அதீத வெறுப்புணர்வு அவரவர்
கேடு தரும்.
வேதங்கள் கூறும் வரைவிலக்கணம் அல்லாஹ், கர்த்தர், சிவன் எல்லோரும் ஒருவரே என்று எளிதாக புரியும் விதத்தில் ஒரே மாதிரி இருக்கிறது. நாம் அறியாமல் இருப்பதற்கு காரணம், முதலில், நாம் கரைபடியா வேதத்தின் மூலம் இறைவனை அறிவதில்லை. இரண்டு, நம்முள் இருக்கும் வெறுப்பும் பொறாமையும் காரணமாகும். அல்லாஹ்வை வெறுப்பதன் மூலம், ஒருவேளை உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால், அந்த கடவுளைத்தான் வெறுக்கிறீர்கள்.
மனமிருந்தால் மார்கமுண்டு.
Follow அறம் கற்க கசடற (Learn Virtues) and Upvote for more.
//ஆய்வாளர்களின் எழுத்தின் மூலம் வாசிக்க முடிகிறது.//
அதே ஆய்வாளர்களின் எழுத்தில் தான் இது போன்ற ஒரு செய்தியையம் வாசித்தேன்..
//முன்னொரு காலத்தில் வளமான பகுதியாக இருந்த இடத்திலிருந்து தான் இவைகள் உருவாகும்,//
எவ்வளவு காலம் இருக்கும்.. ஆதம் படைக்கப்பட்டு ஒரு கோடி ஆண்டுகள் இருக்குமா?
//முதலில், நாம் கரைபடியா வேதத்தின் மூலம் இறைவனை அறிவதில்லை//
குறைபாடில்லாத வேதம் என்று எதுவும் இல்லை.
//அல்லாஹ்வை வெறுப்பதன் மூலம், ஒருவேளை உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால், அந்த கடவுளைத்தான் வெறுக்கிறீர்கள்//
இல்லாத ஒன்றை வெறுத்து ஒன்றும் ஆவப்போவதில்லை.. உங்கள் நம்பிக்கைகள் மட்டுமே உயர்ந்தது மற்றதெல்லாம் இழிவு என்று கருதுவதை வெறுக்கிறேன்.
//அதே ஆய்வாளர்களின் எழுத்தில் தான் இது போன்ற ஒரு செய்தியையம் வாசித்தேன்..//
குர்ஆன் நபி மொழிதான் அடிபப்டை ஆதாரம். அதில் இப்படி ஏதும் இல்லை.
//எவ்வளவு காலம் இருக்கும்.. ஆதம் படைக்கப்பட்டு ஒரு கோடி ஆண்டுகள் இருக்குமா?//
நான் பாக்கல, நீங்க அவ்ளோ பழைய ஆள் போல..
//குறைபாடில்லாத வேதம் என்று எதுவும் இல்லை.//
உங்களுக்கா?
//இல்லாத ஒன்றை வெறுத்து ஒன்றும் ஆவப்போவதில்லை.. உங்கள் நம்பிக்கைகள் மட்டுமே உயர்ந்தது மற்றதெல்லாம் இழிவு என்று கருதுவதை வெறுக்கிறேன்.//
வெறுக்கலைனா இவ்ளோ முந்தி அடிச்சு பதில் சொல்ல மாட்டீங்க பாஸ்.. நான் சரி என்று நினைக்காதததை என்னால் நம்ப முடியாது, அப்படி நம்பிய ஒன்றுக்கு முரணனானதையும் "சரி" என்று நம்பினால் அது அறிவீனம். எனது நம்பிக்கை பிழை என்று நீங்கள் நினைப்பது போல நான் உங்களது நம்பிக்கை பிழை என்று கருதுகிறேன். இதில் இழிவு என்று கருத என்ன இருக்கிறது..
உங்களது கேள்விக்கு விரிவான ஆதரதத்துடன் பதில் அளித்து இருப்பேன்.. பலனில்லை என்பதால் தமாஷாக முடித்துவிட்டேன். நன்றி.
ஆதம் பூமிக்கு இறக்கப்பட்ட பொழுது பூமி படைக்கபபடவில்லை. அவர் ஏற்கனவே உலகம் படைக்கப்பட்ட காலத்தில் படைக்கப்பட்ட சுவர்க்கத்தில் இருந்து பூமிக்கு இறக்கப்பட்டார்.. அவர் சுவர்க்கத்தில் எவ்வளவு காலம் இருந்தார் என்று யாருக்கு தெரியும்? அறிவியல் தகவல்களாக கொடுக்கப்படுபவை வேதவாக்கல்ல.. நாளை "சாரி நாங்க தப்ப சொல்லிட்டோம், புதிய ஆய்வு முடிவின்படி இதுதான் சரி" என்று ஒரே தகவல் சொல்லப்படும்.. இந்த ஆய்வின் முடிவை சரிகாணும் அளவு இந்த சப்ஜெக்டில் நானும் நிபுணன் அல்ல நீங்களும் அல்ல.. உங்களால் சரி காண முடியாத ஒரு விடயத்தை நீங்கள் நம்புகிறீர்கள்.. நம்புங்க அதுக்காக மத்தவங்க நம்பிக்கையை இழிவாக கருதாதீர்கள்..
அறிவியல் தன்னுடைய முந்தைய கருதுகோள் தவறென்றால் சரி எது என்று தொடர்ந்து தேடிச்செல்லும். உண்மைத் தன்மையை துல்லியத்தன்மையை நோக்கி தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கும். ஆனால் மதம் அப்படியல்ல. சிறுவயதில் என்ன கற்றுத்தரப்பட்டதோ, அதை ஆராய்ந்து பாராமல் கண்மூடித்தனமாக சரியென நிரூபிக்க தூண்டும்.
