5,137 views
Skip to first unread message

Raghunathan Iyer

unread,
Dec 17, 2015, 12:55:48 AM12/17/15
to arunalaya


1)சஞ்சித கர்மா (2) பிராரப்த கர்மா (3) ஆகாமி கர்மா- மூன்று விதமான கர்மாக்களும் நாமும்...
.
1. சஞ்சித கர்மா : நாம் பல ஜென்மாக்களை கடந்துதான் இந்த ஜென்மா நமக்கு கிடைத்துள்ளது. முதலில் இதை புரிந்துக் கொள்ளுவோம்.அந்த பலவிதமான பூர்வஜென்மங்களில் நாம் செய்த புண்ணிய பாவங்களின் ஒட்டு மொத்த மூட்டையே சஞ்சித கர்மா என்பதாகும். தெய்வ பக்தி, தான தர்மங்கள், ஆன்மிகம் முதலியவைகளில் ஈடுபடுவதின் மூலம் இதன் வீர்யத்தை குறைத்தும் சில நேரங்களில் சரி செய்தும் விடலாம் என்பது பெரியோர்களின் வாக்கு.

2. பிராரப்த கர்மா : வினைப் பயனாக இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்க வேண்டியவைகள். அதாவது ப்ராரப்தம் என்றால் வினைப் பயன்களை அனுபவிப்பதே ஆகும்.

3. ஆகாமி கர்மா : இந்த பிறவியில் நாம் புதிதாக சேர்க்கும் வினைகள். அனேகமாக இதை நாம் இங்கேயே அனுபவித்து விடுவோம். அல்லது மறு பிறவியில் இது தொடரும். யாரும் தப்பிக்க முடியாது.

எது எப்படி இருந்தாலும் நமது காஞ்சி ஆச்சார்யாள் அடிக்கடி சொல்லுவதுபோல் பூர்வ கர்ம சமாச்சாரம் எப்படி போனாலும் இனி கர்மபாரம் ஏறாமல் பார்த்துக் கொள்வதே முக்கியம்.

கர்மபாரம் ஏறாமல் இருப்பதற்கு ஒரே வழி - ஆச்சார அநுஷ்டானங்களில் நம்பிக்கை வைத்து அதன்படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு குருவை அண்டி அவர் மூலம் நமது ஆன்மிக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுவதுதான்.
அன்புடன்
சர்மா சாஸ்திரிகள்

Sarma Sastrigal's photo.

Raghunathan Iyer

unread,
Dec 17, 2015, 1:24:26 AM12/17/15
to arunalaya

கருமேகம் சூழ்ந்து காணப்படும் இன்றைய சூழ்நிலையில் இன்றைய இளம் தலைமுறையைச் சேர்ந்த பெற்றோர்கள் சிலர், எந்தச் சலனமும் இன்றி, தங்களது அன்புக் குழந்தைகள் வேதம் பயின்று நமது தர்மத்தில் கூறப்பட்டுள்ளபடி கர்மங்களைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர்களை வேதபாடசாலைக்கு அனுப்பி உள்ளது உற்சாகத்தை அளிக்கிறது.

ஆம். தங்களது குழந்தைகள் பள்ளி, கல்லூரி படிப்புக்களை படித்து வாழ்க்கையில் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஒதுக்கி வைத்து விட்டு அவர்களை சிறு வயதிலேயே பாடசாலைக்கு அனுப்பும் இளம் தம்பதிகள் சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்த இளம் தந்தையர்கள் மற்றும் தாய்மார்கள் நமது வைதீகப் பாதையில் இருந்து நாம் முற்றிலும் விலகிச் சென்று விடக் கூடாது என்பதை உணர்ந்திருக்கிறார்கள். நமது தர்மத்தின் மீதுள்ள தங்களது ஈடுபாட்டை காட்டும் வகையில் அவர்கள் நேர்மறையான மற்றும் தைரியமான முடிவினை எடுத்துள்ளனர்.

’ஐ-பேட்’, ’4ஜி’, ’மேல்நாட்டில் படிப்பு/உத்யோகம்’ என எபபோதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த சிலர் தங்களது பிள்ளைகள் வேதம் கற்க வேண்டும் என்று சங்கல்பம் செய்துக்கொண்டு வேத பாடசாலைகளில் சேர்த்துள்ளது மகத்தான விஷயம்.

தங்களது குழந்தைகளை வேத பாடசாலைகளில் சேர்த்து வேத அத்யயனம் செய்ய வைக்கும் இந்த அற்புதமான பெற்றோர்கள் நமது பாராட்டுக்கு உறியவர்கள். அவர்களுக்கு நமது சமுதாயம் கடைப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது. அவர்கள் வேதத்திற்கு ஆற்றியுள்ள இந்த மகத்தான கார்யத்திற்கு எவ்வளவு பாராட்டினலும் அது மிகவும் சொல்பமாகத்தான் இருக்கும். இந்த உயர்வான செயலை அவர்கள் எந்த ஆடம்பரமும் இன்றி அமைதியாக மேற்கொண்டுளளனர். இந்தப் பெற்றோர் அனைவருக்கும் நமது அனந்தகோடி நமஸ்காரங்களைத் தெரிவிக்கிறோம்.

அவர்களிடம் நமக்கு இருக்கும் விஸ்வாசத்தையும், அன்பையும், மரியாதையயும் காட்டுவதற்காக வருகின்ற மார்ச் மாதம் 13-ந் தேதி சென்னையில் ஒரு பிரஹ்மாண்டமான ஒரு பொது நிகழ்ச்சியின் மூலம் அவர்களை கெளரவிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

தங்கள் குழந்தைகளை வேத அத்யயனம் செய்ய வைத்துள்ள பெற்றோரை கௌரவிக்க வேண்டும் என்பது மட்டும் இந்த விழாவின் நோக்கமன்று. நமது வேதம் மற்றும் நமது தர்மத்திற்கு காட்டும் உயர்வான நோக்கமான மரியாதையும் ஆகும்.

ஸ்வாமி கடாக்ஷத்தினால் நடக்கவிருக்கும் இந்த விழா வெற்றி பெற நீங்கள் எந்த வகையில் உதவலாம் என்று சிந்திப்பதுடன், தங்கள் பிள்ளைகளை வேத பாடசாலையில் சேர்த்துள்ள பெற்றோர்களை அதிக அளவில் இதில் பங்கேற்கச் செய்யலாம் என்ற எண்ணத்துடன் இந்தப் பதிவினை எழுதியுள்ளேன்.

தங்களன்புள்ள

Raghunathan Iyer

unread,
Dec 17, 2015, 1:29:21 AM12/17/15
to arunalaya

மாமா கச்சம் அணியும்போதோ அல்லது சாதாரணமாக வேஷ்டியில் இருக்கும்போதோ மேல் வேஷ்டியை எப்படி அணியவேண்டும் என குழப்பமாக உள்ளது. பலர் பலவிதமாக போட்டுக்கொள்ளுவதை பார்த்துள்ளேன். . குறிப்பாக நேற்று நடந்த பாராயண நிகழ்ச்சியில் உங்களுக்கு அருகாமையில் உடகார்ந்திருந்த ஒருவரை நீங்கள் கை சைகை மூலம் மேல் வேஷ்டியை மாத்திப்போட்டுக்கொள்ளுமாறு சொன்னதை கவணித்தேன்...”

உண்மைதான். இதில் பல பழக்கங்கள் உண்டு. தேசாச்சாரத்தின்படி சிலது மாறுபடலாம்.

பொதுவாக பூஜை,பாராயணம், ஜபாதிகள் போன்றவை செய்யும்போது மேல் வேஷ்டி நமது கழுத்தைச் சுற்றி போட்டுக் கொள்ளக் கூடாது. பிஹ்மச்சாரிகளுக்கும் கிருஹஸ்தர்களுக்கும் இந்த விதி பொது.

யோக வேஷ்டியாக (அதாவது இடது தோள் பட்டையிலிருந்து் குறுக்காக) மேல் வேஷ்டியை தரித்துக்கொள்ளலாம். அல்லது இடுப்பில் சுற்றிக்கொள்ளலாம். இரண்டும் ஏற்புடையதே.

ஆனால் வேதம் கற்றுக் கொள்ளும்போது கற்றுக் கொள்ளுபவர்களின் மேல் வேஷ்டி அவர்களின் இடுப்பில் இருப்பதுதான் சம்ப்ரதாயம். யோக வேஷ்டியையும் இந்த சந்தர்பத்தில் தவிற்பது நல்லது,.

மற்ற சமயத்தில் பொதுவாக மேல் வேஷ்டி கழுத்தை சுற்றி அணியலாம். வசதியும்கூட.

மாமா கச்சம் அணியும்போதோ அல்லது சாதாரணமாக வேஷ்டியில் இருக்கும்போதோ மேல் வேஷ்டியை எப்படி அணியவேண்டும் என குழப்பமாக உள்ளது. பலர் பலவிதமாக போட்டுக்கொள்ளுவதை பார்த்துள்ளேன். . குறிப்பாக நேற்று நடந்த பாராயண நிகழ்ச்சியில் உங்களுக்கு அருகாமையில் உடகார்ந்திருந்த ஒருவரை நீங்கள் கை சைகை மூலம் மேல் வேஷ்டியை மாத்திப்போட்டுக்கொள்ளுமாறு சொன்னதை கவணித்தேன்...”

உண்மைதான். இதில் பல பழக்கங்கள் உண்டு. தேசாச்சாரத்தின்படி சிலது மாறுபடலாம்.

பொதுவாக பூஜை,பாராயணம், ஜபாதிகள் போன்றவை செய்யும்போது மேல் வேஷ்டி நமது கழுத்தைச் சுற்றி போட்டுக் கொள்ளக் கூடாது. பிஹ்மச்சாரிகளுக்கும் கிருஹஸ்தர்களுக்கும் இந்த விதி பொது.

யோக வேஷ்டியாக (அதாவது இடது தோள் பட்டையிலிருந்து் குறுக்காக) மேல் வேஷ்டியை தரித்துக்கொள்ளலாம். அல்லது இடுப்பில் சுற்றிக்கொள்ளலாம். இரண்டும் ஏற்புடையதே.

ஆனால் வேதம் கற்றுக் கொள்ளும்போது கற்றுக் கொள்ளுபவர்களின் மேல் வேஷ்டி அவர்களின் இடுப்பில் இருப்பதுதான் சம்ப்ரதாயம். யோக வேஷ்டியையும் இந்த சந்தர்பத்தில் தவிற்பது நல்லது,.

மற்ற சமயத்தில் பொதுவாக மேல் வேஷ்டி கழுத்தை சுற்றி அணியலாம். வசதியும்கூட.

Raghunathan Iyer

unread,
Dec 17, 2015, 4:44:02 AM12/17/15
to arunalaya


எல்லோரும் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:!!!
1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.
2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.
3. ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம் இருக்காது.
4. குத்துவிளக்கு, காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.
5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.
6. எவர்சில்வர் பாத்திரங்கள் நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப் பார்க்கலாம்.
7. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.
9. எப்பொழுதாவது உபயோகிக்கும் "ஷூ"க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு "ஷூ"விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.
10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும் அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி வாசனையாக் இருக்கும்.
11. பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.
12. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால் புளித்துப் போகாமல் இருக்கும்.
13. வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள். வாடாமல் இருக்கும்.
14. பொருட்களை கறையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.
15. வெள்ளி சாமான்களை பீரோவில் வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப் போட்டு வைப்பது நல்லது.
16. அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில் சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.
17. இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின் மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.
18. காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலுமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது.
19. கடையில் மூக்குப் பொடி வாங்கித் தண்ணீரில் கரைத்து எறும்புப் புற்றின் மேல் தெளித்து விடுங்கள். எறும்புகள் மாயமாய் மறைந்து போகும்.
20. குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் தரும் போது அதில் துருவிய கசுக்கொட்டையை (முந்திரி) பொடியாக நறுக்கிய பிரெட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவித் தந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.
21. புளித்த பாலில் (மோரில்) வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரை மணிநேரம் ஊறப் போட்டுப் பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.
22. வெள்ளை நிற வாஸ்பேஷன், பாத்ரூம், டைல்ஸ் மற்றும் சிங்ககை க்ளீனிங் பவுடர்களைக் கொண்டு சுத்தம் செய்த பின், சொட்டு நீலம் கலந்த நீரால் அலம்பிவிட்டால் பளபளப்பு மேலும் கூடும்.
23. வீட்டில் ஹோமங்கள் செய்யும் போது ஒரு டேபிள் பானை (Fan) ஜன்னல் ஓரமாக வெளிப்பக்கம் பார்த்து வைத்துவிட்டால் புகை உள்ளே பரவாது.
24. வெண்ணெயில் உப்பைத் தூவி விட்டால் அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும்.
25. வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும் போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள்.காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.
26. காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.
27. பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.
28. பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.
29. கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.
30. இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே விட்டு விட வேண்டும். கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.
31. நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.
32. தேங்காய் முடியை தண்ணீரில் வைத்தால் அல்லது முடியில் சிறிது உப்பை தடவி வைத்தால் கெடாமல் இருக்கும்.
33. நகைகளை பஞ்சில் சுத்தி வைத்தால் புது பொலிவுடன் இருக்கும்.
34. வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை, கருநீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.
35. சமைக்கும் போது எரிபொருள் சிக்கனம் செய்ய வேண்டும். கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வையுங்கள்.
36. மொசைக் தரையில் அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க, வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை சோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து துடைத்து, பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒரு முறை துடைக்க வேண்டும்.
37. சமையலறையிலுள்ள பாத்திரம் கழுவும் தொட்டியைச் சுத்தப்படுத்த, பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.
38. கத்தியைச் சூடாக்கி ரொட்டியை வெட்டினால் பிசிறு இல்லாமல் நினைத்த படி வெட்டலாம்.
39. மீன் பாத்திரத்தில் மீன் வாடை இருந்தால் சீயக்காய்த் தூளையும், புளியையும் சேர்த்துப் பாத்திரத்தைத் துலக்கினால் மீன் வாடை போய்விடும்.
40. எலுமிச்சம்பழம் உலர்ந்து விட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.
41. மழை நீரில் பருப்பு வகைகளை வேக வைத்தால் ஒரு கொதியில் வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும்.
42. ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகிக்க வேண்டும்.
43. தயிர், மோர் பாத்திரங்களைச் சுத்தம் செய்து வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள வாடை நீங்கி விடும்.
44. பிளாஸ்க்கில் உள்ள துர்நாற்றம் அகல வினிகர் போட்டு கழுவலாம்.
45. கறிவேப்பிலை காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் அது காயாமல் இருக்கும்.
46. சின்ன வெங்காயத்தை வாங்கி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல் முளை வராமல் இருக்கும்.
47. எலுமிச்சம் பழத்தை நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வாடாமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும்.
48. இஞ்சியை ஈர மணலில் புதைத்து வைக்க வேண்டும்.
49. வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.
50. வெண்டைக்காயின் காம்பையும், தலைப்பாகத்தையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப் போகாமல் இருக்கும்.
51. கடலை எண்ணெய் கெடாமல் இருக்க சிறிது புளியை போட்டு வைக்க வேண்டும்.
52. எரிந்து கொண்டிருக்கும் பல்பின் மேல் இரண்டு சொட்டு சென்டைத் தெளியுங்கள். அறை முழுக்க கமகமவென்று வாசனை பரவும்.
53. நைலான் துணியை தைக்கும் போது ஊசி லேசில் இறங்காது ஊசியை அடிக்கடி சோப்பில் குத்தி எடுத்து நைலானைத் தைத்தால் சுலபமாக ஊசி இறங்கும்.
54. டூத் பேஸ்டை கடைசி வரை எடுக்க அதனை வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம் கழித்துப் பின் அழுத்த மிச்சம் மீதி பேஸ்டும் வந்துவிடும்.
55. உப்புக் கரைந்த குளிர்ந்த நீரில் ரத்தக்கறை பட்ட துணிகளைக் கொஞ்ச நேரம் ஊறவைத்து பின் எடுத்துச் சுத்தம் செய்யுங்கள். கறை போய்விடும்.
56. மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல் நீண்ட நாள் இருக்கும். கெட்டுப் போகாது.
57. வெள்ளைத்துணி பளிச்சிட வெள்ளைத் துணிகளைத் துவைக்கும் போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக் கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.
58. முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது தேயிலையினால் துடைத்தால் அழுக்கு நீங்கிக் கண்ணாடி பளபளவென்று இருக்கும்.
59. பச்சை கொத்தமல்லியையும் கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து அதிகமாக இருக்கும்.
60. கிழங்கு வகைகளை கறி செய்யும் போது அதிகமாக எண்ணெய் விட்டு வறுக்கக் கூடாது. எளிதில் ஜீரணமாகாது.
61. மின்சாரம் தடைப்பட்டிருக்கும் போது மெழுகுவர்த்தியை ஏற்றுவோம். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அதிகரிக்க மெழுகுவர்த்திக்கு பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கவும். இரு மடங்கு வெளிச்சம் கிடைக்கும்.
62. வெல்லம் சேர்த்து செய்யும் பொருட்களுக்கு நெய் ஊற்றுவதால் சுவையும் மணமும் கூடும்.
63. கேரட், பீட்ரூட் வாடி போனால் அதை நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு வைத்தால் புதியது ஆகி விடும். வெட்டவும் எளிதாகிவிடும்.
64. சிறிது வெதுவெதுப்பான நீரில் அழுக்குத் துணிகளை ஊறவைத்து பிறகு சோப்பு போட்டு துவைத்தால் சுலபமாக வெளுக்கும்.
65. ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை தூவி அதனுள் பிஸ்கட்டை வையுங்கள். பிஸ்கட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
66. அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் அதனை செடிகளுக்கு கொட்டினால் செடிகள் செழிப்பாய் வளரும்.
67. மிளகாய் நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதன் காம்பை எடுத்துவிட்டு பேப்பரில் சுற்றி ப்ரிட்ஜில் வையுங்கள். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.
68. உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் ஜொலிக்கும்.
69. வீட்டில் புகை அதிகமாக காணப்படுகிறதா? அறையில் ஈரத் துணியை தொங்க விட்டால் புகை காணாமல் போய் விடும்.
70. அலுமினிய பாத்திரங்களில் அடிப்பிடிப்புக் கறையை நீக்க உப்பு காகிதத்தால் தேய்த்தால் பாத்திரம் புதுப்பொலிவுடன் இருக்கும்.
71. சமையல் மேடையில் கேஸ் ஸ்டவ்வைத் துடைக்க தேங்காய் எண்ணெய், கெரசின் இரண்டையும் சம அளவு கலந்து பயன்படுத்தினால் கிச்சன் பளிச்சென்று இருக்கும்.
72. ப்ரிட்ஜ், ஸ்டோர் ரூம், பாத்ரூம் இவற்றில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால் ஆஸ்பிரின் மாத்திரைகளை ஆங்காங்கே வைத்தால் கரப்பான் தொல்லை இருக்காது.
73. பச்சை வெங்காயம் சாப்பிட்ட நாற்றத்தை போக்க உப்பு கலந்த நீரில் வெங்காயத்தை ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் காரம், நாற்றம் இருக்காது.
74. மிதியடிக்கு அடியில் அதே சைசில் பழைய நியூஸ் பேப்பரை வெட்டி வைத்துவிட்டால் மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில் சேர்ந்திருக்கும்.
75. வாழைப்பழம் சீக்கிரம் கறுத்துவிடாமல் இருக்க ஈரத் துணியால் சுத்தி வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும்.
76. ப்ரிட்ஜில் ஆப்பிள், கேரட் இரண்டையும் ஒரே கம்பார்ட்மெண்டில் வைக்காதீர்கள். ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒரு வித வாயு கேரட்டைக் கசக்கச் செய்துவிடும்.
77. பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.
78. லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.
79. உணவில் அதிக அளவு உப்பு சேர்ந்துவிட்டால் உரித்த உருளைக்கிழங்கை அப்படியே உணவில் போட்டு விடுங்கள். உணவில் அதிகமாக இருந்த உப்பு குறைந்துவிடும்.
80. சாப்பிட்ட பிறகு, சிறிது வினிகரும், பேரபின் எண்ணெயும் கலந்து மேஜையை துடைத்துவிட்டால் மேஜை பளபளப்பாக இருக்கும். நாற்றம் இருக்காது.
81. கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான துணியில் நனைத்து மரச் சாமான்களை துடைத்தால் வார்னீஷ் செய்தது போல் இருக்கும்.
82. பழைய புத்தகங்களை பூச்சி அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு புகையிலையை தூவினால் பூச்சி அரிப்பு இருக்காது.
83. வேக வைத்த உருளைக்கிழங்கு தோலை வீணாக்காமல் அந்த தோலைக் கொண்டு கண்ணாடிகளை துடைத்தால் பளிச்சென்று மின்னும்.
84. முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க முட்டை கூட்டின் மீது சிறிது அளவு ரீஃபைண்ட் ஆயில் தேய்த்தால் கெடாது.
85. உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.
86. சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.
87. குழந்தைகள் போடும் சாக்ஸ் லூஸாகி விட்டால், சாக்ஸ் ஓரத்தில் அதன் சுற்றளவுக்கு ஏற்றபடி ரப்பர் பேண்டை வைத்து உருட்டி தைத்துவிட்டால் ஓரம் தொய்ந்து போகாமல் காலை அழுத்தமாக பிடித்துக் கொள்ளும்.
88. வாசனை கம்மியான ஊதுவத்திகள் மீது சிறிது யூபிகோலனைத் தடவிய பின் ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் வாசனை தூக்கும்.
89. மிக்ஸியில் அரைக்கப் போடும் பொருள்கள் ரொம்பக் கொஞ்சமாக இருந்தால், தட்டினால் மூடிவிட்டு அரைத்தால் நன்றாக அரைபடும்.
90. வெள்ளைக் கலர் டெலிபோன் அழுக்கு ஏறி இருந்தால் நெயில் பாலீஷ் ரிமூவரால் அழுந்தத் துடைத்தால் பளிச்சென்று ஆகும்.
91. பிளாஸ்டிக் குடம் வீணாகிப் போனால் பாதிக்கு மேல் வெட்டி (மேல் பாகத்தை) விட்டு குப்பைக் கூடையாக அல்லது செடி வளர்க்க உபயோகிக்கலாம்.
92. சோப்புத் தண்ணீர் கொண்டு கேஸ் அடுப்பைத் துடைக்கும் போது டியூபையும் துடையுங்கள். இதனால் டியூப் நெடுநாள் உழைக்கும். சுத்தமாகவும் இருக்கும்.
93. வீட்டில் மரச் சாமான்களுக்கு உபயோகிக்கும் பெயிண்டை முறத்தில் தடவி காய வைத்தால் நீண்ட நாட்கள் முறம் புதுசு போல இருக்கும். பூச்சிகளும் அரிக்காது.
94. டூல் பாக்ஸில் ஒரு சாக்பீஸ் கட்டி அல்லது கரித் துண்டை போட்டால், அது ஈரப் பசையை உறிஞ்சி டூல்ஸ் துருப்பிடிக்காமல் இருக்க உதவும்.
95. செருப்பின் மேல் பாகத்துத் தோலின் அடிப்பாகத்தில் மெழுகுவர்த்தியை நன்றாகத் தேய்த்து, பிறகு அணிந்து கொண்டால் செருப்பு கடிக்கவே கடிக்காது.
96. துணி பீரோவை சுத்தம் செய்யும்போது முதலில் பீரோ தட்டுகளில், பயன்படுத்திய கொசுமேட்டை ஐந்தாறு பரப்பி அதன் மேல் பேப்பர் போட்டுத் துணியை அடுக்கினால் ஒரு வருடம் வரை பூச்சிகள் நெருங்காது.
97. கொசு தொல்லைக்காகப் போடப்பட்டுள்ள நெட்லானில் சிறிய துளைகள் ஏற்பட்டு விட்டால், செலோடேப் கட் பண்ணி ஒட்டலாம்.
98. கருவேப்பிலைச் செடிக்குப் புளித்த தயிர் அல்லது மோர் விட்டால் நன்கு செழிப்பாக வளரும். தயிர் பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் விட்டுக் குழப்பி அந்நீரையும் விட்டு வரலாம்.
99. குழந்தைகளுக்கு உபயோகித்த சின்ன சைஸ் கொசுவலை துணியில், embroider கைவண்ணம் காட்டி டி.வி. கவராக பயன்படுத்தலாம்.
100. துணிகளில் ஹேர்-டை பட்டால் அந்த கறையை நீக்க, நெயில்பாலிஷ் ரிமூவரால் டை படிந்த பகுதியைத் துடைத்தால் கறை போய்விடும்.
101. ரப்பர் ஸ்டாம்ப் பேட், இங்க் காய்ந்து போய்விட்டால் நீலம் சில சொட்டுகள் விட்டால் அழகாக பதிய வரும்.
102. மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால் பல்லுக்கும் உறுதி, பல்லும் பளிச்சென்று இருக்கும்.
103. தேங்காய் உடைத்த இளநீரை சுண்ணாம்பு பாட்டிலில் சிறிது ஊற்றி வைத்தால் சுண்ணாம்பு சீக்கிரத்தில் காய்ந்து போகாமல் இருக்கும்.
104. மின்விசிறியில் தூசி படிந்து, கறை படிந்து விட்டதா? ஒரு துணியை மண்ணெண்ணையில் நனைத்து மின் விசிறியை அழுத்தித் துடையுங்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு நல்ல துணியால் துடைத்துப் பாருங்கள். பளிச்சென்றாகிவிடும்.
105. அரை வாளி தண்ணீரில், நான்கு மேஜைக்கரண்டி வினீகரை கலந்து ஜீன்ஸ் துணிகளை அலசினால் சாயம் போவதை தடுக்கலாம்.
106. புது வீட்டில் பெயிண்ட் அடித்த வாடை போக மறுக்கிறதா? ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை நிரப்பி அறைகளில் வையுங்கள். வாடை போய்விடும்.
107. ஆணி அடிக்கும் போது நுனியில் தேங்காய் எண்ணெய் தடவினால் சுவரில் சுலபமாக இறங்கும்.
108. சமையல் அறையில் எண்ணெய் பசையுள்ள இடத்தில் சுண்ணாம்புடன் மண்ணெண்ணெய் கலந்து அடிக்கலாம்.
109. கூர்மையான கத்திகளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.
110. பால் பாக்கெட் வாங்கி காய்ச்ச நேரமில்லாமல் போனால் அதை தண்ணீருக்குள் போட்டு வைத்துவிட்டால் மூன்று மணி நேரம் கழித்துக் கூட காய்ச்சலாம்.
111. இனிப்பு பலகாரங்கள் உலர்ந்து கெட்டுப் போகாமலிருக்க அதன் மீது சிறிது தேன் பூசி வைக்கலாம்.
112. பால் காய்ச்ச மறந்து போய் விட்டீர்களா? பால் திரிந்து போகுமோ என்ற பயம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பாலைக் காய்ச்சும் முன் ஒரு சிட்டிகை சமையல் சோடா மாவு கலந்து காய்ச்சினால் பால் திரியாது.
113. காபி பொடியை போடுவதற்கு முன் பில்டரின் அடிப்பாகத்தை தீயில் காட்டி விட்டு பின்பு உபயோகித்தால் டிகாஷன் கலகலவென்று இறங்கும்.
114. நெய் எவ்வளவு நாளானாலும் பிரஷ்ஷாக இருக்க அதோடு ஒரு வெல்லத் துண்டைப் போட்டு வைக்கவும்.
115. தக்காளி, எலுமிச்சைப் பழம் சீக்கிரம் கெடாமலிருக்க உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
116. கோதுமை மாவை நன்கு சலித்து சிறிதளவு டேபிள் சால்ட்டை கலந்து வைத்தால் வண்டுகள் வராது.
117. தயிர் புளித்து விடுமோ என்ற பயம் வேண்டாம்.ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.
118. ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு, மிளகாய்ப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து தாளித்துக் கொட்டுங்கள். புதுமையான ஊறுகாய் தயார்.
119. தேங்காயை சரிபாதியாக உடைக்க, தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.
120. கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து சுத்தமாக தண்ணீரில் அலசி காய வைத்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.
121. குளிர்ந்த நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் காய்கறிகள் அப்போது பறித்தது போல் "பிரஷ்"ஷாக இருக்கும்.
122. உப்பு வைத்திருக்கும் பாத்திரத்தினுள்ளே ஒரு பிளாஸ்டிக் பேப்பரை போட்டு அதன் மீது உப்பைக் கொட்டி வையுங்கள். உப்புக்கல் கசியாமல் அப்படியே இருக்கும்.
123. குடிக்கும் தண்ணீர் மணமா இருக்கணுமா? வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியை போட்டு வையுங்கள்.
124. முதல் நாள் சாதம் மீதி இருந்தால் கவலை வேண்டாம். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து இரண்டு பிடி கடலை மாவு, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஒரு கரண்டி தயிர் விட்டு தண்ணீர் சேர்த்து தோசையாக வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.
125. சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க, அதை சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கவும்.
126. மழைக்காலங்களில் தீப்பெட்டியிலுள்ள குச்சிகள் நமத்து போகாமல் இருக்க பெட்டியினுள் நான்கைந்து அரிசியைப் போட்டு ஒரு டப்பாவில் போட்டு மூடிவிட்டால் குச்சிகள் எளிதில் தீப்பற்றும்.
127. உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல, எல்லா காய்கறிகளையும் ஒன்றாக வதக்கி உருட்டி கடலை மாவில் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்க வெஜிடபிள் போண்டா செய்யலாம். குழந்தைகள் காய்களையும் சாப்பிட ஒரு சந்தர்ப்பம்.
128. தானியம் மற்றும் பயறு வகைகளை எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம் தயார். தானியங்களை முளை கட்டுவதற்கு ஒரு எளிய வழி.
129. கோதுமையை நன்கு கழுவி நான்கு மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.
130. சமையலில் உப்பு சற்று கூடுதலா? கவலை வேண்டாம். பால், க்ரீம், தயிர் இவற்றில் ஏதோ ஒன்றினைச் சேருங்கள். சரியாகிவிடும்.
131. வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பூ, வாழைத்தண்டின் நிறம் மாறாது. கறை பிடிக்காது. துவர்ப்பு நீங்கும்.
132. துவைத்த துணிகளுக்கு நீலம் போடும் போது நீலம் கரைத்த நீரில் சிறிது வாஷிங் சோடாவையும் கலந்து கொண்டால் துணியில் நீலம் திட்டுத்திட்டாக இல்லாமல் சமமாக இருக்கும்.
133. பாலேடு, தயிரேடுகளை பாட்டிலில் போட்டு குலுக்க வெண்ணெய், மோர் ஒரே சமயத்தில் கிடைக்கும்.
134. கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.
135. இட்லிக்கு மாவு அரைக்க அரிசியை ஊறப் போட மறந்து விட்டீர்களா? இதோ ஒரு வழி உடனே சுடு தண்ணீரிலே அரிசியை ஊறப் போடுங்கள். பத்து நிமிடத்தில் ஊறிவிடும்.
136. உங்கள் இஸ்த்திரி பெட்டி நைலான் துணி மீது தேய்த்தால் அடிப்பாகம் வீணாகிவிட்டதா? அப்பெட்டியினை சூடாக்கி பச்சை வாழை இலையின் மீது தேயுங்கள். பெட்டியின் அடிப்பாகம் சரியாகிவிடும்.
137. காபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை படிந்து உள்ளதா? ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேயுங்கள். கறைகள் விட்டு விலகும்.
138. பிளாஸ்கில் உள்ள துர்நாற்றம் போக வினிகர் போட்டு கழுவலாம்

Raghunathan Iyer

unread,
Dec 18, 2015, 4:24:59 AM12/18/15
to arunalaya

எல்லோரும் அர்த்தநாரீஸ்வரர்..! சிவனும் சக்தியும் சரி பாதி சிவன் தன்னில் சரிபாதி சக்திக்கு கொடுத்தார் .இது எல்லோர்க்கும் தெரிந்த ஒன்று . இதன் இறை ரகசியம் என்ன ?

மனித உடலை சரிபாதியாக மேல் இருந்து கீழாக பிரிததால் இரண்டு பகுதியும் ஒரே மாதிறியாக இருக்காது .ரோமங்களில் இருந்து உடல் உறுப்பு வரை கொஞ்சமேனும் மாற்றம் இருக்கும் சுவாசமும் ஒரே மாதிரி நடைபெறாது . வலது பக்கத்திற்கு சூரிய உடல் ( ஆண் சிவன் ) இடது சந்திர உடல் (பெண் சக்தி ) இந்த அமைப்பில் தான் இறைவன் படைப்பு உள்ளது. உறுப்புகளின் அமைப்பு கொஞ்சம் மாற்றம் இருந்தாலும் ஒன்றை விட்டு இன்னொன்று தனித்து இயங்க முடியாது. ஒரே உடலில் வலது நாசியில் சுவாசம் ஓடும் போது ஆண் தன்மையும் இடது நாசியில் சுவாசம் ஓடும்போது பெண்தன்மையும் இருக்கும். ஆண் பெண் இல்லற சேர்க்கையில் சூரிய கலையில் ஆணும் சந்திர கலையில் பெண் கருவும் உருவாக்கும் .பிரமச்சரியத்தில் இருக்கும் யோகிகள் சூரிய சந்திர நாடி கலை ஒன்றாக இணைத்து இன்புறுவார்கள் .ஆண் தன்மையும் பெண் தன்மையும் இல்லாமல் உலகில் எந்த செயலும் நடை பெறாது. இருப்பு சிவன் .ஆற்றல் சக்தி . ஒன்றில்லாமல் இன்னொன்று இல்லை. இறை வடிவ அமைப்பில் கூட மனித ரகசியங்களை இடம் பெற செய்தார்கள் முன்னோர்கள் . வாழ்க்கையில் கணவன் மனைவி மன பேதங்கள் இருப்பவர்கள் வீட்டில் இந்த அர்த்தநாரீஸ்வரர் உருவ வழிபாடு ஒற்றுமையை ஏற்படுத்தும் .யோக கலை அன்பர்கள் கந்த ஸ்தல தியானம் செய்தால் இந்த சிவ சக்தி அருள் ஒருங்கே கிடைக்கும். நீங்கள் எல்லோரும் அர்த்தநாரீஸ்வரர் தான் எல்லோரும் ஈசதுவம் பெறுங்கள். ஓம் சிவாய நமஹ
கந்த ஸ்தல தியானம். தலை உச்சியில் செய்யப்படும் துரிய தவதிர்க்கு கந்த ஸ்தல தியானம் என்று பெயர். சாதாரண தவதிர்க்கு துரிய நிலை என்றும் , சிவ சக்தி இணைப்பிற்கு கந்த ஸ்தலம் என்று பெயர். கணவன் மனைவி இல்லற கருத்து இணைப்பிற்கு இது சக்தி வாய்ந்த தவம். --- எப்போதும் போல் சாதாரண தவ நிலையில் அமர்ந்து மூலதாரத்தில் சிவ சக்தி ( அர்த்த நாரீஸ்வரர் ) உருவத்தை நிலை நிறுத்த வேண்டும் . கணவன் / மாணவி இன் கோரிக்கையை எண்ணங்களால் அங்கே பதிவு செய்தல் வேண்டும். பின்பு சிவசத்தி உருவத்தை முதுகு தண்டின் வழியாக மேல் நோக்கி எடுத்து சென்று தலை உச்சியில் நிறுத்தி 5 முறை சிவாய நமஹ என உச்சரித்து . அங்கே சிவ சக்தி உருவுக்கு பதில் கணவன் / மனைவி உருவை நிறுத்தல் வேண்டும் . இதே நிலையில் செய்யப்படும் தவம் ஆணுக்காக இருந்தால் சிவாய நமஹ என்றும் பெண்ணுக்காக இருந்தால் ஓம் சக்தி என்றும் 108 முறை இந்த திரு மந்திரம் உறு ஏற்றுதல் வேண்டும் .இந்த திருமந்திரம் உறு ஏற்றும் போது கணவன் / மனைவி உருவம் மறைத்தல் கூடாது பின்பு மீண்டும் மூலதாரத்தில் தவம் முடித்தல் வேண்டும் கணவன் மனைவி கருத்து வேறுபாடு நீண்ட நாள் பிரிவு , 100 % நீங்கும் .வீட்டில் அர்த்த நாரீசுவரர் வழிபாடு உறுதுணை யாய் இருக்கும் . 48 நாள் இத் தவம் செய்தால் விவாகரத்து கூட மனம் மாறும் . எனது அனுபவத்தில் இம்முறையில் நிறைய அன்பர்கள் வெற்றி கண்டுள்ளார்கள் இறைவன் மேல் நீங்கள் கொண்ட பாசத்தை கணவன் / மனைவி மேல் திருப்பி விடும் போது அது இல்லற தார் இறக்கும் வரை பிரிவு கண்டிராத மாபெரும் சக்தியாக மாரும். ஓம் சிவாய நமஹ


By - Amirtha Great Joshier/ Tamilnadu


Raghunathan Iyer

unread,
Dec 21, 2015, 1:37:31 AM12/21/15
to arunalaya

என் தர்பார்ல கல்லும் முள்ளுந்தான்! பக்கவாத்யம் இல்லாம, தம்பூர் கூட இல்லாம வந்திருக்கே! எத்தனை ஸ்ரமமானாலும் ஸஹிச்சிண்டு, எனக்காக கொஞ்சம் அந்த க்ருதியைப் பாடு!.."

(க்ருஷ்ணனைப் போல், அரியக்குடியின் ஸங்கீதத்தை ரஸித்த பெரியவா)

ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே-அரியக்குடி ஸ்ரீ ராமானுஜ ஐயங்கார்

(பெரியவாளின் சங்கீத ரசனை)

1961ல் பெரியவா தேவகோட்டையில் முகாம். காஷ்ட மௌனம்! சின்ன அசைவு கூட இல்லாமல் பட்டகட்டை மாதிரி இருந்தார். இது ஒருவாரம், பத்து நாள் என்று நீடித்துக் கொண்டே போனது. பெரியவாளைப் பேச வைக்க, பாரிஷதர்களும், பக்தர்களும் பண்ணின பாச்சா எதுவுமே பலிக்கவில்லை. ஒருநாள் காலை, காரைக்குடியிலிருந்து நகரத்தார் சிலர் பெரியவாளை தர்சித்து, தங்கள் விஞ்ஞாபனங்களை ஸமர்ப்பித்தனர். பெரியவா கேட்டுக் கொள்கிறாரா என்பது கூட தெரியவில்லை.

அப்படி சொல்லும்போது, ப்ரபல இசை மேதை அரியக்குடி ஸ்ரீ ராமானுஜ ஐயங்கார் காரைக்குடியில்தான் இருக்கிறார் என்று சொன்னார்களோ இல்லையோ, அத்தனை பேரும் ஆச்சர்யப்படும் வகையில், "அவரை இங்கே அழைச்சிண்டு வர முடியுமா?.." என்று ஜாடையில் கேட்டார் பெரியவா! அன்று மத்யானமே அரியக்குடி பெரியவா முன் ஆஜராகிவிட்டார்! பெரியவாளின் பரம பக்தர் அவர். தனக்காகவே ஜகதாச்சார்யார் தன்னுடைய காஷ்ட மௌனத்தைக் கூட விட்டுவிட்டு, கூப்பிட்டனுப்பி இருக்கிறார் என்று நெஞ்சம் தழுதழுக்க பெரியவாளை நமஸ்கரித்தார்.

தேவகோட்டையில் பெரியவா தங்கியிருந்த இடம் ஒரு யாத்ரிக விடுதியின் பின்பக்கம் உள்ள தோட்டத்தில்தான்! அங்கிருந்த ஒரு சின்ன ரூமுக்குள் உட்கார்ந்து கொண்டு இருந்தபடி எல்லாருக்கும் ஜன்னல் வழியாக தர்சனம் குடுத்துக் கொண்டிருந்தார்

செடியும் கொடியும் புல்லும் மண்டிய பகுதியில் நின்று கொண்டுதான் பெரியவாளை தர்சனம் பண்ணவேண்டும். மொஸைக் தரை சொகுஸுக்காரார்களுக்கு இங்கே கொஞ்ச நேரம் நிற்பது கூட கஷ்டந்தான்! அப்படியிருக்கும்போது அரியக்குடி அங்கே வந்து அந்தக் காட்டுத் தோட்டத்தில், அப்படியே ஜன்னலுக்கு கீழே தண்டனிட்டு எழுந்தார். அத்தனை நாள் காஷ்ட மௌனத்திலிருந்தவர் அரியக்குடியைப் பார்த்ததும், மடை திறந்த வெள்ளம் போல் பேச ஆரம்பித்தார்.

"நீ ராஷ்ட்ரபதி அவார்டெல்லாம் வாங்கினதாக் கேள்விப்பட்டேன். அப்போ ஒனக்கு ரெட் கார்பெட் போட்டு, அதான்....நடை பாவாடையா ரத்னக் கம்பளம் போட்டு பெரிய்ய சதஸ்ல கௌரவப்படுத்தியிருப்பா

நா....என்னடான்னா....இங்க ஒரே கல்லும் முள்ளுமா ஒரு கீக்கெடத்துல ஒன்னை ஒக்காத்தி வெச்சுட்டேன்! எதுக்கு ஒன்னை கூப்டேன்...ன்னா, 'ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே' இருக்கே.... அதை யாராவுது ஸுத்தமாப் பாடி கேக்கணும்.ன்னு ஒரு ஆசை! ஒம்பேரு காதுல பட்டவொடனே அந்த நெனைப்பு வந்துடுத்து. ஸுத்தமாப் பாடறதுன்னா, ஸங்கீதமும் ஸுத்தமாயிருக்கணும்; ஸாஹித்ய உச்சரிப்பும் ஸுத்தமாயிருக்கணும்; ரொம்பப் பேர் தெலுங்கு, ஸம்ஸ்க்ருத கீர்த்தனங்கள்... வார்த்தைகளை விரூபமாக்கிடறா!

பாடறப்போ, ஸங்கீதம் தாளம் இதுகளோட, கூட அர்த்தத்துக்கும் ஹானி இல்லாம எப்டி ஸந்தி பிரிக்கணுமோ, சேக்கணுமோ, அப்டிப் பாடணும்! நல்ல வாக்யேகாராள் க்ருதிகள்..ளாம் இதுமாதிரி ஸுத்தமாப் பதம் பிரிச்சுப் பாடறதுக்கு நிச்சியமா எடம் குடுக்கும். ஆனா, பாடறவாள்ள ரொம்பப் பேர் அர்த்தத்தை கவனிக்காம, ஸங்கீதத்தை மட்டும் கவனிக்கறதால, எழுத்துல இருக்கற பாட்டை காதுல கேக்கறப்போ, விபரீதமா அர்த்தம் குடுக்கும்படியாப் பண்ணிடறா!.....எப்டி...ன்னா? ஒரு உதாரணம் சொல்றேன்..

இந்த ஸுப்ரஹ்மண்யாய நமஸ்தே..ல ஒரு எடத்ல, "குருகுஹாயாஜ்ஞான த்வாந்த ஸவித்ரே"ன்னு வரது. அதை, "குருகுஹாய, அஜ்ஞான த்வாந்த ஸவித்ரே"ன்னு பிரிஞ்சாத்தான் செரியான அர்த்தம் குடுக்கும். குருகுஹனுக்கு, அஞ்ஞான இருட்டுக்கு ஸூர்யனா இருக்கறவனுக்கு நமஸ்காரம்..ன்னு அர்த்தம். செல பேர் என்ன பண்றான்னா... "குருகுஹாயா.."ன்னு நீட்டீண்டே....போயி, அதை ஒரு தனி வார்த்தை மாதிரி காட்டிட்டு, "ஞான த்வாந்த ஸவித்ரே"ன்னு [சிரித்துக் கொண்டே] ஞான இருட்டுக்கு ஸூர்யன்னு விபரீதமாப் பாடறா!.....

"சங்கராச்சார்யம்" க்ருதி இருக்கே, நீ பாடறியோ என்னவோ, [வீணை] தனம்மா குடும்பத்ல வந்து, செம்மங்குடி சீனு, எம்.எஸ்.கூட பாடறா.....அதுல, "பரமாத்வைத ஸ்தாபன லீலம்"ன்னு வரது. அப்டீன்னா...வெளையாட்டாவே பரம தத்வமான அத்வைதத்த ஸ்தாபிச்சவர்.ன்னு அர்த்தம். பாடறச்சே "பரம அத்வைத ஸ்தாபன லீலம்"ன்னு [பெரியவா தன்னுடைய மதுரமான குரலில் இதை பாடியே காட்டினார்] அந்த "அ" ல அழுத்தங் குடுத்துப் பதம் பிரிச்சுப் பாடினாத்தான் செரியா அர்த்தம் குடுக்கும். நா.....ஏதோ, காமாசோமான்னு பாடறச்சேயே இந்த மாதிரி சங்கீதத்துக்கு ஹானியில்லாம, தாளத்துக்கும் ஹானியில்லாம, அதோட கூட அர்த்தத்துக்கும் ஹானியில்லாம பாட முடியறதுன்னு தெரியறதோல்லியோ? நான் சொன்னவாள்ளாமும் இப்டித்தான் பாடறா. ஆனா, புரிஞ்சுக்காதவா, புரிஞ்சுண்டு பாடணும்ங்கற கவலை இல்லாதவாள்ளாம் "பரமா....."ன்னு அப்டியே.....நீட்டிண்டே போய் "த்வைத ஸ்தாபன லீலம்"ன்னு பாடி, அத்வைத ஆச்சார்யாளை "த்வைத" ஆச்சார்யாளா கன்வெர்ட் பண்ணிடறா....! [வெகு நேரம் சிரித்தார்]

ஸங்கீதத்ல, த்வைத-அத்வைதம்..ன்னு எந்த பேதமும் இல்லே. ஸங்கீதத்ல ஸங்கீதந்தான் முக்யம். ஸாஹித்யம் எதைப் பத்தினதோ, யாரைப் பத்தினதோ...அதைப் பாடறவா மனஸை அந்த ஸங்கீதமே ஐக்யப்படுத்திடறது. அதுனாலதான், நீ... வைஷ்ணவன், இருந்தாலும் ஒங்கிட்ட "ஸ்ரீ ஸுப்ரஹ்மண்யாய" ஒட்டிண்டிருக்கு; இல்லாட்டா, நீ அதுகிட்ட ஒட்டிண்டிருக்கே! ஏதோ ஒண்ணு. அந்த க்ருதி நீ பாடிக் கேட்ருக்கேன்! ஸங்கீத அம்ஸத்ல நீ ஸுத்தம்...ங்கறதுக்கு நான் சொல்ல வேணாம். ஸாஹித்யமும் நீ ஸுத்தமா பாடறே..ன்னு கவனிச்சேன். அதான் ஒனக்கு சொல்லி அனுப்பிச்சேன்!

என் தர்பார்ல கல்லும் முள்ளுந்தான்! பக்கவாத்யம் இல்லாம, தம்பூர் கூட இல்லாம வந்திருக்கே! எத்தனை ஸ்ரமமானாலும் ஸஹிச்சிண்டு, எனக்காக கொஞ்சம் அந்த க்ருதியைப் பாடு!.." கடல்மடையாகப் பெரியவா பேசி முடித்ததும், அரியக்குடி கடல்மடையாகக் கண்ணீரை பெருக்கி விட்டார். விம்மிக் கொண்டே நெடுஞ்சாண்கிடையாக பெரியவாளை மீண்டும் நமஸ்கரித்தார். அழுகையும், ஆனந்தமும் ஒரு சேர.... "பெரியவா பாடச் சொல்லி, "பெரியவாளுக்கு"ன்னு பாடறதை விட, தாஸனுக்கு எந்தப் பெரிய கௌரவமும் இல்லே. தாஸனையும் ஒரு பொருட்டா நெனைச்சு, வலிஞ்சு வந்து ஒரு ஸந்தர்ப்பம் குடுத்து, பெரியவா அனுக்ரஹிச்சிருக்கற கருணையை என்ன சொல்றதுன்னு தெரியலே! ஸ்ருதி, பக்கவாத்யம் எல்லாத்தையுமே பெரியவாளோட இந்த அனுக்ரஹமே இட்டு நிரப்பணும். "அவ்விடத்ல" எதிர்பாக்கற அளவுக்கு, செரியாப் பாடறதுக்கும், அந்த அனுக்ரஹந்தான் ஸஹாயம் பண்ணணும்" என்று அவர் பாடுவதைப் போலவே அழகாக சொல்லிவிட்டு மீண்டும் நமஸ்காரம் பண்ணிவிட்டு அந்தக் கட்டாந்தரையிலேயே உட்கார்ந்து கொண்டு, பாட ஆரம்பித்தார்.

சுற்றி இருந்தவர்கள் கண்கள் குளமாயின. மஹா மஹா பெரியவா ஒரு சின்னக் குழந்தை மாதிரி "எனக்காகப் பாடறியா?" என்று கேட்ட எளிமையை நினைத்து உருகுவதா? ஸ்ரீ அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ஹ்ருதயம் விம்ம பெரியவாளுடைய அனுக்ரஹத்தை வேண்டியதை நினைத்து உருகுவதா? மஹா பக்தரான ஸூர்தாஸ் பாடுவதைக் கேட்க ஆசையோடு அவர் முன் உட்கார்ந்திருக்கும் க்ருஷ்ணனைப் போல், அரியக்குடியின் ஸங்கீதத்தை ரஸித்துக் கொண்டிருந்தார் பெரியவா


Raghunathan Iyer

unread,
Dec 21, 2015, 3:04:36 AM12/21/15
to arunalaya

தீபம் ஏற்றும் முறை !!!
வீட்டின் முன்கதவைத் திறந்து, பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேற்ற வேண்டும். 
அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும், 
மாலை ஆறரை மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் நிறைவான வளமும், பலனும் நிச்சயம். 
விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. 
பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். 
இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.
விளக்கேற்றும் நேரம் 
சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் 
(காலை4.30- 6 மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம்உண்டாகும். 
முன்வினைப் பாவம் விலகும். 
மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் 
மிகவும் உகந்தவை.இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, 
கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில்விளக்கேற்றினாலும், 
கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். 
இது அனைவருக்கும்பொதுவான நேரம்.
விளக்கேற்றும் பலன் 
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும் உண்டாகும்
விளக்கேற்றும் திசை
கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு - கடன், தோஷம் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.

முதல் விளக்கு திருவிழா
திருவிளக்கு வழிபாடு இன்று நேற்று தோன்றியதல்ல. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு
முன்பே தமிழ்மக்கள் இறைவனைஜோதியாக வணங்கிப் போற்றியுள்ளனர். 
சங்ககால இலக்கியங்கள் இவ்வழிபாட்டை "கார்த்திகை விளக்கீடு' என்றுகுறிப்பிடுகின்றன.
பெண்கள் விளக்கு வழிபாடு செய்த நிகழ்வு அகநானூறு, நற்றிணை போன்ற 
எட்டுத்தொகை நூல்களில்இடம்பெற்றுள்ளன. 
சங்க இலக்கிய ஆய்வாளர்கள் சிலர், கார்த்திகை மாதத்தையே முதல் மாதமாகக் 
கொண்டு தமிழ்ப் புத்தாண்டுகொண்டாடப்பட்டதாக கருதுகின்றனர். கார்த்திகை 
மாத கார்த்திகை நட்சத்திரத்தன்று வீடு முழுக்க விளக்கேற்றுவதைப் பற்றிசம்பந்தர் 
பாடியிருக்கிறார். மயிலாப்பூரில் தனக்கு நிச்சயம் செய்த பூம்பாவை என்ற பெண் 
திடீரென மரணமடையவே, அவர்
"விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்'' என்று பாடுவதில் இருந்து 
இந்த விழாவின் மேன்மையை அறியலாம்.
திருவிளக்கின் சிறப்பு
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். 
தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது.இதன் அடிப்பாகத்தில்
பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் 
இடத்தில் சிவபெருமானும் வாசம்செய்கின்றனர்.
எண்ணெயின் பலன்கள் 
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய் - வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய் - சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய் - புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய் - அம்மன் அருள்
கடலெண்ணெயில் விளக்கேற்றக் கூடாது.
திருவிளக்கில் எத்தனை பொட்டு வைக்க வேண்டும் ? 
திருவிளக்கின் உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீப பாதம் ஆகிய எட்டு 
இடங்களில் சந்தனப்பொட்டும், அதன் மேல்குங்குமமும் வைக்க வேண்டும். 
பொட்டு வைக்கும் போது ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, 
தனலட்சுமி, தான்யலட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி 
ஆகியோரை தியானிக்க வேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும்.
எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியான காரணமும் உண்டு. நிலம், நீர்,
காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்துபூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய 
கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த 
பொட்டுகள்குறிக்கின்றன.
எந்த தெய்வத்துக்கு என்ன எண்ணெய் ? 
விநாயகர் - தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் - நல்லெண்ணெய்
அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த
5 கூட்டு எண்ணெய் - பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் - நல்லெண்ணெய்
விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்
ஞாயிறு - கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
திங்கள் - மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
வியாழன் - குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
சனி - வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருட்கள் கிடைத்தல்.

Raghunathan Iyer

unread,
Dec 23, 2015, 12:40:42 AM12/23/15
to arunalaya


நீங்கள் எந்த அளவு அதிர்ஷ்டசாலி?

* உண்ண உணவும், உடுக்க உடையும், வசிக்க இடமும் உனக்கு இருந்தால் உலகில் உள்ள 75% மக்களைவிட அதிக வசதிகளை நீ பெற்றிருக்கிறாய்.

* வங்கியில் உனக்குப் பணமிருந்தால் அவ்வாறு உள்ள 8% பணக்காரர்களுள் நீயும் ஒருவன். (80% மக்களுக்கு வங்கிக் கணக்கே இல்லை!)

* உன்னிடம் கணிப்பொறி இருந்தால் நீ அவ்வாறு வாய்ப்பு பெற்ற 1% மனிதர்களுள் ஒருவன்.

* நினைத்த நேரத்தில் நினைத்த நபருடன் மொபைலில் உன்னால் பேச முடிந்தால் அவ்வாறு வாய்ப்பே இல்லாமல் இந்த உலகில் இருக்கும் 175 கோடி மக்களை விட நீ மேலானவன்.

* நோயின்றி, காலையில் புத்துணர்வுடன் நீ எழுந்தால், அந்த வாய்ப்பற்று இரவு படுக்கையிலேயே உயிர் துறந்த பலரைவிட நீ பாக்கியவான்.

* பார்வையின்மை, செவித்திறன் குறைபாடு, வாய் பேசாமை, உள்ளிட்ட எந்த குறைபாடுகளும் இல்லாது நீ இருந்தால் அவ்வாறு உள்ள 20 கோடி மக்களை விட நீ நல்ல நிலையில் இருக்கின்றாய்.

* போர், சிறைத்தண்டனை, பட்டினி போன்ற சித்ரவதையில் நீ சிக்காமல் இருந்தால், உனக்கு உலகிலுள்ள 70 கோடி மக்களுக்குக் கிடைக்காத நல்ல வாழ்க்கை அமைந்துள்ளது என்பதை அறிந்திடு.

* கொடுமைக்கு உள்ளாக்கப்படாமல் நீ விரும்பும் தெய்வத்தைத் தொழ முடிந்தால், உலகிலுள்ள 300 கோடி மக்களுக்குக் கிடைக்காத சலுகையைப் பெற்றவன் நீ.

* உன் பெற்றோரை பிரியாமல் அவர்கள் உங்களுடன் இருந்தால் நீ துன்பத்தை அறியாதவன் என்பதைப் புரிந்து கொள்.

தாகம் எடுத்தால் குடிப்பதற்கு உங்களுக்கு பபுள் டாப்பில் தண்ணீர் கிடைக்கிறதா? அப்படியெனில் நீங்கள் கொடுத்து வைத்தவர். ஏனெனில், உலகம் முழுதும் சுமார் 100 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு பாதுகாப்பான தண்ணீர் குடிப்பதற்கு இல்லை.

* உன்னால் தலை நிமிர்ந்து நின்று சிரிக்க முடியுமானால் அவ்வாறு செய்ய இயலாத அளவுக்குத் தைரியமும் நம்பிக்கையும் இல்லாதவர்களையும்விட நீ கொடுத்து வைத்தவன்.

*கல்வியறிவு பெற்றிருந்து இந்தச் செய்தியைப் உன்னால் படிக்க முடிந்தால் அவ்வாறு செய்ய இயலாத 80 கோடி பேர்களுக்குக் கிடைக்காத கல்வியை நீ பெற்றுள்ளாய். (உலக அளவில் எழுத படிக்க தெரியாத மக்களின் எண்ணிக்கை மட்டுமே 80 கோடிக்கும் மேல்).

* இணையத்தில் இந்த செய்தியை உன்னால் பிரவுசிங் செய்து படிக்க முடிந்தால் அது கிடைக்காத 300 கோடி மக்களை விட நீ மேலானவன்.

நீங்கள் அனுபவித்து வரும் வசதிகளையும், தொழில்நுட்பத்தையும் அனுபவிக்க இயலாமல் ஏன் அது பற்றிய அறிவு கூட இல்லாமல் கோடிக்கணக்கானோர் இந்த உலகில் இருக்க, ஆண்டவன் இவ்வளவு விஷயம் உங்களுக்கு கொடுத்திருக்கும்போது நீங்க அதிர்ஷ்டசாலி இல்லையா பின்னே?

Raghunathan Iyer

unread,
Dec 26, 2015, 2:19:51 AM12/26/15
to arunalaya

ஜனவரி 1 - நமக்கு புத்தாண்டா ?
(சர்மா சாஸ்திரிகளின் “வேதமும் பண்பாடும்” நூலிலிருந்து)

கேள்வி: ஜனவரி முதல் தேதியை புத்தாண்டாக ஹிந்துக்களாகிய நாம் கொண்டாடுவதை நீங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என நினைக்கிறேன். அதுபற்றி விளக்க முடியுமா?

பதில்: மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் இந்தப் பழக்கத்தை பின்பற்றி ஹிந்துக்களும் ஜனவரி முதல் தேதியை புத்தாண்டாக கொண்டாடி வருகிறோம். ஜனவரி முதல் தேதி என்று கூறும்போதே சிலரிடம் “உற்சாகம்“ ஏற்பட்டு விடுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்த உற்சாகம் அதிகரித்திருக்கிறது.

நம்மில் பெரும்பாலானவர்கள் இதை நம் கலாச்சாரத்தின் அங்கமாக கருதி தங்கள் வீடுகளில்கூட இதைக் கொண்டாடுகின்றனர். சிலர் இந்தநாளின் மீது உணர்வுப் பூர்வமான நெருக்கத்தையும்கூட கொண்டிருக்கின்றனர்.

இதற்கு நமது மத ரீதியாக ஏதேனும் முக்கியத்துவம் உள்ளதா என சற்றே சிந்தித்துப் பார்ப்போம். துளியும் கிடையாது.
பின் எதற்காக இந்த கொண்டாட்டங்களுக்கு நாம் மத ரீதியான முக்கியத்துவம் கொடுக்கிறோம்.

எதற்காக கோயில்களை நள்ளிரவு வரை திறந்து வைத்து, அபிஷேகம், திருமஞ்சனம் போன்ற சடங்குகளை மேற்கொள்கிறோம்? அகால நேரங்களில் பூஜைகள் செய்வது நமது ஆகம சாஸ்திரங்களுக்கு மிகவும் விரோதமானது.

கிறிஸ்தவர்கள் நள்ளிரவில் சர்ச்சுகளுக்கு சென்று வழிபாடு நடத்துகிறார்கள் என்றால், அவர்கள் மதத்தில் அவ்வாறு கூறப்
பட்டுள்ளது.

அதேபோல் நாமும் நமது மத சம்பிரதாயங்கள் எதைச் செய்யவேண்டும் என்றும் செய்யக்கூடாது என்று கூறுகிறதோ, அவ்வாறு நடந்துகொள்ள வேண்டாமா?

நடு நிசி ஆராதனைகள் (நள்ளிரவு வழிபாடுகள்) நடத்துவது நமது தர்மத்திற்கு எதிரானது என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். நமது நாள் பிரம்மமுகூர்த்த நேரத்தில், அதாவது அதிகாலை சுமார் நான்கு மணிக்கு தொடங்குகிறது.

நமது ஹிந்து சம்ஸ்காரங்கள் மற்றும் பஞ்சாங்கத்தின்படி வைகுண்ட ஏகாதசி மற்றும் சிவராத்திரி போன்ற ஒரு சில தினங்கள் தவிர மற்ற நாட்களில் அகால நேரங்களில் கோயில்களில் வழிபாடு நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளது.

பிரம்ம முகூர்த்தத்திற்கு முன்னதாக பூஜைகள் செய்வதோ வேதகர்மாக்களை செய்வதோ கிடையாது. இதை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்:
லௌகீக நடைமுறைகளுக்கு ஏற்ப நாமும் ஜனவரி முதல் தேதியை புத்தாண்டாகக் கொண்டு, அன்றாட தினசரி பழக்கத்தில் இந்த காலெண்டரை உபயோகப்படுத்துவதனால், நிர்ப்பந்தம் காரணமாக மற்றவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். ஆனால் நாம் அத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

அதற்கு மதரீதியான முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. இது மன்னிக்க முடியாத செயலாகும்.


Raghunathan Iyer

unread,
Dec 26, 2015, 2:35:01 AM12/26/15
to arunalaya
பிராமணர்களை கேலி செய்பவர்களே உங்களுக்காக...
பிராமணர்கள் இன்று ஒதுக்கப்படுபவர்கள் மட்டுமல்ல மக்களிடையே ஒரு கேலிப் பொருளாகவும் உள்ளனர். அதிலும் குறிப்பாக வைணவ பிராமணர்கள் மிகவும் கேலிக்கு உள்ளாகிறார்கள். ஏன் என்றால் அவர்கள் நெற்றியில் அணிவது நாமம். இன்று ஒருவர் மற்றொறுவரை இழிவு படுத்தவும், தன்னிடமோ வேறொறுவரிடமிருந்தோ ஒரு பொருள் தொலைந்தாலோ அல்லது பரிபோனாலோ அதற்கு அவர்கள் கூறி கேலி செய்வது நாமம் என்றும் கோவிந்தா என்றும். கோவிந்தன் என்ற பெருமாள் தன் நெற்றியில் சூட்டிக்கொண்டதால் கோவிந்தா என்ற பெயரோடு நாமமும் கேலியின் வடிவமாக வந்துவிட்டது. சரி... கேலி செய்பவர்களே உங்களுக்காகச் சொல்லுகிறேன் கேளுங்கள்...நாமத்திற்கு "திருமண்காப்பு" என்ற பெயரும் உண்ட. இந்த நாமத்தை நெற்றியில் அணிவதால் மகாவிஷ்ணுவான பெருமாளின் நேரடி பாதுகாப்பிற்கு நாம் ஆளாகிறோம். அதனாலேயே அதற்கு திருமண்"காப்பு" என்று பெயர் வந்தது. அந்த திருமண்காப்பின் வடிவம் உயர்ந்த வசமாக மூன்று கோடுகள் மற்றும் கீழே சிறிய தாமரை போன்ற அமைப்புக்கோடு... இதன் விளக்கம் என்னவென்றால் மூன்று கோடுகளில் வலது இடது கோடுகள் வெள்ளை நிறத்தில் இருக்கும் அவை விஷ்ணுவின் இரண்டு பாதங்கள் ஆகும். நடுவில் இருக்கும் கோடு சிகப்பு நிறத்திலோ அல்லது மஞ்சள் நிறத்திலோ இருக்கும் அது ஸ்ரீமகாலட்சுமி ஆவாள், இவர்களை தாங்கியபடி கீழே வெள்ளை நிறத்திலிருக்கும் சிறு கோடு தாமரைப்பூ ஆகும். அதாவது விஷ்ணுவின் பாதங்களும் தாமரைப்பூவில் மகாலட்சுமியும் ஒரு சேர நெற்றியில் இருக்கும்படி அணிந்துகொள்வது திருமண்காப்பு(நாமம்) இவ்வளவு பெருமை வாய்ந்த நாமத்தை இன்று கேலிப் பொருளாக ஆக்கிவிட்டார்கள்... கஷ்டம் தீரவும் செல்வம் பெருகவும் பெருமாளை வணங்குகிறோம், ஆனால் அவர் நெற்றியில் இருக்கும் நாமத்தை கேலி செய்கிறோம்...என்ன முட்டாள்தனமான சிந்தனை நமக்கு. நாமத்தை கேலி செய்தால் அது விஷ்ணுவையும் மகாலட்சுமியையும் சேர்த்து கேலி செய்ததற்கு சமம். நாமம் நெற்றியில் அணிவது நமக்கு நல்லதே தவிர கெட்டது இல்லை. இதை புரிந்துகொள்ள நமக்கு சரியான அறிவு இல்லை. அப்படியே இருந்தாலும் பொது ஊடகங்கள், பத்திரிகைகள், சினிமாக்கள் போன்ற பெரிய மீடியாக்களில் பிரதானமாக நாமமும் கோவிந்தா என்ற பெயரும் கேலிப் பொருளாக ஆகிவிட்டது. ஏன் பல பிராமணர்கள் கூட இதை கேலி செய்கிறார்களே அதுதான் வேதனை. ஊடகங்கள், பத்திரிகைகள், சினிமாக்கள் இவைகளில் ஒரு மத கோட்பாடுகளை கேலி கிண்டல் செய்யக்கூடாது என்று சட்டம் உள்ளது. அது அரசின் சட்ட புத்தகத்தில் எழுத்தாகமட்டுமே இருக்கிறது. நாம் நன்றாக கவனிக்க வேண்டும், சினிமாக்கள் மற்றும் பத்திரிக்கைகளில் ஒரு இஸ்லாமிய அல்லது கிருஸ்துவ கோட்பாடுகளையோ, அவர்கள் நடைமுறைகளையோ இவர்கள் கேலி கிண்டல் செய்வது இல்லை. அப்படியே ஏதோ ஒரு இடத்தில் இருந்தாலும் மிகுந்த பிரச்சனைக்குப் பிறகு அது நீக்கப்படுகிறது. நான் அவர்களையும் கேலி செய்யவேண்டும் என்று சொல்லவில்லை. அவர்களுக்கு இருக்கும் ஒரு ஒற்றுமை இந்துக்களாகிய நமக்கு ஏன் இல்லை?. நாமம் என்பது வைணவ, பிராமணீயச் சின்னம் மட்டுமல்ல அது இந்துக்களின் சின்னமாகும். அதை நாமே கேலி செய்தால் நம் தாயை நாமே கேலி செய்வதுபோல் ஆகும். அதே போலத்தான் கோவிந்தா என்ற பெயரும். அந்த பெயருக்குள்ள மகத்துவம் தெரிந்தால் இப்படி கேலி செய்ய மாட்டார்கள். ஆதரவற்ற அனாதைகளுக்கு இருக்கும் ஒரே சொந்தம் மகாவிஷ்ணு ஆவார். அந்த விஷ்ணுவின் பெயர் தான் கோவிந்தன். ஒருவர் அனாதையாக இறந்தால் அவருக்கு கோவிந்தா கொள்ளி போடு என்று சொல்லுவார்கள். காரணம் , இறந்தவர் அனாதையல்ல கோவிந்தன் என்ற பெயருள்ள விஷ்ணு இவருக்கு தந்தையாகவும் அனைத்து சொந்தமாகவும் இருக்கிறார், அதனால் இறந்தவருக்கு அந்த விஷ்ணுவே கொள்ளி இடுவதற்கு சமம் என்ற பெரிய பெருமை உடையது இந்த கோவிந்தா என்ற பெயர். ஆனால் இப்பொழுது இந்த விஷயத்தை சொல்லுவாரும் இல்லை கேட்பாரும் இல்லை. நாம் அனைவரும் கேலி மட்டும் நன்றாகச் செய்கிறோம். உலகத்தில் வாழும் மக்களை திருமண்காப்பு (நாமம்)என்ற நெற்றிப்பொட்டின் மூலமாக காத்து கோவிந்தா என்ற பெயரினால் ஆதரவளிக்கிறார் பெருமாள்(விஷ்ணு). இதையும் தாண்டி ஊடகங்கள், பத்திரிகைகள், சினிமாத்துறையினர்கள் கேலி செய்வார்களேயானால் அவர்களுக்கு பெருமாள் விதித்த விதி என்னவொ.....

