மறைநூல்கள் தமிழ் அல்லாத மொழிகளிலும் உண்டு என்று தமிழர் பண்பாடு கூறுகிறதா?

3 views
Skip to first unread message

அறம் - கற்க கசடற

unread,
Nov 16, 2024, 12:57:42 AM11/16/24
to அறம் கற்க கசடற
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ
முன்னாள் ஆய்வாளர் வெள்.

கீழ் கண்ட தொல்காப்பிய நூல் விதியானது நூல் என்றாலே மறைநூல் அல்லது வேதம் என்கிறது.

அதிலும் தொடந்து ஒன்றன் பின் ஒன்றாக வரக்கூடியதை வழிநூல் என்கிறது.

அந்த வழிநூலிலும் மொழிபெயர்ப்பு நூல் உண்டு என்கிறது. அதாவது பிற மொழி வேதத்தை தமிழுக்கு மொழிபெயர்த்தால் அதுவும் வேதமாக கருதப்படும் என்று பொருள்.

ஆனால் இங்கே நோக்கத் தகுந்த மிக முக்கியமான விடயம் என்னவென்றல்,

  1. மொழி பெயர்க்கப்படும் அனைத்த்தும் வேதம் அல்ல. ஏனென்றால் முனைவன் (அ) குரு என்றால் யார் என்ற இலக்கணமும் அனைத்து மறை நூல்களிலும் உண்டு. பொய் குரு யார் என்ற இலக்கணமும் உண்டு. எனவே மொழிபெயர்ப்பை செய்பவர் அந்த இலக்கணத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  2. அது முதல் நூலின் இலக்கணத்துக்கு முரண் படக்கூடாது. அதாவது மொழி பெயர்ப்பு நூலும் கூட மனிதனின் அனுபவத்தில் விளைந்ததாக இருக்க கூடாது.

மரபுநிலை திரியா மாட்சிய ஆகி,

உரை படு நூல் தாம் இரு வகை இயல

முதலும் வழியும் என நுதலிய நெறியின (தொல்காப்பியம் 3-639)

பொருள்: மரபாவது நூற்கு இன்றியமையாத இயல்பு. அவ்வியல்பு திரியாத மரபுடைத்தாகி உரைக்கப்படும் நூல்தாம் இருவகைய; முதனூல் எனவும் வழிநூல் எனவும் என்றவாறு.

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதனூ லாகும். (தொல்காப்பியம் - மரபியல் 640)

கருத்து: முனைவன் தனது வினையின் மூலம் விளைந்த அறிவில்லாமல் அவனுக்கு வழங்கப்பட்ட அறிவைக் கொண்டு நூற்கப்படும் நூல் முதல் நூல் ஆகும்.

வழியெனப் படுவ ததன்வழித் தாகும். - (தொல்காப்பியம் - மரபியல் 641)

பேராசிரியர் உரை: என்-னின் வழிநூலாமாறு உணர்த்துதல் நுதலிற்று. வழிநூல் எனப்படுவது முதல்வன் கண்ட நூல்வழியே செய்வது என்றவாறு. அஃதேல், இதனாற் பயன் என்னையெனின், அது வருகின்ற சூத்திரத்தான் விளங்கும்.

கருத்து: வழிநூல் என்பது அதை தொடர்ந்து வருவது. அதாவது அதன் தொடர்ச்சி ஆகும். எனவே அடிப்படை கொள்கையில் மற்றம் இராது. மேலும் முதல் நூலுக்கு பொருந்தும் அனைத்து விதிகளும் வழி நூலுக்கும் பொருந்தும். அதாவது அனுபவமின்றி விளையும் அறிவு என்பது அதன் பொருளாம். ஆனால் முதலுக்கும் வழிக்கும் உள்ள வேற்றுமையானது, அதை எழுதும் முனைவனும், காலமும், சொற்பொருள் மாற்றமும் ஆகும். வேறு வார்த்தைகளில் கூறினால், முதல் நூலின் அடிப்படை கருத்துகளை முழுமையாக ஏற்று, பின்னோன் அவனுக்கு வழங்கப்பட்ட சில வேறுபாடுகளுடன் கூறுவது வழிநூல் ஆகும். - விக்கி

வழியின் நெறியே நால் வகைத்து ஆகும்

தொகுத்தல், விரித்தல், தொகைவிரி, மொழிபெயர்த்து

அதர்ப்பட யாத்தலொடு, அனை மரபினவே. - (தொல்காப்பியம் 3:642&643)

பேராசிரியர் உரை: முதனூலாசிரியன் விரித்துச் செய்ததனைத் தொகுத்துச் செய்தலும், தொகுத்துச் செய்ததனை விரித்துச் செய்தலும், அவ்விருவகையினையும் தொகைவிரியாகச் சொல்லுதலும், பிற மொழிப் பனுவலை மொழிபெயர்த்துத் தமிழ்மொழியாற் செய்தலும் என்றவாறு.

