உண்மையாகவே கடவுள் இருக்கிறாரா?

6 views
Skip to first unread message

அறம் - கற்க கசடற

unread,
Oct 31, 2024, 3:54:17 PM10/31/24
to அறம் கற்க கசடற
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா-இல் படித்தார்ஜூலை 14

மனித வரலாற்றில் கடவுள் என எகிப்தில் உருவகம் ஏற்பட்டது. அரசன் கடவுள்.

4000 வருடங்களுக்கு முன்பு அரசனே கடவுள். அதற்கப்புறம் மதம் பரப்பாளர் என ஒரு கூட்டம் அரசனுக்குக் கீழ் உருவாகின. இவர்கள் அரசன் தலைமைக்கடவுள், இவனுக்குக்கீழ் பல கடவுளை உருவாக்கினர். இவ்வாறு கடவுள் என வந்தது.

யூதர்கள் அவர்களது பகுதிகளில் வறட்சி ஏற்பட, எகிப்துக்கு விவசாயக்கூலி அடிமைகளாக பஞ்சம் பிழைக்க வந்தனர். இவர்களைக் கொடுமைப்படுத்தி எகிப்தியர் அடிமைகளாக துன்புறுத்தி வேலை வாங்கினர். யூத அடிமைகளுக்கு மோசஸ் என தலைவர் பிறந்து வளர்ந்து வந்தார். இவர் தன்னை இறைத்தூதர் என்றார். அதோ அந்த மலை உச்சியில் ஒளிப்பிழம்பாக கடவுள் எனக்கு மட்டும் தெரிவார். கட்டளைகளை இடுவார். நீங்கள் நான் சொல்வதை செய்யவேண்டும் என வரலாற்றிலேயே டுபாக்கூர் பண்ணின முதல் மனிதர் மோசஸ்.

இது இன்று செந்தில், கவுண்டமணி சினிமா காட்சிகள் வரை தொடர்கிறது.

ஆரியர்கள் இந்தப்பகுதி மற்றும் ஐரோப்பியாவிலிருந்து 3000வருடங்களுக்கு முன்பு வடகடைசி இந்தியாவில் குடிமாறினர்.

மற்றும் 4000 வருடங்களுக்கு முன்பு சிந்துவெளி நாகரீகங்களிலும் மூத்தோர், காளை, லிங்கம் போன்ற வழிபாடுகள் இருந்தன என்கின்றனர்.

தமிழர்கள் நடுக்கல், மூதாதையர் வழிபாடுகளைக் கொண்டவர்.

உண்மையாக கடவுள் என ஒருவரோ பலரோ இருக்கிறாரா ?

இல்லை.

மனிதனுக்கு கொஞ்சம் மூளை மற்ற விலங்குகளை விட அதிகம். அதனால் யோசிக்க, பேச, ஏதேதோ கண்டுபிடித்துவிட்டான். கடவுளை மட்டும் காட்டமுடியவில்லை.

கேட்டால் மடையா நீயேதான் கடவுள், இயற்கை, மலை, கடல் , சூரியன்….எல்லாமே கடவுள் என்கிறான்.

1.5ஆ பார்வைகள்
36 ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்
4 பகிர்வுகளைப் பார்வையிடுக
25 பதில்களில் 1
ஆதரவு வாக்கு
36
15
4
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

கருத்திடுக
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

5000 வருடத்தை முந்திய சங்க இலக்கியம் தெய்வத்தை போதிக்கவில்லை என்கிற கூற்று உண்மையா? இல்லை.

இறந்தவர்களை வணங்குவது பிழை!

உருவ வணக்கம் செய்வது பிழை.

தீர்க்கதரிசிகளை வணங்கலாமா? கூடாது.

தேவர்களை வணங்கலாமா ? கூடாது

எனவே தத்தம் மொழியில் உள்ள சமய அற நெறி நூல்களை கற்காமல் மாற்று மொழியில் உள்ள மேற்கத்திய கண்ணடி கொண்டு எழுதப்பட்ட வரலாற்றையும் தத்துவத்தையும் பின்பற்றுவது என்பது அறிவார்ந்த செயல் அல்ல.

1
பதில் அளியுங்கள்
Gurusamy Arumugam இன் தற்குறிப்பு போட்டோ

ஒரு மொழி எழுத்துருவத்தை பெறவே அம்மொழி பேச்சுவழக்கில் சில ஆயிரம் வருடம் இருக்கவேண்டும். மொழிக்கு இலக்கணம் உருவாக அம்மொழி குறைந்தது 5000 வருடங்கள் ஆகும். தமிழ் மொழிக்கு கடைசியாக உருவாக்கப்பட்ட இலக்கணநூல் “தொல்காப்பியம்”. தொல்காப்பியர் அதற்கு முன்பே “தமிழில்” இருந்த இலக்கணநூல்களை குறிப்பிடுகின்றார். அவற்றையும் கணக்கில் கொண்டால் “தமிழ் மொழி” குறைந்தது 10000வருடங்களுக்கு பயன்பாட்டில் இருந்து இருக்க வேண்டும். ஆனால், நம்மிடம் உள்ள அறிவாளிகள் எல்லாம் “வெள்ளத்தோல்” காரன் எழுதியதை படித்து விட்டு அதை அப்படியே வாந்தி எடுத்து இதுதான் உண்மை என்பார்கள். நம்ம “குருசாமி” என்ன சொல்றார் பாருங்க

“மனித வரலாற்றில் கடவுள் என எகிப்தில் உருவகம் ஏற்பட்டது. அரசன் கடவுள். 4000 வருடங்களுக்கு முன்பு அரசனே கடவுள். அதற்கப்புறம் மதம் பரப்பாளர் என ஒரு கூட்டம் அரசனுக்குக் கீழ் உருவாகின. இவர்கள் அரசன் தலைமைக்கடவுள், இவனுக்குக்கீழ் பல கடவுளை உருவாக்கினர். இவ்வாறு கடவுள் என வந்தது.

யூதர்கள் அவர்களது பகுதிகளில் வறட்சி ஏற்பட, எகிப்துக்கு விவசாயக்கூலி அடிமைகளாக பஞ்சம் பிழைக்க வந்தனர். இவர்களைக் கொடுமைப்படுத்தி எகிப்தியர் அடிமைகளாக துன்புறுத்தி வேலை வாங்கினர். யூத அடிமைகளுக்கு மோசஸ் என தலைவர் பிறந்து வளர்ந்து வந்தார். இவர் தன்னை இறைத்தூதர் என்றார். அதோ அந்த மலை உச்சியில் ஒளிப்பிழம்பாக கடவுள் எனக்கு மட்டும் தெரிவார். கட்டளைகளை இடுவார். நீங்கள் நான் சொல்வதை செய்யவேண்டும் என வரலாற்றிலேயே டுபாக்கூர் பண்ணின முதல் மனிதர் மோசஸ்.

இது இன்று செந்தில், கவுண்டமணி சினிமா காட்சிகள் வரை தொடர்கிறது.