Raghunathan Iyer

unread,
Dec 28, 2015, 12:36:44 AM12/28/15
to arunalaya


காலை வணக்கம் 
மார் கழி கோலம்__12

கோலம் போடுவதால் இருக்கும் நன்மைகள்"

ஒரு வீட்டில் தினமும் கோலம் போடுவதால் இந்த இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடப்பதற்கு தடையிருக்காது.

நன்மைகளும் வந்தடையும்.

மார்கழி மாதத்தில் வாசலில் அழகழகான கோலம் போடவேண்டும் என்று ஒரு முக்கிய கடமையாகவே நம் முன்னோர்கள் வலியுறுத்தினார்கள்.

மார்கழி மாத பனிக்காற்று மருத்துவகுணம் கொண்டது.

ஓசோனின் காற்று உடலில்பட்டால், அதிகாலைவேளை, பிரம்ம முகூர்த்தம் காற்று நன்மை என்பதாலும் கோலம் வரையும் மாதமாக இந்த மார்கழிமாதம் இருக்கிறது.

அத்துடன் மார்கழி மாதத்தில் அநேகமாக சுபநிகழ்ச்சிகள் 
செய்யாமல் இருப்பார்கள்.

அதனால் சுபசின்னமான கோலங்களை வீட்டின் வாசலுக்கு முன் பதிக்க வேண்டும்.

அப்படி செய்வதால் அடுத்து வருகிற தை மாதத்தில் அந்த குடும்பத்தில் மங்களகரமான நிகழ்ச்சிகள் நடைப்பெறும் என்றும் அப்படி சுபநிகழ்ச்சிகள் செய்யும்போது தடையேதும் ஏற்படாமல் இருக்க ஸ்ரீமகாலஷ்மி அருள்புரிவாள் என்பது ஐதீகம்.

மார்கழி மாதம் என்று மட்டுமல்லாமல் எல்லா நாட்களிலும் கோலம் போடும் போதும், கோலங்களுக்கு மும்மூர்த்திகளின் அருளாசி கிடைக்கச் செய்யும் மகிமையும் இருக்கிறது.

அது எப்படியென்றால், கோலமாவின் நிறம் வெண்மை.

இது பிரம்மாவை அழைக்கிறது.

கோலம் போட்டபிறகு அந்த கோலத்தை சுற்றி காவி நிறமான செம்மை நிறத்தை வரையும்போது அது சிவபெருமானை அழைக்கிறது.

கோலம் போட்டு முடித்தபிறகு அந்த கோலத்திற்கு அழகு சேர்ப்பதற்காக பசு சாணத்தை வைத்து அதில் மஞ்சள் நிறத்தில் பூசணிபூவை வைப்பார்கள்.

பசுவின் சாணம் ஸ்ரீமகாலஷ்மியை குறிப்பிடுவதால், ஸ்ரீமகாவிஷ்ணுவையும் அந்த இல்லத்தினுள் அழைக்கிறது.

இதனால் இப்படி மும்மூர்த்திகளின் அருளாசியும் நமக்கு கிடைக்கிறது.

பசு சாணமும் பூசணிப்பூவும் தினமும் கிடைக்காதபோது,

சாதாரண கோலமாவுக்கு பதிலாக பச்சரிசிமாவில் கோலம் போட்டால் மும்மூர்த்திகளின் ஆசி இன்னும் சிறப்பாக கிடைக்கும்.

நம் இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்க, நம் முன்னோர்கள் நமக்கு வழிகாட்டியதுதான் கோலங்கள்.

கோலம் போடும் போது இரட்டை கோடுகளாக கோலம் போடவேண்டும்.

ஒரு கோடுமட்டும் வரைந்து கோலம் போடுவது

அசுபகாரியங்களுக்கு தான் என்கிறது சாஸ்திரம்.

தெற்குதிசை பார்த்தபடி கோலத்தை ஆரம்பிக்கவும் கூடாது – முடிக்கவும் கூடாது.

தினமும் அரிசிமாவில் கோலம் போட்டால், நம்மை அறியாமலே பல புண்ணியங்கள் தேடிவரும்.

இப்படி தினமும் கோலங்கள் போட்டு பல நன்மைகளை பெறுவோம்.

Raghunathan Iyer

unread,
Dec 29, 2015, 2:20:57 AM12/29/15
to arunalaya

காஞ்சியிலே அமர்ந்து கருணை மழை பொழியும் காமகோடி ரூப பீடனே ! காலமெல்லாம் சதா சர்வ காலமெல்லாம் உமைப் பணிந்து பாடுகின்ற பாக்கியம் தந்தருளவேண்டும்!

கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது அத்வைதம்
கவிதை கேளுங்கள் அனுஷத்தில் பிறந்தது அத்வைதம்
பூமி இங்கு சுற்றும் மட்டும்
ஓடும் மேகம் நின்று பார்த்து கைகள் தட்டும்
கவிதை கேளுங்கள் கருவில் பிறந்தது அத்வைதம்
அனுஷத்தில் உதித்த கவிதை அத்வைதம்
அனுஷத்தில் உதித்த அத்வைதம்
சந்த்ரசேகரா! சாந்தஸ்வரூபனே! தேவதேவேஸ்வரா!!
எந்த நாளும் உனை ஏற்றிப்பணிந்திடும் வாழ்வே வாழ்வாகுமே!!
சுந்தரேஸ்வரா! சந்த்ரசேகரா! நித்தம் எமைக்காத்திடு!!
வேதம்யாவுமே நீதான்ஐயனே! நித்தம் எமைக்காத்திடு!!
செந்தில்ஆண்டவா! அன்றே உன்னருள் கொண்டே அருணகிரிதான்
சொன்னான் திருப்புகழில் நீயே அகிலமென்றே! – தெய்வ
அன்னை மஹாலக்ஷ்மி பிள்ளை நீ ஸ்வாமி நாதன்தானிவன்
செந்தில்ஆண்டவன் எம்மைக்காப்பவன் ஶ்ரீஸத்யா!ஜோதிரூபா! 
சிந்தையாவுமே! நீதான்என்றுமே! எம்மைக்காப்பவன்நீ!!
பொய்மைபோகவும் உண்மைவாழவும் வைக்கும்தேவதேவா!
தந்தைஆனவா! தாயும்ஆனவா! சந்த்ரசேகரா!நீ!!
செந்தில்ஆண்டவா! எம்மைஆள்பவா! முன்னேஉடனிங்குவா!!
அனுஷத்தில் உதித்த அத்வைத சந்த்ரசேகரா! 
சாந்தஸ்வரூபனே! தேவதேவேஸ்வரா!!
காஞ்சி காமகோடி மகா பெரியவா தரிச
னம் காணக்காணப் புண்ணியம்.
கருணை பொழியும் காமாட்சி வாழும் காஞ்சி
காமகோடி பீடம் விளங்கும் எழிலான காஞ்சி.
க்ஷேமத்தினை அளிக்க வல்ல ஏகம்பனின் காஞ்சி
சம்பத்தை அளிக்கின்ற வரதனின் காஞ்சி.
சந்திரனை சூடிய சுந்தர ஈஸ்வரா
உம் திரு உருவையே உளமாற நினைத்திட
வந்திடும் வெற்றியே வாழ்வினில் என்றுமே
விழுப்புரத்தில் பிறந்த முழு நிலா முகத்தோனே
கழுபிணி தீர்த்திடும் காருண்ய ரூபனே
முழு பரம் பொருளாய் உனைச் சரண் அடைந்திடவே
முழுவதும் காத்திடுவாய் முற்பிறப்பும் அறிந்தவனே
முக்தி தலமாம் காஞ்சியில் முழு நிலவாய் அமர்ந்த குரு நாதா
முக்கண்ணனின் அம்சமாய் முக்தியும் தந்த குரு நாதா
எக்கணமும் ஈசனை எண்ணியே வாழ்ந்த குரு நாதா
முக்கனியின் சுவையாகும் உன் நாமம் பெரியவா
வேதத்தை காத்திட வந்திட்ட சங்கர ஜகத்குரு நாதா
பாதத்தை பற்றும் முன் பரிவுடன் காப்பவா ஜகத்குரு நாதா
மோகத்தை வென்று நீ மோன தவம் புரிந்தவா ஜகத்குரு நாதா
யாகத்தை வளர்த்து ஞாலத்தை காத்தவா ஜகத்குரு நாதா
அரும் தவ ஞானியே அனைத்துமே அறிந்தவா ஜகத்குரு நாதா
வரும் துன்பம் அறிந்து நீ விரட்டிடுவாய் வேல் விழியால் ஜகத்குரு நாதா
கரு மேக மழையாய் அருள் மழையை பொழிவாய் ஜகத்குரு நாதா
கருணை விழிப்பார்வையால் மன இருளை போக்கிடுவாய் ஜகத்குரு நாதா
நேரும் துன்பம் நீக்குவாய் நேர்த்தியாய் வழி நடத்தி ஜகத்குரு நாதா
பேருமபுகழும் பெற்றிடுவோம் பரமனே உன் பாதம் தொழ ஜகத்குரு நாதா
ஊரும் பேரும் கேட்டு நீ ஊழ்வினைகள் களைவாய் ஜகத்குரு நாதா
யாரும் குருவாய் ஏற்றிட எங்கும் காத்து அருள்வாயே ஜகத்குரு நாதா
நித்திய அனுஷ்டானம் நிர்மலமாய் செய்தாய் ஜகத்குரு நாதா
பத்திய உணவு உண்டு பாரினை காத்தாய் ஜகத்குரு நாதா
சத்திய வாழ்க்கையை சாதித்துக் காட்டினாய் ஜகத்குரு நாதா
நித்திய மங்களம் அனைவருக்கும் அளித்தாய் ஜகத்குரு நாதா
காஞ்சியின் சங்கரா காலடி சங்கரா ஜகத்குரு நாதா
காலங்கள் கடந்தவா காமகோடி சங்கரா ஜகத்குரு நாதா
காலமெல்லாம் உன்புகழ் சொல்லிடுவோம் சங்கரா ஜகத்குரு நாதா
காலடியை தொடர்ந்திடுவோம் காப்பாற்று சங்கரா ஜகத்குரு நாதா
தித்திக்கும் கல்கண்டை தந்திடுவாய் கைகளில் ஜகத்குரு நாதா
தித்திக்கும் வாழ்கையை சித்திக்கச் செய்வாய் ஜகத்குரு நாதா
எத்திக்கும் வேதங்கள் ஒலித்திட செய்தாய் ஜகத்குரு நாதா
சித்திக்கும் சகலமும் உன் நாமம் சொல்லவே ஜகத்குரு நாதா!
நித்தம் நித்தம் என் மன கண்ணில் நின் தயவால் நின்னை நினைத்துருக வேண்டி 
நின் நாமம் செப்ப வைத்தாய் காஞ்சி ஸ்ரீமத் ஜகத்குரு நாதா !! 
காஞ்சி காமகோடி மகா பெரியவா ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமியே!
காஞ்சியிலே அமர்ந்து கருணை மழை பொழியும் காமகோடி ரூப பீடனே ! காலமெல்லாம் சதா சர்வ காலமெல்லாம் உமைப் பணிந்து பாடுகின்ற பாக்கியம் தந்தருளவேண்டும்!
ஹரஹரசங்கர ஜெயஜெயசங்கர!ஜய ஜய சங்கர ! ஹர ஹர சங்கர !
Courtesy: 
ஸ்ரீ காஞ்சி காமகோடி மஹா பெரியவா தாஸன் 
டாக்டர். கி.பாலசுப்ரமணியன்


Raghunathan Iyer

unread,
Jan 1, 2016, 4:43:01 AM1/1/16
to arunalaya

கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று சொல்லப்படுவது ஏன்? 
அப்படியானால் ஆலயத்தினுள் இறைவனை தரிசிக்க வேண்டியதில்லையா?

ஊரின் கடைக்கோடியில் வசிப்பவனும் தரிசித்து புண்ணியம் தேட வேண்டும் என்பதே இந்தசொற்றொடருக்கான பொருள். இறப்புத் தீட்டினால் ஆலயத்திற்குள் வர இயலாதோர், பணிச்சுமையின் காரணமாக உண்டாகும் நேரமின்மையால் அவதிப்படுவோர், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் பயணிப்போர் உள்பட கோடானுகோடி ஆன்மிக அன்பர்கள் அனைவரும் தரிசிப்பதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டதே ராஜகோபுரங்கள்.

ஊரின் எல்லைக்குள் நுழையும்போதே அந்த ஊரில் அமையப்பெற்ற ஆலயத்தின் கோபுரம் நம் கண்ணில்படும்போது நம்மையும் அறியாமல் நமக்குள் ஒருவித பக்தி உணர்வு தோன்றுகிறது. கைகள் தானாக கன்னத்தில் போட்டுக் கொள்கிறது. அந்த ஆலயத்தினுள் உறைந்திருக்கும் இறைசக்தியே கோபுரத்திலும் எதிரொலிக்கிறது. தினசரி செய்தித்தாளை படிக்க இயலாதவன் கடைகளில் வெளியில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் விளம்பரத் தாள்களில் கொட்டை எழுத்தினில் பிரசுரிக்கப்பட்டிருக்கும் தலைப்புச் செய்திகளைப் படித்து அறிந்து கொள்கிறான்.

ஆனால், முழுமையான விவரத்துடன் செய்திகளை அறிந்து கொள்ள வேண்டுமென்றால் நாளிதழை வாங்கிப் படித்தால்தான் அந்தச் செய்திக்கான முழுமையான அர்த்தம் புரியும். அவ்வாறே கோபுர தரிசனம் என்பது மேலோட்டமாக செய்திகளைத் தெரிந்து கொள்வது.

உள்ளிருக்கும் சங்கதிகளை முழுமையாக உணர ஆலயத்திற்குள் சென்று உள்ளிருக்கும் இறைவனையும் தரிசித்தால்தான் முடியும். ஆனால், சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக எல்லோருக்கும் அந்த பாக்கியம் கிட்டுவதில்லை. அதே நேரத்தில் அனைத்து தரப்பு பக்தகோடிகளுக்கும் கோபுர தரிசனம் என்பது எளிதில் கிடைப்பதால் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்கிறார்கள்.

.


Raghunathan Iyer

unread,
Jan 2, 2016, 12:04:54 AM1/2/16
to arunalaya


Bharathi's photo.
 
 
 அமைப்பான ரா வின் உளவாளியாக பாகிஸ்தானில் 7 வருடம் சிறையில் இருந்து,பாகிஸ்தானின் தீவிரவாத செயல்களை இந்தியா மூலம் வெளியுலகிற்கு அறிய வைத்தவா்...
இவா் பெயரைக் கேட்டலே பாகிஸ்தான் அதிா்ந்த காலங்கள் உண்டு, இவரை பிடித்து சித்திரவதை செய்து கொல்லவேண்டும் என்ற வெறி பாகிஸ்தான் இராணுவத்திற்கு மட்டுமன்றிஅந்நாட்டு மக்களுக்கு கூட இருந்தது..
ஆனால், அவரின் துணிச்சல்களுக்கும்,தியாகத்துக்கும் மதிப்பளித்து இந்திய பாதுகாப்பு-இராணுவ ஆலோசகராகாக்கி பாகிஸ்தானுக்கே அழைத்து சென்றாா்,
ஒரு உளவாளிக்கே, பாகிஸ்தான் பிரதமா் வரவேற்பு கொடுக்க வைத்தது-நம் பிரதமா் மோடிஜீயே ! !

Raghunathan Iyer

unread,
Jan 2, 2016, 1:59:53 AM1/2/16
to arunalaya


நட்சத்திரங்கள் பைரவர் அருள்தரும் தலம்
1. அசுவினி ஞானபைரவர் பேரூர்
2. பரணி மகாபைரவர் பெரிச்சியூர்
3. கார்த்திகை அண்ணாமலை பைரவர் திருவண்ணாமலை
4. ரோகிணி பிரம்ம சிரகண்டீஸ்வரர் திருக்கண்டியூர்
5. மிருகசிரிஷம் க்ஷேத்திரபாலர் க்ஷேத்ரபாலபுரம்
6. திருவாதிரை வடுக பைரவர் வடுகூர்
7. புனர்பூசம் விஜய பைரவர் பழனி
8. பூசம் ஆஸின பைரவர் ஸ்ரீவாஞ்சியம்
9. ஆயில்யம் பாதாள பைரவர் காளஹஸ்தி
10. மகம் நர்த்தன பைரவர் வேலூர்
11. பூரம் பைரவர் பட்டீஸ்வரம்
12. உத்திரம் ஜடாமண்டல பைரவர் சேரன்மகாதேவி
13. அஸ்தம் யோகாசன பைரவர் திருப்பத்தூர்
14. சித்திரை சக்கரபைரவர் தர்மபுரி
15. சுவாதி ஜடாமுனி பைரவர் பொற்பனைக்கோட்டை
16. விசாகம் கோட்டை பைரவர் திருமயம்
17. அனுஷம் சொர்ண பைரவர் சிதம்பரம்
18. கேட்டை கதாயுத பைரவர் சூரக்குடி
டி.வயிரவன்பட்டி திருவாடுதுறை, தபசுமலை
19. மூலம் சட்டைநாதர் சீர்காழி
20. பூராடம் வீரபைரவர் அவிநாசி, ஒழுகமங்கலம்
21. உத்திராடம் முத்தலைவேல் வடுகர் கரூர்
22. அவிட்டம் பலிபீடமூர்த்தி சீர்காழி, ஆறகழூர்
(அஷ்டபைரவ பலிபீடம்)
23. திருவோணம் மார்த்தாண்ட பைரவர் வயிரவன் பட்டி
24. சதயம் சர்ப்ப பைரவர் சங்கரன்கோவில்
25. பூரட்டாதி அஷ்டபுஜபைரவர் கொக்கரையான்பேட்டை, தஞ்சாவூர்
26. உத்திரட்டாதி வெண்கலஓசை பைரவர் சேஞ்ஞலூர்
27. ரேவதி சம்ஹார பைரவர் தாத்தையாங்கார்பேட்டை
மேற்கூறிய நட்சத்திரக்காரர்கள் பைரவர் ஸ்தலத்தில் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றால் அருகில் இருக்கும் சிவன் கோயிலுக்குச் சென்று பைரவருக்கு விளக்கு ஏற்றவும்.

செய்முறை : பைரவர் தெய்வீக மூலிகை பொடியை சிகப்பு துணியால் மட்டும் கட்டி தேய்பிறை அஷ்டமி (அல்லது) ஞாயிற்றுக்கிழமை 4.30 முதல் 6.00 இராகு காலம் நேரத்தில் 64 தீபங்களை முதலில் ஏற்ற வேண்டும். பிறகு பைரவரிடம் தங்களின் குறைகளை மனதார பிரார்த்தனை செய்ய வேண்டும். வீட்டில் தினமும் காலை இரண்டு தீபம் வீதம் மாலை இரண்டு தீபம் வீதம் சுத்தமான பசுநெய் அல்லது நல்லெண்ணெய் ஆகிய இரண்டில் மட்டும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யவும்.

மூல மந்திரம் :
ஓம் ஹ்ராம் ஹ்ரூம்; ஹ்ரைம்
க்ஷரௌம், ஷம், ஷேத்ரபாலாய நம:

பலன்கள் : திருமணத்தடை, பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வர். பில்லி சூனியம் விலகும். வியாபார அபிவிருத்தி, வீட்டில் சண்டை சச்சரவுகள் விலகும். பூர்வீக தோஷம் அனைத்தும் நிவர்த்தி ஆகும். முன்னோர்களின் சாபமும், பெற்றோர்களின் பாவமும், பிறப்பின் கர்ம வினைகள் அகலும். குழந்தைகள் நன்றாக படிப்பர். கடன் பிரச்சனை விலகும். மனநிலை பாதிப்பு விலகும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். மனதுக்கு நிம்மதி கிடைக்கும்.

Raghunathan Iyer

unread,
Jan 4, 2016, 5:24:13 AM1/4/16
to arunalaya

.சென்னை:கிராமம் மற்றும் நகரத்துக்கிடையே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. நகர மக்கள் கிராமத்தவர்களை ஏளனமாக பார்ப்பதையும், அவர்களை கிள்ளுக்கீரையாக மதிப்பதையும் நாம் பார்த்துள்ளோம். ஆனால் அத்தனை கிராமத்திய பழக்கவழக்கங்களையும் காப்பியடித்து அதி்ல் சற்று உப்பு மிளகாய், கரமசாலா தூவி, அதை நாகரீகம் என்று நகர மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள் ,,

கிராமமும் நகரமும் ....

வெற்றிலை_பாக்கு போட்டால் கிராமத்தான் பீடா போட்டால் நகரத்தான் 
பச்சை குத்தினால் கிராமத்தான் டாட்டூ போட்டு கொண்டால் நகரம் 
மருதாணி வைத்துக் கொண்டால் கிராமம் மெஹந்தி என்றால் நகரம் 
மஞ்சள் தண்ணீர் ஊத்தினால் கிராமம் கெமிக்கல் பொடி தூவினால் நகரம்
90களில் மஞ்ச பச்சை சட்டை போட்டா அவன் கிராமம் 2015ல் மஞ்சள் பச்சை சட்டை போட்டால் நகரம்
மங்களமான மஞ்சப்பை என்றால் கிராமம் மண்ணை மலடாக்கும் பாலித்தீன் என்றால் நகரம்
தன் மனைவியை நண்பர்களுக்கு அறிமுகம் செய்தால் கிராமம் மனைவி அவள் நண்பா்களை அறிமுகம் செய்தால் நகரம்
கிழிந்த ஆடை போட்டால் கிராமம் நல்ல ஆடையை கிழித்து போட்டால் நகரம்
உதவிக்கு மிதிவண்டி இருந்தால் கிராமம் உடம்பைக் குறைக்க மிதிவண்டி இருந்தால் நகரம்
கோடு போட்ட அண்டர் வேர் தெரிந்தால் அவன் கிராமம் இடுப்பு ஜட்டி தெரிய பேன்ட் அணிந்தால் அவன் நகரம்..
எது நாகரீகம் எது ஆரோக்கியம்... விமானத்தை மிகச் சாதாரணமாகவும்.. வண்ணத்துப் பூச்சியை ஆச்சர்யமாகவும் பார்க்கின்றனர், நகரத்துப் பிள்ளைகள்.!

Amurthi Navaneetham's photo.

Raghunathan Iyer

unread,
Jan 5, 2016, 12:57:40 AM1/5/16
to arunalaya


ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே!

ஐந்தாண்டுகள் முடிந்த அடுத்த நாளே, மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டு விடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே இருந்தன!. மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமல் இருந்ததால், அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது.

இருப்பினும் ஒரு சிலர் 'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதும் உண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி, வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். 'இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா?' என்று மக்கள் வாயைப் பிளந்தனர்.

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு மன்னன் சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்று கொண்டா செல்வது...
சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''.

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைக் கிழித்துக் கொண்டு, மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி, புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக் கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா... எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும். மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''.

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''.

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள், காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக் கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!.

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்...

சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்; அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : 
ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : 
அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டும் என்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும், அதற்காக திட்டமிடுதலும்...

திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும், புத்திசாலித்தனமாக உழைப்பதுமே!.

இந்த புத்தாண்டிலிருந்து உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.


Raghunathan Iyer

unread,
Jan 5, 2016, 12:59:40 AM1/5/16
to arunalaya

எல்லா கிரகங்களையும் விட பலம் பொருந்திய ராகுவிற்கு மற்ற கிரகங்களை போல ஒரைப் பலன் கிடையாது. ஆனால் தினமும் ஒன்றரை மணி நேரம் ராகு காலம் நடைபெறும். ராகு காலத்தில் நல்ல காரியங்களை செய்யக்கூடாது என்றாலும், ராகு காலம் எல்லோருக்கும் கெடுதல் செய்வதில்லை. ராகுவின் நட்சத்திரமாகிய திருவாதிரை, சதயம், சுவாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கும் 1,3,5,9,10,11 ஆகிய இடங்களில் ராகு அமையப் பெற்றவர்களுக்கும் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம் போன்ற ராசிகளில் ராகு அமையப் பெற்றவர்களுககும், விருச்சிக ராசி லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் ராகு காலம் கெடுதல் செய்வதில்லை

Raghunathan Iyer

unread,
Jan 5, 2016, 1:38:43 AM1/5/16
to arunalaya


Karthik Vpk's photo.
  வாங்க சிரிக்கலாம்..
 

‪#‎படித்ததில்பிடித்தது‬#

பெண்ணின் புகைப்படம் பார்த்து திருமணம் செய்துகொள்கிறான் ஒரு வாலிபன். முதலிரவில் அவள் முகத்தை பார்த்து அதிர்ச்சியடைகிறான். காரணம் அவள் கொஞ்சம் கருப்பு. அவனுக்கு ஏனோ அவளை பிடிக்கவில்லை மனைவியை வெறுத்தான். படுக்கையை விட்டு தள்ளிவைத்தான். என்னதான் தன் கனவன் தன்னை வெறுத்தாலும் அவன் மீது அளவுகடந்த அன்பும் பாசமும் வைத்திருந்தாள்.இப்படிதான் ஒருநாள்.

ஏன் என்னை வெறுக்கின்றீர்கள்! நான் உங்கள் மனைவி. உங்களை காதலிக்கின்றேன்! அது ஏன் உங்களுக்கு புரியவில்லை!! என்று அவள் சொல்ல இவன் ஒன்றும் சொல்லாமல் சென்றுவிடுகிறான். இரவு 1மணி போல அவனுக்கு திடீரென நெஞ்சு வலி வருகிறது.

வலி தாங்க முடியாமல் அய்யோ!!! அம்மா!!! என்று கதறுகிறான். அவனை பார்த்த மனைவி அவனைவிட கதறுகிறாள். உடனே தன் வீட்டாருக்கும் கனவனின் நன்பருக்கும் Phone செய்கிறாள். கனவன் துடிப்பதை தாங்கிகொள்ள முடியாதவள். தலை மீது கைவைத்து ஒரு பைத்தியக்காரி போல் புளம்பிக்கொண்டு வீட்டையே சுற்றி சுற்றி வருகிறாள்.

இவளை பார்த்த கணவன் பயந்து போகி திரு திருவென முழிக்கிறான். பாவம் எத்தனை நாள் வைத்த பாசமோ!!! கனவனின் நன்பன் Car எடுத்துக்கொண்டு வேகமாக வருகிறான். தன் மார்போடு கனவனை அனைத்துக்கொண்டு அண்ணா கொஞ்சம் வேகமாக செல்லுங்கள் என்கிறான். அந்த ஒரு நொடி இவளையா வெறுத்தேன் என்று கண் மூடி அழுகிறான் கனவன்.

மருத்துவமனையில் தீவீர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டான். மனைவியின் உறவினர்கள் வருகின்றனர். அவள் அழுகை அப்போதும் அடங்கவில்லை இந்த பெண்ணிற்கு இப்படி ஒரு காதலா என்று எல்லோரும் வியந்தும் பொறாமையுடனும் அவளை பார்க்கின்றனர். உங்கள் கணவர் புகை பிடித்ததால் வந்த பாதிப்பு... என்கிறார் மருத்துவர்...உறவினர்கள் அவனுக்கு அறிவுரை சொல்ல அவன் தன் மனைவியை தேடுகிறான்...

அவள் கதவு அருகில் நின்று இன்னும் அழுதுக்கொண்டுதான் இருக்கிறாள். தன் மனைவியின் பெயரை முதன்முதலாக சொல்லி சத்தமாக அழைக்கிறான். சடார் என்று "என்னங்க" என்று பதறி ஓடிவருகிறாள். அழுது அழுது அவன் கண்கள் சிவந்து போனது. அவள் கையை பிடித்துக்கொண்டு இனி நான் புகை பிடிக்கமாட்டேன்! உனக்காக என்கிறான்.

தன் கணவன் தன்னுடன் பேசுகிறான் என்ற சந்தோஷமும் அழுகையும் ஒன்றாய் வர அழுதுக்கொண்டே சிரிக்கிறாள். என் மேல் இவ்வளவு பாசமா என்று கணவன் கண்ணால் கேட்க நீங்கள் என் கணவர். நான் உங்கள் மனைவி என்று ஒரு வார்தையில் ஆயிரம் அர்த்தங்கள் சொல்லி அவன் நெற்றியில் முத்தமிடுகிறாள் அந்த காதல் கொண்ட மனைவி.

((நம் நாட்டு தமிழச்சிகள் இப்போதும் (ஒரு சிலரை தவிர) தன் கணவன் பெயரை வெளியில் சொல்லமாட்டார்கள். அது கணவன் மீதுள்ள ஒரு மரியாதை. காலம் எப்படி மாறிப்போனாலும் கணவனை காதலிக்கும் மனைவிமார்கள் இன்னும் இருக்கின்றார்கள் நன்பர்களே..

இந்த உலகத்தில் எல்லா உறவு முறையும் ஒரு காலகட்டத்தில் நம்மை விட்டு கட்டாயம் பிரிந்துவிடும் ஆனால் கணவன் மனைவி உறவு மட்டும் நாம் சாகும் வரை நம் பின்னாலே தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.))

 
 
Comment

RAMASWAMY-Mumbai

unread,
Jan 5, 2016, 12:01:58 PM1/5/16
to Raghunathan Iyer, arunalaya
Superb mail

R.Ramaswamy
mob. 8879055944

On Tue, 5 Jan, 2016 at 12:08 pm, Raghunathan Iyer

Raghunathan Iyer

unread,
Jan 6, 2016, 1:32:29 AM1/6/16
to arunalaya

இந்து மதம் பற்றியும் வேத நெறி குறித்தும், சடங்குகள் குறித்தும் தயானந்த சுவாமிகள் ஏராளமான, அற்புதமான விளக்கங்களைக் கொடுத்துள்ளார். அவரது விளக்கங்கள் ஒவ்வொன்றும் உயர்வான சிந்தனைகளைக் கொண்டவை.
ஆழமான கருத்துக்கள் கொண்டவை. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வார இதழில் அவர் வாசகர்களின் சந்தேகங்களுக்கு அளித்த பதில்களை வானதி பதிப்பகம் நம் சந்தேகங்களுக்கு சுவாமி தயானந்தரின் பதில்கள் என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளது. அதில் ஒரு வாசகர், ஆத்மா எப்போது சாந்தி அடையும்? என்று கேட்ட கேள்விக்கு தயானந்த சுவாமிகள் சிறப்பான பதிலை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
இறப்பு என்பது நமது தேகத்தில் இருக்கும் ஜீவன் தேகத்தை விட்டு வெளியே கிளம்புவது. இந்த ஜீவன் சரீரத்திலிருந்து போகும் பொழுது, ஒரு சூட்சமமான தேகத்தோடுதான் பிரிய வேண்டும். எப்படி சொப்பனம் காணும் ஜீவன், சொப்பனத்தில் தனக்காக ஒரு சூட்சமமான தேகத்தை எடுத்துக் கொள்ளுகிறதோ, அதே போல் இறக்கும் போதும், அம்மாதிரியான ஒரு தேகத்தை எடுத்துக் கொள்கிறது. சொப்பனத்தில் எடுத்துக் கொள்ளக்கூடிய இந்த சூட்சம தேகமானது, சொப்பனம் காணும் மனிதனின் படுத்திருக்கும் தேகம் போலவே இருக்கும். அம்மாதிரியே இறக்கும்போதும், ஜீவன் இந்த சரீரம் போலவே ஏற்பட்ட ஒரு சரீரத்தை எடுத்துக் கொண்டு போகும்.
அதற்கு ப்ரேத சரீரம் என்று பெயர். இந்த ப்ரேத சரீரம் எவ்வளவு நாள் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நமக்கு நூறு வருசமாக இருந்தாலும், அந்த ஜீவனுக்கு ஒரு நாளாக இருக்கலாம். அதனால் தான் நாம் நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லியுள்ளபடி, அந்த ப்ரேத சரீரத்திலிருந்து ஜீவனானவன் விடுபட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தினால், பல ஈமச் சடங்குகளையும், தெய்வ கர்மாக்களையும் செய்கிறோம்.
பிறகு கூட ஒவ்வொரு அமாவாசையன்றும், ஆண்டு தோறும், திதியன்றும் சில கர்மாக்களைச் செய்கிறோம். அந்த ஜீவன் மறுபிறவி எடுத்தால், செய்த சடங்குகள் வீணாகுமே என்று நாம் நினைக்கவேண்டாம். ஈச்வரனே ஜீவரூபமாக அதற்கான பலன்களைத் தருவான். ஜீவனுக்கு தன்னுடைய ஆத்மாவும், ஈச்வரனுடைய ஆத்மாவும் ஒன்று என்று தெரிகிறவரை மறுபிறவி உண்டு.

Raghunathan Iyer

unread,
Jan 6, 2016, 1:33:14 AM1/6/16
to arunalaya

மன பொருத்தம் 
மனபொருத்தம் இல்லா தம்பதிகள் வாழ்க்கையில் எத்தனை இடைஞ்சல்,,எத்தனை பிரிவு,, கண்ணீர் சொல்ல முடியாத துயரங்கள் இந்த பொருத்தம் இல்லா தம்பதிகள்
எலியும் பூனையும் தான் மேலை நாட்டினர் நம்மை பார்த்து கேலி செய்வது உண்டு இவர்கள் முன்பின் தெரியாதவர்களையும் பழக்கமில்லாதவர்களையும் 
திருமணம் செய்து புரிந்துகொள்கிறார்கள் என ஆச்சிரிய படுவார்கள் 
நம் நாட்டில் அப்படி அல்ல திருமணத்துக்கு பின் தான் காதல் வள்ளுவர் கண்ட இல்லறம் எனவே ஜாதி,, மத,அந்தஸதின்றி சிலர் காதலித்து விடுகிறார்கள் இவர்களுக்கு மன பொருத்தம் முதலில் அமைந்து விடுகிறது.. இவர்களை பிறர் கட்டாயத்தின் பேரில் தான் பிரிக்க முடியுமே தவிர,, அவர்களால் பிரியமட்டார்கள்
ஜாதகம் நன்றாக பொருந்திய சிலருக்கு மன பொருத்தம் இல்லையேல்,, அவர்கள் வாழ்க்கை நரகம்தான்.. ஆகையால் திருமணத்து பிறகு ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அன்பை செலுத்தி இல்லறத்தை நல்லறமக வாழவேண்டும்.. .காதலித்து திருமணம் செய்தவர்கள் எக்காரணம் கொண்டும் ஜாதகத்தை ஆராயகூடாது


Raghunathan Iyer

unread,
Jan 6, 2016, 1:34:38 AM1/6/16
to arunalaya

குருவே சரணம்… திருவே சரணம்!

‘குரு’ என்றால் ‘கனமானது’, ‘பெரிது’ என்று அர்த்தம். அதாவது, பெருமை உடையவர், மகிமை பொருந்தியவர் என்று அர்த்தம். ‘கு’ என்பது இருட்டு; ‘ரு’ என்றால் போக்குவது. ரொம்பவும் இருட்டாக இருப்பதை கும்மிருட்டு என்போம். இதில் உள்ள ‘கு’ இருட்டைக் குறிப்பதுதான். ஆக, இருட்டைப் போக்கடிப்பவர் என்பதே ‘குரு’வுக்கான அர்த்தமாகிறது. ஒரு மஹானை குரு என்று ஒருவன் நாடிப்போய் அவரின் சிஷ்யனாகிவிட்டானேயானால், அவர் அவனுடைய உள் இருட்டைப் போக்கி ஞானம் தந்துவிடுவார்!’

‘குரு’ என்ற பதத்துக்கு காஞ்சி மகாபெரியவா தந்த மிக அற்புதமான விளக்கம் இது. இதற்கு மிகச் சிறந்த உதாரணமும் அவரேதான்! தமது திருவடி நிழல் தேடி வந்த எத்தனையோ பக்தர்களுக்கு நிழல் தந்திருக்கிறது அந்தக் கருணாவிருட்சம். அவர்களது வாழ்க்கையில் துன்ப இருள் அகற்றி இன்ப ஒளியேற்றியிருக்கிறது அந்தச் சுடர் விளக்கு. அப்படியான சம்பவங்களும், காஞ்சி மகா பெரியவாளின் அணுக்கத் தொண்டர்களுக்கு மட்டுமே தெரிந்த அருளாடல்களும் ஏராளம் உண்டு.

மஹா பெரியவா என்று எல்லோரலும் அழைக்கப்பட்ட காஞ்சிமாமுனி பூத உடலை நீத்து இன்றோடு 22 ஆண்டுகள் முடிந்து விட்டது. வெறும் சாஸ்திர சம்பிரதயாத்தை மட்டும் அவர் போதிக்க வில்லை. அதற்கு மேலும் சென்று சிறந்த மனிதாபிமானியாகத் திகழ்ந்தார்.அதற்கு தானே வழிகாட்டியாகவும் வாழ்ந்துகாட்டினார் .
நன்றி:தெய்வத்தின் குரல்

Raghunathan Iyer

unread,
Jan 6, 2016, 1:40:11 AM1/6/16
to arunalaya

நடமாடும் தெய்வம் காஞ்சி மகா பெரியவாளின் 22-வது ஆராதனை மஹோத்ஸவம்    உலகம் முழுக்க அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த வேளையில், மகா பெரியவாளுக்கு அஞ்சலியாக இந்தக் கட்டுரையை சமர்ப்பிக்கின்றேன் (‘மாலை மலர்’ இதழுக்கு நான் எழுதிய முதல் அத்தியாயக் கட்டுரையில் இருந்து எடிட் செய்யப்பட்டது).

மகா பெரியவா சரணம்.

நடமாடும் தெய்வமே சரணம்.

கலியுக தெய்வமே சரணம்.

கண் கண்ட தெய்வமே சரணம்.

அன்புடன்,
பி. சுவாமிநாதன்

.................................

மகா பெரியவா...

- இன்று உலகமே உச்சரிக்கிற உன்னத மந்திரமாகி விட்டது.

காஞ்சி மகா ஸ்வாமிகள், காஞ்சி பெரியவா, ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள், சங்கராச்சார்யர், காஞ்சியின் 68-வது பீடாதிபதி, ஜகத்குரு - இப்படி எத்தனையோ திருநாமங்கள் இந்த மகானுக்கு உண்டு என்றாலும், ‘மகா பெரியவா’ மட்டும் சட்டென்று மனசுக்குள் உட்கார்ந்து விடுகிறது.

‘பெரியவா’ என்ற பதமே வயதிலும் அனுபவத்திலும் முதிர்ந்த நிலையில் உள்ளவர்களைக் குறிப்பிடப் பயன்படும் சொல். அதிலும் இவரோ ‘மகா பெரியவா’...

ஆஹா! யாருக்குக் கிடைக்கும் இந்த அதி உன்னத பட்டம்!

1894-ஆம் வருடம் மே மாதம் 20-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அனுஷ நட்சத்திர தினத்தில் அன்றைய தென் ஆற்காடு மாவட்டத்தில் விழுப்புரம் நகரத்தில் நவாப் தோப்புக்கு அருகில் உள்ள அக்ரஹாரத்தில் காஞ்சி மகா பெரியவாளின் அவதாரம் நிகழ்ந்தது.

வசுதேவருக்கும் தேவகிக்கும் கிருஷ்ண பரமாத்மாவுக்கு பெற்றோராகும் பாக்கியம் எப்படிக் கிடைத்ததோ, அதுபோல் சுப்ரமண்ய சாஸ்திரிகளுக்கும், மகாலட்சுமி அம்மையாருக்கும் இந்த சுவாமிநாதனுக்குப் பெற்றோராகும் பாக்கியம் கிடைத்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

ஆம்!

மகா பெரியவாளின் பூர்வாஸ்ரம (துவக்க கால) பெயர் சுவாமிநாதன்.

வாழ்க்கை வரலாறு என்பது புள்ளி விவரம்.

வாழ்ந்த விதம் என்பது நீங்கா நினைவு. அனுபவம். பாடம்.

எத்தனையோ பேர் பிறக்கிறார்கள். வளர்கிறார்கள். இறக்கிறார்கள்.

பிறக்கின்ற அத்தனை பேரும் செய்தி ஆகி விடுவதில்லை; இறக்கின்ற அத்தனை பேரும் செய்தி ஆகி விடுவதில்லை.

பிறக்கும்போது செய்தி ஆகிறோமோ இல்லையோ, இறக்கும்போது செய்தி ஆக வேண்டும். அதுவும் நல்ல விதமாக அந்த செய்தி பதியப்பட வேண்டும்.

‘அடடா... எப்பேர்ப்பட்ட நல்ல மனிதர்... இவர் மறைந்து போனாரே...’ என்று இந்த உலகம் கண்ணீர் விட்டால், அவரது நினைவு காலாகாலத்துக்கும் மக்களின் மனதில் இருந்து கொண்டே இருக்கும்.

மகா பெரியவா - எத்தனை ஆண்டுகள் போனாலும், எத்தனை யுகங்கள் போனாலும் பக்தகோடிகளின் மனதில் நீக்கமற நிறைந்திருப்பார்.

வாழுகிற வாழ்க்கைதான் ஒரு மனிதனை அடையாளம் காட்டுகிறது.

.............................

மகா பெரியவாளைப் பார்த்து வியக்காத இந்திய அரசியல்வாதிகள் - ஏன் உலகத் தலைவர்களே இல்லை எனலாம்.

தனது இறுதிக் காலத்தில் அப்போதைய முதலமைச்சராக இருந்த காமராஜர் மகா பெரியவாளைப் பார்க்க விரும்பி கலவைக்கு வந்து மகானுடன் உரையாடி இருக்கிறார்.

காமராஜரின் அரசியல் நேர்மையை அறிந்த மகா பெரியவா, ‘உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டிருக்கிறார். ‘மிஸ்டர் க்ளீன்’ என்று பெயர் பெற்றிருந்த காமராஜர், ‘தமிழ்நாடு சுபிட்சமா இருக்கணும்... அது போதும் சாமீ’ என்று மகா பெரியவாளிடம் நாட்டு மக்களை முன்னிறுத்தி வரம் கேட்டாராம்.

‘கடவுள் மறுப்புக் கொள்கை’ உடையவர்களாலும் பாராட்டப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட மகான் ஒருவர் உண்டு என்றால், அது மகா பெரியவாதான்.

காரணம் - எளிமை, நேர்மை, தூய்மை, பரோபகாரம், மனிதநேயம் - இப்படிப்பட்ட நற்குணங்களை மட்டுமே தனது சொத்தாகக் கடைசி வரை வைத்திருந்தவர் மகா பெரியவா.

கவியரசர் கண்ணதாசனை அறியாதோர் எவரும் இருக்க முடியாது. துவக்க காலத்தில் ஒரு நாத்திகராக இருந்து, மேடைக்கு மேடை... அவ்வளவு ஏன்? காஞ்சிபுரத்திலேயே சங்கர மடத்துக்கு எதிரில் மேடை போட்டு, காஞ்சி ஸ்ரீமடத்தையும், மகா பெரியவாளையும் பல முறை திட்டித் தீர்த்தவர்.

அப்பேர்ப்பட்ட ‘அக்மார்க்’ நாத்திகரான கண்ணதாசன் கொடூரமான ஒரு கார் விபத்தில் உருக் குலைந்தார். அனைவருக்கும் இரங்கும் ஆபத்பாந்தவனான காஞ்சி மகா பெரியவாளின் பரிபூரண அருளாலும் ஆசியாலும் உயிர் மீண்டார்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும், நேராகக் காஞ்சி போய் மகா பெரியவாளை கண்ணீர் மல்க வணங்கினார் கண்ணதாசன். பெரியவாளின் ஆசியுடன் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ பிறந்தது.

காஞ்சி மகா பெரியவாளைப் பற்றிப் பின்னாளில் கண்ணதாசன் எழுதினார்:

‘அவர் பிராமண ஜாதியின் தலைவர் அல்ல. பிராமணர்கள் அப்படி ஒரு நிலையை உண்டாக்கக் கூடாது. உலகெங்கிலும் உள்ள அஞ்ஞானிகளுக்கு ஞானக் கண் வழங்கும் பேரொளி. அவரது பெருமை இப்போது தெரியாது. இன்னும் ஐம்பது வருடங்கள் போனால் ‘இந்து மதம் என்றால் என்ன?’ என்ற கேள்விக்கு ‘ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் என்ற சங்கராச்சார்ய ஸ்வாமிகள்’ என்று எதிர்கால மாணவன் பதில் எழுதுவான்.

செஞ்சிக் கோட்டைக்கு போகிறவன் எல்லாம் தேசிங்குராஜா அல்ல. காவி கட்டிய எல்லோரும் மகா யோகிகள் அல்ல. ஞானம், வித்தை, ஒழுக்கம், பண்பாடு ஆகிய அனைத்து சேர்ந்த மகாயோகி எங்கோ எப்போதோ அவதரிக்கிறார். தாய் குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும்போது இந்த மகானைப் பற்றிப் பாட வேண்டும். பள்ளிக்கூடப் பாடப் புத்தகங்களில் இந்த மகானைப் பற்றிக் குறிக்க வேண்டும்.’

- பக்தியின் பாதைக்கு முழுக்கத் திரும்பிய கண்ணதாசனின் உணர்ச்சிமிகு வரிகள் இவை.

‘இந்த மகானை முதல் முறையாக நான் காஞ்சியில் பார்த்தபோது இப்படியும் ஒரு எளிய துறவியா என்று வியந்தேன். இவரைப் பார்த்த பின் நானும் ஒரு துறவி என்று சொல்லவே வெட்கப்பட்டேன். பேச்சில் கலப்படம் இல்லாத உண்மை, குரலில் தெறிக்கின்ற ஞானம், தவத்தின்போது தெரிகின்ற அமைதி... யப்பப்பா’ என்று வியக்கிறார் புத்த துறவி தலாய்லாமா.

உலகில் வசிக்கின்ற எல்லோரையும் ஈர்த்த ஒரே விஷயம் - மகா பெரியவா வாழ்ந்த எளிமையான வாழ்க்கைதான்!

உருவத்தில் குள்ளம். உள்ளத்தில் உயரம்.

பணத்தைக் கையால் தொட்டதில்லை.

தொலைபேசி பயன்படுத்தியதில்லை.

உணவில் பற்றில்லை.

உடையில் நாட்டமில்லை.

சொத்து சுகத்தில் கவனமில்லை.

சொந்த பந்தங்களுக்கு சலுகை இல்லை.

இவரிடம் ஆசி பெற வருபவர்களில் கோடீஸ்வரர்கள் பலரும் உண்டு. ஆனால், இவரோ கட்டாந்தரையில், மாட்டுத் தொழுவத்தில், ஏதோ ஒரு திண்ணையில் யாரும் அறியாதவாறு சாதாரணமாக சுருண்டு படுத்திருப்பார்.

பாரத தேசம் முழுக்க மூன்று முறை யாத்திரை செய்தவர். கார் போன்ற சொகுசு வாகனங்களைப் பயன்படுத்தியதில்லை.

18 மொழிகள் தெரிந்தவர்.

மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு ஒரு பார்வையாளராகச் சென்று விமானியே வியக்கும்படி பல சந்தேகங்களை எழுப்பி, அதற்கு உரிய விளக்கமும் தந்தவர்.

விசாகப்பட்டினம் சென்றபோது கப்பல் கட்டும் தொழிலில் உள்ளவர்களிடம் அதைப் பற்றி வெகு சுவாரஸ்யமாகப் பேசி அசத்தியவர்.

மவுண்ட் ரோட்டில் உள்ள ஒரு அச்சகத்துக்குச் சென்று அச்சுத் துறை சம்பந்தமான பல வியக்கும் தகவல்களைச் சொன்னவர்.

ஒரு விஞ்ஞானியிடம் பேசும்போது, ‘இவர் எங்கே போய் இத்தனை விஷயங்களைக் கற்றார்?’ என்று அவரே மூக்கில் விரல் வைக்கும்படியான உரையாடல்...

ஆக, மொத்தத்தில் மகா பெரியவா - நடமாடும் என்சைக்ளோபீடியா!

....................................

1994-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8-ஆம் தேதி சனிக்கிழமை மதியம் 2.58 மணிக்கு பிருந்தாவனஸ்தர் (முக்தி) ஆனார் மகா பெரியவா.

கடைசி நிமிடம் வரை உற்சாகமாகவே இருந்திருக்கிறார். அன்றாட அலுவல்களையும் விசாரித்திருக்கிறார். அரை நொடிக்குள் அவர் அமரர் ஆகி விட்டார் என்றனர், அன்றைய தினத்தில் அவருக்கு சேவை செய்தவர்கள்.

காஞ்சி மகா பெரியவா ஸித்தி ஆன தகவல் ஒரு சில மணி நேரத்துக்குள் உலகம் முழுக்கப் பரவியது. நாலா திசைகளில் இருந்தும் காஞ்சியை நோக்கி வாகனங்கள் சாரி சாரியாகப் பயணிக்க ஆரம்பித்தன.

காஞ்சி மாநகரமே ஜன சந்தடியால் திணற ஆரம்பித்தது. தங்களது ஊரில் வாழ்ந்த கருணை மகான் மறைந்தார் என்ற செய்தி கேட்டு காஞ்சி நகரத்து வியாபாரிகள் அனைவரும் தாங்களும் அஞ்சலி செலுத்துவதற்காக - எவரும் சொல்லாமல் - எந்த விதமான அடக்குமுறையும் இல்லாமல் கடைகளை அடைத்தனர்.

நாளிதழ் கடைகள், டீ-காபி, பூக்கடைகள் - இவை மட்டும் விதிவிலக்கு.

இந்துக்கள் மட்டும் அல்லாமல் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், ஜைனர்கள், வெளிநாட்டு அன்பர்கள், பொதுவாழ்வில் இருந்து வரும் பிரபலங்கள், பெரும் செல்வந்தர்கள், பரம ஏழைகள், முதியவர்கள், இளைய தலைமுறையினர், மாணவர்கள் என மகானுக்கு அஞ்சலி செலுத்த திரண்டிருந்தவர்கள் நின்றிருந்த வரிசை சுமார் இரண்டரை கி.மீ.க்கு மேல் நீண்டிருந்தது.

பிரதமர் நரசிம்ம ராவ் உட்பட டெல்லி மற்றும் பல மாநிலங்களில் இருந்து அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் இறுதி அஞ்சலிக்கு வந்தனர்.

வேதம், தேவாரம், நாமசங்கீர்த்தனம், திருப்புகழ், சஹஸ்ரநாம பாராயணம் என்று மகா பெரியவாளின் பூதவுடலைச் சுற்றி பக்தி மணம் கமழ்ந்தது.

‘எம் பொண்ணுக்கு இவருதானே தன் கையால தாலி எடுத்துக் கொடுத்தாரு.... இனிமே இவரை எப்ப பாக்கப் போறேன்?’ - ஐம்பது வயது தாயார்.

‘எனக்கு ஒரு குறைன்னா இவர்ட்ட வந்து சொல்லுவேன். துந்நூறு தந்து அனுப்புவாரு. இனிமே யார்ட்ட எங்குறையைச் சொல்லுவேன்?’ - அறுபத்தைந்து வயது கிராமப் பெண்மணி.

‘நாங்க என்ன தப்பு பண்ணாலும் கோவிக்க மாட்டாரே... ஒருவேளை கோபம் வந்தாலும் அடுத்த நிமிஷமே நம்மளைப் பாத்துச் சிரிச்சுப் பேசுவாரே... இவருக்கு சேவை பண்றதுக்காகவாவது மேலுலகத்துக்கு என்னையும் கூப்டுண்டு போப்பா இறைவா.’ - மகா பெரியவாளுக்கு கைங்கர்யம் செய்து வந்த அறுபது வயது அன்பர்.

இவர்களுக்கெல்லாம் இன்றைக்குப் பதில் சொல்லி வருகிறது மகா பெரியவா பிருந்தாவனம்.

ஆம்! ‘பிருந்தாவனத்துள் இருந்து 700 வருடம் என் பக்தர்களைக் காப்பேன்’ என்றார் மந்த்ராலய மகான் ஸ்ரீராகவேந்திரர்.

இந்தக் காஞ்சி மகா பெரியவாளும் அதுபோல் தன்னை நம்பி வரும் பக்தர்களை இன்றளவும் காப்பாற்றி வருகிறார் என்பது அங்கே தினம் தினம் கூடும் பக்தர்களே சாட்சி!

..............................

மகா பெரியவா பிருந்தாவனஸ்தர் (முக்தி) ஆனதைத் தொடர்ந்து 1994-ஆம் ஆண்டு அப்போதைய தமிழக சட்டசபையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.

அந்த இரங்கல் தீர்மானத்தில், ‘காஞ்சி பெரியவர் ஸித்தி அடைந்த செய்தி - குறிப்பாக, தமிழகத்துக்கும் உலகின் பல பகுதியினருக்கும் பெரும் துயரம் அளிக்கும் செய்தியாகும். காஞ்சி பெரியவர் தனது வாழ்நாளில் கடைப்பிடித்து வந்த எளிமையும், ஏழை, எளியோர், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்று எந்தவித பாகுபாடும் இன்றி அனைத்து தரப்பு மக்களையும் ஆதரித்து ஆசிர்வதித்த தன்மையும் எல்லோராலும் போற்றிப் பாராட்டப்பட்டவை ஆகும்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு ஆசி வழங்கியது, தானே கடைசி வரை கதர் அணிந்தது, வரதட்சணையை வெறுத்து ஆடம்பரம் இல்லாத திருமணங்களை செய்வித்தவை போன்றவை அவரது அரும் செயல்களில் குறிப்பிடத் தக்கவை ஆகும்.

இமயம் முதல் குமரி வரை விரிந்து கிடக்கும் நம் தாய்நாட்டில் பல பகுதிகளிலும் தொடர்ந்து பாத யாத்திரையாகத் தன் சுற்றுப்பயணத்தை அமைத்துக் கொண்டு மக்களை ஆசிர்வதித்த தன்மை வேறு எந்த ஆன்மிக பெருந்தகைக்கும் இல்லாது பரமாச்சார்யர் அவர்களுக்கு மட்டுமே உரித்தான தனிச் சிறப்பு ஆகும்’ என்று அந்த இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தமிழக சட்டசபை உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அமைதி காத்தனர்.

அப்பழுக்கற்ற துறவிக்கு செலுத்தப்பட்ட உண்மையான அஞ்சலி.

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர.

காஞ்சி சங்கர காமகோடி சங்கர.

 
Comment

Raghunathan Iyer

unread,
Jan 6, 2016, 4:12:09 AM1/6/16
to arunalaya


இந்திய பாஸ்போர்ட் மூலம் 58 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யலாம்;அந்த 58 நாடுகளின் பட்டியல் இதோ:
இந்தியக் குடிமகன்கள் தங்களது இந்திய பாஸ்போர்ட் மூலம் 58 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்யலாம்.
அதேவேளையில், 29 நாடுகளுக்கு ‘விசா ஆன் அரைவல் – Visa on arrival’ என்ற வருகையின் போது விசா சேவையைப் பயன்படுத்தலாம்.
பாஸ்போர்ட் அட்டவணை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் படி (Passport Index official website) அமெரிக்கா அல்லது பிரிட்டிஷ் பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒருவர், 147 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் மேற்கொள்ளலாம்.
அந்த வகையில், இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்கும் ஒருவர் 58 நாடுகளுக்கு விசா இன்றிப் பயணம் செய்யும் சலுகை உள்ளது.
அந்த 58 நாடுகளின் பட்டியல் இதோ:
Bhutan
Hong Kong
South Korea (Jeju)
Macau
Nepal
Antarctica
Seychelles
FYRO Macedonia
Svalbard
Dominica
Grenada
Haiti
Jamaica
Montserrat
St. Kitts & Nevis
St. Vincent & Grenadines
Trinidad & Tobago
Turks & Caicos Islands
British Virgin Islands
El Salvador
Ecuador
Cook Islands
Fiji
Micronesia
Niue
Samoa
Vanuatu
Cambodia
Indonesia
Laos
Thailand
Timor Leste
Iraq (Basra)
Jordan
Comoros Is.
Maldives
Mauritius
Cape Verde
Djibouti
Ethiopia
Gambia
Guinea-Bissau
Kenya
Madagascar
Mozambique
Sao Tome & Principe
Tanzania
Togo
Uganda
Georgia
Tajikistan
St. Lucia
Nicaragua
Bolivia
Guyana
Nauru
Palau
Tuvalu
வருகையின் போது விசா (Visa On Arrival)
Bolivia
Burundi
Cambodia
Cape Verde
Comoros
Djibouti
Ethiopia
Guinea-Bissau
Guyana
Indonesia
Jordan
Kenya
Laos
Madagascar
Maldives
Nauru
Palau
Saint Lucia
Samoa
Seychelles
Somalia
Tanzania
Thailand
Timor-Leste
Togo
Tuvalu
Uganda
Somaliland
Niue
மேற்கண்ட ‘விசா ஆன் அரைவலில்’ பட்டியல் சில கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது குறிப்பிடத்தக்கது.

Raghunathan Iyer

unread,
Jan 7, 2016, 1:51:54 AM1/7/16
to arunalaya, vcsmani, kvsankar

அனைத்து ஜாதி அர்ச்சகர் சட்டம் ஒரு திராவிட மாயை – 1

 பகிர்க:


கடந்த 2006-2011 ஆண்டுகளில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழக அரசு “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என்கிற அவசரச்சட்டம் ( சட்டம்16 / 2006 – ஆளுனர் ஒப்புதல் தேதி 29.08.2006)  கொண்டுவந்தது. தமிழ் வளர்ச்சி-பண்பாடு-அறநிலையத்துறையால் இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆணை பிறப்பித்த கையோடு கோவில்களில் பூஜை செய்வதற்கான பயிற்சியை அனைத்து ஜாதியினருக்கும் வழங்கவும் இந்து அறநிலையத்துறை மூலம் ஏற்பாடு செய்தது (அரசாணை 118 / 23.05.2006). வைணவ முறைப்படி அர்ச்சகர் ஆவதற்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலும், சைவ முறைப்படி அர்ச்சகர் ஆவதற்கு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் கோவில் மற்றும் பழனி தண்டாயுதஸ்வாமி கோவிலிலும் ஓராண்டு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன. ஆகம சாஸ்திரங்களில் பயிற்சி பெற்றவர்கள் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. பயிற்சி பெற விருப்பம் தெரிவித்த மாணவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு இருக்க இடம், உணவு வசதிகளுடன் மாதம் ரூ.500 உதவித் தொகையும் வழங்கப்பட்டது. இந்த ஓராண்டு பயிற்சியை மொத்தம் 207 மாணவர்கள் பெற்றனர். 
 
சட்டம் இயற்றப்பட்டவுடனேயே, இந்தச் சட்டத்தை எதிர்த்து ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு [Writ Petition (Civil) No: 354 of 2006] தொடர்ந்தது. தென்னிந்திய பர்பாலன சபையும், மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் சிவாச்சாரியார்களும் தங்களை இவ்வழக்கில் அரசுக்கு எதிராக இணைத்துக்கொண்டனர். 2006 இல் தொடங்கிய இவ்வழக்கு விசாரணை 2015ம் வருடம் மே மாதம் முடிவடைந்தது. அப்போது தீர்ப்பை ஒத்திவைத்த  நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி.ரமணா ஆகியோர் டிசம்பர் 16ம் தேதி பின்வருமாறு தீர்ப்பளித்தனர்.
 
   
All Caste Archagas 1
 
 
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு
  
தேவைப்படும் தகுதிகளை கொண்ட, பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ற, இந்து சமுதாயத்தில் பிறந்த எந்த ஒரு நபரும் அர்ச்சகராக கோவில்களில் பணி புரியலாம் என்று தமிழக அரசின் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஏறுக்கொள்ளத்தக்கது. அதே சமயம், கோவில்கள் கட்டப்படுவதற்கும், தெய்வத் திருவுருவங்களைப் பிரதிஷ்டை செய்வதற்கும், பல்வேறு தெய்வங்களுக்குப் பலதரப்பட்ட பூஜைகள் செய்வதற்கும் ஆகமங்கள் முறையான விதிகளை வரையறுத்துள்ளன. அதோடு மட்டுமல்லாமல், யார் யார் அந்தப் பூஜைகளை செய்ய வேண்டும் என்பதையும், ஆகமங்கள் தெளிவுபடுத்துகின்றன. சில ஆகமங்கள், குறிப்பிட்ட பிரிவினர் மட்டுமே, பூஜைகளை செய்ய வேண்டும் என, வலியுறுத்துகின்றன. 
 
 அரசியல் அமைப்புச் சட்டத்தின், 25, 26வது க்ஷரத்துக்கள், மத நம்பிக்கை மற்றும் மதச் சடங்குகளை கடைபிடிப்பதற்கான சுதந்திரத்தையும் உரிமையையும் உறுதி செய்கின்றன. மேலும், 16 வது க்ஷரத்தின் 5 வது பிரிவு, ஒரு மத நிலையத்தில் ஏற்கனவே உள்ள மத விஷயமான அல்லது மதப்பிரிவின் வழிபாடு தொடர்பான அலுவல்கள் பதவிகள், குறிப்பிட்ட மதத்தினர்தாம் இருக்கவேண்டும் என்பதோ, அல்லது, குறிப்பிட்ட தனிப்பிரிவினர்தாம் இருக்க வேண்டும் என்பதோ, அரசின் கீழ் உள்ள வேலைவாய்ப்புகளில் பாகுபாடு இன்மை என்கிற கோட்பாட்டின் கீழ் வராது என்று சொல்கிறது. அதாவது ஆகம விதிகளின்படி வழிபாடுகள் நடக்கும் இடங்களில், அந்த ஆகமங்களில் சொன்னபடி, அர்ச்சகர்களை நியமிக்கும் உரிமையை உறுதிப்படுத்துகின்றது. இது, அரசியல் சாஸனத்தின் 14வது க்ஷரத்தை மீறுவதாகவும் ஆகாது. 
 
  
All Caste Archagas 5
 
 
பொது சட்டம் - ஒழுங்கு, பொது ஒழுக்கம், சுகாதாரம் ஆகியவற்றை பாதிக்காத வரை, மதச் சடங்குகள், அவற்றைக் கடைப்பிடிக்கும் குழுக்களின் உரிமைகள், தனி நபர்களின் மத உரிமைகள் ஆகியவற்றை அனுபவித்துக் கொள்ள, அரசியல் சட்டம் அனுமதிக்கிறது. அவற்றைப், பாதுகாக்கவும் செய்கிறது. இந்த அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட ஆகமம் மற்றும் ஆகம விதிகள், அரசியல் சட்டத்திற்கு விரோதமானதல்ல என்றே இந்த நீதிமன்றம் கருதுகிறது. இதன் அடிப்படையிலும், சேஷம்மாள் வழக்கில், சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாஸன அமர்வு அளித்த தீர்ப்பின்படியும், தமிழக கோவில்களில், ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்கள் அடையாளம் காணப்பட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தின் உரிமைக்கட்டளைகள் மற்றும் கொள்கைகளுக்கு உட்பட்டு நியமிக்கப்பட வேண்டும். அர்ச்சகர் நியமனத்தில் பிரச்சனைகள் ஏற்படும்போது, ஒவ்வொரு தனிப்பட்ட கோவிலும் நீதிமன்றத்தை அணுகி தீர்வுகள் பெறவேண்டும்.  
  
மேற்கண்டவாறு தீர்ப்பளித்து அனைத்து மனுக்களையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.  
 
 
உச்ச நீதிமன்றம் கருத்தில்கொண்ட அரசியல் சாஸன க்ஷரத்துக்கள்
 
மேற்கண்ட தீர்ப்பை முடிவு செய்யும் விதமாகவும், வாத பிரதிவாதங்களை அலசிப்பார்க்கவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அரசியல் சாஸனத்தின் சில முக்கியமான க்ஷரத்துக்களைக் கருத்தில் கொண்டு வழக்கை நடத்தினர்.    
  
அரசியல் அமைப்புச் சட்டம் - க்ஷரத்து 13:
  
அரசியல் சாஸனத்திற்கு முன்பும், பின்பும் இருக்கின்ற அனைத்துச் சட்டங்களும், அவை அரசியல் சாஸனம் தன்னுடைய 3வது பிரிவில் உறுதி செய்யும் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக இருப்பின், அவை செல்லுபடியாகாது. இந்த க்ஷரத்தின் மூன்றாவது [13(3)] பிரிவு, அனைத்து விதிகள், விதிமுறைகள், அறிவிப்புகள், மரபுகள், மரபின்படியான பழக்க வழக்கங்கள் (all Rules, Regulations, Notification, custom and usage) ஆகியவற்றை சட்டம் என்கிற ஒரே குழுவிற்குள் கொண்டுவந்து அதற்கு இணையான சக்தியையும் அளிக்கின்றது. 
 
அரசியல் அமைப்புச் சட்டம் - க்ஷரத்து 25:
 
அனைத்து மக்களுக்கும் தங்களுடைய மதக் கோட்பாடுகளை, பொது சட்டம்-ஒழுங்கு, பொது ஒழுக்கம், சுகாதாரம் ஆகியவை பாதிக்கப்ப்டாத வகையில் மேற்கொள்வதற்கும், பின்பற்றுவதற்கும், விருத்தி செய்வதற்கும் உரிமையும் மதச் சுதந்திரமும் உண்டு என்று அரசியல் அமைப்புச் சட்டத்தின் 25வது க்ஷரத்து கூறுகிறது..  மதநடைமுறைகளுடன் தொடர்புடைய எந்த பொருளாதார, நிதி, அரசியல் அல்லது மதச்சார்பற்ற நடவடிக்கைகளை நிலுவையில் இருக்கின்ற சட்டங்கள் மூலமோ அல்லது புதிய சட்டங்கள் மூலமோ ஒழுங்கு படுத்துவதையும் இந்த க்ஷரத்து அனுமதிக்கிறது. சமூக நலன் மற்றும் சமூக சீர்திருத்தத்தைக் கருத்தில் கொண்டு, அனைத்து வகுப்பினருக்கும் பிரிவினருக்கும் பொதுவாக இந்து மத (சீக்கிய, பௌத்த, ஜைன மதத்தினர் உட்பட) நிறுவனங்களைத் திறந்து விடுதலையும் இந்த க்ஷரத்து உறுதி செய்கிறது. 
 
