எல்லா சமய பாரம்பரியங்களும் காட்டுமிராண்டிகளை ஒழுங்குபடுத்த மட்டுமே வந்தது

2 views
Skip to first unread message

அறம் - கற்க கசடற

unread,
Sep 29, 2024, 3:11:50 PM9/29/24
to அறம் கற்க கசடற

அரேபியாவில் மட்டுமல்ல, எல்லா சமய பாரம்பரியங்களும் காட்டுமிராண்டிகளை ஒழுங்குபடுத்த மட்டுமே வந்தது. சமய ஒழுங்குகளை மறைநூல்கள் மூலம் கற்காத எவரும் காட்டு மிராண்டிகளாகத்தான் திரிகின்றனர் இன்றும்.

ஆப்ரஹாமிய மதங்கள் அனைத்தும் அரேபியாவில் இருந்து வந்தவைகள் அல்ல.

சாத்தானை படைத்துவிட்டு மனிதன் படைக்கப்படவில்லை. மனிதனுக்கு முன்பு ஜின் என்று சொல்லப்படும் அசுரர்கள் படைக்கப்பட்டு இருந்தார்கள். மனிதனை படைத்த பொழுது அந்த இனத்தை சார்ந்த ஒருவன் இறைவனின் கட்டளைக்கு வழிப்படாத காரணத்தால் சாத்தானகிப் (அ) அசுரனாகிப் போனான்.

இத்தனைக்கும் உங்களைப்போல கிண்டலாக அல்லது இழிவுபடுத்தும் வகையில் கூட பேசவில்லை அவன். அவனுக்கே அந்த நிலை, உங்க

சாத்தான் (அ) அரக்கர்கள் என்பது அசுரர்களில் (அ) ஜிங்களில் மட்டுமல்ல மனிதர்களிலும் உண்டு என்று ஆபரஹமிய மதங்கள் சொல்கிறது. இதை கீதை இவ்வாறு சொல்கிறது.

மோகா⁴ஸா² மோக⁴கர்மாணோ மோக⁴ஜ்ஞாநா விசேதஸ: |
ராக்ஷஸீமாஸுரீம் சைவ ப்ரக்ருதிம் மோஹிநீம் ஸ்²ரிதா: || 
கீதை - 9.12||

மோகா⁴ஸா² = ஆசைகளில் மயங்கி
மோக⁴கர்மாணோ = கர்ம வினைகளில் மயங்கி
மோக⁴ஜ்ஞாநா = அறிவில் மயங்கி
விசேதஸ: | = குழம்பி
ராக்ஷஸீம் = இராட்சதர்களைப் போல
அஸுரீம் = அசுரர்களைப் போல
ச = மேலும்
எவ = நிச்சயமாக
ப்ரக்ருதிம் = இயற்கையில்
மோஹிநீம் = மயக்கம் மற்றும் குழப்பம்
ஸ்²ரிதா: = அடைக்கலம் கொள்கிறார்கள்

ஆசைகள், கர்ம வினைகள், அறிவு இவற்றில் மயங்கி, இராட்சத மற்றும் அசுரர்களைப் போல இயற்கையில் இருக்கிறார்கள்.

ஆசைகள், அந்த ஆசைகளை அடைய வழிகள், அந்த வழிகளைப் பின் பற்ற அறிவு.... இந்த மூன்றும் சேரும் போது மனிதன் தன் உயர் நிலையை விட்டு இராட்சதர்கள் அல்லது அசுர நிலைக்குப் போகிறார்கள்.

  • உலகம் ஒன்று
  • அதை படைத்த இறைவன் ஒன்று
  • உலக நான்மறைகளுக்கு மூல நூல் ஒன்று
  • மக்கள் அனைவருக்கும் குலம் ஒன்று

என்கிற பொழுது இது மட்டும் வேறுபடுமா என்ன?

அரக்கர்களும் அசுரர்களும்

190 பார்வைகள்
4 ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்
4 பகிர்வுகளைப் பார்வையிடுக
5 பதில்களில் 1
ஆதரவு வாக்கு
4
2
4
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

கருத்திடுக

ஐயா நான் கேட்க்கும் கேள்விகள் கிண்டலுக்கு கேட்க்கப்படவில்லை. தெரிந்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறேன். என் மதத்தை ஏற்றுக்கொள் இல்லையேல் மரணம் என்று கூறிய கிறித்தவ இஸ்லாமிய மதங்கள் காட்டு மிராண்டி மதங்கள் என்று அழைப்பதில் என்ன தவறு

1
பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

அப்படி ஒரு மதம் கட்டாயப்படுத்தினால் அது காட்டுமிராண்டி மதம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் அப்படி கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்கள் சொல்கிறதா? என்று அவைகளின் மூல நூலை ஆய்வு செய்வோம்.

என் மதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மரணம் என்று கிறிஸ்தவம் சொல்ல வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அது யூதர்களுக்கு வந்த மதம்.

உபதேசமும் உதவியும் யூதர் அல்லாதவர்களுக்கு செய்ய இயேசு மறுத்து உள்ள பொழுது கிறிஸ்தவம் அப்படி சொல்ல வாய்ப்பே இல்லை.