கருத்துதொல்காப்பியம் வழிநூலை

    • முதல்நூலைத் தொகுத்துச் சுருக்கமாகக் கூறும் நூல்,
    • முதல்நூலை விரிவுபடுத்திக் கூறும் நூல்,
    • முதல்நூலைத் தொகுத்தும் விரித்தும் கூறும் நூல்,
    • முதல்நூலை மொழிபெயர்த்துக் கூறும் நூல்

என மேலும் நான்கு வகைப்படுத்திப் சொல்கிறது. நூல்களுக்கு இடையில் உள்ள வேற்றுமையையும் ஒற்றுமையையும் நாம் இவ்வகைகள் மூலம் ஆரியப் பெறுகிறோம்.உதாரணமாக, இரண்டடி குறளை ஓரடியில் சொன்னது ஆத்திச்சூடி (தொகுத்தல்), அதை நான்கடியில் (விரித்தல்) சொன்னது நாலடியார், சிலதை சுருக்கியும் சிலதை விரித்தும் சொன்னது திருமந்திரம் (தொகைவிரி). இதேபோல் அனைத்து மொழி நூல்களையும் ஆய்வு செய்தால் மொழிபெயர்ப்பு நூலும் கிடைக்கப் பெரும்.

முடிவுரை:

எனவே தமிழ் அல்லாத மொழிகளில் வேதம் இருப்பதை தமிழர் பண்பாடு ஏற்கிறது.

அது மட்டுமில்லாமல் உலகில் உள்ள அனைத்து மொழி வேதங்களையும் நான்மறை என்று தமிழர் சமயங்கள் அழைக்கிறது.


தமிழ் அறிந்திருக்கிறார்23ம.நே.

மறைநூல்கள் தமிழ் அல்லாத மொழிகளிலும் உண்டு - என்பது, ஏதோ தமிழில் மறை நூல்கள் உண்டு என்பது போல தொனிக்கிறதே! அப்படி ஏதும் தமிழிலேயே கிடையாதே! இறை நூல்கள் உண்டு; ஆனால், மறை நூல்கள் தமிழில் இல்லை.
எதையும் 'மறை' த்துப் பேசும்/பாடும் பண்பாடு, தமிழில் இருந்ததில்லை!

தமிழர் பண்பாடு கூறுகிறதா? - அப்படி என்றால் என்ன?

தமிழர் பண்பாடு என ஒன்று ஒரு நூலாகவோ, குழுவின் செயல்பாடாகவோ, பதிவாகி, அது அப்படி கூறுகிறதா எனக் கேட்கிறீர்களா?

தமிழர் பண்பாடு என்பது நாம் தொன்று தொட்டு பின் பற்றி வரும் பழக்க வழக்கங்கள், கொள்கைகள், கோட்பாடுகள், ஒழுக்க நெறிகள் - ஆகியவைதான்.
அவை எதிலும், பிற மொழிகள் பற்றி எல்லாம் எதுவும் கூறப்பட்டிருக்காதே?!

<<மறைநூல்கள் தமிழ் அல்லாத மொழிகளிலும் உண்டு என்று தமிழர்களின் பண்டைய நூல்களில் கூறுகிறதா?>> எனக் கேட்டிருந்தால், விடை தேடிச் சொல்லலாம்.

அப்படி எதுவும் தமிழின், தொன்மையான நூல்களில், தமிழிலேயே "மறை நூல்கள்" இருந்ததற்கான பதிவுகள் ஏதும் இல்லை; வேத மொழி/ ஆரிய மொழி/ பிராமணர் மொழி/ வடமொழி எனப் பல பெயர்களில் அழைக்கப்பட்ட 'சமஸ்கிருத' த்தில் மட்டும்தான் 'வேத' நூல்கள் உண்டு எனவும், அவைகளையே 'மறை' நூலகள் எனத் தமிழ் நூல்கள் பலவும் குறிப்பிட்டுள்லதையும் நாம் காணலாம்.

