நாஸ்தீகம் உண்மையா?

0 views
Skip to first unread message

அறம் - கற்க கசடற

unread,
Mar 24, 2025, 2:50:55 PMMar 24
to அறம் கற்க கசடற

தான் சொல்றது பொய் என்றே தெரியாதவன் நாத்தீகன்..

பதில் அளியுங்கள்

கட்டுக்கதைகளை மட்டுமே நம்பும் ஆத்திகர்களிற்கு நிரூபிக்கப்பட்டவற்றை மட்டுமே நம்பும் நாத்திகர்கள் பொய் சொல்வதாக தெரிவதில் ஆச்சரியமில்லை

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

ஆத்தீகம் என்ற பெயரில் சொல்வதெல்லாம் உணமையா பொய்யா என்று ஆராய்ச்சி செய்ய ஏதேனும் தனி பல்கலைகழகம் அல்லது lab உள்ளதா என்ன?

ஒவ்வொன்றையும் ஆய்வு செய்துதானே கட்டுக்கதை என்று நிரூபிக்க வேண்டும், ஏனென்றால் நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றை ஏற்பது தவறு என்றால் மறுப்பதும் தவறுதான்! நீங்க எத்தனையை ஆய்வு செய்தீர்கள்?

இன்றைய அறிவியலுக்கு முரணாக சமயங்கள் சிலவற்றை பேசுவதால் மட்டுமே மதங்கள் தவறானதாக ஆகி விடுமா? அறிவியல் ஒரே விடயத்தில் நேற்று ஒன்று என்றும் இன்று வெறொன்றாகவும் பேசுவதில்லையா? அதை நீங்கள் progress என்று கூறலாம் ஆனால் அது சமய கருத்துக்களுக்கு பொருந்ததாது, அப்படித்தானே?

சரி, நீங்கள் எத்தனை அறிவியல் செய்திகளை ஆய்ந்து உண்மை ஏற்று கொண்டீர்கள்? மன்னிக்கவும் உங்களால எல்லா துறையிலும் உள்ள எல்லாத்தையும் ஆய்வு செய்ய முடியாதுல்ல? அப்போ எப்படி அவைகளை ஏற்று கொள்கிறீர்கள்? ஹோ, நீங்க அறிவியல் என்று நிரூபிக்கப்பட்டது என்று அறிவியல் அறிஞர்கள் என்று யாராவது சொன்னாலோ அல்லது பல்கலைகழகம் ஒன்று சொன்னாலோ அதை நம்புகிறீர்கள்! ஐயையோ சாகோ நம்பிக்கை அடிப்படையில் எதையும் ஏற்க கூடாதே!

உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்,

ஆதீகர்கள் நம்பிக்கை அடிப்படையில் எதையும் ஏற்க்க கூடாது, அப்படி ஏற்றால் அது மூட நம்பிக்கை, கட்டுக்கதை என்று கூறினால் அது அறிவியலுக்கும் பொருந்தும்.

அறிவியல் கருத்து மற்றும் அறியல் புரிதலில் progress உண்டு என்றால் அது ஆன்மீகத்திலும் உண்டு.

எதையும் அதன் அடிப்படையில் இருந்து கற்று தான் அதன் முழு விடயங்களை கற்கவோ ஆய்வு செய்யவோ முடியும் என்று அறிவியல் கூறுகிறது என்றால் அது சமயங்களும் பொருந்தும்.

அறிவியல் கண்டுபிடிப்புகளை authenticate செய்ய ஒரு நிறுவனமோ அல்லது அறிவியலாளர் உண்டு என்றால், அப்படிப்பட்ட ஒரு structure ஆன்மீகத்திலும் உண்டு.

அறிவியல் உலகத்தில் பொய் science உண்டு என்றால், ஆன்மீகத்திலும் பொய் ஆன்மீகம் உண்டு, பொய் அறிவியல் செய்திகளை அல்லது கண்டுபிடிப்புகளை காட்டி அறிவியலையே மறுப்பது மூடத்தனம் என்றால் அது ஆன்மீகத்துக்கும் பொருந்தும்.

அவ்வாறு பல்வேறு சமய நூல்களை ஆய்வு செய்வதில் உள்ள சிரமம் உங்களுக்கு கண்ணில் பட்டால், அது இன்றைய கல்விமுறையில் நடைமுறை சிக்கலைவிட சுலபமனாதே.

அறிவியல் ஆய்வு மக்களுக்கு பயனளிக்கும், ஆனால் சமய நூல்களை ஆய்வு செய்வதால் எந்த பலனும் இல்லை என்று நீங்கள் நினைத்தால், அது முற்றிலும் பிழை. காரணம் முதலில் தவறான ஆன்மீகம் களையப்படும் பொழுது அன்பும் அமைதியும் மட்டும்தான் நிலைக்கும். மக்களுக்கு இது இரண்டையும் தவிர வேறெதுவும் பெரிய பயனை தர வாய்ப்பில்லை.

