செத்துப் போய்ட்டார்.....என்னோட நாலு அண்ணாக்களையும் அம்மா கஷ்டப்பட்டு படிக்க வெச்சாலும், எங்களை விட்டுட்டு அவாவா பிச்சிண்டு போய்ட்டா பெரியவா.....மூணு அக்காக்களும் கல்யாணம் ஆய்ட்டாலும், சீர், செனத்தி, ப்ரஸவம்ன்னு பிச்சு எடுக்கறா பெரியவா.....பாவம் அம்மா! எங்க போவா பணத்துக்கு? பத்தாததுக்கு பழைய கடனே 80,000 இருக்கு! எங்காத்தை வித்து கடனை அடைக்கலாம்-னா, கஷ்டத்ல விக்கறோம்-ன்னு தெரிஞ்சுண்டு, அடிமாட்டு வெலையா 10,000 த்துக்கு விலை பேசறா! நா.....படிப்பை நிறுத்திட்டு மளிகைக் கடேல வேலை பாக்கறேன்.....அம்மாவை என்னால ஸந்தோஷமா வெச்சுக்க முடியலியேன்னு இருக்கு பெரியவா......"

அத்தனை வர்ஷங்கள் குழந்தையிலிருந்தே பட்ட கஷ்டத்தை, கொட்டித் தீர்த்து கதறிவிட்டான்! பொங்கும் பரிவோடு அவனைப் பார்த்த பெரியவா.....

"அழாதே......கண்ணைத் தொடச்சுக்கோ! நா.....சொல்றதக் கேளு.....நாலாவது "ஆனந்த அதிர்ச்சி "........

".....இப்போ ஒங்காத்ல நீங்க கொலு வெக்கறதில்ல ; நவராத்ரி பூஜையும் பண்றதில்ல...அப்டித்தானே?"
"அம்மாவுக்கு கனவுல வந்து சொன்னதை 'ஸத்யம்'-னு நிரூபிச்சுட்டாரே!" அதிர்ந்து போனான் ரமணி.

"ஆமா.......பெரியவா. அப்பா போனதுக்கப்றம் அம்மா எல்லாத்தையும் நிறுத்திட்டா! வஸதியும் இல்ல....."

"கொழந்தே!....ஒங்கப்பா பண்ணின மாதிரி தடபுடலா ஊரைக்கூட்டி, அண்டா அண்டாவா சுண்டலும், ஸொஜ்ஜியும் பண்ணி விநியோகம் பண்ண வேணாம். அழகா, சின்னதா கொலு வெச்சு, மனஸார ஒம்போது நாளும் அம்பாளுக்கு பூஜை பண்ணினாலே போறும்! சுண்டல் பண்ணனும்னு கூட அவஸ்யமில்ல...." என்று சொல்லிக்கொண்டே தன் முன்னால் மூங்கில் தட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு பாக்கெட் கல்கண்டையும், பேரீச்சம் பழத்தையும் தொட்டுவிட்டு, பாரிஷதரை விட்டு ரமணியிடம் குடுக்கச் சொன்னார்.

"ரமணி.....இது ரெண்டையும் அம்மாகிட்ட குடுத்து, நவராத்ரிக்கு அம்பாளுக்கு நைவேத்யம் பண்ணச் சொல்லு. நாளன்னிக்கி நவராத்ரி ஆரம்பிக்கறதே! நீ...இன்னிக்கி ஸாயங்காலம் பொறப்டாத்தான், நாளக்கி ஸாயங்காலம் ஊர் போய்ச் சேருவே! மறுநா...காலம்பர கொலு வெக்கறதுக்கு தோதா இருக்கும்..." என்று சொல்லிவிட்டு, பாரிஷதரிடம் ஏதோ சொன்னார். அவரும் ரமணியிடம்,

"ரமணி....பெரியவாளை நமஸ்காரம் பண்ணிக்கோ! இந்தா இந்த கல்கண்டு, பேரீச்சம்பழத்தை எடுத்துக்கோ!..." என்றதும், சின்னப் பையன்தானே! அதே ஜோரில் பெரியவாளிடம்,

"என்ன பெரியவா இது! ஒங்கள பாக்கணும்ன்னு எவ்ளோவ் ஆசையோட வந்தேன்? நீங்க என்னடான்னா....இன்னிக்கே கெளம்பிப் போயி, ஆத்துல கொலு வெக்கச் சொல்றேளே ! இதுக்குத்தானா என்னை இவ்ளோ தூரம் வரவழைச்சேள்?..." அழுகையும், ஏமாற்றமும் கலந்து லேஸாக ஒரு பாந்தவ்யமான கோபத்தின் ரேக்குகளை அதன் மேல் பரப்பி, கண்கலங்க கேட்டான்.

அவனைப் பார்த்து லேஸாக புன்னகைத்துவிட்டு, பாரிஷதரிடம் அவனை அழைத்துக் கொண்டு போகச் சொன்னார். ப்ரஸாதங்களை எடுத்துக் கொண்டு, அழுகையோடேயே வேம்பு ஐயரிடம் சென்றான். நடந்ததையெல்லாம் கேள்விப்பட்டதும் வேம்பு, ரமணியிடம்

"கொழந்தே ரமணி! பெரியவாகிட்ட இப்டியா கேக்கறது? 'இதுக்குத்தானா என்னை இவ்ளோ தூரம் வரச் சொன்னேள்?'-ன்னு கேட்டியாமே! பெரியவா சொன்னதோட அர்த்தங்களை போகப் போக நீயே புரிஞ்சுப்ப.....செரி செரி ....ஸீக்ரம் ஸாப்ட்டுட்டு கெளம்பு....பாரு! பெரியவா ஒனக்கு ரெண்டு ஜோடி புது வேஷ்டி ஆஸிர்வாதம் பண்ணிக் குடுத்திருக்கா! "

பெரியவாளுடைய அன்பை, வேம்பு ஐயர் சொல்லச் சொல்ல, இப்பேர்ப்பட்ட பெரியவாளுடன் இருக்க முடியாமல், ஊருக்குப் போகணுமே! என்று அழுது கொண்டே ஸாப்பிட்டுவிட்டு கிளம்பியவனிடம்

"பெரியவா குடுத்த கல்கண்டு பேரீச்சம்பழம், வேஷ்டி எல்லாம் இந்தப் பையில வெச்சிருக்கேன். இந்தா....இதைக் கை செலவுக்கு வெச்சுக்கோ! [ஒரு கவரில் சில நூறு ரூபாய் நோட்டுக்களை போட்டுக் குடுத்தார்] ரயில்ல ஒன்னை ஏத்திவிட நானே வரேன். ரொம்ப பாக்யஸாலிடா நீ! பெரியவாளோட முழூ ஆஸீர்வாதத்தையும் அப்டியே அள்ளிண்டுட்டே! இனிமே ஒனக்கு ஒரு கொறையும் வராது. ஒன்னோட ரயில்ல வர்றவர் என்னோட ஸொந்தக்காரர்தான்.... பெரியவா ஒனக்கு எப்டி பந்தோபஸ்து பண்ணி அனுப்பறார் பாரு! ஒன்னை ஒங்காத்துல அவர் கொண்டு விட்டுடுவார். பெரியவா சொன்னபடி, ஒடன்னே அம்மாவை கொலு வெக்கச் சொல்லிடு...."

பத்ரமாக ஊர் வந்து சேர்ந்தான். போன ஜோரில் திரும்ப வந்த குழந்தையைக் கண்டதும் அம்மாவுக்கு ஒரே பதைபதைப்பு!

"என்னடா ஆச்சு? பெரியவாளைப் பாத்தியா? என்ன சொன்னார்?....." இப்படியாக ஒரே கேள்வி மயம்!

"அம்மா...அம்மா! பயங்கரக் கூட்டம்! அத்தனை கூட்டத்லயும் என்னை அழைச்சிண்டு வரச் சொல்லி, நன்னா கிட்டக்க தர்ஶனம் பண்ணினேன். நம்மளோட கஷ்டம் எல்லாத்தையும் அவர்கிட்ட கொட்டித் தீத்துட்டேன்! பெரியவாளோடேயே இருந்துட மாட்டேனான்னு இருந்துது...ஆனா, ஆஸ்சர்யம் பாரேன்! ஒனக்கு வந்த கனவு நெஜந்தாம்மா ! பெரியவாளே "நீ ஒடனே ஊருக்கு போயி, அம்மாகிட்ட நா சொன்னேன்னு, கொலு வெக்கச் சொல்லு ! ஒங்கப்பா இருந்தப்போ பண்ணின மாதிரி, பெருஸ்ஸா ஊரைக் கூட்டி தடபுடல் பண்ணாம, ஆத்துமட்டோட சின்னதா, அழகா பொம்மைகளை வெச்சு, சுண்டல் கூட வேணாம்...இந்த கல்கண்டு, பேரீச்சம்பழத்த தெனோமும் கொஞ்சமா அம்பாளுக்கு நைவேத்யம் பண்ணினாப் போறுன்னுட்டார்'-ம்மா!.."

"பெரியவா சொல்லிட்டான்னா வேற என்ன வேணும்? ஒடனே பரண் மேல வெச்சிருக்கே! அந்த கொலுபொம்மைப் பொட்டியை கீழ எறக்கு....அப்டியே அந்த சின்ன கொலுப்படியையும் எறக்கு... வேற என்னடா சொன்னா? நம்ம கஷ்டத்துக்கு எதாவுது விடிவு பொறக்குன்னாரா ?...

"பெரியவாளை பாத்ததுமே ரொம்ப அழுதுட்டேம்மா! எனக்குத் தாங்கல....இத்தனை வர்ஷமா நீயும், நானும் மட்டுந்தான் வாய்விட்டு பேசிண்டோம்...நமக்கு சொல்லி அழறதுக்குக் கூட யாருமே இல்லியேம்மா! அவர் எல்லாத்தையும் கேட்டுண்டு, என்னை அழாதேப்பா-னார்ம்மா! கொலு வெச்சுட்டு ஒம்போது நாளும் அம்பாளுக்கு ஶ்ரத்தையா பூஜை பண்ணச் சொல்லுன்னு மட்டும் சொன்னார்......"

மனம் ஆனந்தத்தில் திளைக்க அம்மாவும், பிள்ளையும் பெரியவாளைப் பற்றி இரவெல்லாம் பேசினார்கள். பரணில் இருந்து பொம்மைகள் இறக்கப்பட்டு, பெரியவா சொன்ன மாதிரி, நவராத்ரி ஆரம்பித்ததும், வீட்டில் மாக்கோலம் போட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, விளக்கை ஏற்றி வைத்து, அம்பிகையை ஶ்ரத்தையாக பூஜித்தாள். கல்கண்டு, பேரீச்சம்பழம் நைவேத்யம். என்னவோ, அத்தனை வர்ஷங்கள் இல்லாத நிம்மதியும், லக்ஷ்மிகரமும் அவர்கள் வீட்டிலும், மனஸிலும் புகுந்தது.

"ரமணி, பெரியவா சொன்னதைப் பண்ண ஆரம்பிச்சதுமே நமக்குள்ள ஒரு அமைதி வந்துடுத்து பாத்தியா....!"

அம்மாவுக்கு கிடைத்த நிம்மதி ரமணிக்கு முழுமையாக கிடைக்கவில்லை. காரணம்?

"நேத்திக்கி பரண்ல ஏறி கொலுப் பொட்டியை எடுக்கறச்சே.....வேறே எதையோ பாத்தேனே......"
இதே சிந்தனைதான் நிம்மதிக்கு குறுக்கே வந்தது. கிடுகிடுவென்று ஏணியைப் போட்டு, பரணில் ஏறினான்....மூலையில் ஒரு நசுங்கிப் போன தகரப் பொட்டி!

"அம்மா! இங்க இன்னொரு பொட்டி இருக்கும்மா! அதையும் எறக்கறேன்....எதாவுது பொம்மை இருந்தா அதையும் கொலுல சேத்துக்கலாம்" அம்மா அதை வாங்கி கீழே வைத்து திறந்தால் அதில் பொம்மை இல்லை! ஆனால் ஏதோ பட்டுத் துணியில் சுத்தியிருந்தது! பயமும் பக்தியும் ஒருசேர, அந்தப் பட்டுத் துணியை மெல்ல பிரித்தால், உள்ளே நாலைந்து ஓலைச்சுவடிக் கட்டுகள்! மஹா அரதப்பழஸு என்பதைப் பார்த்தாலே புரிந்தது.

"என்னடா ரமணி இது! அப்பா, இத இவ்ளோ பத்ரமா பட்டுத் துணில உங்கப்பா சுத்தி வெச்சிருக்காருன்னா...இது ஏதோ ரொம்ப முக்யமான விஷயமா இருக்குமோ?"

