பெண்களை தெய்வமாக வணங்கும் இந்தியாவில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் நடைபெறுகிறது?

1 view
Skip to first unread message

அறம் - கற்க கசடற

unread,
Oct 1, 2024, 11:37:40 AM10/1/24
to அறம் கற்க கசடற

மற்ற மொழிகளைப் போல் அல்லாமல், தமிழில் ஒவ்வொரு சொல்லுக்கும் வரையறை உண்டு.

எனவே தெய்வம் என்ற சொல்லுக்கு தொல்காப்பியம் கூறும் இலக்கணம் என்பது,

பெண்மை சுட்டிய உயர்திணை மருங்கின்

ஆண்மை திரிந்த பெயர்நிலைக் கிளவியும்

தெய்வம் சுட்டிய பெயர்நிலைக் கிளவியும்

இவ்வென அறியும் அந்தம் தமக்கு இலவே

உயர்திணை மருங்கின் பால்பி ரிந் திசைக்கும். - (தொல்காப்பியம், சொல்லதிகாரம் 1:4)

உரை: பெண்மையைச் சுட்டியதும் ஆண்மை திரிந்ததுமாகிய மக்கட் சுட்டுடைய பெயர்நிலைச் சொல்லும் தெய்வத்தன்மையைக் கருதிவரும் பெயர்நிலைச் சொல்லும் இன்னபால் என அறியப்படும் பயனிலை பற்றிய ஈறுகள் அவை தமக்கில. ஆதலின் அவை உயர்திணையிடத்துப் பால் அறிவிக்கும் ஈறுகளொடு பிரிந்து இசைக்கும்.

குறிப்பு: ஆணினம் மற்றும் பெண்ணினம் என்ன திணை என்று இந்த பாடல் விளக்க வில்லை, மாறாக உடல் உறுப்பால் ஆணாகவும், உணர்வால் பெண்ணாகவும் இருக்க கூடிய மற்றும் உடல் உறுப்பால் பெண்ணாகவும் உணர்வால் ஆணாகவும் இருக்க கூடிய மனித பிறப்புகளின் தினை பற்றியும் இந்த நான்கிலும் அடங்காத தெய்வத்தின் திணை என்ன என்று விளக்கும் பாடல் இது. இறைவன் உயர் திணையை சார்ந்தவன் ஆனால் ஆணுமல்ல பெண்ணுமல்ல இடைப்பட்டவனுமல்ல என்பதே இதன் விளக்கம்.

அதே போல

பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்

உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்

கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்

அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. - (7ம் தந்திரம், 14 அடியார் பெருமை, பாடல் 4)

பொழிப்புரை: `ஆண், பெண், அலி` என்னும் மூவகைப் பொருள்களுள் ஒருவகையினுள்ளும் படாது அவற்றின் வேறாய்த் தனித்து நிற்பவன் என்கிறது திருமந்திரம்.

எனவே பெண் தெய்வம் என்பது புராணங்களில் உள்ளதே தவிர தமிழர் மறை நூல்களிலும் வேதமத ரிக் யஜுர் சாம நூல்களிலும் குறிப்பிடப் படவில்லை. எனவே இந்த கருத்தாக்கம் மனிதர்களின் கைவண்ணம். பொய்யாக உருவாக்கிய ஒன்றை இவர்களே நம்புவதும் இல்லை மதிப்பதும் இல்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்று. இந்தியாவில் காலகாலமாக பெண் அடிமை பட்டு இருந்தார்கள் என்பதற்கு சில உதாரணங்கள் கீழே.

  • பார்ப்பன பெண்கள் கணவனை இழந்த பின் எவ்வாறு நடத்தப் பட்டார்கள் என்று உலகறியும்.
  • திருவாங்கூர் சமஸ்தானத்தில் தாழ்ந்த சாதி பெண்கள் மேலாடை அணிய தடை விதிக்கப் பட்டு இருந்ததை போராடி நீக்கியதும் நூறாண்டுக்குள் தான் நடந்தேறியது.
  • வரதட்சணை கொடுமையினால் எத்தனை பெண்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஆய்வு செய்தால் அதிர்ந்து போவீர்கள்.
  • பெண்களை படிக்க விடாத நிலை இதே இந்தியாவில் எத்தனை ஆண்டுகள் இருந்தது என்பதையும் நாம் அறிவோம்.

