1) இராமாயண மகாபாரதத்தின் உண்மை நிலை:
இராமாயணம் மகாபாரதம் உண்மை என்பதை நிறுவன ஆய்வுகள் நடைபெறுகிறது ஆனால் இதுவரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. - மதன் கார்ட்டூனிஸ்ட்
கதையே முழு உண்மை இல்லை என்ற பிறகு, அவர்கள் பிறந்த நட்சத்திரம் எப்படி துல்லியமாக கணிக்கப்பட்டு இருக்கும்?
2) இராமாயணம் மகாபாரத கடவுள்கள்?
கடவுள்கள் என்பது பொய், கடவுள் என்பதே மெய்:
சித்தர்கள் ரிஷிகள் என அனைவரும் இறைவன் ஒருவனே என்கிறார்கள்
1) ஒருவனென்றே தெய்வத்தை வணங்க வேணும்
உத்தமனாய்ப் பூமிதனிலிருக்க வேணும் - (அகத்தியர் ஞானம் 1:4)
2) ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - (திருமந்திரம் 2104)
3) எங்கள் தெய்வம்உங்கள் தெய்வ மென்றிரண்டு பேதமோ
உங்கள் பேதம் அன்றியே உண்மைஇரண்டும் இல்லையே. - (சிவவாக்கியம் 224)
3) இராமாயணம் மகாபாரத கடவுள்கள் பிறந்த…?
இறைவன் பிறப்பற்றவன் என்றுதானே உலக வேதங்கள் கூறுகிறது
1) யோ மாமஜமநாதி³ம் ச வேத்தி லோகமஹேஸ்²வரம் |
அஸம்மூட⁴: ஸ மர்த்யேஷு ஸர்வபாபை: ப்ரமுச்யதே || கீதை 10- 3|விளக்கம்: பிறப்பதில்லான், தொடங்குதலிலாதான், உலகின் பெருமுதலான என்றனையுணர்வோன், மானிடருக்குள்ளே மயக்கமடைந்தான்.
2) பிறப்பு இலி நாதனைப் - (திருமந்திரம் 86)
4) கடவுள்கள் பிறந்த நட்சத்திரங்கள்?
விதியை நிர்ணயிப்பவன் இறைவன், அவன் உலகில் பிறப்பதாக இருந்தால் நாள் நட்சத்திரம் பார்த்து பிறக்க வேண்டுமா?
- வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. - 377
பரிமேலழகர் உரை: கோடி தொகுத்தார்க்கும் - ஐம்பொறிகளான் நுகரப்படும் பொருள்கள் கோடியை முயன்று தொகுத்தார்க்கும், வகுத்தான் வகுத்த வகையல்லால் துய்த்தல் அரிது - தெய்வம் வகுத்த வகையான் அல்லது நுகர்தல் உண்டாகாது.
நட்சத்திரம் சோதிடம் பார்ப்பதற்காக என்றால், சோதிடம் பொய் என்பது நான்மறைகளும் சொல்லும் உண்மை.
நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்
தலையாயார் தங்கருமஞ் செய்வார்- தொலைவில்லாச்
சத்தமுஞ் சோதிடமு மென்றாங் கிவைபிதற்றும்
பித்தரிற் பேதையா ரில். - (நாலடியார் 52)
(கருத்துரை) பெரியோர்கள், செல்வம்-இளமை- சரீரம் இவை நில்லா என்றும், பிணி-முதுமை-மரணம் இவை உண்டென்றும் கருதித் தவத்தைச் செய்வார்கள். குறி சொல்லுதலும், சோதிடமும் கற்று உளறும் பைத்தியகாரர்களை போல அறிவீனர்கள் இல்லை.
இந்த கேள்வியே பொய்கள் கோர்த்து செய்த மாலை போல உள்ளது. நமக்கு நமது மொழியில் உள்ள வேதத்தை வாசிக்கும் பழக்கம் இல்லாததால், மாற்று மொழி புராண இதிகாசங்களை நம்மிடம் வேரூன்ற செய்து விட்டதால் நமக்கு இந்த அடிப்படைகள் தெரிவதில்லை. தெரிந்த சிலரும் இதை முறையாக உணர்ந்து வைத்து இருக்கவில்லை.