மத்தேயு 15:22 அப்பிரதேசத்தைச் சேர்ந்த கானான் ஊர் பெண் ஒருத்தி இயேசுவிடம் வந்தாள். அவள் இயேசுவிடம் கதறியழுது,, “ஆண்டவரே! தாவீதின் குமாரனே! எனக்கு உதவும்!….24 இயேசு,, “தேவன் காணாமல் போன இஸ்ரவேலின் ஆடுகளிடம் மட்டுமே என்னை அனுப்பினார்” என்று கூறினார்.

இயேசு இந்தத் தமது பன்னிரண்டு சீஷர்களுக்கும் சில கட்டளைகளைப் பிறப்பித்தார். பின் அவர்களை மக்களுக்குப் பரலோக இராஜ்யத்தைப்பற்றிக் கூறுவதற்கு அனுப்பினார். இயேசு அவர்களிடம்,, “யூதர்களல்லாதவர்களிடம் செல்லாதீர்கள். மேலும் சமாரிய மக்கள் வசிக்கும் நகரங்களுக்கும் செல்லாதீர்கள். ஆனால் இஸ்ரவேல் மக்களிடம் (யூதர்களிடம்) செல்லுங்கள். அவர்கள் காணாமல் போன ஆடுகளைப் போன்றவர்கள். (மத். 10:5-6)

இஸ்லாம் உலகம் முழுமைக்கும் வந்த சமயம் என்று முகமது நபி அவர்கள் கூறினார்கள். ஆனால் கட்டாயப்படுத்தி யாரையும் மதம் மாற்ற முகமது நபிக்கே அனுமதி இல்லை.

மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? (குர்ஆன் 10:99)

எனவே கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்கள் மற்றவரை கட்டாயப்படுத்துகிறது என்று கூறுவது உண்மை அல்ல.

இஸ்லாமிய கிறிஸ்தவ மக்கள் மற்றவர்களுக்கு தனது மதத்தை எடுத்து கூறுகிறீர்களா என்று கேட்டால், ஆம் சிலர் செய்கிறார்கள். தான் சார்ந்த மதத்தை பிறரிடம் எடுத்துரைப்பது தவறா? என்று கேட்டால் இல்லை என்பது தான் அனைத்து சமயங்களும் கூறும் உண்மை. இந்துக்களும் செய்கின்றனர். ஆதாரங்கள் இங்கே:

ஏன் இந்துக்கள் கிறிஸ்தவர்களைப் போன்று தன் மதத்தைப் பரப்ப முயற்சிப்பதில்லை?

ஆனால் சாமானியர்கள் அல்லது சமய அறிஞர்கள் இவர்களை கட்டயப்படுத்துகிறார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இன்று சாமானியர்கள் மீதும் சமய போதனையார்களின் மீதும் தாக்குதல் நடத்தப்படுவது நிச்சயமாக தீய கர்மா ஆகும்.

கட்டாய மதமாற்றம் செய்பவர்கள் யார்?

அப்போ யாருமே கட்டாயப்படுத்தி மதம் மாற்றும் வேலைகளை யாருமே செய்யவில்லையா? என்று கேட்டால், ஆம்@ செய்தார்கள். ஆனால் அவர்கள் நிச்சயமாக பாசிசவாதிகள், தனது சொந்த சமயத்தின் கட்டுப்பாட்டை மீறிய தற்குறிகள்.

உதாரணமாக இஸ்லாத்தின் பெயரில் ISIS இந்த வேலையை செய்தது (யாசிடி இனப்படுகொலை). ஆனால் இஸ்லாமிய சமூகம் ISIS க்கு எதிராக பேசிய அளவு பொது சமூகம் கூட பேசி இருக்க வாய்ப்பு இல்லை.

கிறிஸ்தவத்தின் பெயராலும் நடந்தது.

லோரெய்ன், லோயர் ரைன், பவேரியா மற்றும் போஹேமியா, மைன்ஸ் மற்றும் வார்ம்ஸில் சிலுவைப்போர்களால் யூதர்கள் கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது (ரைன்லேண்ட் படுகொலைகள், புழுக்கள் படுகொலை (1096) பார்க்கவும்).

இந்து மதத்திலும் நடந்தது, நடக்கிறது.

சொல்லப்போனால் சைவ வைணவங்கள் எல்லாம் சனாதன மதத்துக்குள் உள் இழுக்கபப்ட்டு இந்து என்று பெயர் மாறி நிற்கிறது. இதுவும் ஒரு வகை கட்டாய மதமாற்றம் தான். இவைகளுக்கு நடந்த கருத்து மற்றும் கள யுத்தங்கள் தான் கடந்த 5000 ஆண்டுகால இந்திய வரலாறே.

நன்றாக கவனித்தால் கட்டாய மதமாற்றங்கள் எல்லாம் மதம் சார்ந்த அரசு ஆட்சியில் இருக்கும் பொழுது நடைபெறுகின்றன. அது இந்தியாவிலும் இப்பொழுது நடைபெறுகிறது. ஆனால் வரலாறு இவைகளை பதிந்து வைத்துக்கொண்டே வருகிறது.

பதில் அளியுங்கள்

Reply all
Reply to author
Forward
0 new messages