சமயத்தை உண்டாக்கும் உரிமையும் தகுதியும் மனிதனுக்கு இல்லை.
சைவம் தெய்வத்தால் வழங்கப்பட்டது.
இந்து மனிதனால் ஏற்படுத்தப்பட்டது.
எனவே சைவம் தனி மதம், அது இந்து மதமல்ல. இக்காணொளியில் ஆய்வாளர் சாரங்கபாணி சொல்லும் மிக முக்கியமான கருத்துக்கள். https://youtu.be/tg-Pj51tZLg?si=PzLB-uY2kRVI0c2U&t=1378
- இந்து என்பது 50 - க்கும் மேற்பட்ட பிராந்திய சமயங்களை உள்ளடக்கியது
- இந்த 50 மதங்களில் ஒன்றே ஒன்றுதான் வேதாந்தம் - அந்த வேதாந்தம் தான் இந்துமதம் எனபது போல மற்ற சமயங்களை ஒடுக்கும் நிலை உள்ளது.
- 2000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய இந்தியா முழுக்க தமிழ்நாடுதான், அவர்களுக்கு பெயர் நாகர்கள்.
- ஆசிவகம் பரவிய நிலப்பரப்புக்கு பெயர்தான் ஆசியா.
- அருவியாக சிந்தி சிந்தி ஓடியதால் சிந்து நதி என்றும், நாட்டுக்கு இமையாக இருந்ததால் இமயம் என்றும் கூறப்படும் அனைத்த்தும் தூய தமிழ் சொற்கள்.
- சிந்தியாதான் பின்னாளில் இந்தியாவாக அழைக்கப்பட்டது.
- சுதந்திரம் தரும் பொழுது வெள்ளைக்காரர்களுக்கு சமயத்தை ஒழுங்குபடுத்துவதில் பிரச்சனை இருந்தது - குடி வழி சென்றால் சமயம் வேறுபடுகிறது - சமய வழி சென்றால் குடி வேறுபடுகிறது. எனவே இந்தியா என்கிற நிலப்பெயரை சமையப்பெயராக வைத்து விட்டு சென்று விட்டான்.
- ஆரிய வருகைக்கு முன் உள்ள இந்து சித்தாந்த இந்து, பின் வந்த இந்து வேதாந்த இந்து.
- வேதாந்த இந்துக்கள் என்பவர்கள் ஆரியர்கள், ஏனென்றால் அவர்கள் வேதத்தை பின்பற்றுபவர்கள்.
- சித்தாந்த இந்துக்கள் என்பவர்கள் சித்தர்களை அவர்களின் மறைநூல்களை பின்பற்றுபவர்கள்.
- ஆரியர்களின் மொழி என்ன? சமஸ்கிருதத்தில் உள்ள தமிழை நீக்கிவிட்டால் சமஸ்கிருதம் தனித்து இயங்காது. ஆரியர்களின் நாடு எது? பண்பாடு எது? சமய சான்று எது? தத்துவம் எது? ஆரியர்கள் முழுக்க முழுக்கு ஆசீவக தத்துவ கூறுகளைத்தைதான் கூறுகின்றீர்கள்.அசிவகத்தில் உள்ள
- சக்தி வாதத்தை - ஆற்றல் - சிவனியமாகவும்
- பொருளை - மாலியமாகவும்
- கட்டமைப்பை - பிராமவாதமாகவும் பிரித்தது வைத்து உள்ளீர்கள், பின்பு அதை இன்னும் 6 மாதமாக பிரித்தீர்கள்.
- நாம் ஒன்னு செய்ய வேற ஒன்னு நடக்கிறதே என்று சங்கராச்சாரி அனைத்து மதத்தையும் ஒரு குடையின் கீழ் கொன்டுவருவதற்காக ஷண்மதம் என்ற பெயரில் 6 மதங்களை ஒன்று இணைத்தார்.
- சௌரம் - சூரிய வழிபாடு
- கௌமாரம் - முருக வழிபாடு
- காணாதிபத்தியம் -கணபதி வழிபாடு
- வைணவம் - விஷ்ணு வழிபாடு
- சைவம் - சிவ வழிபாடு
- சாக்தம் - சக்தி வழிபாடு
- எப்படி என்றால் ஆறுசமயத்தை ஒன்றினைக்க ஆறு கடவுள்களையும் புராண கதைகள் மூலம் ஒன்றிணைத்தார். சிவனுக்கும் சக்திக்கும் கல்யாணம் செஞ்சு வச்சு, முருகனையும் கணபதியையும் பிள்ளைகளாக்கி, திருமாலை மச்சனாக்கி, சூரியனை வேலையாளாக்கி எல்லோரையும் ஒரே குடும்பமாக்கி ஒரே மதமாக்கினார். இந்த ஆறும் ஆசிவகத்தில் இருந்து பிரிந்த மதங்கள்.
- இப்போ இவர்கள்தான் உலகுக்கே கடவுள்கள். இவர்களுக்கு பிள்ளையும் பிறக்கவில்லை, இவர்களுக்கு பெற்றோர்களும் இல்லை. முருகனுக்கு குழந்தை பிறக்கணுமா இல்லையா? எப்படி தமிழர்களின் கடவுள் கோட்பாடு உட்பட அனைத்தையும் சிந்தித்து இருக்கிறார்கள் பாருங்கள்?
- ஆகமத்துக்கும் ஆரியர்களுக்கும் என்ன தொடர்பு? ஆகம என்றால் ப்ளூ பிரிண்ட் என்று பொருள். ஆக்கு - அமாம் : எப்படி ஆக்குவது? அதாவது எப்படி செய்வது? என்பது தான் ஆகமம் ஆகும். எனவே ஆகமத்துக்கும் பிராமணர்களுக்கும் என்ன தொடர்பு? அவர்களில் கட்டிடம் காட்டுபவன் இருக்கிறானா? குழி வெட்டுபவன் இருக்கிறானா? தச்சன் இருக்கிறானா?
எமது கருத்து
இவை எல்லா மதமும் ஒரே கடவுளை கருப்பொருளாக கொண்ட மறைநூல்கள், சமயங்கள் ஆகும். உங்களுக்கு நீங்களே மனைவி, நீங்களே மகன், நீங்களே மச்சான் என்று கூறினால் அதில் என்ன பொருள் உண்டு? வெவ்வேறு இடத்தில் உங்களுக்கு வேறு பெயர்கள் சூட்டபப்ட்டால் அந்த பெயர் வேறுபாடுகளை கொண்டு உங்களை வேறு ஆளாக கருத முடியுமா?