"அம்மா! நா......இன்னிக்கி ஸாயங்கால டிரெயின்ல போயி, பெரியவாகிட்ட இந்த சுவடிகளை பட்டுத் துணியோட குடுத்துட்டு வந்துடறேன்..."

"ஓடு! பெரியவாளிடம்!..". சுவடிகளோடு மறுநாளே பெரியவா முன் ஆஜராகிவிட்டான்! முதல்முறை வந்தபோது இருந்த அழுகையும், குழப்பமும், பயமும், ஸந்தேஹமும் இப்போது ரமணியிடம் இல்லை! ரெண்டு நாளைக்கு முன்பிருந்த அதே பணமுடைதான் இப்போதும். பிறகு எப்படி இந்த அமைதி? தெளிவு? இது பெரியவா அவனுக்குத் தராமல் தந்த ஸர்வகால ஸஹவாஸ வாக்குறுதியால் வந்த த்ருட விஶ்வாஸம்! பெரியவா எல்லாருக்குமே இப்படியொரு பாக்யத்தை அருளிக் கொண்டிருக்கிறார். ரமணி பிடித்துக் கொண்டான்! நாம்...?

ரமணி போனபோது , தனியான ஒரு இடத்தில் பெரியவா அமர்ந்திருந்தார். சில பாரிஷதர்களைத் தவிர, ஜாஸ்தி கூட்டமே இல்லை! பெரியவா முன்னால் ஸுமார் 60 வயஸு மதிக்கத்தக்க ஒரு பெரியவர் பவ்யமாக கைகளைக் கட்டிக் கொண்டு பெரியவாளிடம் ஏதோ ஸீரியஸ்ஸான விஷயத்தை ப்ரஸ்தாபித்துக் கொண்டிருந்தார்.

"ஸரஸ்வதி மஹால்...அங்கெல்லாம் விஜாரிச்சியோ?.."பெரியவா அவரிடம் கேட்டார்.

"எல்லா எடமும் சல்லடை போட்டு சலிச்சாச்சு பெரியவா! இந்தியால இருக்கற famous ஜோஸ்யக்காரா, உபன்யாஸக்காரா, ஏன்?ஆர்க்கியாலஜிகாராளைக் கூட விடலை பெரியவா! எங்கியாவுது, யார் மூலமாவுது, எதாவுது, தெரியாதான்னு அலைஞ்சாச்சு பெரியவா.....அதை யாரு, எங்க ஒளிச்சு வெச்சிருக்காளா, இல்லே, அதோட அருமை தெரியாம எரிச்சோ, தூக்கியோ போட்டுட்டாளோன்னு ரொம்ப பதட்டமா இருக்கு....எங்கியாவுது அது இருக்கற சின்ன clue கெடச்சாக்கூட போறும்! எப்டியாவுது அவா கைல கால்ல விழுந்தாவுது கெஞ்சிக் கூத்தாடி வாங்கிண்டு வந்துடுவேன்.....எத்தன லக்ஷங்கள் ஆனாலும் பரவாயில்ல பெரியவா! ஆனா, அதோட மதிப்புத் தெரியாம, எங்கியோ ஒரு மூலேல அது மக்கிப் போய்டக்கூடாது......இதான் என்னோட ப்ரார்த்தனை!...."

வந்த பண்டிதர் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்கும்போதுதான், ரமணி உள்ளே எட்டிப் பார்த்தான். பெரியவா அவனைத் திரும்பிப் பார்த்து,

"வாடா! கொழந்தே! வா....வா" என்றதும், தகரடப்பாவும், கையுமாக குதித்துக் கொண்டு ரெண்டே எட்டில் பெரியவா முன்னால் நின்றான். தகரடப்பாவை ஒரு பக்கம் வைத்துவிட்டு, ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான்.

"பெரியவா! நீங்க சொன்னமாரியே அம்மா ஆத்துல கொலு வெச்சுட்டா! மேல பரண்ல கொலுப் பொட்டியோட, இந்த தகரடப்பாவும் இருந்துது பெரியவா! பிரிச்சா....."
என்று பேசிக்கொண்டே அவன் தக ரடப்பாவை திறந்ததும்,

"ம்ம்....நல்லதாச்சு போ! அந்த டப்பால இருக்கறதை அப்டியே பட்டுத்துணியோட அந்த மாமாகிட்ட குடுத்துடு!" இது ஐந்தாம் ஆனந்த அதிர்ச்சி !

"இதுக்குள்ள ஏதோ ஓலைச்சுவடி இருக்கு பெரியவா......நீங்க படிக்க வேணாமா?..." பட்டுத்துணியோடு அந்த ஓலைச்சுவடியை அங்கே நின்று கொண்டிருந்த அந்த பெரியவரிடம் குடுத்தான். பணிவோடு வாங்கிக் கொண்டார்.

"நீ...இத்தன வர்ஷமா இந்தியா முழுக்க தேடி அலஞ்சுண்டு இருந்தியே! இதான்.....அது! " பெரியவா அவரிடம் கேட்டதும் அவர் ஒ வென்று அழுதேவிட்டார்!

"ஓ ....பெரியவா! என் தெய்வமே! க்ருபா ஸாகரா! பெரியவாகிட்ட இதப்பத்தி பேசி பத்து நிமிஷம் கூட ஆகல......அதுக்குள்ள இப்டியொரு கருணா வர்ஷமா? இது கெடைக்கும்னு கனவுல கூட நா.....நெனைக்கல பெரியவா!....இந்தக் கொழந்தைக்கு நா....வயஸ்ல பெரியவங்கறதால நமஸ்காரம் பண்ண முடியாத நெலேல இருக்கேன்......"

என்று சொல்லிக்கொண்டே, தன் bag ஐ திறந்து உள்ளேயிருந்ததை அப்படியே எடுத்து பெரியவா முன் இருந்த மூங்கில் தட்டில் வைத்தார், கனகதாரா மாதிரி கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள்!

"பெரியவா.....மஹாப்ரபோ! இன்னதுதான் வெலை-ன்னு நிர்ணயிக்க முடியாத இந்த அபூர்வமான பொக்கிஷத்துக்கு, என்னால முடிஞ்ச சின்ன ஸமர்ப்பணம்.....அனுக்ரஹம் பண்ணி ஸ்வீகரிச்சுக்க சொல்லணும்...."

அழகாக சிரித்துக் கொண்டேபெரியவா அவரிடம் ." ஏது? ஊருக்கு போய்ச்சேர நடராஜா ஸர்வீஸ்தானா? காலணா வெச்சுக்காம, எல்லாத்தையும் பையன் கிட்டே குடுத்துட்டியே!..." என்று சொல்லிவிட்டு, ரமணியிடம்,

"இதோ பாருடா! நீ குடுத்த ஓலைச்சுவடிக்காக, இந்த மாமா ஒனக்கு ரெண்டுலக்ஷ ரூவா குடுத்திருக்கார்!.....இப்போ நீதான் இவருக்கு ஊருக்குத் திரும்பிப் போறதுக்கு, டிக்கெட் காஸு குடுக்கணும்! இந்தக் கட்டுலேர்ந்து ஒரு அம்பது ரூவா எடுத்து அந்த மாமாகிட்ட குடுத்துட்டு, அவரை நமஸ்காரம் பண்ணிக்கோ!......"

"ஹா......!! பெரியவா...! நா...ரெண்டுலக்ஷ ரூவா கொண்டுவந்திருக்கேன்னு எப்டி கரெக்டா சொல்லிட்டேள் பெரியவா?..."என்று அதிர்ந்து போனார் அந்த பண்டிதர்.
ரமணியும் "அதான! எப்டி பெரியவா? எண்ணிப்பாக்காம சொன்னேள்?..." பெரியவாளிடமிருந்து வெறும் புன்னகைதான் இதற்கு பதிலாக வந்தது!

"சரி சரி ஊருக்கு கெளம்பற வழியைப் பாரு! ஒங்கூட இந்த பணத்தை எடுத்துண்டு துணையாக வேம்பு மாமாவும் ஊருக்கு வருவார். எல்லாத்தையும் அவர் பாத்துப்பார். ரெண்டு பேரும் ஸாப்ட்டுட்டு கெளம்புங்கோ!..." அனுக்ரஹம் பண்ண மட்டுமே தெரிந்த கரங்களை உயர்த்தி ஆஸிர்வாதம் பண்ணி, ப்ரஸாதம் குடுத்தார்.

ஊருக்கு வந்த மறுநாளே, வேம்பு ஐயரிடம் பெரியவா குடுத்திருந்த instruction படி, 80,000 ரூபாய் கடன், "ப்பூ!..." என்று ஊதித் தள்ளப்பட்டது! நவராத்ரி ஆரம்பித்த நாலாம் நாளே, துர்க்கையாக அவர்களுடைய துக்கத்தைப் போக்கி, மஹாலக்ஷ்மியாக செல்வத்தையும் அருளிவிட்டாள் அம்பிகையான "ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர" ஸரஸ்வதி ! 
ஶர்மா தம்பதி நல்லபடி யாத்ரை முடித்துக் கொண்டு வந்ததும், ரமணியின் க்ருஹமும் "ஶங்கரா" என்ற நாமத்தைத் தாங்கியபடி புனர்ஜன்மாவை பெற்றது!

வாஸலிலேயே ஒரு பக்கத்தில் நல்ல தரமான மளிகைப் பொருட்களை, ஞாயமான விலையில் விற்க ஆரம்பித்தான் ரமணி! அவ்வீட்டில், எந்தக் கார்யமுமே, பெரியவா அனுக்ரஹம் என்ற பிள்ளையார் சுழியோடுதான் ஆரம்பிக்கும்! நல்ல வருமானம்! நல்ல பேர்! பின்னாளில், பெரியவா சொன்னபடியே, ஶர்மாவின் பெண்ணை ரமணி கல்யாணம் பண்ணிக்கொண்டான்.

கஷ்டமில்லாத, கடனில்லாத வாழ்க்கை, அடிக்கடி பெரியவா தர்ஶனம்! வேறு என்ன வேண்டும்? பெரியவா சொன்னபடி, தங்கள் வாழ்க்கையின் தேவைகளை எளிமையாக ஆக்கிக்கொண்டு, எதையும் அபரிமிதமாக சேர்த்து வைத்துக் கொள்ளாமல், பல பேருக்கு அன்னதானம் செய்யும் அளவு, ரமணியின் வாழ்க்கை என்னும் கப்பலுக்கு பெரியவாளே மாலுமியாகவும், கப்பலாகவும், ஸமுத்ரமாகவும் இருந்தார். இதைப் படித்துவிட்டு, "பெரியவா! பெரியவா!" என்று அரற்றி புலம்பி அழுவதைத் தவிர நம்மால் ஒண்ணுமே செய்ய முடியாது! - இந்த அனுபவத்தை பெற்றவரும் அதை என்னிடம் வருவதற்கு காரணமாக இருந்தவர்களும் இதை படிப்பவர்கள் உங்களுக்கும் பெரியவா ''அனுக்ரஹம்'' என்றுமே குறைவில்லாமல் பொங்கி வழிந்து கொண்டே இருக்க அவரையே பிரார்த்திக் கொண்டு இந்த ''பேசும் தெய்வம்'' தொடரை நிறைவு செய்கிறேன். PESUM DEIVAM WILL NEXT APPEAR AS A FREE BOOK FOR DISTRIBUTION TO CHILDREN FOR WHICH ALL INTERESTED CAN ASSIST. J.K.SIVAN 9840279080 jks...@gmail.com

DrGanesh Vocalist's photo.

Raghunathan Iyer

unread,
May 10, 2016, 3:58:53 AM5/10/16
to arunalaya


 
14 hrs · 
Ramanathan Srinivasan's photo.
 

தெய்வத்தின் குரல் (இரண்டாம் பாகம்)

காயத்ரீ மந்திர மகிமை

மூன்று தலைமுறையாக காயத்ரீயை விட்டு விட்டவன் பிராம்மணனாக மாட்டான். அப்பேர்ப்பட்டவர்கள் இருக்கிற தெரு அக்ரஹாரம் ஆகாது. அது குடியானவர் தெருதான். ஆனால் இன்னும் மூன்று தலைமுறை ஆகவில்லையாகையால் இன்னும் பிராம்மணர்கள் என்று பெயராவது சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

மூன்று தலைமுறை யக்ஞம் இல்லாவிட்டால் அவன் துர்ப்ராம்மணன்; கெட்டுப்போன பிராம்மணன். கெட்டாலும் 'பிராம்மணன்' என்ற பேராவது இருக்கிறது! மறுபடியும் பிராம்மணனாவதற்குப் பிராயச்சித்தம் சொல்லப் பட்டிருக்கிறது. ஆனால் காயத்ரீயை மூன்று தலைமுறையாக விட்டுவிட்டால் பிராம்மணத்வம் அடியோடு போய் விடுகிறது. அவன் மறுபடியும் பிராம்மணனாக மாட்டான். அவன் பிரம்ம‌பந்துதான்; அதாவது, பிராமணர்களை உறவுக்காரர்களாக உடையவன்தான்! அப்படியே க்ஷத்ரியன் காயத்ரீயை விட்டுவிட்டால் க்ஷத்ரிய பந்துவாகிறனான்; வைசியன் வைசிய பந்துவாகிறான்.

