"வாய்மை" என்ற இந்த நூல் ஒவ்வொரு தனி மனித வாழ்வில் நிகழும் நிகழ்வுகளின் காரணங்களையும், நம் எதை நோக்கி பயனிக்கிறோம் என்பதையும் அப்பயணத்தில் அனைத்து சமயத்தவருக்கும் பொதுவான விதிகள் என்னென்ன என்பதை ஒப்பிட்டு அறியவும், அதை மீறும் பொழுது தனி மனிதனாக, குடும்பமாக, சமூகமாக எப்படிப்பட்ட விளைவுகள் ஏற்படும் என்று அறிவதும், அதை ஒழுங்கு படுத்ததும் முறையினையும் பகிர்வது இந்த நூலின் நோக்கம் ஆகும்.
எல்லோருக்கும் சொல்லப்படவேண்டிய மெய்மை அடங்கிய இந்த நூலுக்கு "வாய்மை" என்று பெயரிட்ட காரணங்கள் இரண்டு.
1) இந்த நூலின் மூலம் சாதி மத இன மொழி பேதமின்றி ஒவ்வொரு மனிதனுக்கும் நன்மை விளைவதை விரும்புகிறோம்.
விளக்கம்: வாய்மை என்று சொல்லப்படுவது யாது என்றால், அது பிறருக்குத் தீமை இல்லாதபடி யாதொரு சொல்லையும் எப்போதும் சொல்லுதல் ஆகும்.
பொருள்: சிவனைக் குறித்து இடையறாது எண்ணி இருப்பது, தீதில்லாததை கூறுவது, என்ற இந்த இரண்டு வழிகளை அல்லாமல் ஈசனை காண இயலாது.
2) வாய்மை என்பது பொய் சொல்லாமையைக் குறிக்கும். மனம், சொல் & மெய்யால் பொய்யின்றி இருப்பதை முறையே உண்மை, வாய்மை & மெய்ம்மை எனக் கூறுவர். சமகாலத்தில் "வாய்மை" என்கிற பதம் இந்த அனைத்து பொருளிலும் பயன்படுத்தப் படுகிறது. உலகில் உள்ள ஒவ்வொருவரும் அறிய வேண்டிய ஆழமான, வெளிப்ப்டையான & இரகசியமான உண்மையை உலகுக்கு கூறும் இந்நூலுக்கு "வாய்மை" தலைப்பாக பொருந்தும் என்று கருதியதால் வாய்மைஎன பெயரிடப் பட்டது.
பொய்யும் புரளியும் நிரம்பி வழியும் காலத்தில் "வாய்மை"யை எழுத ஆதார கூறுகளை தேர்ந்தெடுக்க சில விதிகளை ஏற்படுத்திக் கொள்வது அவசியம்.
முதலாவதாக என்னென்ன ஆதாரங்களை பயன்படுத்தலாம் அதற்கான முறையான காரணம் என்ன என்று முடிவு செய்யவேண்டும். அவையாவன,
ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடிய இவ்விரண்டு விதமான தரவுகள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றா என்று சிந்திக்கும் பொழுது, இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.
தொல்பொருள் ஆய்வுகளை அப்படியே ஏன் நம்ப முடியாது? காரணங்களாவன,
பொருளுரை: மனிதன் கடும் முயற்சியால் வளர்த்துக்கொள்ளும் நுட்ப அறிவை நூலறிவோடு. ஒருங்கே உடையவர்க்கு மிக்க நுட்பமான சூழ்ச்சிகளாய் முன் நிற்பவை எவை உள்ளன?
எனவே நூல்களோடு ஒப்பிட எண்ணும் பொழுது எந்த நூல்களோடு ஒப்பிட என்ற பெரும் கேள்வி எழுகிறது. பொதுவாக நூலகள் என்பவைகள் காலம், மொழி, சமையம் மற்றும் துறை போன்ற பல்வேறு காரணிகளை அடிப்படையாக கொண்டு வெவ்வேறு முரண்பட்ட கருத்துக்களை மொழிகிறது. இவ்வாறு இருக்கையில் எந்த நூலை தேர்ந்தெடுப்பது என்கிற குழப்பம் ஏற்படும் பொழுது, அதை கண்டறிவதற்கான ஒரு விதியை அல்லது ஒரு சூத்திரத்தை யாராவது உண்டாக்கினால் நலமாக இருக்கும் என்று தோன்றுகிறது.
ஆம், நிச்சயமாக அப்படி ஒரு சூத்திரம் உலகெங்கும் உள்ள வேதங்களில் விரவிக் கிடக்கிறது. அவைகளை ஒப்பு நோக்கி ஆய்ந்து "உண்மை"யை வேலியில் சிக்கிய சேலையை கவனமாக எடுப்பது போல நாம் எடுக்க முயல்வோம். நூல் என்கிற வார்த்தை மறைநூல்களையே அக்காலத்தில் குறித்தது. போலிநூலின் வரையறையும் அதை களையும் முறையினையும் அறிவது மிக மிக அவசியம்.
