ஆம் நம்புகிறார்கள்.
யாரெல்லாம் நம்புகிறார்கள்?
இதற்கெல்லாம் என்ன ஆதாரம்?
ஒவ்வொரு முறையும் இஸ்லாத்தின் பெயரால் எதிரிகள் கட்டவிழ்த்துவிடும் பொய் பிரச்சாரத்தின் பொழுது பலர் குர்ஆனையும் நபிகளார் வரலாற்றையும் வாசித்து இஸ்லாத்தை தழுவுவது தொடர்கதை ஆகி வருகிறது.
பின்பற்றுக அறம் - கற்க கசடற and upvote
முஹம்மது நபி (ஸல்) (PBUH) நினைவு வைத்து சொல்லிய ஜிப்ரயீலின் வஹி வசனங்களை எழுதிய உதவியாளர் ஒரு யூதர்; கடைசி வரை தான் முஸ்லிமாக மாற மாட்டேன் என்று உறுதியாக இருந்தவர் இறக்கும் வரை மதம் மாறவில்லை.
இந்த செய்தி உங்களுக்கு எங்கே கிடைத்தது, யாரைப் பற்றி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. 23 ஆண்டுகால வஹி யில் ஆரம்பத்தில் யாராவது ஒரு யூதர் இதை எழுதி இருக்கலாம், ஆனால் காலம் செல்ல செல்ல படித்த நபிக்கையான நபித்தோழர்கள் இருந்தார்கள், அவர்கள் தான் எழுதினார்கள் என்று பல ஆதாரங்கள் உள்ளது.
கல்வியறிவு பெற்ற மற்றும் 'வெளிப்பாடுகளை' ஆவணப்படுத்திய பிரபலமான தோழர்களில்:
ஹத்ரத் அபுபக்கர் அஸ்-சித்க் (ரலி)
ஹத்ரத் உமர் இப்னு கத்தாப் (ரலி)
ஹத்ரத் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)
ஹத்ரத் அலி இப்னு அலி தாலிப் (ரலி)
ஹத்ரத் ஸைத் இப்னு தாபித் (ரலி)
ஹத்ரத் உபை இப்னு கஅப் (ரலி)
முதலியோர் உண்டு.
நீங்கள் சொல்வதை சரி என்று நீங்கள் நம்பினால் அதை இந்த கோணத்தில் நீங்கள் பார்க்க வேண்டும் -> அவரை கூட மதம் மாற இஸ்லாம் கட்டாய படுத்தவில்லை. எனவே கட்டாயப்படுத்தி மதம் மாற்றுவது இஸ்லாத்தில் இல்லை என்று பொருள். நபி அவர்களிடம் வேலை செய்த அப்துல்லாஹ் இப்னு சலாம் என்ற யூதர் பின்வருமாறு கூறினார்" "முகமது அவர்கள் ஒருமுறை கூட என்னை கடிந்து கொண்டதே இல்லை", இதை வசதியாக மறைத்து விட்டீர்கள். நீங்கள் இவரிப்பற்றித்தான் கூறுகிறீர்கள் என்று கருதுகிறேன், ஆனால் அவரே விருப்பப்பட்டு இறுதியில் இஸ்லாத்தை தழுவினார் என்பது வரலாறு.
அது மட்டும் அல்ல, இஸ்லாமின் அடிப்படையான வஹியை ஏட்டில் எழுதிய வரே கூட அவற்றை மிகச் சரியானவை என்று எண்ணவில்லை ; நபி(ஸல்) அருகில் இருந்தவரே அவரை தம் வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் பொருள்.
அல்ல.. ஒரு வகுப்பில் இருக்கும் எல்லா மாணவர்களும் சிறந்தவர்களாக இருப்பதில்லை. முதல் மதிப்பெண் எடுப்பவருக்கும், தேர்ச்சி பெறாதவருக்கும் ஒருவர்தான் ஆசிரியர். காரணம், அவர் திறமை குறைந்தவரக இருக்கலாம், அல்லது கற்றுகொள்ளமாட்டேன் என்று பிடிவாதம் பிடிப்பவராக இருக்கலாம்.
மேலும் இதை தவறான source இல் தவறாக படித்த நீங்கள் யூதர்கள் பற்றி முகமது நபி கூறிய முன்னறிவிப்புகளை இஸ்லாமிய நூல்களில் படியுங்கள். யூதர்கள் பற்றிய முன்னறிவிப்புகள் மற்றும் அதன் வரலாற்று நிகழ்வுகள் பற்றி படியுங்கள். உங்களுக்கு சில தெளிவுகள் கிடைக்கலாம்.