ஆகையால் அந்த நெருப்புப் பொறியை ஊதிப் பெரிசு பண்ண வேண்டும். சின்ன நெருப்புப்பொறி எதற்கும் உபயோகப்படாது. ஆனால் உபயோகப்படுமாறு பெரிசாக்கப்படுவதற்கு அதில் ஆதாரம் இருக்கிறது.

ஆகையால் ஞாயிற்றுக்கிழமையாவது பூணூல் உள்ளவர்கள் ஆயிரம் காயத்ரீ பண்ணவேண்டும். கண்ட இடத்தில் கண்ட ஆஹாரத்தை உண்ணலாகாது. இது வரைக்கும் அநாசாரம் செய்ததற்குப் பிராயசித்தம் பண்ணிக் கொள்ள வேண்டும். இனியாவது கண்ட ஆஹாரத்தை உண்ணாமல், மந்திரசக்தி இருப்பதற்கு தேஹத்தைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

'ஸஹஸ்ர பரமா தேவீ சத மத்யா தசாவரா' என்ற [தைத்திரீய அரண்யக வாக்குப்] படி ஆயிரம் ஆவிருத்தி ஜபிப்பது உத்தமம்; நூறு ஜபிப்பது மத்யமம்; அதம பக்ஷம் பத்து.

காலை ஸந்தி, மத்தியான வேளை, மாலை ஸந்தி என்ற ஒவ்வொரு காலத்திலும் பத்து காயத்ரீயாவது எத்தனை ஆபத்து காலத்திலும் ஜபம் பண்ணவேண்டும். இந்த மூன்று காலங்களும் சாந்தம் உண்டாகிற காலம். காலையில் பக்ஷி முதலிய பிராணிகளும் மனிதர்களும் எழுந்திருக்கும் காலம். அப்பொழுது மனது ஸாந்தியாக இருக்கும். ஸாயங்காலம் எல்லோரும் வேலையை முடிந்து ஓய்ந்திருக்கும் காலம். அதுவும் சாந்தமான காலம். மத்தியான காலத்தில் ஸூரியன் உச்சியில் இருக்கிறான். அப்பொழுது எல்லோரும் அயர்ந்திருக்கும் காலம். அப்பொழுதும் மனத்துக்கு சாந்தமான காலம். இந்த மூன்று காலங்களிலும் காயத்ரீ, ஸாவித்ரீ, ஸரஸ்வ‌தீ என்று மூன்று பிரகாரமாகத் தியானம் செய்ய வேண்டும். காலையில் பிரம்மா ரூபிணியாகவும், மத்தியான்னம் சிவ ரூபிணியாகவும், ஸாயங்காலம் விஷ்ணு ரூபிணியாகவும் தியானம் செய்யவேண்டும்.

காயத்ரீயில் ஸகல வேத மந்திர சக்தியும் அடங்கியிருக்கிறது. மற்ற எல்லா மந்திரங்களுக்கும் சக்தியைக் கொடுப்பது அதுதான். அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்குச் சக்தி இல்லை. ஹிப்நாடிஸம் என்பதனால் பல காரியங்களைச் செய்கிறார்கள். மோக்ஷத்துக்குப் போக உதவும் ஹிப்நாடிஸம் காயத்ரீ மந்திரம்! ஆசையை அடக்கி ஜன்மம் எடுத்ததன் பலனை அடையச் செய்கிற ஹிப்நாடிஸம் காயத்ரீ! லோக காரியங்களைக் குறைத்துக் கொண்டு இந்தப் பொறியை ஊதுவதை அதிகமாகச் செய்யவேண்டும். இதை ஒரு விரதமாக வைத்துக் கொள்ளவேண்டும். அநாசாரத்தில் போகாமல் தேகத்தை சுத்தமாக வைத்துக் கொண்டால்தான் இந்த ஒரு பொறியாவது அணையாமலிருக்கும்.

ஸந்தியாவந்தனத்தில் அர்க்கியமும் காயத்ரீயும் முக்கியமானவை. மற்றவைகளெல்லாம் அதற்கு அங்கமானவை. அசக்தர்களாயிருப்பவர்கள் அர்க்கியத்தைக் கொடுத்துவிட்டுப் பத்து காயத்ரீயாவது ஜபிக்க வேண்டும். 'அந்த இரண்டு தானே முக்கியம்? அவைகளை மட்டும் செய்துவிடலாம்' என்றால் வரவர அவைகளுக்கும் லோபம் வந்துவிடும். ஆபத்திலும் அசக்தியிலும் பத்து காயத்ரீ போதும் என்பதால் எப்போதும் இப்படிப் பத்தே பண்ணினால், அப்படிப் பண்ணுகிறவர்களுக்கு எப்போதும் ஆபத்தும் அசக்தியுமாகத் தான் இருக்கும் என்று ஒரு பண்டிதர் வேடிக்கையாகச் சொன்னார். ஆகையால் அங்கபுஷ்களத்தோடு எதுவும் குறைவின்றி செய்து வந்தால்தான் முக்கியமானது நன்றாக நிற்கும். ஆபத்துக் காலத்திலுங்கூட அவைகளைச் செய்து வரவேண்டும். காலம் தப்பாமல் செய்யவேண்டும். பாரத யுத்தத்தின் போது ஜலம் அகப்படாதபோதுகூட தூளியை [புழுதியை] வைத்துக்கொண்டு காலம் தவறாமல் ஸேனாவீரர்கள் அர்க்கியம் கொடுத்தார்களென்று சொல்லப்பட்டிருக்கிறது.

அஸ்தமன காலத்திலும், உதயகாலத்துக்கு முன்பும், உச்சிக்காலத்திலும் அர்க்கியம் கொடுக்க வேண்டும். இடைக்காட்டுச் சித்தர் என்று ஒருவர் இருந்தார். ஸித்தர்கள் விநோதமான காரியங்கள் பண்ணுவார்கள்; புதிராகப் பேசுவார்கள். இடைக்காட்டுச் சித்தர் ஆடு மேய்த்தார்! அவர், "காணாமல் கோணாமற் கண்டு கொடு! ஆடுகாண் போகுது பார் போகுது பார்!" என்று சொல்லி இருக்கிறார். "காணாமல்" என்றால் ஸூரியனைக் காண்பதற்கு முன்பு என்பது அர்த்தம். அதாவது ஸூரியோதையத்திற்கு முன் காலை அர்க்கியம் கொடுக்க வேண்டும். "கோணாமல்" என்பதற்கு ஸூரியன் தலைக்கு நேரே இருக்கும் பொழுது என்பது அர்த்தம். அதாவது ஸூரியன் மேற்காக சாய்வதற்கு முன் உச்சிக்காலத்தில் மாத்யான்னிக அர்க்கியம் கொடுக்க வேண்டும். "கண்டு" என்பதற்கு ஸூரியன் இருக்கும் போது என்று அர்த்தம். ஸூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பு மலை வாயிலில் இருக்கும்பொழுதே ஸாயங்கால அர்க்கியம் கொடுக்க வேண்டும். இந்த விஷயங்களைத்தான் அந்த ஸித்தர் லேசாகச் சொல்லியிருக்கிறார். "ஆடு" என்றால் "நீராடு!" அதாவது "கங்கையில் ஸ்நானம் பண்ணு" என்பது அர்த்தம். "காண்" என்றால் "ஸேது தரிசனம் பண்ணு" என்பது அர்த்தம். "போகுது பார்" என்றால் த்ரிகால ஸந்தியாவந்தனத்தாலும் கங்கா ஸ்நானத்தாலும் ஸேது தரிசனத்தாலும் நம் பாபம் தொலைந்து போகிறதைப் பார்!" என்று அர்த்தம். காசிக்குப் போய் கங்கையை எடுத்துக் கொண்டு, ஸேதுவான ராமேச்வரத்துக்குப் போய் ராமநாத ஸ்வாமிக்கு கங்காபிஷேகம் பண்ணும் ஸம்பிரதாயத்தைத்தான் சொல்லியிருக்கிறார்.

காயத்ரீயை ஸரியாகப் பண்ணினால்தான் மற்ற வேத மந்திரங்களிலும் ஸித்தி உண்டாகும். அர்க்யத்தையும் காயத்ரீயையும் தவறாமல் செய்து கொண்டு வரவேண்டும். ஜன்மத்தில் ஒரு தரமாவது கங்காஸ்நானமும் ஸேது தரிசனமும் பண்ணவேண்டும்.

ஒருவனுக்கு ரொம்பவும் ஜ்வரம் வந்தால், கூட இருக்கிறவர்கள் அவனுக்காக ஸந்தியா வந்தனம் பண்ணித் தீர்த்தத்தை ஜ்வரம் வந்தவன் வாயில் விடவேண்டும். இப்பொழுது நமக்கு நித்தியப்படி ஜ்வரம் வந்தது போலத்தான் இருக்கிறது !

ஜ்வரம் வந்தால் அதற்கு மருந்து அவசியம்; அதுபோல ஆத்மாவுக்கு வந்திருக்கிற பந்தம் என்ற ஜ்வரம் போக காயத்ரீ மருந்து அவசியமானது. அதை எந்த காலத்திலும் விடக் கூடாது. மருந்தைவிட இதுதான் முக்கியமானது. ஒரு நாளாவது ஸந்தியாவந்தனத்தை விட்டு விட்டோமென்று இருக்கக் கூடாது.

காயத்ரீ ஜபம் பண்ணுவது எல்லாராலும் ஆகிற காரியந்தான். இதிலே ஜலத்தைத் தவிர வேறு திரவியம் வேண்டாம். சரீர பிரயாசையும் இல்லை. லகுவாகப் பரம சிரேயஸைத் தரும் ஸாதனம். ஆயுள் இருக்கிறவரைக்கும் ஸந்தியாவந்தனத்துக்கு லோபம் வராமல் பண்ணவேண்டும்.

காயத்ரீயை மாத்ரு ரூபமாக (தாய்வடிவமாக) உபாஸிக்க வேண்டும். பகவான் பலவிதமான ரூபங்களில் வந்து பக்தர்களுக்குக் கிருபை செய்கிறார். நம்மிடம் எல்லாரையும்விட அன்பாக இருப்பது மாதாதான். தாயாரிடம் எதை வேண்டுமானாலும் பயமில்லாமல் சொல்லலாம். பகவான் எல்லா ரூபமாக இருந்தாலும் மாதா ரூபமாக வந்தால் ரொம்பவும் ஹிதமாக இருக்கிறது. காயத்ரீயை அப்படிப்பட்ட மாதாவென்று வேதம் சொல்லுகிறது.

புருஷனுக்குத்தான் காயத்ரீ இருக்கிறது. ஸ்திரீக்கு எந்த காயத்ரீ இருக்கிறதென்றால் புருஷன் காயத்ரீயை அநுஷ்டித்தாலே ஸ்திரீக்கு க்ஷேமம் உண்டாகும். இதேபோல் காயத்ரீ ஜபத்துக்கு அதிகாரம் பெற்ற மூன்று வர்ணத்தாரும் அதை விடாமல் செய்வதாலேயே காயத்ரீயில் உரிமையில்லாத மற்ற ஜாதிகளுக்கும் க்ஷேமமுண்டாகும். தான் ஒன்றைச் செய்யாமலிருப்பதால் தனக்கு மட்டுமே நஷ்டம் என்றால் விட்டுவிடலாம். அதனால் பிறத்தியானுக்கு நஷ்டம் என்றால் அப்படி விட்டுவிட முடியாது. காயத்ரீக்கு அதிகாரமில்லாத ஸ்த்ரீ, சூத்ரர்களுக்கும் trustee [தர்மகர்த்தா] மாதிரி இந்த மந்திர சக்தியைப் பெற்றுத்தர வேண்டியவர்கள் இந்தக் கடமையைப் பண்ணாவிட்டால் அது பரிஹாரமே இல்லாத தோஷமாகும்.

பலவித மந்திரங்கள் இருக்கின்றன. அவைகளை ஜபம் பண்ணுவதற்கு முன்பு இன்ன இன்ன பலனை உத்தேசித்து பண்ணுகிறேன் என்று சொல்லுகிறோம். காயத்ரீ மந்திரத்தினுடைய பலன் சித்த சுத்திதான்; மன மாசு அகலுவது தான். மற்ற மந்திரங்களால் உண்டாகிற பலன்களெல்லாம் கடைசியில் சித்த சுத்தி உண்டாக்கத்தான் இருக்கின்றன. அதுவே காயத்ரிக்கு நேரான பலன்; ஒரே பலன்.