இவைகளெல்லாம் நீங்கள் கூறிய இந்தியாவில் சமீப காலத்தில் தான் மாற்றம் பெற்றது என்பதை அறிக.

இந்தியா என்னும் பொழுது இந்து மதத்துடன் இணைக்காத நீங்கள் சவூதி என்றதும் இஸ்லாத்துடன் இணைப்பது முரணாக உள்ளது. நீங்கள் கடந்த நூற்றாண்டில் போராடி செய்த விடயங்களை எல்லாம் இஸ்லாம் 1460 வருடத்துக்கு முன்பே செய்துவிட்டது. இத்தனை உரிமைகளை கொடுத்த சமயம் அவர்கள் கண்ணியம் காக்க முழு உடலையும் மறைக்க வழிகாட்டி உள்ளது, ஆனால் அதற்கு தவறான விளக்கம் கொடுத்து அதை அடிபப்டையாக கொண்டு இஸ்லாம் பெண்களை ஒடுக்குவதற்காக சப்பை கட்டு காட்டுகிறீர்கள். உரிமை என்பது அரைகுறை ஆண்டாய் அணிவதல்ல, கீழே குறிப்பிடப்பட்டவைகள் தான் உரிமை, இன்றும் கூட பல சாதியில் சமுதாயத்தில் இதற்க்கு உரிமை கிடைப்பதில்லை .

457 பார்வைகள்
3 ஆதரவு வாக்குகள்
6 பகிர்வுகள்
2 கருத்துகள்
137 பார்வைகள்
1 பகிர்வைப் பார்வையிடுக
ஆதரவு வாக்கு
4
1
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

கருத்திடுக

அரேபிய பாலை வனத்தில் 1460 வருடங்களுக்கு முன் தோன்றிய சிந்தனைகளை விட உயரிய நோக்கம் கொண்ட சிந்தனைகள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே பாரதித்தில் தோன்றி விட்டது பாரதத்தில் கடந்த ஆயிரம் வருடங்களில் ஏற்பட்ட அந்நிய ஆக்ரமிப்பால் நிகழ்ந்த கலாச்சார சீரழிவால் அந்நியர்களால் பெண்கள் வன்புணர்பு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதன் எதிர் வினைதான் உடன்கட்டை ஏறுதலும் இன்ன பிற விளைவுகளும்.

https://ta.quora.com/profile/Pmsreeni-Vasan/https-behindwoods-pehintuvuts-quora-com-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2?ch=10&oid=168134798&share=e2357f5d&srid=uVBwpt&target_type=post
1
பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

வரலாற்று உண்மைகளை இன்று பலர் திரிக்கும் வழக்கம் உள்ளதால், அதை கூறும் நபர் நடுநிலையானவரா அல்லது ஒரு திட்டத்துடன் செயல்படுபவரா என்று ஆய்ந்து வாசிக்க வேண்டும். அவ்வாறு சார்புநிலை உடையவர் என்றால், அவர் செய்திக்கான ஆதாரத்தை அறிஞர்கள் ஏற்றுக்கொன்ற ஆய்வாளர்கள் யாரேனும் ஏற்றுக்கொண்டுள்ளார்களா என்று தேடவேண்டும். நீங்கள் கூறிய அனைத்தும் பொய் பரப்புரையாளர்களின் காணொளி அல்லது கட்டுரைகளிலேயே காணமுடிகிறது.

