கேள்வியில் உள்ள தரவும் உண்மை இல்லை, நோக்கமும் உண்மை இல்லை.
என்னென்ன தரவு பிழை உண்டு? ஆப்ரஹாம், யூதர், தேவர் ஆகியவைகளுக்கான வரையறை கூட அறியாதது.
//யூதனாகிய ஆபிரஹாம்//
ஆப்ரஹாம் யூதர் அல்ல.
வாசிக்க: யூதர்களின் பூர்வீகம்?
//யூதனாகிய ஆபிரஹாம் இவர்களுக்கு தேவ தூதன் அவன் பரம்பரையில் வந்த எல்லோரும் தேவதூதர்கள்//
ஆப்ரஹாம் தேவதூதர் அல்ல, அவர்கள் பரம்பரையில் உள்ளவர்களும் தேவதூதர்கள் அல்ல.
ஆப்ரஹாம் ஒரு மனிதர். அளவிலும், ஆற்றலிலும், பண்பிலும், செயலிலும் மனிதர்கள் வேறு தேவர்கள் வேறு.
வாசிக்க: தேவர்கள் யார்? தேவர்களை வணங்ககூடாது!
நோக்கத்தில் என்ன பிழை? இவர்களை முட்டாளாக சித்தரிப்பது.
//ஆனால் யூதர்கள் மட்டும் அவர்களுக்கு எதிரிகள்😁😁//
யூதர்களில் நலலவர்களை மதிக்கவோ நல்லமுறையில் நடத்தவோ நபிகள் காலத்தில் இருந்து இவர்கள் தவறவில்லை.
இவர்களில் உள்ள கெட்டவர்களை வெறுத்து ஒதுக்கவோ, கொலை தண்டனை கொடுக்கவோ இவர்கள் தாங்கியதில்லை. அதை அவர்களின் வேத வாக்கியமாக கொண்டுள்ளனர்.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்கு சாட்சியாளர்களாக ஆகிவிடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள வெறுப்பு நீங்கள் நீதி செலுத்தாமலிருக்க உங்களைத் தூண்டவேண்டாம். நீதி செலுத்துங்கள்! அதுவே இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன் (அல்குர்ஆன்:5:8)
//இந்த முட்டாள்கள் திருந்த வழி எதுவும் உள்ளதா//
இந்த முட்டாள் திருந்த வாய்ப்பு உண்டு, வெறுப்பை ஒதுக்கி அன்பையும் உண்மை கல்வியையும் தேர்ந்தெடுத்தால்.!!
மேல கொடுத்த லிங்கை வாசித்து இருந்தால் தெரியும் அந்த தரவுகள் எல்லாம் யூதர்களின் தளங்களில் எடுத்தது சகோ. மேலும் எல்லா தத்துவங்களும் ஒரு சமய பார்வையில் நாம் புரிந்துகொள்ள முயல்வதில்லை, மாறாக அனைத்து சமயத்தையும் ஒப்பிட முயன்றுள்ளேன்.
குறைந்தபட்சம் நீங்க கொடுத்த லிங்கையாவது வாசித்தது இருக்க கூடாதா? அது யூதர்களின் வம்சா வழியைப்பற்றி பேசவில்லை. யூதர்களுக்கும் ஆப்ரஹாமிற்கும் தொடர்பு இருப்பதாக மட்டும் தான் சொல்கிறது. அதே கட்டுரையில் இஸ்லாத்துக்கும் ஆப்ரஹாமுக்கும் இடையில் உள்ள தொடர்பும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நீங்க கொடுக்குற லிங்கை கூட முழுதாக படிக்காத பொழுதே உங்களை புரிந்து கொள்ள முடிகிறது.
நம் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாதவரிடம் வாதிடலாமா? அல்லது மௌனம் காப்பது நல்லதா? வாசிப்பு நோக்கம் இல்லாமல் குறை கூறுவதுதான் இலக்கு என்றால் கடந்து செல்வதே நல்லது.