இந்தக் காலத்தில் காலையிலும் ஸாயங்காலத்திலும் எல்லாரும் காலந்தவறாமல் ஸந்தியாவந்தனம் செய்யலாம். சீக்கிரம் ஆபீஸுக்குப் போகவேண்டியவர்கள் மத்யான்ன வேளையில் வீட்டிலிருக்க முடியாததால், பிராதஃ காலம் ஆனபின், அதாவது ஸூர்ய உதயத்திலிருந்து ஆறு நாழிகை (2மணி 24 நிமுஷம்) கழித்து வரும் ஸங்கவ காலத்தில், அதாவது 8.30 மணி சுமாருக்கு மாத்தியான்ஹிக அர்க்கியத்தை கொடுத்து ஜபிக்க வேண்டும்.

அதாவது நம்மால் அடியோடு முடியாமற் போனாலன்றி திரிகால ஸந்தியோபாஸனை இல்லாமல் இருக்கவே கூடாது. அடியோடு முடியாமல் ஜ்வரம் வந்தால் மற்றவர்களிடம் "கஞ்சி கொடு, தீர்த்தம் கொடு" என்று சொல்லுவதைப் போல், "எனக்காக ஸந்தியாவந்தனம் பண்ணு" என்று சொல்ல வேண்டும்.

மந்திர சக்தியானது அணையாமல் விருத்தியாகக் கிருபை செய்ய வேண்டுமென்று பகவானை எல்லாரும் பிரார்திப்போமாக!

-- 
 

Raghunathan Iyer

unread,
May 13, 2016, 2:29:40 AM5/13/16
to arunalaya, Venkatasubramanian R.


 
Sumathy Rajan's photo.
  •   
     

    லலிதா சகஸ்ரநாமம் ஏன் படிக்கவேண்டும்?

    லலிதா மகா திரிபுரசுந்தரி சிவனோடு ஒன்றிணைந்த பிரிக்கமுடியாத ஆதிப் பரம்பொருள். சிவசக்தி ஐக்கியம் என்று பெயர். இதற்கு மேல் தெய்வம் ஏதுமில்லை.

    "துவளேன் இனி ஒரு தெய்வம் உண்டாக மெய்த் தொண்டு செய்தே"என்கிறார் அபிராமி பட்டர். சகஸ்ரநாமம் என்பது அன்னையின் ஆயிரம் பெயர்கள்.

    லலிதா சகஸ்ர நாமத்தைப் பாராயணம் செய்யும்போது லலிதாம்பிகையின் பெருமைகள் மட்டுமல்ல, ஆன்மிகம் பற்றிய விழிப்புணர்வு மந்திரங்கள் தந்திரங்கள் பிரபஞ்சத்தின் படைப்பு ரகசியங்கள் என்று முழுமையான ஞானம் உருவாகும். சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர்

    அகத்திய மகரிஷிக்கு லலிதா சகஸ்ரநாமத்தின் 
    பெருமைகளை பின்வருமாறு கூறுகிறார்.

    தேவியின் ஆயிரம் நாமங்களை உமக்குக் கூறினேன்.

    இவை ரகசியங்களுள் ரகசியமானது. இதைப் போன்ற துதி ஒன்றுமில்லை. இது நோய்களைப்போக்கும்.

    செல்வத்தை அளிக்கும். அபமிருத்யுவைப் போக்கும். (அப மிருத்யு என்றால் 
    அகால மரணம்) நீண்ட ஆயுள் தரும்.

    பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு பிள்ளைச் செல்வம் தரும்.

    கங்கை முதலியப புண்ணிய நதிகளில் முறைப்படி 
    பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம் செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.

    இது பாவத்தை நீக்கும். பாவத்தை நீக்க இதனைவிட்டு வேறு உபாயம் தேடுபவன் பயனில்லாதவன் .

    பௌர்ணமியன்று சந்திர பிம்பத்தில் தேவியை தியானம் செய்து வழிபட்டு இதனைப் படிக்க நோய்கள் நீங்கும்.

    பூத பிசாச உபாதைகள் விலகும். இதனைப் பாராயணம் செய்யும் பக்தனின் நாவில் சரஸ்வதி தேவி நர்த்தனம் ஆடுவாள்.

    எதிரிகளை பேசமுடியாது வாக்ஸ்தம்பம் செய்து விடுவாள்.

    அரசனே எதிர்த்தாலும் அன்னையின் பக்தனிடம் தோல்வி அடைவான்.

    இதனைப் பாராயணம் செய்பவன் பார்வை பட்டாலே தோஷங்கள் விலகிவிடும்.

    ஸ்ரீ வித்யை போன்று மந்திரமோ, ஸ்ரீலலிதாம்பிகையைப் போன்று தேவதையோ, லலிதா சகஸ்ரநாமம் போன்று ஸ்தோத்திரமோ உலகில் இல்லை.

    பூர்வ ஜென்ம புண்யத்தால் மட்டுமே இதனைப் பாராயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும்.

    கடைசிப் பிறவியாக இருந்தால் மட்டுமே ஸ்ரீவித்யா ஜெபமும், சகஸ்ரநாம பாராயணமும் செய்யமுடியும்.

    தேவியின் அருளின்றி யாரும் இதனைப்பெறமுடியாது" என்றெல்லாம் பலவாறாக பலச்ருதி என்ற பகுதியில் ஹயக்ரீவர் அகத்தியருக்கு உபதேசிக்கிறார்.

    லலிதா சகஸ்ரநாமத்தில் இன்னொரு சிறப்பு இதைப் பாராயணம் செய்யும்போது நமது சமயத்தின்அனைத்து கடவுளையும் வழிபட்ட புண்ணியம் நமக்கு சேரும்.

    எனவே லலிதா சகஸ்ரநாமத்தின் பொருள் அறிந்து பாராயணம் செய்ய முயலுங்கள், எதை அடைய விரும்புகிறீர்களோ அது தானாய் வந்து சேரும்.

Raghunathan Iyer

unread,
May 17, 2016, 4:28:43 AM5/17/16
to arunalaya
Amurthi Navaneetham's photo.
‎ 

அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும் கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து உட்கார்ந்துக்கணும். மடியில ஒரு ஒயிட் பேப்பர் வச்சுக்கணும். மாமியாராலபிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ண மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம். என் மாமியார் ரொம்ப நல்லவங்க. நான் அவங்களைப் புரிஞ்சுக்கிட்டேன். என் மேல அவங்களுக்கு ரொம்ப பாசம்னு திரும்பத் திரும்பச் சொல்லணும். அதேபோல பணப்பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ணை மூடிக்கிட்டு, எனக்கு நிறைய பணம் கிடைக்கும்... என்னோட கஷ்டம் எல்லாம் தீர்ந்திடும்’னு சொல்லணும். உடம்புல ஏதாவது பிரச்னைன்னா, எனக்கு எந்த நோயும் இல்லை... உடம்புல இருக்கிற பிரச்னை எல்லாம் தீர்ந்துடுச்சு... நான் ஆரோக்கியமா இருக்கேன்னு சொல்லணும். மனசுக்குள்ளயும் சொல்லலாம்... வாய்விட்டு சத்தமாவும் சொல்லலாம். 10 நிமிஷம் சொன்னாப் போதும். முடிச்சதும் கையில வச்சிருந்த உப்பை மடியில வச்சிருக்கிற ஒயிட் பேப்பர்ல கொட்டி, சிந்தாம மடிச்சு ஓடுற தண்ணியில கலந்து விட்டுடணும். நீங்களும் செஞ்சு பாருங்க... பத்து நாளுக்குள்ள பலன் தெரியும் என்று நமக்கே மந்திரம் கற்றுத்
தருகிறார் ஷீலா.

இது என்ன வேடிக்கை?! கையில் இருக்கிற உப்பு எப்படி வேலை செய்யும்? இந்த உப்பு மந்திரத்தைக் கற்றுத் தந்த டாக்டர் ஜிதேந்திராவிடம் கேட்டோம்.
“இது ஒண்ணும் புதிசில்லை. காலங்காலமா நம்ம மக்கள் மத்தியில புழக்கத்தில இருக்கிற ஒரு விஷயம்தான். மந்திரிக்கும் போதும், திருஷ்டி சுத்தும்போதும் நம்ம மக்கள் கையில உப்பு வச்சு சுத்துவாங்க. சில கோயில்கள்ல உப்பு வாங்கிக் கொட்டுவாங்க. ‘பாவத்தைப் போக்குறோம்’னு சொல்லி கடல்ல குளிக்கிறது, கடல் தண்ணியை தலையில அள்ளித் தெளிக்கிறது, கடலோரத்துல ஈமக்கிரியைகள் செய்றது, கடல்ல கால் நனைக்கறதுன்னு சொல்றதுக்கெல்லாம் காரணம் என்ன? இதையெல்லாம் சர்வசாதாரணமா மூடநம்பிக்கைன்னு அறிவாளிகள் புறம் தள்ளிடுவாங்க.
உண்மையிலேயே அதுக்குள்ள அறிவியல் இருக்கு. அந்த அறிவியலை ora scienceனு சொல்வாங்க.

நெகட்டிவ் எனர்ஜி, பாசிட்டிவ் எனர்ஜி... இது ரெண்டும்தான் மனிதனோட குணநலன்களையும் வாழ்க்கையையும் தீர்மானிக்குது. உப்பு, நெகடிவ் எனர்ஜியை வெளியேத்துற சக்தி கொண்ட ஒரு பொருள். கைக்குள்ள உப்பை வச்சுக்கிட்டு பாசிட்டிவ்வா நினைத்தாலோ, பேசினாலோ உடம்புக்குள்ள இருக்கிற நெகட்டிவ் எனர்ஜி வெளியேறிடும். இது மாயமோ, மந்திரமோ இல்லை. முற்றிலும் அறிவியல். உடம்புல நெகட்டிவ் எனர்ஜி வெளியாகி பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்போது, அதுவே வைபரேஷனா வெளியில வந்து எதிராளிக்கிட்ட போகும். எதிராளியோட அணுகுமுறையும் பாசிட்டிவ்வா மாறும். ஒரு விஷயத்தை திரும்ப திரும்ப சொல்லும்போது நாம் அதுவாவே மாறிடுவோம். இதுவும் அறிவியல்தான். எப்பவும் திட்டிக்கிட்டே இருக்கிற மாமியார், மருமகளை மரியாதையா நடத்துறதும், எப்பவோ விட்டுட்டுப் போன அம்மா மகளைத் தேடி வந்ததும், விபத்துல இருந்தவங்க குணமாகுறதும் இப்படியான பாசிட்டிவ் எனர்ஜியோட விளைவுதான். இன்னைக்கும் கிராமங்கள்ல உப்பை மட்டும் ஓசி வாங்கக்கூடாதுன்னு சொல்வாங்க. அப்படியே வாங்கினாலும் கையால வாங்க மாட்டாங்க. அப்படி வாங்கினா கொடுக்கிறவங்களோட நெகட்டிவ் எனர்ஜி வாங்குறவங்களுக்கு வந்திடும். இந்த உண்மை கிராமத்து மக்களுக்குத் தெரிஞ்சிருக்கு... என்கிறார் டாக்டர் ஜிதேந்திரா.

 

Raghunathan Iyer

unread,
May 20, 2016, 8:29:00 AM5/20/16
to arunalaya


நமக்குள் நடக்கும் 18 அதிசியங்கள்!
தெரிந்து கொள்ள வேண்டியவை

* இருமலின் வேகம் மணிக்கு 100 கிலோ மீட்டர்.

* ஒரு சிசுவின் கையில் ரேகைகள் 3-வது மாதத்திலிருந்து உருவாகின்றன.

* கை, கால்கள் நகங்களின் அடிப்பகுதியிலிருந்து அதன் மேல்பாகம் வரை வளர்வதற்கு 6 மாதங்கள் ஆகின்றன. கால் நகங்களை விட கைவிரல் நகங்கள் வேகமாக வளர்கின்றன.

* ஒரு மனிதனுக்கு சரியாக தினமும் 40 முதல் 100 தலைமுடிகள் உதிர்ந்து விடுகின்றன.

* கம்யூப்ட்டரில் சில மணி நேரங்கள் பணிபுரிந்து விட்டு பார்வையை சில நொடிகள் வெள்ளை நிற காகிதத்தில் செலுத்தினால் அந்தக் காகிதம் இளஞ்சிவப்பு நிறமாகத் தெரியும்.