 
அரசியல் அமைப்புச் சட்டம் - க்ஷரத்து 26: 
  
All Caste Archagas 2
 
 
பொது சட்டம்-ஒழுங்கு, பொது ஒழுக்கம், சுகாதாரம் ஆகியவை பாதிக்கப்ப்டாத வகையில், மதம் மற்றும் அறம் சார்ந்த செயல்பாடுகளுக்கு நிறுவனங்களைத் தொடங்கி நடத்துவதற்கும், மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களை நிர்வாகம் செய்வதற்கும், அசையும், அசையா சொத்துக்களை வாங்குவதற்கும், சொந்தம் கொண்டாடுவதற்கும், அவ்வாறு வாங்கப்பட்ட சொத்துக்களை சட்டப்படி நிர்வகிப்பதற்கும் ஒவ்வொரு மதக்குழுவுக்கும் (Religious denomination)  உரிமையும் மதச்சுதந்திரமும் உண்டு என்பதை இந்த க்ஷரத்து உறுதி செய்கிறது. 
 
அரசியல் அமைப்புச் சட்டம் – க்ஷரத்து 14:
 
சட்டத்தின் முன் அனைவரும் சமம். மத, ஜாதி, இன, பாலின, பிறப்பிட பாகுபாடுகள் இன்றி சட்டத்தின் முன் அனைவரும் சரிசமமாகக் கருதப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும்.
 
அரசியல் அமைப்புச் சட்டம் – க்ஷரத்து 17:
 
தீண்டாமை ஒழிப்பு. தீண்டாமை ஒழிக்கப்பட்டுள்ளது. அதைக் கடைப்பிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. தீண்டாமையின் விளைவாக வரும் இயலாமையை நடைமுறைப்படுத்துவது சட்டப்படி குற்றமாகும்.
 
அரசியல் அமைப்புச் சட்டம் – க்ஷரத்து 16(5): 
 
ஒரு மத நிலையத்தில் ஏற்கனவே உள்ள மத விஷயமான அல்லது மதப்பிரிவின் வழிபாடு தொடர்பான அலுவல்கள் பதவிகள், குறிப்பிட்ட மதத்தினர்தாம் இருக்கவேண்டும் என்பதோ, அல்லது, குறிப்பிட்ட தனிப்பிரிவினர்தாம் இருக்க வேண்டும் என்பதோ, அரசின் கீழ் உள்ள வேலைவாய்ப்புகளில் பாகுபாடு இன்மை என்கிற கோட்பாட்டின் கீழ் வராது
 
  
மேற்கண்ட ஐந்து க்ஷரத்துக்களையும் ஆலோசித்துப் பார்க்கும்போது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு நமக்குப் புரியும். 
 
முந்தைய வழக்குகள்
 
மேற்கண்ட க்ஷரத்துக்களைக் கருத்தில் கொண்டு தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இவ்வழக்கிற்குத் தொடர்புள்ள முந்தைய வழக்குகளின் தீர்ப்புகளையும் அலசி ஆராய்ந்து உள்ளனர். அந்தத் தீர்ப்புகளை நாமும் சற்று ஆராய்ந்து நோக்குவோம். 
 
சேஷம்மாள் வழக்கு: 
 
1970ம்  வருடம் அப்போதைய திமுக அரசு, கோவில்களில் நடைமுறையில் இருந்த பரம்பரை அர்ச்சகர் உரிமையை ரத்து செய்யும் சட்டத் திருத்தம் (இந்து அறநிலையத்துறை சட்டத் திருத்த மசோதா 1970) கொண்டு வந்தது. இந்தத் திருத்தம் 1971ம் வருடம் ஜனவரி 8ம் தேதி முதல் அமுலுக்கு வந்தது. 
 
இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து சேஷம்மாள் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாஸன அமர்வு (Constitutional Bench) தீவிரமாக விசாரித்தது. 
 
 
All Caste Archagas 3
  
தமிழக அரசின் சட்டத் திருத்தத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சாஸன அமர்வு, அர்ச்சகராக யாரை எப்படி நியமனம் செய்வது என்கிற மற்றொரு கேள்வியையும் கருத்தில் கொண்டு வழக்கை நடத்தியது. கோவில் கட்டப்படுவது முதல் விக்ரகங்கள் பிரதிஷ்டை, பூஜைகள், வழிபாட்டு முறைகள் வரை அனைத்தையும் வரையறை செய்யும் ஆகம சாஸ்திரங்கள் சொல்லிய படிதான் அர்ச்சகர்களையும் நியமனம் செய்ய வேண்டுமா என்கிற கேள்வியையும் கருத்தில் கொண்டு வழக்கை நடத்தியது. இறுதியில், தமிழக அரசின் சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொண்டு பரம்பரை அர்ச்சக உரிமையை ரத்து செய்தும், ஆகம விதிகளின் படியான குறிப்பிட்ட மதக்குழுக்களின் உரிமையை உறுதி செய்தும் உச்ச நீதிமன்ற அரசியல் சாஸன அமர்வு தீர்ப்பளித்தது. 
 
 
அதாவது, ஆகம விதிகளின்படி சைவத்தலங்களிலும், வைணவத்தலங்களிலும் பரம்பரையாக அர்ச்சகர் பணியில் இருந்து வரும் சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் ஆகியோரது உரிமையைப் பாதுகாத்ததோடு மட்டுமல்லாமல், அர்ச்சகர்கள் நியமனம் ஆகம விதிகளின்படியே நடத்தப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தது. பல நூறாண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டுவரும் பாரம்பரியத்தை மாற்ற முனைவது, குறிப்பிட்ட மதக்குழுவின் மதச் சுதந்திரத்திலும் உரிமையிலும் தலையிடுவதாகும் என்பதோடு மட்டுமல்லாமல் அரசியல் சாஸன க்ஷரத்துக்களை (25, 26) மீறுவதாகும் என்றும் தீர்ப்பளித்தது. 
 
மேற்கண்ட தீர்ப்பை தற்போதைய வழக்கில் குறிப்பிட்டுள்ள உச்ச நீதிமன்றம், “ஆகம விதிகள் மத நம்பிக்கையின்பாற்பட்டவை. ஆகவே, அர்ச்சகர் நியமனம் ஆகம விதிகளின் படிதான் நடக்க வேண்டும்” என்று தீர்ப்பளித்தது.  
 
கோபால மூப்பனாரும் மற்றவரும் / எதிராக / சுப்ரமணிய ஐயரும் மற்றவரும் 
 
“கோவில் அர்ச்சகர்கள் ஆகம விதிகளின் படி சிறப்பு தீக்ஷை பெற்றவர்கள் ஆதலால் அவர்கள் கர்ப்பக்கிரகத்தின் உள்ளே சென்று கடவுள் மூர்த்தங்களைத் தொட்டுப் பூஜை செய்யும் தகுதியும் உரிமையும் பெற்றவர்கள் ஆவர். அவ்வாறு ஆகம விதிகளின் படி சிறப்பு தீக்ஷை பெறாதவர்கள், அவர்கள் பிராம்மணர்களே ஆயினும், அவர்கள் தொடும்போது அந்தக் கடவுள் மூர்த்தங்கள் மாசுபட்டு அசுத்தமாக ஆகிவிடுகிறன. ஆகவே ஆகம விதிகளின் படி சிறப்பு தீக்ஷை பெற்றவர்களே கர்ப்பகிருகத்தினுள் செல்ல உரிமை பெற்றவர்கள்” என்று மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.  
 
மேற்கண்ட தீர்ப்பை தற்போதைய வழக்கில் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், “ஆகம விதிகள் குறிப்பிட்ட மதக்குழுவினருக்கு மட்டும் கர்ப்பக்கிரகத்தின் உள்ளே சென்று பூஜை செய்யும் உரிமை அளிக்கும்போது, மற்றவர்களை ஜாதி மற்றும் வகுப்பு அடிப்படையில் தடை செய்யவில்லை. ஆகவே ஆகம விதிகளின் படி அர்ச்சகரை நியமிப்பது தீண்டாமையை அனுசரிப்பதாக ஆகாது” என்று தன்னுடைய தீர்ப்பில் கூறியுள்ளது. 
 
 
ஷிரூர் மடம் வழக்கு
 
1954-ல் ஷிரூர் மடம் சம்பந்தப்பட்ட வழக்கில் (Commissioner, HR & CE Madras Vs. Sri Lakshimindra Thirtha Swamiar of Shri Shirur Mutt – SPA 1954) உச்ச நீதிமன்றம், “அரசியல் சாஸனத்தின் 26வது க்ஷரத்தின்படி கோவில் அல்லது மடத்தின் வழிபாட்டு முறைகளையும் மற்ற சம்பிரதாயங்களையும் தீர்மானிக்கும் முழு உரிமை சம்பந்தப்பட்ட மத உட்பிரிவினருக்கு (Religious Denomination) மட்டும்தான் உண்டு. அதில் தலையிட வெளியில் உள்ள அதிகார மையங்களுக்கு உரிமை இல்லை. அம்மையங்களின் அதிகார எல்லைக்குள் அம்மடமோ, கோவிலோ வராது” என்று தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளது. 
 
மேற்கண்ட தீர்ப்பை தற்போதைய வழகில் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், “சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் ஆகியோர் மத உட்பிரிவினர் என்கிற தகுதி உடையவர்கள். மேலும் அவர்களுடைய பணி இறை வழிபாட்டில் இன்றியமையாத நடைமுறைகளாகும். ஆகவே, அவர்களுடைய நியமனத்திலோ, அல்லது அவர்களின் வழிபாட்டு முறைகளிலோ குறுக்கிடும் உரிமை அரசுக்குக் கிடையாது” என்று தீர்ப்பளித்துள்ளது.  
 
 
All Caste Archagas 4
 
 
 
ஸ்ரீ வேங்கடரமண தேவரு-மைசூர் மாகாணம் வழக்கு
  
1958-ல் உச்ச நீதிமன்றம் முல்கிபேட்டா ஸ்ரீ வேங்கடரமண தேவரு தேவஸ்தானத்துக்கும் மைசூர் மாகாணத்துக்கும் இடையேயான வழக்கில் (‘Mr.Venkataramana Devaru Vs. State of Mysore’ (AIR 1958 SC 255 – SC reporter 1958 p.  895), “முல்கிபேட்டையில் இருக்கும் ஸ்ரீ வெங்கட ரமணர் கோவில், அதைக் கட்டிய கௌர சரஸ்வதி பிராம்மணர்களுக்குச் சொந்தமானது என்றாலும், அக்கோவிலில் நுழைய அனைத்துச் சமுதாய மக்களுக்கும் உரிமை உள்ளது. அனைத்துச் சமுதாயத்தினரும் கோவிலுக்குள் நுழையலாம் என்பது சமூக நலன் மற்றும் சமூக சீர்திருத்தத்திற்கு உகந்ததாகும். கௌர சரஸ்வதி் பிராம்மணர்களுக்கு என்று ஒரு தனியான சாஸ்திரக் குறிப்புகள் எந்த ஹிந்துமத நூலிலும் இல்லை. ஆகவே அவர்கள் சிதம்பரம் தீக்ஷிதர்கள் போன்ற ஒரு மதக்குழு இல்லை. மேலும் அனைத்து சமுதாயத்தினரும் கோவிலில் நுழைந்து வழிபடலாம் என்பது சமூக சீர்திருத்தமாக இருப்பதால் அதைத் தடை செய்ய முடியாது. ஆகம விதிகளின் படியான மரபு சார்ந்த பழக்க வழக்கங்களை இன்றியமையாத மத நடைமுறைகள் என்று கொள்ளலாம். ஆனால் குறிப்பிட்ட ஒரு ஜாதியினர் தவிர மற்றவர் கோவிலில் நுழையக்கூடாது என்பதை இன்றியமையாத மத நடைமுறையாகக் கருத முடியாது” என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 
  மேற்கண்ட தீர்ப்பை தற்போதைய வழக்கில் சுட்டிக்காட்டியுள்ள உச்ச நீதிமன்றம், “தமிழக அரசின் அரசாணையைப் பொறுத்தவரை, பிறப்பு அடிப்படையிலன்றி தகுதியும் பயிற்சியும் உடைய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதை சமூக சீர்திருத்தம் என்று இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்கிறது. இத்தகைய சமூக சீர்திருத்த நடவடிக்கையை அரசியல் அமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. மேலும் இதை அரசியல் அமைப்புச் சட்டத்தின் எந்த க்ஷரத்தும் தடை செய்ய முடியாது. அதே சமயத்தில், ஆகம விதிகளின் படி கட்டப்பட்ட கோவில்களில், ஆகம விதிகள் சொல்லியபடிதான் அர்ச்சகர்களும் நியமிக்கப்பட வேண்டும். அந்தச் செயலானது வழிபாட்டில் இன்றியமையாத நடைமுறையாகும். அதை அரசியல் அமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26வது க்ஷரத்துக்கள் உறுதி செய்கின்றன” என்று தன்னுடைய தீர்ப்பில் வலியுறுத்தியுள்ளது.    
  
என்.ஆதித்யன் – திருவிதாங்கூர் தேவஸ்தானம்
  
கேரள மாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட கோவிலில் நம்பூதரி அல்லாத ஆனால் தகுதி வாய்ந்த ஒரு பிராம்மணரை அர்ச்சகராக திருவிதாங்கூர் தேவஸ்தானம் நியமித்தது. அதை எதிர்த்து ஆதித்யன் என்பவர், “பல ஆண்டுகளாக இக்கோவிலில் நம்பூதரி பிராம்மண்ர்களே அர்ச்சகர்களாக இருக்கின்றனர். நம்பூதரி அல்லாத பிராம்மணர்களை அர்ச்சகராக நியமிப்பது அந்தப் பாரம்பரியத்தையும் நடைமுறையையும் மீறுவதாகும். அது அரசியல் சாஸன க்ஷரத்துக்கள் 25 மற்றும் 26 ஐ மீறுவதாகும்” என்று வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம், “ஜாதி அடிப்படையில் கோரப்படும் உரிமைகளுக்கு அரசியல் சாஸனத்தின் 25 மற்றும் 26வது க்ஷரத்துக்கள் அனுமதியோ பாதுகாப்போ தரமாட்டா. அரசியல் அமைப்புச் சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னால் அப்படியான ஒரு பாரம்பரியம் இருந்தாலும், அரசியல் அமைப்புச் சட்டம் வந்த பிறகு அதற்குத்தான் முக்கியத்துவம் உண்டே தவிர, அதற்கு முன்பு இருக்கின்ற பாரம்பரியத்திற்கு அல்ல. மேலும் அப்படியான ஒரு பாரம்பரியத்தை அரசியல் அமைப்புச் சட்டம் அங்கீகரித்திருந்தால் தான் அதற்கு அனுமதியும் பாதுகாப்பும் கிடைக்கும்” என்று தீர்ப்பளித்து, நம்பூதரி அல்லாத பிராம்மணரின் நியமனத்தை அங்கீகரித்து ஆதித்யன் மனுவை தள்ளுபடி செய்தது.
 
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் குறிப்பிட்ட கோவிலானது ஆகம விதிகளின் படி கட்டப்பட்ட கோவில் அல்ல. ஆகவே அங்கே பணிபுரிய ஆகம விதிகளின் படி அர்ச்சகர்களை நியமனம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஆதலால், நம்பூதரி அல்லாத பிராம்மணரின் நியமனத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. 
  
மேற்கண்ட தீர்ப்பை தற்போதைய வழக்கு விசாரணையில் சுட்டிக்காட்டிய உச்ச நீதிமன்றம், “இதையும் சேஷம்மாள் வழக்கு தீர்ப்பையும் சேர்த்து நோக்கும்போது இரண்டுக்கும் வித்தியாசம் இல்லை. இரண்டுமே ஆகமங்களின் முக்கியத்துவத்தையும், அதற்கான அரசியல் சாஸனத்தின் அனுமதியையும் பாதுகாப்பையும் உறுதி செய்கின்றன” என்று தீர்ப்பளித்துள்ளது.
 

Raghunathan Iyer

unread,
Jan 11, 2016, 6:11:56 AM1/11/16
to arunalaya
பிரகதியினால் முன்னேறுகிறது இந்தியா-
மன்னர் காலத்தில் அரண்மனையின் உப்பரிகையில் நின்று மக்களின் குறைகளை கேட்பது மன்னர்களின் வழக்கம்.ஆனால்
நடப்பதோ விஞ்ஜான யுகம்.நடப்பதும் மன்னராட்சி அல்ல.மக்களாட்சி.அந்த மக்கள் தேர்ந்தெடுத்த தலைவன் அந்த மக்களுக்கு உள்ள குறைகளை விஞ்ஜானத்தின் மூலம் கண்டறிந்து களைவதே பிரகதி என்ற நிர்வாக முறை.
இந்திய அரசு நிர்வாகத்தில் காணப்படும் மந்தப் போக்கை மாற்றியமைக்க திட்டமிட்ட பிரதமர் உருவாக்கியதுதான்
"துடிப்பான அரசும் துரிதமான தீர்வும்' (பிரகதி) PRAGATI-(Pro-Active Governance and Timely Implementation, எனப்படும் நிர்வாக அமைப்பு.
இந்தநடைமுறையில் ஓவ்வொரு மாதமும் கடைசி புதன் கிழமையில் பிரதமர் மோடி காணொலி முறை மூலம் மத்திய அரசு செயலர் கள், மாநில தலைமைச் செயலர்களுடன் கலந்துரை யாடுவார்.
இந்தியாவில், பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிவித் தாலும், அவை நிறைவேறி, மக்களுக்கு பயன் கிடைக்காமல் தடுப்பது, 'ரெட் டேப்பிசம்' எனப்படும், அரசு நிர்வாகத்தில் காணப்படும் எண்ணற்ற விதிமுறை மற்றும் நடைமுறைகள்.
மோடி பிரதமராகி இரண்டு மாதம் கழித்துசொன்ன வார்த்தை என்னை இன்றும் ஆச்சரியபடுத்துகிறது.பிரதமர் அலுவலகத்தில்
நடைபெறும் வேலைகளின் முறைகளை தெரிய எனக்கு தெரிய இரண்டு மாதம் ஆகி விட்டது என்றார்.அதாவது ஒரு வேலை சம்பந்தமான பைல் சிகப்பு நாடாவால் சுற்றப் பட்டு சம்பந்தபட்ட அதிகாரிகளின் கையெழுத்து வாங்கப்பட்டு இறுதியில் பிரதமரிடம் வருவதற்கு செயல்படுத்தப்படும் முறையை பற்றி 
தெரிந்து கொள்ள ஆன கால அளவை சொன்னார்.
பின்ரெட் டேப்பிசத்தால் உண்டாகும் தாமதத்தை களைவதற்கு வழிமுறைகளை கற்று கொண்டார்.
டிஜிட்டல் டேட்டா மேனேஜ்மென்ட், ஜியோ ஸ்பேஷியல், என்ற நவீன தொழில்நுட்ப முறைகளின் மூலம் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் நிலவும் பிரச்னைகளை பிரதமர் சுட்டிக்காட்டி, அதுகுறித்த விளக்கங்களை அதிகாரிகளிடம் கேட்டறிவார். அந்தப் பிரச்னைகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை மூன்று நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட துறைச் செயலர்கள் மத்திய அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும்.
அந்தப் பிரச்னை முழுமையாக தீர்க்கப்படும் வரை அதுகுறித்த விளக்கங்கள் கேட்டறியப்பட்டு கொண்டேயிருக்கும்.. இதைத் தவிர, மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் பிரதமர் விளக்கங்களைக் கோருவார். தகவல் தொழில்நுட்ப உதவியுடன் மேற்கொள்ளப் படும் இந்த புதிய நடைமுறையால் மக்களின் குறைகள் முழுமையாகத் தீர்க்கப்படும்.
இந்த அதிரடி நடவடிக்கையால், 4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் புத்துயிர் பெற்று, துரிதகதியில் நடந்து வருகின்றன.2017க்குள், தொழில் செய்ய உகந்த உலக நாடுகள் பட்டியலில், முதல் 50 இடங்களுக்குள் இந்தியாவை கொண்டு வரவேண்டும் என்பதே,
பிரதமர் மோடியின் இலக்கு. கடந்த ஆண்டு, இப்பட்டியலில், 142வது இடத்தில் இருந்த இந்தியா, மத்திய அரசின் அணுகு முறை மாற்றத்தாலும், மோடியின் செயலாற்றலாலும், 130வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 



Raghunathan Iyer

unread,
Jan 13, 2016, 2:04:30 AM1/13/16
to arunalaya

பெரியவா சரணம்

மஹா பெரியவாளை தெய்வமாக நினைத்து அவருக்குக் கைங்கர்யம் செய்த பக்தர்களில் மிகவும் முக்கியமானவர் சங்கர ஐயர். அவர் சொன்னசம்பவம் இது.

திருவாரூரில் தனது முகாமை முடித்துக் கொண்டு, அருகில் இருந்த காரணங்கோயில் என்ற ஊருக்கு பெரியவா தன் பரிவாரங்களுடன் போய்க் கொண்டு இருந்தார்.

சவுக்குக் காட்டுப்பகுதி நிறைந்திருந்த இடம். அந்தக் காலத்தில் அதைப் போன்ற வனப் பகுதியில் வழிப்பறித் திருடர்கள் திடீர், திடீரென வந்து தாக்குவார்கள். மகான் உடன் இருக்கையில் நமக்கு அச்சம் எதற்கு என்று பக்தர்கள் நடந்து கொண்டு இருந்தனர்.

ஆனால் எதிர்பாராவிதமாக கொள்ளைக்கூட்டம் திடீரென வழிமறித்தது. திருடர்கள் பல்லக்கைச் சூழ்ந்த படி நின்றனர். மகான் மெதுவாக திரையை விலக்கிப் புன்னகையோடு அவர்களைப் பார்த்து ‘அருகில் வாருங்கள்’ என்றார்.

தாக்க வந்த திருடர்களோ திகைத்துப் போயினர். அதில் ஒருவர் கூட மகானின் அருகில் போகவே இல்லை. அவர்கள் முகத்தில் பயம் தெரிந்தது. மகான் மீண்டும் அழைத்தார்.

‘கிட்ட வர முடியலீங்க எஜமான்’ என்று தங்களின் இயலாமையை ஒப்புக் கொண்டனர். அவர்கள் எத்தனை பேர் என்று மகான் விசாரித்து, அவர்கள் எல்லோருக்கும் தலா நூறு ரூபாய் கொடுத்து அனுப்புமாறு காரியஸ்தர்களுக்கு உத்தரவிட்டார்.

நூறு ரூபாய் அந்தக் காலத்தில் மிகப் பெரிய தொகை. திருடர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியுடன், திரும்பும் நேரத்தில் துணிச்சலாக சங்கர ஐயர், அவர்களிடம் கேட்டார்.

“பெரியவா கூப்பிட்டாரே ஏன் அவர்கிட்ட போகல்லே?” “போங்க சாமி.. நீங்க வேற... அவரைச் சுற்றி ஒரே நெருப்பா ஜொலிக்குது... எங்களுக்கெல்லாம் பயத்திலே நடுக்கமே வந்திருச்சி.... இப்படிப்பட்ட காட்சியை நாங்க எப்பவும் பார்த்ததே இல்லை” என்றார்கள்.

மகானை அவர்கள் யாரென்று அறிந்து கொண்டதற்கு இதுவே சாட்சி.

திருடர்களுக்கும் அருளும் நம் பெரியவாளின் கருணைக்கு நிகரேது!

Raghunathan Iyer

unread,
Jan 13, 2016, 2:06:54 AM1/13/16
to arunalaya

இந்தச் சம்பவம் காஞ்சி மடத்தில் நடந்த நிகழ்ச்சி.

மகா பெரியவர் காலையில் எழுந்தவுடன் பசுவை தரிசிப்பது வழக்கம். பசுமாடுகள் கட்டியிருந்த கொட்டகை ஒன்றில் மகான் அமர்ந்து மாலை வேளைகளில் உரையாடுவது வழக்கம்.சுற்றியிருக்கும் மக்களைக் கொசுக்கள் பிடுங்கி எடுக்கும்.மகான் மட்டும் எதைப் பற்றியும் சிந்திக்காமல், தான் சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பார்.

அந்தக் கொட்டகையில் உள்ள ஒரு பசு நிறைமாத கர்ப்பிணியாக இருந்தது. பேறுகாலம்.அதனால் பசு வேதனைப்பட்டுக்கொண்டே இருந்ததே தவிர,அதனால் கன்றை ஈன்றெடுக்க முடியவில்லை.வைத்தியர்கள் வரவழைக்கப்பட்டனர்.கால்நடைத் துறையில் சிறந்து விளங்கும் டாக்டர்கள் அவர்கள்; ஒருவர் அல்ல.. காஞ்சிமகான் மடம் என்பதால் ஆறுபேர் வந்திருந்தனர்.

பசுவை நன்றாகப் பரிசோதித்துப் பார்த்த அவர்கள், பசு ஏன் இன்னமும் பிரசவிக்கவில்லை என்கிற காரணத்தைக் கண்டு பிடித்தனர். கன்றுக்குட்டி வயிற்றுக்குள் இறந்து
போயிருந்தது. அதை வெளியே எடுக்காவிட்டால் பசுவும் இறந்துவிடும். அந்த ஆறுபேரும் ஏகோபித்து சொன்ன முடிவு அது. இதைக் கேட்ட நிர்வாகிகள் நேராக மகானிடம் போய் மெதுவாக விஷயத்தைச் சொன்னார்கள்.

தன் இருக்கையை விட்டு எழுந்த அவர், நேராக பசு இருந்த கொட்டகைக்கு வந்தார். பசுவின் எதிரே அமர்ந்தார். அவரது பார்வை வேறு பக்கம் திரும்பவே இல்லை.கன்று வயிற்றுக்குள் இறந்து போயிற்று என்று ஏகோபித்த முடிவாகச் சொன்ன டாக்டர்கள் ஒருபக்கமா நின்று, மகானையும், பசுவையும் மாறிமாறிப் பார்த்துக் கொண்டே இருந்தார்கள்.

இப்படியும் அப்படியுமாக நிலைகொள்ளாமல் தடுமாறிக் கொண்டிருந்த பசு..... ஓர் இடத்தில் நின்றது. சற்று நேரத்தில் அதன் வயிற்றில் இருந்த கன்றுக்குட்டி வெளியே வந்தது.துள்ளியபடி நின்றது.இறந்து போனது என்று டாக்டர்கள் சொன்ன அதே கன்றுதான் உயிரோடு வெளியே வந்தது.

ஆறு டாக்டர்களுக்கும் இது விந்தையான நிகழ்ச்சிதான். அவர்களும் அப்போதுதான் மகானின் அருட்பார்வை எப்படிப்பட்டது என்கிற பேருண்மையைத் தெரிந்து கொண்டனர்.

பசுமாட்டை நன்றாகத் தடவிக் கொடுத்தபின் மகான் உள்ளே போனார்.

Jaya Jaya Shankara, Hara Hara Shankara!


Raghunathan Iyer

unread,
Jan 13, 2016, 2:09:37 AM1/13/16
to arunalaya


சத்தியசோதனை நித்தம் நடத்தியே - எமை(ப்)
பித்தனாய் அலைப்பதோ?! இறையே!! - ஆயினும் தேயாது
வளர்தங்கக் காஞ்சிவாழ் உயர்வே! - ஓயாது
உளம் உம்மை ஏத்திப் போற்றிவளர அருளே!!
எம் மனதில் நடமாடும் கருணா சாகர! சற்குரு வே!பொற்பாதம் போற்றி!
எல்லாமறிந்த அருட்சக்தி! சற்குரு வே! பொற்பாதம் போற்றி!
மன வேதனை விலக்கிய வித்தக! சற்குரு வே! பொற்பாதம் போற்றி!
வில்வம் பொலிவுற சூடிய சற்குரு வே!! பொற்பாதம் போற்றி!
அறம் வளர் நாயக! வையம் புகழும் குணசீல! சற்குரு வே! பொற்பாதம் போற்றி!
கதறி தொழுதிடுவார் குறை போக்கும் சற்குரு வே! பொற்பாதம் போற்றி!
வேதமும் நாதமும் போற்றும் சற்குரு வித்தக! பொற்பாதம் போற்றி!
வையம் புகழும் குணசீல! சற்குருவே! பொற்பாதம் போற்றி!
கருணா சாகர! தொண்டர் தொழும் சற்குருவே! பொற்பாதம் போற்றி!
எம் மன களிற்றின் மதத்தை நீக்கும் சற்குருவே!பொற்பாதம் போற்றி!
மன அறியாமையை அகற்றும் சற்குண சற்குருவே! பொற்பாதம் போற்றி! 
அண்ணலின் பொற்பாதம் போற்றி! தாயான தந்தை! பொற்பாதம் போற்றி!
ஒளிரும் அருளுக்கு உருவாகி நின்ற சற்குருவே! பொற்பாதம் போற்றி!
ஸ்ரீகாமகோடீ ஸ்ரீ சந்திர சேகர சரஸ்வதி ஸ்வாமி சற்குருவே! போற்றி!
ஸ்ரீ ஜகத்குரு! எம் மகான் சற்குரு! பொற்பாதம் போற்றி! போற்றி!
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் 22 வது ஆராதனை தவ பாத சமர்ப்பணம்!
ஹர ஹர சங்கர ஜய ஜய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர ஹரஹரசஙகர ஜெயஜெயசங்கர!ஜய ஜய சங்கர ! ஹர ஹர சங்கர !
Composed ,Presented & Dedicated to Sri Charanal by::
காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவா தாஸன்

டாக்டர். கி.பாலசுப்ரமணியன்
Krishnamoorthi Balasubaramanian's photo.

Raghunathan Iyer

unread,
Jan 13, 2016, 2:10:40 AM1/13/16
to arunalaya
மஹா பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார். ‘ஆசார அனுஷ்டானமில்லாத உனக்கெல்லாம் மந்திர உபதேசம் என்ன வேண்டியிருக்கு?” என்ற கடிய சொற்களை எதிர்பார்த்து வந்தவருக்கு, கனிவான உபதேசத்தால் நெகிழ்ந்தே போனார்.
ஆனால், இந்த மந்திரம் அந்த பெண்மணிக்கு மட்டும் அளிக்கப்பட்ட உபதேசம் அல்ல; நம் அத்தனை பேருக்கும்தான்!
‘ஹரிநாராயண துரிதநிவாரண பரமானந்த சதாசிவ சங்கர’
வேலைக்கு போகிறவர்கள் (குறிப்பாக ஸ்திரீகள்) ஜெபிக்க சுலபமான மந்திரம்!
அறவழிதனைக் காத்து, அறிஞரையும் காப்போய் நீ!
மறவாமல் அடியாரை அனுதினமும் காப்போய் நீ!
சிறியேன், கடையேன், எனையென்றும் காப்போய் நீ!
அறிவேதுமில்லாமல்,”நீ வாபோ” என்றுன்னை
உறவாக நினைத்ததனால், உள்ளன்பின் மிகுதியினால்
சிறு பேரழைத்திட்டோம், 
கோபம் நீ கொள்ளாதே
இறைவா, என் ஐயா, உன் பதமே சரணடைந்தோம்.
Those who perform japam of this during travel or during difficult times will get Duritha Nivaranam from their difficulties.
Jagath Rakshaka Potri!

Raghunathan Iyer

unread,
Jan 13, 2016, 2:11:46 AM1/13/16
to arunalaya

 
Kannan Wbk's photo.
 

இன்னும் நிறைய ஒடுக்குங்கள் பிராமணனை....
அவன் மென்மேலும் முன்னேற....

கத்தியைக் கண்டால் ஒதுங்குபவன், தன பெண்ணை பிற சாதியன் காதலித்துக் கல்யாணம் செய்தால் மறுதலிக்க முடியாமல் சில காலத்திற்குப் பின் ஏற்றுக் கொள்பவன், தான் உண்டு தன வேலை உண்டு என்று இருப்பவன்,

எல்லாவற்கும் ஒரு விதத்தில் அரசாங்க ஆதரவும் பட்டியல் உரிமையும் இருக்க, இவனுக்கு மட்டும் ஒன்றுமில்லை, இருக்கும் ஒரு சதவீத வெளிப்படை போட்டியில் ஆயிரத்திற்கு ஆயிரம் மதிப்பெண் வாங்கி போட்டியிட வேண்டும்...கூட போட்டியிடுபவன் அறிவிலும் குறைவு, மதிப்பெண்ணிலும் குறைவு, ஆனால் தட்டிக்கொடுத்து பட்டியலில் சாதிப் பெயரிட்டு கூப்பிட்டுக் கொடுக்கிறது வேலையை.... கேட்டால் ஒதுக்கப் பட்ட இனமாம், நான் ஆதிக்க சக்தியாம்....

சுதந்திரம் வாங்க மட்டும் புரட்சிக் கவி பாடவும், ஆஷ் துரையைக் கொல்லவும், ஜெயிலுக்குப் போகவும் பார்ப்பனன் வேண்டும், ஆனால் வேலையில் இட ஒதுக்கீடு மட்டும் இல்லை, ஏனென்றால் எல்லா பார்ப்பணனும் பணக்காரன் பாருங்கள்? என்னய்யா கண்டு பிடித்தீர்கள் பிராமணனிடம் குற்றம்? அவன் சுத்தமாக இருக்கச் சொல்வது உங்களுக்குப் பிடிக்கவில்லை... நீ சுத்தமில்லாமல் தொட்டதை அவன் தொட மறுக்கிறான்....ஏன் இது அவன் மட்டுமா செய்கிறான்? கிருத்துவ பிஷப்பும் செய்கிறார், மசூதியில் முல்லாவும் செய்கிறார்....ஏன் பார்ப்பனன் மட்டும் சாதியா வெறியனா? மற்றவன் இல்லையா? சாதியின் பெயராலேயே அரசியல் நடத்தி வரும் அத்தனை பேரும் பார்ப்பணனை விட எந்த விதத்தில் உயர்ந்தவர்கள்?

உடையாருக்கு ஒரு கட்சி, முதலியாருக்கு சமூக நீதிக் கட்சி, வன்னியருக்கு ஒரு பாமக, வெள்ளாளருக்கு ஒரு கொமுக, நாயுடுக்களுக்கு ஒரு மதிமுக, தேவருக்கு ஒரு பார்வார்ட் ப்ளாக், தேவேந்திர குல வெள்ளாளருக்கு ஒரு கட்சி, அருந்ததியருக்கு ஒரு கட்சி, தலித்துகளுக்கு ஆயிரம் கட்சிகள்.....எங்கே ஒரு கட்சியின் பெயரை சொல்லுங்கள் பிராமணனுக்கு?

பிராமணன் அப்பாவி... அடித்தால் அடி பொறுத்துக் கொண்டு குறை சொல்லாமல் வீட்டு தாழ் இட்டு வாழ்ந்து கொள்பவன்.... .அறிவு சார் வர்க்கங்கள் பிராமணன் உனக்கு என்ன துரோகம் செய்தான் என்று தயவு செய்து பட்டியல் இட்டுக் காட்டுங்கள்.... உங்கள் சோற்றில் மண் போட்டானா? இல்லை உங்கள் வீட்டுப் பெண்ணை கைபிடித்து இழுத்தானா? இல்லை உங்களுக்குண்டான கறி மீனில் பங்கு கேட்டானா?. ஒவ்வொரு முறையும் பிராமணனுக்கு எதிராய் சொல்லப்படும் கருத்துக்களால் அவன் மென்மேலும் புடம் போடப்பட்டு வெளி நாட்டில் வேலை, சொந்தத் தொழில் என்று வளம் சிறக்க வாழ்ந்து கொண்டு, உன்னைப் பார்த்து சிரிக்கிறான்.... நீ இன்னமும் அங்கேயே நின்ற இடத்திலேயே நிற்கிறாய் .... அவன் மேலே போய்க் கொண்டே இருக்கிறான்.....

நான் . பிராம்மணன், நீங்கள் சொல்லி வந்த ஆதிக்க உணர்வுகளைத் தூண்டி என் சாதியையும் நான் இனி கட்டிக் காக்கப் போகிறேன்

Raghunathan Iyer

unread,
Jan 13, 2016, 7:54:10 AM1/13/16
to arunalaya

Mannargudi Sitaraman Srinivasan's photo.
Mannargudi Sitaraman Srinivasan's photo.
 
 

லோகமாதாவான பெரியவாளுடைய வாத்சல்யத்தை அளவிட முடியுமா?

பெரியவாளுடைய அத்யந்த பரம பக்தர் சுப்ரமண்ய ஐயர். சதா சர்வ காலமும் பெரியவாளுடைய கருணையை எண்ணி எண்ணி உருகுவார். ஒருமுறை அவருடைய பெண்ணும் மாப்பிள்ளையும் காஞ்சிபுரம் சென்று பெரியவாளை தர்சிக்க கிளம்பினார்கள். ஐயருக்கோ தன் பகவானுக்காக ஏதாவது குடுத்தனுப்ப ஆசை! தினமும் வீட்டில் பிள்ளையாருக்கு நிவேதிக்க வைத்திருந்த அவல் பொரியை ஒரு பொட்டலமாக கட்டி அவர்களிடம் கொடுத்து பெரியவாளிடம் சமர்ப்பிக்குமாறு சொன்னார்.
பக்தனின் "பாவம்" எல்லாருக்கும் புரியுமா? கிளம்பும் அவசரத்தில் அஸ்ரத்தையாக அந்த பொட்டலத்தை அவர்கள் தரையில் வைக்க,அங்கே ஓடி விளையாடிக் கொண்டிருந்த பேரன் பேத்திகள் அதை தட்டிவிட,அத்தனை அவல் பொரியும் பூமியில் சிதறின. அவர்கள் அதையும் அள்ளிப் போட்டுக் கொண்டு போய்விட்டார்கள்! ஐயருக்கு இந்த விஷயம் அவர்கள் கிளம்பிப் போனதும்தான் தெரிய வந்தது. பாவம்!துடித்துப் போய்விட்டார்!
"அபச்சாரம்! அபச்சாரம்! பகவானே!.....மன்னிச்சுடுங்கோ!.....பூமில விழுந்ததை என் பகவானுக்கு அர்ப்பணிக்க எடுத்துண்டு போயிட்டாளே!எனக்கு தெரியாத போய்டுத்தே!......" என்று அழுது புலம்பினார்.
தேனம்பாக்கத்தில் அன்று ஏகக்கூட்டம்! புதுமாதிரியாக அன்று பெரியவா எல்லாருக்கும் தர்சனம் குடுத்தது ......
விநாயகர் சன்னதிக்கு முன்பாக!
பாரிஷதர்களுக்கு ஒரே குழப்பம்! எதற்காக இன்று பிள்ளையார் சந்நிதியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்? தர்சனத்துக்கு வந்தவர்கள் தினுசு தினுசாக பழங்கள், பூக்கள் என்று கூடை கூடையாக பெரியவா முன் சமர்ப்பித்தவண்ணம் இருந்தனர்.
ஐயரின் பொண்ணுக்கோ, அப்பா குடுத்த இந்த அவல் பொரி பொட்டலத்தை எப்படி பெரியவாளிடம் குடுப்பது? என்று சங்கடமாக இருந்தது. ஏதோ ஒரு கோடியில் வேறு போய் நின்று கொண்டிருந்தனர். கிட்டே போவது சாத்யமாகப் படவில்லை.அப்போது பெரியவா மிக மிக அழகாக ஒரு விளையாட்டை அரங்கேற்றினார்.
" கைத்தல நிறைகனி" என்ற திருப்புகழை பற்றி பேச ஆரம்பித்துவிட்டு,
"இன்னிக்கி பிள்ளையாருக்கு ஏகப்பட்ட பழங்கள் வந்துடுத்து!......ஆனா,..இந்த......அவல் பொரிதான் காணோம்! யாராவுது அவல் பொரி கொண்டு வந்திருக்கேளா?......."
தெய்வத்தின் குரல் தேனாக பாய்ந்தது, ஏதோ ஒரு கோடியில் தர்மசங்கடத்தில் குழம்பிக் கொண்டிருந்த ஐயரின் பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும்! அவ்வளவுதான்!கூட்டத்தை கிழித்துக் கொண்டு, சாதாரண பேப்பரில் சுற்றி இருந்த அவல் பொரியை எடுத்துக்கொண்டு போய் பெரியவா முன்னால் சமர்ப்பித்தனர்.
சுப்ரமண்ய ஐயர், தன் அன்பை மட்டுமே தோய்த்து, பேப்பரில் சுற்றிக் கொடுத்திருந்த அவல் பொரியை தன் திருக்கரங்களால் தொட்டு தன் பக்கம் இழுத்துக் கொண்டார்!-------------------------------------------
குசேலன்,அழுக்கு மேல் வஸ்த்ரத்தில் முடிந்து வைத்திருந்த அவலை க்ருஷ்ணன் கைகளால் அள்ளி அள்ளி உண்ட கருணையை பாகவதத்தில் பல முறை படித்து மகிழ்ந்திருப்போம்.....இங்கே பெரியவா நடத்திய அவல் பொரி நாடகம் மூலம் பகவானின் பக்த வாத்சல்யத்தையும் அனுபவிப்போம்!
அம்மாவுக்கு தன் வத்ஸ் ( குழந்தை) அழுக்கான கைகளால், தன் வாய்க்குள் இருந்து ஒழுகும் எச்சிலில் பிரட்டி, ஏதாவது தின்பண்டத்தை அம்மாவின் வாயில் போடும்போது, அவளுக்கு குழந்தையின் கை அழுக்கோ,எச்சிலோ எதுவுமே தெரியாது! அதன் அன்பு ஒன்று மட்டுமே தெரியும். சாதாரண லோகாயத அம்மாக்களே இப்படி அன்பில் மயங்கினார்கள் என்றால்,லோகமாதாவான பெரியவாளுடைய வாத்சல்யத்தை அளவிட முடியுமா?


Raghunathan Iyer

unread,
Jan 14, 2016, 12:34:12 AM1/14/16
to arunalaya

பண்டிகையும் விரதமும் ஒன்றாக வந்தால்...

” மாமா, ஒரு சந்தேகம். பண்டிகையும், விரதமும் (ஏகாதசி மாதிரி) ஒரே நாளில் வந்தால், பண்டிகையை கொண்டாடவேண்டுமா அல்லது விரதத்தை அனுஷ்டிக்க வேண்டுமா?..” ஒரு நண்பரின் நியாயமான சந்தேகம்

பண்டிகைக்குதான் பிரதானம். நமது பெரியோர்களின் வழிகாட்டுதல்படி, பண்டிகையும், விரதமும், ஏகாதசி மாதிரி, ஒரே நாளில் வந்தால், பண்டிகையை குழந்தைகள் குடும்பத்தினருடன் கொண்டாடுவதுதான் பழக்கத்தில் உள்ளது. அதுவும் குறிப்பாக ஸ்த்ரீகளுக்கு இது முற்றிலும் பொருந்தும். ஆண்களுக்கு ‘ஆப்ஷன்’. தப்பேயில்லை. வ்ரதம் அனுஷ்டிக்காமல் இருப்பதின் தோஷமும் வராது என்பதுதான் பெரியோர்களின் அபிப்ராயம்.

ஆனால் ஒன்று. ஏகாதசி விரதத்தை பற்றி ஒரு வார்த்தை. பண்டிகையின் காரணமாக இதை அனுஷ்டிக்காவிட்டாலும்கூட, தொடர்ந்து மறுநாள் அதாவது த்வாதசியன்று உபநிஷத் போன்றவைகளை பாராயணம் செய்யும் பழக்கத்தை வழக்கமாக பல ஆண்கள் வைத்துள்ளார்கள்; அவர்கள் அதை விடாமல் பாராயணம் செய்யவேண்டும்.

இந்த சமயத்தில் மற்றொரு விஷயத்தையும் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். ஆசெளச, தீட்டுக், காலத்தில் ஏகாதசி விரதம் இருக்கும் பழக்கம் உள்ளவர்கள் விரதத்தை அனுஷ்டிக்கலாம்

Sarma Sastrigal's photo.
 

Raghunathan Iyer

unread,
Jan 14, 2016, 12:39:20 AM1/14/16
to arunalaya

பொங்கல் திரு நாளை மகரசங்கராந்தி என்றும் சொல்வது தெரிந்திருக்கும் சூரியன் ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குள் நுழையும் வேளையே சங்கராந்தி. மாதப்பிறப்பும் இதுவே. அந்த வகையில் வருடத்திற்கு பன்னிரெண்டு சங்கராந்திகள் உண்டு.

தான்ய சங்காராந்தி[ சித்திரை]
சூரியன் மேஷராசியில் நுழையும் வேளையே தான்ய சங்காராந்தி. சூரியனை பூஜித்து தானிய தானம் செய்வதன் மூலம் ஆயிரம் அக்னி ஹோத்திரம் செய்த பலனை அடைவார்கள்.i

தாம்பூல சங்கராந்தி [வைகாசி]
சூரியன் ரிஷப ராசியில் நுழையும் வேளையே தாம்பூல சங்கராந்தி. இந்த நாளில் சூரிய பூஜை செய்து வெற்றிலை பாக்கு திரவியங்கள் வைத்து தம்பதிகளை பூஜித்து அதை அளித்தல் மகா புண்ணியம்.

மனோதர சங்கராந்தி [ ஆனி ]
சூரியன் மிதுன ராசியில் நுழையும் வேளை மனோதர சங்கராந்தி இந்த நாளில் சூரிய பூஜை செய்து வெல்லம் வைத்து பூஜித்து தானம் அளித்தால் ஆசைகள் நிறைவேறும்.

அசோக சங்கராந்தி [ஆடி]
சூரியன் கடகராசியில் நுழையும் வேளையை அசோக சங்காரந்தி என குறிப்பிடுவதுண்டு. இது விஸ்வத் புண்ய காலமாகும்.

ரூப சங்கராந்தி [ஆவணி]
சூரியன் சிம்ம ராசியில் நுழையும் வேளை ரூப சங்கராந்தி. இந்த வேளையில் சூரிய பூஜை செய்து பொன் பாத்திரத்தில் நெய் வார்த்து வேதியர்களுக்கு தானம் அளித்தால் நோய்கள் அண்டாது.

தேஜ சங்கராந்தி [புரட்டாசி]
சூரியன் கன்னி ராசியில் நுழையும் வேளையை தேஜ சங்கராந்தி என்பர். செந்நெல் அரிசி கொண்டு அதன்மேல் கலசம் வைத்து மோதகம் முதலானவை நிவேதித்து வேதியர்களுக்கு விருந்தளிக்கவேண்டும்.

ஆயுள் சங்கராந்தி [ஐப்பசி]
சூரியன் துலா ராசியில் நுழையும் வேளையே ஆயுள் சங்கராந்தி என அழைப்பர். பசும்பால் வெண்ணெய் இவற்றை கும்பத்தில் நிரப்பி பூஜித்து தானம் கொடுப்பதால் நீண்ட ஆயுள் தங்கும்.

சௌபாக்கிய சங்கராந்தி [கார்த்திகை]
சூரியன் விருச்சிக ராசியில் நுழையும் வேளையை சௌபாக்கிய சங்கராந்தி நாளாக அழைப்பர். சூரிய பூஜை செய்து வஸ்திரம் சார்த்தி வேதியர்களுக்கு தானம் செய்ய வேண்டும். இதில் உப்பு தானம் [லவணபர்வத தானம்] செய்தால் சகல சௌபாக்கியங்களும் பெறலாம்.

தனுஷ் சங்கராந்தி [மார்கழி]
சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கும் வேளை தனுஷ் சங்கராந்தி. இந்த வேளையில் தீர்த்தத்தை ஒரு கலசத்தில் நிரப்பி பூஜித்து அன்னம் தானம் இவற்றை செய்தால் நினைத்த காரியங்கள் கைகூடும்.

மகர சங்கராந்தி [தை]
சூரியன் மகர ராசியில் நுழையும் நாள். இது தேவர்களுக்கு விடியல் காலம். தட்சிணாயன ஆறுமாத காலத்தில் கொடிய உருவம் கொண்டு மனிதர்களையும் புலிகள் உருவம் கொண்டு பசுக்களையும் வருத்திய காரணத்தால் தேவர்களின் வேண்டுகோளை ஏற்று ஈஸ்வரன் தை முதல் தேதியில் இத்தகைய துன்பங்களை நீக்கினார். பன்னிரெண்டு சங்கராந்திகளில் மகர சங்கராந்தி மிகவும் புண்ணியம் வாய்ந்தது. சூரிய பூஜை மிகவும் விசேஷமானது.

லவண சங்கராந்தி [மாசி]
சூரியன் கும்ப ராசியில் நுழையும் வேளையை லவண சங்கராந்தி என அழைப்பர். இந்த நல்ல நாளில் சூரிய பூஜை செய்வதன் மூலம் மோட்சம் அடையலாம்.

போக சங்கராந்தி [பங்குனி]
சூரியன் மீன ராசியில் நுழையும் வேளையைப் போக சங்கராந்தி என அழைப்பார்கள். பங்குனி மாத ஆரம்பம். முடிவு நாட்களில் சூரிய பூஜை செய்து தனதான்யம், பசு முதலானவற்றை தானம் செய்வதன் மூலம் சகல நன்மைகளும் உண்டாகும்

Raghunathan Iyer

unread,
Jan 14, 2016, 4:15:56 AM1/14/16
to arunalaya

முன்னொரு காலத்தில் காலவ முனிவர் என்பவருக்கு தொழு நோய் ஏற்பட்டது. இறைவனை வணங்கியும் நோய் நீங்கவில்லை. “செய்த பாவம் அனுபவிக்க வேண்டும், அது உன் விதி. என்று கூறிவிட்டார் பிரம்மதேவன். தன் நோய் குணமடைய வரம் வேண்டி, நவகிரகங்களை நினைத்து வழிபட்டார் காலவ முனிவர். நவகிரகங்கள் காலவ முனிவருக்கு உதவ முன் வந்தனர். இதில் முனிவரின் பக்தியை பாராட்டி, முனிவரின் முன்ஜென்ம விதியின்படி அனுபவிக்க வேண்டிய பாவங்களை போக்கி, முனிவரை பரிபூரணமாக குணப்படுத்தினார் நவகிரகங்களின் தலைவரான சூரிய பகவான். அதனால் பிரம்மதேவனின் சாபத்திற்கு ஆளானார் சூரியபகவான். தான் கஷ்டபட்டாலும், தன்னை வணங்கும் பக்தர்கள் கஷ்டப்படக்கூடது என்ற உயர்ந்த எண்ணத்தில் தோஷங்களையும் கர்மாக்களை நீக்கி, நல்வாழ்வு தர சூரியபகவான் எந்நேரமும் நமக்கு அருள்புரிய காத்திருக்கிறார். அப்படிபட்ட உயர்ந்த குணம் கொண்ட சூரியபகவானை வணங்கி, நன்றி தெரிவிக்கும் நாள்தான் பொங்கல் திருநாள். இந்த நன்னாளில் நல்லநேரம் பார்த்து, பொங்கல் பானையிலோ அல்லது குக்கரிலோ பொங்கல் செய்ய வேண்டும். பிறகு வடை, பாயசம், 21 வகையான காய்கறிகளை கொண்டு சமைத்து, சூரியபகவானுக்கு படைத்து வணங்கும்போது, 21 வகையான சமைக்காத பச்சை காய்கறிகளையும் வைத்து, அத்துடன் மஞ்சள் கொத்து, இஞ்சிகொத்து, கரும்பும் வைத்து, சூரியபகவானுக்கு கற்பூர ஆரத்தி காட்டி வணங்க வேண்டும். சூரியபகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை உச்சரித்து வணங்கினால் இன்னும் சிறப்பு.

Raghunathan Iyer

unread,
Jan 14, 2016, 5:12:46 AM1/14/16
to arunalaya

எந்த உபவாச விரதம் இருப்பது நல்லது?

இந்து மதப் புராணத்தில் 27 வகையான உபவாச விரதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை,

1. உமிழ்நீரைக் கூட விழுங்காமல் இருப்பது. இதை யோகிகள் மட்டுமே கடைப்பிடிப்பார்களாம்.

2. தென் அல்லது இளநீர் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

3. பசுவின் பாலை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

4. எந்த உணவுமில்லாமல் தொடர்ந்து பன்னிரண்டு நாட்கள் நீரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

5. காலை நேரம் மட்டும் உணவருந்தி உபவாசம் இருத்தல்.

6. பகல் நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

7. இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

8. மூன்று நாட்கள்தொடர்ந்து காலை நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

9. மூன்று நாட்கள்தொடர்ந்து மதிய நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

10. மூன்று நாட்கள்தொடர்ந்து இரவு நேர உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

11. கடுமையான விரதங்களுக்கு 21 நாட்கள் வெறும் பசும்பால் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

12. மூன்று நாட்கள் பகல் ஒருவேளை மூன்று கைப்பிடி உணவை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

13. இரவில் மட்டும் மூன்று கைப்பிடி அளவு உணவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

14. ஒருநாள் பகல் நேரத்தில் சுத்தமான எள்ளுப் புண்ணாக்கு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

15. ஒருநாள் இரவில் மட்டும் பசுவின் பால் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

16. ஒரு நாள் மோரை மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

17. ஒரு நாள் முழுவதும் சுத்தமான நீரை மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.

18. ஒரு நாள் முழுவதும் பொரிமாவு (புழுங்கல் அரிசியை வறுத்து நன்கு பொடித்து நெய், தேங்காய், சர்க்கரை ஆகியவற்றைப் போட்டுப் பிசைந்து வைத்திருப்பது) மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

19. ஒரு நாள் முழுவதும் திணை மாவு மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

20. தேய்பிறை அன்று ஆரம்பித்து வளர்பிறை முடிந்து திரும்பத் தேய்பிறை நாட்கள் வரை தினம் ஒருபிடி அன்னத்தை மட்டும் சாப்பிட்டு பின்னர் தினம் ஒவ்வொரு பிடி அன்னத்தை அதிகமாக்கிக் கொண்டு சுக்கிலபட்சம் முடிந்த பிறகு திரும்ப ஒவ்வொரு பிடி அன்னமாகக் குறைப்பது என உபவாசம் இருத்தல்.

21. ஒரு நாள் முழுவதும் வில்வ தழையையும் நீரையும் மட்டுமே அருந்தி உபவாசம் இருத்தல்.

22. ஒரு நாள் முழுவதும் அரச இலைத் தளிர்களையும், நீரையும் அருந்தி உபவாசம் இருத்தல்.

23. ஒரு நாள் முழுவதும் அத்தி இளந்தளிகளையும், நீரையும் மட்டும் அருந்தி உபவாசம் இருத்தல்.

24. இரு வேளை உணவுடன் உபவாசம் இருத்தல்.

25. முதல் நாள் ஒரு வேளை பகல் உணவு மட்டும், மறுநாள் இரவு மட்டும் உணவுடன் உபவாசம் இருத்தல்.

26. மாமிச உணவுகள், மசாலாக்கள் இல்லாத சைவ உணவுகளை மட்டுமே குறைந்த அளவு சாப்பிட்டு உபவாசம் இருத்தல்.

27. வாழைக்காய், பூண்டு, வெங்காயம், பெருங்காய்ம் ஆகியவை சேர்ந்த உணவுகளை மட்டும் சேர்த்துக் கொள்ளாமல் உபவாசம் இருத்தல்.

- இந்த உபவாச விரதங்களில் எதைக் கடைப்பிடித்தால் நல்லது என்கிறீர்களா? உங்கள் உடல் நிலைக்கும், சூழ்நிலைக்கும் தகுந்த எந்த உபவாசத்தையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். ஆனால் எதுவுமே சாப்பிடாமல் நீர் மட்டும் அருந்தி உபவாசம் இருப்பதே சிறந்த விரத முறையாகும்
சரபவராஹீ

Raghunathan Iyer

unread,
Jan 14, 2016, 5:20:39 AM1/14/16
to arunalaya

பெரியவா சரணம் !!!

"விளக்கு வைக்கறதுக்குள்ள கொண்டு சேர்க்கணும்" - மஹாபெரியவா

சுப்ரமணியம் சிறந்த கல்வெட்டு ஆராய்ச்சியாளர். தனி நபராகவே இந்தக் கலையைக் கற்றுக் கொண்டு எத்தனையோ கல்வெட்டுக்களை ஆராய்ந்து தகவல்களைச் சொன்னவர்.

சுப்ரமணியத்தின் கல்வெட்டுப் புலமை பற்றி அறிந்த மஹாபெரியவா இவரை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். தான் தரிசித்த ஆலயங்களைப் பற்றிய பூர்வீகத் தகவல்களை, இவரிடமிருந்து கேட்டுப் பெறுவது மஹாபெரியவாளின் வழக்கம்.

1950-களின் துவக்கத்தில் தன் குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வந்தார் சுப்ரமணியம். இவரைச் சந்தித்து கல்வெட்டு குறித்தான சில விஷயங்களை விவாதிக்கவேண்டும் என்று மஹாபெரியவா தீர்மானித்தால் மடத்துச் சிப்பந்திகள் மூலம் கடிதம் எழுதச் சொல்லி வரவழைப்பார். அவசரம் என்றால் யாரையாவது நேரில் அனுப்பித் தகவல் சொல்லுவார்.

பெரும்பாலும் இரவு பதினொரு மணிக்கு மேல்தான் மஹாபெரியவாளும் சுப்ரமணியமும் இது போன்ற விஷயங்களை விவாதிப்பார்கள். சம்பந்தப்பட்ட ஆலயம் குறித்துத் தனக்கு இருக்கும் சந்தேகங்களை இவரிடம் கேட்பார் மஹாபெரியவா. அதற்கான விளக்கங்களை கல்வெட்டுக்களை ஆராய்ந்து ஆதாரபூர்வமாகச் சொல்வார் சுப்ரமணியம். சில நேரங்களில் இந்த விவாதம் விடிய விடிய நீடிக்கும். மறுநாள் காலை விடிந்த பின் ஒரு சிப்பந்தி வந்து ‘பெரியவா…ஸ்நானத்துக்கு நேரமாச்சு’ என்று சொன்ன பிறகு தான் பொழுது விடிந்துவிட்டது என்பதே இருவருக்கும் தெரியவருமாம்.
இப்படி மஹா பெரியவாளின் அனுக்கிரஹத்துக்கும் ஆசிர்வாதத்துக்கும் உள்ளான சுப்ரமணியத்துக்கு 1964-ல் சஷ்டியப்த பூர்த்தி வந்தது. இதற்கான விழா சென்னையில் நடந்தது. மஹாபெரியவாளின் ஆசிர்வாதம் வேண்டி இந்தப் பத்திரிக்கை காஞ்சி ஸ்ரீமடத்துக்கும் அனுப்பப்பட்டது.
மஹாபெரியவாளின் ஆசி, சுப்ரமணியத்துக்கு எப்படிக் கிடைத்தது? அந்த சுவாரஸ்யத்தைத் தெரிந்து கொள்வோமா?

சுப்ரமணியத்தின் சஷ்டியப்த பூர்த்தி விழா சென்னை சூளைமேட்டில் அவரது இல்லத்திலேயே நடந்தது. வைதீகம் சம்பந்தப்பட்ட காரியம் என்பதால் பெரியவாளின் ஆசியையும் ஸ்ரீமடத்தின் பிரசாதத்தையும் அந்த சுப தினத்தில் பெற விரும்பினார் சுப்ரமணியம்.

சாஸ்திரம் கற்ற பண்டிதர்களின் மந்திர முழக்கத்துடனும் வேத பாராயண கோஷத்துடனும் சுற்றமும் உறவும் சூழ அமோகமாக நடந்து கொண்டிருந்தது வைபவம். ஆனால் சுப்ரமணியத்தின் முகத்தில் மட்டும் இயல்பான சுரத்து இல்லை. வருவோர் போவோரிடம் சம்பிரதாயத்துக்குச் சிரிக்கிறாரே தவிர, மனதில் ஒரு குதூகலம் இல்லை. எதையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போன்ற ஒரு தோற்றம். செயல்பாட்டில் லேசான தடுமாற்றம். முகத்தில் மெலிதான கவலை.

ஏன் இந்தத் தடுமாற்றம்? கவலை?

காஞ்சி ஆச்சார்யர் மஹாஸ்வாமிகளின் அனுக் ரஹத்தைப் பரிபூரணமாகப் பெற்றிருக்கிறோம். எத்தனையோ வேளைகளில் தனிப்பட்ட முறையில் அழைத்து, அவர் கேட்ட பல சந்தேகங்களைத் தெளிவு செய்திருக்கிறேன். அபரிமிதமான பாராட்டுகளையும் அவரிடமிருந்து பெற்றிருக்கிறேன். எனது ஒவ்வொரு வருகையும் அவருக்குத் திருப்தியையும் எனக்கு சந்தோஷத்தையும் கொடுத்திருக்கிறது. ஆனால் என் சஷ்டியப்தபூர்த்தி வைபவத்துக்கு அந்த மகானிடமிருந்து எந்த ஒரு அனுக்ரஹப் பிரசாதமும் வரவில்லையே… மடத்தின் சார்பாக வேறு எவரும் பிரசாதம் கொண்டு வரவில்லையே என்று குழம்பித் தவித்தார் தி.நா.சுப்ரமணியம்.

இருக்காதா பின்னே…?

ஒவ்வொரு முறை ஸ்ரீமடத்தில் தரிசனம் முடிந்து கிளம்பும் போதெல்லாம் வாயார வாழ்த்தி விடை கொடுத்து அனுப்பும் அந்தக் கருணைக்கடல் இந்த சஷ்டியப்தபூர்த்தி தினத்தன்று ஒரு விபூதிப் பிரசாதம் கூட இதுவரை அனுப்பவில்லையே.
சுப்ரமணியம் அதே கவலையில் இருந்தார். தன் மனதில் இருக்கும் கவலையை வேறு எவரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை. பகிர்ந்து கொள்ளவும் இல்லை.

வைதீக காரியங்கள் முடிந்து, வேத பண்டிதர்கள் ஒவ்வொருவருக்கும் சம்பாவனை கொடுத்து அவர்களை நமஸ்கரித்து மகிழ்ச்சியுடன் அனுப்பி வைத்தார் சுப்ரமணியம்.
வாருங்கள். அப்படியே காஞ்சிபுரம் போவோம். இதே தினத்தில் இதே நேரத்தில் அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.

சுப்ரமணியத்துக்கு சஷ்டியப்த பூர்த்தி வைபவம் இன்று தான் என்கிற தகவல் மஹாபெரியவா நினைவில் இருக்கிறதா?
மஹாபெரியவாளின் சந்நிதியில் அன்று ஏராளமான பக்தர்கள் கூட்டம். அந்தக் கருணை தெய்வத்தை தரிசித்து ஆசி வாங்கிச் செல்வதற்காக சென்னை மற்றும் பல வெளியூர்களிலிருந்து பக்தர்கள் குவிந்திருந்தனர். எல்லோருக்கும் முறையாகப் பிரசாதம் கொடுத்து அவர்களின் பூர்வீகம் பற்றி அனுசரணையுடன் விசாரித்து அனுப்பிக் கொண்டிருந்தார் மஹாபெரியவா.
சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் பணிபுரியும் ஒரு அன்பரும் பெரியவா தரிசனத்துக்காக அன்று வந்திருந்தார். காலையிலேயே ஸ்ரீமடத்துக்கு வந்திருந்தவர், சில மணி நேரங்களுக்குப் பெரியவா சந்நிதியிலேயே ஏகாந்தமாக அமர்ந்து அவரது திவ்யமான தரிசனத்தில் திளைத்திருந்தார்.

மதிய வேளையில் தான் புறப்படலாம் என்பதாகத் தீர்மானித்து பெரியவாளின் அருகே பவ்யமாக வந்து நின்றார். ‘ஊருக்குக் கெளம்பறதுக்குப் பெரியவா உத்தரவு கொடுக்கணும்’ என்றார் வாய் பொத்தி.

‘பேஷா….நீ மெட்ராஸ்தானே போறே?’ – மஹா பெரியவா

‘ஆமா பெரியவா’

‘எனக்கு ஒரு ஒத்தாசை பண்றியா?’ பெரியவா குரலில் 
குழந்தைத்தனமான ஒரு கெஞ்சல்.

சமஸ்கிருதக் கல்லூரி அன்பர் பதறிப் போனார். ‘பெரியவா.. என்ன வார்த்தை சொன்னேள்..உத்தரவு கொடுங்கோ…என்ன செய்யணுமோ, அதை ஆனந்தமா செய்யறேன்’

‘கல்வெட்டு ஆராய்ச்சி பண்ற சுப்ரமணியத்தை ஒனக்குத் தெரியுமோ?’

‘பர்சனலா தெரியாது பெரியவா. கேள்விப்பட்டிருக்கேன்.’

‘சுப்ரமணியத்துக்கு இன்னிக்கு அறுபதாம் கல்யாணம். ஆசிர்வாதம் வேணும்னு கேட்டுப் பத்திரிக்கை அனுப்பி இருந்தான். நான் தான் மறந்துட்டேன். இன்னிக்குப் பிரசாதம் கிடைக்கலேன்னா, ரொம்பவும் வருத்தப்படுவான். அதனால இப்போ நான் உன்கிட்ட பிரசாதம் கொடுக்கிறேன். நீ கொண்டு போய் கொடுத்துடறியா..?’

அந்த அன்பர் மெய்சிலிர்த்துப் போனார். பரமாச்சார்யாளின் பாக்கியத்துக்குப் பாத்திரமாக இப்படி ஒரு பக்தரா? ‘நிச்சயம் பெரியவா. ஒங்க உத்தரவுப்படியே பண்ணிடறேன்.’

இதுல முக்கியமானது என்னன்னா, சாயங்காலம் வெளக்கு வைக்கிறதுக்குள்ளே இதைக் கொண்டு போய் அங்கே சேர்த்துடனும். சாத்தியமா?’

அது மதிய வேளை. மணி சுமார் இரண்டு இருக்கும்.

‘கட்டாயம் பெரியவா. உங்களோட ஆசி இருக்கறப்ப எனக்கு என்ன குறை…சேர்த்துடறேன்.’

பெரியவா முகத்தில் ஒரு சந்தோஷம். அருகில் இருந்த சிப்பந்தியை அழைத்தார். வந்தார். பெரியவா சொல்லப் போகும் உத்தரவுக்காகக் காத்திருந்தார்.

‘மேனேஜர் கிட்ட போ. 61 ரூபாய் பணம் வாங்கிண்டு வா. கூடவே ஒரு தங்கக்காசும் மடத்தோட பிரசாதமும் வாங்கிண்டு வா’.
ஓட்டமாக ஓடினார் சிப்பந்தி. ஐந்தே நிமிடத்துக்குள் பெரியவா கேட்ட அனைத்தையும் கொண்டு வந்து அவர் முன் பவ்யமாக வைத்தார். அனைத்தையும் தொட்டு ஆசிர்வதித்தார் பெரியவா. பிறகு சமஸ்கிருதக் கல்லூரி அன்பரைப் பார்த்து ‘எல்லாத்தையும் எடுத்து வைச்சுக்கோ. மடத்தோட ஆபிஸுக்குப் கல்வெட்டு சுப்ரமணியத்தோட அட்ரஸைக் கேட்டு வாங்கிக்கோ. நீ க்ஷேமமா பொறப்படு’ என்று வலது கையை உயர்த்தி ஆசிர்வதித்தார்.
அனைத்தையும் சர்வ ஜாக்கிரதையாக எடுத்துக் கொண்டு மடத்தை விட்டு வெளியேறினார் அன்பர்.