ஆம் "அந்நிய" என்பது இந்த மண்ணுக்கு தொடர்பில்லாத ஆரிய ஆண்கள் இந்த நாட்டுக்குள் நகர்ந்ததிலிருந்து தொடங்குகிறது. The new reports clearly confirm ‘Arya’ migration into India ஆரிய ஆண்கள் மட்டும் புலம்பெயர்ந்து எப்படி இந்த நாட்டில் அவர்களின் சந்ததிகளை பெருக்கினார்கள்? என்ற கேள்விக்கு வேண்டுமானால் உங்கள் கருத்து பதிலாக அமையலாம்.

பாரதம் என்கிற சொல் மஹாபாரதத்தில் இருந்துதான் இந்த நாட்டில் புழக்கத்தில் உள்ளது ஆனால் மிக மிக பழமையான மகா பாரத manuscript 3AD-இல் இருந்ததாக சொல்ல படுக்கிறியாது. Mahabharata - Wikipedia எனவே "பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பே பாரதித்தில்" என்பது நம்பிக்கையாக இருக்கலாம் ஆனால் உண்மை இல்லை. முக்கியமாக, அந்த பாரதம் என்பது இன்று இந்தியா என்று அழைக்கப்படும் பகுதி அல்ல.

இமயம் முதல் குமாரி வரை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்த தமிழ் சங்க நூல்களில் பாரதம் என்ற வார்த்தைக்கோ அல்லது இந்த கதைக்கோ எந்த வித குறிப்பும் இல்லை. என்றால் இந்த மண்ணின் உண்மை பண்பாட்டிலும் கலாச்சாரத்திலும் ஆரியர்களால் பண்பாட்டு படை எடுக்கப்பட்டு உள்ளது என்றுதானே புரிந்து கொள்ள முடியும்.

இந்த மண்ணுக்கு என்று பண்பாடு கலாச்சாரமும் இல்லையா? என்றால், உண்டு. ஆனால் அது பாரத கலாச்சாரம் என்று இன்று கூறப்படுபவை அல்ல. //அந்நிய ஆக்ரமிப்பால் நிகழ்ந்த கலாச்சார சீரழிவால் அந்நியர்களால் பெண்கள் வன்புணர்பு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதன் எதிர் வினைதான் உடன்கட்டை ஏறுதலும் இன்ன பிற விளைவுகளும்.// ஆரியர்களால் என்னென்ன விளைவுகள் ஏற்பட்டுள்ளது?

😲தேவதாசி முறை உருவான வரலாறு | Mannar Mannan About Real History of Devadasi | #Shorts

சரி, நீங்க சொல்றது உண்மை என்றே வைத்து கொள்வோம், மனைவியை ஒருத்தன் வன்புணர்வு செய்துவிடுவான் என்று பயந்தால் சண்டை போட்டு உயிர் எடுக்கவோ விடவோ செய்வீர்களா? அல்லது உடன்கட்டை ஏற செய்து அவர்களை கொன்று விடுவீர்களா? சரி, திருமணம் ஆகாத பொண்ணை என்ன செய்வீங்க? இன்று கோவிலில் வைத்து 8 வயது குழந்தையை கற்பழித்து கொன்றார்களே? இப்போ ரேவண்ணா பாடியக்கூட கற்பழித்தது இருக்கானே? வெறி புடிச்சவன் வயசை எல்லாம் பாப்பானா என்ன? அந்த காலத்தில் குழந்தைகளை, பாத்திகளை என்ன செய்தீங்க?

சரி, நீங்க சொல்றபடி பெண்களைப் பற்றி உயரிய கருத்துக்கள் உங்க பாரத வேதத்தில் இருந்தால் எந்த நூலில் என்ன சொல்லி இருக்கிறது என்று எடுத்து போடுங்க பாப்போம். அந்நிய பயடியெடுப்பால் தான் உடன்கட்டை போன்ற கொடுமைகள் வந்தது, அதற்க்கு முன் அது இல்லவே இல்லை என்று எந்த நூலில் உள்ளது? எடுத்து காட்டுங்க, தெரிஞ்சுகிறோம். கடந்த ஆயிரம் ஆண்டுகளில் தான் இது வந்தது என்று கூறி உள்ளீர்கள்.