* ஆண்களின் உடல் பாகத்தில் மிகவும் வளரக்கூடிய முடி, தாடியில் வளரும் முடிதான். ஏனென்றால் ஒருவர் தனது வாழ்நாளில் தாடியை எடுக்காவிட்டால் அது 30 அடி நீளம் வரை வளர்ந்து விடும்.

* 60 வயதாகும் போது நாக்கின் சுவை மொட்டுகளின் பெரும் பகுதி அழிந்து போய்விடுகின்றன.

* மனித தாடை 80 கிலோ எடையை இழுத்து அசைக்கக் கூடியதாகும்.

* சிரிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துகிறது. 6 வயது வரை குழந்தைகள் ஒரு நாளைக்கு 300 தடவைகள் சிரிக்கின்றன. 18 வயதைக் கடந்தவர்கள் ஒரு நாளைக்கு 100 தடவை மட்டுமே சிரிக்கிறார்கள்.

* ஒரு மனிதனின் உடம்பில் 600-க்கும் அதிகமான தசைகள் இருக்கின்றன. இது உடல் எடையில் 40 சதவீதமாகும்.

* உலகில் மனிதர்களிடம் பொதுவாக காணப்படும் ரத்த குரூப் ஓ. அபூர்வமான ரத்த குரூப் ஏ-ஹெச். இந்த ரத்த குரூப் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் உலகில் மொத்தம் 10 பேரிடம் மட்டுமே இருப்பது அறியப்பட்டுள்ளது.

* மனிதனின் நரம்புகளை ஒட்டு மொத்தமாக நீளமாக்கினால் அது 45 மைல் நீளமாக இருக்கும்.

* மனிதனின் உடலில் ஒரு நிமிடத்திற்கு 300 கோடி அணுக்கள் செத்து மடிகின்றன.

* மனித மூளையில் 85 சதவீதம் தண்ணீர்தான் உள்ளது.

* ஒரு மனிதனின் தலையில் சராசரியாக ஒரு லட்சம் முடிகள் இருக்கும்.

* ஒரு மனிதன் தனது வாழ்நாளில் 16 ஆயிரம் காலன் தண்ணீர் குடிக்கிறான்.

நமக்குள் நடக்கும் 18 அதிசியங்கள்!

1. வளர்ந்த மனித உடலில் 600 தசைகள். நூற்றுக்கும் மேலான இணைப்புகள். ஒரு லட்சம் கிலோமீட்டர் நீளம் உள்ள இரத்தக் குழாய்கள் 13000 மில்லியன் உயிரணுக்களும் உள்ளன.

2. மனிதனுக்குள்ள 206 எலும்பு களில் பெரும்பாலானவை கைகளிலும் கால்களிலும் உள்ளன.

3. ஆண்களில் விந்துவை உண்டாக்கும் விரை (விந்தகம்) நாள் ஒன்றுக்கு 10 மில்லியன்வரை விந்து உயிரணுக்களை உற்பத்தி செய்யும். இவை அப்படியே உயிருடன் ஆறு மாத காலம் இருந்தால் மற்றொரு உலக ஜனத்தொகையை உருவாக்கக்கூடும்.

4. மனித இதயம் ஒரு இயல்பான வாழ்நாளில் 2000 மில்லியன் முறை துடிக்கும். இந்த கால கட்டத்தில் 500 மில்லியன் இரத்தத்தை பம்ப் செய்யும். மனிதன் தூங்கும்போது கூட இதயம் ஒரு மணி நேரத்தில் சுமார் 340 லிட்டர் இரத்தத்தை பம்ப் செய்யும். ஒரு நாளைக்கு 1 லட்சம் முறைதுடிக்கும்.

5. இளைஞனின் நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 70 லிருந்து 72 முறை. ஆனால் இளம் பெண்ணின் நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 78 லிருந்து 82 முறை இருக்கும்.

6. மனிதனின் சிறுநீரகத்தில் ஒரு மில்லியன் வடிகட்டிகள் இருக்கின்றன. அவை ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் இரத்தத்தை வடிகட்டுகின்றன. அந்த வடிப்பில் ஏற்பட்ட கழிச்சலை சிறுநீரகம் வெறியேற்றுகின்றன.

7. மனித உடலில் உள்ள இரத்தத்தை நிமிடத்திற்கு 4.5 லிட்டர் விகிதம் நுரையீரலில் சுத்தப்படுத்தும்.

8. மனித உடலில் சிவப்பணுக்களை எலும்புச் சோறு (எலும்பின் மச்சை) தயாரிக்கிறது. அந்த அணுக்கள் 100லிருந்து 120 நாட்கள் வாழ்கின்றன. மனித வாழ்வில் சுமார் அரை டண் சிகப்பணுக்கள் தயாராகும்.

9. ஒரு மனிதன் தன்னுடைய வாழ்நாளில் 50 டண் உணவை சாப்பிடுகிறான். 50 ஆயிரம் லிட்டர் திரவத்தை குடிக்கிறான்.

10. நாம் தினமும் கண் இமைகளை திறக்கவும் மூடவும் செய்கிறோம் அல்லவா? இந்த செயல் 6 வினாடிக்கு கொருமுறை நடக்கிறது. அதன்படி இந்த சிமிட்டலை நாம் நம்முடைய வாழ் நாளில் 250 மில்லியன் முறை (25 கோடிமுறை) செய்கிறோம்.

11. மனிதனுக்கு 15 வயது வரையில்தான் மூளை வளரும்.

12. சாதாரண மனிதனின் தலையில் 10 ஆயிரம் ரோமங்கள் உள்ளன.

13. ஒரு விஞ்ஞானி, மனிதனின் மரணத்திற்கு சில நொடிகளுக்கு முன்பு இருந்த எடையும் மரணமடைந்த உடனே இருந்த எடையும் ஒப்பிட்டு பார்த்து 21 கிராம் குறைவாக இருந்ததை அறிந்து அதன்மூலமாக ஜீவான்மாவின் எடை 21 கிராம் என்று நிரூபித்தார்.

14. நாம் ஒரு நிமிடத்திற்கு சுமார் 25 முறை கண் இமை களை மூடி திறக்கிறோம்.

15. ஒரு ஆரோக்கியமான மனிதன் ஒரு நாளில் (24 மணிகளில்) 23000 முறை மூச்சிழுப்பான்.

16. பெரும்பாலோர் இரவுத் தூக்கத்தில் 40 முறை அப்படியும் இப்படியும் புரளுவார்கள்.

17. மனித உடலில் உள்ள அனைத்து இரத்தக் குழாய்களை வரிசையாக இணைத்தால் மொத்தம் ஒரு லடசம் கி.மீ நீளத்திற்கு சேரும். அந்த நீளம் பூமத்திய ரேகையை நான்கு தடவை சுற்றிவரக்கூடும்.

18. மனிதன் மனமார சிரிக்கும் பொழுது 17 தசைகளும், கோபப்படும்பொழுது 43 தசைகளும் சுருக்கமடைகின்றன.

ஆதாரம் : வாழ்வியல் வலைத்தளம்


Raghunathan Iyer

unread,
May 23, 2016, 5:55:14 AM5/23/16
to arunalaya


S Rajesh Kumar's photo.
 
 

எம். எஸ். சுப்புலக்ஷ்மி

‘இசைப் பேராசரி’ என அனைவராலும் புகழப்பட்ட எம்.எஸ் சுப்புலக்ஷ்மி அவர்கள், ஒரு புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகியாவார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, குஜராத்தி போன்ற பலமொழிகளில் பாடியிருக்கிறார். இவர் ஒரு பாடகராக மட்டுமல்லாமல், நடிகையாகவும் தன்னுடைய முத்திரையைப் பதித்துள்ளார். இந்தியாவின் மிக உயரிய விருதுகளான பாரத ரத்னா, பத்ம பூஷன், பத்ம விபூஷன், மற்றும் பல விருதுகளைப் பெற்று ஒரு மாபெரும் கர்நாடக சங்கீத மேதையாக விளங்கிய எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.

பிறப்பு: செப்டம்பர் 16, 1916

இடம்: மதுரை, தமிழ்நாடு (இந்தியா)

பணி: கர்நாடக இசைப் பாடகி

இறப்பு: டிசம்பர் 11, 2004

நாட்டுரிமை: இந்தியா

பிறப்பு:

எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் நாள் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள மதுரை மாவட்டத்தில் சுப்பிரமணி அய்யருக்கும், சண்முகவடிவு அம்மாளுக்கும் மகளாக ஒரு இசை ஆர்வம் மிக்க குடும்பத்தில் பிறந்தார்.

இவருடைய பாட்டி வயலின் வாசிப்பவராகவும், தாய் சண்முகவடிவு வீணை மீட்டுவதிலும், பாடுவதிலும் புகழ்பெற்று விளங்கினார். இவருக்கு சக்திவேல் என்ற சகோதரரும், வடிவாம்பாள் என்ற சகோதரியும் இருந்தனர்.

ஆரம்ப வாழ்க்கை:

இசைப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்ததால், சிறுவயதிலிருந்தே சுப்புலக்ஷ்மி அவர்களுக்கு இசையில் அதிக ஆர்வம் இருந்தது. கர்நாடக இசையில் புகழ்பெற்று விளங்கிய “செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயரிடம்” கர்நாடக சங்கீதம் கற்கத் தொடங்கிய சுப்புலக்ஷ்மி அவர்கள், “பண்டிட் நாராயணராவ் வியாஸ்” என்பவரின்

கீழ் இந்துஸ்தானி இசையையும் கற்றார். பின்னர், சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கும் கற்கத் தொடங்கினார். தன்னுடைய தாயாருடன் பல கச்சேரிகளில் பங்குபெற்ற அவர், செம்மை வைத்தியநாத பாகவதர், காரைக்குடி சாம்பசிவா ஐயர், பாலக்காடு டி.எஸ். மணி ஐயர் போன்றவர்களின் இசை கச்சேரிகளுக்கும் தன் தாயாருடன் நேரில் சென்று ரசித்தார்.

சுப்புலக்ஷ்மியின் இசைப் பயணம்:

இசையுலகினரால் ‘எம்.எஸ்’ என அழைக்கப்பட்ட எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களுக்கு முதல் குரு அவரது தாயார்தான். தன்னுடைய தாயாருடன் அவ்வப்போது இசைக் கச்சேரிகளில் பாடிவந்த சுப்புலக்ஷ்மி அவர்கள், 1926 ஆம் ஆண்டு அவருடைய தாயாரின் வீணை இசையில் இவரின் பாடலும் இணைந்து முதல் இசைத்தட்டு வெளிவந்தது. பின்னர், 1929ல் இவருடைய முதல் கச்சேரி “சென்னை மியூசிக் அகாடமியில்” அரங்கேறியது. அதன் பிறகு பல கச்சேரிகள் நடைபெற்றன.

தன்னுடைய இனிமையான குரலால் அனைவரையும் தன்வசபடுத்திய சுப்புலக்ஷ்மி அவர்கள், தென்னிந்தியாவில் புகழ்பெற்ற கர்நாடக இசை பாடகராக வலம்வந்தார். ‘வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்’, ‘ஒளிப்படைத்த கண்ணினாய் வா வா வா’, ‘வாழிய செந்தமிழ்’ போன்ற பாடல்கள் இவருடைய குரலில் மிகவும் பிரபலமானவையாகும்.

1966 ஆம் ஆண்டு, ஐ.நா சபையில் உலக அமைதியை வலியுறுத்தி ராஜாஜி எழுதிய “மே தி லார்ட் ஃபார்கிவ் அவர் சின்ஸ்” என்ற ஆங்கிலப் பாடலை எம்.எஸ் சுப்புலக்ஷ்மி அவர்கள், பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றார். ‘வெங்கடேச சுப்ரபாதம்’, ‘ஆதிசங்கரரின் பஜகோவிந்தம்’, ‘ரங்கபுர விஹாரா’ என்னும் கீர்த்தனை போன்றவை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள் பாடிய சிறந்த பாடல்கள் ஆகும்.

திரைப்பட வாழ்க்கை:

1938 ஆம் ஆண்டு, கே. சுப்பரமணியம் இயக்கத்தில் “சேவாசதனம்” என்னும் திரைப்படத்தில் முதன் முதலில் அறிமுகமான எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், அப்படத்தில் பாடியும், நடித்தும் இருப்பார். பின்னர், ஆர். டங்கன் இயக்கத்தில் வெளிவந்த “சகுந்தலை” என்ற திரைப்படம், எம்.எஸ். சுப்புலக்ஷ்மிக்கு மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. 1941ல் வெளியான “சாவித்திரி” என்ற திரைப்படத்தில் நாரதராக நடித்து மேலும் பாராட்டைப் பெற்றார்.