மனித அறிவு குறை அறிவு அனுபவ அறிவு.. trial and errors முறை மூலம் தொடந்து ஆராய்வு செய்யலாம் அது பிழையும் இல்லை..
படைத்தவனின் அறிவு அப்படி அல்லவே? நீங்கள் ஆய்வு செய்து கண்டுபிடிக்க முயலும் ஒன்றின் பண்பை அதற்கு வழங்கியவன். அவன் சொல்வதுதான் இறுதி. உங்கள் ஆய்வின் மூலம் நீங்கள் இறுதி முடிவாக நீங்கள் ஒன்றை கூறுவதாக வைத்துக்கொள்வோம், அது ஏற்கனவே அதன் படைப்பாலனால் சொல்லப்பட்டதாக நாங்கள் நம்புகிறோம். நமக்கு ஒன்றுக்கு அனுமதி உண்டு, உண்மையிலேயே நாம் வாசிக்கும் நூல் இறைவனின் வாக்குதானா என்று ஆராய அனுமதி உண்டு.. எப்படி மருத்துவர் தானா என்று நாம் அறிய முற்படுவதுபோல.. ஆனால் இது இறைவனின் வாக்குதான் என்று அறிந்துவிட்டால், கட்டுப்படுவதுதான் அறிவுடைமை.
// ஆனால் மதம் அப்படியல்ல. சிறுவயதில் என்ன கற்றுத்தரப்பட்டதோ, அதை ஆராய்ந்து பாராமல் கண்மூடித்தனமாக சரியென நிரூபிக்க தூண்டும்.//
இதை உங்களுக்கு கற்று கொடுத்தது யார்? எப்பொழுது? உங்களுக்கு சிறுவயதில் பள்ளிக்கூடத்தில் கற்று கொடுத்ததை ஆராயாமல் கண்மூடித்தனமாக நிரூபிக்க முயற்சிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
ஆனால் நான் எனது 30 வயதுக்கு மேல்தான் இந்த ஆய்வுக்குள் நான் சென்றேன்.
முடிஞ்சா வாசிங்க புனிதநூல்கள்
மனிதர்கள் ஏன் மதங்களை உருவாக்கினார்கள்?
முகமது நபி ﷺ அவர்களை வேதம் கொடுக்கப்பட்டவர்கள் அறிவார்கள்..! நன்றி.
// ஆனால் மதம் அப்படியல்ல. சிறுவயதில் என்ன கற்றுத்தரப்பட்டதோ, அதை ஆராய்ந்து பாராமல் கண்மூடித்தனமாக சரியென நிரூபிக்க தூண்டும்.// இது பொதுவான கருத்தியல்.. நீங்கள் விதிவிலக்கு..
மனிதர்க்கு விதிவிலக்கு இருக்கலாம் இறைவனுக்கு ஏது விதிவிலக்கு?
உங்கள் கருத்துகளும் ஏனைய மதத்தவரின் கருதுகோள்கள் போலவே உள்ளன..
ஒரே இறை வழிபாடு, ஐவேலை தொழுகைஉள்ளிட்ட சில மதக்கடமைகள் தவிர உங்களுக்கும் அவர்களுக்கும் வேறென்ன வேறுபாடு? இயற்கைக்கு மீறிய நிகழ்வுகள் இறைவனின் செயல்களாக காட்சிப்படுத்துகின்றன.. எப்படி நம்புவது?
எடுத்த உடனே MBBS பாடம் படிக்க நினச்சா எப்புடி? ஒண்ணாவதுலேர்ந்து வாங்க.. ஒரே கோணத்துல வாசிக்காதீங்க.. ஒரே கருத்தியல் கொண்டவங்க புத்தகத்தை மட்டும் வாசிக்காதீங்க.. உங்கள நம்ப சொல்லி கட்டயப்படுத்த யாருக்கும் உரிமையில்லை. நாங்க நம்பின காரணத்தை சொல்றோம் அவ்ளோதான்.. அவரவர் மார்க்கம் அவரவர்க்கு..
அறிவியல் என்ன பாவம் செய்தது. அறிவியலுக்கு முரணான தகவல்களை எல்லாம் அறிவியல் என்று நவீன இஸ்லாம்வாதிகள் தொடர்புபடுத்த முயற்சிப்பதேன்?
களிமண்ணை (சிலிக்கான் மூலக்கூறு) குழைத்து பொம்மையாக்கி மனிதனாக (கார்பன் மூலக்கூறு) மாற்றமுடிந்த இறைவன், எல்லா மனிதரிடமும் நேரடியாகவே தொடர்பு கொண்டிருக்கலாமே!!
இறைவன் முன்னால் ஏது ஒண்ணாவது, MBBS?
//அவரவர் மார்க்கம் அவரவர்க்கு.//
பிறகேன் குர்ஆன் உலகத்திற்கான வேதம் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள்?
//அறிவியலுக்கு முரணான தகவல்களை எல்லாம் அறிவியல் என்று நவீன இஸ்லாம்வாதிகள் தொடர்புபடுத்த முயற்சிப்பதேன்??//
உணமை அறிவியல் செய்திகளை சான்றுக்காக கூறும்பொழுது அது பிழை அல்லது சூடோ சைன்ஸ் என்று தொடந்து நாத்திகர்கள் மட்டுப்படுத்த முயற்சிப்பது என்? அறிவியல் தொடர்பான செய்திகள் குரானில் மட்டும் இருக்கு என்பது எங்கள் வாதமல்ல.. இறைவன் கொடுத்த அனைத்து சமய நூல்களிலும் அறிவியல் செய்திகள் உண்டு.. ஒரு சில அறிவியல் செய்திகளை வைத்துருப்பது அது வேதம் என்று நிறுவ இறைவன் வைத்து இருக்கும் ஒரு வழிமுறை.. அது அல்லமால் முற்காலத்தில் நடந்த சம்பவங்கள், வருங்காலத்தில் நடக்க இருப்பவை, அடுத்து வரவிருக்கும் தீர்க்கதரிசியின் முன்னறிவிப்பு, உலக சமயங்களை ஒரு நேர்கோட்டில் இணைக்கும் இலக்கணம் உட்பட இன்னும் பல விடயங்களை ஒரு வேதம் உள்ளடக்கி இருக்கும்.