ஆரியர்கள் இந்தப்பகுதி மற்றும் ஐரோப்பியாவிலிருந்து 3000வருடங்களுக்கு முன்பு வடகடைசி இந்தியாவில் குடிமாறினர்.

மற்றும் 4000 வருடங்களுக்கு முன்பு சிந்துவெளி நாகரீகங்களிலும் மூத்தோர், காளை, லிங்கம் போன்ற வழிபாடுகள் இருந்தன என்கின்றனர்.”

விக்கிபீடியா மற்றும் கூகில் போன்ற தேடும் பொறிகளில் எதை மக்குகள் பதிவிட்டுள்ளார்களோ அதை அப்படியே நம்பும் இது போன்ற கூட்டம் தமிழகத்தில் ஏறாளம். அவற்றிற்கு “தமிழ்” இலங்கியங்களில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது ஒன்றும் தெரியாது, ஆனால் எனக்கு எல்லாம் தெரியும் எனக்கூறிக்கொண்டு மிகமிக தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இவற்றையெல்லாம் புறம்தள்ளுங்கள், வேறு எங்கும் இல்லாதவகையில் “எண்ணற்ற” கோவில்களை அரசர்கள் உருவாக்கி இருக்கின்றார்களே அது ஏன்? என சிந்தித்து செயலாற்றுங்கள்.

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

//ஒரு மொழி எழுத்துருவத்தை பெறவே அம்மொழி பேச்சுவழக்கில் சில ஆயிரம் வருடம் இருக்கவேண்டும். மொழிக்கு இலக்கணம் உருவாக அம்மொழி குறைந்தது 5000 வருடங்கள் ஆகும்.//

ஐயா இந்த கருத்தில் நான் உங்களுடன் முரண்படுகிறேன். உங்கள் கருத்து பரிணாம வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது. அதாவது மொழி என்பது சிறுக சிறுக மனிதர்களின் அனுபவத்தின் மூலம் உருவானது என்கிற உங்கள் கருத்து மறுசீராய்வு செய்யப்பட வேண்டும். கடவுள் என்றால் என்ன என்ற கல்வி இல்லாததனால் இந்த கருத்து உருவாகிறது. மனிதர்களை போல மொழியும் படைக்கப்பட்டது, பிற்கலத்தில் தேய்ந்து திரிந்து மருவி ஒன்றுடன் ஒன்று புணர்ந்து பல்வேறு மொழிகளானது.

//தமிழ் மொழிக்கு கடைசியாக உருவாக்கப்பட்ட இலக்கணநூல் “தொல்காப்பியம்”. தொல்காப்பியர் அதற்கு முன்பே “தமிழில்” இருந்த இலக்கணநூல்களை குறிப்பிடுகின்றார். அவற்றையும் கணக்கில் கொண்டால் “தமிழ் மொழி” குறைந்தது 10000வருடங்களுக்கு பயன்பாட்டில் இருந்து இருக்க வேண்டும். //

எனக்கு தெரிந்து நன்னூல் தான் கடைசியாக உருவாக்கப்பட்ட நூல் ஆகும். தொலைக்காப்பியத்துக்கு முன் இருந்த அகத்தியம் பற்றி நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் அகத்தியம் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடவில்லை, மாறாக என் நினைவு சரி என்றால் இறையனார் களவியல் உரையில் குறிப்பிடுகிறார். மேலும் தொல்காப்பியர் அகத்தியரின் மாணவர் என்று கூறப்படுகிறது. எனவே அதை அடிப்படையாக கொண்டு தமிழின் வயதை 10000 வருடத்துக்கு முன் கொண்டு செல்ல முடியுமா என்று தெரியவில்லை.

//ஆனால், நம்மிடம் உள்ள அறிவாளிகள் எல்லாம் “வெள்ளத்தோல்” காரன் எழுதியதை படித்து விட்டு அதை அப்படியே வாந்தி எடுத்து இதுதான் உண்மை என்பார்கள். நம்ம “குருசாமி” என்ன சொல்றார் பாருங்க

“மனித வரலாற்றில் கடவுள் என எகிப்தில் உருவகம் ஏற்பட்டது. அரசன் கடவுள். 4000 வருடங்களுக்கு முன்பு அரசனே கடவுள். அதற்கப்புறம் மதம் பரப்பாளர் என ஒரு கூட்டம் அரசனுக்குக் கீழ் உருவாகின. இவர்கள் அரசன் தலைமைக்கடவுள், இவனுக்குக்கீழ் பல கடவுளை உருவாக்கினர். இவ்வாறு கடவுள் என வந்தது.//

வரலாறு பதியப்பட துவங்கியது ஏறக்குறைய 2500 ஆண்டுகளுக்கு முன்புதான். அதற்கு முன் வெவ்வேறு மத வேதங்களை கொண்டுதான் வரலாறு புரிந்து கொள்ளப்பட்டது. 2500 ஆண்டுகளுக்கு முன் சிலையை கடவுளாக வணங்கிய மக்கள் குறைவு. எனவே தொல்பொருள் ஆராய்ச்சியில் அதற்க்கான சான்றுகளை பெறுவது சிரமம், கீழடி ஓர் உதாரணம். எனவே எப்படிப்பட்ட கடவுளை மனிதன் வணங்கினான் என்பதற்கு ஆதாரமாக பழமையான மறை நூலகளை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். அந்த வகையில் பார்த்தால் எகிப்தில் மட்டுமல்ல அதற்கு முன்னமே கடவுள் என்ற கருதுகோள் இருந்ததற்கான ஆதாரம் பல உண்டு.

சங்க இலக்கியம் தெய்வத்தை போதிக்கவில்லை என்கிற கூற்று உண்மையா?

தமிழர்கள் இயற்கையை வழிபட்டார்களா?

எத்தனை இறைவன்?

//யூதர்கள் அவர்களது பகுதிகளில் வறட்சி ஏற்பட, எகிப்துக்கு விவசாயக்கூலி அடிமைகளாக பஞ்சம் பிழைக்க வந்தனர். இவர்களைக் கொடுமைப்படுத்தி எகிப்தியர் அடிமைகளாக துன்புறுத்தி வேலை வாங்கினர். யூத அடிமைகளுக்கு மோசஸ் என தலைவர் பிறந்து வளர்ந்து வந்தார். இவர் தன்னை இறைத்தூதர் என்றார். அதோ அந்த மலை உச்சியில் ஒளிப்பிழம்பாக கடவுள் எனக்கு மட்டும் தெரிவார். கட்டளைகளை இடுவார். நீங்கள் நான் சொல்வதை செய்யவேண்டும் என வரலாற்றிலேயே டுபாக்கூர் பண்ணின முதல் மனிதர் மோசஸ்.//

அவரின் பத்துக்கட்டளையை எடுத்து பாருங்கள், அதை தமிழ் நூல்களோடு ஒப்பிட்டு பாருங்கள், அவரின் கருத்துகளில் ஒரே ஒரு வித்தியாசத்தை கூட காண முடியாது என்கிற பொழுது அவர் எப்படி டுபாக்கூர் ஆனார்?