எல்லியஸ் ஆர். டங்கனின் இயக்கத்தில் 1945 ஆம் ஆண்டு வெளிவந்த “மீரா” திரைப்படம் எம்.எஸ். சுப்புலக்ஷ்மிக்கு பெரும் புகழைத் தேடித்தந்தது எனலாம். இந்தப் படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. எம்.எஸ். பாடிய “காற்றினிலே வரும் கீதம்”, “பிருந்தாவனத்தில் கண்ணன் வளர்ந்த”, “கிரிதர கோபாலா”, “எனது உள்ளமே” போன்ற பாடல்கள் கேட்பவர்களை உருகவைத்தது எனலாம். இந்தப் படம், பின்னர் இந்தி மொழியில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டது.

திருமண வாழ்க்கை:

எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், ‘சகுந்தலை’ படத்தை தயாரித்த கல்கி சதாசிவம் என்பவரை 1940 ஆம் ஆண்டு சென்னையிலுள்ள திருநீர்மலை மலைக் கோவிலில் திருமணம் செய்து கொண்டார். சதாசிவம் ஒரு இசை ப்ரியராக மட்டுமல்லாமல், இசைக் கற்றவராகாவும் இருந்தார்.

இறுதி காலம்:

1997 ஆம் ஆண்டு, சதாசிவம் மரணம் அடைந்தபிறகு கச்சேரிகள் செய்வதை நிறுத்திக்கொண்ட எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், 1997 ஆம் ஆண்டு சென்னை மியூசிக் அகாடெமியில் பாடினார். இதுவே, அவருடைய கடைசி கச்சேரியாகவும் அமைந்தது. பின்னர், 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி தன்னுடைய 88வது வயதில் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி மரணம் அடைந்தார்.

விருதுகள்:

1954 ஆம் ஆண்டு இந்திய அரசின் மூன்றாவது மிக உயரிய விருதான “பத்ம பூஷன்” வழங்கப்பட்டது.

1967 ஆம் ஆண்டு “ரவீந்திர பாரதி கலாச்சார அகாடமி விருது” வழங்கப்பட்டது.

1968 ஆம் ஆண்டு “சென்னை ம்யூசிக் அகாடெமி” மூலம் “சங்கீத கலாநிதி விருது” வழங்கப்பட்டது.

1970 ஆம் ஆண்டு “சென்னை தமிழ் இசை சங்கம்” இவருக்கு இசை பேரரிஞர் விருது வழங்கியது.

1974 ஆம் ஆண்டு ஆசியாவின் ‘நோபல் பரிசு’ என அழைக்கப்படும் “மக்செசே விருது” ரமன் மக்செசே விருது நிறுவனத்தால் வழங்கப்பட்டது.

1975 ஆம் ஆண்டு இந்திய அரசின் இரண்டாவது மிக உயரிய விருதான “பத்ம விபூஷன்” வழங்கப்பட்டது.

1988 ஆம் ஆண்டு “காளிதாச சன்மான் விருது” மத்திய பிரதேச அரசால் வழங்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு “நாட்டு ஒருமைப்பாட்டிற்கான இந்திரா காந்தி விருது” வழங்கப்பட்டது.

1996 ஆம் ஆண்டு “கலாரத்னா” விருது வழங்கப்பட்டது.

1998 ஆம் ஆண்டு இந்திய அரசின் முதலாவது மிக உயரிய விருதுதான “பாரத ரத்னா” விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டு “வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது.

கர்நாடக இசையுலகின் பேரரசியாக விளங்கிய எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்களின் இசை கீதங்கள் என்றென்றைக்கும் கேட்பவர்களை ஒரு கணம் மறக்க வைக்கும். தேனினும் இனிய காந்த குரலால் கோடானுக்கோடி ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம்பெற்ற எம்.எஸ். சுப்புலக்ஷ்மி அவர்கள், இந்திய நாட்டிற்குக் கிடைத்த ஒரு பொக்கிஷமாவார். தான் பாடி ஈட்டிய பெரும் செல்வத்தை தானமாக நற்பணிகளுக்கும், சமூக சேவைக்கும் கொடுத்த ஒரே இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலக்ஷ்மி என்றால் அது மிகையாகாது!!!

 
Comments
 
 

Raghunathan Iyer

unread,
May 28, 2016, 1:18:26 AM5/28/16
to arunalaya

இல்லறம் ஒரு நல்லறம்

மணமக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, ஒருவர் மீது ஒருவர் ஆதிக்கம் செலுத்தாமல் அன்பைச் செலுத்த வேண்டும். அன்பும், பாசமும் எங்கு இருக்கிறதோ அங்குதான் அமைதியும் ஆனந்தமும் தவழும்.

ஒரு ஊரில் ஒரு விவசாயி வாழ்ந்து வந்தார். அவருக்கு எல்லா வசதிகளும் இருந்தன. எந்தக் குறையும் கிடையாது. அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது கனவில் கடவுள் தோன்றினார். நான் புறப்படுவதற்கு முன்பு உனக்கு என்ன வேண்டுமோ அதை என்னிடம் கேட்டுக் வாங்கிக் கொள் என்றார். வரம் கேட்டுப் பெற விவசாயிக்கு ஒரு நாள் அவகாசம் அளித்தார் கடவுள்.

தனது குடும்பத்தினருடன் விவசாயி ஆலோசனை நடத்தினார். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு யோசனை தெரிவிக்க, கடைசியில் அவருடைய தாயார், "குடும்பத்தில் அனைவரும் அன்போடும், பாசத்தோடும் வாழணும், சண்டையில்லாம இருக்கணும்னு கேளுப்பா' என்றார்.

சொன்னபடியே கடவுள் மறுநாள் வந்தார். தாயார் கூறிய வரத்தை தனக்குத் தருமாறு இறைவனிடம் கேட்டார். அதற்கு பதிலளித்த கடவுள், "நீ இப்படிக் கேட்டதனால் நானும் என் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டியதுதான்' என்றார். விவசாயிக்கு ஒன்றும் புரியவில்லை. "என்ன சொல்றீங்க' என்று கடவுளிடம் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த கடவுள், "எங்கு அன்பும் பாசமும் இருக்கிறதோ அந்த இடத்தில்தான் நான் இருக்க ஆசைப்படுவேன். ஆதலால் நீ கேட்ட வரத்தின் மூலம் உன்னை விட்டு எங்குமே போக முடியாதபடி செய்துவிட்டாய். இனி உன்னுடனேயே இருப்பேன்' என்றார்.

அன்பும் பாசமும் நீடித்து நிலைக்கும் இடத்தில்தான் இறைவன் குடியிருப்பார் என்பதை உணர்ந்து அதற்கேற்றாற் போன்று மணமக்கள் ஒருவர் மீது ஒருவர் அதிகாரம் செலுத்தாமல், ஒருவரை உயர்த்தியும், தாழ்த்தியும் நடத்தாமல், இருவரும் சமம் என்ற கோட்பாட்டைப் பின்பற்றுவதுதான் இல்லறத்தை நல்லறமாக்கும்



Raghunathan Iyer

unread,
May 31, 2016, 1:17:19 AM5/31/16
to arunalaya



 
Saanu Puthiran's photo.
 
 

பெரியவா சரணம்.

அழகு மிளிரும் அற்புத ருபனை கண்டபோதெல்லாம் உள்ளம் மகிழ்கின்றதே. மல்லிகைச் சரத்தினூடே மலர்முகத்தோன் தரிசனத்தை மார்க்கம் செழித்தருள வந்த மாஹேசன் ஹாரத்தி காட்டிட தரிசிக்கும் பாக்கியம் பெற்றோமே என எண்ணுகையில் ஆழ்மனதூடே ஐயனைப் போற்றிட அழகு தமிழ் சொற்கள் அடுக்கடுக்காய் வாராதோ!

ஐயனே! அமலனே!
அமுதனாய் அவதரித்த
அருங்கதி அருளாளா!
அனுஷத்தைப் போற்றச் செய்த
அருள்மொழி வேந்தே!
ஆசார்ய சங்கர ஆதிமூலமே!
அரிய மொழி யாவையுமே
அகத்தினுள்ளே அடக்கிக் கொண்டு
ஆன்மீக அடித்தளமாய்
அவனியோர்க்கெல்லாம்
அரும்மருந்தாய் அவதரித்து
இலகு பக்தி மார்க்கம் சொல்லி
இறையருளை உணர்த்தியவா!
ஏழைக்கும் அருள்செய்யும் ஏகாந்தா!
அற்பருக்கும் ஆறுதல் தரும்
ஆபத்பாந்தவா!
அழகு மயிலேறியின்
அமுத நாமம் கொண்டவனே!
அமுதவேணி அருளுருவே!
ஆதிசங்கர அவதாரீ!
அறநெறி பிழறாத அற்புதப் பேரருளே!
மெய்ஞானம் தந்தருளும்
ஏரகத்து விழுப்பொருளே!
காஞ்சி காண்டெடுத்த கற்கண்டே!
காமகோடி பீடத்தின் கார்பகத் தருவே!
கவலையெலாம் போக்குகின்ற
கருணாநிதிப் பெருமானே!
காரகா! கார்த்திகேயா!
காமாட்சி சீருருவே!
காலட்சேப வித்தகனே!
கருணாகர குணக்குண்றே!
குற்றம் பொறுத்தெம்மைக் காக்க வா
கோவிந்தா!
சக்கர ரேகையுடன்
சகலரையும் காக்கின்றவா!
கொன்றைசூடி கோமுனியே!
சதுர்வேத வித்தகனே!
சத்தியம் பகர்கின்றேன்!
நின் திருவடித் தாமரையில்
மனம் லயித்துப் போற்றுகின்றேன்!
சம்பூர்ணமான வுந்தன்
சன்னதியை மனதிருத்தி
சந்தத் தமிழ் சொற்களிலே
மாலைசூட்டி மகிழுமெங்கள்
வாழ்வினுக்கு வகைகாட்டி
வாழவைக்க வா! வா! வா!
தளர்வறியா மனம்தந்து
தக்கதெல்லாம் செய்துதந்து
தர்ம நெறி ஞானம் தந்து
துயர்துடைத்து வாழவைக்க
திருநோக்குக் கண்டோனுன்
தயை கேட்டு கெஞ்சுமெங்கள்
தளிர்வாழ்வு காத்திடவே
தருணமிது கா! வா! வா!

என்பதான ப்ரார்த்தனையோடு அனைவருமாக ஒருங்கே நின்று தரணியோர் அனைவர்க்காகவுமாய் த்யானிப்போம்...வாரீர்..!!!

ஹிரித்துவம் அறிந்த த்ரிகால ஞானியாம் தீர்க்க வசனம் கொண்ட தீர்க்கதரிசியின் த்ஹந்க்களைப்ன்பணிவோம்!

குருவுண்டு - பயமில்லை; குறையேதும் இனியில்லை.

பெரியவா கடாக்ஷம்.

நமஸ்காரங்களுடன்
சாணு புத்திரன்.

Raghunathan Iyer

unread,
Jun 2, 2016, 1:20:42 AM6/2/16
to arunalaya

 
19 hrs · 
Psk Sivanarayanan Iyer's photo.
Psk Sivanarayanan Iyer's photo.
 
 · 

Chief Minister of Andhra Mr. Chandrababu Naidu announces Bharati Vidya Scheme for poor brahmins

At last somebody in power recognised poor brahmins

• Bharati Vidya Scheme is to ensure poor brahmins are educated and protected.
• 
• Under this scheme financial aid is provided of Rs. 10,000 for inter and polytechnic students, Rs. 15,000 for

Our Forward community People, those who are blindly supporting our Tamilnadu Government without looking the difficulties of our suffering community must realize, what is real service to people from Mr. Chandrababu Naidu

நம்முடைய சமூகத்திற்கு எவ்வளவு துரோகங்கள் இழைக்கப் பட்டு நசுக்கப் பட்டாலும், கண் மூடித்தனமாக ஆதரவு அளிக்கும் நம்மில் சிலரைக் குறித்துத் தான் வேதனையாக இருக்கிறது

Raghunathan Iyer

unread,
Jun 3, 2016, 6:09:41 AM6/3/16
to arunalaya
Charulatha Anand's photo.
குல தெய்வம் அல்லவோ..!!

Raghunathan Iyer

unread,
Jun 6, 2016, 2:41:58 AM6/6/16
to arunalaya



நேசமணி முதலியார்'s photo.
 
  

திருமலை திருப்பதி கருவறைக்குள் தினம்தினம் நடக்கும் ஓர் அதிசயம்!

வருஷத்துக்கு ஒருமுறைதான் திருப்பதிக்கு போகமுடியுது…அதுலயும், அங்க இருக்குற கூட்டத்துல பலமணிநேர காத்திருத்தலுக்கு பின்னாலதான் சாமிய பாக்கவே முடியுது.