திருக்குறளில் அறிவியல் செய்திகள் உண்டா இல்லையா? உண்டு என்று சுபவீ ஒரு தனி உரையே நிகழ்த்தி இருப்பார். பரிபாடலில் இல்லையா? திருமந்திரத்தில் இல்லையா? பைபிளில் இல்லையா? திருக்குறள் தமிழர் வேதம் என்பதற்கு சான்றுகள் உண்டு. மேலும் திருக்குறானும் குறளும் கூறும் அறங்கள் கிட்டதட்ட 80% ஒத்துப்போகும்.. திருக்குறளில் உள்ள அறிவியல் செய்திகளை ஏற்பீர்கள்? குரானில் உள்ளதை ஏற்கமடீர்கள்?
சரிவிடுங்க காழ்புணர்வு, பொறாமை அல்லது எல்லாத்தையும் வாசித்து முடித்தது போல எண்ணிக்கொள்ளும் அறிவீனம் இதில் எதாவது ஒன்று காரணமாக இருக்கும். இது எதற்கும் மருந்து இல்லை.. மனம் இல்லை என்றால் மார்கம் இருக்காது தான்..
//களிமண்ணை (சிலிக்கான் மூலக்கூறு) குழைத்து பொம்மையாக்கி மனிதனாக (கார்பன் மூலக்கூறு) மாற்றமுடிந்த இறைவன், எல்லா மனிதரிடமும் நேரடியாகவே தொடர்பு கொண்டிருக்கலாமே!!//
ஒரு மேனஜர்க்கு நாம் கட்டளை போட முடியுமா? அல்லது CM க்கு? அல்லது PM க்கு? ஆனால் கடவுளுக்கு நேரடியாக கட்டளை போடுறீங்க? நெருப்பு எதற்காக சுடுகிறது, குளிர வேண்டியதுதானே என்று கூறுவது போல உள்ளது உங்க கருத்து. It's the rule, just have to agree.. அவன் எவரையும் விட ஞானம் உள்ளவன் அதற்குரிய காரணம் அவனுக்கு தெரியும்..
மனிதன் இறைவனுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.. நீங்கள் நினைப்பதையும் சொல்வதையும் அவன் அறிகிறான். ஆனால் இறைவன் தூதர்கள் மூலமாகவே நம்மை தொடர்பு கொள்கிறான் அது அவனால் இயலாது என்பதனால் அல்ல, மாறாக இவ்விதியை அவன் மட்டும் அறியும் சில காரணங்களுக்காக ஏற்ப்படுத்தி கொண்டுள்ளான். மனித அறிவு குறை அறிவு, பூரண அறிவு கொண்டவனுடன் போட்டி போட விரும்புகிறீர்கள்.. வாழ்த்துக்கள்.
//இறைவன் முன்னால் ஏது ஒண்ணாவது, MBBS?//
இதுவும் கல்விதான், சொல்லப்போனால் இதுதான் கல்வி.. வேத நூல்களும் அற நூல்களும் மீண்டும் மீண்டும் வலியுறுத்திய கல்வி, இன்று நாம் படிக்கும் தொழிற்கல்வியை அல்ல.. எனவே இந்த பாடத்தில் உள்ள அறிவின் தரம் நிச்சயம் வேறுபடும். நீங்க படிச்ச சப்ஜெக்ட் ஐ வெச்சு இந்த சப்ஜெக்ட் ஐ கணக்கு போடுறீங்க அதான் நான் சொல்வது உங்களுக்கு விளங்கவே இல்லை.
//பிறகேன் குர்ஆன் உலகத்திற்கான வேதம் என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள்?//
ஏனென்றால் குர்ஆன் உலகத்திற்கான வேதம் அதனால் தான். வேதம் என்றால் வழிப்படவெண்டிய விதிமுறைகள் என்றுன்பொருள். இன்று உலகம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் அடங்கிய நூல் குர்ஆன். ஆனால் உபதேசம் செய்யும் நாம் யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை, நீங்க இப்போ உங்கள் நம்பிக்கையை ஏற்க என்னை கட்டாய படுத்துவது போல..
//மனித அறிவு குறை அறிவு, பூரண அறிவு கொண்டவனுடன் போட்டி போட விரும்புகிறீர்கள்//
படித்துப்பார்த்தால் அன்றைய மனித அறிவுதான் தெரிகிறது. பரிபூரண அறிவு என்று எதுவும் புலப்படவில்லை..
//இஸ்லாமியர்கள் யாரையும் கட்டாயப்படுத்துவது இல்லை, நீங்க இப்போ உங்கள் நம்பிக்கையை ஏற்க என்னை கட்டாய படுத்துவது போல..//
நான் கட்டாயப்படுத்தவில்லை.. மற்றவர் நம்பிக்கையை குறை கூறும் முன், உங்கள் நம்பிக்கை எப்படிப்பட்டது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன் நன்றி..
//நான் கட்டாயப்படுத்தவில்லை.. மற்றவர் நம்பிக்கையை குறை கூறும் முன், உங்கள் நம்பிக்கை எப்படிப்பட்டது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன் நன்றி//
நான் கட்டாயப்படுத்தவில்லை.. மற்றவர் நம்பிக்கையை குறை கூறும் முன், உங்கள் நம்பிக்கை எப்படிப்பட்டது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டுகிறேன் நன்றி
நான் அல்லாஹ்விற்கு ஆலோசனை சொல்லவில்லை..
