யார் இந்த கமல்ஹாசன்?

2 views
Skip to first unread message

அறம் - கற்க கசடற

unread,
Jul 20, 2024, 5:39:58 AM7/20/24
to அறம் கற்க கசடற

கமல்ஹாசன் அவர்கள் தனக்கு சாதி இல்லை என்று கூறினாலும் சாதி வெறி கொண்டவர் என்று மணிவண்ணன் பல இடங்களில் கூறி உள்ளார். ஆனால் அது எனக்கு ஆச்சரியமாக இல்லை, ஏனென்றால் அவரவர் அரசியலும் சமூக பார்வையும் வேறுபடும்.

மேலே உள்ள காணொளியில், "ஜென்டில்மேன் படத்தின் ஒரிஜினல் கதையில் militant வேலையில் ஈடுபடும் கதா நாயகன் பார்ப்பன பிள்ளையாக இருப்பது போல இருந்தது எனவே நடிக்க முடியாது என்று கூறியதோடு மட்டும் அல்லாமல், வேறொருவரை வைத்து எடுத்தால் கூட கதையில் மற்றம் செய்ய வேண்டி கூறினேன், சங்கரும் அவ்வாறே செய்தார்" என்று தனது வாயால் கூறுவதை கேட்க முடிந்தது.

கமல் தனது வாயால் மணிவண்ணன் கூறியதை வழிமொழிவது போல பேசியதை கேட்டதும் மணிவண்ணனின் அறிவுக் கூர்மை என்னை வியக்க வைத்தது.

  • பார்ப்பனர்கள் militant ஆக நடிப்பதை கூட விரும்பாத கமல்,
  • விருமாண்டி, தேவர்மகன் போன்றவரில் தேவர்களை அவ்வாறு காட்டியதும்,
  • விஸ்வரூபத்தில் முஸ்லிம்களை அப்படி காட்டியதும்,
  • தசாவதாரத்தில் ஒரு கிறிஸ்தவனை அவ்வாறு காட்டியதும் ஏன்?

இந்த சமூகங்களில் militant கள் இருந்தார்கள் ஆனால் பிராமணர்கள் சாதுக்கள், நல்லவர்கள், கொலை போன்ற பாதக செயலை செய்ய மாட்டார்கள் என்றால், கீழே உள்ள நிகழ்வுகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் கமலஹாசன்.

1) RSS கோட்ஸே காந்தியை தடவி கொடுக்கும் பொழுது காந்தி இறந்து விட்டாரோ?

2) நான்கு பார்ப்பனர்கள் வாழ்த்துப்பா பாடும்பொழுது ஆதித்த கரிகாலன் இறந்து போனாரா?

3) சங்கராச்சாரி முத்தம் கொடுக்கும் பொழுது சங்கரராமன் உயிர் துறந்தாரா?

இவைகளெல்லாம் Militant act இல்லையா?

ஒருவேளை இந்த நேர்காணலுக்கு பிறகு இவரது நிலைப்பாடு மாறி இருக்குமோ என்று சிந்தித்தால், ஹேராமிலும் இவர் காட்ட முயன்றது தான் பட்ட துயரத்தின் காரணமாக ஆயுதம் ஏந்தி திருந்தும் ஒரு பிராமணனை தான். அதாவது அந்த பிராமணர் தரப்பு நியாயத்தை தான் கூறி உள்ளாரே தவிர நிதர்சனத்தை அல்ல. இந்த நியாயம் மற்ற எவருக்கும் பொருந்தாதா?

ஆப்கானிஸ்தானில் உள்ளவர்களுக்கு தகுந்த நியாயம் இல்லையா? அமெரிக்காவில் வீட்டில் அமர்ந்து இருந்த அமெரிக்கா இராணுவ வீரகள் மீதா தாலிபான்கள் போர் நடத்தினார்கள்? இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த பொழுது போராடிய மக்களை பற்றிய உங்கள் பார்வை இதுதானா? ஆங்கிலேயர்கள் இந்தியாவில் குறைந்த பட்சமாக உள் கட்டமைப்பு, சட்டம் போன்றவைகளையாவது ஏற்படுத்தினர். ஆனால் அமெரிக்கா ஆப்கானிஸ்தானை முழுவதும் குண்டுகளால் அழித்து ஒழிக்க மட்டுமே செய்தது. இதன் பிறகும் நவ துவாரங்களையும் மூடிட்டு இருக்க அவர்கள் என்ன ஷீ நக்கிகளா?