சோழர் காலத்திலேயே இவ்வழக்கம் இருந்து உள்ளது, என்ன எரிப்பதற்கு பதிலாக புதைக்கப்பட்டு உள்ளனர், அவ்வளவுதான் வேற்றுமை.

சோழர் காலத்தில் இறந்த அரசருடன் உயிரோடு புதைக்கப்பட்ட பெண்கள் - எதற்காக தெரியுமா? | ilakkiyainfo

வேத காலத்தில் உடன்கட்டை ஏறுதல் இருந்ததற்கான ஆதாரங்கள் Sati (practice) - Wikipedia

//அந்நியர்களால் பெண்கள் வன்புணர்பு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதன் எதிர் வினைதான் உடன்கட்டை ஏறுதலும் இன்ன பிற விளைவுகளும்.//

வன்புணர்வு செய்வோர்கள் எந்த சமயத்தையும் பின்பற்றாத மிருகங்கள். கடவுள் நம்பிக்கை அற்ற காட்டு மிராண்டிகள். இன்றைய இந்திய இராணுவத்திலும் அப்படிப்பட்ட சில மிருகங்கள் உண்டு..

இந்து சாமியார்களிலும் உண்டு..

கிருஸ்தவ பாதிரிகளிலும் உண்டு..

சொல்ல போனால் எல்லா மதங்களின் பெயரிலும் நடைபெறுகிறது.. எனவே, அதை அவரவரின் சமயம் அல்லது கருத்தியல் அதை போதிக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும்.

விபச்சாரம் என்றால் என்ன? என்று இஸ்லாம் வரையறுத்து கூறுகிறது.

தமது மனைவியர் அல்லது தமது அடிமைப் பெண்களிடம் தவிர தமது கற்பைக் காத்துக் கொள்வார்கள். அவர்கள் பழிக்கப்பட்டோர் அல்லர்.. இதற்கு அப்பால் (வேறு வழியை) தேடியவர்களே வரம்பு மீறியவர்கள். (திருக்குர்ஆன் 23:5,6,7)

இதில் அடிமைப் பெண்கள் என்றால், அந்த காலத்தில் அடிமையாக இருந்த பெண்களை விடுவித்து பின் மணம் முடிக்கப்படும் பெண்களை இது குறிக்கிறது.

முகமது நபி காலத்தில் யாருக்கும் தெரியாமல் விபச்சாரம் செய்த ஆணும் பெண்ணும் பொதுவெளியில் உண்மையை ஒத்துக் கொண்டு கல்லடி பட்டு செத்த வரலாறு உண்டு. அவ்வாறு இருக்க வன்புணர்வு செய்வதற்காக நீங்கள் கொடுத்த லிங்கில் உள்ளது போல அடிமை வியாபாரம் நடந்ததாக சொல்லப்படுவது வேடிக்கை / கற்பனை / திட்டமிட்ட பொய் பிரச்சாரம். அவ்வாறு உண்மையாகவே இருந்ததாக கருதினால் கூட அது இஸ்லாமிய சட்டத்துக்கு புறம்பானது. இன்று சட்டத்துக்கு புறம்பான செயல்களை செய்வோர் தண்டிக்கப்படுவது போல அவர்களும் நிச்சயம் தண்டிக்க படுவார்கள் என்று குர்ஆன் தெளிவாக கூறுகிறது.

மேலும் இஸ்லாத்தில் முஸ்லிம்கள் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் தாழ்ந்தவர்கள்.. எனவே இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டுமேதான் மற்ற பெண்கள் இந்த சட்டத்துக்குள் வரமாட்டார்கள் என்றெல்லாம் கிடையாது. எல்லோருக்கும் ஒரே சட்டம் தான்.