இறைவனுக்கும் மனிதர்க்கும் இடையில் வேறு எவரும் தேவையில்லை என நம்புகிறேன்.
அல்லாஹ்விற்கு சித்தமானால் அவனால் காஃபிர்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்கு அவனே நேரடியாக உண்மையைக் கூறட்டும்.
ஒரு குழந்தைக்கு தன்னுடைய தாய் யார் என்பது எப்படித் தெரியும்?
சிறுவயது முதல் தன் மார்பில் அரவணைத்து பாலூட்டி சீராட்டி வளர்த்த பெண்ணைத்தான் தாய் என்று நம்பி ஒரு குழந்தை வளர்கிறது. அப்படிப்பட்ட குழ்நதையே வளர்ந்து பெரியவனாகும் போது பெற்றவர்களைக்கண்டுக்காமல் துரத்துவதையும் உலகில் காணமுடிகிறது.
அப்படியிருக்கையில், சிறுவயது முதல் எந்த வகையிலும் தொடர்பு கொள்ளாத அல்லாஹ்வை தாய்க்கும் மேலாக உயர்ந்த இடத்தில் வைத்து அவன்தான் எல்லாரையும் படைத்தான் நம்பவேண்டும் என்று நினைப்பது அல்லாஹ் செய்யும் நியாயமான செயல்தானா??
திருக்குறள் மனித அறிவிற்கு உட்பட்டது, அதே போல் குர்ஆன்-ம் மனித அறிவிற்கு உட்பட்டதுதான்..
ஏனெனில், திருக்குறளில் உள்ள சில குறள்கள் இன்றைய சமூகத்திற்கு தேவைப்படாத பிற்போக்குத்தனமான குறள்கள்.. அன்றைய காலத்திற்கு அது பெரிது.. அதுபோல்தான் குர்ஆன்-ம் இருக்கிறது. தெய்வீகமாக நினைப்பதற்கு ஏதுமில்லை..
திருக்குறளும் தெய்வீகமானதுதான்.
தேவர் குறளும் திருநான் மறைமுடிவும்
மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை
திருவா சகமும் திருமூலர் சொல்லும்
ஒருவா சகமென் றுணர். - நல்வழி 40 தமிழர் வேதம்
குறளும் திருமந்திரமும் ஒன்று என்கிறது இந்த அப்பாடல்.
முதல் நூல் : என்பது மனிதனின் அனுப அறிவு இல்லாமல் ஏற்படும் அறிவு என்கிறது தொல்காப்பியம்.
இந்த தலைப்பில் உரையாடல் எனக்கு பிடிக்கும், ஏனென்றால் உங்களிப் போன்றோர் நான் அறியாத கேள்வி ஒன்றை கேட்கக்கூடும் பிறகு அந்த கோணத்தில் ஆய்வை தொடங்க அது உதவும். ஆனால் நீங்கள் ஒரே இடத்தை சுற்றி சுற்றி வருகிறீர்கள். சொன்ன பதிலையே திரும்ப திரும்ப சொல்ல எனக்கு விருப்பமில்லை.
ஒரு மருத்துவர் கூறும் மருந்தை ஆய்வு செய்து நீங்கள் உண்ணுவீர்களா? அல்லது அவர் மருத்துவர் என்கிற தகவல் போதுமானதா? இது போல நீங்கள் வாழ்வில் பயன்படுத்தும் எதுவும் அந்தந்த துறைகளின் நிபுணர்களை நம்பி அவர்கள் வழிகாட்டுதலை ஏற்பீர்..! அதில் உள்ளவர் உண்மையிலேயே பிழையான வழிகாட்டுதலை வழங்கினாலும்.. அப்போ அது நம்பிக்கையா? அல்லது மூட நம்பிக்கையா?
அதுபோல, வேதத்தை ஆய்வு செய்து அது வேதம் தான் என்று புரிந்து ஏற்றுக்கொண்ட ஒருவர் அதில் உள்ள அனைத்தையும் நம்புவதுதான் நேர்மை, மூடநம்பிக்கை அல்ல. மனிதன் பொய் சொல்லுவான், இறைவன் இது போன்ற செயல்களை விட்டும் தூய்மையானவன். தினமும் வாசிக்க சொல்லும் வேதம் குர்ஆன், சிந்திக்க சொல்லும் வேதம் குர்ஆன், ஆய்வு செய்ய சொல்லும் வேதம் குர்ஆன்.. மூட நம்பிக்கைக்கு இங்கு இடமில்லை. நான் ஆய்வு செய்த வரை எல்லா வேதமும் அதை சொல்கிறது. மக்கள் ஆய்வு செய்வதில்லை மாறாக பொய் புராணங்களை வாசிக்கின்றனர். தமிழ் வேதங்களை விட்டுவிட்டனர்.
//தினமும் வாசிக்க சொல்லும் வேதம் குர்ஆன், சிந்துக்க சொல்லும் வேதம் குர்ஆன், ஆய்வு செய்ய சொல்லும் வேதம் குர்ஆன்.. மூட நம்பிக்கைக்கு இங்கு இடமில்லை//
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ், நூஹ் நபி காலத்தில் மனிதர்கள் உள்பட அனைத்து உயிர்களையும், ஏன் நீரில் மூழ்கடித்து வதைத்தான்? அவன் செய்த செயல் கருணையுள்ளவர் செய்யும் செயல்தானா?
இறைவன் அருளால் தான், இது நடைபெற்றது என்பதான ஏதேனும் ஒரு சம்பவம் சொல்ல இயலுமா?
விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்றால் கடவுளை ஏன் வணங்க வேண்டும்?
கடவுள் நாம் செய்யும் தவறுகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறாரா?
சரி பிழை-களை வரையறுப்பது யார்?
கடவுளை கேள்வி கேட்போர் உண்டா? *
இவ்வுலகம் எவ்வாறு விதிகளால் நிறைந்த நுணுக்கமான காம்ப்லெஸ் சிஸ்டமோ, அதைவிட உலக சமயங்களும் நிகழ்வுகளின் காரணிகளும் விதிகளின் அடிப்படையில் நிகழ்கிறது. வாசிக்கணும் சகோ. உங்க கேள்விக்கு ஏற்கனவே நேராய் எழுதி இருக்கேன் வாய்ப்பிருந்தா விரும்பினா . வாசிங்க.
மனமிருந்தால் மார்க்கமுண்டு.
நன்றி வணக்கம்.
//அவனை அவன் விரும்பியபடி வணங்க வேண்டும்.//
//"அல்லாஹ்வையும், அவனது வசனங்களையும், அவனது தூதரையுமா கேலி செய்து கொண்டிருந்தீர்கள்?''//
அல்லாஹ்வை எப்படி வணங்கவேண்டும் என்பதை அல்லாஹ்வே எல்லோருடைய மனதிலும் அவனுடைய வசனங்கள் மூலம் சொல்லியிருக்கலாமே. இறைத்தூதர் என்ற பெயரில் மூன்றாம் நபரை வைத்து அறிவுரை சொல்லவேண்டிய தேவை என்ன வந்தது?
நான் அல்லாஹ்விற்கு ஆலோசனை சொல்லவில்லை..
இறைவனுக்கும் மனிதர்க்கும் இடையில் வேறு எவரும் தேவையில்லை என நம்புகிறேன்.
அல்லாஹ்விற்கு சித்தமானால் அவனால் காஃபிர்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்கு அவனே நேரடியாக உண்மையைக் கூறட்டும்.
ஒரு குழந்தைக்கு தன்னுடைய தாய் யார் என்பது எப்படித் தெரியும்?
சிறுவயது முதல் தன் மார்பில் அரவணைத்து பாலூட்டி சீராட்டி வளர்த்த பெண்ணைத்தான் தாய் என்று நம்பி ஒரு குழந்தை வளர்கிறது. அப்படிப்பட்ட குழ்நதையே வளர்ந்து பெரியவனாகும் போது பெற்றவர்களைக்கண்டுக்காமல் துரத்துவதையும் உலகில் காணமுடிகிறது.
அப்படியிருக்கையில், சிறுவயது முதல் எந்த வகையிலும் தொடர்பு கொள்ளாத அல்லாஹ்வை தாய்க்கும் மேலாக உயர்ந்த இடத்தில் வைத்து அவன்தான் எல்லாரையும் படைத்தான் என நம்பவேண்டும் என்று நினைப்பது அல்லாஹ் செய்யும் நியாயமான செயல்தானா??
சகோதரர் நெல்சன் அவர்களே.. இதற்கும் பதில் உண்டு.. நான் முந்தய பின்னூட்டங்களில் சில செய்திகளை கொடுத்ததன் நோக்கம், அதை தேடி வாசித்து ஆய்வு செய்வீர்கள் என்று தான். நீங்கள் என்னிடமிருந்து எதோ ஒரு வார்த்தையை எதிர் பார்க்கிறீர்கள் அது உங்களை வாதத்தில் வெற்றி அடைய வைக்கும் என்ற நம்பிக்கையில்.
//இறைவனுக்கும் மனிதர்க்கும் இடையில் வேறு எவரும் தேவையில்லை என நம்புகிறேன்.//
அதைத்தான் இஸ்லாமும் சொல்கிறது.. எந்த புரோகிதரகளும் தேவை இல்லை.. ஆனால்
தீர்க்கதரிசிகள் உண்டு. இறைவனோடு தொடர்பு கொள்ளும் முறையினை ஆசிரியராக இருந்து கல்வியாக கொடுப்பது இவர்களின் பணி. தொல்காப்பியம் கூறும் "முதல் நூல்" என்பதன் வரையறை வாசிக்க. விதிகள் பௌதீகத்துக்கு மட்டுமல்ல, ஆன்மீகத்துக்கும் உண்டு. அந்த விதி எதற்கு அப்படிவுள்ளது என்று நாம் எப்படி கேட்க முடியும்? பனி எதற்காக குளிர்கிறது? அது சுடக்கூடாதா? என்று நாம் கேட்கலாம்.. பனி அப்படித்தான், என்பதுதான் பதில். அதுபோல இது இப்படித்தான். படைத்தவனுக்கு தெரியும் அதன் காரணம்.
//அல்லாஹ்விற்கு சித்தமானால் அவனால் காஃபிர்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்கு அவனே நேரடியாக உண்மையைக் கூறட்டும்//
காஃபிர்கள் என்றால் இறைவனை மறுத்தவர்கள் என்று பொருள், கெட்ட வார்த்தை அல்ல. நீங்கள் உங்களை நாத்திகர்கள் என்று அழைத்து கொள்வது சரியான சொல்!, காஃபிர்கள் என்றால் பிழையா?
அல்லாஹ் நாடி இருந்தால் எல்லோரும் முஸ்லிம்களாக இருந்திருப்பார்.
6:149. “நிரப்பமான அத்தாட்சி அல்லாஹ் விடமேயுள்ளது; அவன் நாடியிருந்தால் உங்கள் யாவரையும் அவன் நல்வழியில் செலுத்தியிருப்பான்” என்று நீர் கூறும்
10:99. மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா?