//ஆரியர்கள் இந்தப்பகுதி மற்றும் ஐரோப்பியாவிலிருந்து 3000 வருடங்களுக்கு முன்பு வடகடைசி இந்தியாவில் குடிமாறினர்.//

அவர்கள் ஒரே நாளில் அங்கிருந்து இங்கே வந்துவிடவில்லை. ஐரோப்பிய பகுதி என்பதை விட ஸ்டெப்பி புல்வெளி என்பது இன்னும் உண்மைக்கு நெருக்கமான தகவல்.

//மற்றும் 4000 வருடங்களுக்கு முன்பு சிந்துவெளி நாகரீகங்களிலும் மூத்தோர், காளை, லிங்கம் போன்ற வழிபாடுகள் இருந்தன என்கின்றனர்.//

லிங்க வழிபாடு கூடாது என்று சிவவாக்கியரும் திருமூலரும் கூறுகின்றனர் என்பதை நாம் அறிந்து வைத்திருத்தல் சிறந்தது. மேலும் சிந்து சமவெளியில் சுமேரியன், அராமிக் உட்பட 5 - 6 மொழிகள் பேசப்பட்டன என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தமிழின் மூல மொழியும் அதில் உண்டு என்பதை மறுக்க முடியாது.

நான்மறை

//விக்கிபீடியா மற்றும் கூகில் போன்ற தேடும் பொறிகளில் எதை மக்குகள் பதிவிட்டுள்ளார்களோ அதை அப்படியே நம்பும் இது போன்ற கூட்டம் தமிழகத்தில் ஏறாளம். அவற்றிற்கு “தமிழ்” இலங்கியங்களில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது ஒன்றும் தெரியாது, ஆனால் எனக்கு எல்லாம் தெரியும் எனக்கூறிக்கொண்டு மிகமிக தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இவற்றையெல்லாம் புறம்தள்ளுங்கள், வேறு எங்கும் இல்லாதவகையில் “எண்ணற்ற” கோவில்களை அரசர்கள் உருவாக்கி இருக்கின்றார்களே அது ஏன்? என சிந்தித்து செயலாற்றுங்கள்.//

இந்தியாவில் அலல்து தமிழகத்தில் உள்ள கோவில்களில் மிகப்பழமையானது எது? எதனை ஆண்டுகள் பழமையானது? தமிழ் 10000 ஆண்டுகள் பழமையானது என்றால் தமிழுக்கும் இந்த அக்கோவிலுக்கு தொடர்பு உண்டு என்றால், இந்த கோவில்கள் ஏன் 1200 ஆண்டுகளை தாண்டவில்லை?

குழப்பமான காலத்தில், போட்டி சூழ்நிலை உள்ள காலத்தில், நல்ல குருமார்கள் இல்லாத காலத்தில் மக்கள் என்ன செய்வார்கள் பாவம்! உங்களைப் போன்ற நல்ல படித்த மக்கள் பொறுமையாக உண்மையை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருந்தால் மக்களிடம் மாற்றம் நிச்சயமாக வரும். நன்றி.

பதில் அளியுங்கள்

விரிவான கருத்துக்கு நன்றிகள் பல.

ஒவ்வொன்றாக பார்ப்போம்.

  1. //ஐயா இந்த கருத்தில் நான் உங்களுடன் முரண்படுகிறேன். உங்கள் கருத்து பரிணாம வளர்ச்சியை அடிப்படையாக கொண்டது. அதாவது மொழி என்பது சிறுக சிறுக மனிதர்களின் அனுபவத்தின் மூலம் உருவானது என்கிற உங்கள் கருத்து மறுசீராய்வு செய்யப்பட வேண்டும். கடவுள் என்றால் என்ன என்ற கல்வி இல்லாததனால் இந்த கருத்து உருவாகிறது. மனிதர்களை போல மொழியும் படைக்கப்பட்டது, பிற்கலத்தில் தேய்ந்து திரிந்து மருவி ஒன்றுடன் ஒன்று புணர்ந்து பல்வேறு மொழிகளானது.//

தமிழ் மொழியின் எழுத்துருவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டால் “தமிழ்மொழி” எவ்வாறு மாற்றங்களை மேற்கொண்டு தற்காலத்தில் இருக்கும் நிலையை எய்தியுள்ளது என்பது புலப்படும். இறைவனால் படைக்கப்பட்டிருந்தால் இந்திலை கட்டாயம் ஏற்பட்டிருக்காது. எல்லா மொழிகளும் மனிதர்களால்தான் உருவாக்கப்பட்டுள்ளன, அதனால்தான் ஒவ்வொரு மொழியிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன.

இறைவனால் படைக்கப்படும் ஒவ்வொரு பொருளும் இவ்வாறு மாற்றம் அடையாது. அவ்வாறு மாறினால் இறைவனின் படைப்பாற்றலில் குறையுள்ளதாகத்தான் கருதமுடியும். அது இறைவனின் திறமையின்மையை உணர்த்தும். ஆகவே மொழியானது நிச்சயம் இறைவனால் உருவாக்கப்பட்டதல்ல.

உலகில் உள்ள அனைத்து மொழிகளும் “இறைவனால்” படைக்கப்பட்டதா? இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு உங்களின் கருத்து வழிவகுக்கும்.

2. சுமார் இரண்டாயிரத்திற்கு முன்பு கோவில்கள் “கருங்கற்கலால்” உருவாக்கப்படவில்லை. முதலில் மரத்தடியில்தான் இறைஉருவங்கள் வைக்கப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டன. எப்படி ஒருமொழி எழுத்துருவம் பெற ஆண்டுகள் பல ஆகுமோ அதேபோல் கோவில்கள் கட்டமைக்கப்பட்டதும் பல்வேறு காலங்களில் பலவகைகளில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. செங்கற்கல் கொண்டு உருவாக்கப்பட்ட கோவில்கள்தான் தற்காலத்தில் உள்ள மிகபழமையானவையாகும். அதற்குமுன் அமைக்கப்பட்ட வழிபாட்டு தளங்கள் காலவெள்ளத்தில் மறைந்துவிட்டது. தற்காலத்தில் மிகப்பழமையான, 2000 வருடங்களுக்கு முற்பட்ட கோவில்கள் இல்லை என்பதால் அதற்கு முன்பு கோவில்கள் கிடையாது என்பது ஏற்புடையது அல்ல.