அதுக்குள்ள அங்க இருக்கறவங்க நம்மள ஜருகண்டி, ஜருகண்டின்னு புடிச்சு தள்ளிவிட்டுடறாங்க..

கூட்ட நெரிசல்ல கோயில விட்டு வெளிய வந்த பின்னாலதான் “அடடா..இதையெல்லாம் சாமிகிட்ட வேண்டலாம்னு இருந்தோமோ, எல்லாத்தையும் மறந்துட்டோமே..

ஆமா, சாமி என்ன அலங்காரத்துல இருந்தாரு..சே..சரியாவே தரிசனம் செய்ய விடலயே..” இப்படின்னெல்லாம் எல்லாருமே அங்கலாய்ச்சிருப்போம்..,

கூட்ட நெரிசலாலதான் சாமிய சரியா பார்க்க முடியல..சாமிகிட்ட நம்ம பிரார்த்தனைய சொல்லமுடியல..அப்படின்னெல்லாம் நினைச்சிருப்போம்..ஆனா, அதெல்லாம் உண்மையில்லீங்க..

சாமிய நாம தரிசனம் பண்ற இடத்துல இருக்குற ஒரு விசேஷ சக்திதான் இப்படி நம்ம ஞாபக சக்தியோட விளையாடுதுன்னு சொல்றாரு..டாக்டர் ரமண தீட்சிதர்..

இத கேக்கும்போதே எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்தது.

சிலநொடிகள்கூட நம்மள சாமிய பார்க்க விடறதில்ல..
ஆனா, இவங்கெல்லாம்(கோயில் அர்ச்சகர்கள்,தேவஸ்தான அதிகாரிகள்) மட்டும் உள்ளேவே இருந்து மணிக்கணக்குல சாமியோட இருக்காங்களேன்னு பொறாமைப்பட்டேன்..ஆனா, அவங்களுக்கும் இப்படித்தான் நினைவுகள் அழிக்கப்படுவதா ரமண தீட்சிதர் குறிப்பிட்டாரு..

இதுல சாமிய பார்க்க வருகிற சுயநலமில்லாத யோகிகள், வாழும் மகான்களுக்கு மட்டும்தான் இதுல விதிவிலக்காம்..

(சமீபத்துல கூட ஐயா கவிஞர் பெருமாள் ராசுவும் அம்மா மஹாலட்சுமியும் திருப்பதி தரிசனத்துக்கு போயிருந்தப்ப, பொறுமையா அவங்கள எந்த இடையூறும் செய்யாம சாமிய தரிசனம் செய்ய அனுமதிச்சிருக்காங்க..

அதுமட்டுமில்லீங்க..ஐயா கவிஞர் பெருமாள் ராசு சாமிய பாத்துட்டு திரும்பும்போது,

அவர கூப்பிட்டு, “நாராயணா…, இத வாங்கிட்டுப்போங்க நாராயணா….”ன்னு சொல்லி,

சாமி பாதத்துல இருந்த துளசிதளங்களையும், முந்திரி, பாதாம் போன்ற பிரசாதங்களை கைநிறைய அள்ளி கொடுத்து அனுப்பியிருக்காங்க.)

இனி..,

கருவறைக்குள் நம் வேண்டுதல்கள் மறந்து போவது ஏன்..? ஓர் விசித்திர அனுபவம் பற்றி திருமலை திருப்பதியின் பிரதான அர்ச்சகர் டாக்டர் ரமண தீட்சிதர் சொல்வதை பார்ப்போம்

“சுவாமியை தரிசனம் செய்ய கருவறைக்குள் சென்றதும் நம் வேண்டுதல்கள் மறந்து போய்விடும், அடுத்து, சுவாமியை தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்ததும், சுவாமியை நாம் தரிசனம் செய்தபோது இருந்து அலங்காரம், சுவாமியின் கோலம் எல்லாம் மறந்துபோகும் இது ஏன்..எல்லோருக்கும் இப்படி ஓர் விசித்திர அனுபவம் ஏற்படுவதுண்டு.

அறிவுக்கு அப்பாற்பட்ட விஷயங்களில் இதுவும் ஒன்று. இதற்கு காரணத்தை இன்று நாம் ஆராய்வோம்.

கருடாழ்வார் சன்னதியில் இருந்து கர்ப்பாலயம் வரையிலும் இருக்கும் ஒரு இடம் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு எனர்ஜி பீல்ட் என்று சொல்லப்படும் விஷயமாக இருக்கும்.

இந்த எனர்ஜி பீல்டு என்பது ஆகமத்தில் சொல்லியிருக்கும் வகையில், நித்தியமும் சுவாமியை தரிசிக்க கோடானுகோடி தேவர்கள், கிண்ணரா, கிம்புருஷா,கருடா, கந்தர்வா, சித்தா, சாத்யா, யட்சா, ராட்சசா முதலிய இனங்களைச்சேர்ந்த தேவதைகள் எல்லாரும் சுவாமியை தரிசித்துக்கொண்டு இருப்பார்கள் என்றும்,

சுவாமி அஷ்டோத்ரத்தில் வரும் நாமப்படி ஸ்வேத்ததீபம் எனும் ஒரு முக்தி அடைந்த சித்தர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து சித்தர்கள் நித்தியமும் சுவாமியை தரிசித்துக்கொண்டிருப்பார்கள் என்றும்,

குமாரதாரா என்ற தீர்த்தத்தில் எப்பவும் தவத்தில் இருக்கும் ஸ்கந்தன் எனும் முருகப்பெருமான் தினமும் சுவாமியை தரிசிப்பார் என்றும்,

பல தேவதைகளும் கர்ப்பகிரகத்தில் சுவாமியை வணங்க வருவார்கள் என்றும்,

அப்படி வருகின்ற தேவதைகளுக்கு பௌதீகமான சொரூபம் (கண்ணுக்கு புலனாகும் உருவம் ) இல்லை என்றும்,

அவர்கள் சக்தி சொரூபமாகவே சூட்சும ரூபத்தில் வந்து அங்கு கர்ப்பாலயத்தில் இருப்பார்கள் என்றும்,

அவர்களுடைய வருகையினால், அவர்களுடைய இருக்கையினால்,சக்தி வளையங்கள் தோன்றிக்கொண்டே இருக்கும்.

இப்படிப்பட்ட தேவதைகள் இருக்கும் சக்திவளையங்களுக்குள் மனிதர்கள் செல்லும்போது மனிதர்களின் அறிவு அலைகள் ஆல்பா வேவ்ஸ் இந்த சக்தி வளையத்தின் தாக்குதலால் ஸ்தம்பித்து போய்விடுகிறது.அதாவது, இட்ஸ் கோயிங் பிளாங்..,

அதனால், அவர்கள் சுவாமியிடம் என்ன வேண்டும் என்று கேட்க வந்தார்களோ,அந்த விஷயங்களை மறந்து விடுவார்கள்…எ லாஸ் ஆப் மெமரி ஹேப்பன்ஸ்..,

அதேசமயத்தில் கருவறையில் சாமியை தரிசித்த ஞாபகங்கள் மூளையில் தங்காமல் துடைத்து விடப்படுகிறது…டெலிட்டிங் தி மெமரி…,

இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் சக்தி வளையத்தின் மிகத்தீவிரமான தாக்குதலால் ஏற்படும் மாற்றங்கள்.

இது திருமலை ஸ்ரீ வேங்கடமுடையான் கோயில் கருவறைக்குள் நடக்கும் அதிசயங்களில் ஒன்று…”

ஆச்சரியமா இருக்குல்ல..அடுத்ததா, ஜனவரி 11 அன்னைக்கு வைகுண்ட ஏகாதசி..இதுபத்தியும் சில புதிய தகவல்கள சொல்லியிருக்காரு..டாக்டர் ரமண தீட்சிதர்

“..திருமலை திருப்பதியில் இன்று (ஜனவரி 11) வைகுண்ட ஏகாதசியை கொண்டாடிக்கொண்டிருக்கிறோம். மாசத்தில் இரண்டு முறை வரும் ஏகாதசி, இரண்டு பர்வங்கள்,திருவோண நட்சத்திரம் இந்த ஐந்தும் விஷ்ணு பஞ்சகம் என்று மஹாவிஷ்ணுவிற்கு பீரீத்தியான நாட்கள்.

அன்று மட்டும் மற்ற வைணவ கோயில்களில் வடக்கு துவாரம் வழியாக உற்சவர் கொண்டுவரப்பட்டு பக்தர்கள் வடக்குதுவாரம் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

ஆனால், திருமலை திருப்பதியில் வடக்குதுவாரம் என்பதற்கு பதிலாக ஏகாதசி, துவாதசி இரண்டு நாட்களுக்கு மட்டும் வைகுண்ட பிரதட்சணம் நடைபெறுகிறது.

அதாவது 12 ம் நூற்றாண்டில் ஆனந்த நிலையம் விரவுபடுத்துவதற்காக, கர்ப்பாலயத்தை சுற்றிவரும் பாதை அகலப்படுத்தப்பட்டது. அந்த பழைய குறுகலான பாதையே வைகுண்ட பிரதட்சணமாக, இந்த இருநாட்கள் மட்டும் திறந்து விடப்படுகிறது.

மற்றநாட்களில் நாம் கோயிலை சுற்றிவரும் பாதையில் ஆனந்த நிலைய விமானத்தில் வடக்குமுகமாக விமான வேங்கடேஸ்வர சாமி எழுந்தருளியிருக்கிறார்.கூடவே, பரமபதநாதர் எழுந்தருளியிருக்கிறார் ,

வருடத்தின் 365 நாளும் இவரை தரிசிக்கலாம், இது வைகுண்ட ஏகாதசியின் பலனை கொடுக்கும் என்பது ஆகமம்.

paramapadanathar(within the coloured box)

ஆனந்த நிலைய விமானத்தில் பரமபதநாதர் என்பது வைகுண்டத்தில் பாற்கடலில் மஹாவிஷ்ணு கோலம் ஆதிசேஷனின் மேல் வலதுகால் மடித்து, இடதுகால் பூமியை தொட்டுஇருக்கும் இந்த திருக்கோலம்தான் பரமபதநாதர் எனப்படுகிறது.

இது பிரம்மா முதலானவர்களுக்குக்கூட கிடைக்காத தரிசனம் பரமபதநாதர் எனபது இந்த தரிசனத்தை பக்தர்கள் ஆனந்த நிலைய விமானத்தில் எப்போதும் தரிசிக்கலாம்.

வைகுண்ட ஏகாதசி அன்று மற்றொரு விசேஷம்,

ரதரங்கடோலோத்சவம். புதிதாக செய்யப்பட்ட தங்கத்தேரில் உற்சவர் மலையப்பசாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதகராக விசேஷமான திருவாபரணங்கள் அணிந்து மாடவீதி வலம் வருவார் என்பது விசேஷம்..”

இனி ஒவ்வொரு முறை திருப்பதி போகும்போதும் சாமிகிட்ட என்ன வேண்டறதுன்னெல்லாம் யோசிக்க வேண்டியதில்லீங்க…உந்தன் திருக்கமல பாதங்களே சரணம்னு மட்டும் நாம நமஸ்காரம் செஞ்சிட்டா போதும்..மீதி எல்லாம் பெருமாள் பாத்துக்குவாருன்னு முடிவு செஞ்சிருக்கேன்.

அதே மாதிரி, ஆனந்த நிலையம் (கருவறைக்கு மேலிருக்கும் தங்ககோபுரம்) விமானத்தில் வடக்கு முகமாக ஒரு வெள்ளி தோரணத்தில் விமான வெங்கடேஸ்வரர் சிலை இருக்கும். இது ஒரு சிவப்பு அம்புக்குறியால மார்க் செய்யப்பட்டிருக்கும்.

இது எதுக்காகன்னு ஒருமுறை கவிஞர் ஐயா பெருமாள் ராசு அவங்ககிட்ட கேட்டிருந்தேன்.

“..உள்ளே, சாமிய நாம கூட்டத்துல சரியா பார்த்து வேண்டுதல்கள சொல்லமுடியாத காரணத்துனால, கோபுரத்துல அதே கோலத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர் அமைக்கப்பட்டிருக்காரு..,இவருகிட்ட உங்களோட வேண்டுதல்கள மனசார சொல்லிட்டு வாங்க..அது அப்படியே மூலவர்கிட்ட சொன்னமாதிரி..நிச்சயம் நல்ல பலன் தரும்..”

அப்படின்னு ஐயா கவிஞர் பெருமாள் ராசு அவங்க சொல்லியிருந்தாங்க..