11:34. “நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்யக்கருதினாலும், உங்களை வழிகேட்டிலேயே விட்டு வைக்க அல்லாஹ் நாடியிருந்தால், என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு (யாதொரு) பலனும் அளிக்காது; அவன்தான் (உங்களைப் படைத்துப் பரிபாலிக்கும்) உங்களுடைய இறைவன்; அவனிடமே நீங்கள் மீண்டும் கொண்டு வரப்படுவீர்கள்” (என்றும் கூறினார்).
32:13. மேலும் நாம் நாடியிருந்தால், ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அதற்குரிய நேர்வழியை நாம் கொடுத்திருப்போம்; ஆனால் “நான் நிச்சயமாக நரகத்தை - ஜின்களையும், (தீய) மனிதர்களையும் - ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்” என்று என்னிடமிருந்து (முன்னரே) வாக்கு வந்துள்ளது.
43:20. மேலும், “அர் ரஹ்மான் நாடியிருந்தால், அவர்களை நாங்கள் வணங்கியிருக்க மாட்டோம்” என்றும் அவர்கள் கூறுகின்றனர்; அவர்களுக்கு இதைப்பற்றி யாதோர் அறிவுமில்லை; அவர்கள் பொய்யே கூறுகிறார்கள்.
அல்லாஹ் நடுவதற்கு நமது செயலகள்தான் காரணமாகும்.
16:93. மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயத்தவராய் ஆக்கியிருப்பான்; என்றாலும் தான் நாடியவர்களை வழி கேட்டிலே விட்டு வைக்கிறான் - இன்னும் தான் நாடியவர்களை நேர் வழியில் சேர்ப்பான்; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக (மறுமையில்) நீங்கள் கேட்கப்படுவீர்கள்.
அல்லாஹ்வின் விடயத்தில் சொல்லும் செயலும் மோசமாக உள்ளவர்கள் எவ்வாறு பேசுவர்?
13:31. நிச்சயமாக குர்ஆன் - அதனைக் கொண்டு மலைகளை நகரும்படிச் செய்தாலும், அல்லது அதனைக் கொண்டு பூமியைத் துண்டு துண்டாக்கினாலும், அல்லது அதனைக் கொண்டு இறந்தவர்கள் பேசும்படிச் செய்யப்பட்டாலும் (காஃபிர்கள் விசுவாசங்கொள்ளவே மாட்டார்கள்), ஆயினும் எல்லாக்காரியங்களும் அல்லாஹ்வுக்கே உரியன; ஆகவே, அல்லாஹ் நாடியிருந்தால் மனிதர்கள் அனைவருக்கும் நேர்வழி காட்டியிருப்பான் என்பதை ஈமான் கொண்டவர்கள் அறியவில்லையா? நிராகரிப்போரை, அவர்கள் செய்து கொண்டிருக்கும் (தீச்) செயல்கள் காரணமாக ஏதேனும் ஒரு கேடு வந்தடைந்து கொண்டேயிருக்கும், அல்லது அவர்களுடைய இருப்பிடங்களுக்குச் சமீபமாகவேனும், (அக்கேடு) சம்பவித்து, (உங்கள் வெற்றி குறித்து) அல்லாஹ்வின் வாக்குறுதி நிறைவேறியே தீரும் - நிச்சயமாக அல்லாஹ் (தன்) வாக்குறுதியில் மாறுசெய்யமாட்டான்.
16:35. “அல்லாஹ் நாடியிருந்தால் அவனையன்றி வேறு எந்தப் பொருளையும், நாங்களோ, எங்களுடைய தந்தையர்களோ வணங்கியிருக்கமாட்டோம்; இன்னும் அவனுடைய கட்டளையின்றி எப்பொருளையும் (ஆகாதவை யென்று) விலக்கி வைத்திருக்கவும் மாட்டோம்” என்று முஷ்ரிக்குகள் கூறுகின்றனர். இப்படித்தான் இவர்களுக்கு முன்னர் இருந்தவர்களும் செய்தார்கள்; எனவே (நம்) தூதர்களுக்குத் (தம் தூதுவத்தைத்) தெளிவாக அறிவிப்பதைத் தவிர வேறு ஏதாவது பொறுப்புண்டா? (இல்லை).
ஆனால் உபதேசம் செய்வது மட்டுமே குருக்களின் கைகளில் உள்ளது, அதற்கான வழியை ஏற்ப்படுத்தி தருவது மட்டுமே அல்லாஹ்வின் பொறுப்பாக இருக்கிறது. வாசிப்பதும் உண்மையை அறிய முயற்சிப்பதும் நமது கைகளில் விடப்பட்ட பொறுப்பு.
அல்லாஹ் எல்லோரிடத்திலும் நேரடியாக பேசவேண்டும் என்கிறீர்கள், உண்மையில் அதுதான் நடக்கிறது. அல்லாஹ் உங்களுடன் பேச அவனது வார்த்தையான குர்ஆன்-ஐ ஓதுக, நீங்கள் அல்லஹுவுடன் பேச தொழுக. ஆனால் நீங்கள் கேட்பது நபிகளாரிடத்தில் பேசியது போல என்று கூற வருகிறீர்கள் என்று நான் புரிந்து கொள்கிறேன். நபிகளார் தேவதூதர் மூலமாக பேசினாரே தவிர அல்லாஹ்வுடன் நேரடியாக அல்ல. நபிகள் காலத்தில் உங்களைவிட குறைவான ஒன்றையே கேட்டவர்கள் இருந்தார்கள் ஆனால் அல்லாஹ் அதையே நிராகரித்துவிட்டார்.
25:51. மேலும், நாம் நாடியிருந்தால், ஒவ்வொரு ஊரிலும், அச்சமூட்டி எச்சரிக்கும் ஒருவரை நாம் அனுப்பியிருப்போம்.