மாலை மணி ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது.
சூளைமேட்டில் இருக்கும் சுப்ரமணியத்தின் வீட்டுக்குள் வியர்த்து விறுவிறுக்க ஓர் இளைஞர் (சமஸ்கிருதக் கல்லூரி அன்பர்) நுழைந்தார். ‘காலையில் வரமுடியாத ஒருவர், அறுபதாம் கல்யாணத்தை விசாரிக்க இப்போது வந்திருக்கிறார் போலிருக்கிறது’ என்று வந்தவர் யார் என்று தெரியாத நிலையிலும் அவரை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தார் சுப்ரமணியம்.

அன்பரே ஆரம்பித்தார். ‘நான் காஞ்சி ஸ்ரீமடத்துலேர்ந்து வர்றேன். இன்னிக்கு விளக்கு வைக்கறதுக்குள்ள உங்ககிட்ட சேர்க்கச் சொல்லி மஹா பெரியவா பிரசாதம் கொடுத்து அனுப்பி இருக்கா.”

அவ்வளவு தான்… சுப்ரமணியம் உட்பட வீட்டில் இருந்த அனைவருக்கும் ஆச்சர்யம் தாங்க முடியவில்ல்லை. அன்பரை அமரச் சொல்லி அவருக்கு முதலில் காபி கொடுத்தனர். பிரசாதத்தை வாங்கிக் கொண்ட சுப்ரமணியம் தம்பதியர், அதைக் கண்களில் ஒற்றிக்கொண்டு பூஜையறைக்குப் போனார்கள். அங்கே பிரசாதத்தை வைத்து விட்டு, மஹாபெரியவா திருவுருவத்துக்கு ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தனர்.

காலையில் இருந்து பார்க்க முடியாத ஒரு சந்தோஷக்களை சுப்ரமணியத்தின் முகத்தில் திடீரெனப் பிரகாசிக்கத் தொடங்கியது. பெரியவாளிடம் இருந்து வந்த அந்தப் பிரசாதம் பற்றி அக்கம்பக்கத்து வீட்டினரை அழைத்துப் பெருமிதத்துடன் சொன்னார்.

பிரசாதம் கொண்டு வந்த அன்பர், நேரமாகிவிட்டதால் தான் புறப்படுவதாகச் சொன்னார். ஆனால் சுப்ரமணியத்தின் வீட்டில் உள்ள எவரும் அவரை புறப்பட அனுமதிக்கவில்லை. இரவு சாப்பிட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று அன்பான உத்தரவு பிறப்பித்து விட்டனர். இவர்களது வற்புறுத்தலை ஏற்றுக் கொண்டு அங்கேயே சிறிது நேரம் தங்கினார். சில நிமிடங்களுக்குப் பேசிக் கொண்டிருந்து பிறகு சாப்பிட்டு விட்டுப் புறப்படத் தயாரானார்.
அப்போது சுப்ரமணியம் வசித்து வந்த தெரு மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ள தெருக்கள் எல்லாம் கன்னாபின்னாவென்று தோண்டிப் போடப்பட்டிருந்தன. சாக்கடை இணைப்பு கொடுப்பதற்காக பல சாலைகளை வெட்டிப் போட்டிருந்தனர். இருள் வேறு சூழ்ந்து விட்டது.. பிரசாதம் கொண்டு வந்த அன்பர் எப்படி அவரது வீட்டுக்குப் பத்திரமாகப் போய்ச் சேருவார் என்கிற கவலை சுப்ரமணியத்துக்கு வந்தது. ‘நீங்க பத்திரமா போயிடுவீங்களா? வழி தெரியுமா? என்று அவரிடம் கேட்டார் சுப்ரமணியம்.

அதற்கு அந்த அன்பர். ‘எனக்கு வழி தெரியாது சார். இன்னிக்கு சாயங்காலம் கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன்லேர்ந்து இறங்கி வெளியே வந்தேன். உங்க வீட்டுக்கு எப்படி வரணும்னு எங்கேயும் விசாரிக்கலை. விசாரிச்சு விசாரிச்சு உங்க வீட்டுக்கு வந்திருந்தா, பெரியவா சொன்ன மாதிரி விளக்கு வைக்கறதுக்குள்ளே வந்திருக்க முடியாது. இன்னும் லேட் ஆகி இருக்கும்.

ஸ்டேஷனை விட்டு இறங்கினதிலிருந்து பெரியவாளே ஜோதி சொரூபமா இருந்து எனக்கு வழி காட்டிண்டே முன்னே போனார். அதைத் தொடர்ந்தபடியே அப்படியே விறுவிறுன்னு எதோ இயந்திரத்தனமா வந்துட்டேன். எப்படி வந்தேன்னு இப்ப நினைச்சாலும் ஆச்சரியமா இருக்கு.

அதனால எனக்கு இங்கேர்ந்து கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் போறதுக்கு வழி தெரியாது. யாராவது என்னைக் கூட்டிண்டு கோடம்பாக்கம் ஸ்டேஷன்ல விட்டா வசதியா இருக்கும்’ என்று முடித்தாரே பார்க்கணும்!

இந்த பதிலைக் கேட்டு அங்கிருந்த அனைவரும் வெலவெலத்துப் போனார்கள். நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது…குறித்த காலத்துக்குள் பிரசாதம் வந்து சேர வேண்டும் என்பதற்காகப் பெரியவாளே அவருக்கு முன்னால் நடந்து, வழிகாட்டிக் கொண்டு அழைத்து வந்திருக்கிறார் என்ற செய்தி பலரையும் பிரமிக்க வைத்தது.

சுப்ரமணியத்தின் கண்களிலிருந்து நீர் தாரை தாரையாக வழிந்தது. பூஜையறைக்கு ஓடிப்போய் அங்கிருந்த மஹாபெரியவாளின் திருவுருவப் படத்துக்கு முன்னால் நின்று கை கூப்பி வணங்கினார். ‘என்னை மறக்காம பிரசாதம் அனுப்பிட்டேளே பெரியவா…. உங்களுக்கு எப்படி என்னோட நன்றியைத் தெரிவிக்கப் போறேனோ…’ என்று தேம்பித் தேம்பி அழுதார்.

சாதாரண ஒரு பக்தரின் அறுபதாம் கல்யாணத்தை நினைவில் வைத்துக் கொண்டு தான் மறந்து போய் விட்டதாகத் தன்னையே குறை கூறிக்கொண்டு பிரசாதம் அனுப்பிய கருணை என்ன!
விளக்கு வைப்பதற்குள் இந்தப் பிரசாதம் அவரது வீட்டுக்குப் போய் சேர வேண்டும் என்கிற தனது வாக்குக்கு இணங்க தானே ஜோதி சொரூபமாய் உடன் வந்து அந்த அன்பருக்கு வழி காட்டிக் கொண்டே முன்னே நடந்த ஜரூர் என்ன!

தன்னை நம்பிய பக்தன் ஒருவன், பிரசாதம் வராமல் – அதற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறான் என்று அறிந்து உடனே பிரசாதம் அனுப்புவதற்கு உரிய நபரைத் தேர்ந்தெடுத்த பாங்கு என்ன!
அது தான் பெரியவா! நடமாடும் தெய்வம். கருணைக்கடல்.
இது நடந்து முடிந்து சரியாக ஐந்து வருடங்களுக்குப் பிறகு திருமலை திருப்பதியில் ஸ்ரீவேங்கடாசலபதி தரிசனத்துக்காகச் சென்றிருந்தார் சுப்ரமணியத்தின் மகன் கல்யாணசுந்தரம். அங்கே தான் தங்கியிருந்த ஒரு மடத்தில் உயர் அதிகாரியாக இருந்த நபரைப் பார்த்து அதிசயித்தார்.

ஆம்! ஐந்து வருடங்களுக்கு முன் இவரது வீட்டுக்கு காஞ்சி மடத்தில் இருந்து பிரசாதம் எடுத்து வந்த சமஸ்கிருதக் கல்லூரி அன்பரே தான் அவர். மெள்ள அவரை நெருங்கித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் கல்யாணசுந்தரம். க்ஷண நேரத்தில் இவரை அடையாளம் கண்டு கொண்ட அந்த அன்பர் ஜோதி சொரூபமாக பெரியவா தனக்கு முன்னால் வந்து வழிகாட்டி, பிரசாதம் கொண்டு வந்த நிகழ்வைச் சொல்லி நெகிழ்ந்து போனார். கல்யாணசுந்தரம் அவரைக் கையெடுத்துக் கும்பிட்டு வணங்கித் திரும்பினார்.

பெரியவா என்றாலே ஆச்சரியம்….அற்புதம்…..அதிசயம் தானே!

ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர.

KOTHANDARAMAN KRISHNAMACHARI

unread,
Jan 14, 2016, 6:41:48 AM1/14/16
to arun...@googlegroups.com
Inline image 1



FROM KOTHANDARAMAN AND FAMILY

Raghunathan Iyer

unread,
Jan 15, 2016, 3:00:31 AM1/15/16
to arunalaya

பொங்கலோ பொங்கல்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அந்த அளவுக்கு நல்வாழ்வை தரும் பொங்கல் திருநாள் அன்று, சூரியபகவானின் அருளாசியை பரிபூரணமாக பெற்று, வருடம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். ஜீவராசிகளை இயங்க வைக்கும் ஆற்றல் சூரிய பகவானுக்கே உண்டு. சூரியபகவானின் அருள்பார்வையை முழுவதுமாக பெற பொங்கல் பண்டிகை அன்று, சூரியனை வணங்கினால் வருடம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ வழி வகுக்கும். மழை, பனி, வெப்பம் இவை அனைத்தும் சூரியபகவானின் சஞ்சாரத்தால்தான் உண்டாகுகிறது என்கிறது சாஸ்திரம். அதுபோல சிவன், விஷ்ணு, சக்திதேவி, இவர்களுக்கு வலது கண்ணாக சூரியபகவான் இருக்கிறார் என்கிறது புராணம். “ஒம்” என்ற சக்தி வாய்ந்த பிரணவ மந்திரத்திலிருந்து உருவானவர் சூரியபகவான் என்கிறது மார்க்கண்டேய புராணம். சூரியபகவானை வணங்கினால் பித்ருதோஷம் நீங்கும். தேவர்களின் ஆசி கிடைக்கும். விரோதம் மறையும். சூரிய பகவான் பொங்கல் திருநாள் அன்று, சூரியபகவானுக்கு பூஜை செய்து வழிபட்டால் பல நன்மைகள் ஏற்படும்

மாட்டு பொங்கல் பொங்கல் திருநாள் அன்று செய்து வைத்திருந்த வெள்ளை சாதத்தையும், சர்க்கரை பொங்களையும் சமைத்தவுடன், அதை பத்திரமாக ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து, மறுநாள் மாட்டு பொங்கள் அன்று பூஜை செய்ய வேண்டும். மாட்டு பொங்கல் அன்று கனு பூஜையின் சிறப்புகளை பற்றி இப்போது பார்ப்போம். வருடம் முழுவதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், போட்டதை தின்று விட்டு உழைக்கும் அப்பாவி குணம் படைத்த ஜீவராசிதான் மாடு. அதனால்தான் “பாழாய் போனது பசு வாயில்” என்பார்கள். மாட்டுபொங்கல் அன்று, மாட்டை நன்றாக குளிப்பாட்டி, அதன் கொம்புகளுக்கு வர்ணம் பூசி, அதன் காலில் சலங்கை மாட்டி அழகுபடுத்துவார்கள். அத்துடன் மாடுகளுக்கு பூஜை செய்து, அதன் கழுத்தில் மாலைபோட்டு, வஸ்திரம் அணிவித்து பூஜை செய்து பிறகு, பசுமாடு அணிந்திருந்த மலர் மாலையை வீட்டின் தலைவாசலில் கட்டினால், அந்த வீட்டில் இருக்கும் தோஷங்கள் நீங்கும். சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்கும். மாட்டுபொங்கல் அன்று கன்னி பெண்கள், சுமங்கலி பெண்களிடம் இருந்து, பொங்கல் பானையில் கட்டியிருந்த மஞ்சலை வாங்கி, அந்த மஞ்சளை அரைத்து தினமும் பூசி வந்தால், அந்த மஞ்சள் கரைவதற்குள் அந்த கன்னி பெண்ணுக்கு திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்.
அன்று கன்னி பெண்கள், சுமங்கலி பெண்களிடம் இருந்து, பொங்கல் பானையில் கட்டியிருந்த மஞ்சலை வாங்கி, அந்த மஞ்சளை அரைத்து தினமும் பூசி வந்தால், அந்த மஞ்சள் கரைவதற்குள் அந்த கன்னி பெண்ணுக்கு திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். அத்துடன், அந்த காலத்தில் பெரியவர்களின் அறிவுரைபடி பெண்கள் கீழ்கண்ட பாடலை பாடியபடி மஞ்சல் அரைத்து பூசுவார்களாம். அந்த பாடல்…
.
“மக்களைப் பெற்று, மனையைக் கட்டி மக்கள் வயிற்றிலே பேரன்பிறந்து, பேரன் வயிற்றிலே பிள்ளையைப் பார்த்து, கொட்டில் நிறையப் பசுமாடும், பெட்டி நிறைப் பூஷணமுமாக, தழையத்தழைய தாலிகட்டி புருஷனோடு பூவும், பொட்டுமாக நூறாண்டு நோய் நொடி இல்லாமல் வாழணும்

.. . என்று வாழ்த்துவார்கள்
பெண்கள் தங்களின் “சகோதரர்கள் தங்களுடன் ஒற்றுமையாகவும், தன் மேல் பாசமாகவும் இருக்க வேண்டும், அத்துடன் அவர்களும் சுபிக்ஷமாக குடும்பத்தோடு இருக்க வேண்டும்” என்று இறைவனிடம் மாட்டு பொங்கல் தினத்தில் இப்படி கனுபிடி வைத்து கனு பூஜை செய்வார்கள்.

வருடம் முழுவதும் உறவினர்களையும் – நண்பர்களையும் சந்திக்காமல் இருந்தால், அவர்களின் நினைவுகள் காலத்தால் மறக்கப்படும். அப்படி அவர்களை மறக்காமல் இருக்கவே இதுபோல பண்டிகை நாட்கள் வருகிறது. இப்படிபட்ட பண்டிகை திருநாட்களில் அவர்களுடன் கொண்டாடி, நம்முடைய மகிழ்ச்சிகளையும் பேசி மகிழ்ந்தால், அந்த மகிழ்ச்சியான நாள் வருடம் முழுவதும் பசுமையாக நிலைத்திருக்கும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்லுக்கேற்ப, பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியுடன் வரவேற்று கொண்டாடி, பூஜை செய்து எல்லா யோகங்களையும் பெற்று, சிறப்பு பெறுவோம். பொங்க

Raghunathan Iyer

unread,
Jan 16, 2016, 12:21:59 AM1/16/16
to arunalaya

 
Baskar Jayaraman's photo.
Baskar Jayaraman's photo.
Baskar Jayaraman's photo.
 
Follow

நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள்

கடந்த 17 ஆம் நூற்றாண்டில் அவதரித்த நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் சிறுவயது முதலே அறிவுக் கொழுந்தாக விளங்கியவர். 
சிறு வயதில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராளின் இயற்பெயர் சிவராமன் லௌகீக வாழ்வை வெறுத்து கும்பகோணம் மடத்தில் தம்முடைய குரு பரம சிவேந்திர சரஸ்வதியை சந்திக்கிறார் ...குருவின் திருவடியில் சரண் அடைந்த சிவராமனுக்கு ஞான குரு மந்திர உபதேசம் செய்தார் ...சிவராமனின் மன உறுதியையும் ,பக்குவ நிலை அடைந்து விட்டதை குரு அறிந்து “”சதாசிவன்”” என்ற புதிய திருநாமம் வழங்கினார் .மேலும் திருமூலரின் பிரம்ம சூத்திரம் விளக்கும் தத்துவமசி என்ற நிலையை யோக நிஷ்டையில் அனுபவித்தார்
மகான் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் திருமூலர் கடைபிடித்த கடினமான சித்த யோக மார்க்கத்தின் வழிமுறைகள் மற்றும் யோக நிஷ்டையின் உயர்ந்த நிலைகளை எல்லாம் சுய அனுபவ ரீதியாக துல்லியமாக ஆராய்ந்து அறிந்தவர் ஆவார்..

வேதாந்த ,சித்தாந்தங்களுக்கெல்லாம் மணிமகுடமாக திகழும் மூன்று மகா வாக்கியங்கள் 1.தத்துவ மசி ..2.அகம் பிரம்மாஸ்மி 3.சர்வம் பிரம்ம மயம் -இந்த யோக நிஷ்டையின் உயர்ந்த மூன்று நிலைகளில் சதாசிவ பிரம்மேந்திராள் தேர்ந்தெடுத்த வழிமுறை என்பது சர்வம் பிரம்ம மயம் என்ற வழிமுறை ஆகும் ...
கொடுமுடியில் ஆற்றில் மண் எடுக்க குழி வெட்டும்போது மண்வெட்டி ஒரு கடினமான பொருள் மீது பட்டு திடீரென இரத்தம் பீறிட்டு வர தோண்டி பார்க்கும் போது உள்ளே யோக நிஷ்டையில் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள் இருந்திருக்கிறார் ...

அதே போல ...வைக்கோல் போர்வைக்குள் பல காலம் யோக நிஷ்டையில் இருந்து இருக்கிறார் ..

ஒருமுறை குறுநில நவாப் ஒருவன் தன்னுடைய நகரத்தில் சதாசிவ பிரம்மேந்திராள் உடம்பில் எந்த ஆடையும் இன்றி நிர்வாண கோலத்தில் யாரையும் இலட்சியம் செய்யாமல் உலவி வரும் காட்சியை கண்டான்.. இதன் காரணத்தை அறிய வேண்டி பக்கத்தில் நிற்கும் படி உத்தரவும் இட்டான் ..சர்வ காலமும் பிரம்ம நிஷ்டையில் இருந்த சதாசிவ பிரம்மேந்திராளின் செவிகளில் அவன் கட்டளை விழவில்லை ..இதனால் கோபமுற்ற நவாப் அவமானம் அடைந்ததாக கருதி தன் வாளை உருவி ஒரு கையை வெட்டி வீ ழ்த்த ..கை துண்டாக தரையில் விழுந்தது ...ஆனால் இதை எல்லாம் சிறிதும் அலட்சியம் செய்யாமல் பிரம்மேந்திராள் வழக்கம் போல் நடந்து சென்று கொண்டிருந்தார்..பின்பு இவர் பெரிய மகான் என்பதை உணர்ந்த நவாப் வெட்டுண்ட கையை எடுத்து கொண்டு அவர் பின் ஓடிச்சென்று மன்னிப்பு கோர கையை வாங்கி தனது தொள்பட்டையில் வைக்க கை ஒட்டி கொண்டதாம் ... 
இவர் மூன்று இடங்களில் ஜீவசமாதி கொண்டுள்ளார் 1.ஸ்தூல சரீரத்தை கரூர்க்கு 12 கிலோ மிட்டர் தொலைவில் நெரூர் எனும் இடத்திலும் ..2.சூட்சும சரீரத்தை மானாமதுரையிலும், 3.காரண சரீரத்தை தற்போது பாகிஸ்தான் பகுதியான கராச்சியில் என மூன்று இடங்களில் சமாதி கொண்டுள்ளார் ..
இங்கே படத்தில் காண்பது கரூர் அருகே உள்ள நெரூர் ஜீவசமாதி மிகவும் அருமையாக இருந்தது .கரூரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .நெரூர் ""சதா சிவம் கோவில்""என்றே பேருந்து வசதி உள்ளது .ஒருமுறை சென்று வாருங்கள் ..மிகவும் அருமையாக உள்ளது ...
> நெரூர் ஸ்ரீ சதாசிவ பிரம்மேந்திராள்-அவர்களை ஆராதனை செய்து முக்தி பெற்ற அடியாரின் சமாதி அருகில் இருக்கும் ஆசிரமத்தில் உள்ளது…


Raghunathan Iyer

unread,
Jan 18, 2016, 1:06:32 AM1/18/16
to arunalaya

கர்மவினை எப்படி தோன்றுகிறது? எல்லாம் முந்தைய வினைப்படி நடக்கிறது என்றால், இந்த ஜன்மத்திற்கு ஏதும் நடக்காதா?

எண்ணம். அதன் வெளிப்பாடான சொல், செயல் காரணமாக கர்ம வினை தோன்றுகிறது. வேலைக்கு சம்பளம், ஓய்வின் போது ஓய்வூதியம் போன்றதுதான் கர்மப் பலன். வினையின்போது ஒரு பலனும், இந்த பிறவியைத் தவிர்த்து மறு பிறவிக்கு மாறும்போது அடுத்த பலனும் வரும்.

எனது இந்த ஜென்மத்துப் பலன்களுக்கு பரிசாக அடுத்த ஜென்மத்தில் பறவை அல்லது விலங்குப்பிறவி அமைந்தால் அதிலும் இந்த கர்ம வினை வேலை செய்யுமா? விலங்கு நிலையிலிருந்து மனிதப்பிறவி எப்படி வாய்க்கும்?

கண்டிப்பாக, விலங்குப் பிறவியின் போதும் இந்த கர்மவினை செயலாற்றும். காக்கை தனக்குக் கிடைத்த உணவை பகிர்ந்து உண்ணும். இப்படி பறவைகளும், விலங்குகளும் நடக்கின்றன. தன் தேவைக்குப் போக மீதியை பறவையோ விலங்கோ சேர்த்து வைக்காது. தான் பாவம் செய்கிறோம் என்ற உணர்வில்லாமல், உயிர் பிழைக்க உணவு என்ற இயல்பில் அவை செயல்படும். சில விலங்குகள் பிறர் வாழ தன் உயிரைத்தியாகம் செய்யும். இவையெல்லாம் புண்ணியக்கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.

சில விலங்குகளோ, பறவைகளோ, எறும்பு, ஈ போன்றவையோ, கோயில் அல்லது மகான்களின் சங்கமம் செயல்படுகிற இடங்களுக்கு செல்வதும், அங்கே உயிர் துறப்பது போன்றவையும் நடக்கும்.

இந்தப் புண்ணிய பலன்கள் அவைகளின் கணக்கில் சேரும்.

வேர் வலிக்க நீரை உறிஞ்சி, இலையாக, காயாக, கனியாகத் தந்து, கல்லடியும், காலடியும் பட்டு, கடைசியில் வெட்டுப்படவும் நேருகிற மரம், முந்தைய பாவம் கழிந்து,மேல் நிலைக்கு வரும்.

மாங்காய் விதை போட்டால் மாஞ்செடி முளைக்கும், மஞ்சள் விதை போட்டால் மஞ்சள்தான் முளைக்கும். மாற்றி முளைக்காது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு செய்திதான். அப்படியிருக்க, மனிதன் மட்டும் எப்படி மற்ற விலங்குகளாகவும், மற்ற உயிரினங்கள் மானுட ஜென்மமாகவும் பிறக்கமுடியும்?

இது சில கிறித்தவர்கள் சொல்கிற வாதம் போன்றிருக்கிறது. அடிப்படை தெரியாமல் இப்படி பேசுவார்கள். நன்றாக விளங்கிக்கொள்.

உடல் – உயிர் – ஆன்மா இந்த மூன்றும் சேர்ந்தது வாழ்வு. உடலை இயக்கி ஆன்மாவை தக்க வைக்கிற சக்தியே உயிர். இந்த இரண்டையும் மூடிப்பாதுகாக்கிற பாண்டம் தான் உடம்பு.

மனித உடம்பில் போடப்படுகிற உடல் உயிர் மனிதனாக மாறுகிறது, மாங்காய்க்குள் போட்டால் மாஞ்செடியாக மாறுகிறது. போடப்படுகிற பொருள்தான் விக்ஷயமே தவிர, எதில் போடப்படுகிறது என்பது விக்ஷயமல்ல.

உடம்பு இந்த உலகத்திலேயே குப்பையாகப் போடப்படும். மண்ணில் மறுசுழற்சியாக மாறும் என நினைக்காதீர்கள். மண்ணாகப் போகும். உயிர் இரத்தத்தில் இருக்கிறது என்பார்கள். அந்த உயிரும் சக்தியிழந்து விரையமாகப் போகும். எஞ்சிய ஆன்மா இறைவனிடம் போகும். அது, தனது செயலுக்கும், இறைவனின் கருத்துக்கும் ஏற்ப, வேறு வித பாண்டங்களில் ஏதேனும் ஒன்றில் லயமாகும்.


Raghunathan Iyer

unread,
Jan 18, 2016, 1:09:51 AM1/18/16
to arunalaya


ராம் ராம், இனிய காலை வணக்கம், இந்த நாள் இனிமையாக அமைய நம் ஸ்ரீகாஞ்சி பெரியவா அவர்கள் திருப்பாதம் பணிந்து, எல்லோரும் சௌக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன்.'

தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பாகம்) 5

“பெரியவா”ளின் பிள்ளையார் ச்லோகம்

அப்யந்யாமரம் ஆரிராதயிஷதாம் யத் பாத பங்கேருஹ-

த்வந்த்வாராதநம் அந்தராயஹதயே கார்யம் த்வவச்யம் விது:

தத்-ஹேதோரிதி நீ திவித்து பஜதே தேவம் யம் ஏகம் பரம்

ஸர்வார்த்த ப்ரதிபாதநைக சதுரோ த்வைமாதுரோ (அ)வ்யாத் ஸ ந:

இது தான் ‘ந்யாயேந்து சேகர’ த்தின் மங்கள ச்லோகம்.

இதற்கு என்ன அர்த்தமென்றால் : ‘வேறே ஏதோ ஒரு தெய்வத்தை, அதாவது விக்நேச்வரர் அல்லாத இன்னொரு தெய்வத்தை, பூஜை பண்ண விரும்புகிறவர்கள்கூட தங்களுடைய பூஜையில் ஏற்படக்கூடிய விக்னம் நீங்குவதற்காக விக்நேச்வரருடைய இரண்டு பாத கமலங்களை அவசியம் பூஜிக்கத்தான் வேண்டுமென்று அறிந்திருக்கிறார்கள். பூஜை செய்கிறவன் ‘தத்-ஹேது ந்யாயம்’ தெரிந்தவனாயிருந்தாலோ (வேறே தெய்வத்தைப் பூஜை பண்ணவேண்டுமென்றே நினைக்காமல்) ஏகப் பரம்பொருளான விக்நேச்வரர் ஒருவரை மாத்திரம் பூஜிப்பதோடு முடித்துவிடுகிறான். இப்படி ஸகல கார்யத்தையும் தாமே பூர்த்தி செய்து தர வல்லவராக உள்ள அந்த விக்நேச்வரர் நம்மை ரக்ஷிக்கட்டும்’ என்பதாகும்.

‘தத்-ஹேது ‘ நியாயம்

ந்யாயங்களில் ஒன்றான தத் – ஹேது ந்யாயத்துக்கு இங்கே எடுத்துக்காட்டுக் கொடுத்துவிடுகிறார். ‘தத் – ஹேதோ:இதி நீதி’ என்று (ச்லோகத்தில்) வருவதற்கு ‘தத்ஹேது என்னும் நியாயம்’ என்று அர்த்தம். நீதி, நியாயம் இரண்டும் ஒன்றுதான். பேச்சுவழக்கில்கூட நீதிபதி – ந்யாயாதிபதி, நீதிமன்றம் – ந்யாய ஸ்தலம் என்று இரண்டு விதமாகவும் சொல்கிறோமல்லவா?

இந்த தத் – ஹேது ந்யாயத்தைக் கொஞ்சம் புரிய வைக்கப் பார்க்கிறேன்.

‘ஹேது’ என்றால் காரணம். ‘ஏது’ என்று தமிழில் சொல்வார்கள். ‘ஒய’ரைத் தொட்டால் ஆபத்துக்கு ஏதுவாகும் என்று சொல்கிற இடத்தில் ‘ஏது’ என்பது காரணம் என்றுதானே அர்த்தம் கொடுக்கிறது? ஹேதுவுக்கு ‘ஆப்போஸிட்’ அஹேது. அது பெயரெச்சமாக வரும்போது ‘அஹைதுக’ என்று ஆகும். பகவான் காரணமே இல்லாமல் காட்டுகிற கருணையை ‘அஹைதுக க்ருபா’ என்பார்கள். இதேமாதிரி ஒரு ஞானி காரணமேயில்லாமல் காட்டுகிற பக்தியை ‘அஹைதுகீ பக்தி’ என்று பாகவதத்தில் சொல்லியிருக்கிறது. பக்தி மார்க்கத்திலேயே போகிற பக்தன் பகவானை அடையவேண்டும் என்ற காரணத்துக்காக பக்தி பண்ணுகிறான். ஞானியோ பகவானின் நிர்குண ஸ்வரூபத்தைத் தன்னிலேயே பெற்றுவிட்டவனாதலால் இனிமேல் தான் பகவானை அடையவேண்டுமென்றில்லை. ஆனாலும் காரணமேயில்லாமல் பரம ஞானிகளும் தன்னியல்பாக உருகி உருகி பக்தி பண்ணியிருக்கிறார்கள். இதைத்தான் பாகவதம் “அஹைதுகீ பக்தி” என்கிறது.

‘தத்-ஹேது ந்யாய’த்தில் ஹேது என்றால் காரணம், அதாவது உபாயம். ‘தத்’ என்றால் ‘அது’. எது? காரணத்தால், உபாயத்தால் அடையும் லக்ஷ்யம், அல்லது பலன். ஒரு பலனை (‘தத்’தை) அடையப் பல உபாயங்கள் (‘ஹேது’க்கள்) இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். ஆனாலும் இவை தாங்களே நேராகப் பலன் தர முடியாமல், நேர்ப் பலன் தருவதாக உள்ள இன்னொரு உபாயத்தின் ஸஹாயம் பெற்றே பலன் கொடுக்க முடியும் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். அப்போது, இந்த உபாயங்களில் ஒன்றை நாம் கைக் கொண்டால், முதலில் நேர் உபாயத்தை இதற்கு ஸஹாயமாக்கிக் கொள்ள வேண்டும். அதாவது, இது பலன் கொடுக்கக்கூடியதாக ஆவதற்கு உபாயமாக நேர் உபாயத்தை ப்ரயோஜனப்படுத்திக் கொள்ளணும். அப்புறம் இதைக் கொண்டு பலனைப் பெற வேண்டும். அதாவது முக்ய லக்ஷ்யம் (தத்) என்று ஒன்று, அதை அடைய நாம் கைக்கொள்ளும் உபாயம் (ஹேது) என்று ஒன்று என்பவற்றோடு நிற்காமல், இந்த உபாயத்தைப் பலனளிக்கத்தக்கதாக வேண்டும் என்ற இன்னொரு லக்ஷ்யமும் (‘தத்’தும்) – இந்த இன்னொரு லக்ஷ்யத்தை உபலக்ஷ்யம் என்று சொல்லலாம் – இந்த உபலக்ஷ்யத்தை நிறைவேற்றித் தருவதாக இன்னொரு ஹேதுவும் (இந்த இரண்டாவது ஹேதுவை உபஹேது என்று சொல்லலாம்; இப்படியொரு உபஹேதுவும்) வேறு சேர்கின்றன. ஆனால் எதற்காக இப்படிச் சுற்றி வளைக்கணும்? உபலக்ஷ்யத்தை அடைவிக்கும் உபஹேதுவேதான் முக்ய லக்ஷ்யத்திற்கும் நேர் ஹேதுவாக இருக்கிறதென்று பார்த்தோமே? ஆகையால் அந்த நேர் ஹேதுவைக்கொண்டே ‘டைரக்டா’க நம்முடைய முக்ய லக்ஷ்யத்தை அடைந்துவிட்டுப் போகவேண்டியதுதானே? வேறே ஒரு ஹேதுவைக் கொண்டுவருவானேன்? நேர் ஹேதுவைக்கொண்டு அந்த இன்னொரு ஹேது பலிக்கும் படிச் செய்வது என்ற இன்னொரு லக்ஷ்யத்தை (‘தத்’தை) வேறே இழுத்துவிட்டுக் கொள்வானேன்?

இதைத்தான் ‘தத்-ஹேது ந்யாயம்’ என்று கேள்வி ரூபத்தில் சொல்வது. ‘தத்-ஹேதோரேவ தத்-ஹேதுத்வே மத்யே கிம் தேந?‘ என்பதுதான் அந்தக் கேள்வி. இரண்டு ‘தத்’ வருகிறது. ‘தேந’ என்று முடிவதும் ‘தத்’தின் மூன்றாவது வேற்றுமைதான். (அதற்கு) ‘தத்’ தினால் என்று அர்த்தம். இந்த வாக்யத்திற்கு என்ன அர்த்தமென்றால்: “‘தத்’துக்கு ஹேதுவாயிருப்பதே ‘தத்’துக்கு ஹேதுவாயிருக்கும்போது நடுவாந்தரத்தில் ‘தத்’தினால் ஆவதென்ன?”

புரியவில்லையா? யோசித்துப் பார்த்தால் புரிந்துவிடும். முதல் ‘தத்’ என்பது உபலக்ஷ்யம். இரண்டாவது ‘தத்’ முக்யலக்ஷ்யம். மூன்றாவதாக ‘தேந’ என்பது குறிப்பிடும் ‘தத்’ தும் உபலக்ஷ்யம்தான். இப்படிப் புரிந்துகொண்டால் அந்த வாக்யத்தின் அர்த்தம் ‘உபலக்ஷ்யத்துக்கு உபாயமாயிருப்பதே முக்ய லக்ஷ்யத்துக்கு உபாயமாக இருக்கும்போது நடுவில் உபலக்ஷ்யம் என்ற ஒன்றினால் ஆவதென்ன- உபலக்ஷ்யம் என்று ஒன்றை நடுவில் கொண்டுவருவானேன்? ‘என்பது.

த்ருஷ்டாந்தம் காட்டினால் தெளிவாகப் புரியும்: அரிசி மூட்டை வாங்கணும். அதுதான் லயம்-தத். ‘கிராமத்தில் பண்ணையாரிடம் மூட்டை இருக்கும். அவரிடம் போய் வாங்கலாம்’ என்று நினைக்கிறோம். பண்ணையார் ஹேது. ஆனால் அவர் நம்மூர்ப் பலசரக்குக் கடைக்காரர் சிபாரிசு பண்ணினால்தான் மூட்டை போடுவார். இப்படிப் பலசரக்குக்காரர் மூலம்தான் நாம் பண்ணையாரைப் பிடிக்க வேண்டுமென்னும்போது, முன்னே ஹேதுவாகச் சொன்ன பண்ணையாரே பலசரக்குக்காரரை கொண்டு நாம் அடைய வேண்டிய (உப) லக்ஷ்யம் (‘தத்’) ஆகிறார். இதற்குப் பலசரக்குக்காரர் ஹேதுவாகிறார் (உபஹேது.) வேடிக்கை என்னவென்றால், பலசரக்குக்காரரிடமே அரிசியும் இருக்கிறது. வேறே யாருடைய சிபார்சும் இல்லாமல் அவரே நமக்கு அதை விற்கவும் விற்பார். அதாவது அவரே நம்முடைய முக்ய லக்ஷ்யத்திற்கு நேர் ஹேதுவாக இருக்கிறார். இப்படியிருக்கும்போது இவரிடமே அரிசி வாங்கி வியாபாரத்தை ஈஸியாக முடித்துவிட வேண்டியதுதானே? நடுவாந்தரத்தில் பண்ணையாரை இழுத்துவிட்டுக்கொண்டு, இந்தப் பலசரக்குக்காரர் மூலமே அவரை அரிசி விற்கும்படிப் பண்ணுவது என்ற கார்யத்தை (இன்னொரு லக்ஷ்யத்தை-‘தத்’ தை) வேறே உண்டாக்கிக்கொள்வானேன்?

இதோ இந்தக் குத்துவிளக்கில் இந்த (கிழக்கு) முகத்தை ஏற்றவேண்டுமானால் என்ன செய்யணும்? ஒரு வத்திக் குச்சியைக் கிழித்து இந்த (கிழக்கு முகத்) திரியை ஏற்றணும். அவ்வளவுதான் பண்ணவேண்டியது. யாராவது, ‘முதலிலே அநதப் பக்க (மேற்கு முகத்) திரியை ஏற்றுங்கள். அப்புறம் அந்தத் திரியினால் இந்தத் திரியை ஏற்றுங்கள்’ என்றால்….. (சிரிக்கிறார்கள்.) நேரே இந்தத் திரியையே ஏற்றலாமாயிருக்க, மத்தியிலே இன்னொரு திரி எதற்கு? ‘தத்-ஹேதோ ரேவ தத்-ஹேதுத்வே மத்யே கிம் தேந?’

‘ந்யாயேந்து சேகர’ ச்லோகத்தில் இதைப் பிள்ளையாருக்கு எப்படிப் பொருத்தியிருக்கிறது?

கிருஷ் ராம்'s photo.

Raghunathan Iyer

unread,
Jan 18, 2016, 2:19:28 AM1/18/16
to arunalaya

 HOW TO INCREASE
POSITIVE ENERGY
IN OUR HOUSE.....

1) Open all windows in the house and allow fresh air and sunshine to enter the house. Free flowing air and sun are negative energy removers

2. Dispose of all the old unwanted things lying in the house. Clutter is a negativity magnet. It attracts and accumulates negative energy in the house.

3). Walking barefoot in the house helps all your negative energy to be absorbed by the earth. 
Grounding is important to keep the energy balance in our body.

4) In the olden days, footwears were kept out of the house. People used to enter the house only after washing feet with water. This action ensures that all the negativity remains outside or are grounded by earth and does not enter the house. Now it has become difficult to keep the footwear outside. So preferably remove them near the entrance door.

5) Go out in the open air. Take walks in the garden or open ground. Being amongst nature re-energizes or charges you fully.

6) Sweeping the floor also ensures that the negative energies are shaken and moved out with the dirt.

7) Rock salt is another negativity remover. Wash or mop your floor with a fistful rock salt in a bucket of water. This ensures that every nook and corner of the house is rid of negative energy.

8) Potted plants or trees around your house or society also ensures more positive energy in the house and area.

9) Bathing or Soaking your legs and hands in rock salt water once in a while removes the negativity attached to your body and cleanse your aura.

11) Repetition of Prayers, increases the positive vibrations in the house. 100%

11) Keep your thoughts, action and speech Positive. Negative thoughts will bring in negative vibes. So avoid all negative thoughts, speech and actions.

12) Keep your house well lit and illuminated. Light removes negativity.

13) Keep faith in God and in yourself. 
You are the Creator of your own destiny by the Choices you make.

STAY HAPPY
STAY BLESSED

In our group everyone must read....
All families should live happily....

Raghunathan Iyer

unread,
Jan 19, 2016, 12:28:16 AM1/19/16
to arunalaya

மூன்று வகை வகை உறவுகள்

தேடிவரும் உறவுகள்

சிலரிடத்தில் நாம் பெரிதாய் எதுவும் ஈடுபாடு காட்டமாட்டோம். இயல்பான ஓரிரு வார்த்தைகளோடு நின்று விடுவோம். மனதளவிலும் பெரிதாய் ஓட்டுதல் இருக்காது. ஆனால், அவர்கள் நம்மைச் சுற்றிச்சுற்றி வருவார்கள். எப்பாடுபட்டாவது நம்முடனான உறவை பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவார்கள். சம்பந்தப்பட்டவர்களின் குணநலன்களை, தன்மையைப் பொறுத்து இதன் வீரியம் மாறுபடலாம். ஆனால், விசயம் ஒன்றுதான்.

தேடிப்போகும் உறவுகள்
அதேபோல், சிலர் நம்முடன்ன் உறவாடுவதில் பெரிதாய் விருப்பம் காண்பிக்கமாட்டார்கள். தானுண்டு. தன் வேலை உண்டு என்று அமைதியாயிருப்பார்கள். ஆனால், அவர்களிடமுள்ள ஏதோ ஒன்று நம்மை இழக்கும். மீண்டும் மீண்டும் போய் பேசத் த ஓன்றும். அந்த உறவைப் பலப்படுத்திக் கொள்ளத் தேவையான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம். அவர்களுக்காக நம் மனதின் ஒரு பகுதி காலியாயிருக்கும். எப்போதும் பெரிதாய் எந்த ஆரவாரமும் இல்லாமல், மெலிதாய் சலசலத்துக் கொண்டிருக்கும் ஓடையைப் போல இந்த உறவின் நினைவுகள் நமக்குள் ஓடிக்கொண்டிருக்கும். காப் போக்கில் இருவரையும் கட்டுப்போட்டு ஒரே அலைவரிசையில் அடித்துச் செல்லவும் கூடும்.

திணிக்கப்பட்ட உறவுகள்
அடுத்த நிலை இருக்கிறதே.. நினைத்துப் பார்க்கவே கொஞ்சம் எரிச்சலூட்டும் கட்டம்தான். சிலரைப் பார்த்தாலே நமக்குப் பிடிக்காது. எதற்கெடுத்தாலும் எரிந்து எரிந்து விழும் ‘வள் வள்’ நபர், வெளியில் சிரிச்சு உள்ளுக்குள்ள வயிறெரிய புத்தி, பேசிப்பேசியே ஆளை
மயக்கி குழியில தள்ளிவிடற ரகம். இப்படி ஏதாவது ஒரு காரணத்தால் நமக்கு அவரைப் பிடிக்காமல் போய்விடும். ஆனால், ஒட்டவும் முடியாதமல் தள்ளிப்போகவும் முடியாமல் தவித்துக் கொண்டிருப்போம். ஏதாவது ஒரு விசயத்திற்கு நாம் அவரைச் சார்ந்திரக்க நேரிடலாம். இல்லை, அவருடன் வேலை விசயமாக பேச வேண்டியதிருக்கலாம். அவர் எரிந்து விழுவதில் அர்த்தமேயில்லை என நன்றாய் புரிந்திருந்தும் நம்மால் எதுவும் செய முடியாத சூழ்நிலையிலிருப்போம். நம் ஒவ்வொருருக்கும் இது போன்ற ஒரு ‘திணிக்கப்பட்ட உறவு’ கட்டாயம் இருக்கும். ‘ மனதிற்குள் கறுவிக்கொண்டே வெளியே வேறு வழியில்லாமல் சிரித்துப் பேசுவோம்.



Raghunathan Iyer

unread,
Jan 19, 2016, 12:29:49 AM1/19/16
to arunalaya

ஸ்ரீபுர பயணம் 1.

கூடத்ரய ரூபிணீம் ஸமயநீம், ஸம்ஸாரிணீம் ஹம்ஸினீம்
வாமாசார பராயணீம் ஸுகுலஜாம், பீஜாவதீம் முத்ரிணீம்
காமாக்ஷீம் கருணார்த்ர சித்த ஸஹிதாம், ஸ்ரீம்ஸ்ரீம் திரிமூர்த்யாத் மிகாம்
ஸ்ரீசக்ர ப்ரிய பிந்து தர்ப்பணபராம், ஸ்ரீராஜ ராஜேஸ்வரீம். 
{மந்திர மாத்ருகா ஸ்தவம்} – ஆதிசங்கரர்.

வார்த்தைகளால் ஸ்தோத்திரம் சொல்கிறோம், கானம் செய்கிறோம், வார்த்தையே இல்லாமல் வெறும் ராக ஆலாபனை மூலமும் மகிழ்விக்க முடிகிறது. அதேபோல உருவத்தில் வழிபடும் கடவுளை அவயங்கள் இன்றி வெறும் வரிவடிவாலும் {கோடுகளாலும்} அடையவே யந்திர {சக்ர} உபாசனை வழிபாடுகள் ஏற்பட்டது.

பச்சிலைகளில் சிலவற்றில் மட்டுமே மருத்துவகுணம் இருப்பது போல, சொற்களில் வேத மந்திரங்களுக்கு மட்டுமே வீரியம் இருப்பது போல, வரிவடிவங்களில் தம்மிடத்தே அபரிமித ஆன்ம சக்தியைக் கொண்டவைகளே சக்ரங்கள்.

சக்ரத்தில் வட்டம், முக்கோணம், சதுரம், தளங்கள் ஆகியவைகள் உள்ளன. வட்டம் முதலும் முடிவும் இல்லாத இறைவன் தன்மையை காட்டுகிறது. முக்கோணம் சிருஷ்டி,ஸ்திதி,ஸம்ஹாரம், சாத்வீகம், ரஜஸ், தமஸ் போன்று மூன்றாகவுள்ள, சக்திகளை குறிக்கிறது. முக்கோனம் மேல் நோக்கியிருப்பது சாதகனின் உயர்ந்த லக்ஷ்யத்தைக் குறிக்கிறது. முக்கோணம் கீழ் நோக்கி இருப்பது பராசக்தியின் அம்சமாகும். முக்கோணம் மேல் நோக்கியும் ஒரு முக்கோணம் கீழ் நோக்கியும் ஷட்கோணமாக இருப்பது சாதகனின் உயர்ந்த லக்ஷ்யத்தையும் இறையருள் அவனை நோக்கி வருவதையும் குறிக்கிறது. மேல் நோக்கிய முக்கோணம் சிவம், கீழ் நோக்கிய முக்கோணம் சக்தி. இந்த ஷட்கோணம் சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்துகிறது.

தாமரை தளம்: சூரிய உதயத்தின் போது விரிந்து சூரிய அஸ்தமனம்போது குவியும் தன்மை தாமரைக்கு உண்டு. தாமரை விரிவடைவது சாதகனின் உள் சக்தியைக் குறிக்கிறது. தாமரை குவிவது போல, சாதகனின் அம்பிகையிடம் குவியவேண்டும். தந்திர சாஸ்திரங்களில் சில மறைமுகமான அர்த்தங்கள் உண்டு.

எட்டு மூலையுள்ள கோணம் வசுகோணம் எனப்போடும், வசுக்கள் எட்டு, 14 மூலையிருந்தால் புவனஸாரா என்பர். உலகங்களில் எண்ணிக்கை - 14.

யந்திரக்குரிய பிரதான தெய்வம் எப்போதும் மத்தியிலுள்ள பிந்துவில் இருக்கும். அதன் பரிவார தேவதைகள் சுற்றிலுமுள்ள கோணங்களில் இருக்கும். {இது எல்லா யந்திரத்திற்கும் பொருந்தும்}

இந்த தெய்வ சக்ரங்களுக்கெல்லாம் தலைமை வகிப்பது ஸ்ரீ சக்ரம், அதனால்தான் சக்ர ராஜம் என்று இதற்குப் பெயர், ஒவ்வொரு புவனங்களையும் படைத்து காத்து அழித்து வரும் சக்திகள் எவ்வளவோ இருக்கின்றன. இவைகளுக்கெல்லாம் அம்பிகை தலைமை தாங்குவதால்தான் பராபட்டாரிகா என்ற பெயர் அவளுக்கு ஏர்ப்பட்டது.

எந்த தேவதையின் சக்ரமும் இதில் அடக்கம். ஸ்ரீசக்ரத்தை வைத்துக்கொண்டே எந்த தேவதையையும் பூஜிக்கலாம் என்கிறது தந்திர சாஸ்த்திரங்கள்.

அம்பிகை லலிதா பரமேஸ்வரியின் வழிபாடான ஸ்ரீ வித்யையின் உபாசனா மூர்த்தி ஸ்ரீசக்ரம் {மேரு} இதில் அருமையான அகண்ட தத்துவ ரகசியங்கள் உள்ளன.

ஞானம்,விஞ்ஞா,பரஞானம்,பிரம்மஞானம் எல்லம் இதில் அடக்கம், எறும்பு, ஈ முதல் மானிடர் தேகம் வரை ஒரு சக்தி இயங்கி வருகிறது. இதை மூலாதார சக்தி என்றும், பிராண சக்தி என்றும் கூறுகிறோம். இதன் கதி {துடிப்பு} ஒவ்வொரு உறுப்பிலும் காணப்படுகிறது. எல்லா கதிகளும் சேர்ந்து செயல்படுவது மானிட தேகத்தில் தான் அதனால்தான் மானிடப் பிறவி அரிது என்று சொல்லப்படுகிறது.

மூலாதார சக்தி உள்ள இடம் அதன் நடை,நியதி,பெயர்,குணம்,பலன் எல்லாவற்றையும் விளக்கிக் கூறி, மாந்தர் வழிபடும் வழியை வகுப்பதே ஸ்ரீசக்ரம்.

பிரபஞ்சத்திற்கு மேலே சகஸ்ரகமலம் என்கிற ஆயிரம் இதழ்கள் மலர்ந்த மலர் பீடம் இருக்கிறது. அதிலுள்ள ஒளிமண்டலமே சிவசக்தி உறையும் மங்கல கமலமான ஸ்ரீசக்ரம் என்பது. தேவி தந்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்ரீசக்ர தேவியின் மங்கலபுரியான ஸ்ரீபுரத்தை வடிவமாகக் கொண்டது.

ஸ்ரீசக்ரத்திலுள்ள பிந்து, திரிகோணம், வஸுகோணம் அந்தர்தசாரம், பஹிர்தசாரம், அஷ்டதளம், ஷோடசதளம், பூபுரம் இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சக்ரமே. இவை ஆவரணங்கள் என்று அழைப்படுகின்றன. ஒவ்வொரு ஆவரணத்திலும் ஒரு சக்ரேஸ்வரியும், ஒரு முத்ரா தேவதையும், சில ஆவரண தேவதைகளும் இருக்கின்றனர். இவர்களுக்கு யோகினி என்று பெயர்,

சிவசக்தி இணைந்த பரமாத்மாவின் கிரகணங்களே இந்த ஆவரண தேவதைகள். இவர்களைத் தவிர மேலுமுள்ள பரிவார தேவதைகளை ஆம்னாய தேவதைகள் என்பர். இவர்களின் எண்ணிக்கை கணக்கற்றது. இருந்தாலும் இவர்களின் முக்கியமானவர்கள் ஆம்னாய ஸ்தோத்திரத்தில் குறிப்பிடப்படுகின்றனர்.

பல பெயர்கள் – ஒன்பது சக்ரங்களைக் கொண்டதால் “நவயோனி சக்ரம்” என்ற பெயர் இதற்கு ஏற்பட்ட்து. 43 முக்கோணங்களைக் கொண்டதால் “திரிசத்வாரிம்சத் சக்ரம்” என்றும் பெயர், தகராகாசம் எனப்படும் இருதயத்தில் வைத்து வழிபடப்படுவது. அன்னையின் மாத்ருகா சக்திகள் இதில் அடங்கியிருப்பதால் “மாத்ருகா சக்ரம்” மேலும் ஸ்ரீசக்ரத்திற்கு “பரம மங்கள்சக்ரம்” சிவசக்தி ஐக்கியசக்ரம், ஸதானந்த ஸம்பூர்ணசக்ரம் என்ற பெயர்களும் உண்டு.


Raghunathan Iyer

unread,
Jan 19, 2016, 7:08:02 AM1/19/16
to arunalaya

.நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஆன்மீகமும் ஆரோக்கியமும் .நிறைந்த பதிவு

ஓம்: உடலில் செய்யும் அளப்பரிய அதிசயங்கள்
 
ஓம் என்ற மந்திரம் உலகிற்கே உரித்தான மந்திரம் என்று வேதகாலத்து ரிஷிகள் கூறி இருப்பதையும் அந்த உன்னத மந்திரத்தை வேத உபநிடதங்கள் போற்றித் துதிப்பதையும் நன்கு அறிவோம்;இந்த நவீன யுகத்திற்கேற்ற விஞ்ஞான மந்திரம் அது என்று புதிய ஒரு ஆய்வின் முடிவில் ஆராய்ச்சியாளர்கள் சொல்லும்போது நமது வியப்பின் எல்லைக்கு அளவில்லை;
அமராவதியில் உள்ள சிப்னா காலேஜ் ஆப் என் ஜினியரிங்க் அண்டு டெக்னாலஜியில் பேராசியராகப் பணியாற்றும் அஜய் அணில் குர்ஜர் அந்தக் கல்லூரியின் முதல்வர் சித்தார்த் லடாகேயுடன் இணைந்து ஓம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினார்.
இந்த ஆராய்ச்சியில் அவர்கள் இறங்கக் காரணம் நாளுக்கு நாள் வணிகம் செய்வோர்,தொழிற்சாலை அலுவலகங்களில் பணிபுரிவோர் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்படும் தாங்கமுடியாத மன அழுத்தமும் அதனால் ஏற்படும் வேதனைகளும் அவர்களைப் படுத்தும் பாடும்தான்!உளவியல் ரீதியிலான மன அழுத்தத்திற்கு மருந்து எது என்று ஆராயப்புகுந்த அவர்கள் ஓம் மந்திர உச்சரிப்புதான் அதற்கான மாமருந்து என்று சோதனை மூலமாகக் கண்டுபிடித்தனர்.
ஓம் என உச்சரிப்பதால் ஒரு புதிய உத்வேகம் உடலில் ஏற்படுவதையும் பிரக்ஞை தூண்டப்படுவதையும் மனதின் வரையறுக்கப்பட்ட தடைகள் இந்த மந்திரஒலியால் மீறப்படுவதையும் அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.இதைக் கண்டுபிடிக்க அவர்கள் வேவ்லெட் ட்ரான்ஸ்பார்ம்ஸ் மற்றும் டைம் ப்ரீகுவென்ஸி அனாலிஸிஸ்(Wavelet Transforms,Time- frequency Analaysis) ஆகிய உத்திகளைப் பயன்படுத்தினர்.
ஓம் என உச்சரிக்கும்போது ஈஈஜி அலைகளில் மாறுதல்கள் ஏற்படுவதையும் மூளையில் ஒலியினால் மின் செயல் மாறுபாடுகள் ஏற்படுவதையும் அவர்கள் நவீன சாதனங்கள் மூலம் குறித்துக் கொள்ள முடிந்தது.ஈஈஜி சிக்னல் மூலம் ஓம் என்பதை உச்சரிப்பதற்கு முன்னரும் பின்னரும் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மாறுதல்களை அவர்களால் கண்காணிக்க முடிந்தது. மந்திர ஒலிகள் மனிதர்களின் நரம்பு மண்டலத்தில் அதிசயமான நல்லவிளைவுகளை ஏற்படுத்துகின்றன என்கிறார்கள்.
ஆக்கல்,காத்தல்,அழித்தல் என்ற முப்பெரும் தொழில்களை பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் ஆகியோர் செய்வதை இந்து தர்மம் கூறுவதையும் ஓம் மந்திரத்தில் உள்ள அகார,உகார,மகாரங்கள் “பிரம்மா,விஷ்ணு,ருத்ரனை”க் குறிப்பதையும் அனைவரும் அறிவர்.
ஓம் என நாம் ஒலிக்கும்போது பிரபஞ்ச ஆற்றல்கள் நேரடியாக அதிர்வுகள் மூலமாக நமது உடலில் நுழைகின்றன.வாயின் பின்புறம் உதிக்கும் “அ” சுவாசிப்பு அமைப்பில் அடிவயிற்றில் உணரப்படுகிறது. வாயின் நடுவில் பிறக்கும் “உ” மார்புப்பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.குவிந்த உதடுகளில் வழியே வரும் “ம” தொண்டை மற்றும் தலையில் உள்ள சுவாச அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இந்த ஒவ்வொரு ஒலியும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலை உடலின் சிறு திசுவிலிருந்து முழுசுவாச அமைப்பு வரை ஏற்படுத்துகிறது.ஓம் முழுதாக ஒலிக்கப்பட்டவுடன் பிராண ஆற்றல் உடல் முழுவதும் பாய்கிறது.
ஆராய்ச்சியில் ஈடுபட்டது ஏன்?
இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் அணில் குர்ஜருக்கு ஏன் ஈடுபாடு வந்தது என்பதற்கு அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவமே காரணம் ஆகும். 29.5.1999 அன்று தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென அவரது தாயாருக்குப் பேசும் சக்தி போய்விட்டது.மூளையில் ரத்தம் கட்டிவிட்டதால் நினைவையும் இழந்து அவர் பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டார்.அடுத்த நாள் அவருக்கு கோமா நிலை ஏற்பட்டது. ஆனால்,
இப்போதோ அவருக்கு 90% பழைய ஆற்றல் வந்துவிட்டது.அவருக்கு ஸ்பீச்தெரபி எனப்படும் பேச்சாற்றல் மருத்துவம் தரப்பட்டதே இதற்குக்காரணம்.அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூளையில் ரத்தம் உறைவதற்கான காரணம் ஹைபர் டென்ஷன் மற்றும் அதிக மன அழுத்தமே என தெரிவித்தனர்.இப்படிப்பட்ட நிலையைப் போக்குவதற்கான சிறந்த சொல் எது என்று ஆராயப் போக அவர் ஓம் ஆராய்ச்சியில் இறங்கி ஓம் மந்திரத்தின் அற்புத ஆற்றல்களை அறிந்தார்.மந்திரத்தின் ஆற்றல்களை அறிய டிஜிட்டல் சிக்னல் ப்ராஸஸிங் உத்திகளை அவர் பயன்படுத்தினார்.
ஓம் பற்றிய வேறு சில ஆராய்ச்சிகள்:
தகாஷி எடல் என்பவர் 1999 இல் மேற்கொண்ட ஆய்வில் குறைந்த அதிர்வெண் கொண்ட சப்தம் உடலில் மார்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்பதைக் கண்டறிந்தார்.இதை அடுத்து 2003 இல் ஹெய்ஸ்னம் ஜினாதேவி எடல் ஓம் மந்திர உச்சரிப்பை ஆராய்ந்த போது அது இருபகுதிகளைக் கொண்டிருப்பதைக் கண்டு “ஓ” என்று ஆரம்பித்து “ம்” என்று முடிக்கும்போது உடலில் ஏற்படும் மாறுதல்களைத் தொகுத்தார்.இந்த உச்சரிப்பு மனிதனின் நரம்பு மண்டலத்தில் சாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது ஒவ்வொரு ஆராய்ச்சி முடிவிலும் தெளிவாக விளங்க ஆரம்பித்தது.
ஏழு சக்கரங்களிலும் அதிர்வு
இதையெல்லாம் முன்னோடி ஆராய்ச்சியாக் கொண்டு அனில் குர்ஜர் 25 முதல் 40 வயது வரை உள்ள ஆண் பெண்கள் அடங்கிய 125 பேர் கொண்ட ஒரு குழுவிடம் ஆறுவருட காலம் தனது ஆராய்ச்சியை நடத்தினார்.அமைதியான ஒரு அறையில் 44.1 ஹெர்ஸ்ட் சாம்ப்ளிங் வீதத்தில் 16 பிட் அமைப்பில் ஒரு மைக்ரோபோன் மூலமாக ஓம் மந்திரத்தை ஓதச் செய்து ஆய்வுகள் தொடரப்பட்டன.
20 நிமிடங்கள் ஓம் ஒலிக்கப்பட்டவுடன் மூளையிலும் நரம்புமண்டலத்திலும் ஏற்படும் மாறுதல்கள் துல்லியமாக ஆராயப்பட்டன.இந்த ஆய்வின் முடிவில்,
1.ஓம் மந்திரத்தை உச்சரிப்பதால் மன அழுத்தம் குறைகிறது.
2.எதன் மீதும் செய்யப்படும் கவனக்குவிப்பு அதிகரிக்கிறது.
3.ஏழு உச்சநிலைகளைக் கொண்ட ஓம்,உடலின் ஏழு சக்கரங்களில் அதிர்வெண் மூலமாக ஒரு பெரிய குறிப்பிடத்தக்க மாறுதலை ஏற்படுத்துகிறது என்று கண்டார்.
மூலாதாரத்தில் 256 ஹெர்ட்ஸீம்,ஸ்வாதிஷ்டானத்தில் 288 ஹெர்ட்ஸீம்,மணிபூரத்தில் 320 ஹெர்ட்ஸீம் அனாகதத்தில்(இதயம்) 341.3 ஹெர்ட்ஸீம்,விசுத்தாவில்(தொண்டை) 384 ஹெர்ட்ஸீம், ஆக்ஞாவில்(மூன்றாவது கண்) 426.7 ஹெர்ட்ஸீம் ,சஹஸ்ராரத்தில் 480 ஹெர்ட்ஸீம் அளக்கப்பட்டு உடலின் ஏழு சக்கரங்களும் புத்துணர்ச்சி அடைவதை ஆய்வு நிரூபித்தது.
ஒலியால் உடலை ஒருங்கிணைக்கும் ஓம்
ஓம் மந்திரத்தை உச்சரிக்கும்போது மிகவும் நுண்ணிய உறுப்பான காதுகள் மெடுல்லா மூலமாக உடலின் திசுக்களை இணைக்கிறது.நமது உடலின் தன்மை,சமன்பாடு,நெகிழ்வுத் தன்மை,பார்வை அனைத்தும் ஒலியால் பாதிக்கப்படுவதால் ஓம் உருவாக்கும் நல்ல ஒலி நன்மையைத் தருகிறது.இது வேகஸ் நரம்பு மூலமாக உள்காது,இதயம்,நுரையீரல்,வயிறு,கல்லீரல்,சிறுநீரகப்பை,
சிறுநீரகங்கள்,சிறுகுடல்,பெருங்குடல் ஆகிய அனைத்து உறுப்புக்களையும் இணைத்து நன்மையை நல்குகிறது.
இப்படி ஓமின் பெருமையை விஞ்ஞான ரீதியாக விளக்கிக் கொண்டே போகலாம்.அவ்வளவு உண்மைகளை ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார் அனில் குர்ஜர்.அவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்துள்ளார் அவரது பிரின்ஸிபல் சித்தார்த் லடாகே.இவர்களின் ஆராய்ச்சி இன்னும் தொடர்கிறது.மந்திரங்களின் மகிமை பற்றிய விஞ்ஞான விளக்கப் புதுமைகள் இன்னும் அதிகமாக வரவிருக்கின்றன.
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்


Raghunathan Iyer

unread,
Jan 19, 2016, 7:24:11 AM1/19/16
to arunalaya

 நீ பிறந்தது வெற்றி மேல் வெற்றி பெறுவதற்கே, தோல்வியுற அல்ல. அப்படியே உன்னைத் தோல்விவந்து அணைத்தாலும் அந்தத்தோல்வியும் ஒரு தற்காலிகத் தடையே. உனது தன்னம்பிக்கையே அந்தத் தடைகளைத் தகர்த்தெறியும்.

 நீ வெற்றிக்கு போராடும்போது வீண்முயற்சி என்று சொல்பவர்கள்,நீ வெற்றிபெற்றபின் விடாமுயற்சி என்பார்கள்.

 வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதைஅறிந்து செய், செய்வதை விரும்பிச் செய், செய்வதை நம்பிக்கையோடு செய்.

 சலித்துக் கொள்பவன் ஒவ்வொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தைப் பார்க்கிறான். சாதிப்பவன் ஒவ்வொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான்.

 பலரும் தங்களது சூழ்நிலை சரியில்லை என்றே குறைப்பட்டுக்கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து தங்களுக்கானசூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலைகிடைக்கவில்லையெனில், அவர்களே உருவாக்குகிறார்கள்.


Raghunathan Iyer

unread,
Jan 20, 2016, 1:22:03 AM1/20/16
to arunalaya

கோதூளி மகிமை - மஹாபெரியவா

அலகிலா விளையாட்டுடையான்:

திருச்சிராப்பள்ளியில் பெரியவா தங்கியிருந்த சமயம் சீதாலட்சுமி ராமஸ்வாமி கல்லூரியின் தலைவர் மஹானிடம் வந்து தங்கள் கல்லூரியில் பெரியவாளின் பொற்பாதம் பட வேண்டும், குழந்தைகளுக்கு ஆசி வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்தார்.

மோனகுரு பதில் ஏதும் சொல்லவில்லை. அவரும் தொடர்ந்து விண்ணப்பித்தவாறே இருந்தார். ஒருநாள் அவரிடம் 'நாளை காலை உன் காலேஜுக்கு வரேன். நீயும் உன் மனைவியும் ஒரு பசு மாடு, கன்றுக்குட்டியோட காத்திருங்கோ' என்றார்.

பக்தருக்கு அளவிலா மகிழ்ச்சி. அப்படியே தயாராக இருக்க மஹானும் வந்தார். பூர்ணகும்ப வரவேற்பை அங்கீகரித்தார். பக்தரிடம் 'என் பாதம் எங்கெல்லாம் படணும்னு உனக்கு ஆசையோ அங்கெல்லாம் பசுமாடு கன்றுக்குட்டியை பிடிச்சிண்டு ' நீ முன்னாடி போ, நான் பின்னாலேயே வரேன்' என்றார்.

அப்படியே எல்லா இடமும் சென்று வந்த பின், வெளியே வந்து 'திருப்தியா உனக்கு' என்று கேட்க அவர் என்ன பதில் சொல்வார்! கண்கள் கடலாக, மனம் உருகி கருணைக்கு நன்றி தெரிவிப்பதற்காக சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். ஸ்ரீமடம் திரும்பிய மஹான் மாலை அடியார்களிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுது காலையில் காலேஜுக்கு போன பேச்சும் வர, ஒருவர் 'பெரியவா ஏன் காலேஜுல பசு மாட்டு பின்னாலேயே போனா' என்று கேட்டார்.

சிரித்த மஹான் 'அவன் எங்ககிட்ட ரொம்ப பக்தியாயிருக்கான். நான் வந்தா அவன் காலேஜுக்கு ச்ரேயஸ்ன்னு நினைச்சு கூப்பிட்டான். ஆனால் அந்த காலேஜோ ஸ்த்ரீகள் படிக்கிற காலேஜ். அவா எல்லா நாளும் காலேஜுக்கு வருவா. மாதம் விலக வேண்டிய நாளும் வரலாம். அதனால் தான் யோஜனை செய்தேன்.அவன் ஆசையும் நிறைவேறணும். என் ஆசாரமும் கெடக் கூடாது. அதுக்கு ஒரே வழி, எந்த தீட்டாக இருந்தாலும் அந்த இடத்தில கோ பாததூளி பட்டுட்டா, அந்த இடம் பரிசுத்தமாயிடறதா சாஸ்த்ரத்துல இருப்பதால, பசு மாட்ட முன்னால விட்டுட்டு அது பின்னாலேயே நானும் போயிட்டு வந்தேன்' என்று சொன்னதைக் கேட்ட அனைவரும் பிரமிப்பிலிருந்து மீளவே இல்லை.

இப்படியும் தர்ம சூட்சுமமா? இப்படியும் அறம் வழுவா துறவு வாழ்க்கையா? நினைத்து நினைத்து நாமெல்லாம் ஆச்சர்யப்படலாம். வழிகாட்டி, குரு, ஆசார்யர் என்றால் இவரன்றோ! காலம் மாறிப்போச்சு, மாறிப்போச்சு என்று காலத்தின் மேல் பழிபோட்டு பழிபாவங்களுக்கு அஞ்சாதவர்கள் நிறைந்த இந்தப் பூமியில் இப்படியும் ஒரு அறநெறிச் செம்மலா! அன்பையும் அறத்தையும் அழகாக இணைக்கும் சாமர்த்தியம் காஞ்சி மஹாபெரியவாளை தவிர வேறு யாருக்கு இருக்கும்?

DrGanesh Vocalist's photo.