நான்கு வேதங்கள் என்ன்பதையே, "நான்மறை" என்ற பெயரால் பல இடங்களில் சங்க நூல்கள் முதல், பின்னர் வந்த சமய/ பக்தி நூல்களிலும் உள்ளன.

வேறு எந்த மொழியிலும் 'மறை' நூல்கள் உண்டு எனத் தமிழில், தமிழ் நூற்களில் எந்தவித ஆதாரமும் இல்லை.

70 பார்வைகள் மூலம் பதில் கோரப்பட்டது
3 பதில்களில் 1
ஆதரவு வாக்கு
6

அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

கருத்திடுக
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

இக்கட்டுரைகள் உங்களுக்கு ஒரு சில தகவல்களை தரலாம்

தமிழில் வேதம் உண்டா?

நான்மறை

தமிழர் வேதம்

புனிதநூல்கள்

வேதங்களை ஒப்பு நோக்க வேண்டும்!

பொய் நூல் உண்டா?

தமிழ் அல்லாத மொழிகளிலும் மறைநூல்கள் உண்டு என்று தமிழர் பண்பாடு கூறுகிறதா?

பண்டைய தமிழ் நூல்கள் கூறும் பண்பாட்டை தமிழர் பண்பாடு எனக் கொள்ளலாம் என்று கருதினேன்.

பதில் அளியுங்கள்

மிக்க நன்றி.

தற்போதுதான், தங்களது
<<
தமிழில் வேதம் உண்டா?>>

வாசித்தேன். மிக நன்றாக இருந்தது.

ஆனாலும் 'வேதம்' என்பதற்கு சரியான பொருளில், தமிழில் எந்த நூலும் இல்லை என்பதே என் வாதம்.

வேதம் என்பது, 'இறை' நேரடியாக மந்தருக்குற்ற்ஹ் தந்ததாக இருக்க வேண்டும்; அது, பிற பொது மக்களுக்குப் புரிபடாமல், 'மறை' ந்தே இருக்க வேண்டும்.

வடமொழியில் 'வேதம்' எனப்பட்ட அந்த நாலு வேதங்களின் தொகுப்பும் (ரிக், யஜூர், ஸாம, அதர்வ முதலிய), பிற பொது மக்களுக்குப் புரிபடாமலும், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறு குழுவினரிடையே மட்டும் பகிரப்பட்டு வந்தும் இருந்தபடியால், அவற்றை 'மறை' என்ர தமிழ்ப் பெயரால் குறியீடாக உணர்த்தினார்கள்.

அப்படி, 'மறை' க்கப்பட்டு வந்த நூல் எதுவுமே தமிழில் இல்லையே! அதே போல், இறைசக்தி நேரடியாக மனிதனுக்குத் தந்ததாக எந்த நூலும் இல்லையே!
(சில தமிழ் பக்தி நூல்களைப் பிறர் அப்படிக் குறிப்பிட்டாலும், முதலில் படைத்த மனிதர் இருந்துள்ளார் எல்லாவற்றிற்கும் என்பதே உண்மை.

அதனால்தான், தமிழில் 'வேதம்' என, 'மரை' என ஒன்றையும் குறிப்பிட இயலாது என்பது என் கருத்து..

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

//தற்போதுதான், தங்களது
<<
தமிழில் வேதம் உண்டா?>>

வாசித்தேன். மிக நன்றாக இருந்தது.//

மிக்க நன்றி.

//ஆனாலும் 'வேதம்' என்பதற்கு சரியான பொருளில், தமிழில் எந்த நூலும் இல்லை என்பதே என் வாதம்.

வேதம் என்பது, 'இறை' நேரடியாக மந்தருக்குற்ற்ஹ் தந்ததாக இருக்க வேண்டும்; அது, பிற பொது மக்களுக்குப் புரிபடாமல், 'மறை' ந்தே இருக்க வேண்டும்.//

வேதம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்கிற வரையறையை எங்கிருந்து பெற வேண்டும். வேதத்திலிருந்தான் என்று நான் கருதுகிறேன். அதில் நீங்கள் முரண்பட மாட்டீர்கள் என்றும் கருதுகிறேன். அவ்வாறு எனது கருத்தோடு நீங்கள் ஒத்துப் போனால் கீழ்கண்ட கட்டுரை உங்களுக்கு உதவலாம்.

