இயேசு பேசிய மொழி என்ன?
அராமைக்!
அராமைக் மொழியில் பைபிளை படித்து உள்ளீர்களா? ஆம்! என்றால் என்ன பெயர்களை உபயோகித்து கடவுளை இயேசு அழைத்தார்? வசன ஆதாரம் தருக! இல்லை! என்றால் அவர் கடவுளை அப்படி அழைக்கவில்லை என்று நீங்கள் எப்படி சொன்னீர்கள்?
அல்லாஹ் என்றோ அதற்கு இணையான அல்லது அதன் உச்சரிப்போடு ஒத்துப்போகும் சொல்லையோ இயேசு பயன்படுத்தி உள்ளார் என்று அறிந்தால், நீங்கள் அல்லாஹ்வையும் முகமது நபியையும் ஏற்று கொள்வீர்களா? இல்லை! ஏன்?
உங்களுக்கு வேண்டியதெல்லாம் சத்தியம் அல்ல, நீங்கள் எதிரியாக கருதுவொரிடம் போட்டி - அதில் வெற்றி. போட்டியில் முடிஞ்சா தரக்குறைவான வார்த்தைகளை கொண்டு வெறுப்பை கக்க வேண்டும். இது கேள்வி, இது பதில், இது ஆதாரம் என்று நீங்க பேசியது வெகு குறைவு. அவ்வாறு அல்லமால் பேசப்படும் பதிலும் கமெண்டும் நீக்கப்படும்.
ஏலீ என்று இயேசு கூறினாரா? நீங்க எந்த வார்த்தையை உச்சரிக்கிரீர் என்று தெரியவில்லை. வசனத்தையும் அதன் என்னையும் கொடுங்க. உண்மையை அறிய வேண்டும்? மேலுள்ள காணொளியை காணவும்.
குர்ஆன் இடைச்செருகல்? இல்லை என்று எல்லாம் உங்களிடம் விளக்கவெண்டிய அவசியம் இல்லை! ஏனென்றால் பைபிள் ஆதாரங்களையே மதிக்காதவர் நீங்கள்! சத்தியம் சொல்லப்படும் பொழுது சொந்த விருப்பு வெறுப்பை ஓரம் கட்டி அதை ஏற்க்க வேண்டும், அல்லது முறையான வேத ஆதாரம் சொல்லி மறுக்க வேண்டும். அவன்தான் நேர்மையானவன், ஆன்மீகவாதி, விசுவாசி, வீரன். உங்களிடம் இது எதையும் நான் இதுவரை பார்க்கவில்லை.
ஒரே கடவுள் என்கிற பொழுது வேறு வேறு பெயரை ஒரே மொழிக்குடும்பத்தை சேர்ந்த தீர்க்கதரிசிகள் சொல்லவே வேண்டும் என்று எதிர்பார்ப்பது எப்படி அறிவுள்ள செயலாகும்? செமிட்டிக் மொழிக்குடும்பம் என்றால் என்ன என்று வாசிக்கவும்! மோசஸ் கடவுளை எப்படி அழைத்தாரோ? அப்படிதான் ஏசுவும் அழைத்தார்! அப்போ இயேசு காப்பி அடித்தாரா? என்று கேட்டால் எப்படி அறிவிலியின் கேள்வி போல தெரியுமோ அபப்டித்தான் இருக்கிறது நீங்க கேட்பதும்.
முஸ்லீம் என்றால் என்ன? கடவுளுக்கு கட்டுப்பட்டவன் என்று பொருள். யாரெல்லாம் இறைவன் சட்டத்தையும் அவனது இலக்கணங்களையும் அறிந்து செயல்படுகிறாரோ அவர் ஒரு முஸ்லீம்.
காபீர் என்றால் இறைவனை மறுப்பவன் என்று பொருள். யாரெல்லாம் இறைவனை அவன் சொன்ன இலக்கணப்படி அறிந்திராமல், அவனது வரையறைகளுக்குக்கு மாற்றமாக அவனை புரிந்து கொள்கிறார்களோ, அல்லது இறைவனை இல்லையே என்கிறீர்களா அவர்கள் காபீர்கள்.
இந்த வரையறைப்படி உலகம் தொடங்கியது முதல் இரண்டு வகையான மக்கள் மட்டுமே இருந்து வந்துள்ளனர். மொழியும் அதன் சொல்லும் மாறலாம் ஆனால் ஆன்மீகத்தில் மக்களின் இரண்டு வகைக்கு வரையறை இதுதான். அதில் இயேசு இறைவனுக்கு கட்டுப்பட்டவர். எனவே சில அவரை முஸ்லீம் என்று அழைக்கின்றனர். அதில் என்ன பிழை?
இயேசு அல்லா என்று அழைத்தாரோ, அவரின் இலக்கணத்தையும், முகமது நபி அல்ஹ என்று அழைத்தாரோ அவரின் இலக்கணத்தையும் ஒப்பிட்டு இரண்டும் ஒன்றா அலல்து வேறா என்று முடிவு செய்வதுதான் சரியான அணுகுமுறை!
தாடி வைப்பவன் எல்லாம் தாகூர் என்று நினைப்பதென்றால், எந்த ஆய்வும் செய்யமல் எடுத்த எடுப்பில் அலல்து முன் முடிவை அடிப்படையாக கொண்டு ஒரு விடயத்தை அணுகுவது என்று கூற வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். அதாவது யூகத்தில் பேசுவதை குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
ஐயா யூகத்தில் பேசுபவர் நீரா? நானா? எமது கருத்துக்கள் அனைத்தும் வேத வாக்கியங்களை அடிப்படியாக கொண்டுள்ளது.