அறம் என்றால் என்ன? ஒரு நிகழ்கால பிரச்சனைக்கு எப்படி தீர்வு தரப்படுகிறது? எப்படி தரப்படவேண்டும்? என நாத்திகர்களிடம் கேட்டால்,
"மனிதன் தான் விரும்பியதை செய்வதும் பிறருக்கு துன்பம் தராததும் அறம் ஆகும்" என்பர். "பிறருக்கு துன்பம் தராத வழிமுறைகளை நாம் நம் கடந்தகால அனுபவத்தில் படிப்பினை பெற்று அதை சட்டமாக அல்லது நெறியாக முறைப்படுத்தி, அதை நாம் அனைவரும் ஏற்று கடைபிடிக்க வேண்டும்" என்றும் கூறுவர்.
இந்துக்களிடம் கேட்டால்,
வேதமே அறம் என்பர். மனுநீதி என்பது வேதத்தின் அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டதாக கூறுவர். ஆனால் எந்த வேத வசன அடிப்பையில் அந்த சட்டம் சொல்லப்படுகிறது என்கிற சான்று குறிப்பிட்டு அந்த சட்டம் மனு நீதியில் குறிப்பிடுவதில்லை. மேலும் சமகால இந்து மத அறிஞர்கள் அல்லது பக்தர்கள் இதுபோன்ற எந்த நூலின் வசன ஆதாரம் எதையும் குறிப்பிடாமல் கேட்கப் படும் கேள்விக்கு தான்தோன்றி தனமாக பதில் தரும் நிலை நிலவுகிறது. அதிக பட்சமாக இது ஆகமத்தில் அல்லது வேதத்தில் அல்லது புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது என்று கூறுவர். எங்கே? என்ன பொருளில்? என்ன சூழ்நிலையில்? கூறப்பட்டுள்ளது என்கிற எந்த ஆதாரமும் அவர்களால் தரப்படாது.
தமிழ் பற்றளர்களை கேட்டால்,
திருக்குறள் தான் அறம் அல்லது வேதம் என்போம். ஆனால் நிகழ்கால பிரச்சனைக்கு நாம் அதை தீர்வுதரும் நூலாக பார்ப்பது இல்லை. கேட்கப்படும் கேள்விக்கு தான் தோன்றித்தனமாக கற்பனையில் பதில் சொல்கிறோம்! தமிழில் குறளை தாண்டி பல பின்பற்ற தகும் அறநூல்கள் உள்ளன என்பதை அறியாததால் "நீயா நானா" போன்ற தொலைக் காட்சி நிகழ்வுகள் நிகழ்கால பிரச்சனைக்கு இரு தரப்பை மோதவிட்ட பணம் பார்க்கிறது.
கிறிஸ்தவர்களை கேட்டால்,
பைபிள் தான் அறம் என்பர். அவர்களும் அதை கொண்டு தீர்வு தரும் பொழுது பெரும்பாலானவர்கள் வசன எண்களை தான் குறிப்பிட்டு அதன் சாரத்தை சுருக்கமாக எழுதுகிறார்கள் தவிர, வசனத்தை முழுவதும் கூறி அவ்வசனத்தை விளக்கி தீர்வை கூறுவதில்லை. மக்களுக்கு bore அடிக்கும் என்று கருதுகிறார்கள் போல.
இஸ்லாமியர்களை கேட்டால்,
திருக்குர்ஆன் வசனத்தை குறிப்பிட்டு அதன் வசன எண்ணையும் குறிப்பிட்டு அவ்வசனத்தின் விளக்கமாக நபிகள் கூறிய விளக்கம் நிறைந்த ஹதீஸ் நூலை குறிப்பிட்டு அதன் வசன எண்ணை குறிப்பிட்டு அதன் நம்பக தன்மையையும் குறிப்பிட்டு அந்த ஹதீஸ் வசனத்தையும் குறிப்பிட்டு தீர்வு தரும் நிலையை காணலாம்.
இஸ்லாமியர்கள் போல நம்மிடம் இருக்கும் புனித நூல்களை முறையாக கற்று அதில் உணமை பொய்யை பிரித்து அறிந்து அதிலுள்ள உண்மையை கொண்டு பிரச்சனைகளுக்கு தீர்ப்பெழுதி அதன் அடிப்படையில் நம் வாழ்க்கையை அமைக்க வேண்டும், உலகம் நலம் பெற.
முடிவாக, இந்நூல் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளதென்றால், தமிழ் பேசும் நல்லுலகில் பிரதான தத்துவங்களாக பின்பற்றப் படும் சைவம், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்து மற்றும் நாத்தீக சிந்தனைகளுக்கு அவர்கள் ஏற்ற தத்துவத்தின் மூல நூல்களை கொண்டு "மெய்" எது என்று விளக்கும் முகமாக முயற்சி செய்யப் பட்டுள்ளது.