Raghunathan Iyer

unread,
Jan 20, 2016, 2:49:54 AM1/20/16
to arunalaya

இவ்வருட தை அமாவாஸ்யை அபூர்வ அமாவாஸ்யை.27 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்.இதற்கு முன் 6/02/1989 வந்தது. இந்த அமாவாஸ்யை அன்று தம் பித்ருக்களுக்கு தர்பணம் செய்தால் கோடி ஸூர்ய க்ரஹண பலத்தை தரும்...உனை வரும் தர்பணம் செய்து பலன் பெறபிராத்திக்கரொம்.நண்பர்களூக்கு ஷேர் செய்யவும்.

Raghunathan Iyer

unread,
Jan 20, 2016, 5:05:32 AM1/20/16
to arunalaya



Puradsifm's photo.
 

மனைவி கணவனிடம் எதிர்பார்க்கும் 37 விசயங்கள் :-

01. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
02. மனது புண்படும்படி பேசக் கூடாது.
03. கோபப்படக்கூடாது.
04. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
05. பலர் முன் திட்டக்கூடாது.
06. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
07. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
08. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
09. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10. மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11. வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வேண்டும் பாராட்ட வேண்டும்.
12. பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14. மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16. பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21. அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22. தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27. அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29. சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34. மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

Raghunathan Iyer

unread,
Jan 20, 2016, 5:19:24 AM1/20/16
to arunalaya

2 people like this.
Comments
Raghunathan Iyer
Write a comment...
Amurthi Navaneetham's photo.
Comments
Raghunathan Iyer
Write a comment...
 
Comments
 Raghunathan Iyer
Write a comment...
 
2 hrs · 
 
6 hrs · 

ஞாயிற்று கிழமை-கோதுமை ரவா கேசரி

திங்கள் கிழமை-பச்சரிசி பொங்ல்

செவ்வாய் கிழமை-எலுமிச்சை சாதம்

...See More
 
Comments
Raghunathan Iyer
 ..
.
2 hrs · 
Varadha Rajan's photo.
 

சதுரகிரியும், திருவண்ணாமலையும், எத்தனை முறை சென்றாலும் , ஒவ்வொரு முறையும் அதன் பிரம்மாண்டத்தை உணர்த்துவதில் தவறியதே இல்லை.

இன்று மகாலிங்க மலையைப் பற்றி - நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்களை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

நோய் தீர்க்கும் மலை: சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது. இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள். சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.

திசைக்கு நான்கு கிரிகள் (மலை)வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்க

தாணிப்பாறை அடிவாரம் - கருப்பர் சந்நிதி அருகே உள்ள தீர்த்தம்

* மகாலிங்கம் கோயிலுக்கு வடக்கில் உள்ள மூலிகைகள் நிறைந்த குன்றை "சஞ்சீவி மலை' என்கின்றனர்.

*சந்தன மகாலிங்கம் கோயில் அருகே 18 சித்தர்கள் சன்னதி உள்ளது.
*ஆடி அமாவாசை முக்கிய விழா. தை அமாவாசை, மகாளய அமாவாசை, மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, மார்கழி முதல் நாள் ஆகிய நாட்களிலும் அதிக கூட்டம் இருக்கும்.

* பழநியிலுள்ள நவபாஷாண முருகன் சிலையை போகர் சதுரகிரி மலையில் தங்கியிருந்தபோதே செய்ததாக கூறப்படுகிறது.

*இங்குள்ள ஜோதிப்புல்லை பகலில் நீரில் நனைத்து விட்டு, இரவில் பார்த்தால் தீபம் ஏற்றியது போல் இருக்கும். பழங்காலத்தில் சித்தர்கள் வெளிச்சத்திற்காக இந்த புல்லை உபயோகித்துள்ளார்கள்.

*மகாலிங்கம் கோயிலின் வடக்கே "ஊஞ்சல் கருப்பண சாமி' கோயில் உள்ளது.
* சுந்தர மகாலிங்கத்திற்கு அமாவாசை நாட்களில் மதியம் 1 மணிக்கு அபிஷேகம் துவங்கும்.

* ஆடி அமாவாசை தவிர மற்ற அமாவாசை நாட்களில் தேனும், தினைமாவும் பிரசாதமாக தரப்படுகிறது.

* சதுரகிரி மலைக்கு மின்சார வசதி கிடையாது. ஜெனரேட்டர் பயன்படுத்துகின்றனர்.

இருப்பிடம்:
மதுரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் இருந்து வத்திராயிருப்பு செல்லும் பஸ்களில் சென்றால், தாணிப்பாறை விலக்கில் இறங்கலாம். இங்கிருந்து 7 கி.மீ., தூரம் சென்றால் சதுரகிரி மலை அடிவாரமான தாணிப்பாறை வரும். அங்கிருந்து மலை ஏறி, 10 கி.மீ., நடந்தால் மகாலிங்கத்தை தரிசிக்கலாம்.

அல்லது , மதுரையிலிருந்து ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் - செங்கோட்டை செல்லும் பஸ் உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் , செங்கோட்டை செல்லும் பஸ்ஸில் ஏறி - கிருஷ்ணன் கோவில் நிறுத்தத்தில் இறங்கி - அங்கிருந்து வத்திராயிருப்பு செல்லுங்கள். ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் பேருந்து வசதி உள்ளது.

அங்கிருந்து தாணிப் பாறைக்கு - மினிபஸ் அல்லது ஆட்டோவில் சென்று விடுங்கள்.

திறக்கும் நேரம்:
காலை 6- 12 மணி, மாலை 4- இரவு 9 மணி. விசேஷ நாட்களில் நடை திறக்கும் நேரம் மாறுபடும்.போன்: 98436 37301, 96268 32131

மலைக்கு மேலே - சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிரவைக்க " கஞ்சி மடம் ' உள்ளது. உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும். 24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.

சதுரகிரி தல வரலாறு : சதுரகிரி மலை அடிவாரத்திலுள்ள கோட்டையூரில் பிறந்தவன் பச்சைமால். இவன் பசுக்களை மேய்த்து பிழைத்தான். இவனது பெற்றோர் தில்லைக்கோன்- திலகமதி. மனைவி சடைமங்கை. இவள் மாமனார் வீட்டில் பாலைக் கொடுத்து விட்டு வருவாள். ஒருமுறை, பால் கொண்டு சென்ற போது எதிரில் வந்த துறவி அவளிடம் குடிக்க பால் கேட்டார். சடைமங்கையும் கொடுக்கவே, தினமும் தனக்கு பால் தரும்படி கேட்டார். சடைமங்கையும் ஒப்புக்கொண்டாள்.

வழக்கத்தை விட சற்று பால் குறைவதைக் கவனித்த சடைமங்கையின் மாமனார், இதுபற்றி மகன் பச்சைமாலுக்கு தெரிவித்து விட்டார். பச்சைமால் தனது மனைவியை பின் தொடர்ந்து சென்று, அவள் துறவிக்கு பால் தந்ததை அறிந்து கோபம் கொண்டு அடித்தான். தனக்கு பால் கொடுத்ததால் அடி வாங்கிய சடைமங்கை மேல் இரக்கம் கொண்ட அவர், அவளுக்கு "சடதாரி' என்று பெயரிட்டு காக்கும் தேவியாக சிலையாக்கி விட்டு மறைந்தார். மனைவியை பிரிந்த பச்சைமால், மனம் திருந்தி, சதுரகிரிக்கு வந்த அடியவர்களுக்கு பால் கொடுத்து உதவி செய்தான்.

சுந்தரானந்த சித்தர் என்பவர் செய்த பூஜைக்கும் பால் கொடுத்து உதவினான். சித்தர்கள் செய்த பூஜையில் மகிழ்ந்த சிவன் இத்தலத்தில் அவர்களுக்கு காட்சி கொடுத்தார். பச்சைமாலுக்கும் சிவதரிசனம் கிடைத்தது. ஒருநாள், சிவன் ஒரு துறவியின் வேடத்தில், சிவபூஜைக்கு பால் கொடுக்கும் காராம்பசுவின் மடுவில் வாய்வைத்து பால் குடித்து கொண்டிருந்தார். இதைக்கண்ட பச்சைமாலுக்கு கடும் கோபம் ஏற்பட்டு, துறவியின் தலையில் கம்பால் அடித்தான். அப்போது, சிவன் புலித்தோல் அணிந்து காட்சி கொடுத்தார். சிவனை அடித்துவிட்டதை அறிந்த பச்சைமால் மிகவும் வருந்தி அழுதான்.

சிவபெருமான் அவனை தேற்றி, "" நீ தேவலோகத்தை சேர்ந்தவன். உன் பெயர் யாழ்வல்லதேவன். நீ யாழ் மீட்டி என்னை பாடி மகிழ்விப்பாய். சிற்றின்ப ஆசை காரணமாக என்னால் சபிக்கப்பட்டு பூலோகத்தில் மனிதனாக பிறந்தாய். உன்னை மீட்டு செல்லவே வந்தேன்,'' என்று கூறி அவனுக்கு முக்தி அளித்தார். அத்துடன் அங்கிருந்த சித்தர்களின் வேண்டுகோளின்படி "மகாலிங்கம்' என்ற திருநாமத்துடன் அங்கேயே எழுந்தருளினார். இது லிங்கங்களிலேயே பெருமை வாய்ந்தது என சதுரகிரி புராணம் கூறுகிறது. இன்றும் கூட மகாலிங்கம் சாய்ந்த நிலையில் இருப்பதையும், தலையில் அடிபட்ட தழும்பையும் காணலாம்.சதுரகிரி மலை ஏறுவது கடினமானது. மலையே சிவமாக இருப்பதால் பக்தர்கள் காலில் செருப்பு இல்லாமல் ஏறுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து மலையேற வேண்டும்.
மலையடிவாரத்தில் ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்க வேண்டும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் உள்ளன. இதனை அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகள் வருகின்றன.

இந்தப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து வருவது காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு.

இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி.

கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால் , அனைவரும் முயற்சிக்க வேண்டாம்.

இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 10 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.

இரட்டை லிங்கம்: ஆனந்த சுந்தரம் என்ற வியாபாரிக்கு சிவன் மீது அளவு கடந்த ஈடுபாடு இருந்தது. அவரது மனைவி ஆண்டாள். பெருமாள் பக்தை. இவர்கள் இருவரும், தான் வணங்கும் கடவுளே பெரியவர் என்று தர்க்கம் செய்வர். இதற்கு விடை காண இருவரும் சதுரகிரி வந்து தியானம் செய்தனர். இவர்கள் முன்பு சிவன் தோன்றினார்.

""சிவபெருமானே! தாங்களே அனைத்துமாக இருக்கிறீர்கள், என்பதை என் மனைவியிடம் தெரிவிக்க வேண்டும்,''என வேண்டினார் வியாபாரி. சிவன் ஆண்டாளிடம் சென்றார். அவளோ, ""நான் உம்மை நினைத்ததே இல்லை. பெருமாளை நினைத்தே தவம் செய்தேன்,'' என்றாள். அப்போது சிவனும், விஷ்ணுவும் இணைந்து சங்கரநாராயணராக காட்சி கொடுத்தனர். இதன் அடிப்படையில் மலை ஏறும் வழியில் சிவலிங்கம், விஷ்ணு லிங்கம் என இரட்டை லிங்கம் பிரதிஷ்டை செய்து ராமதேவ சித்தர் என்பவர் பூஜை செய்தார். இந்த சன்னதிக்கு எதிரே ராமதேவர் குகை இருக்கிறது.

பிலாவடி கருப்பு: வணிகர் ஒருவருக்கு சிவன் கோயில் கட்டும் ஆசை இருந்தது. ஆனால், பணம் போதவில்லை. பலரிடம் உதவி கேட்டும் இவரது தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லை. முனிவர் ஒருவர், ""சதுரகிரியில் உள்ள காலங்கிநாத சித்தரிடம் சென்றால் உனது விருப்பம் நிறைவேறும்,'' என்றார்.

வணிகரும் சதுரகிரி வந்து காலங்கிநாதரை தரிசித்தார். அவர் அங்குள்ள சில மூலிகைகளைக் கொண்டு உலோகங்களை தங்கமாக்கி அவனிடம் கொடுத்தார். மீதமிருந்த தங்கத்தையும், தங்கம் தயாரிக்க பயன்பட்ட தைலத்தையும் ஒரு கிணற்றில் கொட்டி பாறையால் மூடினார். இந்த கிணற்றுக்கு காவலாக கருப்பசுவாமியை நியமித்தார். இவரது சன்னதியில் மூன்று காய்களுடன் கூடிய பலாமரம் உள்ளது. இதனால், இவரை "பிலாவடி கருப்பர்' என அழைத்தனர். இந்த மரத்தில், ஒரு காய் விழுந்து விட்டால் இன்னொரு காய் காய்க்கும் அதிசயம் பல ஆண்டுகளாக நடக்கிறது.

பெரிய மகாலிங்கம்: நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.

தவசிப்பாறை: மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம். இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம். பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது.
[p91a.jpg]

தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது. குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும். இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள். இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும். தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது. அருகில் நடுக்காட்டு நாகர் சன்னதி உள்ளது.

சுந்தரமூர்த்தி

கைலாயத்தில் சிவ பார்வதி திருமணம் நடந்தபோது, அகத்தியர் தெற்கே வந்தார். அவர் சதுரகிரியில் தங்கி லிங்க வழிபாடு செய்தார். அவர் அமைத்த லிங்கமே சுந்தரமூர்த்தி லிங்கம் ஆகும். சதுரகிரியில் அகத்தியர் தங்கியிருந்த குன்றை "கும்ப மலை' என்கின் றனர். அகத்தியர் பூஜித்த லிங்கத்தை சுந்தரானந்த சித்தர் பூஜித்து வந்தார். இதனாலேயே இந்த லிங்கம் "சுந்தரமூர்த்தி லிங்கம்' எனப்படுகிறது. அருளை வழங்குவது "சுந்தரமகாலிங்கம்', பொருளை வழங்குவது "சுந்தரமூர்த்தி லிங்கம்' என்று கூறுவர். சதுரகிரி கோயிலின் நுழைவுப்பகுதியில் இந்த லிங்கம் இருக்கிறது. இரவு 12 மணியளவில் இந்த சன்னதி அருகே யாரும் செல்வதில்லை. அப்போது, சித்தர்கள் அவரை தரிசிக்க வருவதாக ஐதீகம்.

பார்வதி பூஜித்த லிங்கம் : சுந்தர மகாலிங்கம் கோயிலிலிருந்து சற்று மேடான பகுதியில் சந்தன மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது. பிருங்கி மகரிஷி சிவனை மட்டும் வழிபட்டு, சக்தியைக் கவனிக்காமல் போய்விடுவார். எனவே, சிவனுடன் ஒன்றாக இணைந்திருக்க வேண்டி, அவர் உடலில் பாதியைக் கேட்டு, பூலோகம் வந்து சதுரகிரி மலையில் லிங்க பூஜை செய்தாள். தினமும் சந்தன அபிஷேகம் செய்தாள். மகிழ்ந்த சிவன் பார்வதியை தன்னுடன் இணைத்து "அர்த்தநாரீஸ்வரர்' ஆனார் என தல வரலாறு கூறுகிறது. பார்வதி தான் அமைத்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய ஆகாய கங்கையை வரவழைத்தாள். இங்குள்ள சந்தன மாரியம்மன் சன்னதி அருகில் ஓடும்

இந்த தீர்த்தத்தால் சந்தன மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். பார்வதி பூஜித்த சந்தன மகாலிங்கத்தை, சட்டைநாத சித்தர் பூஜித்து வந்தார். மகாசிவராத்திரியன்று பக்தர்களே சந்தன மகாலிங்கத்தின் மீது பூத்தூவி வழிபடுகின்றனர்.

இக்கோயிலில் சந்தன மகாலிங்கம், சந்தன விநாயகர், சந்தன முருகன், சந்தன மாரி என எல்லாமே சந்தன மயம் தான். 18 சித்தர்களுக்கும் சிலை உள்ளது. செண்பகப்பூவை காயவைத்து வாசனைக்காக விபூதியில் கலந்து கொடுக்கிறார்கள்.இங்கிருந்து ஒரு கி.மீ. தூரத்தில் வனகாளி கோயில் உள்ளது.

லிங்க வடிவ அம்பிகை

சிவனைப்போலவே அம்மனும் இங்கு நிரந்தரமாக தங்கி அருள்பாலிக்க வேண்டும் என விரும்பிய சித்தர்கள் நவராத்திரி நாட்களில் கடுமையாக தவம் இருந்தனர். இதை ஆனந்தமாக ஏற்ற அம்மன் "ஆனந்தவல்லி' என்ற திருநாமத்தில் லிங்கவடிவில் எழுந்தருளினாள். சுந்தரமகாலிங்கம் சன்னதிக்கு பின்புறம் இவளது சன்னதி உள்ளது. நவராத்திரி நாட்களில் உற்சவ அம்மனின் பவனி நடக்கும். விஜயதசமியன்று அம்மனுக்கு மகிஷாசுரமர்த்தினி அலங்காரம் செய்து பாரிவேட்டை நடக்கிறது.

சதுரகிரியில் தீர்த்தங்கள்
சந்திர தீர்த்தம்

சதுரகிரியில் சுந்தர மகாலிங்க மலையில் 'சந்திர தீர்த்தம்' இருக்கிறது.இந்த சந்திர தீர்த்தத்தில் இறைவனை வேண்டி வணங்கி ஒரு முறை நீராடினால் கொலை, காமம், குரு துரோகம் போன்ற பஞ்சமா பாதங்களிலிருந்து நீங்கி புண்ணியம் பெறலாம்.

கெளண்டின்னிய தீர்த்தம்.

சந்திர தீர்த்தத்திற்கு வடபுறத்தில் உள்ளது இந்தத் தீர்த்தம். இது தெய்வீகத் தன்மை வாய்ந்த நதியாகும். வறட்சியுற்ற காலத்தில் தேவர்களும், ரிஷிகளும் சிவபெருமான் வேண்ட, ஈசன் தமது சடை முடியில் உள்ள கங்கைலிருந்து ஒரு துளி எடுத்து நான்கு கிரிகளுக்கும் மத்தியில் விட்டு, லிங்கத்தில் மறைந்தார் என்பது ஐதீகம்.

கங்கை, கோதாரி, கோமதி, சிந்து, தாமிரவருணி, துங்கபத்திரை முதலிய புண்ணிய நதிகளுக்கு நீராடிய பயனுண்டு. இந்த நதியில் நீராடுவதால் சகல பாவங்களும் தீர்வதால் இதற்கு ''பாவகரி நதி'' என்னும் பெயரும் உண்டு.

சந்தன மகாலிங்கம் தீர்த்தம்.

இச்சதுரகிரியின் மேல் 'காளிவனம்' என்கிற இருண்டவனம் ஒன்றுள்ளது. அவ்வனத்திலிருந்து வருகிற தீர்த்தம் சந்தனமகாலிங்க தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. உமையாள் பிருங்க முனிவர் தம்மை வணங்காமல் ஈசனை வணங்கியமையால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாகச் சிவபெருமானை விட்டுப் பிரிந்து, அர்த்த நாரீஸ்வரர் என்கிற சிவசக்தி கோலத்தில் இருக்க வேண்டி சதுரகிரிக்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து அபிஷேகத்திற்கு வரவழைத்த ஆகாய கங்கையாகும்.

இப்புண்ணிய தீர்த்ததில் நீராடினால், எந்தப் பாவமும் நீங்கி முக்தி கிடைக்கும்.

இது தவிர, சதுரகிரியில் பார்வதி தேவியின் பணிப்பெண்களான சப்த கன்னியர்கள் தாங்கள் நீராடுவதற்கு உண்டாக்கிய 'திருமஞ்சனப் பொய்கை' உண்டு.

காலாங்கிநாதரால் உண்டாக்கப்பட்ட 'பிரம்மதீர்த்தம்' ஒன்று சதுரகிரி மலைக்
காவலராகிய கருப்பணசுவாமி சன்னதி முன்பாக இருக்கிறது. இது தவிர கோரக்கர், இராமதேவர், போகர் முதலிய மகரிஷிகளால் உண்டாக்கப்பட்ட 'பொய்கைத் தீர்த்தம்'', ''பசுக்கிடைத் தீர்த்தம்'', 'குளிராட்டித் தீர்த்தம்' போன்ற அனேக தீர்த்தங்கள் சதுரகிரி மலையில் உள்ளன.மகாலிங்கம் கோயிலிலிருந்து சாப்டூர் செல்லும் வழியில் உள்ள குளிராட்டி பொய்கையில் நீர் வற்றாது. இதில் குளித்தால் கிரக தோஷம் விலகும் என்பது நம்பிக்கை.

மகரிஷிகளும், சித்தர்களும் இன்றும் அருவுருவாக வாழ்ந்தும் அருள் வழங்கும் வண்ணம் சதுரகியில் வீற்றிருக்கிறார்கள்.

பொதுவாகவே மலைகளின் மேல், மனிதர்களுக்கு ஆயுளும், ஆரோக்கியமும் தரும் அற்புதமான பல மூலிகைகளும், மருத்துவ குணம் நிறைந்த மரம் செடி கொடிகள் யாவும் இருக்கின்றன. இவைகளைத் தழுவி வரும் காற்று நம் மீதுபட்டவுடன் உடலில் உள்ள நோய்கள் தீர்கின்றன.

அபூர்வ மூலிகைகள் :

இங்கே கிடைக்கும் பல அற்புத மூலிகைகளில் முறிந்த எலும்பை கூடவைக்கும் மூலிகை இலை கூட இங்கே உள்ளது . முறிந்த எலும்புகளை ஒன்று கூட்டி, இந்த மூலிகை இலையை வைத்துக் கட்டினால் அதிசயத்தக்க வகையில் எலும்பு கூடும்.

பூமியில் எங்கும் காணக் கிடைக்காத ஜோதி விருட்சமும், சாயா விருட்சம் போன்ற அதி அற்புதமான மரங்கள், மூலிகைகள், இலைகள் இம்மலையில் மேல் உள்ளன. இறவாமை அளிக்கக்கூடிய கருநெல்லி போன்ற அரிய கனிவகைகள் இருக்கின்றன.

தவிர கோரக்க முனிவரால் 'உதகம்' என்று குறிப்பிடப்படும் உதகநீர் சுனையும் உண்டு. மருத்துவ குனம் கொண்ட மரம், செடிகொடிகளின் மேல் பட்டு இறங்கி வரும் தண்ணீர் தேங்கியசுனைகள் இருக்கிறது.

இந்தச் சுனையில் உள்ள நீருக்குத் தான் 'உதகம்' என்று பெயர். பார்ப்பதற்கு குழம்பிய சேற்று நீர்போல் காணப்படும். இந்த உதகநீர் மருத்துவ குணங்களைக் கொண்டது. இதுபோன்ற நீரை நாம் பருகிவிட முடியாது.

விபரங்கள் அறிந்தவர்க்ளின் மூலமும், துணையோடு அந்நீரை மருந்தாக
பயன்படுத்த வேண்டும்.

சதுரகிரி மலையில் தபசு குகைக்கு அருகில் கற்கண்டு மலைக்குக்கீழ் அடிவாரத்தில் சுணங்க விருட்சம் என்னும் மரம் உள்ளது.

இந்த மரத்தின் காய் நாய்க்குட்டி போலிருக்கும். அந்தக் காய் கனிந்து விழும்போது நாய்க்குட்டி குரைப்பதைப் போல் இருக்கும். விழுந்த கனி 10 வினாடிக்குப் பிறகுமறுபடியும் அம்மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்.

அதேபோல் 'ஏர் அழிஞ்ச மரம்' என்றொரு மரம் உண்டு.

இந்த மரத்தில் காய்க்கும் காய் முற்றியவுடன் கீழே விழுந்து விடும். விழுந்த காய் காய்ந்து அதன் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில் போய் ஒட்டிக்கொள்ளும். இடையில் மழை, காற்றினால் மரத்தை விட்டு தள்ளிப்போய் இருந்தாலும் மேல் தோல் உரிந்தவுடன் மீண்டும் மரத்தில்
வந்து ஒட்டிக்கொள்ளும்.

இந்த 'ஏர் அழிஞ்ச மரத்தின்' கொட்டைகளை எடுத்து எண்ணையில ஊறவைத்து அதன் மூலம் கிடைக்கும் மையை உபயோகித்து வசியம் செய்வது ஒரு வகை.

சதுரகிரியில் நந்தீஸ்வரர் வனத்தில் கனையெருமை விருட்சம் என்றொரு மரமுண்டு. அம்மரத்தினடியில் யாராவது ஆட்கள் போய் நின்றால் அம்மரம் எருமை போல் கனைக்கும். அம்மரத்தை வெட்டினால், குத்தினால் பால் வரும்.

இதேபோல் மற்றொரு விருட்சம் மரமும் உண்டு. இந்தவிருட்சம் நள்ளிரவில் கழுதைப் போல் கத்தும். வெட்டினால் பால் கொட்டும். நவபாஷண சேர்க்கையில் இந்த விருட்சக மரத்தின் பாலும் முக்கியமான சேர்க்கையாகும்.

இவை எல்லாவற்றையும் விட தூக்கி சாப்பிடும் விஷயம் ஒன்று உள்ளது. மலையில் மிக அடர்ந்த பகுதியில் - " மதி மயக்கி வனம்" என்ற பகுதி உள்ளது. இங்கே உள்ளே சென்றவர்கள் , மதியை மயக்கி அவர்கள் வெளியே வரவே முடியாது என்று கூறுகின்றனர். நான் கேள்விப்பட்ட வரை , எங்கள் அருகில் இருக்கும் கிராமத்துக் காரர் ஒருவர் வழி தவறி உள்ளே சென்று மாட்டிக்கொண்டு விட்டார். "மகாலிங்கம் காப்பாத்து, காப்பாத்து" என்று மூன்று நாட்கள் கதறி, ஒரு வழியாக அந்த வனத்திலிருந்து வெளியே வந்து விட்டார். அடர்ந்த காடு, நிறைய பூச்செடிகள் இருந்தது. எதுவும் கோவில் கூட இல்லை. ஆட்களே யாரும் இல்லை. பசியே தெரியவில்லை. வெளியே வந்தது ஆண்டவன் அருள் என்று, இன்றும் அவர் திரும்ப திரும்ப புலம்பிக் கொண்டே இருக்கிறார்.

இன்றும் அமாவாசை, பௌர்ணமி தினங்களில் - சித்தர்கள், ரிஷிகள் - மகாலிங்க பூஜை செய்ய வருகின்றனர். கூட்டம் கூட்டமாக நட்சத்திரங்கள் மலைப்பகுதிகளில் விழுகின்றன. வீடியோ காமிராக்களில் அதை நிறைய பகதர்கள் பதிவு செய்து இருக்கின்றனர். ஏற்கனவே நாம் " கட்டை விரல் அளவில் காட்சி தந்த சித்தர் பற்றிய பதிவை வாசகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளோம். இவை அத்தனையும் சர்வ நிஜம். இறை நம்பிக்கை உள்ள பக்தர்கள் , வாழ்வில் ஒரு முறையேனும் இந்த மகாலிங்கத்தையும் , சந்தன மகா லிங்கத்தையும் - மனமுருக பூஜித்து வழிபட்டு வாருங்கள். நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வல்லமையை அந்த சிவம் உங்களுக்கு அளிக்கும்.

உங்கள் தேடல் , பக்தி உண்மை எனில் - நீங்கள் மனதார நினைத்து வழிபாடு செய்யும் சித்தர் தரிசனம் உங்களுக்கு சதுரகிரியில் நிச்சயம் கைகூடும். இதை நிறைய பக்தர்கள் அனுபவித்து இருப்பதால் , இப்போதெல்லாம் சதுரகிரியில் கூடும் கூட்டத்திற்கு குறைவில்லை..

சதுரகிரி மலை - ஒரு ஆன்மிக உலா

சாதாரண மலைகளைப் போலல்ல இது. வீரியம் நிறைந்த வினோதமான மலை. கணக்கற்ற இரகசியங்களைத் தன்னுள்ளே பொதித்துக் கொண்டு அமைதியாய்க் காணப்படும் அபூர்வ மலை.

சித்தர்களின் இராஜ்ஜியமாகவும், அபாயகரமான காட்டுவாழ் விலங்கினங்களின் புகலிடமாகவும், அபூர்வ சக்திகள் படைத்த மூலிகைகளின் வாழ்விடமாகவும் விளங்கும் இம்மலை, பரம்பொருள் சிவபரமாத்மாவின் அருட்கடாட்சம் பெற்றபடியால் சிவன்மலை என்றும் மகாலிங்க மலை என்றும் அழைக்கப்படுகிறது.

சிவனும் பார்வதி தேவியும் இங்கே நிரந்தரமாகத் தங்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதாக சித்தர்களுக்கு வாக்குத் தந்திருப்பதால் இவ்விடம் தென்கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.

இம்மலை அஷ்டமாசித்திகள் பெற்ற பதினெட்டு சித்தர்களின் தலைமையிடமாகவும், மற்றும் பல சித்தர்கள் கூடி தத்தம் ராய்ச்சிகளை விவாதிக்கும் இடமாகவும் அறியப்படுகிறது. இம்மலையிலுள்ள நூற்றுக்கணக்கான குகைகளில் தங்கியிருந்து சிவனை வணங்கி வழிபட்டு வந்ததுடன் மக்களின் நோய் தீர்க்கும், துன்பங்களைக் களையும் மருந்துகளைக் கண்டுபிடிக்கும் ராய்ச்சிகளிலும் சித்தர்கள் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சித்தர்பூமியாம் சதுரகிரியில் எண்ணற்ற மூலிகைகள் நிறைந்த வனம் உள்ளது. இன்றும் இம்மலையில் சித்தர் பெருமக்கள் அரூபமாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. சித்தர்களின் அதிர்வலைகள் மலையெங்கும் நிறைந்திருப்பதால் அதில் சிறிதாவது தமது உடலில் ஒட்டட்டும் என பக்தர்கள் விரும்பி இங்கு வருகின்றனர்


Raghunathan Iyer

unread,
Jan 20, 2016, 5:20:51 AM1/20/16
to arunalaya

 
இராஜபாளையம் 360's photo.

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தங்க விமானம்

 


Raghunathan Iyer

unread,
Jan 21, 2016, 2:57:45 AM1/21/16
to arunalaya

 
1 hr · 
 

‪#‎கருட_புராணம்‬

‪#‎தவறு_செய்தால்_நமக்கு_ஆண்டவன்‬
‪#‎கொடுக்கும்_தண்டனைகள்_இதோ‬

‪#‎தன்டனைகளின்_விவரம்‬
===============================
‪#‎தாமிஸிர_நரகம்‬:

பிறருக்குச் சொந்தமான மற்றவர் மனைவியை விரும்புவதும் அபகரிப்பதும் பாவச்செயலாகும்.

அதே போல் பிறரது குழந்தையை அபகரிப்பது மகாபாவமாகும்.
பிறரது பொருளை ஏமாற்றி அபகரிப்பது, நமக்கு தீராத துன்பத்தைத் தரும்.

இதற்குத் தண்டனையாக, நரகத்தில் எமகிங்கரர்கள் முள்ளாலான கட்டைகளாலும் கதைகளாலும் நையப் புடைப்பார்கள்.
===========================

‪#‎அநித்தாமிஸ்ர_நரகம்‬:

கணவனும் மனைவியும் சேர்ந்து மனமொத்து வாழ்வது அவசியம். அதை விடுத்து ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் தவறாகும்.

கணவன் மனைவியை வஞ்சித்தலும் மனைவி கணவனை வஞ்சித்தலும் பாவச்செயலாகும்.

இத்தகையவர்கள் இந்த நரகத்தில் உழன்று, கண்கள் தெரியாத நிலையில் இருள்சூழ மூர்ச்சையாகி விழுந்து தவிக்க வேண்டியது வரும்.
===============================
‪#‎ரௌரவ_நரகம்‬:

பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது,

பிரிப்பது, அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும்.

இதற்குத் தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித் துன்புறுத்துவார்கள்.
===========================
‪#‎மகா_ரௌரவ_நரகம்‬:

மிகவும் கொடூரமாக பிறர் குடும்பத்தை வதைத்தவர்கள், பொருளுக்காக குடும்பங்களை நாசம் செய்தவர்கள் அடையும் நரகம் மகா ரௌரவமாகும்.

இங்கு குரு என்ற சொல்லக்கூடிய, பார்ப்பதற்குக் கோரமான மிருகம் காணப்படும்.

இவை பாவிகளைச் சூழ்ந்து,முட்டி மோதி பலவகையிலும் ரணகளப்படுத்தி துன்புறுத்தும்.
==============================
‪#‎கும்பிபாகம்‬:

வாயில்லா விலங்குகளை , உயிர்களை வதைத்தும் பலவிதங்களில் கொடுமைப்படுத்தும் பாவிகள் அடையும் நரகம் இது.

எரியும் அடுப்பில் வைக்கப்பட்டுள்ள எண்ணெய்க்கொப்பறையில் போட்டு, எமதூதர்கள் பாவிகளைத் துன்புறுத்துவார்கள்.
===============================
‪#‎காலகுத்திரம்‬:

பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும் நரகம் இதுவாகும்.

இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள் வதைக்கபடுவது உறுதி.
==============================
‪#‎அசிபத்திரம்‬:

தெய்வ நிந்தனை செய்தவர்களும் தர்மநெறியைவிட்டு அதர்ம நெறியைப் பின்பற்றியவர்களும் அடையும் நரகம் இது.

இங்கு பாவிகள் பூதங்களால் துன்புறுத்தப்பட்டு அவதிப்படுவார்கள்.

இனம் புரியாத ஒரு பயம் உண்டாகும்.
================================
‪#‎பன்றி_முகம்‬:

குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும்.

நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும்.

இந்த நரகத்தில், பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும்.

அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள் அவதிப்படுவார்கள்.
===============================
‪#‎அந்தகூபம்‬:

உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது.

கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும். விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

==============================

‪#‎அக்னிகுண்டம்‬:

பிறருக்கு உரிமையான பொருள்களை, தனது வலிமையாலும் செல்வாக்காலும் அபகரித்து வாழ்ந்த பாவிகள், பலாத்காரமாக தனது காரியங்களை நிறைவேற்றிக்கொள்பவர்கள் இந்த நரகத்தை அடைவார்கள்.

இங்கு பாவிகள் ஒரு நீண்ட தடியில் மிருகத்தைப்போல் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் எரியும் அக்னிகுண்டத்தில் வாட்டி எடுக்கப்படுவார்கள்.
===============================

‪#‎வஜ்ரகண்டகம்‬:

சேரக்கூடாத ஆணையோ பெண்ணையோ கூடித்தழுவி மகிழும் காமவெறியர்கள் அடையும் நரகம் வஜ்ர கண்டகம்.

நெருப்பால் செய்யப்பட்ட பதுமைகளைக் கட்டித்தழுவ ஜீவன்கள் நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

=============================
‪#‎கிருமிபோஜனம்‬:

தான் மட்டும் உண்டு, பிறரது உழைப்பைச் சுரண்டிப்பிழைத்த பாவிகள் இங்குதான் வரவேண்டும்.

பிறவற்றைத் துளைத்துச் செல்லும் இயல்புடையது கிருமிகள். இந்த நரகத்தில், பாவிகளைப் பலவிதமான கிருமிகள் கடித்துத் துளையிட்டு துன்புறுத்தும்.
============================

‪#‎சான்மலி‬:

நன்மை, தீமை, பாபம் ஆகியவற்றைப் பாராமல், உறவுமுறையைக்கூடப் பாராமல் யாருடனாவது எப்படியாவது கூடி மகிழும் காதகர்கள் அடையும் நரகம் இது.

இங்கு இத்தகைய பாவிகளை முள்ளாலான தடிகளாலும் முட்செடிகளாலும் எமகிங்கரர்கள் துன்புறுத்துவார்கள்.
==============================

‪#‎வைதரணி‬:

நல்வழிகளில் செல்லாமல் தர்மத்துக்குப் புறம்பாக நடந்தவர்கள் அடையும் நரகம் இது.

வைதரணி என்பது நதியல்ல. இங்கு ரத்தம் சீழும் காணப்படும். சிறுநீரும் மலம் கலந்திருக்கும். கொடிய பிராணிகள் இருக்கும். பாவிகள் இந்த நதியில் விழுந்து துன்பப்படுவார்கள்.

===============================
‪#‎பூபோதம்‬:

சிறிதும் வெட்கமின்றி இழிவான பெண்களுடன் கூடி, ஒழுக்கக்குறைவாக நடந்து, எந்த லட்சியம் இன்றி வாழ்ந்தவன் அடையும் நரகம் இது.

இங்கு ஜீவனை விஷமுடைய பூச்சிகள், பிராணிகள் கடிக்கும்

==========================
‪#‎பிராணி_ரோதம்‬:

பிராணிகளைக் கொடுமைப்படுத்தினால் அடையும் நரகம் இது.

இங்கு கூர்மையான பாணங்களை ஜீவன்களின் மீது எய்து துன்புறுத்துவார்கள்.

============================
‪#‎விசஸனம்‬:

பசுக்களைக் கொடுமை செய்பவர்கள் அடையும் நரகம் இது.

இங்கு ஜீவனுக்கு எமகிங்கரர்கள் சவுக்கடி கொடுத்துத் துன்புறுத்துவார்கள்.
============================

‪#‎லாலா_பக்ஷம்‬:

மனைவியைக் கொடுமைப்படுத்தி முறையற்ற மோக இச்சைக்கு ஆளாக்கிக் கெடுக்கும் கொடியவர்கள் அடையும் நரகம் இது.

இங்கு ஜீவனும் அதே முறையில் வதைபடும்.
=============================
‪#‎சாரமேயாதனம்‬:

வீடுகளை தீவைப்பது, சூறையாடுவது, உயிர்களை வதைப்பது, விஷத்தைக் கொடுத்துக் கொல்லுதல், மக்களைக் கொன்றுகுவித்தல் போன்ற கொடிய பாவங்களைச் செய்தவர்கள் அடையும் நரகம் இது.

இங்கு விசித்திரமான கொடிய மிருகங்கள் ஜீவனை வதைக்கும்.
===============================
‪#‎அவீசி‬:

பொய்சாட்சி சொன்னால் நீர்நிலைகளில் ஜீவன்களைத் தூக்கிவீசி அழுத்துவார்கள்



Raghunathan Iyer

unread,
Jan 21, 2016, 7:17:07 AM1/21/16
to arunalaya

என்னங்க..! உங்க அம்மாவை சேர்த்த 'முதியோர் இல்லத்தில்' இருந்து கடிதம் வந்திருக்கு . "உங்களை நாளைக்கு அங்க வரச் சொல்றாங்க"...!!!என்ற மனைவியை திரும்பிப் பார்த்தான் அவன்
ஏன் என்னவாம் ...? இப்ப தானே போன மாசம் போய் பார்த்துட்டு வந்தேன் என்றவனிடம்
"இந்தாங்க கடிதத்தை வாசித்துவிட்டு போய் என்னனுதான் பாத்துட்டு வாங்க"...? நீங்க பாட்டுக்கும் இது 'தான் சாக்குன்னு' இப்பவே கூட்டிகிட்டு வந்துடாதீங்க...! இங்க ஏற்கனவே ஏகப்பட்ட செலவு இருக்கு..! இதுக்கு நடுவுலே அவங்களை வேற பாக்க முடியாது. 'பொண்ணு படிப்புச்' செலவுக்கே இங்க 'முழி' பிதுங்குது, இதுலே உங்க அம்மா 'வைத்திய செலவு' வேற செய்யமுடியாது பார்த்துக்கங்க'...என்றாள்
சரி... சரி... விடு நான் பார்த்துக்கறேன் என்ற அவன் மனதிலும் அம்மாவை பற்றிய இனம் புரியாத பயமும், அதே நேரம் மனைவி மீது கோபம் கோபமாய் வந்தது.
மறுநாள் காலை அம்மாவை பார்க்க'முதியோர் இல்லம்' சென்ற சந்துரு அங்கிருந்த மேடத்திடம் விபரம் கேட்க,
அவங்க அம்மா கொடுக்க சொன்னதாக அவர்கள் அவன் கையில் 'ஒரு கவரை' கொடுத்தாங்க.
அதை பிரித்த பார்த்த போது அவன் பெயருக்கு '2 லட்ச ரூபாய்க்கான டி.டி யும்', ஒரு கடிதமும் இருந்தது. படித்த அவன் அதிர்ந்து போனான் .
அதில்
அன்பு மகனுக்கு,
உன் தந்தை இறந்தபோது 'உன்னை நான் சுமையாக' அப்போது நினைக்கவில்லை.
இப்போதும் உனக்கு 'நான் சுமையாக' இருக்க விரும்பவில்லை.
உன் மனைவி எதிர்பார்ப்பது போல் என்னால் 'உடல் உழைப்பை தர முடியவில்லை.
நீ கஷ்ட படுவதை பார்க்க என்னால் முடியவில்லை.
இந்த நிலையில் என்னால் என்ன செய்யமுடியும் ?
ஆனாலும் உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று ஏங்கிக்கொண்டிருந்தபோது செல்வந்தர் ஒருவருக்கு அவசரமாக கிட்னி தேவைப்பட்டது. அதனால் எனது "கிட்னீயை" விற்று அந்தப்பணத்தை உனக்கு கொடுத்திருக்கிறேன்.
கடனையெல்லாம் அடைத்து விட்டு என் 'பேத்தியை' நன்கு படிக்க வை..!.அவள் நாளை 'உன்னை உன் மனைவியை' காப்பாத்துவா.! பாத்துக்க எல்லாத்தையும்,
நீங்க எல்லாம் 'நல்லாருக்க' நான் அந்த கடவுள் கிட்ட வேண்டிகிறேன்...! நான் போகிறேன்...? அன்பு அம்மா ...!
அவன் அப்படியே 'இடிந்து' போய் விட்டான். இன்றுவரை
'மனதிற்குள் சொல்லி'... சொல்லி... 'அழுது' கொண்டுதான் இருக்கிறான்...!
நண்பா...! இது ஒரு "கதையல்ல நிஜம்"...!
நீதி: 'அன்பு' என்பது 'அன்னையிடம்' மட்டுமே எல்லா காலங்களிலும் 'அமுதமாய்' கிடைக்கும். '
"தாயின் அன்பை யாருக்காகவும் தள்ளி வைக்காதீர்கள்"...!


Raghunathan Iyer

unread,
Jan 21, 2016, 7:18:52 AM1/21/16
to arunalaya


இல்லறம் நடத்துவது எப்படி?

இதென்ன கேள்வி என்று நீங்கள் நினைப்பது தெரிகின்றது. இப்டித்தான் பல விஷயங்களை நாம் அறிந்ததாக நினைத்துக்கொண்டு இருப்போம். ஆனால் அவைகளில் மேலோட்டமாக ஏதோ சில விஷயங்கள்தான் தெரிந்திருப்போம்.

இல்லறம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்றுதான் பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலுள்ள பல நுணுக்கங்களை ஆராய்ந்தால்தான் இல்லறத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என்று மலைப்பாக இருக்கும்.

தன் சந்ததியை தொடரவேண்டும் என்று ஓரணு ஜீவராசிகளிலிருந்து மனிதன் வரை ஆசைப்படுகிறான். இது இயற்கையில் ஏற்பட்ட ஒரு உந்துதல். மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகள் அனைத்தும் இந்த ஒரு நோக்கத்திற்காகவே உயிர் வாழ்கின்றன. ஆனால் மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று அனைத்து உயிர்களிலும் மேம்பட்டவனாக இருக்கிறான். அவனுக்கு பகுத்தறியும் திறன் இருப்பதால் பல விதங்களில் தன்னை உயர்த்திக் கொண்டுள்ளான்.

அப்படி வாழும் மனிதன் மற்ற ஜீவன்களிடமிருந்து வேறுபட்டு பல சமூகக் கோட்பாடுகளை தனக்காகவும் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகவும் ஏற்படுத்தியுள்ளான். இந்தக் கோட்பாடுகள் ஒரு நாளில் ஏற்பட்டவை அல்ல. பல நூற்றாண்டு காலமாக மனித சமுதாயம் ஏற்படுத்தியுள்ள கோட்பாடுகள். இந்தக் கோட்பாடுகளின்படி வாழ்பவனே மனிதன் எனப்படுகிறான். மற்றவர்கள் மனித உருவில் வாழ்பவர்கள் மட்டுமே.

இல்லறம் இனிமையாக அமைய 10 யோசனைகள் கொடுத்திருக்கிறேன். தேவையுள்ளவர்கள் அனுசரிக்கலாம்.

1. பொறுப்பை உணருங்கள். குடும்பம் என்று ஆகிவிட்டால் குடும்பத்தலைவன் என்கிற பொறுப்பு உங்களுடையது. குடும்பத்திலுள்ள அனைவரின் சுக துக்கங்களும் உங்களுடையதே.
2. ஒரு நல்ல தொழில் வேண்டும். வாழ்வதற்கு பொருளாதாரம் அவசியம் தேவை. அது இல்லாவிட்டால் உங்களுக்கு குடும்பம் தேவையில்லை.
3. சேமிப்பு மிக மிக அவசியம். உங்கள் வருமானத்தில் பாதியில்தான் உங்கள் குடும்ப செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். மீதியை சேமியுங்கள். அதில் ஒரு பாதி எதிர்பாராத செலவுகளுக்கு உதவும். மீதி பாதி நீண்ட கால சேமிப்பாக இருக்கும்.
4. செலவினங்களுக்கு ஒரு திட்டம் போடுங்கள். அப்போதுதான் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். சிக்கனம்தான் செழிப்புக்கு வழி.
5. ஆடம்பரத்திற்கு ஆசைப்படாதீர்கள். உணவு விடுதிகளில் சாப்பிடுவது வீண் செலவு தவிர சுகாதாரக் கேடும் கூட.
6. எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள். உங்கள் எதிர்காலத்தைப் பற்றி அவர்களிடம் விவாதியுங்கள்.
7. பிரச்சினைகளை வளர விடாதீர்கள். அவ்வப்போது அவைகளுக்குத் தீர்வு கண்டு பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள்.
8. உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, நல்ல ஒழுக்கம் ஆகியவைகளைக் கற்றுக்கொடுப்பது உங்கள் கையில்தான் உள்ளது.
9. ஆணானாலும் பெண்ணானாலும் காலா காலத்தில் அவர்களின் கல்யாணங்களை செய்து வைப்பது பெற்றோர்களின் கடமை. இதை எப்போதும் மறக்கக்கூடாது.
10. தன் கடைசி காலத்தை சிரமமில்லாமல் கழிக்கப் போதுமான ஆதாரத்தை தேடிக்கொள்ள வேண்டும்.

Raghunathan Iyer

unread,
Jan 21, 2016, 7:31:38 AM1/21/16
to arunalaya

 
கிருஷ்ணதாஸ் வெங்கடேஸ்வரன்'s photo.
 

இவ்வருட தை அமாவாஸ்யை அபூர்வ அமாவாஸ்யை.27 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்.இதற்கு முன் 6/02/1989 வந்தது. இந்த அமாவாஸ்யை அன்று தம் பித்ருக்களுக்கு தர்பணம் செய்தால் கோடி ஸூர்ய க்ரஹண பலத்தை தரும்...உனை வரும் தர்பணம் செய்து பலன் பெறபிராத்திக்கரொம்.நண்பர்களூக்கு ஷேர் செய்யவும்.

 

Raghunathan Iyer

unread,
Jan 21, 2016, 7:54:07 AM1/21/16
to arunalaya


Poongotai Maha's photo.
 

பிப்ரவரி 22 மாகாமகம்

Raghunathan Iyer

unread,
Jan 23, 2016, 1:32:52 AM1/23/16
to arunalaya

மாமா, கனபாடிகள் கனபாடிகள் என நிறைய கேள்விப்படுகிறேன். அப்படி என்றால் என்னவென்று கொஞ்சமாவது தெரிந்துக்கொள்ள ரொம்ப நாளாக ஆசை...”

கனபாடிகள் என்ற பதத்திற்கு விளக்கம் தெரிந்துக் கொள்ளுவதற்கு முன்பு வேத லக்ஷணத்தை பற்றி சிறிது பரிச்சயம் இருக்கவேண்டும். எனது ‘வேதமும் பண்பாடும்’ நுலிலும் விவரங்கள் காணலாம்.

வேத லக்ஷணம்
வர்ணம் (எழுத்து), ஸ்வரம், மாத்ராகாரம் முதலியவைகளை பிசகில்லாமல் வேதத்தை அத்யயனம் செய்ய வேண்டும். இவைகளை நிர்ணயம் செய்யும் ஒரு சாஸ்திரமுண்டு. ப்ராதிசாக்யம் என்பது அந்த சாஸ்திரத்தின் பெயராகும்.

சாதாரணமாக நமது அன்றாட லௌகிக வாழ்க்கையிலேயே அபசப்தமாக பேசக்கூடாது என்று நாம் நினைப்போம் அல்லவா! அப்படி இருக்கும்போது அக்ஷர, ஸ்வர சுத்தம் இல்லாமல் வேதத்தைச் சொல்லலாமா? அசப்தம் வந்தால் தோஷம்தான்.

வேதம் ஸ்திரப்படுவதற்கு வேதத்தை விக்ருதி செய்து அப்யாஸம் பண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். (விக்ருதி என்றால் திருப்பி மாற்றி ஸ்வர, அக்ஷர சுத்தத்துடன் விதிப்படி பாராயணம் செய்வது). விக்ருதிவல்லீ என்ற க்ரந்தம் எட்டுவிதமான வேத விக்ருதிகளை எடுத்துரைக்கின்றது.

பொதுவாக க்ரமாந்தம் வரையில் வேதம் நேராகத்தான் பாராயணம் செய்யப்படுகின்றது. அதற்கு பிறகுதான் விக்ருதம் வருகின்றது.

இப்படி கன பர்யந்தம் அப்யாஸம் ஆதிகாலத்திலிருந்தே செய்து வந்ததால், வேதத்தில் ஒரு அக்ஷரம் கூட ஒருவர் மாற்றிவிடவோ, இடைச்செறுகல் செய்யவோ சம்பவிக்கவில்லை. இவ்வாறு மூல ஸம்ஹிதையை காலங் காலமாக ரக்ஷித்து வந்துள்ளார்கள்.

இவற்றில் க்ரமம், மற்றும் கன பாடம் பற்றி சுறுக்கமாக விளக்கம் இதோ:

1. க்ரமம்: வேத சம்ஹிதையில் இரண்டு பதங்களை எடுதுக்கொண்டு அந்த இரண்டு பதங்களை சேர்க்குமிடம் சம்ஹிதை போலவும் (அதாவது நேராக) இரண்டாவது பதத்தின் முடிவு பதம் போலவும் சொல்லவேண்டும். அதாவது 1-2, 2-3, 3-4, 4-5, என இப்படியே வேதம் முழுவதும் க்ரமத்தில் பாராயணம் செய்யவேண்டும். வேதம் முழுக்க இம்மாதிரி அத்யயனம செய்தவர்களை க்ரமபாடி என்று அழைப்பார்கள்.

2. கனம்: இது மிகவும் கடினம் ஆகும். நிறைய அப்யாசம் தேவை. இந்த கடினமான பாடத்தை படித்தவர்களைத்தான் கனபாடிகள் என அழைப்பார்கள். இதில் சந்தி செய்து சொல்லவேண்டும். அதவது இங்கு தனிப் பதங்களே வராது, வாக்யம் முதல், கடசி பதங்களைத் தவிர மற்ற அனைத்து பதங்களும் முன்னும் பின்னுமாக 13 தடவை வரும்.இந்த முறையில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களைத்தான் கனபாடிகள் என அழைப்பார்கள். இம்மாதிரி, உதாரணத்திர்கு யஜுர் வேதம் முழுவதும் கன ரூபமாக பாராயனம் செய்யவேண்டுமானால் கிட்டத்தட்ட 45 நாட்கள் ஆகும்.

கனம் வரை வேதத்தை அத்யயனம் செய்வதற்கு த்ருடமான ஸங்கல்பமும், விடாப்பிடியும் இருந்தால்தான் சாத்தியமாகும். கனம் வரை பூர்த்தி செய்ய ஒருவருக்கு பல வருடங்கள் ஆகும். சிறிய வயதிலிருந்தே வேதாத்யயனம் ஆரம்பிக்க வேண்டும். தற்போது யஜுர் வேதத்தில் மற்றும் ரிக் வேதத்தில் கனத்தை முடித்து வெளிவரும் வித்யார்த்திகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்ற விஷயம் நம் மனதிற்கு இதமளிக்கின்றது. இது ஒரு நல்ல அறிகுறி.

இது தொடர்பான மற்றும் சில விஷயங்கள்.

ஆறு அங்கங்கள் : 
சிக்ஷை, கல்பம், வ்யாகரணம், நிருக்தம், சந்தஸ், ஜ்யோதிஷம், என்று வேதமொழிக்கு ஆறு அங்கங்கள் சொல்லப்படுகின்றன. சிக்ஷை : ஸ்வரம், அக்ஷரம், மாத்ரை முதலியவைகளை ஆதாரமாகக் கொண்டு உச்சரிப்புகளை ஸ்திரப்
படுத்துவதே சிக்ஷை.

இவைகளை பற்றி முழுமையாக தெரிந்துக் கொள்வதற்கே பல ஆண்டுகள் பிடிக்கும். பிறகு வேத பாஷ்யங்களை படிக்க வேண்டும். புரிந்து கொள்ள வேண்டும்.


Raghunathan Iyer

unread,
Jan 23, 2016, 3:09:13 AM1/23/16
to arunalaya

வாசியோகம்
நமது இடது நாசி சந்திரகலை. அதில் வரும்
காற்று குளிர்ச்சியாக இருக்கும்.வலது நாசி
சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக
இருக்கும். இரண்டு நாசிகளிலும் மூச்சுக்
காற்று வந்தால் சுழிமுனை என்பர்.பொதுவாக
மழைக் காலங்களில் இயற்கையாகவே
சூரியகலையில் ஓடும். அதிக வெயில்
அடிக்கும் போது சந்திரகலையில் ஓடும். இது
இயற்கையாகவே நடக்கும் அற்புதமாகும்.
ஏனெனில் உடலில் சூடும் குளிர்ச்சியும்
சமநிலையில் இருக்க வேண்டும்.இதில்
எந்த குறைபாடு நேர்ந்தாலும் நமது உடலில்
பல உபாதைகள் ஏற்படும்.
ஒருவருக்கு
சூரியகலையில் சுவாசம் தொடர்ந்து மூன்று
நாட்கள் ஓடினால் ஒரு வருடத்தில் மரணம்
சம்பவிக்கும்.
ஒரே நாசியில் பத்து நாட்கள்
தொடர்ந்து ஓடினால் மூன்று மாதங்களில்
மரணம் சம்பவிக்கும். 
மூச்சுப் பயிற்சி மூலம்
சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால்
ஆயுள் கூடும்.
சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க
ஆயுள் குறையும். சுவாசத்தை அடக்குவதால்
ஆமைகளும் பாம்புகளும் அதிக நாட்கள்
உயிருடன் வாழ்கின்றன. 
நாம் நடக்கும் போது
16 அங்குலமும், அமர்ந்திருக்கும் போது 12
அங்குலமும், ஓடும் போது 25 அங்குலமும்,
உறங்கும் போது 36 அங்குலமும், உடல்உறவு
கொள்ளும் போது 64 அங்குலமும் சுவாசம்
நடைபெறுகிறது.
சுவாசம் 11 அங்குலமாக குறைந்தால் உலக
இச்சை நீங்கும்.
10 அங்குலமாக குறைந்தால் ஞானம்

உண்டாகும்.
9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான்.
8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி
காண்பான்.
7 அங்குலமாக குறைந்தால் ஆறு
சாஸ்திரங்கள் அறிவான். 6அங்குலமாக
குறைந்தால் ஆகாய நிலை அறிவான்.
5 அங்குலமாக குறைந்தால் காய சித்து
உண்டாகும்
4 அங்குலமாக குறைந்தால் அட்டமா சித்து

உண்டாகும்.
3 அங்குலமாக குறைந்தால் நவ கண்ட
சஞ்சாரம் உண்டாகும்.
2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு
கூடுபாய்தல் சித்திக்கும்.
1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம்,
உதித்த இடத்தில் நிலைத்தல், சமாதி நிலை
அன்னபானம் நீங்கும்(சாப்பாடு,நீர்தேவைப்படாது)

Raghunathan Iyer

unread,
Jan 25, 2016, 12:30:51 AM1/25/16
to arunalaya



 

ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள் அவர்கள் மலர்ந்த முகத்துடன், ராமேச்வரத்தில் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதிகளுக்கே உரிய மரபு வழி உரிமைகளின்படி ஸ்ரீராமநாதஸ்வாமியைத் தன் திருக்கரங்களால் அர்ச்சித்து, கர்ப்பூர நீராஜனம் செய்து ரக்ஷை ஸமர்ப்பி்த்த பின்னர் பரம்பரை மஹாராஷ்ட்ர அந்தண அர்ச்சகர் உடன் வர, ப்ரதான யாக சாலையிலிருந்து வெளி வந்து, முகப்பிலிருக்கும் மேடையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்து.........

-0:18
1,561 Views
Siva Bgs
3 hrs · 

ராமேஸ்வரம் கும்பாபிஷேகம் - காணொளி ஆதாரம் - 2

ஸ்ரீஆசார்ய ஸ்வாமிகள் அவர்கள் மலர்ந்த முகத்துடன், ராமேச்வரத்தில் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதிகளுக்கே உரிய மரபு வழி உரிமைகளின்படி ஸ்ரீராமநாதஸ்வாமியைத் தன் திருக்கரங்களால் அர்ச்சித்து, கர்ப்பூர நீராஜனம் செய்து ரக்ஷை ஸமர்ப்பி்த்த பின்னர் பரம்பரை மஹாராஷ்ட்ர அந்தண அர்ச்சகர் உடன் வர, ப்ரதான யாக சாலையிலிருந்து வெளி வந்து, முகப்பிலிருக்கும் மேடையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆசனத்தில் அமர்ந்து, தன் கழுத்தை அலங்கரிக்கும் மலர் மாலையை லாவகமாகக் கழற்றித் தரும் காட்சி..

இவ்வரிய நிகழ்வின்போது தவத்திரு துழாவூர் ஆதீனகர்த்தர், தவத்திரு காமாட்சிபுரி ஆதீனகர்த்தர், ராமநாதபுரம் ஸம்ஸ்தான மன்னர் சேதுபதி குடும்பத்தினர், ராமேஸ்வரம் திருக்கோயில் திருப்பணி நகரத்தார் குடும்பத்தினர், அரசு அதிகாரிகள், உள்ளூர் மீனவ சமுதாயத் தலைவர்கள் மற்றும் பலர் யாகசாலையருகில் அமர்ந்துள்ளனர்..

ஆயிரம் பிறை கண்டு, * வடிவுறு திருமூப்படைந்த* பூஜ்யஸ்ரீ மஹாஸன்னிதானம் அவர்கள் தமது தற்போதைய உடல் நிலையையும் பொருட்படுத்தாமல், ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதீச்வரராகத் தமக்குரிய தலையாய கடமை எப்பாடுபட்டேனும் ராமேச்வரம் க்ஷேத்ரத்தில் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடத்திற்கு உரிய பாரம்பர்ய மரபு வழி உரிமைகளைத் தொடர்ந்து காப்பாற்றுதல் என்ற திருஉளக்குறிப்புடன் அதிசீக்ரத்தில் பல நூறு மைல்கள் சாலை வழியாகப் பயணித்து, ராமேஸ்வரத்திற்கு விஜயம்செய்து, மூன்று நாட்களிலும் அங்கு நடைபெற்ற திருக்கோயில் கும்பாபிஷேக நிகழ்வுகளில் கலந்து கொண்டார்கள்..

* * [ " வள மலி இளமை நீங்கி வடிவுறு மூப்பு வந்து 
தளர்வொடு சாய்ந்தும் அன்பு தம்பிரான் திறத்துச் சாயார் "

- திருநீலகண்ட நாயனார் புராணம்,சேக்கிழார் அருளிய பெரிய புராணம்

Raghunathan Iyer

unread,
Jan 25, 2016, 12:44:48 AM1/25/16
to arunalaya
Mahodaya Punyalkalam at Vedaranyam is on 8th February 2016 and Mahahamaha punyakalam on 22nd February at Kumbakonam.

Mahodhaya Maha Punniya Kalam

Our Motherland Bharatha Desam has a very proud heritage and culture. It has a lot of ancient temples, sadgurus, divya desams, and holy rivers. Every place here in this nation has rich spiritual significance where by people visit these Kshethrams, worship the Devathas, attain both material and spiritual benefits all the way till Moksha. We have seen and heard many of them in our own experiences.

The Vedas, Puranas, and all our ancient scriptures emphasize the importance of holy rivers such as Ganga, Yamuna, Saraswathi, Godhavari, Krishnaveni, Tungabadhra which has their own unique spiritual significance, has the power to gives us the immense punnya (meritorious deed), destroys our sins, cure our diseases, and ailing’s. We need to take bath in those sacred rivers and try to attain all the benefits and moksham.

There are many auspicious times. Out of those, ‘Arthodhaya Punniya Kaalam’ and ‘Mahodhaya Punniya Kaalam’ is a very rare happening and come once every several decades. ‘Mahodhaya Maha Punniya Kalam’ is a very rare happening and is considered an extremely auspicious day. It occurs this coming 25th Thai Amavasya, Manmadha Varusham (Feb. 8, 2016). ‘Mahodhaya Punniya Kaalam’ is a day when the following attributes align together in a single day:
Thithi - Amavasya
Nakshathiram - Thiruvonam
Yogam - Vyathi Patham
Month - Maagam
Vaaram - Soma (Monday)
The alignment of these above attributes is a very rare phenomenon. If the same set of attributes align on Sunday (Vaaram) it is called ‘Arthodhaya Maha Punniya Kalam’. The last occurrence happened several decades back so we can realize what a significant day this is.

During this auspicious time, one needs to do Snanam, Shradham, Dhanam, Tharpanam, Puja, and Vratham. Whoever takes bath in holy rivers during ‘Mahodhaya Punniya Kalam’ won’t have Garba Vasam (birth through uterus), Brahmahathi Dosham will be destroyed, gets rid of all sins, acquire wealth, will attain Indira Lokham as well as Mukthi.

One who offers ‘Pindam’ even of the size of a mustard to ancestors on this day will be peaceful and content till Surya and Chandra are there. Offering ‘Pindam’ (equivalent to ‘Vanni’ leaf) to Pithrus (ancestors) with Bhakthi and Shraddha will get rid of their sins, go to heaven and then proceed to Moksham.

One is called a ‘Sath Pathram’ if he observes Aachaaram, Thapas, Vedam, listening to Vedanta, Siva Puja, doing upanyasam on Puranas. We have to go above and beyond and give dhanam to people (Sath Pathram) with this quality. If we cannot find any Sath Pathram’s at that time we need to think about him in our minds, give our offerings through our mind and then physically offer those on a later date. One who does Snanam at this time will get rid of sins including thanks giving. One who does Snanam at this time will pierce through the Surya Mandalam and reach Brahma Lokham. We need to give Arghiyam (Water Oblation) at this time. Chant the sloka below and give Arghiyam:

“Dhiwakaraa Namaste Asthu Tejoraathe Jagadpadhe |
Athri Gothra Samuthpanna Lakshmi Devyaaha Sagodhara Argam Grahanaa Bhavannu Sudha Kumbha Namasthuthe
Vidhir Paadha Mahaa Yoginnu Mahaa Paadhaha Naadhasanaa Sahasthra Baaho Sarvaathmannu Irahanaagyam Namasthuthe
Thithi Nakshathira Vaaranam Adhishaa Parameswaraa Maasa Roopa Grahaa Naagyam Kaala Roopa Namasthuthe”

Offer food to fourteen (14) people and give Gho Matha (cow), Gruham (house) as Dhanam, based on what one can afford. There are few slokas for doing this as well:

“Nakshathraanaam Athipadhe Devaanaam Amruthapradhaa Thraagimaam Rogini Gaantha Kalaakesha Namasthuthe Dheena Naadha Jagan Naadha Kala Naadha Kirupaakara Thothipaadha Padma Yugale Bhakthi Rasthu Asalaanama Vyathipaadha Namasthe Asthu Soma Suriya Agni Sannibha Yathigaanathy Grutham Kinjithu Thadhu Akshayam Ihaasthume Arthinaam Kalpa Vrukesi Vaasudeva Janaardhanaa Maasalar Ruthu Ayana Kaalesaa Paabam Samayaa Mehare Sravarkeshu Jagannadha Jennarkkeshaa Thavaa Kosavaa Yanmaya Thattham Arthipyahaa Thatharkishyam Igaasthume”

Pray for Dhana Balam and then do Shradham and Tharpanam. All the above said Dhanams will yield rich dividends. Doing Snaanam in holy places such as Rameswaram will give us Maha Punniyam. Listening to this narration itself will get rid of our deadly sins.

Doing Snanams (head bath) in ‘Vedhanadhi’ also called as ‘Sannidhi Kadal’, 
in Vedaranyama Vedapureeswarar temple theertham inside the temple is called as ‘Manikarnikai Theertham’, ‘Rudrakodi Kadal Theertham’ located in the south bottom of the temple, and ‘Aadthi Sethu Kadal Theertham’ are considered very auspicious.

Doing Dhanams and Tharpanams in ‘Dhanushkoti’ is equal to living in the following Punniya Kshethrams for a year; Madhyarjunam, Kumbakonam, Mayiladudhurai, Vedaraynam, Chidambaram, Naimisaranyam, Sri Sailam, Sri Rangam, Vrudhachalam, Tirumalai, Kanchipuram, Vaideeswaran Kovil, Dakshina Kailasam. It reaps crores of benefits compared to what one accrues normally.

Any Punniya Karmas (Meritorious Deed) done on this day will result in billion times benefit. For example, doing a Gho Dhanam on this day is equivalent to doing crore Gho Dhanams.

Sath Karmas & Dhanams to be done on this day & Benefits:

1.
Dhanams to Sath Pathrams (Good Vedic Scholars), will accrue crore times                
the benefit than normal.
2. Gho Dhanam – Equivalent to doing crore Gho Dhanams than a normal.
     3. Bhoo Dhanam – Same as above.
4. Gruha Dhanam with groceries for one year – Attains Vaikuntam.
5. Sethu Snanam (Rameswaram) on this day will ensure there is no Garbavasam (re-birth) and will attain 
    Moksha.
6. Koti Janma Sins including Pancha Maha Pabhams (Sins) are destroyed.
7. Doing Dhanams will give 1000 Aswamedha Yaja benefits.
8. Pithru Tharpanams done on this day is equivalent to doing crore times and help Pithrus attain Mukthi.
9. Donate Panagam, Payasam, Banana Items, Chandanam, Umbrella, Jackfruit, Padhuka, Pathram, and 
    Pushpam. This will give us the benefit of doing many Soma Yagnam’s.
10. Dhanam’s done in Dhanushkodi is considered very auspicious.
     11. Doing Vishnu, Siva Puja’s on this day chanting Purusha Suktham, Sri               Rudram, Chamakam respectively 
       and do abishekams. Saturn and Sevvai (Angaraga) doshams will be cleared and will not recur.
The above said is mentioned in Skanda Maha Puranam, Sethu Mahathmiyam, Brahma Kandam, 52nd Adhyaayam in detail for more than 100 Slokas.