மேலே கொடுத்து உள்ள திருமந்திர வசனங்களை படித்து ஆச்சரியமோ அல்லது தேடலோ கொள்ளாமல், அரேபிய மத செய்திகளை மட்டும் சாடுவது உங்களது வெறுப்புணர்வை காட்டுகிறது. வெறுப்பு ஊறிய உள்ளமும் கோபம் கொண்ட கண்களும் உண்மையை காணாது என்பது இயற்கை.

ஆரியர்களை பற்றிய வரலாற்று உண்மையை அங்கங்கே சொல்வதன் காரணம், தனிமனிதன் மட்டுமல்ல சமுதாயமும் தனது கடந்தகால பிழையை ஆய்ந்து அறிந்து திருத்தி கொள்ள வேண்டும் என்பதற்க்காக.

இறுதியாக, உலகில் எல்லா சமயத்துக்கும் வேதத்துக்கும் ஒரே இறைவன்தான் என்று கூறும் சமயம் இஸ்லாம். முகமது நபி போலவே புனிதர்களை வெவேறு நிலத்துக்கு அனுப்பி அவர்களுக்கு புனித நூல்களை வழங்கியது நான்தான் என்று கூறும் இறைவன் தான் இஸ்லாத்தின் இறைவன். அனைத்து வேதங்களையும் ஒப்பு நோக்கினால் வெறுப்புகளை களைந்து ஒற்றுமையாய் சகோதரத்துவத்துடன் வாழலாம்.

மேலும் வாசிக்க வாய்மை

முகமது நபி ﷺ அவர்களை வேதம் கொடுக்கப்பட்டவர்கள் அறிவார்கள்..!

ஏற்பதும் நிராகரிப்பதும் அவரவர் உரிமை, அவரவர் விதி. நன்றி.

பதில் அளியுங்கள்

ஆரியர்கள் கோட்பாடு ஆரியர்கள் ஆண்கள் மட்டும் வந்தார்கள் என்பது வரலாற்று பதிவு அல்லாத கட்டு கதைகள் ஆனால 1000ஆம் ஆண்டுகளுக்கு முன் நுழைந்த இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மேற்கொண்ட அத்தனை வன்கொடுமைகளுக்கும் வரலாற்று பதிவுகள் உண்டு முத்தாய்ப்பாக 1946 ல் மதத்தின் அடிப்படையில் தேசத்தை பிரிக்க வேண்டும் என்பதற்காக இஸ்லாமியர் மேற்கொண்ட வன்கொடுமைகள் வன்புணர்வுகள் படு கொலைகள் அனைத்தும் வரலாற்றின் பக்கங்களில் ரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன் 40 வயது பாத்திமா என்ற ஆசிரியை 15 வயது மாணவனுடன் பாலுறவு கொண்டு போக் சோ வில் கைதானது ஊடகங்களில் செய்தி ஆனது நான் சொல்வது இது போன்ற சம்பவங்கள் அல்ல வரலாற்று பதிவுகளில் குழுவாக செயல்பட்டு மத அடிப்படையில் வன் கொடுமை செய்தது.

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

//ஆரியர்கள் கோட்பாடு ஆரியர்கள் ஆண்கள் மட்டும் வந்தார்கள் என்பது வரலாற்று பதிவு அல்லாத கட்டு கதைகள்//

கொடுக்கப்பட்ட லிங்க் தி ஹிந்துவில் வந்தது. இந்த மண்ணின் நூல்களுக்கும் உங்க நூல்களுக்கும் உள்ள வேறுபாடே போதுமானது. இந்த நூல்கள் எழுதப்பட்ட மொழிக்கும் நீங்க கொண்டாடும் நூல்களின் மொழியுமே போதுமானது. இந்த ஆய்வுகள் கூட தேவையே இல்லை. அவரவர் நூலில் அவரவர் மண் சாந்த செடி கொடிகள் மரங்கள் விலங்குகள் வாழ்க்கை முறைகள் தான் கொடுக்கப்பட்டு இருக்கும் என்பது எதார்த்தம். நிறைய ஆராச்சி கட்டுரைகள் இந்த தலைப்பில் வந்துள்ளது எடுத்து படிங்க.