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்வது மிகவும் கடினம்தான். நமக்கு உள்ள ஒரே வழிகாட்டி “இலக்கியம் மற்றும் இலக்கணங்களுமாகும்”. எழுத்துவடிவில் உள்ள இவ்வழிகாட்டிகள்கூட ஒரு குறிப்பிட்ட காலம் வரையே நம்மை வழிநடத்தும், அதற்கு முன்பு இருந்தது என்ன? என்பதை ஒவ்வொருவரின் சிந்தனைக்குற்பட்டது. என்னுடை கருத்தை நீங்கள் ஏற்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை, அதே போன்று உங்கள் கருத்தும். ஆனால் ஒன்றை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம், இந்திய துனைக்கண்டத்தில் உள்ளது போல் அதிக அளவிளான இறைவழிபாட்டுத்தளங்கள் வேறுஎங்கும் அமைக்கப்படவில்லை. அப்படியிருந்தும், நம்மிடம் இருக்கும் மாணிக்கத்தை” மறந்துவிட்டு வெளிநாட்டினரை போற்றும் மடமையைதான் நான் கண்டிக்கவிரும்புகின்றேன்.

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

ஆரோக்கியமான கருத்து பரிமாற்றத்துக்கு நன்றி ஐயா.

//தமிழ் மொழியின் எழுத்துருவில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கருத்தில் கொண்டால் “தமிழ்மொழி” எவ்வாறு மாற்றங்களை மேற்கொண்டு தற்காலத்தில் இருக்கும் நிலையை எய்தியுள்ளது என்பது புலப்படும். இறைவனால் படைக்கப்பட்டிருந்தால் இந்திலை கட்டாயம் ஏற்பட்டிருக்காது. எல்லா மொழிகளும் மனிதர்களால்தான் உருவாக்கப்பட்டுள்ளன, அதனால்தான் ஒவ்வொரு மொழியிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுவருகின்றன.

இறைவனால் படைக்கப்படும் ஒவ்வொரு பொருளும் இவ்வாறு மாற்றம் அடையாது. அவ்வாறு மாறினால் இறைவனின் படைப்பாற்றலில் குறையுள்ளதாகத்தான் கருதமுடியும். அது இறைவனின் திறமையின்மையை உணர்த்தும். ஆகவே மொழியானது நிச்சயம் இறைவனால் உருவாக்கப்பட்டதல்ல.

உலகில் உள்ள அனைத்து மொழிகளும் “இறைவனால்” படைக்கப்பட்டதா? இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு உங்களின் கருத்து வழிவகுக்கும்.//

1) மொழிகள் இறைவனால் தான் படைக்கப்பட்டது.

அதற்கு ஆதாரம் தமிழ் பாரம்பரியத்தை பொறுத்தவரை "நூல்" என்பதற்கான வரையறை.

என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு

நின்றது நூல்என்று உணர் - (அருங்கலச்செப்பு 9)

மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,

உரை படு நூல் தாம் இரு வகை இயல

முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)

பொருள்: மரபாவது நூற்கு இன்றியமையாத இயல்பு. அவ்வியல்பு திரியாத மரபுடைத்தாகி உரைக்கப்படும் நூல்தாம் இருவகைய; முதனூல் எனவும் வழிநூல் எனவும் என்றவாறு.

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதனூ லாகும். (தொல்காப்பியம் - மரபியல் 640)

கருத்து: முனைவன் தனது வினையின் மூலம் விளைந்த அறிவில்லாமல் அவனுக்கு வழங்கப்பட்ட அறிவைக் கொண்டு நூற்கப்படும் நூல் முதல் நூல் ஆகும்.

புனிதநூல்கள்

நான்மறை

ஆரம்பத்தில் நூல் என்றுதான் மறை நூல்கள் அழைக்கப்பட்டன. மேலும் அறிய வாசிக்க

ஆபிரகாமிய மதங்களும் இந்த அக்கருத்தை வழிமொழிகிறன.

இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.

அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக் கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள். (குர்ஆன் 2:31–32)

வெள்ளப் பெருக்குக்குப் பிறகு முழு உலகமும் ஒரே மொழியைப் பேசியது. எல்லா ஜனங்களும் ஒரே விதமாகப் பேசினர். (ஆதியகமம் 11:11)

2) மொழிகள் பிரிந்தால் இறைவனின் படைப்பில் குறை இருப்பதக பொருள் என்று நீங்கள் கூறுவது ஏற்கத் தகுந்தது அல்ல.

காரணம் 1: இறைவன் அனுமதித்தவரை ஒரே மொழிதான் இவ்வுலகில் இருந்து வந்தது. அதன் காரணமாகத்தான் ஒவ்வொரு மொழிக்கும் இடையில் தொடர்பு உள்ளது.

காரணம் 2: மொழிகளை பிரித்ததும் அலல்து பிரிய அனுமத்தித்ததும், கூடுவதும் கூட அனுமதித்ததும் அவனது அனுமதியோடு தான் நடந்தது. பிற மொழி நூல்களை நமது மொழியில் மொழி பெயர்க்க மொழி பெயர்ப்பு விதிகளை தொல்காப்பியம் பேசுவதன் காரணம் என்ன?

மொழிகளுக்கு இந்த பண்புகளை இன்றியவன் கொடுத்து இருக்க மாட்டான் என்று நாம் எப்படி கருதமுடியும்? மனிதர்களின் உள்ளங்களை அறியாத நாம், இறைவனின் உள்ளத்தை அறிந்தது போல பேசுவது தகுமா?

உலகமெங்கும் பேசிய ஒரே மொழியைக் கர்த்தர் குழப்பிவிட்டபடியால் அந்த இடத்தை பாபேல் என்று அழைத்தனர். கர்த்தர் அவர்களை அவ்விடத்திலிருந்து பூமியெங்கும் பரவிப் போகச் செய்தார். (ஆதியாகமம் 11:9)

மேலும் வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும்; உங்களுடைய மொழிகளும் உங்களுடைய நிறங்களும் வேறுபட்டிருப்பதும், அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். நிச்சயமாக இதில் கற்றரிந்தோருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன. (குர்ஆன் 30:22)

3) எல்லா மொழிகளும் இறைவனால்தான் படைக்கப்பட்டதா என்ற கேள்வி எழுவது நியாயம்தான். அவ்வாறு எழுவது பிழை இல்லையே. புதிதாக உருவான மொழிகள் சிலவற்றை சிந்தித்து பாருங்க. உதாரணமாக ஆங்கிலம், ஹிந்தி. இம்மொழிகளை மூலமொழியாக கொண்ட வேதம் இல்லை, மேலும் அதன் சொற்கள் மற்றும் இலக்கணம் போன்றவற்றில் பெரும்பாலானவை அருகில் உள்ள மொழிகளை இணைத்து உருவாக்கப்பட்டவை.

4) ஒவ்வொன்றும் காலத்தை பொறுத்து மாறுகின்றது, மாறும். இது அவனது படைப்பில் உள்ள குறை அல்ல, இதுதான் அவனின் படைப்பின் அடிப்படை. நீங்கள் programing தெரிந்தவராக இருந்தால் காலம் மற்றும் வீவேறு தரவுகளை அடிப்படையாக வைத்து ஒரு result ஐ தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பது எவ்வளவு பெரிய ஆற்றல், எவ்வளவு பெரிய அறிவாளித்தனம் என்பது உங்களுக்கு புரிந்து இருக்கும்.