இடைநிலை சாதியினருக்கு தகுந்த நியாயம் இல்லையா? தமிழ் சமய அறநூல்கள் மீட்டெடுக்கபட துவங்கியது 1800 களின் துவக்கத்தில் தான். அதற்கு முன் சில நூற்றாண்டுகள் இந்த நூல்கள் இவ்வாறு மறைக்கப்பட்டது யாரால்? தமிழர் நூல்கள் தமிழர் பயன்பாட்டில் இல்லாமல் போனது யார் செய்த சதியால்? இந்த அறங்களை பயின்று இருந்தால் அவர்கள் அறத்தொடு வாழ்ந்து இருப்பார் அல்லவா?வீரத்தை வேண்டிய இடத்தில் மட்டும் பயன்படுத்தி இருப்பார் அல்லவா? சாதி அவர்களை அழித்து இருக்காது. அடுக்கில் கீழ் இருப்பது மட்டுமல்ல இழிவு, அடுக்கில் இருப்பதே இளிவுதான் என்று அறிந்து, தமிழர் அறம் கூறுவது போல அனைவரையும் சமமாக உறவாக கருதி இருப்பார்.

ஆஃப்கானில் விளையாட்டு குழந்தைகளை தற்கொலைப் படையாக அனுப்புவதாகவும், அமெரிக்க இராணுவம் குழந்தைகளை கொலை செய்யமாட்டார்கள் என்றும் விஸ்வரூபத்தில் கூறிய புண்ணியவான் இவர். அமெரிக்க இராணுவத்தின் இலட்சணம் உலகுக்கே தெரியும்.

வைணவ பார்ப்பனர்களை தீவிரவாதியாக காட்டு என்பதல்ல நம் வாதம். பார்ப்பனர்கள் என்று வரும்பொழுது இவ்வளவு எச்சரிக்கையாக இருக்கும் கமல் நேர்மையானவராக இருந்து இருந்தால் எல்லா சமூகத்துக்கும் இதே எச்சரிக்கை உணர்வோடு நடந்து கொண்டு இருக்க வேண்டும். அல்லது நடுநிலையாக இருந்து இருக்க வேண்டும்.

ஒற்றை வரியில் சொல்வதென்றால் "வெளிப்படையாக தனது நிலைப்பாடை ஒத்துக்கொள்ளாத நயவஞ்சகர்" தான் கமல். கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதி கமல்.

கமல் நயவஞ்சக சந்தர்ப்பவாதி என்பதற்கு இன்னுமொரு எடுத்துக் காட்டு - பிக் பாஸ் கலாச்சார சீரழிவு என சர்ச்சை எழுந்த பொழுது, "எனக்கு பணம் வேண்டும், மாற்றி மாற்றி பேச நான் அரசியல்வாதி அல்ல" என்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் 6 வருடத்துக்கு முன்பு கூறினார்.

அடுத்த சிலமாதங்களிலேயே கட்சி துவங்கி, "இது இப்பொழுது எடுத்த முடிவல்ல, 10 வருடத்துக்கு முன் துவங்கியதாக கருதுகிறேன்" என்றார். தொழில்முறை அரசியல்வாதிகள் தேவலையோ என்று தோன்றியது.

கமலுக்கு கடவுள் பற்று இல்லமால் இருக்கலாம், ஆனால் சாதி பற்று 100% உண்டு. வெற்றிக்காக, பொருளுக்காக, புகழுக்காக எந்த எல்லையும் செல்லும் சுயநல நயவஞ்சகன் கமலஹாசன்.

Follow அறம் கற்க கசடற (Learn Virtues) and Upvote for more

பக்கத்தை பின்பற்றுக அறம் - கற்க கசடற

8.9ஆ பார்வைகள்
20 ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்
3 பகிர்வுகளைப் பார்வையிடுக
8 பதில்களில் 1
ஆதரவு வாக்கு
20
11
3
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

கருத்திடுக

வைணவப் பற்று காரணமாகத்தான் தசாவதாரம் என்ற படத்தில் பெருமாள் சிலையை சைவமதத்தை சார்ந்த அரசன் வைணவப் பிராமண பக்தருடன் கடலில் மூழ்கடித்தது போல ஒரு காட்சியை காட்டினார்.

1
பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

பாவம் செத்துப்போன மணிவண்ணனுக்கு வரலாறு தெரியாது போலும் ஈவேராவின் தி.க பிரிட்டிஷ்காரன் காலில் விழுந்து கெஞ்சியும் இந்தியா சுதந்திரம் பெறுவதை தடுக்க முடியாததால் சுதந்தரம் பெற்ற அன்றைய தினத்தை துக்கதினமாக அனுசரித்து கருப்பு கொடி ஏற்றினர் ஈவேரா கும்பல் நேசப்பற்றாளர்கள்.

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

இங்கே விடயம் ராமசாமியை பற்றியோ மணிவண்ணன் பற்றியோ அல்ல. சரி ராமன் அல்லது கிருஷ்ணன் மறுபடியும் பிறந்து வந்து இதெல்லாம் தப்புபா என்றால் சாதி ஒழிக்கப் பட்டுவிடுமா? ராமனையும் கிருஷ்ணனையும் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட பட்டியலில் சேர்த்துவிட மாட்டீர்கள்?