//ஆனால 1000ஆம் ஆண்டுகளுக்கு முன் நுழைந்த இஸ்லாமிய படையெடுப்பாளர்கள் மேற்கொண்ட அத்தனை வன்கொடுமைகளுக்கும் வரலாற்று பதிவுகள் உண்டு//

அது இஸ்லாமிய படையெடுப்பு அல்ல, அது முகலாய படையெடுப்பு..

சாம்ராட் அசோகா சண்டையிட்டது இந்து படையெடுப்பா? அல்லது அசோகரின் படையெடுப்பா?

ராஜேந்தர சோழன் வடக்கே ஓமயம் வரை சென்றது இந்து படையெடுப்பா? சோழர்களின் படையெடுப்பா?

புறநானூறு, ரிக் யஜுவ்ர் வேதங்கள், மகாபாரதம், பைபிள், கலிங்கத்த்து பரணி போன்ற நூல்கள் எல்லாம் என்ன? இதிலெல்லாம் படையெடுப்புகள் சண்டைகள் இல்லையா? பெண்ணையும் பொருளையும் ஆடுமாட்டையும் கவர்வதுதானே இந்த நூல்கள் எல்லாம்.

ஆட்சி அதிகாரம் வெறுப்பு என்று வந்துவிட்டால் இதில் யார்தான் விதி விலக்கு? வசதியாக இதை எல்லாம் மறந்துவிட்டு அல்லது மறைத்து விட்டு .. ஹ்ம்..

ஒரு பெண் ஒரு பையனுடன் சேர்ந்து செய்த விடயத்துக்காக கைது செய்யப்பட்டதையே குறிப்பிடும் நீங்க.. மேலே குறிப்பிட்ட இந்த சாமியார்கள் செய்ததையெல்லாம் கண்டும் காணாமலும் பேசுறீங்க.. இத்தனையும் இவர்கள் கற்பழித்தது இந்து பெண்களை.. அத விட்டுடீங்க..

//முத்தாய்ப்பாக 1946 ல் மதத்தின் அடிப்படையில் தேசத்தை பிரிக்க வேண்டும் என்பதற்காக இஸ்லாமியர் மேற்கொண்ட வன்கொடுமைகள் வன்புணர்வுகள் படு கொலைகள் அனைத்தும் வரலாற்றின் பக்கங்களில் ரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது.//

உங்களுக்கு வசதியான செய்திகளை மட்டும் படிக்காதீங்க, நேர்மையாளராக இருந்தால் இரண்டுபக்கமும் படிங்க.. கொறைஞ்ச பட்சம் மதவெறி புடிச்ச உங்க மனசுக்கு சதோஷமாவது இருக்கும்.

ஜின்னா இஸ்லாமியர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக நம்பினார் அதனால் அவ்வாறு நடந்தது. அன்றைய காலகட்டத்தில் அது ஒன்றும் சட்ட படி தவறில்லையே. சொல்லப்போனால் ஒடுக்குமுறையை கையாண்டு பல்வேறு சிற்றரசர்களை ஒன்றாக சேர்த்ததுதான் தவறு. அவரவர் சுதந்திரத்துக்காக போராடிய பின் எல்லா அதிகாரத்தியும் வேறொருவர் பிடுங்கி செல்லவா போராடினோம் என்று பல இந்து சிதரசர்களே புலம்பினார். நீங்க சொல்லும் முகலாய படையெடுப்பாளர்கள் பாக்கிஸ்தான் பிறந்து சென்ற பின்னும் சாதிய ஒடுக்குமுறையை இருந்து தப்பிக்க இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்கள் இங்கேயே தங்கினார்கள். நீங்க முகலாயர்கள் செய்தவைகளை இஸ்லாத்தின் மீது திருப்பி, பூர்வகுடி முஸ்லீம் மக்கள் மீது வெறுப்பை விதைத்து கொண்டு இருக்கிறீர்கள்.