எப்படி பறவையை பார்த்து விமானம் செய்தானோ அது போல எல்லாவற்றையும் நகல் எடுப்பதை மனிதன் எப்போதும் செய்து கொண்டுதானே இருக்கிறான். மொழி மட்டும் முடியாதா என்ன?

//2. சுமார் இரண்டாயிரத்திற்கு முன்பு கோவில்கள் “கருங்கற்கலால்” உருவாக்கப்படவில்லை. முதலில் மரத்தடியில்தான் இறைஉருவங்கள் வைக்கப்பட்டு வழிபாடு மேற்கொள்ளப்பட்டன. எப்படி ஒருமொழி எழுத்துருவம் பெற ஆண்டுகள் பல ஆகுமோ அதேபோல் கோவில்கள் கட்டமைக்கப்பட்டதும் பல்வேறு காலங்களில் பலவகைகளில் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது. செங்கற்கல் கொண்டு உருவாக்கப்பட்ட கோவில்கள்தான் தற்காலத்தில் உள்ள மிகபழமையானவையாகும். அதற்குமுன் அமைக்கப்பட்ட வழிபாட்டு தளங்கள் காலவெள்ளத்தில் மறைந்துவிட்டது. தற்காலத்தில் மிகப்பழமையான, 2000 வருடங்களுக்கு முற்பட்ட கோவில்கள் இல்லை என்பதால் அதற்கு முன்பு கோவில்கள் கிடையாது என்பது ஏற்புடையது அல்ல.//

அறிவியல் படி முதலில் கற்காலம் தான் ஏற்பட்டது. அதாவது கல்லை தான் மனிதன் திறம் பட பயன்படுத்தினான் என்பது இதன் பொருள். அப்படி இருக்க சிலை கோவில் என்பதெல்லாம் கல்லால் செய்யாமல் மரத்தால் செய்தான் என்பது ஏற்புடையது அல்ல. சமண மடங்கள் கற்களால் தானே செய்யப்பட்டது. அவைகளை பிற்கலத்தில் ஆக்கிரமிப்பு செய்து சிலைகளை வைத்து சிவ கோவில்களாக மாற்றினார்கள் என்கிற செய்தியை நீங்கள் கேள்விப்பட்டது இல்லையா?

//ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வகையான கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் உண்மை என்ன என்பதை தெரிந்து கொள்வது மிகவும் கடினம்தான். நமக்கு உள்ள ஒரே வழிகாட்டி “இலக்கியம் மற்றும் இலக்கணங்களுமாகும்”. //

உருவ வணக்கம் கூடாது என்கிற பல ஆதாரங்கள் இலக்கியத்தில் உண்டே. நாம் வாசிக்கிறோமா ஏற்கிறோமா என்பதுதான் கேள்வி.

//எழுத்துவடிவில் உள்ள இவ்வழிகாட்டிகள்கூட ஒரு குறிப்பிட்ட காலம் வரையே நம்மை வழிநடத்தும், அதற்கு முன்பு இருந்தது என்ன? என்பதை ஒவ்வொருவரின் சிந்தனைக்குற்பட்டது.//

இதற்குத்தான் கல்வி வேண்டும்.

//என்னுடை கருத்தை நீங்கள் ஏற்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை, அதே போன்று உங்கள் கருத்தும். // சத்தியமாக. நமது கருத்துக்களை பகிர்ந்துகொள்வது தவறில்லை என்றும் கருதுகிறேன்.

//ஆனால் ஒன்றை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டியது அவசியம், இந்திய துனைக்கண்டத்தில் உள்ளது போல் அதிக அளவிளான இறைவழிபாட்டுத்தளங்கள் வேறுஎங்கும் அமைக்கப்படவில்லை. அப்படியிருந்தும், நம்மிடம் இருக்கும் மாணிக்கத்தை” மறந்துவிட்டு வெளிநாட்டினரை போற்றும் மடமையைதான் நான் கண்டிக்கவிரும்புகின்றேன்.//

ஆம் நமது மாணிக்கத்தை வாசிப்போம் நான்மறை

பதில் அளியுங்கள்

உண்மையான ஆய்வு செய்யும் திறன் படைத்தவர்களுக்கு கடவுள் இல்லை என்பது நன்கு தெரியும். அகத்தின் பெற்றவர்கள் சிலரே.பெரும்பாலும் மனிதர்கள் கல்வி கற்றாலும் திடமான மனநிலை கொண்டவர்களாக இருப்பதில்லை. பெரும்பாலான மக்களுக்கு வயதானவர்கள் கடந்து செல்ல ஒரு உன்று கோல் தேவைப் படுகிறது. அதனால் பெரும்பாலான மக்களுக்கு கடவுள் என்ற உன்றுகோல் தேவை என்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் நினைத்தார்கள். மக்கள் இப்படி‌ வாழ்ந்தால் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்று ஏழாம் அறிவை உடையவர்கள் அதன் மூலம் அறம், இன்பம், பொருள் வளர்ச்சி பெற்று வருகிறது. எச் செயலிலும் நன்மையும் இருக்கும் தீர்வையும் இருக்கும்.

தமிழர்கள் கடவுள் பக்தியால் ஆரியனுக்கு அடிமை ஆனார்கள். ஆரியன கடவுள் பேரைச் சொல்லி மக்களை முட்டாள் ஆக்கி முடம் ஆக்கி கொண்டு இருக்கிறான். உதாரணமாக மோடி அவர்கள் இராமர் கோயில் குடமுழுக்கு விழா.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களால் உருவாக்கப்பட்ட கடவுள் நம்பிக்கை உன்றுகோல் ஆகாமல், அடிமைகளாக மாற வழிவகுத்ததுள்ளது

5
பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

//உண்மையான ஆய்வு செய்யும் திறன் படைத்தவர்களுக்கு கடவுள் இல்லை என்பது நன்கு தெரியும்//

ஜனாயக நாட்டில் உங்கள் நம்பிக்கையை மதிக்கிறேன். ஆனால் உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. உண்மையான ஆய்வு செய்யும் திறன் உடையவர்களுக்கு கடவுள் உண்டு என்பது நன்கு தெரியும் என்பது என் கருத்து.

//பெரும்பாலும் மனிதர்கள் கல்வி கற்றாலும் திடமான மனநிலை கொண்டவர்களாக இருப்பதில்லை.//

உண்மைதான். ஆனால் கல்வி என்றால் என்ன? என்பதை நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

//பெரும்பாலான மக்களுக்கு வயதானவர்கள் கடந்து செல்ல ஒரு உன்று கோல் தேவைப் படுகிறது. அதனால் பெரும்பாலான மக்களுக்கு கடவுள் என்ற உன்றுகோல் தேவை என்று வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் நினைத்தார்கள். //

எந்த வாழ்வாங்கு வாழ்ந்தவரிடம் சென்று அவர் என்ன நினைக்கிறார் மேலும் அவ்வாறு ஏன் நினைக்கிறார் என்று கேட்டு அறிந்தீர்கள்? அல்லது வேறு யாராவது கேட்டு அறிந்து ஆவணப்படுத்தி உள்ளனரா? அவ்வாறு ஏதும் இல்லை என்றால் எதன் அடிப்படையில் இந்த கருத்து உண்மை என்று நீங்கள் நம்புகிறீர்கள்.