23:24. ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்கள்: “இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை; இவர் உங்களை விட சிறப்புப் பெற விரும்புகிறார்; மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) அனுப்பியிருப்பான். முன்னிருந்த நம் மூதாதையரிடம் இ(த்தகைய விஷயத்)தை நாம் கேள்விப்பட்டதேயில்லை” என்று கூறினார்கள்.
//அல்லாஹ்வை தாய்க்கும் மேலாக உயர்ந்த இடத்தில் வைத்து அவன்தான் எல்லாரையும் படைத்தான் என நம்பவேண்டும் என்று நினைப்பது அல்லாஹ் செய்யும் நியாயமான செயல்தானா??//
அம்மாவை உதறி தள்ளி செல்லும் ஒருவன் நியாயவான் அல்லாஹ்வின் செயல் அநியாயமா? செம்ம லாஜிக்.! உங்களைப் போன்றோர் சிந்திக்க கூடும் என்பதாலோ என்னவோ அல்லாஹ் உள்ளுணர்வு என்ற ஒன்றை வைத்துள்ளான். அது அம்மா என்பவளை எப்படி கையாளவேண்டும், எப்படி மதிக்கவேண்டும் என்று நமக்கு கூறுகிறது. உள்ளுணர்வு என்பது எளிதாக கடந்து செல்லும் விடயமாக நமக்கு இருக்கலாம், ஆனால் இதில் 1% கூட செய்ய முடியாத AI தொழில்நுட்பம் எவ்வளவு கடினம் என்பது அவற்றை வடிவைப்பவர்களுக்கு தெரியும்.
எந்த குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கியிலே.. அவர் நல்லவராவதும் தீயவராவதும் அவன் பெரும் கல்வியினலே. எனவேதான் ஒரு மனிதனின் கல்வி பற்றி குறளிலிருந்து குர்ஆன் வரை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. சரி அவர்கள் கூறிய கல்வி என்னவாக இருக்கும்? Engineering? Medicine? CA? UPSC? Multi-media? அது தொழிற்கல்வி அல்ல என்பது வெளிப்படை! நாம் இன்று அந்த கல்வி யை புறந்தள்ளிவிட்டதன் விளைவு இவர்கள் அம்மாவையும் மதிப்பதில்லை இறைவனையும் மதிப்பதில்லை. இவ்விருவரையும் புறந்தள்ளிய ஒருவன் நாசமடைவான் என்பதை கூறும் கல்வியை நாம் கற்கவில்லை என்பதால் தான் இந்நிலையை அடைந்தோம் என்றும் புரிவதில்லை. பிறகு இறைவனிடம் இது நியாயமா என்று கேட்பதை எவ்வாறு எடை போடுவது? Ignorance, foolishness.
//சிறு வயது முதல் தொடர்பில்லாத அல்லாஹ்//
மேலே ஒருத்தன் எல்லாவற்றையும் பார்க்கிறான் என்பது அவன் நமக்கு நியாயம் தருவான் என்பது இயற்கையாய் உள்ள எண்ணம். இது நாத்திகர்களின் அல்லது தவறான தத்துவங்களின் நூல்களை வாசிக்கும் அல்லது உபதேசங்களை பெரும்பொழுது பொழுது மாற்றம் பெறுகிறது. அல்லாஹ் என்றால் கடவுள் / தெய்வம் என்று பொருள். அல்லாஹ் என்பது அரேபியா கடவுள் அல்ல, கடவுள் என்பதற்கான அரேபிய சொல் அவ்வளவுதான்.
ஆப்ரஹாமிற்கு பின் இயேசு வரையிலான இறைதூதர்களில் அநேகரை யூதர்கள் கொன்றுவிட்டனர் என்று குர்ஆன்-ல் அடிக்கடி வசனம் வருகிறதே!!
இஸ்மாயில் காலத்திற்கும் முஹம்மது காலத்திற்கும் இடைப்பட்ட 2000 ஆண்டுகளில் ஒரு நபி கூட அரேபியாவிற்கு அனுப்பப்படவில்லையா? அனுப்பப்பட்டனர் என்றால் அவர்களின் நிலை?
//23:24. ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்கள்: “இவர் உங்களைப் போன்ற மனிதரேயன்றி வேறில்லை; இவர் உங்களை விட சிறப்புப் பெற விரும்புகிறார்; மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் அவன் மலக்குகளை(த் தூதர்களாக) அனுப்பியிருப்பான். முன்னிருந்த நம் மூதாதையரிடம் இ(த்தகைய விஷயத்)தை நாம் கேள்விப்பட்டதேயில்லை” என்று கூறினார்கள்.//
இதைப் படித்தவுடன் தான் எனக்கு இந்த சந்தேகம் எழுந்தது.. இதில் என்ன out of scope என்று விளக்க முடியுமா?
பிழையான புரிதல். உங்களது அடுத்த கேள்வியை புரிந்து மேலே பதில் சொல்லி ஆகிவிட்டது. ஆனால் இப்பொழுது எமக்கு ஒன்று புரிகிறது. முதலில் ஒண்ணாம் வகுப்பு பாடம் புரியாதவர்க்கு 12 வகுப்பு பாடம் எடுக்க முடியாது. இரண்டாவது புரிதலுக்காக இல்லாமல் போட்டிக்காக பேசுபவரடம் எவ்வளவு ஆதாரங்களுடன் பதிலளித்ததாலும் நேர விரயம், அவர் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு தாவிக்கொண்ட இருப்பார், வெல்லும் வரை. நன்றி வணக்கம்.
வெல்வது நோக்கம் அல்ல. தொடக்கம் முதலே இருக்கும் சந்தேகம்தான் இது.
நீங்கள் அந்த வசனத்தை சுட்டியதும் இதுகுறித்து உங்களிடம் கேட்கத் தோன்றியது.