வேதத்தை ஓதி வீடு பெற முடியுமா?

//வடமொழியில் 'வேதம்' எனப்பட்ட அந்த நாலு வேதங்களின் தொகுப்பும் (ரிக், யஜூர், ஸாம, அதர்வ முதலிய), பிற பொது மக்களுக்குப் புரிபடாமலும், ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சிறு குழுவினரிடையே மட்டும் பகிரப்பட்டு வந்தும் இருந்தபடியால், அவற்றை 'மறை' என்ர தமிழ்ப் பெயரால் குறியீடாக உணர்த்தினார்கள்.//

நான்மறை என்றால் என்ன என்கிற இந்த பதிவு உங்கள் வடமொழி வேதம் பற்றிய பார்வையை மாற்றலாம்.

மக்களுக்கு தெரியாமல் மறைப்பதால் மறைநூல் என்றால் அப்படிப்பட்ட நூலின் அவசியம் என்ன? அது எப்படி புனிதமானதாக போற்றத்தகுந்ததாக கருதப்படும்?

மக்களின் கண்களுக்கு தெரியாமல் உள்ள கடவுள், சொர்க நகரம், பாவ புண்ணியம், தேவர்கள், அசுரர்கள், விதி, கடந்த கால வரலாற்று உண்மை, வருங்கால முக்கிய நிகழ்வுகள் பற்றிய தீர்க்கதரிசனங்கள் ஆகிய மறைவானவற்றைப் பற்றிய செய்திகளை கூறும் நூலே மறைநூல் என்று அழைக்கப்பட்டது.

//அப்படி, 'மறை' க்கப்பட்டு வந்த நூல் எதுவுமே தமிழில் இல்லையே! அதே போல், இறைசக்தி நேரடியாக மனிதனுக்குத் தந்ததாக எந்த நூலும் இல்லையே! (சில தமிழ் பக்தி நூல்களைப் பிறர் அப்படிக் குறிப்பிட்டாலும், முதலில் படைத்த மனிதர் இருந்துள்ளார் எல்லாவற்றிற்கும் என்பதே உண்மை.//

இறைவன் மனிதனுக்கு தந்ததுதான் நூல் எகிற இலக்கண குறிப்பை தமிழத் தவிர வேறு நூல்களிலும் தெளிவாக நான் கண்டதில்லை.

என்றும் உண்டாகி இறையால் வெளிப்பட்டு

நின்றது நூல்என்று உணர் - (அருங்கலச்செப்பு 9)

வினையின் நீங்கி விளங்கிய அறிவின்

முனைவன் கண்டது முதனூ லாகும். - (தொல்காப்பியம் மரபியல் 640)

வழியெனப் படுவ ததன்வழித் தாகும். (தொல்காப்பியம் மரபியல் 641)

சதாசிவம் தத்துவம் முத்தமிழ் வேதம்

மிதாசனி யாதிருந் தேனின்ற காலம்

இதாசனி யாதிருந் தேன்மன நீங்கி

உதாசனி யாதுட னேஉணர்ந் தேமால். - திருமந்திரம் 149.

மனிதர்கள் மூலமாக நூல்கள் மக்களுக்கு வெளிப்படுவதால், இறைவன் நேரடியாக கொடுத்ததாக உங்களால் ஏற்க முடியவில்லை என்று கருதுகிறேன்.

கடவுள் முதலில் நேரடியாக மனிதர்களுக்கு காட்சி தருவாரா? என்று கேட்டால் கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பதுதான் நிதர்சனம். அபப்டித்தான் அனைத்து சமய நூல்களும் அதாவது நான்மறைகளும் சொல்கிறது.

அப்படி என்றால் யார் மூலமாக நூல்கள் வரும்? மனிதர்களுக்கு குருவாக தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்க்கதரிசிகள் (அ) முனைவர்கள் (அ) ரிஷிகள் (அ) சித்தர்கள் (அ) குருக்கள் (அ) மேசாயாக்கள் (அ) நபிமார்கள் மூலம் தான் கிடைக்கப்பெறும். அதில் உண்மையான குரு யார்? பொய் குரு யார்? என்பனவெல்லாம் வேதங்களில் விவரிக்கப்பட்ட உள்ளது. இது போல பல வழிகாட்டுதல்கள் உள்ள மறைநூல்களை மறைத்ததால், நாம் மறந்ததால் பெரும் குழப்பத்துக்கு உள்ளாகி உள்ளோம்.