//வன்கொடுமைகள் வன்புணர்வுகள் படு கொலைகள் அனைத்தும் வரலாற்றின் பக்கங்களில் ரத்தத்தால் எழுதப்பட்டுள்ளது.//

எப்போ நடந்த வன்கொடுமை வன்புணர்வுகள்? இன்னைக்கு சாதிபேரால மதத்தின் பேரால கட்சியின் பேரால செஞ்சு குவிக்குறாங்க சாமியார்களும் இந்துத்துவத்தை ஆதரிக்கும் பிஜேபி கட்சியும், இந்த இராணுவமும்.. பெரும்பான்மையாக அவர்கள் கற்பழிப்பது இந்துக்களைத்தான். இதுக்கு பொங்காத உங்க கரிசனம் ஒரு இஸ்லாமிய பெண் செய்ததும் தேடி போடுறீங்க?

//வரலாற்று பதிவுகளில் குழுவாக செயல்பட்டு மத அடிப்படையில் வன் கொடுமை செய்தது.//

குழுவாக சேர்ந்து என்றால் கத்துவாவில் 8 வயது குழந்தையை முஸ்லீம் என்ற காரணத்துக்காகவே கோவிலில் வெச்சு கற்பழிச்சு கொன்னத சொல்லுறீங்களா?

இல்ல

பாஜக பெண்களுக்கு எதிரான கட்சி என்கிறார்களே, ஆதாரம் தரமுடியுமா?

பிஜேபி என்றால் பாரதிய ஜல்சா பார்ட்டி என்கிறார்களே, ஏன்? உதாரணம்?

கடவுளை நம்பும் மனிதர்கள் ஏன் சாமியார்களை நம்புகிறார்கள்?

சமீப காலங்களில் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து காணப்படுவதற்கு காரணம் என்ன?

எபப்டியும் இதெல்லாம் பொய் படிக்காம நீங்க சொல்றதே தான் சொல்ல போறீங்க.. வெறுப்புடன் இருக்கும் பொழுது உண்மையை ஆராயும் தன்மை அற்றுப்போகும். அதனால் சில படங்களை போடறேன்...

காங்கிரஸ் ஆட்சியில் நான்கு வருடங்களில் 1.75 லட்சமாக கற்பழிப்பு வழக்குகள் இருந்தது. ஆனால் மோடி ஆட்சியில் ஒரே வருடத்தில் 4.45 லட்சம் வழக்காகஅதாவது ஏறக்குறைய மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.

கண்ணுக்கு எதிரா ரத்தமும் சதையுமாக இவ்வளவு அநியாயம் நடக்குது, 1946 க்கு போயிட்டீங்க.. நீங்க சொன்ன அனைத்துக்கும் ஆதாரத்துடன் மறுப்பு பதில் தந்ததும் அதில் உள்ள உண்மை பொய்யை பேசாமலே அடுத்ததுக்கு எந்த ஆதாரத்தையும் காட்டாமல் பழிபோடும் விதமாக கருத்த சொல்லிட்டே போறீங்க.. வெறுப்பு வேறெதையும் சிந்திக்க விடாது.. நீங்க மீண்டும் மீண்டும் எந்த ஆதாரத்தையும் தராமல் வீண் விவாதம் தான் செய்ய போறீங்க.. ஆனால் நீங்க வீண் பலி போட போட நான் ஆதாரங்களை எடுத்து போடுவேன், அது உங்களுக்கு தான் பிரச்சனை, படிப்பவர் உங்களைத்தான் கேவலமாக நினைப்பர் என்ற அறிவு கூட இல்லாமல் நீங்க பேசும் காரணம் உங்கள் உள்ளத்தில் உள்ள வெறுப்பு. அதீத வெறுப்பு ஆன்மாவுக்கு நல்லதல்ல.. நான் சொல்லல எல்லா சமயமும் அதைத்தானே சொல்லுது. மேற்கொண்டு அரசியல் பதிவில் நாட்டமில்லை. நன்றி. வாழ்க வளமுடன்.

Reply all
Reply to author
Forward
0 new messages