Mahodaya punyakalam at Vedaranyam is on 8th February. This Mahodayam is most auspicious because immediately next Mahamaha punyakalam comes on 22nd February 2016 at kumbakonam. This is a rare combination, happening and considered more auspicious. It is said that this is happening after 144 years.

-By Shri. R. Sundararama Vaajapeyaaji

Raghunathan Iyer

unread,
Jan 25, 2016, 2:21:33 AM1/25/16
to arunalaya

நவக்கிரகத்தின் ஆதிக்கத்தில் ஏற்படும் வளர்ச்சி

விலங்குகள், பறவைகள் கூடிவாழ, காலம், நேரம் பார்ப்பதில்லை. ஆனால் மனிதர்களுக்கு அவ்வாறு இல்லை. நல்ல நாள், நேரம், கிழமை என ஜோதிடம் பார்த்து நாள் குறிக்கிறார்கள். இது எல்லாம் எதற்கு என நாம் நினைக் கலாம்.
நல்ல நேரத்தில் கர்ப்பம் தரித்தால், நல்ல நேரத்தில் நல்ல நட்சத்திரத்தில் குழந்தை பிறக்க ஏதுவாகும் என்ற காரணத்தால் பெரியவர்கள் இந்த ஏற்பாட்டை செய்கிறார்கள்.

ஒரு பெண் கர்ப்பம் அடையும் போது ஒன்பது நவக்கிரகங்களின் ஆதிக்கத்தில் இருக்கிறது.
முதல், இரண்டாம் மாதங்களுக்கு அதிபதி செவ்வாய். அப்போது குழந்தை சுக்லம், சுரோணிதம் ஒன்றாகி தடித்து மாமிசம் பெற்று திகழும்.

மூன்றாம் மாதத்தின் அதிபதி குரு. இம் மாதத்தில் கை, கால், சிரசு தோன்றும்

. நான்காம் மாதத்தின் அதிபதி சூரியன். இம்மாதத்தில் வலிமையுடன் கூடிய எலும்புகள் உண்டாகும்.

ஐந்தாம் மாதத்தின் அதிபதி சந்திரன். இந்தமாதத்தில் மாமிசபாகத்தை வலுவடையத்தக்க தோல் உண்டாகும்.

ஆறாம் மாதத்தின் அதிபதி சனி. இம்மாத்தில் தோல் மீது உரோமங்கள் வளரஆரம்பிக்கும்.

ஏழாம் மாதத்தின் அதிபதி புதன். இம்மாதத்தில் மெய், வாய், செவி, கண், மூக்கு போன்ற ஞானேந்தின்¢யங்கள் உண்டாகும்.

எட்டாம் மாதத்தில் தாய் உண்ணும் உணவை கொடிவழியாக உண்டு திருப்தி அடையும். இம்மாதத்தின் அதிபதி குழந்தை கர்ப்பம் தரிக்கும் போது எந்த லக்னாதிபதி எதுவோ அந்தகிரக அதிபதி.

ஒன்பதாம் மாதத்தின் அதிபதி சந்திரன். இந்த கால கட்டத்தில் குழந்தை முழு உருவம் பெற்று வெளியுலகை நோக்கியிருக்கும்.

பத்தாவது மாதத்தின் அதிபதி சூரியன். இம்மாதத்தில் குழந்தை பிரசவிக்கும். ஆகையினால் கர்ப்பிணிகள் அந்தந்த மாதங்களுக்குரிய கிரகங்களை வணங்கினால் தாய், சேய் இருவருக்கும் நலம் உண்டாகும்

Raghunathan Iyer

unread,
Jan 25, 2016, 7:36:08 AM1/25/16
to arunalaya

மனிதன் கற்றுக்கொள்ள வேண்டிய 21 பாடங்கள் ..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சிங்கத்திடம் இருந்து ஒன்றையும், கொக்கிடம் இருந்து இரண்டையும், கழுதையிடம் இருந்து மூன்றையும், கோழியிடம் இருந்து நான்கையும், காக்கையிடம் இருந்து ஐந்தையும், நாயிடம் இருந்து ஆறையும் நாம் கற்று கொள்ள வேண்டும்.
1 - சிங்கம் எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்யாது, நன்கு ஆலோசனை செய்த பின்பு முழு மனதுடன் உறுதியாக செயல்படும்.
2 - கொக்கு ஓடு மீன் ஓட, உறு மீன் வரும் வரை காத்து நிற்கும். அதுபோல் அறிவாளி ஒரு காரியத்தை செய்வதற்கு முன் காலம், இடம், தன் ஆற்றல் கூடும் வரை காத்திருந்து செய்வான்.
3 - கழுதையானது களைப்புற்றாலும் தன் வேலையை தொடர்ந்து செய்யும், வெயில், மழை என்று பாராமல் உழைக்கும், தன் முதலாளிக்கு கட்டுப்பட்டிருக்கும் குணம் ஆகிய மூன்றும் கழுதையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
4 - விடியற்காலை எழுதல், தைரியமாக சண்டையிடுதல், அவரவர்க்கு தேவையானவற்றை பிரித்துக் கொடுத்தல், தனக்கு தேவையானவற்றை தானே உழைத்துத் தேடி சம்பாதித்தல் ஆகிய நான்கும் சேவலிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
5 - இரவில் மனைவியுடன் சேர்ந்து இருத்தல், தேவையான பொருள்களை சேமித்து வைத்தல், யாரையும் எளிதில் நம்பாமல் இருத்தல், தைரியம், எச்சரிக்கை உணர்வு ஆகிய ஐந்தும் காக்கையிடம் இருந்து கற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் ஆகும்.
6 - கிடைப்பதை உண்டு திருப்தி அடைதல், உணவு கிடைக்காத நேரத்தில் பட்டினி இருத்தல், நன்றாக பசி இருந்தும் கட்டளை வரும் வரை காத்து இருத்தல், நல்ல தூக்கத்தில் இருந்தாலும் உடனடியாக எழுந்து செயல் படுதல், முதலாளிக்கு விசுவாசமாக இருத்தல், தன்னைவிடவும் உருவத்தில் பெரிய மிருகமாக இருந்தாலும் தைரியமாக எதிர்த்தல் ஆகிய ஆறு குணங்களை நாயிடம் இருந்து கற்று கொள்ள வேண்டும்.
எவன் ஒருவன் மேலே சொன்ன இந்த இருபத்தியொரு விஷயங்களை கடைபிடிக்கிறானோ அவன் எதிலும் வெற்றி அடைவான். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றியாகும்.
இது நான் சொல்லலைங்க ..! 
சாணக்கியர் சொல்லியிருக்கார் ..!!!


Raghunathan Iyer

unread,
Jan 25, 2016, 7:44:02 AM1/25/16
to arunalaya


(இரவு 11:49 வரை பின்னர்பிரதமை திதி)
மகம் நட்சத்திரம் (அதிகாலை 5:27முதல் மறுநாள் 23.2.2016செவ்வாய்
காலை 7:22 வரை)
அதிகண்ட யோகம் இரவுக்கு பின் 1:43 மணி வரை,
பத்திரை கரணம் 
(பகல் 11:09 வரை )அடுத்து பவம் இரவு 
(11:49 வரை )
கூடிய தினத்தில் சூரியன் கும்பத்திலும்,பூர்ணசந்திரன் மகம் நக்க்ஷ்த்திரத்திலும்,
** குரு சிம்மராசியிலும் நிற்க ""மஹாமகம்"" கடைபிடிக்கப்படுகிறது.
அன்று கும்பகோணம் தல நேரப்படி பகல் 11:18மணிக்கு மேல் பிற்பகல் 1:20 மணிக்கு முன்னர்,
ரிஷபலக்னத்தில்,
"கும்பேஸ்வரர்" மஹாமகம் குளத்திற்கு வருகைதந்து புனிதநீராடி,
பக்தர்களின் பாவங்களை நீக்கி அருள்புரிவார்
13.2.2016அன்று கொடியேற்றத்துடன் மாசிமகம் உற்சவம் தொடங்கும்.
10ம் நாள் மகம் நக்க்ஷத்திரத்தில் தீர்த்தவாரி (புனித நீராடல்) நடைபெறும்.
** கும்பகோண புவிநிலைப்படி மகம் நட்க்ஷத்திரம் ரிஷப லக்னத்தில் இருக்கும் பகல் 11:18 முதல் பிற்பகல் 1:20 வரை உள்ள காலமே மஹாமகம் புனித நீராடல் காலமாகும்.
சூரியன்,
பூமி,
சந்திரன்,
குருகிரஹம்,
மகம் நக்க்ஷத்திரம் ஆகிய ஐந்து வானியல் பொருட்கள் நேர்கோட்டில் வரும் காலமாகும்.
12ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இதுபோல் வரும்.
** இந்த காலத்தில் சூரியனுக்கு எதிர்நிலையில் குருகிரகம் முழுநிலவு போல் முழுவிட்டத்துடனும் அதன் சந்திரன்களுடனும் வானில் அழகாக தோன்றும் இதை பைனாகுலர் மூலம் எளிதாக காணலாம்.
இதை (கும்பகோணம்) "ஆதிகும்பேஸ்வரர்" ஆலயத்தில் 12ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழாவாக மஹாமகத்தை கொண்டாடப்படுகிறது
.இக்குளத்தின் சிறப்பு:-
மஹாமகத்தில்,
யமுனை,
சரஸ்வதி,
கோதாவரி,
நர்மதா,
சிந்து,
காவேரி,
உள்ளிட்ட கங்கை முதல் அனைத்து பன்னிரெண்டு புண்ணிய நதிகளில் மக்கள் நீராடிய பலன்கிட்டும்.
மேலும் இப்பிறவியில் நமது பாவச்சுமைகளை நீக்கவும் தங்களின் நாம் புனிதத் தன்மையை பெறவும் ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் வழிபடுதல் நன்று.
வர இயலாதவர்கள் அருகில் இருக்கும் கோவில்குளத்தில் நீராடி கும்பேஸ்வரரை தியானித்து,
ருத்ரபாராயணம்,
சிவபுராணம்,
தேவாரம்,
திருவாசகம்,
சிவஸ்லோகங்கள்,
படித்து வில்வம் சாற்றினால் கட்டாயம் பலன்கிட்டும்.
அன்று "ஆகாபாவை" என்பதால் சூரிய உதயத்தில்,
நதி,குளம்,ஆறு,கடல் நீராடல் மிக மிக நன்று.
கூடுதலாக நண்பகலில் "மஹாமகம்" வழிபாட்டிற்காக மீண்டும் நீராடல் அவசியமாகும்.
அன்று கும்பகோணம் செல்ல இயலாதவர்கள் மாசிமாதத்தில் ஏதேனும் ஒருநாளில் மகாமகம் குளத்தில் புனித நீராடல் செய்வது நல்லது.

Raghunathan Iyer

unread,
Jan 30, 2016, 12:39:01 AM1/30/16
to arunalaya

கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி

கலைஞரின் அந்தரங்கத்தை அம்பலப்படுத்திய ஆனந்த விகடன்- தி மு க அதிர்ச்சி + தொண்டர்கள் கிளர்ச்சி

கட்சித் தலைவராக கருணாநிதியைத் தேர்ந்தெடுத்தது லட்சக்கணக்கான தொண்டர்கள்!ஆட்சி முதல்வராக கருணாநிதியை அமரவைத்து அழகு பார்த்தது கோடிக்கணக்கான மக்கள்!

(ஓஹோ உப்பு தின்னவன் தண்ணியை குடிக்கனும்னு சொல்றீங்களா?)

ஆனால், உண்மையில் கட்சியையும் ஆட்சியையும் கைக்குள் வைத்து, பவர் பாலிடிக்ஸைப் பக்குவமாகச் செய்துவருபவர்கள் யார் யார் தெரியுமா?

‘திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல. எனக்குப் பின்னால் என் மகன். அவருக்குப் பின்னால் அவரது மகன் என்று பட்டத்துக்கு வருவதற்கு! இந்தக் கட்சியில் பொதுக்குழு, செயற்குழு இருக்கிறது. அதுதான் அனைத்தையும் தீர்மானிக்கும்’ என்பது கருணாநிதி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள். ஆனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழுவை மிஞ்சியதாக இருக்கிறது இந்த ஹோம் கேபினெட்!

(அது ஹோம் கேபினேட் இல்லை.. பங்களா கேபினேட்)

கருணாநிதியின் தலைமையில் தி.மு.க. வந்த பிறகு நடந்த இரண்டு முக்கியமான பிரிவுகளும் அவரது மகன்களுக்காகவே நடந்தன என்பதுதான் அரசியல் வரலாறு அறிந்தவர்கள் கருத்து. இன்று லட்சக்கணக்கான தொண்டர்களைக்கொண்ட கட்சியின் தலைமை அலுவலகத்துக்குள் மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் புகுந்து, மணிக்கணக்கில் இரண்டு முறை விசாரணை நடத்தி முடித்ததற்கும் இதே குடும்பமே காரணமானது. ‘ஒரு தாயின் வயிற்றில் பிறக்க முடியாத காரணத்தால் தனித் தனி தாயின் வயிற்றில் பிறந்த அண்ணன் தம்பிகள் நாம்’ என்றார் அண்ணா. ஆனால், இன்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் மட்டும்தான் கழகம் என்று ஆகிவிட்டது!

(நல்ல வேளை அண்ணா இப்போ இல்ல.. இருந்தா கலைஞர் அண்ணா என் கனவுல அதை சொன்னார், இதை சொன்னார்னு பீலா விட முடியாம போய் இருக்கும்)

42 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருக்கிறார் கருணாநிதி. ‘தலைமை நாற்காலியைப் பெரியாருக்காகக் காலியாக வைத்திருக்கிறேன். பொதுச் செயலாளர் பதவி மட்டும்தான் இனி தி.மு.க-வில் இருக்கும்’ என்ற அண்ணாவின் முழக்கம்தான், அவரைக் கடற்கரை ஓரத்தில் புதைக்கும்போது ஓரமாகத் தூக்கிப் போடப்பட்ட முதல் கொள்கை.

(அப்படி புதைத்துவிட்டுத்தான் வதைத்துகொண்டு இருக்காங்களா?)

அடுத்த தலைவர் நாவலர் நெடுஞ்செழியனா, கலைஞர் கருணாநிதியா என்ற சண்டை வந்தபோது, தலைவராக கருணாநிதியும் ,பொதுச் செயலாளராக நெடுஞ்செழியனும் உட்கார வைக்கப்பட்டார்கள். அதில் இருந்து 10-வது முறையாக பொதுக்குழு மூலமாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார் கருணாநிதி.

(உட்காரவே முடியலைன்னாலும் சிம்மாசனத்தை மட்டும் விட மாட்டேங்கறாரே…)

1980-ல் கட்சிக்குள் மெதுவாகத் தனது மகன் ஸ்டாலினை கருணாநிதி அழைத்து வந்தார். இளைஞர் அணிச் செயலாளர் என்ற பொறுப்பு தரப்பட்டது. பொதுவாகவே, கட்சியில் துணை அமைப்புகள் சும்மா ஒப்புக்குத்தான் இருக்கும். ஆனால், ஸ்டாலின் வந்த பிறகு இளைஞர் அணி, தலைமைக் கழகத்துக்கு இணையான அணியாக மாற்றப்பட்டது. அறிவாலயம் கருணாநிதிக்கு என்றால்… அன்பகம் ஸ்டாலினுக்கு.

(ஆஹா.. நல்லதொரு குடும்பம்.. பல்கலை கலகம் இல்லா கழகம்)

இளைஞர் அணியில் மாவட்ட அமைப்பாளர்கள்… கட்சியின் மாவட்டச் செயலாளர்களாகவே வலம் வந்தார்கள். அதன் பிறகு அமைச்சரவையில் ஸ்டாலின் ஆட்களுக்குப் பிரதிநிதித்துவம் தரப்பட்டது. வேட்பாளர் தேர்வில் கோட்டா வந்தது. ஸ்டாலின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார். அதன் பிறகு பொருளாளர் பதவி கிடைத்தது. அடுத்து அமைச்சர், துணை முதலமைச்சராகவும் ஆனார். இன்று, ஆட்சியும் கட்சியும் இவரது கண் அசைவில் தான் நடக்கின்றன.

(எல்லோரும் இந்நாட்டு மன்னர்.. ஆனால் மன்னரின் வாரிசுகள் எல்லோரும்னு திருத்திக்கோணும் போல…)

கருணாநிதியின் மருமகனாகவும் மனசாட்சியாகவும் இருந்த முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு, அவரது இரண்டாவது மகன் தயாநிதியை மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தினார்கள். உடனேயே கேபினெட் அமைச்சராக்கப்பட்டார். டெல்லி அரசியல் இவரது கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவரது அண்ணன் கலாநிதி மாறன் நடத்தி வந்த நாளிதழில் ஒரு கருத்துக்கணிப்பு வெளியானதைத் தொடர்ந்து குடும்பத்துக்குள் குழப்பம். நேரடி அரசியலில் இறங்காமல் அதே சமயம், தென் மாவட்டத்து அரசியலைத் தனது ஆளுகைக்குள் வைத்திருந்த மு.க.அழகிரியின் செல்வாக்கை அந்தக் கருத்துக் கணிப்பு குறைத்து மதிப்பிட்டு இருந்தது. கலாநிதி, தயாநிதி ஆகியோருக்கும் அழகிரிக்குமான மோதலில், கருணாநிதி மகன் பக்கம்தான் நின்றார்.

(தந்தை மகனுக்காற்றும் உதவி..?)

தயாநிதி, கட்சியைவிட்டு நீக்கப்பட்டார். இனி, டெல்லியைக் கவனிக்க யார் என்ற கேள்வி எழுந்தபோது, கருணாநிதி தனது மகள் கனிமொழியை மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கினார். அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் அழகிரியும் நிற்க… குடும்பக் கோபங்கள் தணிந்து தயாநிதியும் மறுபடி நுழைய… ஒரே குடும்பத்தில் இருந்து ஐந்து பேர் கட்சியின் முக்கியப் பதவிகளைப் பிடித்தார்கள்.

இன்றைய நிலையில் தி.மு.க-வின் ஐம்பெரும் தலைவர்கள் இவர்கள்தான்!

(ஐம்பெருங்காப்பியங்கள் மாதிரி அவ்வளவு சீக்கிரம் இவங்களை அழிக்கவே முடியாது போல இருக்கே..?)

குடும்பத் தலைவர் ஒருவர் அரசியலில் இருந்தால், அவரை நம்பி மற்றவர்கள் அமைதியாக இருப்பார்கள். ஆனால், இங்கே எல்லோருமே தலை எடுத்து வலம் வருகிறார்கள்.

(தடி எடுத்தவனெல்லாம் தண்டல்காரன் மாதிரி ….)

ராஜாத்தி அம்மாளைப் பார்க்க அவரது சி.ஐ.டி. காலனி வீட்டிலோ அல்லது அவர் ஆழ்வார்பேட்டைப் பகுதியில் நடத்தி வரும் ராயல் ஃபர்னிச்சர் கடையிலோ எப்போதும் கூட்டம் இருக்கும். அவரது கோட்டாவில் அமைச்சராக வந்தவர் பூங்கோதை.

(ராசாத்தி உங்களை நம்பி இந்த கோதைப்பொண்ணு இருக்குதுங்கோ.. ஒரு வார்த்தை சொல்லீட்டாக்கா , மினிஸ்டர் போஸ்ட் கிடைக்குமுங்கோ..)

ஊழல் வழக்கில் சிக்கிய ஒருவரைக் காப்பாற்ற பூங்கோதை முயற்சித்ததாகத் தகவல் கசிந்து, அவரது பதவியையே பறித்தார் கருணாநிதி. அப்படிப்பட்ட பூங்கோதை மறுபடியும் கேபினெட்டுக்குள் நுழைத்ததும்… அழகிரி குறித்து நீரா ராடியாவிடம் தரக்குறைவாக கமென்ட் அடித்த பூங்கோதைக்கே ஆலங்குளம் தொகுதியில் மீண்டும் போட்டியிட அனுமதி வாங்கித் தந்ததும், ராஜாத்தியின் ராஜ்யத்தை ஊருக்குச் சொல்லும்.

( கோபாலபுரத்துக்கு ஒரு ராஜாத்தி …?)

கனிமொழிக்குத் தரப்படும் முக்கியத்துவம் கருணாநிதியின் இன்னொரு மகளான செல்வியைச் சினம்கொள்ளவைத்தது. அவரே அப்பாவுக்காகப் பிரசாரம் செய்வதும், தொகுதி மக்களிடம் குறை கேட்கப் போவதுமாக எப்போதாவது செய்கிறார்.

(ஹூம்.. ஒரு செல்வியோட அக்குறும்பையே தமிழ்நாடு தாங்கலை… இதுல இன்னொரு செல்வியா?)

கருணாநிதியின் கடைசி மகனான தமிழரசு, சேப்பாக்கம் தொகுதியைக் கவனித்துக்கொள்கிறார். மதுரையில் அழகிரிக்கு இணையான மரியாதை அவரது மனைவி காந்திக்குத் தரப்படுகிறது. தனித் தனி கட் அவுட்டுகளில் காந்தி சிரிக்கிறார். அவரது மகள் கயல்விழி, தி.மு.க-வின் பிரசாரக் குழுச் செயலாளர். அவரது கணவர், வெங்கடேஷ் தென் மாவட்ட மந்திரிகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். செல்வி மகள் எழிலரசியின் கணவர் டாக்டர் ஜோதிமணி, இப்போது வளர்ந்து வரும் முக்கிய மான அதிகார மையம்!

(சொந்தம் எப்போதும் தொடர் கதை தான் ,. முடிவே இல்லாதது…)

இந்த ஐந்து ஆண்டு காலத்தில் சினிமாக்காரர்கள் சின்னாபின்னமானதைப்போல வேறு யாரும் ஆகவில்லை!

திரைத் துறையில் இருந்துதான் கருணாநிதி அரசியலுக்கு வந்தார் என்பதும், அவரது மேகலா பிக்சர்ஸ் கதைகளும் பழைய விஷயங்கள். கடந்த 20 ஆண்டுகளாக இந்தத் துறையில் சன் டி.வி. கால் பதித்து புதிய படங்களை வாங்கினார்கள். ‘அவர்களுக்கு விற்பனை செய்யப்படாத படங்களை ரேட்டிங் குறைத்துக் காண்பிக்கிறார்கள் என்ற புகார்கள் எழுந்தன. குடும்பத்துக்குள் குழப்பம் ஏற்பட்ட சமயத்தில் கருணாநிதியே ‘கலைஞர் டி.வி.’ என்ற தனிக் கடையைத் தொடங்கினார். படங்கள் வாங்குவதில் சன் – கலைஞர் தொலைக்காட்சிகளுக்குள் போட்டி கிளம்பியது. இதில் பல தயாரிப்பாளர்கள் மூளை குழம்பிப் போனார்கள்.

(இளைஞன் படு டப்பா ஆகியும் கூட இன்னும் கலைஞர் டி வி யில் வெற்றிகரமா ஓடிட்டிருக்கறதா சொல்றாங்களே.. அதுதான்யா அண்டப்புளுகு ஆகாசப்புளுகு)

அடுத்து படத் தயாரிப்புகளில் வாரிசுகள் குதித்தார்கள். ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆரம்பித்தார் ஸ்டாலினின் மகன் உதயநிதி. க்ளவுட் நைன் தொடங்கினார் அழகிரியின் மகன் துரை தயாநிதி. பெரிய நடிகர்களை இவர்கள் குத்தகைக்கு எடுக்க ஆரம்பித்தார்கள். கால்ஷீட் கொடுக்காத நடிகர்களை மிரட்டுவது வரை நிலவரம் கலவரம் ஆனது. தியேட்டர்களை மொத்தமாகக் குத்தகைக்கு எடுப்பதும்… தங்கள் படத்தை ரிலீஸ் பண்ண, மற்ற படங்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துவதுமான சோகக் கதைகளை எந்தத் தயாரிப்பாளர்களாலும் சொல்ல முடியவில்லை.

(சொல்ல மறந்த சோகக்கதை..?)

பாராட்டு விழாக்களுக்கு நடிகர்களை வரவழைக்க மிரட்டுவதை மேடை ஏறி அஜீத் சொன்னார். விஜய் கஷ்டம் ஊர் அறிந்தது. காலம் காலமாக தி.மு.க-காரராக அறிமுகமான அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன், ஜெயலலிதா வைப் போய்ப் பார்த்தார். பல தயாரிப்பாளர்கள் ரகசியமாகப் போய் ஜெயலலிதாவை சந்தித்துத் திரும்பினார்கள்.

(வாலி, வைரமுத்து மாதிரி ஜால்ரா அடிக்க யாராலும் முடியலையே…)

தமிழரசுவின் மகன் அருள்நிதி, ‘வம்சம்’ படத்தில் நடித்து ஹீரோ ஆனார். கருணாநிதியின் அக்கா மகன் அமிர்தம் கலைஞர் டி.வி -யைக் கவனித்து வருகிறார். அவருக்கு உதவியாக அவரது மகன், குணாநிதியும் இருக்கிறார்.

கருணாநிதியின் முதல் மனைவி பத்மாவின் மகன் மு.க.முத்து. அவரது மகன் அறிவுநிதி, சினிமா வில் பாடுகிறார். சென்னையில் திடீரென அவரது கட்-அவுட்கள் முளைக்கும். அதை கருணாநிதி குடும்ப உறுப்பினரே கிழித்துவிட்டார். ‘நான் கலைஞரின் மூத்த பேரன். அந்த அந்தஸ்தை வேறு யாரும் பறிக்க முடியாது’ என்று இவர் சொல்லி வருவது, சினிமா எடுக்க வேண்டிய கிளைக் கதைகளில் ஒன்று!

(சிங்கம் ஒன்று புறப்பட்டதே. அதுக்கு நல்ல காலம்.. நமக்கு கெட்ட காலம்..)

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வரை தயாளுவை எந்த மீடியாக்களும் சீண்டியது இல்லை. முக்கியமான கூட்டங்களுக்கு மட்டும் வருகை தரும் அவர், இரண்டு ஆண்டுகளாக எதிலும் கலந்துகொள்ளவில்லை.

உடல்நிலையைக் காரணம் காட்டி அமைதியானார். கலைஞர் டி.வி-க்கான பங்குகளில் 60 சதவிகிதம் அவருக்கு உண்டு என்பதுகூட சிறு தகவலாகத்தான் இருந்தது. ஆனால், ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடைய ஷாகித் பால்வாவிடம் கலைஞர் டி.வி. 214 கோடிகளை வாங்கியது என்பதை சி.பி.ஐ. தனது அறிக்கையில் சொன்னதுமே, தயாளு அகில இந்தியா முழுவதும் அறியப்பட்டார். ‘இத்தனை வருஷம் சும்மா இருந்த என்னை இப்படி மாட்டிவிட்டுட்டீங்களே’ என்று கருணாநிதியிடம் வருத்தப்படத்தான் முடிந்தது தயாளுவால். நிச்சயம் அவரிடம் விசாரித்துதான் ஆக வேண்டும் என்று சி.பி.ஐ. அடம்பிடிக்க…. தயாளு சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு அழைத்து வரப் பட்டார். இதோடு சி.பி.ஐ. விடுகிறதா என்பது தெரிய வில்லை. முழு க்ளைமாக்ஸை மார்ச் 31 அன்று பார்க்கலாம்!

(ஜெயில் பாட்டு ஓ வந்ததென்ன கிழ மானே சுச்சூச்சுசூ…அதைக்கேட்டு பெயில் தந்ததென்ன ….)

இவருக்கு நேர் மாறானவர் ராஜாத்தி! எப்போதும் சர்ச்சைகள் இவரை வளைய வரும். சர்க்காரியா கமிஷன் விசாரணையிலேயே அவர் பெயர் வந்தது. இப்போது ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவுடன் ராஜாத்தியும் அவரது ஆடிட்டர் ரத்னமும் பேசியதும், வோல்டாஸ் கட்டடத்தைக் கை மாற்றித் தரும் விவகாரத்தில் ராஜாத்தியின் உதவியாளர் சரவணன் சம்பந்தப்பட்டதும்… முற்றுப்புள்ளி வைக்கப்படாத பெரிய ரகசியங்கள். ராடியா கைதானால் இவர்களுக்கும் சிக்கல் வரலாம்!

(ராடியா ராடியா நீராராடியா……சகுனி போல் வளரும் ராடியா….உள்ளே தள்ள சி பி ஐ இல்லையா…?)

கருணாநிதிக்கு ஏற்பட்ட முதல் அவமானம் – அவரது மகன் முத்து, ஜெயலலிதாவைச் சந்தித்தது. வறுமையில் தான் வாடுவதாகச் சொல்லி 5 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டார்!

(நான் அடைந்ததிலேயே மிகச்சிறந்த அவமானம் என் மகன் தான்…கலைஞர்)

மதுரை கவுன்சிலர் லீலாவதி கொலையில் சிலர் கைது செய்யப்பட்டதும், அவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதும் நடந்தது. தண்டனைக் கைதிகளான அவர்கள் முன்கூட்டியே விடுதலை ஆனது வரை சர்ச்சை தொடர்ந்தது!

(ஃபிரீயா விடு ஃபிரீயா விடு மாமூ.. நேர்மைக்கு இல்லை கேரண்டி…)

தென் மாவட்டத்தில் தன்னுடைய பேச்சைக் கேட்காமல் அழகிரி தன்னிச்சையாகச் செயல்பட்டதாகச் சொல்லி, அவரைக் கட்சியைவிட்டே 2000-ம் ஆண்டில் நீக்கினார் கருணாநிதி. ஆட்சி மாறி கருணாநிதி கைது செய்யப்பட்ட பிறகுதான் மீண்டும் அழகிரி குடும்பத்துக்குள் சேர்த்துக்கொள்ளப்பட்டார்!

(ஒரு தாதா தாத்தாவை வென்ற கதை…?)

தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் தா.கிருஷ்ணன் கொலை வழக்கில் அழகிரி சேர்க்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். அந்த வழக்கு விசாரணையின் இறுதியில் அழகிரி விடுதலை செய்யப்பட்டார். இன்று வரை தென் மாவட்டங்களில் மறக்க முடியாத குற்றச்சாட்டு இது!

(கொலை கொலையா தந்திரிக்கா,, கோர்ட்டை கோர்ட்டை சுத்திவா…)

ஸ்டாலினுக்கு மிக நெருக்கமாக இருந்த அண்ணா நகர் ரமேஷின் தற்கொலை இன்று வரை மர்மம் உடைபடாத ரகசியம். அந்தத் தற்கொலைக்குப் பரிகாரமும் செய்யப்படவில்லை. பச்சைக் குழந்தைகள் மூவரும் மனைவியுமாக ரமேஷுடன் இறந்த ஐந்து மரணங்களுக்கான குற்றவாளிகளை ஆட்சியில் இருந்த ஐந்து ஆண்டுகளில் இவர்கள் கண்டுபிடிக்கவும் இல்லை. தண்டிக்கவும் இல்லை!

(உன் குத்தமா? என் குத்தமா? யாரை நான் குத்தம் சொல்ல…)

மதுரை தினகரன் நாளிதழில் வெளியான கருத்துக் கணிப்பைத் தொடர்ந்து அந்த அலுவலகம் எரிக்கப்பட்டது. வினோத்குமார், கோபிநாத், முத்துராமலிங்கம் ஆகிய மூவரது மரணங்கள் தொடர்பான வழக்கு அப்பீலில் இன்று வரைக்கும் இருக்கிறது!

(கொடூரக்குற்றங்கள்….அந்தரத்தில் நிற்கும் நீதி..?)

மத்திய அமைச்சர் பதவியை அழகிரி, தயாநிதி மாறன், கனிமொழி ஆகிய மூவருக்கும் வாங்குவதற்காக கருணாநிதி டெல்லிக்குச் சென்று காத்திருந்ததும்… அதைவைத்து ஆங்கில, இந்தி மீடியாக்கள் கமென்ட் அடித்ததும் நடந்தது. அதுவரை மரியாதைக்குரிய மனிதராக டெல்லி மீடியாக்களில் சொல்லப்பட்ட கருணாநிதி, முதன்முதலாக ஏளனம் செய்யப்பட்டார்!

(காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி..)

சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் ஏதாவது பேரனை வைத்து ஏதாவது ஒரு புகார் எழுந்து அடங்குவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. போலீஸாரும் ஹோட்டல் அதிபர்களும் கை பிசைந்து நிற்கிறார்கள்!

(வேர் ஈஸ் த பார்ட்டி.. அட உங்க வீட்ல பார்ட்டி…)

கனிமொழியும் ஸ்பெக்ட்ரம் தரகர் நீரா ராடியாவும் பேசிய தொலைபேசி உரையாடல்கள் இன்று வரை இரண்டு தரப்பாலும் மறுக்கப்படவில்லை!

(ஹலோ ஹலோ சுகமா? ஆமா நீங்க நலமா?)

ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், கலைஞர் டி.வி-யும் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் கனிமொழி ஆகியோரும் சிக்கி இருக்கிறார்கள். இந்தச் சிக்கலில் இருந்து அவர்கள் எப்போது விடுபடுவார்கள் என்பது சி.பி.ஐ-க்கே தெரியாது!

யாருக்கு ஜாமீன்?யாருக்கு பெயில்? யாருக்கும் புரியல…

அடுத்து புதிய வாரிசுகள் மெள்ள உள்ளே நுழைகிறார்கள். செல்வியின் மகள் எழிலரசி வீணை கற்றுக்கொண்டது பாராட்டத்தக்க அம்சம். அதற்காக, கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் அவரது கச்சேரி கட்டாயப்படுத்தி சேர்க்கப்பட்டது.

(வந்தாள் எழிலரசியே.. இனி என்றும் அவர் ஆட்சியே…)

ஸ்டாலின் மருமகள் கிருத்திகா, ஒரு பத்திரிகையாளராக வலம் வருகிறார். அவரது குறும்படங்கள் பெரிதாகக் காட்டப்படுகின்றன. ஸ்டாலின் மகள் செந்தாமரை, சென்னை வேளச்சேரி பகுதியில் சன் ஷைன் என்ற பெயரில் பள்ளியைத் தொடங்கி, கல்வித் துறைக்குள் நுழைந்திருக்கிறார்.

முதன்முறையாக முத்துவேல் கருணாநிதி முதல்வர் பதவியில் அமர்ந்திருந்த போது, கருணாநிதிக்கு பெருமளவில் உதவி செய்த என்.கே.டி.சுபிரமணியம் வெளியிட்ட ஜவகரிஸ்ட் பத்திரிகையில் ,சென்னையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 1968 ஜனவரி முதலாந் திகதி ராசாத்தி என்கிற தர்மாம்பாளுக்கு பிறந்த கனிமொழி என்ற பெண் குழந்தையின் பிறப்பு பதிவேட்டில் அந்த பெண் குழந்தை கனிமொழியின் தந்தையின் பெயர் மு.கருணாநிதி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. யார் அந்த கருணாநிதி? என்ற ஒரு சிறிய செய்தியை வெளியிட்டிருந்ததை மறக்க முடியுமா?

ராசாத்தி என்றழைக்கப்படும் தர்மாம்பாள் யார் என்றே தனக்கு தெரியாது; தனக்கு அப்படி எந்த பெண் குழந்தையும் இல்லை; என்று முதல்வர் முத்துவேல் கருணாநிதி அறிவித்தார்; நீதிமன்றத்துக்கு நீதி கேட்டு சென்றார்: பெண் குழந்தை…மகள்…என்று யாருமே தனக்கு கிடையாது என்று முழங்கினார் முதல்வர் கருணாநிதி.

எந்த பெண் குழந்தை கனிமொழியை தன் மகளே இல்லை என கருணாநிதி முழங்கினாரோ…எந்த பெண் குழந்தை கனிமொழியின் பெயரை வெளியில் சொன்னால்கூட தன் பெயருக்கு இழுக்கு என மூடி மறைத்தாரோ…அந்த மகள் கனிமொழிக்காகத்தான் இன்று அனைத்தையும் இழந்திருக்கிறார் முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி.

கனிமொழி கைதானது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, உங்கள் வீட்டில் உங்கள் பெண் ஒரு குற்றமும் செய்யாமல் சிறைக்கு அனுப்பப்பட்டால், என்ன மனநிலையில் இருப்பீர்களோ, அதே நிலையில் இருக்கிறேன் என்று முழுப்பூசணிக்காயை எப்படியாவது சோற்றில் மறைப்பதில் உறுதியாக கருணாநிதி இருக்கிறார்.

செய்யாத குற்றத்துக்காக கருணாநிதியின் குடும்ப சண்டையில் மூன்று அப்பாவி ஊழியர்கள் தினகரன் அலுவலகத்தில் உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டதை மறக்க முடியுமா?

கருணாநிதி கல்லூரியையே மிதிக்காமல் டாக்டர் பட்டம் வாங்குவதை எதிர்த்த அண்ணாமலை பல்கலை கழக மாணவர் உதயகுமாரை கொன்றுவிட்டு போலீசால் நிர்ப்பந்திக்கப்பட்ட உதயகுமாரின் தந்தையை விட்டு ‘இறந்தது என் மகனே அல்ல‘ என்று வாக்குமூலம் கொடுக்க பண்ணியதை மறக்க முடியுமா?

சம்பத், கண்ணதாசனை கட்சியில் இருந்து நீக்க செய்த சதிகளை மறக்க முடியுமா?
சட்ட மன்றத்தில் அனந்தநாயகி பேசும்போது குறுக்கிட்டு பொழிந்த ஆபாச வசைககளை மறக்க முடியுமா?
காமராஜர் மீது கிளப்பிய அவதூறுகளை மறக்க முடியுமா?
நெடுஞ்செழியனை ஓரம் கட்ட செய்த மோசடி முயற்சிகளை மறக்க முடியுமா?
ஜனநாயகம், முற்போக்கு என்று பேசிக்கொண்டு முகம்மது பின் துக்ளக் படம் வெளி வராது செய்ய சம்பந்தப்பட்ட கலைஞர்களை மிரட்டியதை மறக்க முடியுமா? கூலிப்படையை கொண்டு திரை அரங்கங்களில் இருக்கைகளை கிழிக்க வைத்து படம் ஓடாது தடுத்ததை மறக்க முடியுமா?
எம்ஜியாரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படம் வெளியிடாமல் தடுக்க மறக்க முயன்றதை முடியுமா? எம்ஜியாரை ராமாவரம் பாலத்துக்கு அருகில் தாக்கிட ரௌடிகளை அமர்த்தியதை மறக்க முடியுமா?

இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள share பட்டன் மூலம் whatsapp மற்றும் Facebook-ல் share செய்யுங்கள்.

நன்றி.


Raghunathan Iyer

unread,
Feb 4, 2016, 1:39:53 AM2/4/16
to arunalaya

..அவருக்காக மட்டுமா ஆதி சங்கரர் அதை பாடியிருப்பார்? சான்ஸே இல்லை. கருணாமூர்த்தியான அவர் அதை நமக்காக அல்லவா அருளியுள்ளார்.....”

”சங்கர பகவத்பாதாள் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவஸ்தைப்படுகிறார். அவர் திருச்செந்தூர் சென்று ஸ்ரீ ஷண்முகநாதரை தர்ஸனம் செய்து தொடர்ந்து அங்கேயே சந்நிதியில் ’ஸ்ரீ சுப்ரஹ்மண்ய புஜங்கம்’ ஸ்தோத்ரம் இயற்றி ப்ரார்த்தனை செய்கிறார். அவரது உடல் நலமும் தேறிவிட்டது” என அறிகின்றோம்.

அவருக்காக மட்டுமா ஆதி சங்கரர் அதை பாடியிருப்பார்? சான்ஸே இல்லை. கருணாமூர்த்தியான அவர் அதை நமக்காக அல்லவா அருளியுள்ளார். மக்கள் நோய்நொடியால் அவஸ்தைப்பட்டால் இந்த புஜங்கத்தை பக்தியுடன் பாராயணம் செய்து பயனடைய வேண்டும் எனும் நோக்கத்துடன் அருளியுள்ளார்.

ஸ்ரீ சுப்ரஹ்மண்ய புஜங்கம் மிகவும் சக்தி வாய்ந்தது. சிறியதும்கூட. கற்றுகொள்ளுவதும் சுலபம். மொத்தமே 33 ஸ்லோகங்கள்தான் இதில் உள்ளது.

குருமூலமாக கற்றுக்கொண்டு பயனடையலாம்.

நோய்நொடி இல்லாவிட்டலும் பொதுவாக தினப்படி நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதை பாராயணம் செய்வதனால் திடமான ஆரோக்யம், மனச்சாந்தி, குடும்ப அமைதி, புத்தி கூற்மை, ஆன்மீக பாதையில் முன்னேற்றம் போன்ற பல க்ஷேமங்கள் ஏற்படுவது நிச்சயம்.
அன்புடன்
சர்மா சாஸ்திரிகள்


Senthilnathan Natarajan

unread,
Feb 4, 2016, 2:14:57 AM2/4/16
to Raghunathan Iyer, arunalaya
DEAR MR. RAGHU,
GOOD DAY.
WONDERFUL INFORMATION. THANKS.
SRI SUBRAMANYA PUJANGAM IS ATTACHED FOR EASY REFERENCE.
REGARDS,
NATHAN
SRI SUBRAMANYA PUJANGAM.docx

Raghunathan Iyer

unread,
Feb 4, 2016, 4:05:23 AM2/4/16
to arunalaya

பழையகாலத்தில் குறைந்த வருமானம் நிறைந்த வாழ்க்கை,,இக்காலத்தில் நிறைந்த வருமானம் குறையுள்ள வாழ்க்கை 
இதற்கு காரணம் பெண்களிடம் பக்தி,, ஆசாரம் குறைந்துவிட்டது .. அலுவலகத்தையும்,,நண்பர்களையும் நேசிக்கும் இவர்கள்
வீட்டில் பெரியவர்களையும் கணவையும் மதிப்பதில்லை..அந்த நாளில் குடும்பத்துக்கும்,,கணவணுக்கும் ஒருகஷ்டம் என்றால்
பெண்கள் பல விரதம் இருந்து அதை சரிசெய்வார்கள் ஆனால் இன்றோ குடும்பத்தில் அக்கரை குறைந்து சுயனலத்தோடும்,,சுயகெளரவத்தோடும்தான் வாழ்கிறார்கள்...அதனால் பல ஆண்கள் கடனாளி ஆகி தவிக்கிறார்கள்.. லஷ்மியோகம்
வீட்டில் தங்குவதற்கு பெண்களின் பங்கு நிறையவே வேண்டும்

Raghunathan Iyer

unread,
Feb 4, 2016, 4:18:41 AM2/4/16
to arunalaya
DrGanesh Vocalist's photo.
 
 

தூற்றலும் நன்றே!

அன்று சித்திரை மாஸம் 18 தேதி ! ஏறக்குறைய அக்னி நக்ஷத்ரம் ஆரம்பம்! ஸ்ரீமடத்தில் அத்தனை கூட்டம் இல்லை! தர்மமே பீடாதிபத்யம் பண்ணும் காஞ்சி ஸ்ரீமடத்தில் ஸாதாரண பூர்த்த தர்மமாக நீர்மோர் விநியோகம் நல்ல வெய்யில் காலத்தில் நடப்பதில் ஆஸ்சர்யம் இல்லையே!...

காலை ஸூர்ய பகவான் ஸீக்ரமே உக்ரமாக தஹிக்க ஆரம்பித்தார்!

ஸ்ரீமடத்தின் வாஸலில் நீர் மோர் விநியோகம் பண்ணிக் கொண்டிருந்த தெலுங்குப் பாட்டியை பெரியவா அவஸரமாக அழைப்பதாக உத்தரவானது.

பாட்டி உள்ளே வந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு நின்றாள்.

"இன்னிக்கி நெறய்...ய்ய தயிர் வாங்கி, ரெண்டு மூணு அண்டால நெறைய்ய நீர் மோர் தயார் பண்ணி வை!....."

"ஆகட்டும்......பெரியவா!..."

"வெறும் மோரா இல்லாம, அதுல பெருங்காயம், கடுகு தாளிச்சுக் கொட்டு! கொஞ்சம் கறியாப்பிலை நன்னா..கசக்கிப் போடு! வேணுன்னா ரெண்டு பச்சமொளகா கூட நறுக்கிப் போடலாம்! இஞ்சித்துண்டு போடற வழக்கம் உண்டோ?....."

"போட்டுடறேன்....பெரியவா..."

பாட்டி தலையை ஆட்டிவிட்டு, உக்ராணம் பக்கம் போய்விட்டாள்.... பெரியவா சொன்னபடி 'தேவாம்ருதம்' ரெடி பண்ண!

பாரிஷதர்களுக்கும், வந்திருந்த பக்தர்களுக்கும் ஒரே குழப்பம்! இவ்வளவு வக்கணையாக நீர் மோர் கரைக்க சொல்லிக் குடுக்கும் படலம் எதற்காக? யாருக்காக? ஏனென்றால் அன்று அவ்வளவு கூட்டமும் இல்லை; விஸேஷமும் இல்லை.

"அண்டா அண்டாவா நீர் மோர் வேஸ்ட் ஆகப் போறது!"

அறியாத மனங்கள் கவலை கொண்டன!

அன்று கச்சபேஶ்வரர் கோவில் எதிரில் ஒரு அரசியல் கட்சியின் தேர்தல் ப்ரசாரம் என்ற பெயரில் எப்போதும் போல், "இளித்த வாய்" மக்களான ஹிந்து மத எதிர்ப்பு கூட்டம் நடந்து கொண்டிருந்தது! ஹிந்து மத எதிர்ப்பு என்றாலே அதையும், கோவில் வாஸலிலேயே 'நம்பிக்கையோடு' போடும், கடவுளைத் திட்டும் கூட்டம்!

நல்ல வேளை ! கச்சபேஶ்வரர் ஸன்னதியில் ஒலிப்பெருக்கி வைக்கவில்லை!

இனிய தமிழில், மணிமணியான தேவார திருவாசகம், வேத கோஷம் இவற்றையே கேட்டுக் கொண்டிருக்கும் ஸ்வாமி, தெய்வப்புலவர்களான திருவள்ளுவர், கம்பர், ஔவையார் போன்றோர் அருமையாக 'நல்லதை' மட்டுமே கூறி வளர்த்த தெய்வத் தமிழ், செம்மொழியை, இத்தனை ஆபாஸமாகவும் உபயோகப் படுத்த முடியுமா? என்று யோஜித்திருப்பார்.

கடவுள் எதிர்ப்புக் கூட்டம் ஸரியாக மத்யானம் ஒரு மணிக்கு, ஹிந்து கடவுளை மட்டும் எதிர்த்து விட்டு, முடிந்தது!

" ஹிந்துக்களின் எல்லாக் கோவில்களையும் இடித்துத் தள்ளிவிட்டு, அந்த இடங்களிலெல்லாம் தொழிற்சாலைகளைக் கட்டி, வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்குவோம்!..."

வீராவேஸமாக சூளுரைத்தார் கட்சித் தலைவர்!! 200 கரங்கள் கை தட்டின!

கைதட்டல் வாங்கிய சூட்டோடு சூடாக, சட்டை கசங்காமல் காரில் ஏறிப் போய்விட்டார் தலைவர்!!

'அலைகடலென திரண்டிருந்த' அந்த 100 பேர் அடங்கிய கூட்டத்திலிருந்து தனித்தனியாகப் பிரிந்ததும்தான், அவரவர் கவலை அவரவர்களிடம் திரும்ப வந்தது!.....பாவம். திரும்பி அவரவர் க்ராமத்துக்கு போக வேண்டுமே?

சித்திரை வெய்யில்....ஸூர்யன் நெருப்பை தலையில் கொட்டினான்! மடத்துக்கு பக்கத்திலிருந்த பஸ் ஸ்டாண்ட்டுக்கு மெதுவாக எல்லாரும் நொந்து நூலாகி, நடந்து வந்தனர்! நடந்து வந்ததில் நா வறட்டும் தாகம்! நகரஸபைக் குழாய்களில் வெறும் உஷ்ணக் காற்று!

கடும் பாலைவனத்தில் 'ஜிலுஜிலு'வென சோலைபோல், அவர்கள் கண்களில் பட்டது......70 அடி உயரத்தில் "நீ என்னிடம் எப்படி இருந்தாலும், நீயும் என் குழந்தைதான்! என்னிடம் வா!..." என்று ஆச்சார்யாளின் ஸ்தூபி ஓங்கி நிற்கும் ஸ்ரீமடமும், அந்த அழகான வாஸலில் அண்டா அண்டாவாக பாட்டி supply பண்ணிக் கொண்டிருந்த நீர்மோருந்தான்!

"யோவ்!...அங்க பாருய்யா! நீர் மோர் குடுக்கறாங்க போல...வாங்க போலாம்!"

கட்டாயம் அந்த க்ஷணத்தில் 'கடவுள்' இருக்கிறார் என்பதை உண்மையாகவே கடவுளை வெறுப்பவன் கூட எண்ணியிருப்பான்!

தெலுங்குப் பாட்டியிடம் வந்து நின்றனர்.....! முதலில் பத்துப்பேர், அவர்களைப் பார்த்து இருவது பேர் என்று ஆச்சார்யாளிடம் அடைக்கலம் புகுவது போல், அத்தனை பேரும், 'திமுதிமு' வென்று வந்துவிட்டனர்!

பாட்டிக்கு கைவலியே வந்துவிட்டது! வராதா..பின்னே?100 பேருக்கு 200, 250 தடவை மோர் குடுத்து குடுத்து பழக்கமில்லையே!

அத்தனை அண்டாவும் காலி!!! ஒரு சொட்டு கூட மிஞ்சவில்லை!! தாகம் தீர்ந்ததும், அண்டாவை விட்டுவிட்டு, அண்டாண்டகோடி அரசன் குடியிருக்கும் ஸ்ரீமடத்தை 'தர்ஶித்தார்கள்'.

"கன்னையா.....வர்றியா?...உள்ளாற ஸாமிய பாத்துட்டு போலாமா?"

முணுமுணுத்தார் ஒருவர்.

"ஆமாண்ணே! எனக்கும் ஆசையாத்தான் இருக்கு....ஸாமீ ரொம்ப பெரிய கடவுள்தான்! ஆனா, கூட வந்தவங்க திட்டுவாங்களோ?...."

இதில் வேடிக்கை என்னவென்றால்.....100 பேருக்குமே இதே கவலை, பயந்தான் ! என்ன தைர்யத்தில், எந்த மூஞ்சியை வைத்துக் கொண்டு மடத்துக்குள் நுழைவது?

"தான்" என்ற "உப்புப் பெறாத"ஒன்று குடுகுடுவென்று உள்ளே ஆடிக் கொண்டிருப்பதால்தானே நாமெல்லாம் நம்மை ரொம்....ம்பப் பெரிய் ....யவர்களாக எண்ணிக் கொண்டு இத்தனை ஆட்டம் போடுகிறோம்?

வாஸ்தவத்தில் 'பெரியவர்கள்' எப்படி இருப்பார்கள்? இதோ.....

திடீரென்று ஸ்ரீமடத்தின் உள் வாஸலில் ஒரே பரபரப்பு! அவஸர அவஸரமாக சில பக்தர்கள், பாரிஷதர்கள் வெளியே வந்தார்கள்!

"நீங்கள்ளாம் உள்ள வந்து என்னைப் பாக்காட்டா என்ன? இதோ...நானே...ஒங்களையெல்லாம் பாக்க வரேனே!.." என்று வருவது போல், உச்சி வெயில் ஸூர்யனின் தஹிப்பை தாங்காமல் நின்று கொண்டு, மனஸுக்குள் பக்தி பண்ணும் அந்தத் தொண்டர்களுக்கு, குளுகுளுவென்று சந்த்ரன் மாதிரி குளிர்ச்சியை குடுத்துக் கொண்டே, நாலைந்து பண்டிதர்களுடன் வேதாந்த விசாரம் பண்ணிக் கொண்டே நம் பெரியவா வெளியே வந்தார்!

எதிரே உள்ள கங்கைகொண்டான் மண்டபத்து ஆஞ்சநேயரை தர்ஶிக்க செல்கிறாராம்!!

இப்படியொரு ஸ்வாதீனத்தை, எளிமையை அந்தத் தொண்டர்கள், தங்களுடைய கட்சித் தலைவர்களிடம் கூடப் பார்த்ததில்லை என்பதால், திடீரென்று தென்றலாக வீசிய 'பெரியவா' என்னும் தெய்வீகத்தில் திக்குமுக்காடிப் போய், வறுத்தெடுக்கும் சூடான தெருப்புழுதியில் நூறு பேரும் "தடால், தடால்"லென்று விழுந்து பெரியவாளை நமஸ்காரம் பண்ணினார்கள்.

பெரியவாளும் அவர்களுக்காக அந்த சுடு மண்ணில் நின்று கொண்டிருந்தார்!

"எல்லார்க்கும் நீர் மோர் கெடைச்சுதா?...."

"கெடச்சுது.....ஸாமீ!......"

"ஸாமீ..... துண்ணூறு!....."

தாயைத் தவிர வேறு யாரால் இப்படிக் கருணை பொங்கி பொங்கி கேட்க முடியும்? அவர்களில் பலருடைய கண்களில், இந்த அன்பு கண்ணீரையே வரவழைத்துவிட்டது!

"அகழ்வாரைத் தாங்கும் நிலம்! வைதாரையும் வாழ வைக்கும் ரூபம்! புதிய, பழைய பக்தர்கள் புடைசூழ ஆஞ்சநேயர் யர்.... 🙏🙏ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏

 

Raghunathan Iyer

unread,
Feb 5, 2016, 12:43:46 AM2/5/16
to arunalaya

 
Sri Pumathamman Siddhar Peedam's photo.
 

கந்தசஷ்டி கவசம் உருவான கதை

கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீ தேவராய சுவாமிகள். இவர் எதற்காக இந்தக் கவசத்தை பாடினார் தெரியுமா? தேவராய சுவாமிகள் ஒரு சமயம் கடும் வயிற்றுவலியால் மிகவும்அவதிப்பட்டு வந்தார். எவ்வளவோ சிகிச்சைகள் மேற்கொண்டும் அவருடைய வயிற்றுவலி தீர்ந்தபாடில்லை.

வாழ்க்கையே வெறுப்போய் கடலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு திருச்செந்தூர் சென்றார். அவர் சென்ற நாளில் திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா ஆரம்பித்திருந்தது. தீவிர முருக பக்தரான தேவராய சுவாமிகள், சஷ்டி நாட்களில் விரதமிருந்து முருகனை மனம் குளிர வழிபட்டு சூரசம்ஹாரம் கண்ட பின்பு உயிர் விடலாம் என்று முடிவெடுத்தார்.

நல்ல அருட்கவியும், மந்திரநூல் வல்லுனருமான தேவராய சுவாமிகள், சஷ்டி விரத நாட்களான ஆறு தினங்களில், தினத்துக்கு ஒன்றாக, ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாக ஆறு கவசங்களை பாடி முடிப்பது என்று முடிவு செய்தார். அவ்வண்ணமே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படை வீட்டிற்குரிய கவசங்களை பாட ஆரம்பித்தார்.

கந்தசஷ்டி கவசம் உருவான கதை

அவர் பாட ஆரம்பித்ததும் வயிற்றுவலி படிப்படியாக குறைய ஆரம்பித்தது. சஷ்டியின் ஆறாவது நாளன்று வயிற்றுவலி அறவே நீங்கிவிட்டது. இப்படி பிறந்தவை தான் கந்த சஷ்டி கவசங்கள் ஆறும். தேவராய சுவாமிகள் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசமாக ஆறு கவசங்களை இயற்றியுள்ளார்.

இவை அனைத்துமே `கந்த சஷ்டி கவசம்` என்ற ஒரே பெயரைத்தான் கொண்டு அழைக்கப்படுகின்றன. அவர் முதன் முதலில் இயற்றிய `திருச்செந்தூர் கவசம்` தான் பொதுவாக எல்லோரும் அறிந்த, `சஷ்டியை நோக்க சரவண பவனர் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன்' என்று தொடங்கும் கவசம்.

இதுபோல் ஒவ்வொரு படைவீட்டிற்கும் ஒவ்வொரு கவசம் உள்ளது. இருப்பினும் திருச்செந்தூர் கந்த சஷ்டி கவச நூலே பிரபலமாகி எல்லோராலும் அறியப்பட்டு பாடப்பட்டு வருகிறது. என்றாலும் ஆறு கவசத்தையும் ஒருங்கே பாடுவதே சிறப்புத்தரும். இந்த தோஷங்கள் அனைத்தையும் போக்கும் வல்லமை கொண்டவன் முருகப்பெருமான் மட்டுமே.

கந்தன் என்று சொன்னாலே, வந்த வினையும், வருகின்ற வல்வினையும் நீங்குமே. இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்தால் கிடைக்கும் பயனை சொல்லவும் வேண்டுமா? இத்தனை சிறப்பு வாய்ந்தது இந்த கந்த சஷ்டி கவசம்.

இதனை பாராயணம் செய்வோர்களின் தேவையை உணர்ந்து, அறிவு, செல்வம், சந்தானம், வெற்றி ஆகியவற்றை அவர்கள் விரும்பிக் கேட்டாலும், கேட்காவிட்டாலும் தானே அருளும் சக்தி வாய்ந்த கவசமாகும். பாம்பன் சுவாமிகள் அடிக்கடி மனம் உருகி இந்த கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்து கொண்டிருப்பார்.

அப்படி ஒருமுறை பாராயணம் செய்தபோது தானும் இதேபோல் ஒரு கவச நூலை முருகன்மீது பாடவேண்டும் என்று நினைத்தார். அப்படி அவர் பாடியதுதான் `சண்முக கவசம்`. இந்த சண்முக கவசமும் ஆறு கவசங்களை உள்ளடக்கியது என்பது குறிப்பிடதக்கது. கந்த சஷ்டி கவசம் பாடினால் எல்லா தொல்லைகளும் நீங்கும் கஷ்டங்கள் விலகி மகிழ்ச்சி உண்டாகும்.


Raghunathan Iyer

unread,
Feb 5, 2016, 1:01:04 AM2/5/16
to arunalaya

நிகழ்ச்சி ஒன்றில் நல்ல குடும்பத்திற்கு வேண்டிய 10 லட்சணங்கள் குறித்து வேதாத்திரி மகிரிஷி பேசினார்.
அந்த அறிவுரைகளாவன,
1.
நாம் பெற்ற ஞானத்தைப் பயன்படுத்த வேண்டிய இடம் நம் குடும்பமே.
2.
கணவன் - மனைவி உறவுக்கு இணையாக உலகில் வேறெந்த உறவையும் சொல்ல முடியாது.
3.
குடும்ப நிர்வாகம் செய்வது உங்கள் அறிவாகத்தான் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் உணர்ச்சிகள் நிர்வாகம் செய்யக் கூடாது.
4.
வரவுக்குள் செலவை நிறுத்துங்கள். அது குடும்ப அமைதியைக் காக்கும். வீண் செலவுகள் செய்ய வேண்டாம். அது குடும்ப அமைதியை குலைக்கும்.

5.
ஒரு குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் பொருளீட்டும் திறன் வேண்டும். அல்லது, பெரும்பாலானோர் பொருளீட்டும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். சிலர் அதிகமாக சம்பாதிக்கலாம், சிலர் குறைவாக சம்பாதிக்கலாம். எப்படி இருந்தாலும் அதை காப்பது, நுகர்வது, பிறருக்கு இடுவது ஆகிய செயல்களில் சமமான பொறுப்பு வேண்டும்.
6.
கணவனுக்குத் தெரியாமல் மனைவியோ, மனைவிக்குத் தெரியாமல் கணவனோ சம்பாதிப்பதும், செலவு செய்வதும், சேமிப்பதும் சரியாக இருக்காது. அது பிரச்சினைகளுக்கு இடம்தரும். மனதில் ஒளிவு மறைவு வைத்துக் கொண்டிருந்தால் அங்கே தெய்வீக உறவு இருக்காது.
7.
குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்றால் சகிப்புத் தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் ஆகிய மூன்றையும் கடைப்பிடித்து வர வேண்டும்.
8.
பிறர் குற்றத்தைப் பெரிதுபடுத்தாமல் பொறுத்தலும், மறத்தலும் அமைதிக்கு வழிவகுக்கும்.
9.
தனக்கு கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி யாரும் குறை கொள்ளத் தேவையில்லை. அவரவர் அடிமனமே இதை தேர்ந்தெடுத்துக் கொள்ளும்.
10.
நல்ல குடும்பத்தில் நன்மக்கள் தழைப்பார்கள். பிறவிப் பெருங்கடல் நீந்துவதற்கும் குடும்ப அமைதி இன்றியமையாததாகும்.
இந்த 10 அறிவுரைகளை பின்பற்றினால் எந்த குடும்பமும் நல்ல குடும்பம்தான் என்கிறார் வேதாத்திரி மகிரிஷி.


Raghunathan Iyer

unread,
Feb 5, 2016, 5:20:31 AM2/5/16
to arunalaya


AS Santhosh's photo.
 
் கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி எத்தனை ஆராய்ச்சிகள் மேற்கொண்டாலும் பிராமணர்கள் தொன்றுதொட்டு தமிழோடு பின்னி பினைந்து பிரிக்க முடியாதவர்களாக இருப்பதே உண்மை.சங்க காலத்தில் இருந்தே தமிழ் நாட்டில் பிராமணர்களின் இருப்பை இலக்கியங்கள் உணர்த்துகின்றன.கரிகால சோழன் காலத்தில் வேள்விகளையும், வேதபாராயனங்களையும்பிராமணர்கள் செய்து வருவதை "உருட்டிரங்கண்ணனார்" குறிப்பிடுகிறார்.தமிழின் தொன்மையான நூலான தொல்காப்பியத்தில் இருந்து பல்வேறு இலக்கியங்கள் பிராமணர்களின் சமய மற்றும் சமூக பங்களிப்பை குறித்து குறிப்பிடுகின்றன. சேரன் செங்குட்டுவன் காலத்தில் இருந்த பிராமணர் "கௌதமரை" குறித்து சிலப்பதிகாரம் புகழ்கிறது. பிராமண அமைச்சர்கள் அரசர்களை வழிநடத்தியதையும் அது குறிப்பிடுகிறது. புறநானூரில் ஆவூரை சேர்ந்த "முளம் கிழார்" என்பவர் சோழநாட்டை சேர்ந்த பிராமணர்களின் அறிவையும், தியாகத்தையும் புகழ்வதை பார்க்க முடிகிறது.நவீன காலத்திலும் தமிழ் பிராமன‌ர்கள் பல்வேறு துறைகளில் தங்கள் பங்களிப்பை அளித்து உள்ளனர். சொல்லப்போனால் இவர்கள் பங்களிப்பு இல்லாததுறையே இல்லை எனலாம். 69 சதவீத இட ஒதுக்கீடு தமிழ‌கத்தில் அமல்படுத்தப்பட்ட பின் பிராமணர்களுக்குஅரசாங்க உத்யோகம் என்பது கிட்டத்தட்ட இல்லை என்றாகி விட்ட‌து தங்களுடைய இடைவிடாத முயற்சியாலும், நுட்பமான அறிவாலும், எதையும் சாதிக்க கூடியவர்களான‌ பிராமணர்கள், நவீன உலகத்தின் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை பிடித்துக் கொண்டனர். உலகின் மிகப்பெரும் மென்பொருள் நிறுவனங்கள் உட்பட பல பண்ணாட்டு நிறுவனங்களின் தலைமை பொறுப்புகளை வகிப்பவர்கள் தமிழ் பிராமண சமூகத்தை சேர்ந்த‌ தமிழர்கள் என்பதில் நாம் பெருமை கொள்ளலாம்.விளையாட்டு, விஞ்ஞானம், அரசியல், ஊடகம், கணிதம், இலக்கியம், ஜனரஞ்சகம், வியாபாரம், மிகப்பெரும் வழக்கறிஞர்கள், அதி நவீன மருத்துவர்கள் என இவர்கள் சிறந்து விளங்காத‌ துறையே இல்லை. அதை குறித்து எல்லாம் எழுதினால் பல ஆயிரம் பக்கங்கள் நீண்டு கொண்டே செல்லும். நோபல் பரிசை பெற்று தேசத்துக்கு புகழை தேடி தந்த சர் சி வி ராமன், சுப்ரமணியன் சந்திரசேகர், வெங்கடராமன் ராமகிருஷ்ணன் மற்றும் இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்படும் எம் எஸ் சுவாமிநாதன், தமிழ் தாத்தா உ வே சாமிநாத அய்யர், சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன், அணு விஞ்ஞானியும் இந்தியா 1974ல் முதன்முதலாக அணுகுண்டை வெடிக்க காரண கர்தாவாக இருந்தவருமான "பி கே ஐயங்கார்", ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் என அனைவருமே தமிழ் பிராமணர்கள்தான்.இன்றைய நவீன உலகத்தில் தமிழ் நாட்டுக்கும், தேசத்துக்கும், மொத்த உலகத்துக்கும் தமிழ் பிராமணர்களின் பங்களிப்பு மகத்தானது. தமிழ்நாட்டில் வெறும் 2.75 சதவீதமே இருக்கும் ஒரு சமூகம் இத்தகைய ஒரு பங்களிப்பை அளிக்க இயலுமா என்று பலரை இது ஆச்சரியப்படுத்துகிறது. சிலரை பொறாமை படச் செய்கிறது. வேறு சிலரையோ அவர்கள் மேல் காழ்புணர்ச்சியோடு அலைய வைக்கிறது. ஆனால் பிராமண சமூகமோ எதற்குமே அசறுவது இல்லை. வன்முறை அவர்கள் வழி அல்ல. அவர்களை விமர்சனம் செய்யும் சில்லறை கூட்டங்களுக்கு அவர்கள் தரும் பதில் சாதித்து காட்டுவ‌துதான்.அந்த சாதனைகள் எல்லைகள் இல்லாமல் தொடர்ந்து சென்றுக் கொண்டே இருக்கிறது. அது தமிழ் தாயின் முகத்தில் பெருமிதத்தை வரவழைக்கிறது.