//அதனால்தான், தமிழில் 'வேதம்' என, 'மறை' என ஒன்றையும் குறிப்பிட இயலாது என்பது என் கருத்து..//

வாய்மை எனும் இந்த நூல் முழுமை பெறவில்லை. இன்னும் எழுதப்பட்டு கொண்டு உள்ளது. இதை அப்படியே நீங்கள் ஏற்கவேண்டும் எனும் கட்டாயம் இல்லை. ஆனால் உங்களுடைய சில கருத்துக்களை இது விவாதிக்கலாம். முடிந்தால் வாசியுங்கள். நன்றி.

பதில் அளியுங்கள்

மீண்டும் மிக்க நன்றி, ஐயா.

எனது எதிர் வாதங்களுக்கு ஆகப் பொறுமையாக விடைகள் தந்தமைக்கு என் நன்றிகள் பல.

'இறை சக்தி தந்த' தாக நம்பினார்களே ஒழிய, 'தான் படைத்தோம் என்ற அகந்தை வந்து விடக் கூடாதே என்பதற்காக அப்படிக் கூறினார்களே ஒழிய, உண்மையில் எந்தக் கடவுளும்/இறை சக்தியும் மனிதர்களுக்கு என எதையும் தனிச் சிறப்பாகத் தந்ததில்லை.

வடமொழி வேதங்கள் ஆரியர்களூக்கு இடையே மட்டும், அவர்களுடைய தனி மொழியில், தலைமுறை தலைமுறையாகக் 'கடத்தப்பட்டு' வந்தது. அதுவும் ஆண் வாரிசுகள் மூலம் மட்டுமே (மிக அபூர்வமாக சில வெண்கள் மூலம்).

அந்த மொழிக்கு வேத மொழி, தேவ மொழி (தேவ பாஷா) என்று அவர்களே பெயரிட்டுக் கொண்டார்கள்.

அப்படி அவர்களுக்கு இடையே மட்டும் பரவி வந்த, ஆரியரல்லாத பிற யாரோடும் பகிர்ந்து கொள்ளாமல் பறைக்கப்ட்ட, காரணத்தால் மட்டுமே அவைகளுக்கு 'மறை' எனற பெயர் வந்தது.
(பின்னாளில் எழுத்துருக்கள் வந்தபின், அவை பதிவு செய்யப்பட்டு பலருடனும் பகிர்ந்து கொண்டது வேறு வரலாறு).

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

//எனது எதிர் வாதங்களுக்கு ஆகப் பொறுமையாக விடைகள் தந்தமைக்கு என் நன்றிகள் பல.//

நன்றி ஐயா. இது விவாதமாக மாறும் சமயத்தில் இந்த உரையாடலை நாம் முடித்துக்கொள்வோம். ஆரோக்கியமான கருத்து பரிமாற்றமாக நான் இதை பார்க்கிறேன், அதனால் பதில் எழுதுகிறேன்.

//'இறை சக்தி தந்த' தாக நம்பினார்களே ஒழிய, 'தான் படைத்தோம் என்ற அகந்தை வந்து விடக் கூடாதே என்பதற்காக அப்படிக் கூறினார்களே ஒழிய, உண்மையில் எந்தக் கடவுளும்/இறை சக்தியும் மனிதர்களுக்கு என எதையும் தனிச் சிறப்பாகத் தந்ததில்லை.//

இப்படி ஒரு கருத்து சமகாலத்தில் மட்டுமல்ல எப்பொழுதும் ஆங்காங்கே இருந்து வந்துள்ளது. எனவே நீங்கள் இவ்வாறு சிந்திப்பதில் ஆச்சரியம் இல்லை. இந்த கருத்தை சரிகான நமக்கு கீழ்கண்ட கேள்விகளுக்கு விடை தெரிந்து இருக்க வேண்டும்.