//மக்கள் இப்படி‌ வாழ்ந்தால் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் என்று ஏழாம் அறிவை உடையவர்கள் அதன் மூலம் அறம், இன்பம், பொருள் வளர்ச்சி பெற்று வருகிறது. எச் செயலிலும் நன்மையும் இருக்கும் தீர்வையும் இருக்கும்.//

ஏற்கனவே சொன்னது போல உங்களது நம்பிக்கை உங்களது விருப்பம். ஆனால் அதை மற்றவர்கள் நம்ப ஆதாரம் வேண்டும். எந்த செயலிலும் நன்மையும் உண்டு தீமையும் உண்டு என்கிற உண்மையை எங்கிருந்து பெற்றீர்கள்?

//தமிழர்கள் கடவுள் பக்தியால் ஆரியனுக்கு அடிமை ஆனார்கள். ஆரியன கடவுள் பேரைச் சொல்லி மக்களை முட்டாள் ஆக்கி முடம் ஆக்கி கொண்டு இருக்கிறான்.//

இதற்கு சங்க இலக்கியம் தெய்வத்தை போதிக்கவில்லை என்கிற கூற்று உண்மையா? என்பதை ஆய்வு செய்தால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது. கடவுள் பக்தியால் மனிதர்கள் முட்டாளாகவில்லை, மாறாக கடவுளை அறிய பெறவேண்டிய கல்வியை பெறாத காரணத்தால் முட்டாளாக்கபட்டான்.

//உதாரணமாக மோடி அவர்கள் இராமர் கோயில் குடமுழுக்கு விழா.//

இது அரசியல். இப்போ ராமரிடம் இருந்து ஜெகன்னாத்துக்கு மாறிவிட்டார் மோடி. ஆன்மீகத்தை அரசியல் வாதிகளிடமும், பொய் ஆன்மீகவாதிகளிடமும் படிப்பதால் ஏற்படும் விளைவு. வேதத்தை விட்ட அறமில்லை என்கிறது அனைத்து சமய வேதங்களும். எனவே அதை முதலில் முழுவதுமாக வாசித்து சரியான ஆன்மீக குருவை தேர்ந்தெடுப்பது அவசியம். அவ்வாறு யாரும் இல்லையா? நீங்கள் வேதத்தை மட்டுமே சார்ந்து இருங்கள், எது அறம் எது அறமல்ல என்று அறிந்து இருப்பீர்கள். அந்த கல்வி யாரை நம்புவது யாரை நம்பக்கூடாது என்று உங்களுக்கு வழிகாட்டும்.

//வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர்களால் உருவாக்கப்பட்ட கடவுள் நம்பிக்கை உன்றுகோல் ஆகாமல், அடிமைகளாக மாற வழிவகுத்ததுள்ளது//

வையத்தில் வாழ்ந்தவர்கள் உருவாக்கியது கடவுள் அல்ல. வையத்தை உருவாக்கியது கடவுள். நாம் அடிமைகள் ஆனதற்கு காரணம் அறியாமை. மேற்கத்திய நாத்திக கலாச்சாரத்தை ஏற்ப்பதும் அடிமைத்தனம் தான்.

பதில் அளியுங்கள்

மிகவும் நன்றி. எனது கருத்தை கூறினேன். ஏழ் பிறப்பு இல்லை என்பது கருத்து. ஆறு அறிவு பெற்றவர்கள் மனிதர்கள் என்றும், நம்மை மகிழ்ச்சியுடன் வாழ வழி வகுத்தவர்கள ஏழாம் பிறப்பை பூமியிலேயே அடைந்தவர்கள். அவர்களை தெய்வமாக கருதி வணங்குகின்றோம். கடவுள் என்பது மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ மக்கள் மனதில் விதைக்கப்பட்டது. ஆரியப் பிராமணர்கள் நமது மக்களின் கடவுள் நம்பிக்கையை ஏமாற்று வேலைக்கு ஒரு கருவியாக பயன்படுத்தி, அவர்களுக்கு கல்வி கற்க முடியாத நிலைக்கு ஆளாக்கி உள்ளனர். குறைந்த பட்சம் 1000 ஆண்டுகள் தமிழர்களை மாக்கள் நிலையில் வைத்திருந்தனர் ஆரியப் பிராமணர்கள். ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி புரியாமல் இருந்திருந்தால் தமிழ் மொழி அழிந்திருக்கும்.

2
பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

//மிகவும் நன்றி. எனது கருத்தை கூறினேன்//

ஆரோக்கியமான விவாதத்துக்கு நன்றி.

//ஏழ் பிறப்பு இல்லை என்பது கருத்து.//

கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் எல்லோரும் 7 பிறவி நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல. சொல்ல போனால் வேத அறிவு கொண்டவர்களுக்கு பிறவி ஒன்று என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

எழுமை எழுபிறப்பும்

ஊழ் - விதி - முன் ஜென்மம்

விதி

விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்றால் கடவுளை ஏன் வணங்க வேண்டும்?

//ஆறு அறிவு பெற்றவர்கள் மனிதர்கள் என்றும், நம்மை மகிழ்ச்சியுடன் வாழ வழி வகுத்தவர்கள ஏழாம் பிறப்பை பூமியிலேயே அடைந்தவர்கள். அவர்களை தெய்வமாக கருதி வணங்குகின்றோம்.//

உங்களுடைய "ஏழ் பிறப்பு இல்லை" என்ற கருத்துக்கும் "ஏழாம் பிறப்பை பூமியிலேயே அடைந்தவர்கள்" என்ற கருத்தும் முரண்படுகிறது.

இறந்தவர்களை / முன்னோர்களை வணங்குவது பிழை. ஏன்?

இழைத்த நாள் எல்லை இகவா; பிழைத்து ஒரீஇ,

கூற்றம் குதித்து உய்ந்தார் ஈங்கு இல்லை; - ஆற்றப்

பெரும் பொருள் வைத்தீர்! வழங்குமின்; நாளைத்

'தழீஇம் தழீஇம்' தண்ணம் படும். - நாலடியார்

பொருள்: உனக்கென்று வழங்கியுள்ள நாளின் எல்லையை நீ கடக்க முடியாது. உடலையும் உயிரையும் கூறுபடுத்தும் கூற்றம் குதிக்கும்போது விலக்கிவிட்டுப் பிழைத்து வாழ்ந்தவர் இங்கு யாரும் இல்லை. பயன்படுத்த முடியாத பெரும்பொருள் வைத்திருப்பவர்கள் பயன்படுத்துபவர்களுக்கு வழங்குங்கள். ஒரு நாள் “தழீம் தழீம்” என்னும் ஓசையுடன் உனக்குச் சாவு மேளம் கொட்டப்படும்.