Raghunathan Iyer

unread,
Feb 6, 2016, 12:51:39 AM2/6/16
to arunalaya

இதுதான் உலகம்! இதுதான் வாழ்க்கை! நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகிற கேள்வி -ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும் ? இந்தக் கேள்விக்கு
புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதை

அது ஒரு கிராமம்... சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று ! காப்பாற்று ! என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக்கதறுகிறது. உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் ! என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, நான் உன்னைச் சத்தியமாகச் சாப்பிடமாட்டேன் ! என்னைக் காப்பாற்று ! என்று கண்ணீர்விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான்... சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது. பாவி முதலையே... இது நியாயமா ? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க... அதற்கென்ன செய்வது ? இதுதான் உலகம்... இதுதான் வாழ்க்கை ! என்று சொல்லிவிட்டுச் சிறுவனை விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்குச் சாவது பற்றிக்கூட கவலை இல்லை. ஆனால், நன்றிகெட்டதனமாக அந்த முதலை சொன்ன சித்தாந்தத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முதலையின் வாய்க்குள் மெள்ளப் போய்க் கொண்டிருக்கும் சிறுவன், மரத்திலிருந்த பறவைகளைப் பார்த்துக் கேட்டான் - முதலை சொல்வது மாதிரி... இதுதான் உலகமா ? இதுதான் வாழ்க்கையா ? அதற்குப் பறவைகள், எவ்வளவோ பாதுகாப்பாக மரத்தின் உச்சியில் கூடுகட்டி முட்டையிடுகிறோம்... ஆனால், அதைப் பாம்புகள் வந்து குடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றன... அதனால் சொல்கிறோம், முதலை சொல்வது சரிதான் ! ஏரிக்கரையில் மேய்ந்து கொண்டிருக்கும் கழுதையைப் பார்த்து சிறுவன் அதே கேள்வியைக் கேட்கிறான்... நான் இளமையாக இருந்த காலத்தில் என் எஜமான் அழுக்குத் துணிகளைச் சுமக்க வைத்து என்னைச் சக்கையாகப் பிழிந்தெடுத்தான். எனக்கு வயதாகி நடை தளர்ந்துபோனபோது எனக்குத் தீனி போட முடியாது என்று சொல்லி என்னைத் துரத்திவிட்டான். முதலை சொல்வதில் தப்பே இல்லை. இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை ! என்றது கழுதை. சிறுவனால் அப்போதும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை ! கடைசியாக ஒரு முயலைப் பார்த்து சிறுவன் இதே கேள்வியைக் கேட்கிறான். இல்லை ! முதலை சொல்வதை நான் ஏற்றுக் கொள்ளவில்லை ! முதலை பிதற்றுகிறது என்று முயல் சொல்ல... முதலைக்குக் கோபம் வந்து விட்டது. சிறுவனின் காலைக் கவ்வியபடியே வாதாடத் தொடங்கியது. ஊஹூம்! சிறுவனை வாயால் கவ்விக்கொண்டே பேசுவதால் நீ சொல்வது எனக்குச் சரியாகப் புரியவில்லை என்றது முயல். பெரிதாகச் சிரித்த முயல் புத்தியில்லாத முதலையே ! உன் வாலின் பலத்தைக் கூடவா நீ மறந்துவிட்டாய் ? சிறுவன் ஓட முயற்சித்தால் வாலால் அவனை ஒரே அடியில் உன்னால் வீழ்த்திப் பிடித்துவிட முடியுமே. என்று நினைவுபடுத்த... முதலையும் சிறுவனை விடுவித்துவிட்டுப் பேசத் துவங்கியது. அப்போதுதான் முயல் சிறுவனைப் பார்த்து நிற்காதே ! ஓடிவிடு ! என்று கத்த.. சிறுவன் ஓடுகிறான். முதலை, சிறுவனை வீழ்த்த வாலை உயர்த்திய போதுதான் அதற்கும் ஒன்று புரிந்தது. வலையிலே சிக்கியிருக்கும் வால் பகுதியை விடுவிப்பதற்குள் சிறுவனை விழுங்கத் துவங்கியது. அதன் நினைவுக்கு வந்தது ! சிறுவன் தப்பி ஓடிவிட்டான் அப்போது கோபத்தோடு தன்னைப் பார்த்த முதலையிடம் முயல் புன்னகையுடன் சொன்னது - புரிந்ததா... இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை ! சிறிது நேரத்துக்கெல்லாம் தப்பி ஓடிய சிறுவன் கிராமத்தினரை அழைத்து வர... அவர்கள் முதலையைக் கொன்றுவிடுகிறார்கள். அப்போது சிறுவனோடு வந்த ஒரு நாய் அந்தப் புத்திசாலி முயலைத் துரத்தி... சிறுவன் பதறி ஓடிச்சென்று தடுப்பதற்குள் கொன்றுவிடுகிறது..சிறுவன் பெருமூச்சு விடுகிறான். இதுதான் உலகம் ! இதுதான் வாழ்க்கை என்று சமாதானம் ஆகிறான். வாழ்கையின் அநேக விஷயங்களை நம்மால் முழுக்க புரிந்துகொள்ள முடியாது ! என்று இந்து மத ரிஷிகள் சொன்னதைத்தான் புத்தமதமும் சொல்கிறது.


Raghunathan Iyer

unread,
Feb 12, 2016, 12:53:34 AM2/12/16
to arunalaya


பெண்களுக்கு அழகு எது?
பெண்களுக்கு அழகு எது?

* பயனில்லாத பொருள்களை நாம் தூக்கி எறிவது போல், பயனற்றவர்களின் அன்பையும் உதறித் தள்ளுவதே அறிவுடைமை.

* ஒருவர் பலமுறை கூறி, அதன் பின் செயலை செய்து முடிப்பது பண்பாகாது. தானே தனது கடமையைச் செய்ய வேண்டும்....

* மன எழுச்சியைப்பெற அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்வது சரியான வழி முறையாகும்.

* பெரியோர் இருக்குமிடத்தில் பேசும் போது நம் வாதங்களை, முகத்தில் அடித்தால் போல் நிதானமிழந்து கூறுவதை தவிர்க்க வேண்டும்.

* கணவனைக் காத்தல், வீட்டைக் காத்தல், அறத்தைக் காத்தல், அன்பைக் காத்தல் என நல்லனவற்றைக் காப்பதே பெண்ணுக்கு அழகு.

* தீயவனவற்றைக் காப்பாற்றக் கூடாது, அவை அழிவுக்கு காரணமானதாகும், நல்லனவற்றையே காத்தல் நம்மையும் ஒரு பொருட்டாக உலகம் மதிக்க வழி ஏற்படுத்தித் தரும்.

* நல்ல நூல்கள் கூறும் கருத்துக்களையும், பெரியோர் கூறும் அறிவுரைகளையும் உள்ளத்தில் வைத்து காத்தல் வேண்டும்.

- ஔவையார்.

இந்த காலத்தில் பெண் குழ்ந்தைகளை குறைவது வழக்கமாகி வருகிறது அதற்கு காரணம் அவர்களல்ல. பெற்றோரே !!
நாம் தான் இப்படி வாழ்ந்தோம். இவர்களாவது சுதந்திரமாக இருக்கட்டும் என்று சரியாக வளர்பதில்லை. கஷ்டங்களை தாங்கும் முறைகளை அதன் அத்தியாவசியத்தையும் மனதிற்கு கற்றுதருவதில்லை.
திருமண வாழ்க்கைக்கு பிரச்சனையில்லை என்ற ஜாதக அமைப்பு உள்ளவர்களுக்கு எந்த பிரச்சனையுமில்லை. எல்லாம் சரியாக நடந்துவிடும். ஆனால் இந்த ரெண்டும் கெட்டான அமைப்பு உள்ளவர்களுக்கு தான் பிரச்சனை அதிகம். இவர்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள்

சுதந்திரம் என்ற பெயரில், பிரச்சனையை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் , அவசியத்தையும் உணராத பெண்கள், தனது திருமண வாழ்கையில் ஜாதக ரீதியாக உள்ள பலகீனத்தை தெரியாமல், பிரச்சனை வரும் போது, அதை எதிர்கொண்டு மனதை அடக்கி புரிந்து நடக்க முயற்சிக்காமல், உடனே பிரச்சனையிலிருந்து வெளியேற முயற்சி செய்கின்றனர். சிலர் அடுத்த நல்லதொரு வாய்ப்பை தேட முயற்சிக்கிறார்கள். இதில் பெற்றோரின் பங்கும் நிறைய உள்ளது.

ஆக பெண்ணிற்கோ அல்லது ஆணிற்கோ திருமணத்தில் கொடுப்பினையும், நடக்கும் காலகட்டமும் பிரச்சனையானதாக இருந்தால், எங்கு சென்றாலும் அதே நிலைதான்.

அதன் அளவை மாற்றுவது. மனம். மதி. கட்டுப்பாடு.

ஆக, தனக்கு ஜாதகத்தில் பிரச்சனை இருக்கு என்றால் (அளவு மாறுபடும்), அவர்கள் மனதை அடக்கி கட்டுப்பட்டு செயல் பட்டால்தான். எந்த திருமண வாழ்க்கையும் நிலைக்கும்.

திருமண இல்லற பிரச்சனை என்பது அவரவர் சொந்த பிரச்சனை, அதை குடும்ப பிரச்சனையாக ஆக்குவது தவறு


Raghunathan Iyer

unread,
Feb 12, 2016, 4:10:50 AM2/12/16
to arunalaya

மனித உடலில் உள்ள முதுகுத்தண்டில் 32 இணைப்புகள் உள்ளன.இதை உண்ர்த்தவே,ஆலயத்தின் வாசலில் உள்ள கொடிமரத்தில் 32 கணுக்களை உடைய கட்டுக்கள் அமைத்துத்தந்தனர்.அதிலே தாப்பைக்கயிறுடன் துணிபொருத்திய கொடியை ஏற்றுவார்கள்.
இதன் பொருள்,நம் உடலில் உள்ள மூலாதாரத்தில் இருந்து முதுகுத்தண்டு வழியாக செல்லும் சுகம்னா நாடி வழியாக சகஸ்ரதளத்திற்கு (தலையின் மேல்பாகம்) செல்வதை விளக்கும் அறிவியல் தத்துவம் அதில் அடங்கி உள்ளது.
மேலும் ஆலயத்தில் கொடிமரத்திற்கு அருகில் தான்(விழுந்து) வணங்க வேண்டும், இது திருக்கோவில் விதி.எதற்குத் தெரியுமா? தன் நிலையால் உயர்ந்து நின்றால் ஓரறிவான மரத்தைக்கூட ஆறறிவான(மனிதன்) வணங்கும் என்பதைக் காட்டும் தத்துவம் தான்.
நன்றி: ஆன்மீகம்

Raghunathan Iyer

unread,
Feb 17, 2016, 2:08:04 AM2/17/16
to arunalaya


கணவன் - மனைவி உறவை புரிந்து கொள்ளும் 5 கட்டங்கள்
மாலைமலர் பதிவு
.
முதல் கட்டம் :
குதூகலமான, கொண்டாட்டமான காலம் இது. திருமணத்துக்கு முந்தைய அல்லது திருமணமான முதல் சில நாட்களை உள்ளடக்கிய இந்தக் காலம் தற்காலிகமானது. கணவன்-மனைவி இருவருமே சியர் லீடர்களாக இருக்கும் காலமும்கூட. வாழ்க்கை முழுக்க இந்த கட்டத்திலேயே இருந்து விட்டால் பிரச்சனைகளுக்கே இடமில்லை. ஆனாலும், அது சாத்தியமே இல்லை.
இரண்டாவது கட்டம் :
திருமணமாகி, வாழ்க்கையில் ஓரளவுக்கு செட்டிலான காலம் இது. ஒருவர் மீது ஒருவர் கொண்ட த்ரில் சற்றே குறைந்திருக்கும். ஆனாலும், பரஸ்பர பாராட்டு இருக்கும். சியர் லீடராக இருப்பதிலிருந்து விலக ஆரம்பிப்பார்கள். இருவருக்கும் இடையில் நெருக்கம் அப்படியே இருக்கும். ஒருவரின் தவறுகளை இன்னொருவர் மிகவும் சாதாரணமாக எடுத்துக் கொள்கிற மனநிலையில் இருப்பார். திருமண உறவிலேயே மிகவும் சிறந்த கட்டம் இது என்றாலும், இந்த நிலையிலும் பெரும்பாலான தம்பதியரால் தொடர்ந்து இருக்க முடிவதில்லை.
மூன்றாவது கட்டம் :
துணையின் மீதான த்ரில் இன்னும் கொஞ்சம் குறைந்திருக்கும். துணையின் பாசிட்டிவ் பக்கங்களை மட்டுமே பார்த்த நிலை மாறி, நெகட்டிவ் பக்கமும் தெரிய ஆரம்பிக்கும். துணையை உற்சாகப்படுத்துகிற சியர் லீடர் மனப்பான்மை முற்றிலும் காலியாகியிருக்கும். பரஸ்பர பாராட்டு அறவே இருக்காது. தவறுகளைக் கண்டுபிடிக்கத் தொடங்கி இருப்பார்கள். சின்னச் சின்ன விஷயங்களைக் கூட விமர்சிக்க ஆரம்பித்திருப்பார்கள்.
நான்காவது கட்டத்தில் நாம் தேர்ந்தெடுத்த துணை நமக்குக் கொஞ்சமும் பொருத்தமற்றவரோ... அவசரப்பட்டு தவறான முடிவெடுத்து விட்டோமோ என நினைக்க வைக்கிற கட்டம் இது. துணையிடமிருந்து விலகியிருக்கத் தோன்றும். துணையிடம் நிறைகளைவிட, குறைகளே அதிகம் என நினைக்க வைக்கும்.
ஐந்தாவது கட்டம் :
முந்தைய ஸோனில் தவறான துணையைத் தேர்ந்தெடுத்து விட்டோமோ எனக் குழம்ப வைத்தது மாறி, தவறான துணைதான் என முடிவே செய்யவைக்கிற கட்டம் இது. துணையிடம் நெகட்டிவ் விஷயங்கள் மட்டுமே உள்ளதென நினைக்கச் செய்யும். அப்படியொரு துணையுடன் வாழவே முடியாதென்கிற மனநிலைக்குத் தள்ளும். நிச்சயம் பிரிவை நோக்கி முன்னேற வைக்கும்.

Raghunathan Iyer

unread,
Feb 17, 2016, 2:49:27 AM2/17/16
to arunalaya

படித்ததில் பிடித்தது 
இக்கால தம்பதிகள் தெரிந்துகொள்ள வேண்டிய பதிவு

சந்தோஷ வாழ்வை விரும்பாதவர்கள் எவரேனும் உலகில் இருக்கிறார்களா என்ன! ”அதைத்தானே தேடிக்கொண்டிருக்கிறோம். கிடைக்க மாட்டேன் என்கிறதே!” என்று சிலர்- அல்ல அல்ல, பலர் கூக்குரலிடுவது கேட்கத்தானே செய்கிறது! என்ன காரணமாக இருக்க முடியும். ”பிரச்சனைதான்”
”பிரச்சினை இல்லாமல் மனிதனும் இல்லை பிரச்சினை இல்லாதவன் மனிதனே இல்லை” என்று கூறுவார்கள். அந்தளவிற்கு எங்கும் எதிலும் பிரச்சினை தான். வெளிப்பிரச்சினைகளை பேசித்தீர்த்துக் கொள்ளலாம்.
அதுவே அளவுக்கதிகமாகும் போது பிரச்சினைக்குரிய நபரையோ பிரச்சினையையோ தவிர்த்து விடலாம். ஆனால் பிரச்சினை குடும்பத்தில் ஏற்படும் போது தான் தொடங்குகிறது தலைவலி! திருமணம் முடித்தவர்கள் பிரச்சினை இல்லாமல் வாழ்நாள் முழுவதும் வாழ்வார்களேயானால் அது மிகப்பெரிய சாதனை தான்.
“இல்லவே இல்லை நாங்கள் இதுநாள் வரைக்கும் எந்த சண்டையும் இல்லாமல் வாழ்ந்து வருகின்றோம்` எனக் கூறும் சில தம்பதியினரும் உள்ளனர். மறுப்பதற்கில்லை. ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் வாழ்பவர்களாக இருப்பார்கள். ஒருவர் கோபப்படும் போது மற்றவர் அமைதியாக இருப்பதனாலேயே குடும்பச் சமனிலை பேணப்படுகிறது. இதற்குப் புரிந்துணர்வு மிக முக்கியமானதாகும்.
தனிநபரின் சுதந்திரத்திற்கு எவ்வகையிலும் பங்கம் வரும்போது கோபமும் கூட வருகின்றது. இருபாலாருக்கும் கோபம் ஏற்பட்டாலும் ஒப்பீட்டளவில் ஆண்கள் அதிகம் கோபப்படுவதைக் காண்கிறோம். இதுவே நமது சமூகத்தில் குடும்பத்தில் நிகழும் போது கணவன் அதிகம் கோபப்படும் சந்தர்ப்பத்தில் மனைவி அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயத்தில் தான் இருக்கின்றாள்.
இவ்விஷயத்தில் பெண்ணியத்தைப் பற்றியும் பெண் அடிமைத்தனத்தை பற்றியும் பேசிக்கொண்டு இருப்பார்களேயானால் வாழ்க்கையைத் தொலைத்து விட்டு நடுவீதியில் தான் நிற்க வேண்டும். 
கணவன்-மனைவி இரு தரப்பினருள் எந்தத் தரப்பினரும், தான் அடுத்த தரப்பினரைவிட முக்கியத்துவத்தில், தரத்தில் குறைந்தவர் என எண்ணிவிடக் கூடாது. ஒவ்வொருவரது பணியும் பங்களிப்பும் அடுத்த தரப்பினருக்கு மிகவும் அவசியம். மனைவி தனது கணவனுடன், குடும்பத்துடன் சிறந்த முறையில் உறவாடு வதற்கான மிக முக்கியமான பண்புகளாவன அன்பு, இளகிய உள்ளம், பாசம், பரிவு, பணிவு, கணவனது பணிக்காக செலுத்தும் நன்றி என்பனவாகும்.
கணவனுக்காக தன்னைப் பாதுகாத்துக் கொள்வதும், கணவனின் சொத்து, செல்வங்களை பாதுகாத்துக் கொள்வதும் அதனை வீண்விரயம் செய்யாதிருப்பதும் அவளது முக்கிய கடமைகளாகும். 
இல்லற வாழ்வு இனிக்க மனைவி கைகொள்ள வேண்டிய வழிமுறைகள், சாதனங்கள் போலவே, அதேபணியை சிறப்பாக்க கணவனுக்கும் பல வழிமுறைகள் காணப்படுகின்றன. அன்புகாட்டுவது, இரக்கமாக நடந்து கொள்வது, மனைவிக்கு முக்கியத்துவம் அளித்து தனது அன்பை அவளுக்கு வெளிப்படுத்துவதும், தனது அன்பை உணரச் செய்வதும், எப்பொழுதும் அவளைப் புகழ்வது, அவளோடு மென்மையாக நடந்து கொள்வது.
அவள் மீது பாசமழை பொழிவது, திறந்த மனதுடன் அவளுடன் பழகுவது, முடியுமான சந்தர்ப்பங்களில், முக்கியமான சந்தர்ப்பங்களிலெல்லாம் அவளுக்கு அன்பளிப்புக்களை வழங்குவது, அவளது சிறு தவறுகளை பெரிது படுத்தாதிருப்பது, அவளது கஷ்டமான அசௌகரியமான நேரங்களில் பொறுமையோடு அவளது பணிகளை சுமந்து கொள்வது, அவளது குடும்பத்தினரை கௌரவப்படுத்துவது, அவளது இரகசியத்தை பாதுகாப்பது, பிள்ளைகளில் கரிசனை காட்டி அவர்களை நல்ல முறையில் வளர்க்க உதவி புரிவது
இப்படி இருபாலரும் அனுசரித்து நடந்துகொண்டால் பிரச்சினையிலிருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழலாம்


Raghunathan Iyer

unread,
Feb 17, 2016, 2:55:18 AM2/17/16
to arunalaya


அண்ணாமலையே போற்றி.இதை படியுங்கள்.

Thanga Selva Vinoth's photo.
 

சிவ லிங்கம் பற்றி ரஷ்ய விஞ்ஞானியின் ஆராய்ச்சியில் கிடைத்த முடிவு.....

ஒரு ரெண்டு நிமிஷம் நேரத்தை ஒதுக்கி ரஷ்ய விஞ்ஞானி சொல்வதை படித்து பாருங்கள்.

ஒவ்வொரு இந்துவும் படித்து பகிர வேண்டிய அறிய விசயம்.

சிவலிங்கங்கள்ப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின்” என்பவரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது.

அது இந்த பூமியில் மொத்தம் எத்தனை லிங்கங்கள் உள்ளன என்று எண்ணிப் பார்க்கவோ, இல்லை அவற்றின் பூர்வ புராணக் கதைகளை அறியவோ முயலவில்லை.

இவற்றுக்கப்பால் சிவலிங்கங்கள் பற்றி நாம் யோசிக்கவும் அதை நாம் நேசிக்கவும் நிறைய அடிப்படைகள் இருப்பதாக டாக்டர் விளாதிமீர் கருதினார்.

அதில் முதலாவது, ஸ்தூல வடிவங்களில் இறை உருவங்களை உருவாக்கி வழிபாடு செய்யும் இந்து மதத்தில் ஒரு குழவிக் கல்லைப் போன்ற லிங்கம் என்னும் உருவமற்ற ஒரு உருவம் எப்படி உட்புகுந்தது என்பதுதான்.

உண்மையில் லிங்க சொரூபமானது மூன்று மதத்திற்கும், புத்த ஜைனர்களுக்கும் கூட பொதுவானது என்பதையும் அவர் கண்டுபிடித்தார்.

ஒரு மலை உச்சி! அதில் பௌர்ணமி இரவில் கரிய நிழல் உருவாய் கண்ணுக்குத் தெரிந்த லிங்க உருவத்தை ஒரு கிருத்தவன் சிலுவைச் சின்னமாகப் பார்த்தான்.

ஒரு இஸ்லாமியன் தங்களின் மசூதிக் கூரை தெரிவதாக கருதினார்.

புத்த ஜைன சன்யாசிகள் தங்கள் குருமகாங்கள் அமர்ந்து தவம் செய்து கொண்டிருப்பதாகக் கருதினார்கள்.

ஒரு இந்துவோ அது சிவலிங்கம் என்று திடமாக கருதி இருந்த இட்த்தில் இருந்தே வில்வ இலைகளை வாரி வாரி அர்ச்சித்தான்.

உருவம் ஒன்று.

ஆனால் அனைத்து மார்க்க தரிசிகளையும் அது திருப்திப் படுத்தியது என்றால் சிவம்தான் முதலும் முடிவுமான அனைவருக்கும் பொதுவான இறை ஸ்வரூபமா..?

டாக்டர் விளாதிமீர் இப்படிதான் கேட்கிறார்.

மேலும் அவர் புராணங்களிலும், இதிகாசங்களிலும் சிவம் பற்றி சொன்னதை அவர் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.

லிங்க உருவம் பற்றி யாரும் சரியாக உணரவில்லை என்பதுதான் அவரது கருத்து.

ஒரு ரஷ்ய நாட்டுப் பிரஜையாக இருந்தாலும் சிவலிங்க சொரூபம் அவருக்குள் ஆழமான பாதிப்புகளை உருவாக்கியதாக அவர் கூறுகிறார்.

லிங்கம், சதுரம், செவ்வகம், வட்டம், முக்கோணம் என்று கணித வடிவங்கள் அவ்வளவையும் தனக்குள் கொண்டிருப்பதாகவும், ஒவ்வொரு கோணத்தில் இருந்து பார்க்கும்போதும் ஒருள் பொருள் தருவதாகவும் இருக்கிறது என்பது அவர் கருத்து.

குறிப்பாக அணு தத்துவம் சிவலிங்க சொரூபத்துக்குள் விலாவரியாக இருக்கிறது.

லிங்கத்தைப் பயன்படுத்தத் தெரிந்தால், அது மழை தரும், நெருப்புத் தரும், காற்று தரும் கேட்ட எல்லாம் தரும், என்றும் நம்புகிறார்.

அப்படி என்றால் சிவமாகிய லிங்க ஸ்வரூபம் என்பது மானுடர்கள் பயன்படுத்தத் தெரியாமல் வைத்திருக்கும் மகத்தான ஒரு எந்திரமா..?

டாக்டர் விளாதிமீரின் சிவஸ்வரூப ஆராய்ச்சியில் ஒரு ஆச்சரியமூட்டும் தகவல் ஒன்றும் அவருக்குக் கிட்டியதாம்.

இந்த மண்ணில் பூமிக்கு மேலாக கண்ணுக்குத் தெரியும் விதத்தில் உள்ள லிங்க ஸ்வரூபங்கள் இல்லாமல் பூமிக்குள் புதைந்து கிடக்கும் ஸ்வரூபங்களும் ஏராளமாம்!

அதுவே அவ்வப்போது ஸ்வயம்பு மூர்த்தியாய் வெளிப்படுகிறதாம்.

ஸ்வயம்பு மூர்த்தங்களின் பின்புலத்தில் பஞ்சபூத சக்திகளின் இயக்கம் ஒரு சீராகவும், ஆச்சரியம் ஊட்டும் விதத்தில் ஒன்றோடொன்று பின்னிப்பினைந்த கூட்டுறவோடும் செயல்படுகிறதாம்.

சுருக்கமாகச் சொன்னால், அந்த மூர்த்தங்களைப் பஞ்ச பூதங்கள் ஆராதிக்கின்றன என்பதே உண்மை என்கிறார்.

இப்படிப்பட்ட ஆராதனைக்குறிய இடங்களில் கூர்ந்து கவனித்தபோது பஞ்ச பூதங்களும் சம அளவிலும் அத்துடன் சீரான இயக்கத்துடனும் அவை இருக்கின்றன.

மனித சரீரத்திலும் பஞ்ச பூதங்கள் உள்ளன.

இவை சுயம்புலிங்க ஸ்தலங்களில் இயற்கையோடு கூடிச் செயல்படுகின்றன என்கிறார்.

அதாவது சுயம்பு மூர்த்தி உள்ள ஸ்தலங்களில் வாழும் மனிதர்களே அந்த மண்ணுக்கான மழை.

காற்று, அக்கினி மண்வளம் ஆகியவைகளைத் தீர்மானிக் கிறார்கள் என்று கூறும் விளாதிமீர், மதுரை போன்ற சுயம்புலிங்க ஸ்தலங்களில் கூடுதலான மழை அல்லது குறைவான மழைக்கு அங்கு வாழும் மக்களின் மனநிலையே காரணமாகிறது என்கிறார்.

சுயம்பு லிங்கங்கள் உள்ள மண்ணில் வாழும் மக்கள் மனது வைத்தால் அங்கே எதை வேண்டுமானாலும் உருவாக்கிட இயலும் என்றும் கூறுகிறார்!.

இந்த பூமியானது சூரியன் உதிர்ந்த ஒரு சிறிய அக்னித் துளி என்கிறது விஞ்ஞானம்.

மெல்லக் குளிர்ந்த இதில் அடுக்கடுக்காய் உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன.

அந்த உயிரினங்கள் உயிர் வாழத் தேவையான அனைத்தும் கூட அப்போது தோன்றின.

இதுதான் பல கோடி ஆண்டுகளைக் கண்டு விட்ட இந்த பூமியின் சுருக்கமான வரலாறு.

மாற்றம் என்பதே இந்தப் பூமியில் மாறாத ஒன்றாக என்றும் இருப்பது.

அந்த மாற்றங்களால் வந்ததே இந்த மனித சமூகம்.

கூன் விழுந்த, கொத்துக் கொத்தான முடி கொண்ட ஏழு எட்டு அடிக்குக் குறையாத உயரம் கொண்ட குறைந்த பட்சம் 150. கிலோ எடையுடன் தொடங்கியதுதான் சராசரி மனிதனின் உடலமைப்பு.

இன்று அவன் சராசரியாக ஐந்தரை அடி உயரம், எண்பது கிலோ நிறை, நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை என்று மாறியிருக்கிறான்.

பல ஆயிரம் ஆண்டுகளாக இந்நிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை.

ஆனாலும் காலப்போக்கில் இவன் மேலும் குட்டியாகி சுண்டிச் சுருங்கி வினோதமான முக அமைப்பை எல்லாம் பெற்று.

ஒரு பெருச்சாளி போல் நிலப்பரப்பைக் குடைந்து அதனுள் ஊர்ந்து சென்று பதுங்கி வாழும் காலம் வரலாம் என்பதெல்லாம் விஞ்ஞான அனு மானங்கள்.

இந்த பூமியில் கிடைக்கும் பலவித ஆதாரங்களும், மனித மனத்தின் ஊகம் செய்து பார்க்கும் சக்தியுமே!

இதன் நடுவே மிக மாறுபட்ட கருத்துகளுடன், நமக்கிருக்கும் அறிவாற்றலால் நம்பமுடியவில்லை என்று ஒரு வார்த்தையில் கூறும் விதமாய் இருப்பதே மதப் புராணங்கள்.

இதில் புராணவழி அறியப்பட்ட சிவமானது தனித்து நிற்கிறது.

புராணம், விஞ்ஞானம் இரண்டையும் கடந்து மூன்றாவதாய் ஒன்றும் உள்ளது.

அதுதான் நான்!

மானுடமே முடிந்தால் என்னைப் புரிந்துகொள் என்பதுபோல் இருக்கிறது அது என்கிறார் டாக்டர் விளாதிமீர்!

இந்த பூவுலகில் சிவம் தொடர்பான அடையாளக் குறியீடுகள் பாரத மண்ணில் மட்டுமன்றி ஆப்பிரிக்கா, ஐரோப்பா முதலிய கண்டங்களில் கூட இருக்கிறது என்பது டாக்டர் விளாதிமீரின் கருத்து.

அமெரிக்காவில் “ கிராண்ட் கன்யான் “ என்னும் வித்தியாசமான மலைப் பகுதியில் பராசக்தியின் அம்சங்கள் என்று வர்ணிக்கப்படும் “ சிவம், விஷ்ணு, பிரம்மன் “ மூன்றின் அடையாள உருவங்கள் காணப்படு கின்றனவாம்.

ஆயினும் இந்திய மண்ணில் மட்டும் சிவம் தொடர்பான சிந்தனைகளும் சைவம் என்கிற ஒரு பிரிவும் உருவாக ஆழமான ஒரு காரணம் இருப்பதாக விளாதிமீர் கருதுகிறார்.

உலகின் உயர்ந்த சிகரமான இமயம் பூகோள ரீதியில் பூமியின் மையத்தில் {கிட்டதட்ட} காணப்படுகிறது.

அதன்படி பார்த்தால் இந்த உலகே கூட சிவலிங்க சொரூபம் எனலாம்.

ஒரு வட்டத்தில் இருந்து கூம்பு முளைத்தது போல் உலகமே ஆவுடையராகத் திகழ இமயம் சிவஸ்தம்பமாக எழும்பி நிற்கிறது.

அங்கே பஞ்ச பூத ஆராதனையாக குளிர்ந்த காற்றும் உறைந்த பனியே நீராகவும், அதன் முற்றிய குணமே நெருப்பாகவும் இருக்கிறது.

ஈர்ப்பு விசைக்கு உட்பட்ட வெளி வேறு எங்கும் காணப்படாத விதத்தில் தூயதாக எல்லாவித கதிர் வீச்சுக்களையும் காணப்படாததாகக் திகழ்கிறது.

இங்கே உயிராகிய ஜீவன் மிகச் சுலபமாக சிவத்தை அடைந்து விட {அ} உணர்ந்து விட ஏதுவாகிறது.

அதனாலேயே இங்கே ஞானியர் கூட்டம் அதிகம் இருக்கிறது என்பதும் அவரது கருத்து!

இந்த ரஷ்ய விஞ்ஞானி சொன்ன விஷயங்கள் எதுவும் எந்த விஞ்ஞானியும் மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

{இது எத்தனை பேருக்கு தெரியும்? அவசியம் பகிரவும்…

நன்றி - சரவணா ஹீ

Raghunathan Iyer

unread,
Feb 17, 2016, 3:03:16 AM2/17/16
to arunalaya


 அறிவியல் கண்டுபிடிப்பு?
மகாமகம் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது, ஏன் ?
தமிழரின் வானியல் கண்டுபிடிப்பு தான். வியாழன் கிரகம் ஒரு முறை சூரியனைச்சுற்றி வர எடுக்கும் காலம் 12 ஆண்டுகள். வியாழன், சூரியன், பூமி, நிலவு, மகம் என்ற நட்சத்திரக்கூட்டம் என ஐந்தும் ஒரே நேர்கோட்டில் வருவது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை. அதுவும் மகம் என்ற நட்சத்திரக்கூட்டம் மாசி மாதத்தில் வரும் பௌர்ணமி அன்று இணைவது சிறப்பானது. அதனால்தான் மாசிமகம் எனப்படுகிறது.
மகம் என்பது இந்திய வானியலில் சொல்லப்படுகின்ற இருபத்தேழு நட்சத்திரப் பிரிவுகளுள் 10 ஆவது பிரிவு ஆகும்.
சிங்கராசியில் அமைந்துள்ள இந்த நட்சத்திரக்கூட்டத்தின் அமைப்பு கீழே.
கும்பகோணத்தில் உள்ள மகாமக குளமும் இந்த சிங்க நட்சத்திர அமைப்பை ஒட்டியே கட்டப்பட்டிருப்பது சிறப்புக்குரியது.
நட்சத்திர சிங்கத்தின் உடல், வயிற்றுப்பகுதியை மையமாகக்கொண்டு கட்டியிருக்கிறார்கள் தமிழர்கள். என்ன ஒரு விண்ணியல் அறிவு அவர்களுக்கு.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனைச் சுற்றும் வியாழன் மக நட்சத்திரக்கூட்டத்தில் இருக்கும் போது
சூரியன் கும்ப நட்சத்திரக்கூட்டத்தில் இருப்பதால் இவ்வூர் கும்ப-கோணம் என்றே அழைக்கப்படுகிறத அனபுடன் சிவாய நம
Sivaya Namaha's photo.
Sivaya Namaha's photo.

Raghunathan Iyer

unread,
Feb 17, 2016, 3:06:19 AM2/17/16
to arunalaya

கும்பகோணம் ஒரு சிறந்த க்ஷேத்ரம் எனபதற்கும், மூன்று லோகத்திலும் இம்மாதிரி ப்ரஹ்மஹத்தி முதலிய பாபங்களை போக்கும் தீர்த்தம் வேறுஎங்குமில்லை என்பதற்கு நமக்கு புராணங்களிலிருந்து நிறைய பிரமாணங்கள் கிடைக்கின்றன.

சேங்காலிபுரம் பிரஹ்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் அவர்களும் தனது ‘ஜயமங்கள ஸ்தோத்ரம்’ க்ரந்தத்தில் கும்பகோணத்தை பற்றியும், மஹாமகத்தை பற்றியும் பல விவரங்களை பொக்கிஷமாக நமக்கு தந்துள்ளார்.

ஒரு சமயம் கங்கை முதலிய மஹாநதிகள் கைலாச மலை சென்று ஸ்ரீ பரமேஸ்வரனை நமஸ்கரித்து தங்களது நீண்ட நாள் ஆதங்கத்தை ஒரு பிரார்ர்தனையாக அவர் முன் வைத்தார்கள்.: “ஓ மஹேஸ்வரா, கோடானுக்கோடி ஜனங்கள் தங்களது மலை போன்ற பாபங்களை போக்கிக் கொள்ள எங்களை நாடி ஸ்நானம் செய்து வருகின்றார்கள். அதில் மஹாபாபிகளும் அடங்குவர். உபபாதகத்தை செய்தவர்களும் ஸ்நானம் செய்து பாபங்களை எல்லாம் விட்டு வி டுகிறார்கள். இந்த நிலையில் நாங்கள் எங்கள் பாபத்தை எங்கு போக்கிகொள்ளுவோம், தாங்கள்தான் எங்களுக்கு தக்க வழியை காட்டி ரக்ஷிக்கவேண்டும் என வேண்டினர்.

ஸ்ரீ பரமேஸ்வரன் பதில் கூறியதாவது.: ஓ, தீர்த்த தேவைதைகளான நதிகளே, இன்றே நீங்கள் கும்பகோணம் செல்லுங்கள். இன்று அங்கு மஹாமகம். ‘பாபநோதகம்’ (Paapanodhakam) என்ற தீர்த்தத்தில், அதாவது மஹாமக குளத்தில், ஸ்நானம் செய்யுங்கள், உங்களது பாபங்கள் அனைத்தும் விலகும். இது சத்யம், இது சத்யம் என பரமசிவன் கூறுகிறார்.

ஆம், மஹாமகத்தன்று அனைத்து புண்ணிய நதிகளும் இங்கு சங்கமிக்கின்றன. ஆதலால் மஹாமக குளத்தில் ஸ்நானம் செய்பவர்களுக்கு அனைத்து புண்ணிய நதிகளில் ஸ்நானம் செய்த பலன் கிடைக்கின்றது என்பதில் சந்தேகம் இல்லை.

Sarma Sastrigal's photo.

Raghunathan Iyer

unread,
Feb 17, 2016, 3:09:17 AM2/17/16
to arunalaya

குறையொன்றுமில்லை

ஓலைப் பெட்டியில் இருந்த பூணூலை எடுத்து, மந்திரத்தைச் சொல்லி தராசுத் தட்டில் வைத்தார் அந்த ஏழை பிராமணர். 
"இந்த பூணூல் அப்படி என்ன எடை இருந்து விடப்போகிறது? பாவம் இது கூடத் தெரியாமல் இவர் அதன் எடைக்கு நிகராகப் பொருள் கொடுத்தால் போதும் என்கிறாரே" என்று மனத்துக்குள் எண்ணிக் கொண்டான் ராஜா.

ஒரு காசை எடுத்துத் தட்டிலே போட்டான். அந்தத் தட்டு கூடத் தாழவேயில்லை! இரண்டு காசுகள் போட்டான்... பத்து... எவ்வளவு போட்ட போதும் அசையாமல் நின்றது. தன்னுடைய ஆபரணங்கள் அனைத்தையும் கொண்டு வரச் சொல்லி பூணூலுக்கு நிகராக எடை போட்டுப் பார்த்தான். அப்போதும் அதன் இணையை எட்ட முடியவில்லை. இரத்தின கிரீடத்தை எடுத்து வைத்தான். "என்னிடம் இருக்கிற மொத்தத்தையும் எடுத்து வச்சுட்டேன்" என்கிறான்.

உடனே அந்த நாட்டின் மந்திரி போய், ராஜாவின் காதோடு சொன்னான்; "அவசரப்பட வேண்டாம்! இந்த பிராமணரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நாளைக்குத் திரும்பவும் வரச் சொல்லுங்கள்..."

ராஜாவும் அந்த உத்தமரைப் பார்த்து, "நீங்கள் நாளைக்கு வந்தால் இந்த நூலுக்கு நிகரான எடையில் செல்வத்தைத் தருகிறேன்" என்றான்.

பிராமணர் உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை நடுங்கிக் கொண்டிருந்தார். "இப்படி பூணூல் எடைக்கு மேல் வாங்கிக்கலை என்று சொல்லி விபரீதத்திலே மாட்டிக் கொண்டோமே" என்று அவருக்கு ஒரே பயம்.

அந்த பயத்துடனேயே புறப்பட்டுப் போனவர் மறுநாள், "சிரச்சேதம் பண்ணி விடுவானோ அரசன்...? என்கிற பயத்துடனேயே திரும்பி வந்தார்.

தராசு கொண்டு வரப்பட்டது. பூணூலை வைத்தார் அந்தணர். ராஜ ஒரு காசை எடுத்துப் போட்டான். உடனே பூணூல் தட்டு மேலே போய் விட்டது.

"அதே நூல்தான், அதே தராசுதான். பிறகெப்படி இந்த அதிசயம் நடந்தது? நேற்று வேறு மாதிரி அல்லவா நடந்தது? ராஜ மந்திரியை அழைத்து தன் சந்தேகத்தைக் கேட்டான்.

மந்திரி அதற்கு விளக்கம் சொன்னான்.

நேற்று அவர் கொண்டு வந்தது யக்ஜோபவீதம். யக்ஜோபவீதம் பரமம் பவித்ரம்னு சொல்வதுண்டு. மிகவும் புனிதமானது அது. அதற்கு நிறை காண முயல்வதே தப்பு. நமக்கெல்லாம் ஆத்மா என்று பெயர். பகவானை மட்டும் பரமாத்மா என்று "பரம" - "உத்தமமான" என்கிற அடை மொழி சொல்லி அழைக்கிறோம். அதே அடைமொழி இந்த யக்ஜோபவீதத்துக்கும் சொல்லப்படுகிறது. அவ்வளவு பவித்ரமானதாக அது இருந்ததினாலேதான் ராஜ்யத்தையே எடை கொண்டது. ஆனால் இன்றைக்கு அதனுடைய பவித்ரம் போய் விட்டது. அதனாலே சுலபமாக அதை எடை போட்டு விட்டோம்.

"ஏன் போனது அதனுடைய பவித்ரம்" என்று கேட்டான் அரசன்.

"பூணூலைத் திரிப்பவர்கள் (தரிப்பவர்களும்) நியமங்களில் இருந்து தவறவே கூடாது. ஆனால், இந்தப் பெரியவர் தமது பயம் காரணமாக இன்றைக்கு அந்த நியமங்களைச் செய்யவில்லை. அதனாலே தான் அதன் பவித்ரம் போனது"

நியமமாகச் செய்யப்படும் பூணூலின் மகிமையைச் சொல்வது இந்தக் கதை. சர்வமேன்மை பொருந்திய பரம பவித்ரமான யக்ஜோபவீதம் பகவானுக்கு வாமன அவதாரத்தின் போது அணிவிக்கப்பட்டது. சூரியனே அவருக்குப் பிரம்மோபதேசம் பண்ணினார் என்று சொன்னேனில்லையா...? பார்வதி தேவி வந்து அவருக்கு முதல் பிட்சை இடுகிறாள். பலாச தண்டத்தை பகவானின் கையிலே தருகிறார்கள்.

பலாச தண்டம் என்பது என்ன...? தண்டம் என்பது சந்நியாசிகளின் கரத்தில் கொடுக்கப்படும் கோல். உபநயன காலத்தில் பலாச மரத்தின் கிளையை இப்படி 'வடு'வின் கையில் கொடுப்பதுண்டு.
ஏன் பலாச மரத்தின் கிளையைக் கொடுக்க வேண்டும்? வேறு மரத்தின் கிளையைக் கொடுத்தால் என்ன என்று கேட்டால் அதற்கு ஒரு விளக்கம் இருக்கிறது.

வேத வித்துக்கள் பலர் ஒரு சமயம் பாலச மரத்தடியில் கூடினார்கள். அங்கே அமர்ந்தபடி காயத்ரி மந்திரத்தை ஓதி அதன் மகிமையைப் பேசினார்கள். இதைக் கேட்டுக் கொண்டே இருந்த பலாச மரத்தின் வட்டமான இலைகள் மூன்று மூன்று கூறுகளை உடைய இலைகளாக வடிவத்தில் மாறிவிட்டன. காயத்ரி மந்திரத்தில் மூன்று பாகங்கள் உண்டு. அந்த மந்திரத்தைக் கேட்டதும் அதன் மூன்று பாகங்களையும் தன் இழையிலேயே காட்டியது பலாச மரம்! அதனால்தான் பலாச தண்டத்தைக் கொடுக்கும் வழக்கம் உண்டாயிற்று.

"மாயா வாமனனே மதுசூத நீயருள்வாய்" என்று "வாமனனையும், மாயனை மன்னு வடமதுரை மைந்தனை" என்று கண்ணனையும் பாடுகிறார்கள் ஆழ்வார்கள்.

இப்படிப்பட்ட மாயன்தான் மூவுலகளந்த திரிவிக்கிரமனாய் விச்வரூபம் எடுக்கவிருக்கிறான்.

விச்வ சப்தத்துக்குரிய இந்த மாயன், நர்மதா நதி தீரத்திலே, பிரஹலாதனுடைய பேரனான பலி சக்ரவர்த்தி செய்த அசுவமேத யாகத்துக்கு வருகிறான்.

யக்ஞ சம்ரக்ஷகன் அந்த பரமாத்மா. சிரார்த்த சம்ரக்ஷகன் என்றும் அவனைச் சொல்வதுண்டு. சிரார்த்தம் பண்ணும்போது ஸ்ரீ மகாவிஷ்ணும் ஆவாஹயாமிஎன்று அவனை ஆவாஹனம் பண்ணுகிறோம். எனவே அவன் சிரார்த்த சம்ரக்ஷகன் ஆகிறான்.
சிரார்த்த சம்ரக்ஷகனாக மட்டுமா - அவன் இருக்கிறான்? எல்லாவற்றுக்கும் சம்ரக்ஷகன் அவன்தான் சர்வதா ரக்ஷகன். எப்போதும் ரக்ஷிக்கிறவன். சர்வத்ர ரக்ஷகன் - எங்கும் ரக்ஷிக்கிறவன்!

இதை உணர்த்த வேடிக்கைக் கதை ஒன்று சொல்வார்கள். ஒருத்தர் மாதம் 25ஆம் தேதி வரைக்கும் எப்படியோ குடும்பத்தை நடத்தி விட்டார்; "அடுத்த ஆறு நாளைக்கு பகவான் எப்படியாவது நடத்திக் குடுத்துட்டான்னா, 1ஆம் தேதி எனக்கொரு பத்தாயிரம் ரூபாய் பணம் வரும். அடுத்த மாசம் பரவாயில்ல; சமாளிப்பேன்" என்றார் அவர்.

25தேதி வரை இவர் நடத்தி விட்டாராம் குடும்பத்தை! மேல் வருகிற ஆறு நாட்களுக்குத்தான் பகவானுடைய சகாயம் வேண்டுமாம்! அடுத்த மாதம் பத்தாயிரம் நம்மை ரட்சிக்கும் என்கிறார். எத்தனை வித ரக்ஷணம் பாருங்கள்...! திரவிய ரக்ஷணம். இவரே ஒரு ரக்ஷகர். அப்புறம் பரமாத்மா...? சும்மா இடையிலே ஆறு நாட்களுக்கு ரக்ஷித்தால் போதுமாம்.
இது நம்மிடத்திலே இருக்கிற அவிவேகத்தினாலே வரும்படியான சொல்! உண்மையில் பகவான்தான் சர்வதா ரக்ஷகன். அவன் ரக்ஷிக்கிறதில்லை என்று நாம் நினைக்கலாமா...? நினைக்கத்தான் முடியுமா? அவன் தான் நம்மை எப்போதும் ரக்ஷித்துக் கொண்டிருக்கிறான் என்பதைப் பூரணமாக உணர வேண்டும்.

பராசர பட்டர் ஸ்ரீரங்கத்திலே உபன்யாசம் பண்ணுகிறார் - பகவானை ரக்ஷகன் ரக்ஷகன் என்று சொல்லிக் கொண்டேயிருக்கிறார். உபன்யாசம் கேட்கிற கோஷ்டியிலே ஒருத்தர் எழுந்தார்: "வெறுமனே ரக்ஷகன் ரக்ஷகன் என்று சொல்லி விட்டால் போதுமா? புத்தகத்திலே இருக்கற பிரமாணத்தைக் காண்பித்தால் போதுமா? எங்கே பகவான் நம்மை ரக்ஷிக்கிறான்? அப்படி அவன் ரக்ஷிப்பதாகத் தெரியவில்லையே. நானல்லவா அவஸ்தைப்படுகிறேன் என் குடும்பத்தை ரட்சிக்க! ஓடி ஓடி உழைத்தாலும் பொழுது போதவில்லையே... பகவான்தான் ரக்ஷிக்கிறான் என்று சொன்னால் எப்படி சுவாமி பொருந்தும்?"

"அப்போ பகவான் உன்னை ரக்ஷிக்கலை என்கிறாயா" கேட்டார் பட்டர்.

"ரக்ஷிக்கிறதாகத் தெரியலை. படர அவஸ்தை மொத்தமும் நான்தான்"

பார்த்தார் பட்டர். "இதுக்கான பதிலை நாளைக்குச் சொல்கிறேன். காலையில் 10 மணிக்கு என் கிரஹத்துக்கு வாரும்" என்று சொல்லி அனுப்பி விட்டார்.

பராசர பட்டர் ரங்கநாதர் கோயில் புரோஹிதர். கோயில் காரியங்களை முடித்துக் கொண்டு 10 மணிக்கு பட்டர் தனது திருமாளிகைக்கு வந்தார். கேள்வி கேட்டவரும் சரியாக வந்து விட்டார்.

பட்டர் கேட்டார்: "ராத்திரி நன்றாகச் சாப்பிட்டீரா?"

"சாப்பிட்டேன் "

"நன்றாக தூங்கினீரா"?

"தூங்கினேன்".

"எத்தனை மணிக்குப் படுத்தீர்"?

"9 மணிக்கு"

"எத்தனை மணிக்கு தூக்கம் வந்தது"?

"ஒரு ஒன்பதரை மணியிருக்கும்".

"எப்போது வழக்கமாய் எழுந்திருப்பீர் "?

"காலை நாலரை மணிக்கு"

"ராத்திரி ஒன்பதரை மணிக்கப்புறம் உம்மை நீர் உணர்வீரா"?

"தூக்கத்திலே யார்தான் உணர்வார்கள்"?

"இரவு ஒன்பதரையில் இருந்து பிராதஹ் காலம் நாலரை மணி வரைக்கும் உம்மை நீரே தான் ரக்ஷித்துக் கொள்கிறீரா"?

"தூங்கும்போது எப்படி ரக்ஷித்துக் கொள்ள முடியும்"?

"தூங்கும்போது, நாம் படுத்திருக்கும் பவனமே இடிந்து நம் மீது விழலாம். துஷ்ட ஜந்துக்கள், விஷ ஜந்துக்கள் வந்து கடிக்கலாம். இதில் இருந்து எல்லாம் நம்மைக் காப்பாற்றி அந்த பரமாத்மா ரட்சிக்கவில்லையா? இவ்வாறு தூக்கத்திலே ரக்ஷிப்பவன் விழிப்பின் போதும் ரக்ஷிப்பான் என்று தெரியவில்லையா"? என்று கேட்டார் பராசர பட்டர்.

Raghunathan Iyer

unread,
Feb 18, 2016, 12:28:04 AM2/18/16
to arunalaya

மாசி மகத்தன்று சில நிகழ்வுகள் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.

மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள திருக் குறுக்கை வீரட்டானேஸ்வரத்தில் மாசி மகத்தன்று காம தகனவிழா நடைபெறும். சிவபெருமான் ஆழ்ந்த தியானத் திலிருக்கும்போது, தேவர்களின் வேண்டுகோளின்படி சிவபெருமான் மீது மலரம்பு எய்தான் மன்மதன். கோபம் கொண்ட அவரின் நெற்றிக் கண்ணிலிருந்து புறப்பட்ட தீப்பொறிகள் மன்மதனை எரித்து சாம்பலாக்கியது. பிறகு அவன் மனைவி ரதிதேவியின் வேண்டுதலால், மீண்டும் மன்மதன் அவள் கண்களுக்கு மட்டும் தெரியும் படி சிவபெருமான் அருளினார். இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் விழாவாக காம தகனவிழா மாசிமகத்தன்று நடைபெறும்.

இரண்யன் என்ற அசுரன் பூமாதேவியைக் கடத்திச் சென்று பாதாள லோகத்தில் ஒளித்து வைத்தான். இதனை அறிந்த மகாவிஷ்ணு, வராக அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அந்த அசுரனை வதம் செய்து, பூமாதேவியை வெளிக்கொணர்ந்தது மாசி மக நட்சத்திரத் திருநாளில்தான் என்று விஷ்ணு புராணம் கூறும்.
கன்னிப் பெண்ணான குந்திதேவி, சூரிய பகவானை நேரில் வரவழைக்கும் மந்திரத்தை உச்சரித்ததால், சூரிய பகவான் அவள்முன் தோன்றினார். அதன் விளைவால் குந்திதேவி குழந்தை பெற்றாள். பழிச்சொல்லுக்கு அஞ்சி அந்தக் குழந்தையை (கர்ணன்) ஒரு பெட்டியில் வைத்து ஆற்றில் விட்டாள்.

அந்தப் பாவம் அவளை வாட்டியது. அதற்குப் பிராயச்சித்தம் செய்ய வேண்டி, உரோமச முனிவரைச் சந்தித்தாள். அவர், "மாசி மக நட்சத்திரத்தன்று ஏழு கடல்களில் ஒரே சமயத்தில் நீராடினால் உன் பாவம் நீங்கும்' என்று சொன்னார். "அது எப்படி ஒரே நாளில் ஏழு கடல்களில் நீராட முடியும்?' என்று பலத்த யோசனையில் ஆழ்ந்த குந்திதேவி, வழி காட்டியருளுமாறு இறைவனை இறைஞ்சினாள். அப்போது, "திருநல்லூர் கோவிலுக்குப் பின்புறம் ஒரு தீர்த்தம் உள்ளது. அதை ஏழு கடலாக நினைத்து மாசி மகத்தன்று நீராடு வாயாக' என்று அசரீரி ஒலித்தது. குந்திதேவியும் அப்படியே செய்து தன் பாவத்திலிருந்து விடு பட்டாள். அவள் நீராடிய தீர்த்தம்- சப்த சாகர தீர்த்தம் என்று அழைக்கப் படுகிறது.தட்சன், சிவபெருமானை நோக்கி பல வருடங்கள் கடுமையாக தவம் மேற்கொண்டான். அதன் பலனால் சிவபெருமான் அவன்முன் தோன்றி, "வேண்டும் வரம் என்ன?' என்று கேட்க, "உமையவள் எனக்கு மகளாகக் கிடைக்க வேண்டும். நான் உமைய வளை வளர்க்க வேண்டும். அதன்பின் தக்க பருவத்தில் தாங்கள் மணம்புரிய வேண்டும்' என்று வரம் கேட்டான். இறைவனும் அவன் கேட்டபடி அருளினார். அந்த வரத்தின் படி உமையவள் காளிந்தி நதியில் ஒரு தாமரைப் பூவில் வலம்புரிச்சங்கு வடிவாய் மாசி மக நட்சத்திரத்தன்று தோன்றினாள். அன்றைய தினம் தட்சன் தன் மனைவியுடன் அந்த நதியில் நீராட வந்தபோது, தாமரை மலரில் தோன்றிய வலம்புரிச்சங்கு குழந்தையாக மாறியது. அந்தப் பெண் குழந்தையைக் கண்டெடுத்து வளர்த் தான் தட்சன்.

மாசி மகத்தன்றுதான் சுவாமிமலை திருத் தலத்தில், தன் மகன் முருகனிடம் சிவபெருமான் உபதேசம் பெற்றார் என்று சிவபுராணம் கூறுகிறது. அதனால் புதிதாகக் கல்வி கற்பவர்கள்- எந்தக் கல்வியாக இருந்தாலும்- அன்று தகுந்த ஆசிரியரிடம் கற்றால் சிறந்து விளங்கலாம் என்பர்.

வல்லாள மகாராஜனுக்கு இறைவனே மகனாக எழுந்தருளினார் என்பதால், ஒவ்வொரு வருடமும் திருவண்ணாமலையார் மாசி மக நட்சத்திரத்தில் பள்ளிகொண்டாப் பட்டு என்னும் ஊருக்கு எழுந்தருளி, அந்த மன்னனுக்காக நீத்தார் கடனுக்குரிய வழிபாட் டினை நடத்திவரும் விழா திருவண்ணாமலையில் நடைபெறுகிறது.
பல பெருமைகளைக் கொண்ட மாசி மக நட்சத்திரத்தன்று புனித நீர்நிலையில் நீராடி, விரதம் மேற்கொண்டு இறைவனை வழிபடுவோருக்கு புனிதம் கிட்டுவதுடன், பல பேறுகளும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழ்வர்.




Raghunathan Iyer

unread,
Feb 24, 2016, 8:11:40 AM2/24/16
to arunalaya


-0:52
113,268 Views
Sakthi Vikatan

மகாமகம் தீர்த்தவாரி! (வீடியோ)
வீடியோ: க.சதீஷ்குமார்

‪#‎மகாமகம்2016‬ ‪#‎சக்திவிகடன்‬ ‪#‎கும்பகோணம்‬ ‪#‎kumbakonam‬‪#‎mahamagam2016‬


Raghunathan Iyer

unread,
Feb 25, 2016, 12:05:42 AM2/25/16
to arunalaya

கல்யாண மோதிரம் - ஏன் நான்காவது விரலில் மட்டும்?

கல்யாண மோதிரம்' ஏன் நான்காவது விரலில் மட்டும் சூடப்படுகின்றது?
இதற்கு ஒரு அருமையான விளக்கம் உள்ளது.

பெருவிரல் - நம் பெற்றோர்களை குறிப்பது.

ஆள்காட்டி விரல் - நம் உடன்பிறப்புகளை குறிப்பது.

நடுவிரல் - நம்மை குறிப்பது.

மோதிர விரல் - நம் வாழ்க்கை துணையை குறிப்பது.

சிறுவிரல் - நம் வாரிசுகளை குறிப்பது.

முதலில் இரு உள்ளங்கைகளை முகம் நோக்கி விரித்து கொள்ளுங்கள்.

இரண்டு நடு விரல்களையும் (நம்மை குறிப்பது) கீழ் நோக்கி வளைத்து நகமும் நகமும் தொட்டு கொள்ளும்படி இறுக்கமாக வைத்து கொள்ளுங்கள்.

உள்ளங்கையை அப்படியே மூடுவது போல் வைத்து மற்ற நான்கு விரல்களும் முனையோடு முனை தொடும்படி வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது பெரு விரல்களை (பெற்றோர்கள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் பெற்றோர்கள் நம்முடன் காலத்தின் விளையாட்டு காரணம் கடைசி வரை இருக்க மாட்டார்கள்.

இப்போது பெரு விரல்களை இணைத்து கொள்ளுங்கள். ஆள்காட்டி விரல்களை (உடன் பிறப்புகள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் உடன் பிறந்தவர்கள் ஒரு வயது வந்தவுடன் அவரவர் வாழ்க்கையை தனியாக அமைத்துக்கொண்டு போய் விடுவர்.

ஆள்காட்டி விரல்களை இணைத்து கொள்ளுங்கள். சுண்டு விரல்களை (நம் குழந்தைகள்) பிரித்து பாருங்கள். முடியும். ஏனெனில் நம் குழந்தைகள் வளர்ந்து பெரிதாகி, கல்யாணம், என்று நம்மை விட்டு பிரிந்து விடுவர்.

கடைசியாக, சுண்டு விரல்களை சேர்த்து கொண்டு, மோதிர விரல்களை (வாழ்க்கைத்துணை) பிரித்து பாருங்கள். ம்ம்... பிரித்து பாருங்கள். என்ன ஆச்சர்யமாக இருக்கின்றதா??

ஏனெனில் வாழ்க்கைத்துணை (மனைவி/கணவன்) மட்டுமே இடையில் வந்தாலும் இறுதி வரை என்றுமே கூட இருப்பது.

Raghunathan Iyer

unread,
Feb 25, 2016, 12:07:36 AM2/25/16
to arunalaya

திருப்பந்துறை சிவானந்தேசுவரர் கோயில் (பேணுபெருந்துறை) பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் கும்பகோணம் - நாச்சியார்கோவில் - எரவாஞ்சேரி - பூந்தோட்டம் சாலையில் நாச்சியார்கோவிலை அடுத்து சுமார் 1 கி.மி. தொலைவில் அரிசிலாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது.இத்தலத்தில் பிரமன், தேவி, முருகன் ஆகியோர் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள 64ஆவது சிவத்தலமாகும்.

தல வரலாறு

பிரம்மனை சிறையிலடைத்ததும், சிவனுக்கு உபதேசம் செய்துவிட்டதும் முருகனுக்கு அகங்காரத்தை ஏற்படுத்தியதாம். இதனால் கோபம் கொண்ட சிவன் முருகனை ஊமையாக்கிவிட்டாரம். வருந்திய முருகன், தனக்கு பேச்சு கிடைப்பதற்காக திருப்பந்துறையில் சிவலிங்கம் அமைத்து, பூஜை செய்து தவத்தில் ஈடுபட்டார். முருகனது தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் பேசும் திறனை கொடுத்தருளி நீயும நானும் ஒன்றே என முருகனை தேறினார் இதனால் இத்தல இறைவன் பிரணவேஸ்வரர் ஆனார் 
வாய் பேசாத குழந்தை
திக்குவாய் குழந்தைகளுக்கு இங்கு வந்து வேண்டி கொள்ளலாம்


Raghunathan Iyer

unread,
Feb 25, 2016, 12:09:52 AM2/25/16
to arunalaya, alagu...@gmail.com

நினைவூட்டுகிறேன்:-26-02-2016 - சங்கடஹரசதுர்த்தி

சந்தோஷம் தரும் சங்கடஹரசதுர்த்தி

விநாயகர் முழு முதற்கடவுள் ஆவார். விநாயகர் என்ற சொல்லுக்கு ‘தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்’ என்று பொருள். விக்னங்களுக்கு அதிபதியான அவர், நாம் தொடங்கும் சுபகாரியங்களுக்கு இடையூறு எதுவும் ஏற்படாமல் அருளாசி புரிகிறார்.

நினைத்த காரியம், தொடங்கும் செயல்கள் எதுவாயினும் இலகுவாக முடிய, விநாயகரின் திருவருள் முக்கியமானது. அதனால் தான் எந்த ஒரு செயலையும் தொடங்கும் போது, விநாயகர் பூஜையை முதலில் செய்கின்றனர்.

சங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன? அதை கடைப்பிடிப்பதால் ஏற்படும் பலன் என்ன?

சங்கம் என்றால் சேருதல் என்று பொருள். கஷ்டம் மனிதனின் வாழ்வில் சேருவதே (சங்+கஷ்டம்) சங்கஷ்டம் என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இந்த சங்கஷ்டமே பின்பு ‘சங்கட’மாக மருவி, உருமாற்றம் பெற்று விட்டது. சங்கடத்தை நீக்குவதே சங்கடஹர சதுர்த்தியாகும்.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாகும். இது இருள் சூழும் மாலை நேரத்தில் வரும். நமக்கு வரும் துன்பங்களை, தடைகளை, கஷ்டங்களை தேய்த்து அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்பு மிக்க விரதம் இது.

மனிதருக்கு மட்டும் அல்ல. தெய்வங்களுக்கும், தேவர் களுக்கும் கூட கஷ்டங்கள் வந்த போது, அவர்கள் பிள்ளையாரை வணங்கி நலம் பெற்றுள்ளனர் என்பதை புராண வரலாறுகள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு பண்டிகை விரதத்திற்கும் காரண, காரியங்கள் இருக்கின்றன. சங்கடஹர சதுர்த்திக்கு பல கதைகள் இருக்கின்றன.

முன்பு ஒரு காலத்தில் பிரம்மன், சிவபெருமானை தரிசிக்க திருக்கயிலாயத்திற்கு சென்றார். அப்போது நாரதர் அங்கே ஒரு கனியுடன் வந்திருந்தார். அந்த தெய்வீகக் கனியை முருகனுக்கு கொடுக்கும் படி பிரம்மதேவன் சிவபெருமானிடம் கூறினார்.

சிவனும் அந்தப் பழத்தை முருகனிடம் வழங்கினார். இதைப்பார்த்த மூத்த பிள்ளையான விநாயகருக்கு எரிச்சல் வந்தது. அவர் பிரம்மதேவனை கோபத்துடன் பார்த்தார். விநாயகரின் கோப பார்வை பிரம்மனை அஞ்சி நடுங்கச் செய்தது. தன் தவறை உணர்ந்த பிரம்மன், விநாயகரை நோக்கி, முழு முதற்பெருமானே, என் பிழையை பொருத்தருள வேண்டும் என்று சொல்லி இரு கரம் குவித்து, தலை தாழ்த்தி உடம்பை குறுக்கிக் கொண்டு பணிந்து நின்றார். இக்காட்சியை அங்கு இருந்த சந்திரன் பார்த்தான். முனிவர்கள், ரிஷிகள் கூடியிருந்த சபையில் அடக்கமின்றி ஏளனமாய் சிரித்தான் சந்திரன்.

பெரியோர்கள் கூடியுள்ள இடத்தில் பிரம்மனை பார்த்து, இகழ்ச்சியுடன் சிரித்த சந்திரனின் மீது விநாயகர் கோபப்பார்வை திரும்பியது. அவர் சந்திரனை பார்த்து, ‘பெரியோர்கள் கூடியுள்ள சபையில், அடக்கமின்றி சிரித்த சந்திரனே! உன் பிரகாசம் உலகில் எங்கும் இல்லாமல் போகக்கடவது. உன் பிரகாசம் யார் கண்களுக்கும் புலப்படாமல் மறைந்து போகட்டும்’ என்று சபித்தார். அப்போதே வானத்தில் சந்திரன் இல்லாமல் போனது. பவுர்ணமி பூஜை, அமாவாசை திதி எதுவும் நடைபெறவில்லை.

நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த இந்திரனும், தேவர்களும், சந்திரனுக்கு சாப விமோசனம் அளிக்குமாறு விநாயகரை வேண்டினர். கருணைக்கடவுளான விநாயகர் மனம் மகிழ்ந்து ‘வருடத்தில் ஆவணி மாத சதுர்த்தியன்று சந்திரனை பார்ப்பவர்கள் துன்பப்படுவார்கள்’ என்று கூறி சந்திரனுக்கு கொடுக்கப்பட்ட சாபத்தை குறைத்து விட்டார். மேலும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் சதுர்த்தியன்று விரதம் இருந்து தம்மை வழிபடுபவர்களின் சங்கடங்களை எல்லாம் நான் நிவர்த்தி செய்வேன். அவர்கள் புண்ணிய பேறுகளை அடைவர் என்றும் திருவருள் புரிந்தார்.

இதைக்கேட்ட சந்திரன் தன் தவறை உணர்ந்து விநாயகரை குறித்து கடும் தவம் இருந்தான். அவனது தவத்துக்கு மனம் மகிழ்ந்த விநாயகர் அவனுக்கு அருள்புரிந்து வளரும் வரத்தை கொடுத்தார். அவ்வாறு சந்திரன் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி தினமாகும். ஆகவே சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்ததானது. வளர்பிறை சதுர்த்தி திதியை பார்த்தால் தீங்கு விளையும். பகவான் கிருஷ்ணர், செவ்வாய், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹரசதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளை பெற்றனர். முற்பிறவியில் நாம் செய்த வினையின் பயனால், நமக்கு இப்பிறவியில் சங்கடங்கள் வரும். சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகரை வழிபட்டால், அவர் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி அளவில்லாத நன்மைகளையும் தருவார்.

விரதம் இருக்கும் முறை

சங்கடஹர சதுர்த்தியன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலை யில் எழுந்து நீராடி, அலங்கரிக்கப்பட்ட விநாயகப்பெருமான் சிலை அல்லது படத்திற்கு விளக்கேற்றி விரதத்தை தொடங்க வேண்டும். அவரை வழிபட சாஸ்திரம் படிக்க வேண்டும் என்பதில்லை. கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருவார். முடிந்தவர்கள்,

‘சுக்லாம் பரதரம் விஷ்ணும்

சசிவர்ணம் சதுர்புஜம்!

பிரஸன்ன வதனம் தியாயேத்

ஸர்வவிக்ன உபசாந்தயே’ – எனக் கூறலாம்.

விநாயகப்பெருமானே உன்னை நினைத்து நான் இந்த விரதத்தை தொடங்கி இருக்கிறேன். எந்த இடையூறும் இல்லாமல் நடத்தி கொடுத்து அருள வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அன்று முழுவதும் விரதம் இருந்து விநாயகரை அருகம்புல்லினால் பூஜிக்க வேண்டும். நாவல்பழம், கொய்யா, பேரிக்காய், கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றை படைக்கலாம்.

மாலையில் மீண்டும் நீராடி விநாயகரை இரவு சந்திரோதயத்தை பார்த்து வணங்க வேண்டும். விநாயகருக்கு படைத்த பிரசாதங்களை மட்டும் இரவு உணவாக உட்கொள்வது சிறப்பு.