இரண்டுக்கும் சம வாய்ப்பும், சம அணுகுமுறையும் கொடுக்காமல் மூடநம்பிக்கை, பொய் என்று பிதற்றுவது என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால் உங்கள் நேர்மை கேள்விக்கு உரியதாகிறது. எங்களுக்கு பாடம் எடுப்பதற்கு பதிலாக நீங்க நேர்மையாலராக இருந்தால் இந்த கோணத்தில் நீங்க சிந்தித்து ஆய்வு செய்யுங்க. நன்றி.

பதில் அளியுங்கள்

மதங்கள் வாயால் வடை சுடைசுடுவது போல் அறிவியல் வாயால் வடை சுடுவதில்லை.இருந்த இடத்தில் இருந்து கற்பனையில் கிறுக்கியதை ஒலி வடிவில் வந்ததை,உலகை அளந்ததை நம்புவதில்லை.அதனை நம்புவதற்கும் பெரும் கூட்டம் இருக்கிறது.ஆராய்ச்சி என்பது தொடர்ச்சியான ஆய்வுகளிற்கு உட்பட்டது.யாரோ சொன்னார் என்பதற்காக நம்புவதில்லை அதற்கான சான்றுகள் என்ன,Google Scholar உள்ளதா என்பதை ஆராய்ந்த பிறகே நம்புகிறேன்.பிழை என்று நிருபித்தால் மதங்கள் ஏற்றுக் கொள்ளாது என்பதை நீங்களே சொல்லி விட்டீர்கள்.பல்கலைக்கழங்கள் மதங்களைப் போல கற்பனையில் அடித்து விடுவதில்லை.இல்லாத கடவுளையும் கற்பனை செய்து கொண்டு மக்களை ஏமாற்றுவதில்லை.நம்ப வைப்பதில்லை.சான்றுகளை முன்வைக்கிறன.அதற்குரிய விளக்கங்களை கொடுக்கிறனர.அதனை யாராவது பிழை என்று நிருபித்தால் ஏற்றுக் கொள்கிறனர்.சாமி இல்லை, பூதம் இல்லை, சொர்க்கம் இல்லை, நரகம் இல்லை; அவை குறித்த கதைகள் இருக்கின்றன. ஸ்பைடர்மேன், சூப்பர்மேன், பிள்ளையார், அல்லாஹ், இயேசு போன்ற சூப்பர் ஹீரோக்கள் குறித்த கதைகள் மட்டுமே இருக்கின்றன. அந்தக் கற்பனைக் கதைகள் மனிதர்களை பயமுறுத்துகின்றன; அவர்களை ஒடுக்குகின்றன; பூஜை, புனஸ்காரங்கள், நோன்புகள் என்று நேர விரயம் செய்கின்றன. வன்முறைகளுக்கு இறை அங்கீகாரம் தருகின்றன

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

நான் சொன்ன கருத்துக்களை நீங்க உள்வாங்கியிருந்தால் நீங்க பல கருத்துக்களை எழுதியிருக்க தேவையே இல்லை. ஏனென்றால் இவை அனைத்தையும் உள்ளடக்கியதுதான் அந்த பதில்.

உண்மையை அறியும் அணுகுமுறை எப்படி இருக்க வேண்டும் என்று கூறினேன். அந்த அணுகுமுறை ஏன் பிழை என்று முறையாக கூற இயலாமல் வெறுப்பை கக்கும் உங்களது இயலாமையை கண்டு சிரித்துவிட்டு கடந்து செல்வதுதான் அறிவுடையோரின் செயல்.

உங்க பதில் எல்லாவற்றையும் பார்த்தால் நீங்க எப்படிபட்டவர் என்று புரிகிறது.! கற்க தயாராக இல்லாத மனிதர், எந்த ஒன்றையும் ஒரே கோணத்தில் மட்டும் அணுகும் மனிதர். உங்க வாய் நீங்க என்ன வேனுமானலும் பேசுங்க..! உங்க கீபோர்ட் என்ன வேணுமானாலும் எழுதுங்க..! ஆனா பகுத்தறிவாளர் என்று உங்களை நீங்க நினச்சுகாதீங்க.. நீங்க நாத்திகர் அவ்வளவுதான்.

வர வர சாங்கிகள் யார்? தமிழ் தேசியத்தான் யார்? திக யார்? என்றே தெரியல. எல்லோரும் தனது கருத்துக்கு முரணாக பேசுவோரை வசைபாடுவதே நோக்கமாக வைத்து உள்ளனர். சிந்திக்க மறுக்கின்றனர். கருத்தை கருத்தால் எதிற்கொல்லாதவர்களிடம் பேசுவது வீண். நன்றி.