  1. இறை சக்தி என்ற ஒன்று இருப்பதை நீங்கள் நம்புவதாக நான் புரிந்து கொண்டு இந்த கேள்வியை முன் வைக்கிறேன் - எல்லாவற்றையும் படைத்து கட்டுப்படுத்தும் ஒரு இறை சக்தி இருந்தால், அது மனிதர்களுக்கு வழிகாட்டாமல் விட்டுவிடுமா? அல்லது அவ்வாறு வழிகாட்டும் நூல்களை மக்களுக்கு தேவைப்படும் பொழுது கொடுக்கும் அறிவோ ஆற்றலோ அந்த இறை சக்திக்கு இல்லை என்று கருதுகிறீர்களா?
  2. இறைவன் இல்லை என்று நீங்கள் கருதுவதாக இருந்தால் - எல்லோரும் புனிதமாக கருதும் ஒரு நூலை எழுதியதற்கான அகந்தை இருப்பதில் என்ன தவறு? இறைவன் இல்லை என்றால் அகந்தை இருப்பதில் என்ன தவறு? இறைவன் இல்லை என்றால், இந்த சரி தவறுகளை யார் எப்படி வரையறுத்து கூறினார்கள்? அவர்கள் கூறியபடி அந்த செயல்களின் பண்புகளும் விளைவுகளும் இருப்பதன் காரணம் என்ன? உதாரணமாக ஒருவன் பெருமை பட்டால், பொறாமை பட்டால் அது ஏன் அவருக்கும் அவரை சூழ உள்ளவர்களுக்கும் துன்பமாய் முடிகிறது? இந்த செயல்களுக்கு இப்படிப்பட்ட பண்பை கொடுத்தது யார்?
  3. இறைவன் தனி சிறப்பை எந்த மனிதனுக்கும் தரவில்லை என்று யார் கூற வேண்டும்? அதற்கான அதிகாரம் யாரிடத்தில் உள்ளது? அல்லது இந்த செய்தியை யார் சொன்னால் அது உண்மையான தகவலாக இருக்கும்? இறைவனிடம் இருந்து வந்த நூல்கள் என்று சொல்லப்படுபவைகளில் இது இறைவனிடம் இருந்துதான் வந்தது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதா? இதை எல்லாம் ஆய்வு செய்த பின்புதான் இந்த முடிவுக்கு நாம் வந்தோமா?
  4. ஒவ்வொரு மனிதரும் அவரவர் பண்புகளுக்கும் செயலுக்கும் ஏற்ப தரத்தில் வெறுபடுவது இயல்பு தான். பிறப்பில் தான் உயர்வு தாழ்வு இல்லையே தவிர, அவரவர் செயல் அவரவரை உயர்த்தவோ தாழ்த்தவோ செய்யும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை. அப்படிப்பட்ட ஒருவரை இறைவன் தேர்ந்தெடுக்க வில்லை என்றோ அல்லது தேர்ந்தெடுக்க கூடாது என்றோ இறைவனுக்கு நாம் கட்டளை பொட முடியுமா?

//வடமொழி வேதங்கள் ஆரியர்களூக்கு இடையே மட்டும், அவர்களுடைய தனி மொழியில், தலைமுறை தலைமுறையாகக் 'கடத்தப்பட்டு' வந்தது. அதுவும் ஆண் வாரிசுகள் மூலம் மட்டுமே (மிக அபூர்வமாக சில வெண்கள் மூலம்).//

வேதங்கள் மனிதர்களால் எழுதப்பட்டு இருந்தால், அதை தொடர்ந்து கடத்த வேண்டிய அவசியம் என்ன? இன்று அதை விட சிறப்பான வேதம் ஒன்றை எழுத எல்லா வாய்ப்பும் உண்டு அல்லவா?

//அந்த மொழிக்கு வேத மொழி, தேவ மொழி (தேவ பாஷா) என்று அவர்களே பெயரிட்டுக் கொண்டார்கள்.//