நீங்க தான் ஒரு steriotype-ஐ மனதில் வைத்துக்கொண்டு கருத்துக்களை சொல்லிக்கொண்டு உள்ளீர்.
ஏமாற்று பேர்வழிகள் வழக்கமாக தனது என்னென்ன சுயலாபத்துக்காக ஒரு காரியத்தை செய்வார்கள்?
மாளிகை, உணவு, பணம், தூக்கம், புகழ் போன்றவைகளுக்கத்தான். இதில் எதையும் முகமது நபி அனுபவிக்கவில்லை.
மாளிகை
ஏறக்குறைய முழு அரேபிய தீபகர்ப்பமும் அவரின் ஆட்சியின் கீழ் இருந்தும் இறுதிவரை ஒரு குடிசையில் வாழ்ந்த்தார்.
உணவு
தனது வாழ்நாள் முழுவதும் தனது கைகளால் உழைத்து உண்டார்,
மூன்று நாள்களுக்கு மேல் அவர் வீட்டு அடுப்பு தொடந்து எரிந்தது இல்லை. ஏறக்குறைய ஒரு மாதத்தில் 20 நாட்கள் நோன்பில் இருந்தார், ஆட்சி அதிகாரம் கைக்கு கிடைத்த பிறகும்.
பணம்
ஒரு நாளின் இறுதியில் தன்னிடம் உள்ள பொருளை தானம் செய்துவிட்டு வெறுங்கையோடு உறங்க செல்வார்,
மக்கள் கொடுக்கும் தான தர்மத்தில் ஒரு தீனாரை கூட தனது சொந்த தேவைக்கு செலவு செய்யாதவர்,
தூக்கம்
இரவின் மூன்றில் இரண்டு பகுதி இறைவணக்கத்தில் ஈடுபடக்கூடியவராக இருந்தார். அவர் தூங்கியது நேரம் வெகு குறைவு.
புகழ்
ஈஸாவை மக்கள் வரம்பு மீறி புகழ்ந்தது போல என்னை புகழக்கூடாது, நான் வரும்போது எழுந்து நிற்க தேவை இல்லை, எனது மண்ணறையை உயரமாக கட்டாதீர்கள், தீர்க்கதரிசிகளின் மண்ணறையை மக்கள் வணங்கும் இடமாக ஆக்கிக்கொண்டது போல எனது இடத்தையும் ஆக்கிவிடாதீர்கள் என்று கூறினார்.
மேலும்
யாரையும் கடுமையான வார்த்தையில் பேசாதவர், கெட்டவார்த்தை பேசாதவர்,
இயேசு திராட்சை ரசத்தில் அற்புதம் செய்தது போல 1000 கணக்கில் அற்புதங்கள் செய்தும், அவைகளை முற்படுத்தாமல் குரானை தான் மிகப்பெரும் அற்புதமாக முன்னிறுத்தியவர்,
இயேசுவை போலவே தனது இறப்பை முன்னறிவிப்பு செய்தவர். இறுதிவரை தன்னை ஒரு இறை அடியான் என்று மட்டுமே கூறியவர்.
இறக்கும் தருவாயிலும் மக்களின் தொழுகை, நல்லொழுக்கம், சமத்துவம் பற்றி உபதேசம் செய்தவர்.
இந்த செய்திகள் எல்லாம் நீங்க அறிந்து இருக்க வாய்ப்பு இல்லை. ஏனென்றல் நீங்க இருபக்க தகவல்களையும் வாசிப்பது போல ஆய்வு செய்வது போல தெரியவில்லை. வீண்விவாதமும் அபத்தமான விமர்சனங்களும் செய்பவர்களை வாசிப்பவர் அல்லது பின்பற்றுபவர் போல தெரிகிறது.
இந்த எல்லா செய்திகளுக்கும் ஆதாரகதகவல்கள் குர்ஆன் மற்றும் ஹஸீஸிலிருந்து ஆதாரங்கள் கொடுக்க முடியும். இதில் எந்த செய்தியும் எனது சொந்த கருத்தோ யூகமோ அல்ல.
இயேசு உட்பட அனைத்து தீர்க்கதரிசிகளையும் கண்ணிய படுத்தியவர் முகமது நபி. உங்க கூட்டம் எவ்வளவு முகமது அவர்களை கேவலமாக விமர்சித்தும், இஸ்லாத்தை பின்பற்றும் ஒருவர் இயேசு கிறிஸ்துவை விமர்சிப்பதை உங்களால் காட்ட முடியாது. இதுதான் முஸ்லீம்கள் சத்தியத்தில் இருப்பதற்கு ஓர் உதாரணம்.
பொதுவாக ஆன்மீக விடயங்களை பேசும் பொழுது, ஆதாரங்களுடன் பேச முற்படுங்கள், அந்த ஆதாரங்களின் நம்பகத்தன்மையை கொஞ்சம் ஆய்வுசெய்யுங்க, இரண்டு பக்க செய்திகளையும் ஆய்வு செய்ய்யுங்க, கொஞ்சம் கண்ணியமா பேசுங்க. இது மேடை பேச்சோ காமெடி ஷோ வோ அல்ல, ஆன்மீக உரையாடல்.