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்

மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம்

"நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும்

எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும். (நல்வழி 10)

பொருள்: இறந்தவரை எண்ணி ஆண்டுக்கணக்கில் அழுது புரண்டாலும், மாண்டுபோனவர் திரும்பி வருவது இல்லை. மாநிலத்தில் உள்ளவர்களே! அழவேண்டா. நமக்கும் அவர் போன அதே வழிதான். எனவே, எனக்கு இவை எதற்கு என்று எண்ணி மற்றவர்களுக்கு உணவிட்டுத் தானும் உண்டு வாழ்ந்துகொண்டிருங்கள். நாம் போகும் வரை இட்டும் உண்டும் வாழ்ந்துகொண்டிருங்கள்.

கறந்த பால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகா

உடைந்து போன சங்கின் ஓசை உயிர்களும் உடல்புகா

விரிந்த பூவும் உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம்புகா

இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே. (சிவவாக்கியம் 48)

//கடவுள் என்பது மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ மக்கள் மனதில் விதைக்கப்பட்டது.//

கடவுள் நன்மை மட்டுமே தருவதாக விதைக்கப்பட்டு இருந்தால் நீங்கள் கூறுவது சரி. ஆனால் இன்பம் துன்பம் இரண்டுமே அவரவர் விதிக்கு ஏற்ப, செயலுக்கு ஏற்ப கடவுளால் தான் வழங்கப்படுகிறது.

இன்ப துன்பம் யாரால் நடக்கிறது?

சோதனை

நமது விருப்பமும் இறைவனின் நாட்டமும்

//ஆரியப் பிராமணர்கள் நமது மக்களின் கடவுள் நம்பிக்கையை ஏமாற்று வேலைக்கு ஒரு கருவியாக பயன்படுத்தி, அவர்களுக்கு கல்வி கற்க முடியாத நிலைக்கு ஆளாக்கி உள்ளனர். குறைந்த பட்சம் 1000 ஆண்டுகள் தமிழர்களை மாக்கள் நிலையில் வைத்திருந்தனர் ஆரியப் பிராமணர்கள்//

பிராமணர்களுடன் உங்களுக்கு நட்பு இருந்தால் நீங்கள் இவ்வாறு கருத மாட்டீர்கள். என்னை பொறுத்தவரை முதல் victim அவர்கள்தான். அவர்கள் அரசர்களை victim ஆக்கினார்கள், அவர்கள் மூலம் நாம் victim ஆனோம்.

ஆனால் இந்த சமூக நிலைக்கு அவர்களின் முன்னோர்கள்தான் காரணம் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதற்காக தற்காலத்தில் உள்ள பிராமணர்களை வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை, அவர்களுடைய கருத்தை மட்டும் வெறுத்தால் போதுமானது.

//ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆட்சி புரியாமல் இருந்திருந்தால் தமிழ் மொழி அழிந்திருக்கும்.//

ஆங்கிலேயே ஆட்சியையும் அதில் இருந்த எல்லீஸ் போன்ற ஒருசில அதிகாரிகளும், அவர்கள் ஏற்படுத்திய பல்கலைக்கழகமும் தான் தமிழின் மீள் எழுச்சி பெற வாய்ப்பு ஏற்ப்படுத்தி தந்தது என்பதில் உடன்படுகிறேன்.

பதில் அளியுங்கள்

மிக்க மகிழ்ச்சி.திருக்குறளை ஆழ்ந்து படிக்க திட்டம் செய்தேன். ஆனால் தொடர் முடியவில்லை. வள்ளுவர் முதல் அதிகாரத்தில் கடவுளை வைத்தார்.

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து

என்று ஏழு பிறப்பை கூறி உள்ளார்.

37 வந்து அதிகாரமாக ஊழ் வினை வைத்துள்ளார்.

இந்த மூன்றும் உண்மையில் இல்லாத ஒன்றை விதைக்கின்றார் என்பதை நினைத்து பொழுதுதான் ஒரு பொறி தட்டியது. வள்ளுவர் ஏழாம் பிறப்பை சார்ந்தவர், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ இம்மூன்றையும் விதைத்த உள்ளார் என்பது.

உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்களே, பிராமண இனமும் இந்தியாவை விட்டு சென்று திரும்பிய இனமே. இன்றும் மூல மொழியான தமிழை அழிக்க நினைக்கும் பிராமணர்கள் மேல் எதிர்ப்பு உணர்வு உள்ளது.

Message has been deleted

அறம் - கற்க கசடற

unread,
Nov 2, 2024, 9:18:43 AM11/2/24
to அறம் கற்க கசடற

சங்க இலக்கியம் 5000 வருடம் கிமு 3000 ! கடைச்சங்க காலமே சரியாக கண்டுபிடிக்கமுடியவில்லை. கிமு 300-கிபி100 மாங்குடி மருதனார் காலம் என்கின்றனர். கிமு 500க்கு முன்பு தமிழர் வரலாறுகள் குறிப்புகள் இல்லை. தமிழ் எழுத்துக்கள் முழுவதுமாக உருவானது கிமு 300. குறிப்புகள் எவ்வாறு கிடைக்கும் ? கோடு முறை கல்வெட்டுகளினாலா ? அலைவிழுங்கிய தென்மதுரை வரலாறுகள் இல்லை.

1
பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

அய்யா ஒவ்வொரு துறையிலும் கண்டுபிக்கபடும் தரவுகள் பல்வேறு அரசியல் காரணங்களால் மக்களின் பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுவதில்லை.

உதாரணமாக கீழடியை மூடவும், அதில் உள்ள தரவுகளை அமெரிக்க காலமரியும் lab க்கு அனுப்ப மத்திய அரசு மறுத்த பொழுது தமிழக அரசு அதை பிறகு முன்னெடுத்தது.

இன்று பயன்படுத்த படும் சில தமிழ் எழுத்துகள் 1921 தொடங்கப்பட்டது. எனவே தற்கு முன் இருந்தது தமிழ் இல்லை என்று கூற முடியாது. அது போல கிமு 300இல் நாம் அறிந்த தமிழ் எழுத்துக்கள் முழு உரு பெற்றது என்பதால் அதற்கு முன் இருந்தது தமிழ் இல்லை என்று ஆகாது. வெறும் எழுத்துருக்கள் தான் மாருகிறதே தவிர மொழி அல்ல.

கீழடியின் காலம் கிமு 600 - 500 வரை

கொடுமணல் கிமு 500 க்கு முந்தைய தொழில் நகரம் ஆகும்.

ஆதிச்சநல்லூரின் காலம் கிமு 905 முதல் 696 வரை

இவைகளை எல்லாம் நீங்கள் கூறியது போல 3000 ஆண்டுகளைத்தான் தொடுகிறது.