  1. அவர்கள் அதை தேவ பாஷை என்று அழைக்க இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். i) அவர்கள் பல்வேறு மொழிகள் பேசும் இடத்தில் இருந்து இருக்க வேண்டும் அல்லது ii) பல மொழிகள் பேசும் இடத்தை காலவோட்டத்தில் கடந்து வந்து இருக்க வேண்டும். ஒரே இடத்தில் ஒரே காலத்தில் பல மொழி உருவாகி இருக்க வாய்ப்பு இல்லை. எனவே ஸ்டெப்பி புல்வெளியில் இருந்து ஆயிரம் ஆண்டுகளில் இந்தியாவுக்கு புலம் பெயர்ந்தனர் என்கிற தியரி சரியாக இருக்க வாய்ப்பு உண்டு. மேலும் நான்மறை என்ற கட்டுரையை நீங்கள் படித்து இருந்தால் உங்களுக்கு ஒரு வேளை புறிந்து இருக்கலாம், அதாவது வடக்கு என்பது இமயமலைக்கு மேல் உள்ளது ஆகும். அது இந்தியாவின் வடபகுதி அல்ல. எனவே வட மொழி என்பது இன்றைய இந்தியாவுக்கு வெளியில் பேசப்பட்ட மொழி ஆகும். அதனாலதான் சமஸ்கிருதத்திற்கும் ஐரோப்பிய மொழிகளுக்கும் இடையில் நெருங்கிய ஒற்றுமை உண்டு. இந்தியாவில் இமயத்தில் பேசப்படும் கஷ்மீரிதான் சமஸ்கிருதத்திற்கு நெருக்கமனதாகும். இன்று இந்திய மொழிகளில் சமஸ்கிருதத்தின் தாக்கம் ஆரிய குடியேற்றத்துக்கு பிறகு ஊடுறியவைகள் ஆகும். காரணம் அவைகளில் சம்ஸ்கிருத சொல் இருக்குமே தவிர இந்திய மொழிகளில் சமஸ்கிருத இலக்கணம் இருக்காது.
  2. வேதம் என்பது எமது கூற்றின்படி இறைவன் கொடுத்தது என்று இருந்தாலும், அல்லது உமது கூற்றின்படி மனிதர்கள் எழுதி இருந்தாலும் அது ஏன் சமஸ்கிருதத்தில் மட்டும் இருக்க வேண்டும், மற்ற மொழிகளில் இறைவன் கொடுத்து இருக்க மாட்டான் என்றோ அல்லது வேதம் எழுதும் அளவுக்கு அறிவுள்ளவர்கள் மற்ற மொழிகளில் இருந்திருக்கவில்லை என்று கருதுவது எப்படி சரியான நிலைப்பாடாகும்?
  3. எத்தனை மொழிகளை ஆய்வு செய்து அவைகளில் வேதம் இல்லை என்ற முடிவுக்கு இந்த சமஸ்கிருத ஆதரவாளர்கள் வந்தார்கள்?

//அப்படி அவர்களுக்கு இடையே மட்டும் பரவி வந்த, ஆரியரல்லாத பிற யாரோடும் பகிர்ந்து கொள்ளாமல் பறைக்கப்ட்ட, காரணத்தால் மட்டுமே அவைகளுக்கு 'மறை' எனற பெயர் வந்தது. (பின்னாளில் எழுத்துருக்கள் வந்தபின், அவை பதிவு செய்யப்பட்டு பலருடனும் பகிர்ந்து கொண்டது வேறு வரலாறு).//

ஆரிய வேதத்தை ஆரியரல்லாதோரோடு பகிர வேண்டிய அவசியம் என்ன? வேதம் என்பது இல்லாத பழமையான (1500 வயதுக்கு மேல் உள்ள) மொழிகள் எதுவும் இல்லை எனலாம். வேறுவகையில் சொள்ளுவதாக இருந்தால் 1500 ஆண்டுகள் பழமையான எல்லா மொழிக்கும் வேதம் வழங்கப்பட்டு வந்துள்ளது.

உதாரணமாக, முஸ்லிம்கள் எந்த நாட்டில் இருந்தாலும் அரபி கற்கவேண்டும் என்று போதிக்கப்படுகிரர்கள். ஏன்? தேவ பாஷா என்பதாலா? இல்லை. அப்பொழுதுதான் ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ற வழிகாட்டுதலை கொடுக்கும் வேதத்தை அதன் மொழியிலேயே பாதுகாக்கவும், வேதத்தை படித்து அறியவும், பின்பற்றவும், பொருள் திரியமல் இருக்கவும், அந்த மொழியை கற்பது அவசமியமாகிறது. இதே காரணங்களால் சம்ஸ்கிருதம் புனிதபடுத்தப்பட்டு இருக்கலாம், புலம் பெயர்தல் காரணமாக பெசுமொழியாக வேறு ஒன்றை பேச வேண்டிய நிர்பந்தம் இருந்தாலும் அவர்களின் வேதம் சமஸ்கிருதத்தில் இருந்ததால் அதை பாதுகாக்க அவர்கள் அதை தேவ பாஷா என்று கூறியிருக்கலாம். எல்லாமே "லாம்" தான். ஏனென்றால் சம்ஸ்கிருதம் புனிதமானது என்று வேதத்தில் கூறியிருந்தால் அதை சிந்திக்கலாம் அல்லது ஆய்வு செய்யலாம்.

