கிருஸ்தவர்களுக்கு பைபிள் முஸ்லிம்களுக்கு குரான் இந்துகளுக்கு என்ன?

1 view
Skip to first unread message

RUI T

unread,
Nov 21, 2024, 8:16:06 AM11/21/24
to அறம் கற்க கசடற
முதலில் பதிலளிக்கப்பட்டது: கிருஸ்தவர்களுக்கு பைபிள் முஸ்லிம்களுக்கு குரான் இந்துகளுக்கு?
பதாகையை அகற்றுக

தேடல் நிறைந்த ஆழமான கேள்வி.

கிறிஸ்தவம் இயேசுவின் பெயரில் பவுல்-ஆல் உருவானது

இஸ்லாம் முகமது நபி மூலம் உருவானது

இந்து மதம் ஆங்கிலேயர்களால் உருவானது

ஒரு மதம் கடவுளின் தீர்க்கதரிசிகள் இல்லாமல் உருவாக முடியாது. அவ்வாறு உருவானால் அது கடவுளை சென்றடைய சரியான வழி அல்ல.

சைவம் அப்பர் சுந்தரர் மூலர் மாணிக்கவாசகர் இவர்கள் மூலம் உருவானது, ஆதாரம் தேவாரம், திருவாசகம், திருமந்திரம்.

சமணம் முனிவர்கள் மூலம் உருவானது, ஆதாரம் குறள், அறநெறிசாரம், நல்வழி….

இவைகளெல்லாம் தீர்க்கதரிசிகளின் மூலம் கடவுள் கொடுத்தது.. ஆதாரம் தொல்காப்பியம் - முதல் நூல், வழி நூல் தத்துவம், திருமந்திரம் - குரு பாரம்பரியம் அத்தியாயம்.

எனவே ஆன்மீகம்

அறிவு சார்ந்தது

கல்வி சார்ந்தது

ஒழுக்கம் சார்ந்தது

எல்லாவற்றுக்கும் ஆதாரம் உண்டு என்று அறிவது தான் முதல்படி. அதை தேடி ஒதி உணர்ந்து பிறர்க்கு உரைத்து தானும் அடங்குவதுதான் ஆன்மீகம்.

மற்ற மதங்களுடன் போட்டி பொடுவதல்ல ஆன்மீகம்.

Plz Upvote அறம் கற்க கசடற (Learn Virtues)

442 பார்வைகள்
12 ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்
1 பகிர்வைப் பார்வையிடுக
43 பதில்களில் 1
ஆதரவு வாக்கு
12
29
1
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

கருத்திடுக

இந்து மதம் ஆங்கிலேயர்களால் உருவானது என்பது ஏற்புடையதாக இல்லை. இயேசுவும் நபியும் மதங்களை உருவாக்கியது போல் ஆங்கிலேயர்கள் இந்து மதத்தை உருவாக்கவில்லை. ஒரு பொதுவான பெயரை வைத்தார்கள். சிலர் குழந்தைக்கு பெயர் சூட்டும் படி தலைவர்களிடம் கேட்பார்கள். தலைவர்களும் பெயர் வைப்பார்கள். இப்போ அக்குழந்தை அத்தலைவரால் உருவானதா? ,

2
பதில் அளியுங்கள்

// இந்து மதம் ஆங்கிலேயர்களால் உருவானது//

இந்து என்ற "பெயர்" அவர்கள் கொடுத்ததாக இருக்கலாம்!!

ஆனால், அந்த "வழ்வியல் முறை" அவனால் உருவானது அல்ல!! அவன் அப்பன், தாத்தா காலத்துக்கு முன்பே இந்த வாழ்வியல் முறை இந்தியாவில் அல்லது பாரதத்தில் அல்லது இந்த நிலப்பரப்பில் பின்பற்றபட்டது!!

பல்லாயிரம் கோவில்கள் அதற்கு சாட்சி!!

அதனால "இந்து மதம்" ஆங்கிலேயன் " ஆக்குனது" என்ற வாய்க்கு வந்த உளறல் வேண்டாம்!!

1
பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

உணர்ச்சி வசப்படாமல் மீதமுள்ள பதிலை படிங்க சாகோ..

இந்து இல்லை என்றுதான் கூறினேன் தவிர, சைவம் சமணம் வைணவம் இல்லை என்று கூறவில்லை..

கோவில்கள் இருப்பது உண்மைதான், ஆனால் தொல்பொருள் ஆய்வு முடிவின்படி அவற்றின் அகவை 2000 ஆண்டுக்குள்தான். மிகப் பழமையான கோவில் CE- இல் தான் உள்ளதே தவிர, BC- இல் இல்லை.

இவைகளெல்லாம் சேர்ந்ததுதான் இந்து மதம் என்றால் சமணர்களை சைவர்கள் ஏன் களுவில் ஏற்றினார்கள்.. சைவ வைணவ சண்டை 1000 ஆண்டுகளுக்கு முன் அல்ல, இன்றும் மறைமுகமாக நடைபெரும் சண்டைதான்.. ராமாயணமே சைவ வைணவ சண்டைதான்.

இவைகளெல்லாம் முரண்பட்ட வெவ்வேறு மதங்கள் என்பதுதான் அடிப்படை, அதனால்தான் பல ஆயிரம் உயிர்களை காவு வாங்கும் அளவு சண்டைகள் நடைபெற்றது. இதுதான் வரலாறு.

உங்களுக்கு புறியுற மாதிரி சொல்லனும்னா இன்று உள்ள இந்து கிறிஸ்தவ இஸ்லாம் தான் அன்று சமண சைவ வைணவம் ஆகும்.

பதில் அளியுங்கள்

கிறிஸ்தவம் இயேசுவால் உருவானது

இஸ்லாம் முகமதால் உருவானது

விளக்கவும்

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

அடுத்தடுத்த வரிகள் தான் அதற்கு பதில்.

பதில் அளியுங்கள்

கிறிஸ்தவம் இயேசுவால் உருவானது - எப்படி?

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

கிறிஸ்து சொன்ன போதனைகள்தான் பவுல் கிறிஸ்தவத்தை உருவாக்க அடிப்படை ஆதாரம். இயேசுவின் போதனைகள் திரிக்கப்பட்டுள்ளது, அவர் கூறாத சில சேர்க்கப்பட்டுளள்து, சில நீக்கப்பட்டுள்ளது என்பவைகள் வேறு கதை. கிறிஸ்தவம் துவங்க ஆதாரம் இயேசு கிறிஸ்துவின் போதனை என்பதால், கிறிஸ்துவால் என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.

பதில் அளியுங்கள்

ஏசு கிருஸ்து தன்னை ஏற்றுக்கொண்டவர்களை கிருஸ்துவர்கள் என்று பைபிளில் கூறியுள்ளாரா?

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

இல்லை என்றுதானே மேலுள்ள கருத்து கூறுகிறது..

1
பதில் அளியுங்கள்
Tamilan இன் தற்குறிப்பு போட்டோ

இயேசுவும் முகம்மதும் எந்த மதத்தை சேர்ந்தவர்கள்

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

ஆதி மனிதனின் மதம்..

பதில் அளியுங்கள்

இஸ்லாம் முஹம்மது நபியால் உருவாக்கப்பட்டதல்ல. அல்லாஹ் வேதத்தை இவர் மூலமாக மனித குலத்திற்கு இறக்கி அருளி இருக்கிறான்.

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

//இவைகளெல்லாம் தீர்க்கதரிசிகளின் மூலம் கடவுள் கொடுத்தது..//

Reply all
Reply to author
Forward
0 new messages