நான்மறை இத படிச்சா உலகில் மொத்தம் நான்கே நான்கு வேத பாரம்பரியம் இருப்பதை அறியலாம்.
அதில் ஒன்றான ஆபிரகாமிய மதங்கள், முகமது வந்த பாரம்பரியம் என்பதால் அங்கே இருந்தவர்கள் அதே வேத பாரம்பரியத்தை சார்ந்தவர்கள் என்பதால் அது பற்றிய செய்திகள் குர்ஆனில் அதிகம் உண்டு.
ஆதாம் (ஆதிபகவன்), நூஹ்/நோவா (நாவாய் என்று தமிழில் கப்பலை கூறுவார்கள்) போன்றவர்கள் ஆபிரகாமிய மதத்தை சார்ந்தவர்கள் அல்ல, மாறாக ஆதிமொழியான தமிழை சார்ந்தவர்கள். இதுவும் நான்கு பாரம்பரியமாக பிரிவதற்கு முன் உள்ள தூதர்கள். நாங்க பிரிந்தபிறகு மேற்குக்கு ஆப்ரஹாம் முதல் தீர்க்க தரிசியாகவும், தமிழில் முதல் சித்தர் அகத்தியராகவும், உள்ளனர். ஆபிரகாமிய மதங்கள் அல்லாமல் மற்றவர்களை அவர்களின் கொள்கை அடிபப்டையில் குர்ஆன் கூறுகிறது. நெருப்பு வணங்கிகள், சிலை வணங்கிகள், அல்லாஹ் மூவர் என்போர் என்றெல்லாம் கூறுகிறது.
நான் தூதர்களை அனுப்பாத சமுதாயமே இல்லை, அவர்களின் மொழியிலிருந்தே ஒருவரை நாம் தூதராக தேர்ந்தெடுத்தோம் என்கிறது குரான்.
குர்ஆன் நம் சித்தர்களை ரிஷிகளை பற்றி கூறவில்லை என்பதை விட நமது நூல்களை நாம் வாசிக்க வேண்டும்.. பதில் கிடைக்கும்.
உதாரணமாக,
1) ஒவ்வொரு வகுப்பினருக்கும் நிச்சயமாக நாம் தூதரை அனுப்பியிருக்கிறோம். ‘‘அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். ஷைத்தான்களிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் என்(று கூறிச் சென்)றார்கள். அல்லாஹ்வின் நேர்வழியை அடைந்தவர்களும் அவர்களில் உண்டு; வழி கேட்டிலேயே நிலை பெற்றோரும் அவர்களில் உண்டு… - 16:36.
இதில் அல்ஹவின் வரையறையும், நமது மொழியில் உள்ள இறைவனின் வரையறையும் ஒன்றா என்று ஆராயலாம். நம் மொழியில் உள்ள வேதத்தை ஆதாரமாக கொள்ளவேண்டும், அதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும். இரண்டாவது நமது மொழியில் உள்ள வேதங்கள் ஒரே இறைவனை பற்றி சொல்கிறதா இல்லையா?. எதுவெல்லாம் தெய்வம் இல்லை என்கிறது என்று ஆராயலாம்.
2) … கட்டளைக்கிணங்கி உம் இதயத்தில் (குர்ஆனை) இறக்கி வைக்கிறார்; அது, தனக்கு முன்னிருந்த வேதங்கள் உண்மை என உறுதிப்படுத்துகிறது; ... 2:97
மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம், இது தனக்கு முன்னிருந்த ஒவ்வொரு வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. 5:48.
நமது மொழியில் உள்ள அறமும் இறைவனுக்கான இலக்கணமும் குர்ஆனும் ஒன்றா அன்று ஆராய்க
3) தொடரும்….
கொள்ளலாம். முகமது நபிக்கு பிறகு உலகம் முழுவதும் தூததத்துவம் முற்று பெற்றுள்ளது. இப்பொழுது தூதர்களின் வேலையை குர்ஆனும் முஸ்லிம்கள் செய்கின்றனர். எனவே அன்று இல்லாததற்கு வேறு மெக்கனிசம் இருந்து இருக்கும். நமக்கு தெரியாது அது என்னவென்று. உலகம் முழுவதும் அனைத்து மொழிகளிலும் சேர்த்து மொத்தம் 124000 தூதர்கள் வந்துள்ளனர். ஏறக்குறைய 50000 ஆண்டுகளுக்கு மேல் மனித இனம் வாழ்கிறது. எனவே அனைத்தையும் ஆய்வதற்கும் அறிவதற்கும் நமக்கு தகவலும் இல்லை நேரமும் இல்லை. போதுமான தகவல் கொடுக்கப்பட்டுக்கது அதைக்கொண்டு இறைவனை அறிவதும் வணங்கி வழிபடுவதும் தான் இந்த வாழ்வின் சமய கட்டமைப்பின் நோக்கம்.
இலங்கையில் அல்லிராணியின் அரண்மனை அமைந்திருந்த ராசமடு கிராமம் https://www.tamilviyugam.com
புவிதனில் வாழ்நெறி காட்டி – நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள்
அவைதாம் காலத்திற்கேற்ற வகைகள்
அவ்வக் காலத்தின்
கேற்ற ஒழுக்கமும் நூலும்
ஞாலம் முழுமைக்கும் ஒன்றாய் – எந்த
நாளும் நிலைத்திடும் நூலொன்றும் இல்லை-13 இது பாரதி சொன்னது.
பாரதி நல்ல தமிழ் மொழி அறிஞர்.. தத்துவ குருவல்ல..
என்றால் யாருக்கு தத்துவ குருவாக இருக்க தகுதி உள்ளது? வாசிக்க வாய்மை