முடிவாக,

நீங்கள் கூறும் "மறை" என்பதற்கான விளக்கம், மனிதர்கள் வேதத்தை எழுதினார்கள் என்கிற கருத்து எல்லாமே நான்மறைகளை வாசிக்காததால் உண்டாவது என்று கருதுகிறேன். ஏனென்றால் உங்களைப்போல பலர் அறிவில் சிறந்ததோராக இருந்தும், வேதத்தை வாசிக்காமல், ஆய்வு செய்யாமல் இது போன்ற கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.

வேதம் என்பது தான் அறம், அதை தினசரி ஒத வேண்டும், அதை புரிந்துகொள்ள வேண்டும், அது பிறருக்கு உபதேசம் செய்ய வேண்டும், தானும் பின்பற்றவெண்டும், வேதத்தில் விரும்பியதை பின்பற்றி விரும்பததை விட்டுவிடக்கூடாது, வேதம் சொர்கம் செல்ல வழியை சொல்லும், உலக வேதங்கள் அனைத்தும் ஒரே இறைவனிடம் உள்ள ஒரே புத்தகத்தின் பகுதிகள் என்று அனைத்து சமய வேதங்களும் சொல்கின்றது. (இதே வேதங்கள் பொய் தெய்வம், பொய் குரு, பொய் வேதம் மற்றும் பொய் சமைங்களின் வரையரையும் தருகிறது.)

அதோடு மட்டுமல்லாமல் மனித அறிவுக்கு எட்டாத பல அறிவியல் உண்மைகளை, மறைவான செய்திகளை, எதிர்கால தீர்க்க தரிசனங்களை வேதங்கள் கூறுவதன் மூலம் அது இறைவனிடத்தில் இருந்து தான் வந்தது என்று நிறுவுகிறது.

மறைவான விடயங்களில் சில உதாரணங்கள்: (இறைவனின் பண்புகள், குருக்கள், அமரர்கள், புனிதனூல்கள் பற்றி வாசிக்க : வாய்மை )

சமயங்கள் கூறும் அறம் - சில உதாரணங்கள்: (கொலை கொள்ளை திருட்டு பிறன்மனை நோக்குதல் போன்ற எல்லோரும் அறிந்த ஒற்றுமைகளை வாசிக்க : கர்மா)

கடவுள், அதன் பண்புகள், சொர்க நரகம், அறம் என்பனவற்றில் பெரும்பாலனவைகள் பல்வேறு சமய நூல்களில் ஒன்றுபோல இருப்பதன் காரணம் என்ன? அவைகளின் காலமும் சூழ்நிலையும் மொழியும் அதை கூறிய குருவும் வேறுபட்ட பொழுதும் இவைகள் எப்படி ஆச்சில் வார்த்தார் போல ஒரே அறத்தை பேசுகின்றது? ஒவ்வொரு தலைப்பிலும் ஒப்பீடு ஆய்வு செய்யும் பொழுது ஆச்சரியப்பட்டு போவீர்கள், இந்த கேள்வி உங்களுக்கு மிக மிக ஆழமாக தொன்றிகொண்டே இருக்கும். இதில் என்ன ஆச்சரியம் என்று நீங்கள் கேட்டால், நீங்கள் வேதங்களை ஆய்வு செய்யவில்லை என்று பொருள்.

வேதங்களை ஒப்பு நோக்க வேண்டும்!

நான் முன்பு கொடுத்த link களை வாசிக்கவில்லை என்று உங்களின் கருத்துகளில் இருந்து தெரிகிறது, ஒருவேளை முழுமையாக வாசித்து இருந்தால் ஒருவேளை உங்களது பதில் வேறுமாதிரி இருந்து இருக்கும். இந்த பதிலை நீங்கள் பொறுமையாக இதுவரை படித்தீர்கள் என்றால் நீங்கள் மிக பொருமைசாலி என்று நான் நிச்சயமாக ஏற்றுகொள்வேன். நன்றி.

பதில் அளியுங்கள்

பொறுமையாக, முழுவதையும் படித்தேன், ஐயா. மீண்டும் மிக்க்ச நன்றி.

நீங்கள் இதில் கூறியுள்ள சில கருத்துக்களுக்கு, என் தரப்பு கருத்துகளை விரைவில் பதிகிறேன்

Reply all
Reply to author
Forward
0 new messages