இது உங்க எல்லாருக்கும் பயன்படட்டும்னுதான் இங்க எழுதியிருக்கேன். அதுமட்டுமில்லாம..இனிமே, திருப்பதிக்கு போறவங்க..ஆனந்த நிலையத்துல இருக்குற விமான வெங்கடேஸ்வரர மட்டும் தரிசனம் செஞ்சிட்டு வந்துடாம,

அவருக்கு பக்கத்தலயே இருக்குற பரமபதநாதரையும் வணங்கிட்டு வாங்க..இவர எப்போ தரிசனம் செஞ்சாலும் வைகுண்ட ஏகாதசி அன்னைக்கு பெருமாள தரிசனம் செஞ்ச பலன் கிடைக்கும்னு ஆகமங்கள்லயே சொல்லியிருக்குன்னு ரமண தீட்சிதரே சொல்லியிருக்காரு.

சாமானிய ஜனங்களுக்கும் சின்ன,சின்ன இந்த நுட்பமான ஆன்மீக தகவல்கள் போய் சேரணும், அதன்மூலம் எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கணும் அப்படிங்கறதுதான் பெருமாளோட விருப்பம்..இதையெல்லாம் உங்களோட பகிர்ந்துகொள்ள கிடைச்ச இந்த வாய்ப்பு.. எனக்கு ரொம்பவே பெருமிதம்..!

திருமலை திருப்பதி – பிரபஞ்ச ரகசியங்கள் –

Raghunathan Iyer

unread,
Jun 8, 2016, 6:01:51 AM6/8/16
to arunalaya
Kumar Ramanathan's photo.
  •  
      
     

    ஆதிசங்கரர் பல முறை லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் பண்ண நினைத்து தமது சிஷ்யரிடம் சஹஸ்ர நாமச் சுவடிகளை எடுத்துவரப் பணித்த போதும், சிஷ்யர் விஷ்ணு சஹஸ்ரநாம சுவடிகளையே தந்தாராம்.

    2-3 முறை இவ்வாறு நடக்க, ஏன் இப்படி என்று சிஷ்யரிடம் கேட்கையில், சிஷ்யர் தாம் சுவடிகளை எடுக்கையில் ஒரு சிறு பெண் வந்து சுவடிகளை தந்ததாகவும், அதனைச் சரிபார்க்காது தாம் கொண்டுவந்து தந்ததாகக் கூறுகிறார். இவ்வாறு 2-3 முறை விஷ்ணு சஹஸ்ர நாமச் சுவடிகளை அன்னையே தந்ததாக அறிந்த சங்கரரும், அது அன்னையின் ஆணை என்று உணர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாம பாஷ்யம் மட்டும் செய்தாராம்.

    செளந்தர்ய லஹரி, பவானி ஸ்தோத்ரம், என்று பலவிதங்களில் அன்னை பராசக்தி மீது ஸ்லோகங்களை அருளிய ஆதிசங்கரர் லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் பண்ண இயலவில்லை. அதையே பிற்காலத்தில் வந்த ஒருவர் மூலமாக அன்னை செய்து வைத்தாள் என்றால் அது பிற்காலத்தில் வந்தவரது பக்தியை, அனுஷ்ட்டான சாதகத்தை, பாண்டித்யத்தை அன்னையே விரும்பிச் செயல்படுத்தினாள் என்றுதானே பொருள்?. இவ்வாறு லலிதா சஹஸ்ரநாம பாஷ்யம் பண்ணியவர்தான் பாஸ்கர ராயர். தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்கத்தில் பாஸ்கர ராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது.

    இவர் பிறந்தது மாகாராஷ்டிரத்தில், பாகா என்னும் நகரத்தில். இவரது பிறப்பு கி.பி 1690 என்று தெரிகிறது. தந்தை பெயர் கம்பீர ராயர், தாயார் கோனாம்பா. கம்பீர ராயர் விஜயநகர அரசவையில் பெளராணிகராக இருந்தவர், மகாபாரதப் பிரவசனம் செய்து அதன் மூலமாக பாரதீ என்னும் பட்டப் பெயரை பரம்பரை உரிமையுடன் பெற்றதாகச் சொல்கிறார்கள்.

    கம்பீர ராயர் தமது மகனான பாஸ்கர ராயருக்கு காசியில் உபநயனமும், அத்யயனமும் செய்து வைத்திருக்கிறார். அக்காலத்திலேயே வாக்தேவி மந்திர தீக்ஷையும் நடந்து அம்மந்திரத்தை ஜபித்து வந்திருக்கிறார்.

    சிறிது காலத்திலேயே வேத அத்யயனம் முடித்து ஊர் திரும்புகையில் குஜராத்தில் ப்ரகாசாநந்த நாதர் என்பவரை கண்டு அவரிடம் ஸ்ரீ வித்யை உபதேசமும், பூர்ணாபிஷேகமும் செய்து கொள்கிறார். பூர்ணாபிஷேக நாமம் ஸ்ரீ சிதானந்த பாதரேணு என்பதாகும். பின்னர் ஸ்ரீ கங்காதர வாஜபேயி என்பவரிடம் தர்க்க சாஸ்த்திரத்தையும் படிக்கிறார். அதர்வண வேதம் அழிந்து வருவதை தடுக்கும் விதமாக தானே அதனை அத்யயனம் செய்து அதனை பலருக்கும் கற்பித்து அவ்வேதத்தை உத்தாரணம் செய்கிறார்

    இவரது மனைவி பெயர் ஆனந்தி என்பதாகும். அவருக்கும் மந்திர உபதேசம் செய்வித்து பத்மாவதம்மாள் என்று தீக்ஷா நாமம் வழங்கியிருக்கிறார். பிறகு ஒரு சமயம் வல்லப ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்த ஒரு வித்வானை வாதில் வென்று அவரது மகளையும் திருமணம் செய்து கொள்கிறார். அந்த மனைவி பெயர் பார்வதி என்பதாம். இரு மனைவிகளுடன் காசியாத்திரை கிளம்பிச் செல்லும் வழியில் ஒர் மாத்வ மஹானையும் வாதில் வென்றதாகச் சொல்லப்படுகிறது.

    காசியில் ஸோம யாகம் செய்திருக்கிறார். அக்காலத்தில் காசியில் இருக்கும் வைதீகர்கள் உபாசனா மார்க்கத்தை ஏளனம் செய்வதும், குறை கூறுவதும் வழக்கமாக இருந்திருக்கிறது. பாஸ்கர ராயர் சமயாசாரத்தின் படியாக உபாசனை செய்து வந்தாலும், அவரை வாமாசாரத்தைச் சார்ந்தவர் என்று திரித்துக் கூறி இகழ்ந்து வந்திருக்கின்றனர். இதனை அறிந்த பாஸ்கர ராயர், தாம் வாதம் செய்ய தயார் என்று பிரகடனம் செய்கிறார்.

    பாஸ்கர ராயருடன் வாதம் செய்ய அப்போது அங்கிருந்த குங்குமாநந்த நாதர் என்னும் யோகியைத் தயார் செய்து, அவரை முதன்மையாகக் கொண்டு வாதத்தை தொடங்குகின்றனர் வைதீகர்கள். பல கேள்விகளுக்கும் சிறப்பாக, சுலபமாக பதிலளிக்கிறார் பாஸ்கரர். அவரது வாதத் திறமையையும், மந்திர சாஸ்திரத்தில் இருக்கும் திறமையும் எல்லோரும் வியக்கின்றனர்.

    ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாமத்தில் இருக்கும் "சதுஷ்ஷஷ்டி கோடி யோகினீ பரிசேவிதா" (237ஆம் நாமம்) என்பதில் வரும் 64 கோடி யோகினீகள் யார் என்று கேட்கின்றனர். பாஸ்கரரும் அம்பிகையை தியானித்துப் பின்னர், வரிசையாகச் சொல்ல ஆரம்பித்து, அந்தந்த யோகினிகளுக்கான பெயர், மந்திரங்கள், சரித்திரங்களை வரிசையாகச் சொல்லச் சொல்ல பிரமித்துப் போய்விடுகின்றனர். அப்போது தமது தலைவரான குங்குமாநந்த நாதரிடம் எப்படி இது சாத்தியம் என்று வினவ, அவரும் பாஸ்கர ராயர் சாதாரணமானவர் அல்லர். நமது கேள்விகளுக்கு அன்னை பராசக்தியே கிளி உருவில் அவர் தோளில் அமர்ந்து, அவர் சார்பில் பதிலளிக்கிறாள் என்று கூறுகிறார். தமது சிஷ்யர்கள் அந்தக் காக்ஷியைக் காணத்தக்க விசேஷ பார்வையையும் அளிக்கிறார். வைதீகர்களும் அன்னையைக் கிளி ரூபமாக தரிசித்து, பாஸ்கர ராயரிடம் மன்னிப்புக் கேட்டதுடன் நில்லாது பாஸ்கர ராயரை குருவாக ஏற்று அவரிடம் மந்திரோபதேசமும் பெற்றதாகச் சொல்லப்பட்டுகிறது.

    கல்வியில் சிறந்து விளங்க

    லலிதா சஹஸ்ரநாமத்தில் வரும்

    ஆத்ம வித்யா மஹா வித்யா ஸ்ரீவித்யா காமஸேவிதா
    ஸ்ரீ÷க்ஷõட சாக்ஷரீ - வித்யா த்ரிகூடா காமகோடிகா

    தசமுத்ரா - ஸமாராத்யா த்ரிபுரா ஸ்ரீவசங்கரீ
    ஜ்ஞானமுத்ரா ஜ்ஞானகம்யா ஜ்ஞானஜ்ஞேய ஸ்வரூபிணி

    என்ற ஸ்லோகங்களை விடியற்காலை எழுந்து குளித்துவிட்டு 48 நாட்கள் சொல்லி வர சரஸ்வதியின் அருள்கிட்டும்.

Raghunathan Iyer

unread,
Jun 16, 2016, 5:18:36 AM6/16/16
to arunalaya
காஞ்சிபெரியவரின் கர்ப்பவாசம்!
காஞ்சி மகாபெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பற்றி எவ்வளவோ அற்புதங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். ஆனால், அவர் கர்ப்பவாசம் அனுபவித்த சம்பவம் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இது ஒரு "எக்ஸ்குளுசிவ்' தகவல்.
காஞ்சிபுரம் அருகில் தேனம்பாக்கம் என்ற கிராமம் இருக்கிறது. இங்கே பிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கே சிவன் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். மகாபெரியவர், இந்தக் கோயிலுக்கு அடிக்கடி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.
ரு குழந்தை தாயின் கருவறையில் பத்து மாதங்கள் தங்கி, பின் ஜனனமாவது வழக்கம். அதேபோல, மகா பெரியவர் இந்தக் கோயிலுக்குள் உள்ள குடிலுக்குள் பத்துமாதம் தங்கி அனுஷ்டானங்களை நடத்திக் கொண்டிருந்தார். அவ்வாறு, இருந்த காலத்தில் ஒருநாள் கூட, அந்தக் குடிலை விட்டு வெளியே வரவே இல்லை. இதுபற்றி யாருக்கும் எதுவும் தெரியவில்லை. உள்ளே இருந்த காலத்தில், அவர் என்ன செய்தார் போன்ற விஷயங்கள் யாருக்கும் தெரியாது. சூரியவெளிச்சத்தைக் கூட பார்க்காமல் அவர் இவ்வாறு ஓரிடத்தில் தங்கி இருக்க வேண்டிய அவசியம் என்ன என்பதும் புரியாத புதிராகவே இன்றும் உள்ளது.
ஒரு குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் போது, வெளியுலகைப் பார்க்க முடிவதில்லை. அதுபோல், பெரியவரும் பத்துமாதம் அங்கு தங்கி வெளிவராமல் இருந்ததால் இதை "கர்ப்பவாசம்' என்கிறார்கள்.
பெரியவர் எதற்காக இவ்வளவு அரிய தவத்தை மேற்கொண்டார்? உலகத்திற்கு என்ன நன்மை கருதி இதை அனுஷ்டித்தார் என்பது, அவருக்கும், அவர் தினமும் பூஜித்த திரிபுர சுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வரருக்கு மட்டுமே வெளிச்சம்.
பெரியவர் கர்ப்பவாசம் அனுபவித்த கோயில் என்பதால், குழந்தை இல்லாதவர்கள் தேனம்பாக்கத்திலுள்ள பிரம்மபுரீஸ்வரர் கோயிலுக்கு வந்து சுவாமியை வழிபடலாம். பெரியவர் அரும்பெரும் கோரிக்கைகளை முன்வைத்தே இங்கே கர்ப்பவாசம் செய்திருக்கலாம் என்ற அனுமானத்தின் அடிப்படையில், இங்கே கன்னியர் நல்ல வரன் வேண்டியும், ஊனமுற்ற குழந்தைகள் தங்கள் எதிர்காலம் சிறக்கவும் பூஜை செய்து வரலாம்.



Reply all
Reply to author
Forward
0 new messages