1
பதில் அளியுங்கள்

தமிழ்நாட்டில் ஆயிரத்தெட்டு ஜாதி சங்கங்கள் பெரும்பான்மை ஜாதி பார்த்து தொகுதி ஒதிக்கீடு குடிநீர் தொட்டியில் மலம் கலத்தல், வன்கொடுமை, வன்கொடுமை, ஆணவப்படுகொலை நாடக காதல் கள்ளச்சாரயம் கந்து வட்டி ஊர் சேரி அமைப்பு இதற்கெல்லாம் எந்த ஜாதியனர் காரணம்?

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

மக்களை சாதியாக பிரித்தவர்கள் காரணம். அவர்கள் புள்ளி வைத்தார்கள், இவர்கள் கோலம் போட்டார்கள். சாதியாக மக்களை பிரித்து வைத்து இருக்க வில்லை என்றால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது.

1
பதில் அளியுங்கள்

இப்பொழுதுதான் அறிவு பிராகிசிக்கிறதே அப்புறம் ஏன் எவன் மீதோ பழி போடவேண்டும் சாதி பிரிவினை இல்லாமல் இருப்பதை யார் தடுக்கிறnர்கள்? பிராமணர்களிலேயே பல சாதிகள் இதில் எந்த சாதி பிராமணர்கள் சாதி பிரிவினையை உருவாக்கினார்கள்? ஒரு சாதியினால் பல சாதிகளை உருவாக்க முடியும் என்றால் இப்பொழுது ஒரு புதிய சாதியை உருவாக்கி காட்டுங்களேன் பார்ப்போம். சாதிகளை யாரும் உருவாக்கவும் முடியாது அழிக்கவும் முடியாது ? சாதி உருவாக பரிணாம வளர்சியை போல் பல்லாயிரம் வருடங்கள் ஆகும். அது அழிவதற்கும் அவ்வாறே? குற்றம் செய்பவன் ஒருவன் பழியை சுமப்பவன் வேறொருவனா?

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

சாதிய ஏற்ற தாழ்வு ஒழியும் பொழுதுதான் அறிவு பிரகாசிக்கும். பிறப்பால் அனைவரும் சமம் என்று உணராத அறிவு என்ன அறிவு? அனைத்து பிராமணர் மீதும் இந்த கட்டுரை குறை கூறவில்லை. இன்னும் சாதி வெறியை பிடித்து கொண்டு இருப்பவர்களை தான் குறை கூறுகிறது. நீங்க எதோ சாதியை உருவாகியது போல ஏன் பதருகிரீர்கள்? உங்கள் பதட்டத்தை பார்த்தால் கமலுக்கும் உங்களுக்கும் வேற்றுமை இருப்பதாக தெரியவில்லை.

1
பதில் அளியுங்கள்

என்ன ஒரு புரிதல் உங்களுக்கு நான் சாதியை உருவாக்கியது போல் பதருகிறேனா? நான் சொல்வதே சாதியை எவராலும் உருவாக்க முடியாது என்பதே பிராமணர்களால்தான் சாதி பிரிவினை உருவானது என்பதே அபத்தம். அது இயல்பாக பரிணாம வளர்ச்சி போல் உருவானது என்பதே என் கருத்து. பிராமணர்களில் பல சாதி பிரிவுகள் இதில் எந்த சாதி பிராமணர்கள் சாதி பிரிவினையை உருவாக்கினார்கள் எப்படி உருவாக்கினார்கள் என்பதை பிராமணர்கள்தான் சாதிப் பிரிவினைக்கு காரணகர்த்தர்கள் என்று சொல்பவர்கள் ஆதாரங்களுடன் சொல்லமுடியுமா? என்பதே என் கேள்வி?

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

முடியும். நீங்க தேடினால் உங்களுக்கும் கிடைக்கும். சாதி சண்டையில் எனக்கு விருப்பமில்லை. நன்றி. வணக்கம்.

பதில் அளியுங்கள்

என்னுடைய உறுதியான முடிவே சாதியை எவராலும் உருவாக்க முடியாது என்பதே? அதனாலேயே பிராமணர்கள் மீது பழி போடு பர்களிடம் ஆதாரம் கேட்கிறேன்.என்னுடைய கருத்துக்கான ஆதாரமாக நான் நம்புவது பிராமணர்களில் பல சாதிகள், கணக்கு பிள்ளை, மருத்துவர், பண்டிதர், பணிசெய்வோன், வண்ணார், ஓசன் இன்னும் பல தொழிற்சார்பெயர் கொண்ட சாதிகள் இவர்கள் அனைவரும் வாக்கு வங்கி அற்ற எண்ணிக்கை பலமற்ற சாதிகள் இதே நிலைதான் பிராமண சாதிகளுக்கும் சாதிய உணர்வை இக்காலகட்டத்தில் ஊட்டி வளர்ப்பவர்கள் அரசியல் கட்சிகள், மற்றும் சாதி சாயம் பூசிக் கொண்டுள்ள போலி அரசியல்கட்சிகள் இவர்கள் தான் பெரும்பான்மை சாதி பார்த்து தொகுதி ஒதிக்கீடு செய்கிறார்கள்.

பதில் அளியுங்கள்
Reply all
Reply to author
Forward
0 new messages