பதில் அளியுங்கள்

அனைத்தையும் உள்ளடக்கிய பதில் என்று நீங்களாகவே நினைத்துக் கொண்டால் என்ன செய்வது..?ஐயா பூமி தோன்றிய 450 பில்லியன் ஆண்டுகள்.நவீன மனிதர்கள் தோன்றி 3மில்லியன் ஆண்டுகள்.இந்த மதங்கள் கடவுளர் எல்லாம் விவசாயப் புரட்சிக்குப் பின்னர் நிலையான குடியிருப்பை அமைத்த பின்னர் உண்டாக்கப்பட்டவையே.எல்லா மதங்களும் 5000-6000 ஆண்டுகளிற்குட்பட்டவைதான். மதங்களிற்கு வாயால் வடை சுட மட்டும்தான் தெரியும்.

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

//அனைத்தையும் உள்ளடக்கிய பதில் என்று நீங்களாகவே நினைத்துக் கொண்டால் என்ன செய்வது..?//

ஐயா உங்களுக்கு புரியலைனா நான் என்ன செய்றது? ஒரு அறிவியல் கருத்தை அல்லது தியரியை புரியணும்னா அதுக்கு மொழி கணிதம் உட்பட பல அடிப்படைகளை படித்துவிட்டு வரணும் என்பது புரியும் நமக்கு, கடவுளை சமயங்களை விமர்சனம் செய்யணும் என்றால் பேச தெரிந்தால் போதும் என்று நினைக்கிறோமே? இது எப்படி நியாயமாகும்?

//ஐயா பூமி தோன்றிய 450 பில்லியன் ஆண்டுகள். நவீன மனிதர்கள் தோன்றி 3மில்லியன் ஆண்டுகள். மதங்கள் கடவுளர் எல்லாம் விவசாயப் புரட்சிக்குப் பின்னர் நிலையான குடியிருப்பை அமைத்த பின்னர் உண்டாக்கப்பட்டவையே.//

நீங்க நேர்ல சென்று மனிதர்கள் உருவானதை அலல்து கடவுள் உருவானதை பாத்தீங்களா? பாக்க முடியுமா? எனவே அவ்வாறு சொல்லப்படுவதை நீங்க நம்புறீங்க! இது மூட நம்பிக்கை இல்லையா? ஏதோ ஒரு சில அறிவியல் உண்மைகளோடு பல கட்டுக்கதைகளை யாராவது சொன்னால் நம்பிவிடுவீர்கள்! இப்போ இந்த செய்தியை உண்மையென்று ஏற்க நேரில் பார்க்க முடியாது என்றதும், அதன் உண்மை தன்மையை அறிய வேறு முறையை கையாள்கிறோம். அதுதான் அறிவுடைமை. அந்த முறையோ அல்லது அதன் முடிவோ சரியாக உள்ளதா இல்லையா என்பது விவாதத்துக்கு உரிய வேறு விடயம். இப்படி இருக்க கடவுள் என்றதும் மட்டும் எங்கே நேர்ல காட்டு என்று கேட்பது எவ்வாறு சரியான அணுகுமுறை ஆகும். அதற்க்கு உரிய அணுகுமுறை என்ன என்றுதானே தேடி இருக்க வேண்டும்?

//எல்லா மதங்களும் 5000-6000 ஆண்டுகளிற்குட்பட்டவைதான். மதங்களிற்கு வாயால் வடை சுட மட்டும்தான் தெரியும்.//

இன்று உள்ள எல்லா மதங்களும் இதற்கு உட்பட்டது தான் என்பதை நானும் மறுக்கவில்லை. ஆனால் அதற்கு முன்பு மனிதன் நாகரீகம் பெற்று இருக்கவில்லை என்பதும், சமயங்கள் இருந்திருக்கவில்லை என்பதும் சரியான தகவலா என்பது ஆய்வுக்கு உரியது.

நீங்க சமயங்கள் என்றதும் புராண புளுகுகளோடு ஒப்பிட்டு எல்லா சமயங்களையும் பொய் என்று நினைத்தால் எப்படி? அல்லது சரி என்று நீங்க எதை கருதுகிறீர்களா அப்படிதான் சமயங்களும் சொல்லவேண்டும், இல்லை என்றால் பொய் அல்லது பிற்போக்கு என்று கூறுவேன் என்பது எப்படி சரி ஆகும்?

ஒரு அறிவியல் கருத்தை படிக்காமல் அதை மறுப்பவர்கள் மடையர்கள், ஒரு அறிவியல் செய்தியை முழுமையாக அறியாமலே எல்லாம் அறிந்தவன் போல பேசுபவன் அடிமுட்டாள். அதற்கு தெரியாது என்று சொல்லிவிட்டு போகலாம். அப்படித்தான் ஆன்மீகத்திலும். அறிவியலா ஆன்மீகமோ இரண்டிலும் பொய் கலந்து இருக்கத்தான் செய்கிறது, அதிலக் உண்மையையும் பொய்யையும் பகுத்து அறிவதுதான் பகுத்தறிவு.

Reply all
Reply to author
Forward
0 new messages