ஆனால் தமிழ் பிராமி எழுத்துக்களுக்கும் சிந்துசமவெளியில் கண்டுக்கபட்ட எழுத்துக்களுக்கும் தொடர்பு உள்ளதாக சொல்லப்பட்ட செய்தி நீங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன். சிந்துசமவெளியின் காலம் கிமு 3300.

சரி இதுவும் சங்க காலமும் எப்படி பொருந்தும்? அந்த நூல்கள் எழுதப்பட்ட ஒலைகளின் கார்பன் வயது தான் ஒரே உறுதியான வழி. ஆனால் அந்த நூல் அந்த. ஓலையில் எழுதப்பட்ட காலம்தான் அது இயற்றப்பட்ட காலம் என்பதற்கான ஆதாரம் இல்லை. எனவே அதன் அடுத்த வகை ஆதாரத்தை நோக்கும் பொழுது சிந்துசமவெளி தொல்பொருள் ஆய்வு தரவு என்பது மிக ஆணித்தரமான ஆதாரம்.

அடுத்ததாக உலகின் மூத்த மொழி தமிழ் என்பதும், தமிழின் தாக்கம் உலகமொழில்களில் அனைத்திலும் உள்ளது என்பதும் அறிஞர்கள் பலர் வெளியிடும் தகவல்.

எனவே தமிழ் 5000 வருடங்களுக்கு மேல் என்பது நிரூபணம் ஆகிறது. வரலாற்று காலம் என்பதே வெறும் 5000 தான் என்பதால் தமிழின் வயது 5000 இல் சுருங்கி நிற்கிறது என்பது பல தமிழ் அறிஞர்களின் கருத்து. எனது கருத்தும் அதேதான்.

இந்த நூல்கள் எல்லாம் கடவுள் உண்டு என்று வெறும் வார்த்தையில் சொல்லவில்லை. பல உவமைகள், அறிவியல் உண்மைகள் போன்ற பல்வேறு ஆதாரங்கள் மூலம் கடவுள் உண்டு என்கிறது. நாம் வாசிக்கவில்லை என்பதுதான் ஒரே குற்றம்.

உலகின் பழமையான மொழி உண்மையில் தமிழா அல்லது சமஸ்கிருதமா? விடை தருபவர்கள் தகுந்த சான்றுடன் விடையை முன் வைக்கவும்.


On Saturday, November 2, 2024 at 6:38:58 PM UTC+5:30 அறம் - கற்க கசடற wrote:

ஒரே ஒரு உண்மையை மீண்டும் சொல்ல கடமை பட்டு உள்ளேன்.

மொழி, இடம், மண், உடல், மயிர், பண்பாடு, சமுதாயம், உணவு, எல்லாம் காலப்போக்கில் மாறும் விதத்தில் படைக்கப்பட்டு உள்ளது. அதை கொண்டுதான் அதன் அகவை அளக்கப்படுகிறது.

எனவே இந்த கருத்து பிழை: //இறைவனால் படைக்கப்படும் ஒவ்வொரு பொருளும் இவ்வாறு மாற்றம் அடையாது. அவ்வாறு மாறினால் இறைவனின் படைப்பாற்றலில் குறையுள்ளதாகத்தான் கருதமுடியும். அது இறைவனின் திறமையின்மையை உணர்த்தும்.//

உண்மையை சொல்லப்போனால் marxisam உருவாக காரணம் இப்படி ஒரு தத்துவம் (metaphysics - மாறாநிலை தத்துவம்) மதவாதிகள் மத்தியில் இருப்பதாக கருதியதாக தான். எனவேதான் இயக்கவியல் மற்றும் பொருள்முதல்வாதம் எனும் கொள்கைகளை உருவாக்கி நாத்தீகத்துக்கு சார்புடைய வாதங்களை முன் வைத்தார்.

வாசிக்க பொதுவுடைமை தத்துவம் சியோனிசவாதிகள் அல்லது இல்லுமினாட்டிகளால் உருவாக்கப் பட்டதா?

இப்பொழுது அதே காரணத்தை அதாவது தொடர்ந்து மாறுவது இறைவனின் திறமை இன்மை என்று கூறுகிறீர்கள்.

ஆனால் மாறா நிலை தத்துவம் மாதங்களில் இருப்பது போல பொது மக்களுக்கு தோன்றியதன் காரணம் மறை நூல்களின் கல்வி இல்லாமையானாலும் குறை ஞான மதவாதிகளின் தவறான போதனையினாலும் ஏற்பட்டது.

இவ்வுலகில் "மாற்றம் ஒன்றே மாறாதது" என்பது சமய நூல்களின் அடிப்படை ஆகும்.

Everything changes with respect to time. And language is not exceptional.

அறம் - கற்க கசடற

unread,
Nov 2, 2024, 11:37:31 AM11/2/24
to அறம் கற்க கசடற

அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

ஒரே ஒரு உண்மையை மீண்டும் சொல்ல கடமை பட்டு உள்ளேன்.

மொழி, இடம், மண், உடல், மயிர், பண்பாடு, சமுதாயம், உணவு, எல்லாம் காலப்போக்கில் மாறும் விதத்தில் படைக்கப்பட்டு உள்ளது. அதை கொண்டுதான் அதன் அகவை அளக்கப்படுகிறது.

எனவே இந்த கருத்து பிழை: //இறைவனால் படைக்கப்படும் ஒவ்வொரு பொருளும் இவ்வாறு மாற்றம் அடையாது. அவ்வாறு மாறினால் இறைவனின் படைப்பாற்றலில் குறையுள்ளதாகத்தான் கருதமுடியும். அது இறைவனின் திறமையின்மையை உணர்த்தும்.//

உண்மையை சொல்லப்போனால் marxisam உருவாக காரணம் இப்படி ஒரு தத்துவம் (metaphysics - மாறாநிலை தத்துவம்) மதவாதிகள் மத்தியில் இருப்பதாக கருதியதாக தான். எனவேதான் இயக்கவியல் மற்றும் பொருள்முதல்வாதம் எனும் கொள்கைகளை உருவாக்கி நாத்தீகத்துக்கு சார்புடைய வாதங்களை முன் வைத்தார்.

இப்பொழுது அதே காரணத்தை அதாவது தொடர்ந்து மாறுவது இறைவனின் திறமை இன்மை என்று கூறுகிறீர்கள். பாவம் இறைவன் என்னதான் அவன் செய்ய வேண்டும்?

மாறா நிலை தத்துவம் மதங்களில் இருப்பது போல பொது மக்களுக்கு தோன்றியதன் காரணம் மறை நூல்களின் கல்வி இல்லாமையானாலும் குறை ஞான மதவாதிகளின் தவறான போதனையினாலும் ஏற்பட்டது.

இவ்வுலகில் "மாற்றம் ஒன்றே மாறாதது" என்பது சமய நூல்களின் அடிப்படை ஆகும்.

Everything changes with respect to time. And the language is not an exceptional.


On Friday, November 1, 2024 at 1:24:17 AM UTC+5:30 அறம் - கற்க கசடற wrote:
Reply all
Reply to author
Forward
0 new messages