நாள் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள் உணவாக எடுத்துக் கொள்ளுங்கள். விரதம் மேற்கொள்பவர்கள் கோவிலுக்கு சென்று விநாயகரை தரிசனம் செய்வது கூடுதல் பலனைத் தரும். விநாயகர் அகவல், விநாயகர் புராணத்தை படிப்பதும் நன்மைகளை தரும்.

அருகம்புல் மகிமை

பிள்ளையார் வழிபாட்டில் அருகம்புல் இருப்பது அவசியம். விதை எதுவும் போடப்படாமல் வளரக்கூடியது அருகம்புல். இதைபோல மனிதனின் ஆத்மாவுக்கு விதை எதுவும் இல்லை. அதுதானே ஏற்பட்டது. தானே ஏற்பட்ட ஆத்மா என்ற அருகம்புல்லை உனக்கு காணிக்கையாக்கி வழிபடுகிறேன் என்பது இதற்கு அர்த்தம்.

கிருஷ்ணதாஸ் வெங்கடேஸ்வரன்'s photo.
கிருஷ்ணதாஸ் வெங்கடேஸ்வரன்'s photo.

Raghunathan Iyer

unread,
Mar 1, 2016, 12:33:33 AM3/1/16
to arunalaya

உறவுகள் மேம்பட படித்ததில் பிடித்ததது

.முன் காலத்தில் பெண்கள் வெகு இளம் வயதில் திருமணம் செய்து வைக்கப்படுவார்கள்.(அந்த காலத்தில் பெரும்பாலும் திருமணங்கள் செய்து வைக்கப்படும்; செய்து கொள்ளப்படுவதில்லை. இதில்தான்எத்தனை வித்தியாசம்?!) தங்களுக்கென்று இன்னும் ஆழமாக கருத்து ஏதும் உருவாகாத நிலையில் திருமணம் செய்துவைக்கப்படும்போது புதிய மனிதர்கள், புதிய சூழ்நிலையில் புகும்போது சட்டென்று அந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொண்டார்கள் அந்த தலைமுறை பெண்கள்.
ஆனால் இன்று அப்படியில்லை. தங்களுக்கென்று கருத்துக்கள் ஆழமாக பதிந்த நிலையில் கணவர், புகுந்தவீடு என்று புதிய உறவுகள் வரும்போது சட்டென்று தங்கள் கருத்துக்களையும் பழக்க வழக்கங்களையும் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை –
பொருளாதார ரீதியில் சுயமாக இயங்கும் மூன்று பெண்களின் அணுகுமுறை
ஒருவர் குழந்தைப் பிறந்தவுடன் தன் வேலையைவிட்டுவிட்டார். குழந்தயைப் பார்த்துக்கொள்வதற்காக. மாமியார் குழந்தையைப் பார்த்துக்கொள்ளலாம். ஆனால் குழந்தையை வளர்க்கும் முறையில் கருத்து வித்தியாசங்கள் தலையிடுவதால் தன் குழந்தையைத் தான் விருப்ப்படி வளர்க்க, முழு நேர தாயாக இருக்க இளைய தலைமுறை முடிவு செய்துள்ளார். ஆனால் அதே சமயம் வேலையில் நிறைய சாதிக்க முடியாமல் இப்படி வீட்டில் அடைபட்டு இருக்க வேண்டியிருக்கிறதே என்று அவ்வ்வப்போது ஒரு சுய பச்சாதாபத்தில் மூழ்கிவிடுகிறார்.

இன்னொரு பெண்ணுக்கு இரண்டு குழந்தைகள். ஆனால் தன் வேலையை விடவில்லை. குழந்தைக் காப்பகத்தில் குழந்தைகளை விட்டு செல்கிறார். ஆனால் இது இவருக்கு பிடிக்கவில்லை. வேலையை விடவும் மனதில்லை.அரசு உத்தியோகம் என்பதால் அடிக்கடி விடுப்பு எடுக்கிறார். இது இவரது வேலையில் பதவி முன்னேற்றத்தை பாதிக்கிறது. இருதலைக் கொள்ளி எறும்பாக வாழ்ந்து கொண்டுள்ளார்.
மூன்றாமவர் வேலையை விடவும் தயாராக இல்லை. குழந்தையைக் காப்பகத்தில் விடவும் தயாராக இல்லை. பின்னர்? தற்போதைக்கு குழந்தையே வேண்டாம் என்று இருக்கிறார்.
மூவருக்கும் ஒரே பிரச்சனைதான். ஒன்று குழந்தையை யார் பார்த்துக்கொள்வதென்பது. இன்னொன்று, வீட்டுவேலைகளில் கணவரும் பங்கெடுக்க வேண்டுமென்பது. வீட்டிலிருக்கும் பெண்களாகட்டும் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வரும் பெண்களாகட்டும் குழந்தையும் வீட்டு வேலையிலும் கணவர் ஈடு கொடுக்க வேண்டும் என்று மிகவும் எதிர்பார்க்கின்றனர்.ஆண்களுக்கு நிகராக நாங்களும் வெளியில் சாதிக்கவில்லையா? குடும்பம் என்பது இருவரும் சேர்ந்து உழைப்பதாக இருக்க வேண்டாமா என்பது இந்த பெண்களின் வாதம். இந்திய சமூக சூழ்நிலையில் ஓரளவு இந்த நிலை மாறிவருகிறது என்றாலும் பல சமயம் சிறுசிறு மனபேதங்கள் பெரிதாவதும்இந்த வீட்டு வேலைப் பங்கீட்டுப் பிரச்சனாகவும் இருக்கிறது.

அடிப்படையில் ஆண் பெண் பேதமில்லாமல் அனைவருமே வெளியுலகத்தில் சாதிக்கும்போது வீட்டு நிர்வாகம் தங்களைக் கட்டிப்போடுகிறதே என்ற அலுப்பு பல பெண்களின் மனதில் படிகிறது. இப்படி சிறு விஷயங்களில் ஆரம்பிக்கும் சச்சரவுகள் நாட்க்கணக்கில் மனதில் குமுறும்போது மற்ற விஷயங்களில் ஏற்படும் கருத்து வித்தியாசங்களும் சேர்ந்து வாழ்க்கையில் அவ்வப்போது அபஸ்வரம் தட்டுகிறது.

பிரச்சனை என்று வரும்போது அதை சமாளிப்பது எப்படி என்பதுதான் முக்கியம். எப்படி தப்புவது என்பதல்ல. அது கோழைத்தனம். மேலே கூறிய பெண்களில் ஒருவர் குறிப்பிட்டார். ” என் பெற்றோர், மற்றும் உடன்பிறப்புகளை நான் தேர்ந்தெடுக்கவில்லை. அவர்களுடனும் அபிப்பிராய பேதங்கள் வருகின்றன.அதற்காக அவர்கள் உறவு அற்று போகிறோமா? அதேபோல்தான் புதிய உறவுகளும்.” என்று இவர் கூறுவதில் விவேகம் உள்ளது.

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பார்கள். மற்றவருக்கு என்ன தேவை; என்ன விருப்பம் என்று உள்ளார்த்தமாக புரிந்து செயல்படுவதென்பது சில சமயம் நமக்கு சட்டென்று வருவதில்லை. நான் ஏன் தாழ்ந்து போக வேண்டும் என்ற ஒரு உணர்வு நம் அனைவருக்குள்ளும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
நெருங்கிய உறவுகளுக்குள் உயர்வு தாழ்வுக்கு இடமில்லை. இதை உணர்ந்தாலே பாதி பிரச்சனை தீர்ந்த மாதிரிதான். முடிந்தவரை ஒருவரையொருவர் காயப்படுத்தாமல் உறவுகளைப் பலப்படுத்த முயலுவது முக்கியம்



Raghunathan Iyer

unread,
Mar 2, 2016, 12:51:48 AM3/2/16
to arunalaya

Raghunathan Iyer

unread,
Mar 2, 2016, 12:58:51 AM3/2/16
to arunalaya


மனைவி அமைவதெல்லாம்இறைவன் கொடுத்த வரம் என்று பெரியோர் கூறுவார்கள்.

இது உண்மைதான். நாம் என்னதான் முயன்றாலும் நல்ல மனைவி அமைய வேண்டும் என்று தேடினாலும் முரட்டு குணமும் மூர்க்க எண்ணமும் கொண்ட மனைவி அமைந்து விடுவது விதி செய்யும் சதியே. சரி… யாருக்கு முரட்டு மனைவி அமைகிறது.? என்று சற்று ஜோதிடத்தை ஆராய்ந்தால், ஒரு ஆணின் ஜாதகத்தில் லக்கினத்திற்கு 7-ல் சனி இருந்தாலோ, லக்கினத்தில் சனி இருந்தாலோ, லக்கினத்தில் செவ்வாய் அல்லது 7-ல் செவ்வாய் இதில் சுபர் பார்வை இல்லாமல் இருந்தால் இப்படிபட்ட ஜாதகனுக்கு (ஆணுக்கு) முரண்டு பிடிக்கும் – பிடிவாதம் – முன்கோபம் கொண்ட எப்போதும் எவரையும் எதிர்த்து பேசுகிற மனைவி அமைவாள். 7-க்குடையவன் சனியாகவோ, செவ்வாயாகவோ இருந்தால் அதுவும் ராகு அல்லது கேதுவுடன் சேர்ந்தால் தினமும் சண்டை சச்சரவுதான். 7-க்குடையவன் நீச்சம் பெற்று அவனுடன் பாபி சேர்ந்தால் குடும்பத்தில் தினமும் சுனாமிதான். பொதுவாக 7-க்குடையவன் சுபராக இருந்தால் அந்த ஜாதகருக்கு நன்மையே செய்வான். அல்லது சுபர் பார்வை பெற்றாலும் நன்மைதான்.உங்கள் ஜாதகத்தில் 7-ம் இடத்தை பாருங்கள். அதனுடைய பலனை அறிந்து கொள்ளுங்கள். கொளுத்தும் வெயிலில் பாலைவனத்தில் நின்றுக் கொண்டு அய்யோ சூடுகிறதே என்றால் சுடத்தான் செய்யும். அதுபோல உங்கள் ஜாதகம் என்னவோ அப்படிதான் மனைவி அமைவாள்.

Raghunathan Iyer

unread,
Mar 2, 2016, 1:11:53 AM3/2/16
to arunalaya



 
Baskar Jayaraman's photo.
 
Follow
 

கல்யாணம் பண்ணப் போகும் மகனுக்கு ஒவ்வொரு அம்மா கட்டாயம் சொல்லவேண்டிய அறிவுரை.!

1. எந்த சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!!
மகனே...மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே...உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில், 20 ஆண்டு கால அனுபவம் இருக்கு. ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதுசு. உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து இங்க அனுப்பியிருக்காங்க. அவளுக்கு கொஞ்சம் ஆண்டுகள் தேவைப்படும். அதுக்கப்புறம், உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.
2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!!
மகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கைய பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி. அம்மா இல்லை.
உன் அம்மாவுக்கு உன்னை கவனிக்கறது மட்டும் தான் வேலை. ஆனா உனக்கு, உன் மனைவிய கவனிக்கறது முக்கியம். நீங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் கவனிச்சு அன்பு செலுத்தறது மிக மிக முக்கியம்!!!
3. மதிக்கப்படவேண்டியவள் மனைவி...!!
மகனே , உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள். அவளை மதிக்கவேண்டும். உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது. அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இரு.!
4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க உதவி செய்யணும்.
பிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு,
நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கா உன் மனைவி... அவளை இயல்பா இருக்க வைக்க நீதான் உதவணும்.. சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்.. அதை நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கணும்...!
5. எப்பவும் மனைவிய காதலிக்கவேணும்
காதலிக்க வயசு ஒரு விஷயமே இல்லடா.. எப்பவும் உன் மனைவியை..சந்தோஷமா வச்சுக்கோ.. சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகிச்சுப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டுபேரையும்...எப்பவும்இளமையா உணர வைக்கும்...!!
ஐந்து பாய்ண்ட்டுகளையும் சேர்த்து ஒரே பாய்ண்ட்டா சொல்றேன்.....!!
உங்க அப்பா(நல்ல அப்பா மட்டும்) என்னை எப்படி நடத்தறாரோ....? அது போல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்து மகனே..!!



Raghunathan Iyer

unread,
Mar 2, 2016, 1:18:26 AM3/2/16
to arunalaya



நம் புராணங்கள், ஏழு பேரை, சிரஞ்சீவிகள் (என்றும் நிலைத் திருப்போர்) எனக் கூறுகின்றன. அவர்களில் ஒருவர் அனுமன்!
சுயநலமற்ற சேவையால் அனுமனும், அண்ணனாக இருப்பினும், நியாயத்தின் பக்கம் நின்றதற்காக விபீஷணனும், இறைவனுக்கு தன் உயிரையே அர்ப்பணம் செய்ததில் மகாபலி...
இறைவன் மீது கொண்ட பக்தியினால், எமனையே வென்ற மார்க்கண்டேயரும், மகாபாரதம் எனும் அழியாக் காவியத்தை எழுதி, அதைப் படிப்போரின் பாவங்கள் நீங்க அருள்வதால், வியாசர்... 
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை ஏற்று, தாயையே கொன்றதால் பரசுராமரும், கடைசி வரை கட்சி மாறாமல், கவுரவர்களுக்காக, தன் வீரத்தைக் காட்டி, உயிர் விட்டதால், துரோணரின் மகனான அஸ்வத்தாமனும், சிரஞ்சீவி என்னும் நிலையை அடைந்து, காலம் கடந்தும் வாழ்கின்றனர்.
இந்த ஏழு பேர்களில் அனுமனே உயர்ந்தவர். காரணம், சுயநலமின்மை! மனிதர்கள் யாராக இருப்பினும், சுயநலம் என்பது, ஒரு சதவீதமாவது இருக்கத்தான் செய்யும். ஆனால், யாரென்றே தெரியாத ராமனுக்காக, எந்த கைம்மாறும் எதிர்பாராமல், உதவி செய்தவர் அனுமன்.
இதனாலேயே, இலங்கையிலிருந்து தான் மீண்டு வந்ததற்கு அனுமனே காரணம் என, ராமபிரானிடம் நன்றியுடன் குறிப்பிட்டாள் சீதை.

பட்டா பிஷேகத்தன்று தனக்கு உதவிய எல்லாருக்கும் பரிசுப் பொருட்களை வழங்கினார் ராமர்.
அப்போது சீதை, 'பிரபு... அனுமனுக்கு ஏதாவது செய்து, நம் நன்றியுணர்வை வெளிப்படுத்த வேண்டும்...' என்றாள்.
தான் அணிந்திருந்த முத்துமாலையை கழற்றி, சீதையின் கையில் கொடுத்து விட்டு, மவுனமாக இருந்தார் ராமர். சீதையும், ராமனின் எண்ண ஓட்டத்தைப் புரிந்தவளாய், 'பிரபு... முத்தாரத்தை உங்கள் பரிவாரத்தில் யாருக்கு கொடுக்க வேண்டும் என்பதை தங்கள் திருவாயாலேயே சொல்லி விடுங்கள்...' என்றாள்.
'பராக்கிரமம், புத்தி, பணிவு யாருக்கு பூரணமாக இருக்கிறதோ, அவருக்கு கொடு...' என்றார் ராமர். உடனே, அனுமனிடம் முத்தாரத்தைக் கொடுத்தாள் சீதாதேவி.
மனைவி பக்கத்தில் இல்லாத துயரம் மட்டும் தான் ராமனுக்கு! ஆனால், சீதையோ, கணவரைப் பிரிந்ததுடன், காமுகனான ராவணனிடமும் சிக்கி அவதிப்பட்டு, தன் உயிரை விடவும் துணிந்தாள். அத்தருணத்தில் வந்து சேர்ந்தார் ஆஞ்சநேயர். திடீரென பொழிந்த மழையால், பட்டுப்போக இருந்த பயிர் எப்படி தளிர்க்குமோ, அதுபோல் இருந்தது சீதைக்கு, அனுமனின் இலங்கை வரவு. அவர், லோகமாதாவான திருமகளின் துன்பத்தை போக்கி, நம்பிக்கை தந்தார்.
சில வீடுகளில், கணவர் பாசமாக இருந்தாலும், மற்ற குடும்ப உறுப்பினர்களால் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து, கணவனை பிரிந்து வாழ்வர் சில பெண்கள். அத்தகையோரின் கண்கண்ட கடவுள் அனுமன். அவரை வணங்கினால், பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும். கன்னியருக்கு ராமனைப் போன்ற கணவர் அமைவர். 
அவரை வணங்கி நல்லருள் பெறுவோம்!
Amurthi Navaneetham's photo.
Like
Like
Love
Haha
Wow
Sad
Angry

Raghunathan Iyer

unread,
Mar 3, 2016, 2:36:08 AM3/3/16
to arunalaya


மனிதர்கள் காலையில் எழும்முன் பூமியைத் தொட்டு தலையில் வைப்பது ஏன்?

தூக்கத்திலிருந்து விழித்ததும் படுக்கையில் இருந்து கைகளை மலர விரித்து நிதிக்கும் கல்விக்கும் சக்திக்குமாக லெட்சுமி, சரஸ்வதி, பார்வதி என்ற தேவிமாருக்கு ஜெபங்களைக் கூறியபின் கால்களை தரையில் வைக்கும்முன் பூமிதேவியைத்தொட்டு தலையில் வைத்து க்ஷமாபண மந்திரம் சொல்ல வேண்டுமென்று ஆசாரியர்கள் போதித்துள்ளனர்.
“சமுத்ரவஸனே தேவி
பர்வதஸ்தன மண்டலே
விஷ்ணுபதி நமஸ்துத்யம்
பாதஸ்பர்சம் க்ஷ மஸ்வமே”
என்று உரைத்து பூமியைத் தொட்டு தலையில் வைக்க வேண்டும் என்பதே.சிலர் இதை மூடநம்பிக்கை என்று பரிகசித்து தள்ளுவதுண்டு. ஆனால் இதன் பின்னுள்ள அறிவியல் இரகசியத்தைக் கவனிப்போம். ஒரு நபர் தூங்கும் போது அவர் உடலில் தங்கியிருப்பது சமநிலை விசை அதாவது ஸ்டாடிக் எனர்ஜி அல்லது பொடென்ஷல் எனர்ஜி எனப்படும். ஆனால் விழித்தெழும்பும் போது டைனமிக் அல்லது கைனடிக் எனர்ஜி அதாவது சலன விசையாக மாறுகின்றது. பூமியைத் தொடும் போது உடம்பிலுள்ள ஸ்டாடிக் எனர்ஜி வெளியேறி கைனடிக் எனர்ஜி நிறைக்க வேண்டும்.விழித்தெழும்போது கால் முதலாவது தரையில் தொட்டால் ஆற்றல் கீழ்நோக்கி ஓழுகி உடல் பலம் குறைகின்றது.ஆனால் கை முதலாவது தரையைத் தொடும் போது ஆற்றல் மேல்நோக்கி பரவி கை வழியாக வெளியேறி உடல் பலம் இரட்டிக்கின்றது.
இவ்வளவு பெரிய ஒரு விஞ்ஞான இரகசியம் ஒளிந்து கிடப்பதால் தான் நம் நாட்டு ஆசாரியர்கள் விழித்தெழுமுன் பூமியைத் தொட்டு தலையில் வைக்க வேண்டும் என்று பின் தலைமுறைகளுக்கு கற்பித்துச்சென்றனர்

Raghunathan Iyer

unread,
Mar 3, 2016, 4:28:23 AM3/3/16
to arunalaya


MahaSivaRathri மஹாசிவராத்திரி சிவமயம் சிவாயநம

வருகிற மஹா சிவராத்திரி - 07.03.2016 - திங்கட் கிழமை அன்று எல்லா சிவாலயங்களிலும் வெகு சிறப்பாக நடைபெற இருக்கும் மஹா சிவராத்திரி தினத்தைப் பற்றியும் அதன் சிறப்பு என்ன? என்பது பற்றியும் பார்ப்போம்

சைவத்தின் பெருவிழாவாக,பரம்பொருளுக்காக ( சிவ பெருமானுக்காக ) கொண்டாடப்படுவது மஹா சிவராத்திரி விழா ஆகும்

மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி திதி சிவபெருமானுக்கு சிறப்புடையது. அன்றைய தினம் மஹா சிவராத்திரி என அனைவராலும் போற்றி கொண்டாடப்படுகின்ற நாளாகும்

மஹா சிவராத்திரியின் சிறப்புகள்

வில்வித்தையில் ஈடு இணையற்றவனான அர்ஜூனன் தவம் செய்து பாசுபதம் (பசுபதி என்பது சிவனுக்குரிய பெயர் - பசுபதி அளித்ததால் அது பாசுபதம்)என்ற அஸ்திரத்தை பெற்றதும் இந்த மஹா சிவராத்திரி தினத்தில் தான்

63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் சிவலிங்கத்திலிருந்து ( குருதி) ரத்தம் வடிவதைக் கண்டு தன் கண்ணை பெயர்த்தெடுத்து வைத்து முக்தி அடைந்ததும் இந்த மஹா சிவராத்திரி தினத்தில் தான்

பகீரதன் மிகக் கடும் தவம் ( சிவபெருமான் மீது) செய்து கங்கையை பூமிக்கு கொண்டு வந்ததும் இந்த மஹா சிவராத்திரி தினத்தில் தான்

தன் ( சிவபெருமான்) மீது அளவிலா பக்தி கொண்டிருந்த மார்க்கண்டேயனுக்காக எமதர்மனையே சிவ பெருமான் சம்ஹாரம் செய்ததும் இந்த மஹா சிவராத்திரி தினத்தில் தான்

பார்வதி தேவி ( உமையம்மை) தவமிருந்து சிவனுக்கு இடப் புறம் இடம் பெற்று சிவனையே உமையொரு பாகனாகச் செய்ததும் இந்த மஹா சிவராத்திரி தினத்தில் தான்

மஹா சிவராத்திரி இந்த புண்ணிய நாளில் நிகழ்ந்தது என்று சிவ மஹா புராணம் தெள்ளத் தெளிவாக கூறுகின்றது

பூஜைகள்

சிவராத்திரியன்று உலகத்தில் உள்ள எல்லா சிவத் தலங்களில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்

ஒரு வில்வ இலை கொண்டு சிவனுக்கு பூஜை செய்வது கோடிக்கணக்கான மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்வதற்கு சமமாகும்

அன்று சாப்பிடாது விரதம் இருந்து கண் விழித்து சிவன் தோத்திரங்களை ( பன்னிரு திருமுறைகளையும் பாராயணம் செய்வது) சொல்வது மிகவும் சிறந்தது ஆகும்

இந்த மஹா சிவராத்திரி தினத்தில் சிவனடியார்களுக்கும், திருக்கோவில் வழிபாடு செய்வதற்கும் நம்மால் இயன்ற தான தர்மங்கள் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்த சிவச்செயலாகும்

மேலும் தெய்வத் திருத்தலங்களுக்கு தல யாத்திரை செல்வதும் அங்கு நடைபெற இருக்கும் மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்பதும் சிறப்பு வாய்ந்த சிவச்செயலாகும்

பல வகையான நோன்புகள் மேற்கொள்வது, விரதங்கள் இருப்பது போன்றவற்றால் ஏற்படும் நற்பலன்கள், புண்ணியங்கள் சிவனை சிவன் ராத்திரியன்று வழிபடுவதால் ஏற்படும் புண்ணியத்திற்கு நிகராகாது என வேதங்களும், புராணங்களும் கூறுகின்றன

சிவராத்திரி இருவகைப்படும். ஒன்று மாத சிவராத்திரி. மற்றது மகா சிவராத்திரியாகும்

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு வருவது மாத சிவராத்திரி ஆகும் 
சிவனடியார் பலர் இந்த சிவராத்திரியையும் மாதந்தோறும் தவறாமல் கடைப்பிடித்து (அனுஷ்டித்து) வருகின்றனர்

மாசி மாதத்தில் வரும் தேய்பிறைச் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி" ஆகும்

வேதங்களில் சாமவேதமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன

மகா சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது

முதல் கால பூஜை

இந்த முதல்கால பூஜை, சிவபெருமானால் கொடுக்கப்பட்ட தொழில் படைக்கும் தேவன் "பிரம்மா" சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்

இந்த கால பூஜையில் "பஞ்ச கவ்வியத்தால்" (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்

இரண்டாவது கால பூஜை

இந்த இரண்டாவது காலை பூஜையை சிவபெருமானால் கொடுக்கப்பட்ட தொழில் காக்கும் தேவன் "விஷ்ணு". சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும்

இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்

மூன்றாவது கால பூஜை

இந்த பூஜை சிவபெருமானால் கொடுக்கப்பட்ட தொழில் சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும்

இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து "எள் அன்னம்" நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது

இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம்.
இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்

நான்காவது கால பூஜை

இந்த நான்காவது கால பூஜை சிவபெருமானால் கொடுக்கப்பட்ட முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது

குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.
மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெரு மானை வழிபட்டு அனைத்து அருள் செல்வத்தையும், வாழ்வில் என்றும் நிலையான மகிழ்ச்சியையும் அடைந்து சிவபெருமானின் திருவடிக்கீழ் பேரானந்தமாக இருக்கும் தன்மையைப் பெறுவோம்

மஹா சிவராத்திரி சமயத்தில் மட்டும் கிடைக்கும் சிவகரந்தை எனும் பத்ரம் (இலை) கொண்டு அர்ச்சனை செய்வது மிகப் பெரும் பலன்களையும் அருளையும் தரக் கூடியது

மஹா சிவராத்திரி அன்று இருக்க இருக்கும் விரத முறை

விரதம் அனுஷ்டிப்போர் முதல் ஒருநாள் ஒருபொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் இருந்து, காலை ஸ்நானம் செய்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து இரவு நான்கு கால வழிபாடு செய்யவேண்டும்

அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும்

சிவாயலங்களில் சிவபெருமானுக்கு நடைபெறும் நான்கு கால அபிஷேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்ப பொருள்களைக் கொடுத்து உதவலாம்

மஹா சிவராத்திரி பற்றி புராணங்களில் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்

புராண விளக்கம் - 1

ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் பெருங் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள்

அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார்

அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் அனுஷ்டிக்க வேண்டும் என்றும் அதை அனுஷ்டிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்றும் பிரார்த்தித்தார். இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார்

அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றனர்

புராண விளக்கம்- 2

மற்றொரு கல்பத்தின் முடிவில் இன்னொரு பிரளயம் வந்தது. பிரபஞ்சம் நீரில் மூழ்கியது. திருமால் வராக உருவெடுத்தார்

அவ்வராகம் நீரில் புகுந்து பிரபஞ்சத்தையெடுத்து வெளிக்கொணர்ந்து நிறுத்தியது. திருமால் செருக்கோடு தம் இடம் சென்றார். அதுவரை உறங்கிக்கிடந்த பிரமனும் விழித்தார். படைப்புத் தொழில் தொடங்கியது. அகந்தையால் பிரமன் தாமே கடவுள் என்றார். திருமால் தாமே கடவுள் என்றார். சர்ச்சை நீண்டது. அச்சமயத்தில் அவ்விருவருக்கும் நடுவில் ஓர் அக்கினிப்பிழம்பாய் அடிமுடி அயறியப்படாதவாறு கீழுமேலுமாய் நீண்டு நின்றார் சிவபெருமான்

பிரமன் அன்னமும், விஷ்ணு வராகமுமாய் அப்பிழம்பின் அடிமுடியைக் காணச் சென்றனர். ஆதியும் அந்தமும் காணமுடியவில்லை. இருவரும் அகந்தை நீங்கி அப்பெருமானைத் துதித்தனர். அப்பெருமான் பிழம்பு வடிவான லிங்கத்திலிருந்து மகேசுரமூர்த்தியாய் வெளிப்பட்டார்

அவ்வெளிப்பாட்டிற்கு லிங்கோத்பவரென்று பெயர். பிரம விஷ்ணுக்கள் அவரிடம் திருவருள் பெற்றுச் சென்றனர்

இச்சரித்திரத்தை,
'யத் பாதாம்போருஹத்வம்த்வம் ம்ருக்யதே விஷ்ணுநா ஸஹ
ஸ்துத்வா ஸ்துத்யம் மஹேசாந மவாங்மநஸகோசரம்
பக்த்யாநம்ர தநோர் விஷ்ணோ: ப்ரஸாத மகரோத்விபு:"
(சிவபெருமான் முடியைத் தேடப்போன பிரம்மாவோடு கூட விஷ்ணுவினால் அவரது இரு திருவடித் தாமரையும் தேடப்படுகின்றன; வாக்கு மனசுக் கெட்டாத சிவபெருமானை துதித்துப் பக்தியினால் வணங்கினவராகிய விஷ்ணுக்குச் சிவபெருமான் அருள்பாலித்தார்) என வேத(சரப)மும் எடுத்துரைக்கிறது. இச்சம்பவமும் இரவில் நடந்தது. ஆகையால் அவ்விரவு சிவராத்திரி எனப்பட்டது

'ச்யதி துக்காதிகமிதி சிவா' சிவ என்பதற்குத் துக்கங்களை அழிக்கின்றது என்று பொருள். 'ராதி சுகமிதி ராத்ரி' ராத்திரி என்பதற்குச் சுகத்தைச் செய்கின்றது என்று பொருள். ஆதலால் சிவராத்திரி என்பது துக்கங்களைப் போக்கிச் பக்தியைக் கொடுப்பது என்று பொருள்படும்

திரயோதசி உமா ஸ்வரூபம். சதுர்த்தசி ஸ்வரூபம். அவ்விரண்டு திதியுங்கூடிய இரவு சிவலிங்க ஸ்வரூபம்

புராண விளக்கம் 3

ஒரு சமயம், வாசுகி
என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு, மேரு மலையையே மத்தாகக் கொண்டு ஒரு புறம் அசுரர்களும், மறு புறம் தேவர்களும் நின்று பாற்கடலைக் கடைந்தார்கள். அதிலிருந்துதான், மஹா லக்ஷ்மியும், காமதேனு, குபேர சம்பத்துக்களும் கிடைத்தன

ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை எடுத்துக்கொண்டார்கள். இறுதியாக ஆலகால விஷம் தோன்றியது. அண்டசராசரங்களையும் அழிக்கும் வல்லமை வாய்ந்தது. அனைவருக்கும் அனுக்ரஹிக்கும் சிவபெருமான் அந்த விஷத்தை எடுத்துக்கொண்டார். விஷத்தை அருந்தினார்

பயந்த பார்வதி சிவனின் தொண்டையோடு அந்த விஷத்தை நிறுத்தினார். விஷம் ஏறியவர்கள் உறங்கக் கூடாது என்பது வைத்ய விதி. அதற்கேற்ப அண்டசராசரங்கள் அனைத்தும் சிவபெருமானை இரவு முழுதும் சிவபெருமானைப் போற்றின. அந்த இரவு தான் சிவராத்திரி ஆகும்

சிவன் உலகைக் காத்த இரவு என்பதால் மிகவும் சிறப்பு வாய்ந்தது சிவராத்திரிஆகும்

மற்றுமொரு புராண விளக்கம்

காட்டில் இரவில் மாட்டிக்கொண்ட ஒருவன் மிருகங்களுக்கு பயந்து, ஒரு மரத்தின் மேலேறி, பயத்தால் அம்மரத்தின் ஒவ்வொரு இலைகளையும் கீழே போட்டுக்கொண்டிருந்தான். அவனை சிவகணங்கள் வந்து வணங்கி வேண்டும் வரங்களை வழங்கின.
சிவகணங்கள் வந்த காரணமென்ன எனில், அவன் ஏறியது வில்வ மரம். வில்வ மரத்தின் கீழே சிவலிங்கம் இருந்தது. அந்த சிவலிங்கத்திற்குத் தான் வில்வ இலைகளை எறிந்திருக்கின்றான். சிவகணங்கள் சிவனுக்கு அர்ச்சனை செய்கின்றான் என எண்ணி அருள் பாலித்திருக்கின்றன

அவன் இரவு முழுவதும் சிவலிங்கத்திற்கு அர்ச்சனை செய்திருக்கின்றான். அந்த இரவுதான் சிவராத்திரி என்றும் சில புராணங்கள் கூறும்

எந்த ஒரு இறை சிந்தனையும் இல்லாமல், வெறும் வில்வ இலைகளை மட்டுமே அர்ச்சனை செய்ததாலேயே ஒருவனுக்கு சிவ அனுக்ரஹம் கிடைத்தது என்றால், சிவ சிந்தனையோடு, சிவனுக்கு உரிய பொருட்களை சிவலிங்கத்திற்கு பக்தி சிரத்தையோடு செய்தோமாகில் சிவ கடாட்சம் மிக நிச்சயம் கிடைக்கும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை

விரதமிருந்து பேறு பெற்றவர்கள்

மஹா சிவராத்திரி தலை சிறந்த சிவவிரதம்.
பிரமன் சிருஷ்டித் தொழிலையும்,
மஹாவிஷ்ணு காக்கும் தொழிலையும், லக்ஷ்மியையும், சக்ராயுதத்தையும்,
இந்திரன் விண்ணுலக அதிபதி பட்டத்தையும்,
குபேரன் அளவற்ற நிதியையும்,
பெற்றனர.
சிவாயநம


Raghunathan Iyer

unread,
Mar 3, 2016, 7:48:25 AM3/3/16
to arunalaya

.படித்ததில் பிடித்தது

நம் தலைமுறையில் குழந்தை பேச ஆரம்பிக்கும்போதே உறவு முறைகளையும் அழகாக அறிமுகப்படுத்தினார்கள் நம் பெற்றோர். அம்மா, அப்பாவில் தொடங்கி, அண்ணன், அக்கா, சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா, அப்பத்தா, அம்மாச்சி, அய்யா, தாத்தா, அத்தான், மச்சான், அத்தாச்சி, மதினி, அண்ணி என்று... நம் தமிழ் மொழியில் ஒவ்வோர் உறவுக்கும் உண்டு, அழகழகான பெயர்கள்! ஆனால், இந்தத் தலைமுறை குழந்தைகள், ஆண்கள் அனைவரையும் ‘அங்கிள்’, பெண்கள் அனைவரையும் ‘ஆன்ட்டி’ என இந்த இரண்டு வார்த்தைகளுக்குள்ளேயே சுருக்கிவிடுகிறார்கள். இதனால் நாம் தொலைத்தது, ஒவ்வோர் உறவுக்கான பிரத்யேக சொல்லை மட்டுமல்ல... அந்த பந்தங்களின் பிரத்யேகத்தையும்தான்!

அண்ணன், அக்கா என்று அழைக்கும்போது, வயதில் சிறிது மூப்பு என்பதற்கான மரியாதையுடன், மனதில் கொஞ்சம் சிநேகத்தையும் சேர்த்து வெளிப்படுத்தும்

சித்தியும், சித்தப்பாவும் அப்பா, அம்மாவிடம் எதிர்பார்க்கும் உரிமையையும், உறவையும் தரக்கூடியவர்கள்

. அத்தை, மாமா, மச்சான், அத்தான் என இவையெல்லாம் ‘முறைக்கார’ உறவுகள். கேலியும், கிண்டலும் ததும்பும் பந்தங்கள்.
வயதில் மூத்தவர்கள் ஆனாலும் வார்த்தைகளில் சீண்டி விளையாடும் உரிமை தரும் சொந்தங்கள்.

அத்தாச்சி, மதினி, அண்ணி என்பவர்களும் கிண்டல் செய்யும் உரிமைக்கு உட்பட்டசொந்தங்களே!

அப்பா வழி அப்பத்தா, அய்யாவும், அம்மா வழி தாத்தா, 
பாட்டியும்... கிளைகளின் வேர் சொந்தங்கள்

..
ஆனால் ‘வெஸ்டர்ன்’ கலாசார மோகத்தில் இருக்கும் குடும்பங்கள், ‘என் பிள்ளைக்கு தெரிஞ்ச ரெண்டே உறவுகள்... அங்கிள், ஆன்ட்டிதான்!’ என்று அதைப் பெருமையாகவே சொல்வதைக் கேட்கும்போது, வருத்தமாக இருக்கிறது. மேலும், நெருங்கிய ரத்த சொந்தங்களையும்கூட, அவர்களுக்கு ‘அங்கிள்’, ‘ஆன்ட்டி’ என்றே பழக்குவது கொடுமை! இன்னும் கொடுமையாக, இன்று பல இளம்பெண்கள் தங்கள் மாமனார், மாமியாரையும் ‘அங்கிள்’, ‘ஆன்ட்டி’ என்று அழைக்கிறார்கள்

உறவுமுறைப் பெயர் சொல்லி அழைப்பது, வெறும் வார்த்தை இல்லை. அது அந்த உறவுக்குத் தரும் மரியாதை. இருவருக்கும் இடையிலான நெருக்கத்தை, இடைவெளியை நிர்ணயிப்பது. குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்... உறவு களையும், அதன் உண்மைகளையும்


Raghunathan Iyer

unread,
Mar 7, 2016, 5:34:48 AM3/7/16
to arunalaya


 
.

சிவராத்திரி பூஜை காலம் இரவு இரண்டாம் ஜாமத்தில் முதல் கால பூஜை அதாவது இரவு 9 மணி, இரண்டாம் கால பூஜை இரவு 11.15, மூன்றாம் கால பூஜை இரவு 1.30, நான்காம் கால பூஜை அதிகாலை 4.30 மணிக்கு. இதில் 1.30 மணி பூஜையில் உங்களது எண்ணங்களை இறைவனிடம் சொல்லுங்கள், அடுத்த கால பூஜையில் அவன் உங்களுக்கு இல்லை என்று சொல்லாமல் தந்தருள்வான்.

பூஜை முறை.....
இரண்டாம் கால பூஜை:- பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து மஞ்சள் வஸ்திரம் சாத்த வேண்டும். அட்சதை கோதுமை, வில்வம், துளசி, சண்பகம், தாமரை மலர்கள் கொண்டு அலங்கரித்து நட்சத்திர வடிவ கோலம் போட்டு நடுவில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். பச்சை ரத்தின ஆபரணம் சாத்துதல்

சிறப்பு.
சாம்பிராணி தூபம் போட்டு பலாப்பழம், அன்னப் பாயாசம், லட்டு நிவேதனம் செய்ய பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். பிறக்கும் குழந்தைகளும் மேதையாக பிறப்பர். மூன்றாம் காலத்தில் தேனால் அபிசேஷகம் செய்து வெள்ளை ஆடை சாத்தி வில்வம், வெள் அருகு, அத்திப்பூ, பிச்சிப் பூவால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

சிவப்பு நிற ரத்தினங்கள் சாத்தி, மாதுளம் பழம், பாயாசம் நிவேதனம் செய்து .
.தூபத்தில் கஸ்தூரி, சந்தனம், பச்சைக் கற்பூரம் பொடி செய்து தூவி சாம்பிராணி காண்பித்து கோதுமையை அட்சதையாக சிவ சோஸ்திரம் செய்ய வேண்டும்.
நான்காம் கால பூஜையில் கரும்புச் சாறால் அபிசேகம் செய்து, நீல வஸ்திரம் அணிவித்து வில்வத்தை பரப்பி அதன் மத்தியில் தீபம் ஏற்றி முத்து ஆபரணம் அணிவித்து விளா மர இலை, நந்தியா வட்டை, நீ லோற்பலம் அவற்றால் அர்ச்சித்து சகல பழங்களையும், வெண்சாதம், கோதுமை அல்வா முதலியவற்றை நிவேதனமாக செய்து சந்தனம், குங்குமப்பூ சாம்பிராணியுடன் கலந்து தூபம் போட வேண்டும்.
.

Raghunathan Iyer

unread,
Mar 9, 2016, 12:39:20 AM3/9/16
to arunalaya

ஹர நம பார்வதி பதயே
ஹர ஹர மஹாதேவா 
ப(பி)டித்தது:-
நாளை சூரிய கிரகணம். நாம் செய்ய கூடியவை? செய்ய கூடாதவை?
நாளை சூரிய கிரகணம் 9.3.2016 விடியற்காலை 4.50 மணி முதல் 10.05 மணி வரை நீடிக்கிறது. மந்திர சாஸ்திரத்தில் ஜபம் செய்யும் காலத்தின் தன்மை எப்படி பலன் கொடுக்கிறது என்பதை கூறுகிறது. எல்லா நேரத்திலும் ஜபம் செய்தால் ஒருமடங்கு பலன், அதை சந்தியாகாலத்தில் செய்தால் பத்துமடங்கும். பிரம்ம முஹூர்த்தத்தில் செய்தால் நூறுமடங்கும், பெளர்ணமி அமாவாசை நாளில் செய்தால் ஆயிரம் மடங்கும், கிரஹண நாட்களில் செய்தால் லட்சம் மடங்கும் பலன் ஏற்படும் என கூறுகிறது. ஒரு முறை மந்திரத்தை உட்சரித்தால் கிரஹணத்தன்று லட்சம் முறை சொல்லுவதற்கு சமம். அன்றே லட்சம் முறை உச்சரித்தால் ? யோசிக்க வேண்டும். மந்திர சித்தி பெறுபவர்கள் இந்த நாளை பயன்படுத்தி தங்களின் மந்திரத்தில் சித்தியடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் கிரஹணத்தன்று வெளியுலக விஷயங்களை செய்யக்கூடாது. உங்கள் ஆன்மீக விஷயங்களுக்கு மட்டும் பயன்படுத்தலாம். முக்கியமாக கிரஹண நேரத்தில் செய்ய கூடாதது என சொன்னால் உணவருந்துவது, உணவை சமைப்பது, உடலுறவு மற்றும் உடலைவருத்தும் அனேக செயல்கள். செய்ய வேண்டியது பூஜை, தியானம், ஜபம் மற்றும் பித்ரு தர்ப்பணம்.
கிரஹண சமயத்தில் கடைபிடிக்க வேண்டியவை.
• கிரஹண நேரம் ஆரம்பிக்கும் பொழுதும் முடிந்த பிறகும் குளிக்கவும்.
• கிரஹண நேரத்திற்கு குறைந்த பட்சம் ஒரு மணி நேரம் முன்பு அல்லது பின்பு மட்டுமே உணவருந்த வேண்டும்.
• ஜீரண சக்திக்கு வேலை கொடுப்பதை தவிர்க்கவும்.
• தர்ப்பை வீட்டில் இருக்கும் நீர், தயிர் பொருட்கள், ஊறுகாய் போன்று கெட்டுப்போகும் பொருட்களில் இடவேண்டும்
• சூரிய கிரஹணம் என்பதால் கிரஹணம் ஆரம்பிக்கும் சமயம் பித்ரு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.
• சூரிய கிரஹணத்தை கண்களால் பார்க்க கூடாது. நீரில் பிம்மம் விழுகவைத்து பார்க்கலாம். கண் கண்ணாடி அணிந்து பார்ப்பதையும் தவிர்க்கவும்.
• கிரஹண காலத்தில் தொடர்ந்து ஜபம் மற்றும் பாராயணம் செய்ய வேண்டும். வீண் பேச்சுக்கள் மற்றும் பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
பிரபஞ்சத்தில் நிகழும் எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருக்கும். எந்த ஒரு விஷயமும் காரண காரியம் இல்லாமல் நடைபெறாது. அது போல சூரிய கிரஹணம் என்பது எதிர்காலத்தில் உலகில் நடக்க இருக்கும் சில சம்பவங்களை முன் கூறும் ஒரு நிகழ்வாக இருக்கிறது. உலகின் எந்த பகுதியில் கிரஹணம் ஏற்படுகிறதோ அதற்கு நேர் எதிர்பகுதியில் இயற்கை சிற்றங்கள் நிகழும் என்கிறது சாஸ்த்திரம்.


Raghunathan Iyer

unread,
Mar 9, 2016, 12:43:00 AM3/9/16
to arunalaya

இந்த கிரகணம் மனிதனை எப்படி பாதிக்கும்?

இதற்கு முதலில் மனித பிறப்பை பற்றிய விழிப்புணர்வு அவசியம். அண்ட வெளியில் எத்தகைய நிகழ்வுகள் இருந்தாலும் அதே நிகழ்வுகள் நமக்குள்ளும் நடக்கும் என்பதை உணர வேண்டியது அவசியம். பூமி மனித உடலையும், சந்திரன் மனதையும், சூரியன் ஆன்மாவையும் குறிக்கும். கிரஹங்கள் நேர்க்கோட்டில் வரும் நாளில் மனிதனின் மனம்,உடல் மற்றும் ஆன்மாவும் இயற்கையாகவே ஒன்றிணைந்துவிடும்

செயற்கையாக ஆன்மீக பயிற்சிகள் செய்து மனம்,உடல் ஆன்மாவை ஒன்றிணைப்பதை யோகம் என்கிறோம். ஆனால் இயற்கையே இதற்கு ஒரு உந்துதலாக இருந்து நம்மை இணைக்கிறது. அன்று அனைத்து ஜீவராசிகளும் தங்களை உயர்நிலைக்கு அழைத்து செல்ல தகுந்த நாளாக மாறிவிடுகிறது.
இதனால் தான் கிரகஹன காலத்தில் கோவில்களில் செல்லாமல் (கிரஹண நேரத்தில் கோவில் திறக்கப்படுவதில்லை..!.) நமது இருப்பை மட்டும் உணர சில தருணங்களை ஏற்படுத்தி தந்தார்கள்.

தற்காலத்தில் நவநாகரீகம் என்ற பெயரில் கிரஹணத்தை மக்கள் மதிப்பதில்லை. பறவை மற்றும் விலங்கின்ங்கள் கூட கிரஹணத்தான்று தன் இருப்பிட்த்தை விட்டு வெளிவருவதில்லை. அப்படி இருக்க மனிதன் தனது விழிப்புணர்வால் அதை உணர வேண்டமா? மனிதன் இயற்கையிலிருந்து பிரிந்து செயற்கையாக வாழ்கிறான் என்பதற்கு இதைவிட எடுத்துக்காட்டு வேண்டுமா?.

கிரஹண காலத்தில் சூரியனில் இருந்து வரும் கதிவீச்சு தற்காலிகமாக தடைசெய்யப்படுவதால், வான்வெளியிலிருந்து வரும் தீய கதிர்வீச்சுக்கள் நம்மை தாக்கும். அதனால் தான் கிரஹணம் அன்று நம்மை பாதுகாக்க சொன்னார்கள் நம் முன்னோர்கள். அறிவியல் அறிஞர்கள் முதலில் கதிர்வீச்சு வரும் எனும் விஷயத்தை மறுத்துவந்தார்கள் தற்சமயம் ஏற்றுக்கொண்டு அவர்களும் பாதுக்காப்பாக இருக்க பிரசாரம் செய்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.

தர்ப்பை, கம்பளி போன்ற பொருட்களுக்கு மின்கடத்தா சக்தி உண்டு. மேலும் கதிர்வீச்சை அதிகமாக கடத்தாது. அதனால் அப்பொருட்களை வைத்து நம்மை தற்காத்துக்கொள்ள சாஸ்திரங்கள் கூறுகிறது.

வருடத்திற்கு ஒரு முறை சூரிய கிரஹணம் ஏற்பட்டாலும் முழு சூரியகிரஹணம் சில வருடங்களுக்கு ஒருமுறைதான் நடைபெறும். அப்படி ஏற்படும் முழுசூரியகிரஹணமும் நாம் இருக்கும் தேசத்தில் தெரிவது போல அமைவது அதைவிட அரிது.

கிரஹண காலத்தை ஒருவித பயத்துடன் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. இறைவன் எத்தகைய சூழலையும் நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வழிகாட்டுகிறார். அதன் அடிப்படையில் கிரஹண காலத்தில் நமது உடல்-மனம்-ஆன்மா ஓன்றுபடுவதால் அன்று இறைவனை நாமத்தை ஜபம் செய்ய மிகசிறப்பான நாளாகும்.

மந்திர சாஸ்திரத்தில் ஜபம் செய்யும் காலத்தின் தன்மை எப்படி பலன் கொடுக்கிறது என்பதை கூறுகிறது. எல்லா நேரத்திலும் ஜபம் செய்தால் ஒருமடங்கு பலன், அதை சந்தியாகாலத்தில் செய்தால் பத்துமடங்கும். பிரம்ம முஹூர்த்தத்தில் செய்தால் நூறுமடங்கும், பெளர்ணமி அமாவாசை நாளில் செய்தால் ஆயிரம் மடங்கும், கிரஹண நாட்களில் செய்தால் லட்சம் மடங்கும் பலன் ஏற்படும் என கூறுகிறது.

ஒரு முறை மந்திரத்தை உட்சரித்தால் கிரஹணத்தன்று லட்சம் முறை சொல்லுவதற்கு சமம். அன்றே லட்சம் முறை உச்சரித்தால் ? யோசிக்க வேண்டும். மந்திர சித்தி பெறுபவர்கள் இந்த நாளை பயன்படுத்தி தங்களின் மந்திரத்தில் சித்தியடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் கிரஹணத்தன்று வெளியுலக விஷயங்களை செய்யக்கூடாது. உங்கள் ஆன்மீக விஷய்ங்களுக்கு மட்டும் பயன்படுத்தலாம்.

முக்கியமாக கிரஹண நேரத்தில் செய்ய கூடாதது என சொன்னால் உணவருந்துவது, உணவை சமைப்பது, உடலுறவு மற்றும் உடலைவருத்தும் அனேக செயல்கள்.

செய்ய வேண்டியது பூஜை, தியானம், ஜபம் மற்றும் பித்ரு தர்ப்பணம்

..
.பிரபஞ்சத்தில் நிகழும் எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு காரணம் இருக்கும். எந்த ஒரு விஷயமும் காரண காரியம் இல்லாமல் நடைபெறாது. அது போல சூரிய கிரஹணம் என்பது எதிர்காலத்தில் உலகில் நடக்க இருக்கும் சில சம்பவங்களை முன் கூறும் ஒரு நிகழ்வாக இருக்கிறது.

உலகின் எந்த பகுதியில் கிரஹணம் ஏற்படுகிறதோ அதற்கு நேர் எதிர்பகுதியில் இயற்கை சிற்றங்கள் நிகழும் என்கிறது சாஸ்த்திரம். இந்த வருடம் சூரிய கிரஹணம் நம் நாட்டில் நடக்கிறது.

இதற்கு எதிர் பூமி பகுதியில் இயற்கையின் சீற்றங்கள் நடைபெறலாம். அங்கே வசிக்கும் மக்களுக்கு பாதிப்பு நடக்காத வண்ணம் காக்க இறைவனை கிரஹணத்தின் தினத்தில் வேண்டுவோம். அன்று வேண்டுவது லட்சம் மடங்கு பலன் அல்லவா?



Raghunathan Iyer

unread,
Mar 11, 2016, 12:43:53 AM3/11/16
to arunalaya


 
Halasya Sundaram Iyer's photo.
 

பெரியவா

(பெரியவா என்று வாய்விட்டு அழுதேன். இந்த பதிவை படித்தவுடன். நாமெல்லாம் கால்தூசுக்கு கூட பிரயோஜனமில்லை.)

நீ நூறு வயசு இருப்பே, நாலு நக்ஷத்ரம் கொறையும். - மாதர் கற்புடை மங்கைக்கோர் மழை ...

முக்கூர் ஸ்ரீனிவாச வரதாச்சார்யார். மெட்ராஸ் ல அஷ்ட லக்ஷ்மி கோவில் கட்டினவர். ஸ்ரீவைஷ்ணவர். பெரியவா மேலே அஸாத்ய பக்தி. அவர் டைரி ல எழுதி வெச்சு இருக்கார். அவர் இருக்கறச்சே நடந்த விஷயம். அவர் காலத்துக்கு அப்புறம், அவர் க்ளோஸ் ஃப்ரெண்ட் ஒருத்தர், அவரோட டைரி ஜெராக்ஸ் பண்ணிண்டு வந்து கொடுத்தார். அதுல ஒரு நிகழ்ச்சி. ஆச்சிரியமா இருந்தது.

வித்வத் ஸதஸ் நடந்தது. பெரிய பெரிய வித்வான்கள் எல்லாம் வந்திருக்கா. பண்டிதாள் எல்லாம் வந்திருக்கா. அதிலே ஆந்திரால இருந்தும் நிறைய பேர். அதிலே ராஜமுந்திரி ல இருந்து ஒரு வித்வான் வந்திருக்கார்.

அந்த வித்வான்க்கு கால் கிடையாது. அவர் சம்சாரம் அழைச்சிண்டு வந்திருக்கா. அவரை கூடைல தூக்கி தலைல வெச்சி, கூட்டிண்டு வந்திருக்கா.

இது எக்ஷிபிஷன் மாதிரி எல்லோருக்கும். நளாயினி ன்னு கதை எல்லாம் வேணா கேக்கலாம். இந்த காலத்திலேயும் இருக்கும் போல இருக்கே. வித்வத் சதஸ் இவா தான் அட்ராக்ஷன் .

பெரியவாளுக்கும் ஆச்சிரியமா இருந்தது. கார்த்தால சதஸ் க்கு இவர் வரும்போது அந்த அம்மா கூடைல வெச்சு தூக்கிண்டு வர வேண்டியது. அப்புறம் முடிஞ்சாப்புறம் கூடைல வெச்சு தூக்கிண்டு போக வேண்டியது. இப்படியே பண்ணிண்டு இருக்கா.
சதஸ் முடிஞ்சது. அவாளை கூப்டு அப்டின்னா.

அந்த அம்மா வந்தா.

பெரியவா அவ கிட்டே சொன்னா.

நளாயினி ன்னு கதை எல்லாம் தான் சொல்லுவா. இந்த காலத்திலேயும், இந்த இருபதாம் நூற்றாண்டிலேயும் கால் இல்லாத புருஷனை கல்யாணம் பண்ணிண்டு, குடித்தனம் பண்ணினது மட்டும் இல்லே. அவர் இங்கே போகணும், அங்கே போகணும் ன்னா, தூக்கி தலைல வெச்சுண்டு வர்றா. எப்பேர்ப்பட்ட பதிவ்ரதை. இந்த காலத்திலேயே இருக்கேன்னா, அந்த காலத்திலே ஏன் இருந்திருக்க முடியாது? நீ வந்தது ரொம்ப ஆச்சரியமா இருக்கு. ரொம்ப சந்தோஷம்.

நிறைய சந்தோஷங்களை தெரிவித்த பின் மேலும் தொடர்ந்தார் பிரபு.

ஒன் வாயால ரெண்டு வார்த்தை என்னைப் பத்தி ஏதான சொல்லு. ஒன் வாயால கேக்கணும் போல இருக்கு.

நான் எப்பேர்ப்பட்டவன்?

இவர் இப்படி கேட்டவுடன் அந்த அம்மா சொன்னாள்.

ஒன்னை பத்தி நான் என்ன சொல்லறதுக்கு இருக்கு? நீ தான் ஈஸ்வரன். பெரிய அவதாரம். ஒன்னால தான் வேதமும் தர்மமும் இருக்கு.

ஹாங் ஹாங் என்று கேட்டுக்கொண்டிருந்தார் பெரியவா.

இதெல்லாம் என்ன? எல்லாரும் தான் இதை சொல்லிண்டு இருக்காளே, தெரிஞ்ச கதை, வேறே எதுவும் புதுசா சொல்லு என்றார்.

அந்த அம்மா சொன்னார்.

நீ நூறு வயசு இருப்பே, போ என்றாள் அவள், ஆசிர்வாதம் செய்வது போல.

தொடர்ந்தாள் அவள்,

நீ நூறு வருஷம் இருப்பே, ஆனா நாலு நக்ஷத்ரம் கொறையும்.
இதை சொன்ன ஒடனே பெரியவா முழிச்சிண்டுட்டா. இதுக்கு மேலே விட்டா இன்னும் எல்லா அவதார ரகசியம் எல்லாம் வெளிலே வரும். பிரசாதம் கொடுத்தா. அனுப்பிச்சு வெச்சா.

இதை முக்கூர் டைரில எழுதி இருக்கார்.

ஆச்சிரியம். நடந்தது என்ன?

1994 ஜனவரி 8 சித்தி ஆனா, பெரியவா. மே 1994 ல நூறு வயசு பூர்த்தி ஆகி, நூற்றி ஒன்று பிறக்க போறது.

அந்த பதிவிரதை சொன்னது என்ன?

நீ நூறு வருஷம் இருப்பே, ஆனா நாலு நக்ஷத்ரம் கொறையும்.
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே - நாலு அனுஷம் நக்ஷத்ரம் கொறஞ்சுது.

ஜனவரி 8, அனுஷம், அன்னியோட அவதார பூர்த்தி.
அப்புறம் தான் தோணித்து.

இன்னும் ஒரு நாலு மாசம் இருந்திருக்கக் கூடாதா, நூறு வயசு பூர்த்தி. செஞ்சுரி போட்டிருக்கலாமே?

பதிவிரதை வாக்கியம். அது தப்பா ஆச்சுன்னா?

பதிவிரதை வாக்கியம் தப்பு ஆகக் கூடாதே!

ஆச்சிரியம். பெரியவா சரித்ரம் தோண்டத் தோண்ட இப்படி பல விஷயங்கள்..
.
நன்றி - ஸ்ரீ கணேச சர்மா, 'தெய்வத்தின் குரல்' உபன்யாசத்தில்.
இதோ தெய்வத்தின் குரல்.

வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை
நீதி மன்னர் நெறியினர்க்கோர் மழை
மாதர் கற்புடை மங்கைக்கோர் மழை
மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே.

என்று சொல்லியிருக்கிறது. இதிலே ‘நீதி மன்னர் நெறி’ என் ஜூரிஸ்டிக்ஷனில் [அதிகார எல்லைக்குள்] இல்லாத விஷயம். அதனால் அதைப் பற்றி நான் கவலையோ, ஸந்தோஷமோ படுவதற்குப் பொறுப்பாளி இல்லை.

ஆனால் வேதியரை வேதம் ஓதப் பண்ணுவதும், மாதர்களை கற்பு நெறி தவறக்கூடிய ‘சான்ஸ்’ களுக்குக் காட்டிக் கொடுக்காமல், காமம் புகுமுன்பே பதியை ஈச்வரனாக பாவிக்கக் கொடுத்து, அப்புறம் அவன் ஒருத்தனையன்றி மனஸ் கொஞ்சங் கூடச் சலிக்காத பாதிவ்ரயத்தை ஏற்படுத்தித் தருவதும் என் பொறுப்புதான். இந்த இரண்டுக்கும் என்னாலானதைச் செய்ய வேண்டும் என்றுதான் ஓயாமல் நினைத்துக் கொண்டு எதையாவது திட்டங்களைப் போட்டுக் கொண்டிருக்கிறேன்.

Goal ரொம்பவும் எட்டத்தில்தான் இருக்கிறது. என் பிரயத்தனத்தைவிட ஜாஸ்தி வேகத்தோடு அது விலகி விலகிப் போய்க் கொண்டேயிருக்கிறது. அதற்காக இந்த ரேஸில் நான் ஓய்ந்து விடக்கூடாது. அல்லது இப்போது வந்திருக்கிற நாகரிகப் போக்குகள் தான் சரி என்று ‘ஆமாம் பூசாரி’ யாகத் தலையாட்டி விடவும் கூடாது. ‘போனது போனது தான்; சீர் செய்து சாத்தியப்படாது. இப்போது ஏற்பட்டிருக்கிற கலிப் பிரவாஹத்தைத் தடுத்து மாற்றுவது நடக்காத காரியம்’ என்று விட்டு விடுவதற்காக என்னை இங்கே [பீடத்தில்] உட்கார்த்தி வைத்திருக்கவில்லை.

அநாதி காலமாக இந்த தேசத்தில் உயர்ந்த நிலையில் இருந்து வந்திருப்பதும், இரண்டாயிரம் வருஷமாக இந்த மடம் பரிபாலித்து வந்திருப்பதுமான வேத அபிவிருத்தியையும் ஸ்திரீதர்மங்களையும் என் காலத்தில் நான் வாயை மூடிக்கொண்டு வாரிக்கொடுத்துவிட்டு ‘ஜகத்குரு’ பட்டம் சூட்டிக்கொண்டு, ஸாக்ஷாத் பகவத்பாதாளின் பெயரை வைத்துக் கொண்டிருந்தால் அதைவிடப் பெரிய தோஷம் இல்லை.

பகவான் [கீதையில்] சொன்ன மாதிரி ஜயாபஜயம் அவன் கையில் இருக்கிறது என்று விட்டுவிட்டு, நான் பாட்டுக்கு முன் வைத்த காலைப் பின் வைக்காமல், என் பிரயத்தனத்தை விடாமல் பண்ணிக் கொண்டேதான் போக வேண்டும்.

ரிஸல்ட் என்னுடைய ‘ஸின்ஸரிடி’யையும், அந்தரங்க சுத்தத்தையும், தபஸையும் பொறுத்து அமையும். கணிசமான பலன் இதுவரைக்கும் ஏற்படவில்லை என்றால் என் ஸின்ஸிரிடி போதவில்லை, என் மனஸ் சுத்தமாகவில்லை, என் தபஸ் குறைச்சல் என்றுதான் அர்த்தம். லோகம் என்னை எத்தனை ஸ்தோத்திரம் பண்ணினாலும் எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது.

Thanks to Sri.Karthi Nagarathinam sir

Raghunathan Iyer

unread,
Mar 11, 2016, 12:46:01 AM3/11/16
to arunalaya
 
Sivaraman Ramachandran's photo.
 
 

உறவினர்கள் இறந்து விட்டால் , அந்த வருடத்தில் பண்டிகைகளை கொண்டாடலாமா? தர்ம சாஸ்த்ரம் சொல்வது என்ன.

பிராஹ்ம்மணர்களாகிய நாம் அனைவரும் அடிப்படை தர்ம சாஸ்திரத்தையாவது தெறிந்து கொள்ளவேண்டும்.

சட்டம் (தர்ம சாஸ்த்திர சட்டம்) தெறியாது என்பது குற்றமாகும்(பாபமாகும்.) IGNORENCE OF LAW IS NOT AN EXCUSE.

தர்ம சாஸ்திரப்படி ஒரு கர்மாவைச் செய்வதற்கு கர்த்தா(அக்கர்மாவைச் செய்கின்றவன்) , காலம்(அக்கர்மாவை செய்ய விதிக்கப்பட்ட காலம்) இடம் (அக்கர்மாவைச் செய்யக்கூடிய இடம்) இவை மூன்றும் தோஷமற்றதாக இருக்கவேண்டும் என்கிறது சாஸ்த்திரம்.

மேலே கூறப்பட்ட அடிப்படையின்படி , ஒரு கிருஹத்தில் யாராவது இறந்து விட்டால் , அவர்களுக்கு (அந்த இறந்தவருக்கு) கர்மா செய்யக்கூடிய பிள்ளை (அ) கர்மாவைச் செய்யக்கூடிய உறவினர் யாரோ அவர்கள் அந்த ஒரு வருடம் நித்ய கர்மாவைத் தவிற மற்ற கர்மாக்களஈச் செய்வத்ற்கு சுத்தி போறாது என்று கூறுகிறது. 
அதுமட்டுமல்ல அக்கர்மாவை செய்பவன் எங்கு வஸிக்கின்றானோ அந்த இடத்திற்கும் போவதால் சுத்தி போறாது என்கிறது. 
இதன் அடிப்படையில் முற்காலத்தில் (அவிமுக்த குடும்பம்,) அதாவது பந்துக்கள் அனைவரும் ஒரே வீட்டில் வசித்தார்கள். (சமையல், பூஜை) ஆகையால் பந்துக்கள் அனைவரும் ஒருவருடம் பண்டிகைகளைக் கொண்டாடமாட்டார்கள். 
இக்காலத்தில் அப்படியல்லாமல் உறவினர்கள் அனைவரும் தனித்தனியாக இருக்கின்றார்கள். இப்படி இருக்க மேலே கூறிய சாஸ்த்திரப்படி கர்த்தாவைத்தவிற( கர்மா செய்யக்கூடிய) மற்றவர்களுக்கு எப்படி அசுத்தி வரும். மற்றவர்கள் வீட்டிற்கு எப்படி அசுத்தி வரும்.

ஆகவே இறந்தவரின் கர்மாவைச் செய்யக்கூடிய பிள்ளைகளுக்கும்(அ) அந்த இறந்தவரின் கர்மாவை தொடர்ந்து செய்யக்கூடியவர்களுக்கும் மட்டுமே இந்த அசுத்தி பொருந்தும். மற்ற தாயாதிகள் மற்றும் உறவினர்கள் , இறந்தவரின் சபிண்டீகரணம் என்று சொல்லக்கூடிய பன்னிரெண்டாம் நாள் கர்மா முடிந்தவுடன் அவரவர்கள் வீட்டில் எல்லா பூஜைகளையும், பண்டிகைகளையும் செய்யலாம்.

சாஸ்திரத்தில் கூறப்பட்ட கர்மாக்களை நாமே அசுத்தி என்று நினைத்துக் கொண்டு செய்யாமல் விடக்கூடாது. இயற்கையாக (தெய்வாதீனமாக) வந்தால் மட்டுமே விசேஷ கர்மாக்களை செய்யாமல் விடவேண்டும். சாஸ்த்திரம் எப்போதும் நமது நன்மையைத்தான் கூறும்.

நாம்தான் சாஸ்த்திர்ம் என்ற பெயரில் பல ஸம்பிரதாயங்களை வளர்த்துக் கொண்டுள்ளோம்.

இதைப்பற்றி ஒருசமயம் மஹாஸ்வாமிகள் கூறுகையில் நானும் பெறியோர்கள்(முன்னோர்கள்) செய்த ஸம்பிரதாயங்களை விடக்கூடாது என்று கூறிவந்தேன். ஆனால் வடக்கத்தியர்கள் விவாஹ விஷயங்களில் என்னை கண்டித்து கேள்வி கேட்கிறார்கள். அவர்கள் கூறுவதி ந்தியாயம் இருப்பதாகத் தெறிகிறது. இதன் அடிப்பட்யையில் சாஸ்த்ர விறோதமான ஸம்பிரதாயங்களை கடைபிடிக்க கூடாது என்று கூறினார்.

ஆதிசங்கர பகவத் பாதர்களும் இதையே உபநிஷத் பாஷ்யத்தில் விவரமாகக் கூறியுள்ளார். ஏதோ ஒரு கட்டத்தில் (தவிற்க முடியாத) சூழ்நிலையில் தனது குருவே சாஸ்திரத்திற்கு மாறாக செய்திருந்தால் கூட நாம் அதைப் பின்பற்றக் கூடாது. என்று கூறியுள்ளார்.

இதை பலபேர் எங்காத்து சாஸ்த்ரிகள் ஒருவருடம் பண்டிகை செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டார்களே என்று கேட்கிறார்கள். யாரும் வைதீகர்களை குறை கூற வேண்டாம். நாம் தான் சாஸ்த்திரம் தெறிந்த வைதீகர்களை அணுகி தெறிந்து கொள்ள வேண்டும். தர்ம சாஸ்திரம் தெறியாத வைதீகர்களைக் கேட்டுப் பயனில்லை.

தர்ம சாஸ்திரம் சைவம், வைணவம் , எல்லோருக்கும் ஒன்றுதான்.
ரிஷிவாக்கியங்களான ஸ்ம்ருதியை கடைபிடிப்பவர்கள் அனைருக்கும் இது பொருந்தும்.

நன்றி: ஶ்ரீ குமார் பாலசுப்ரமணியன் அவர்கள்.


It is loading more messages.
0 new messages