சிவபெருமானும் நந்தியும் வேறுவேறா? ஒன்றா?
ஆன்மீகம் பொறுத்த வரை வேதங்களும் ஆகமங்களும் தன அடிப்படை. அதற்கு முரணாக மனிதர்கள் கருத்து சொல்வது பாவம். எனவே அகாமத்தை வாசித்து அறிவோம் ஆன்மீக அறிவை.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே
திருமூலர்
//உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்க்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவனே சிவலிங்கம்
கள்ளப் புலன்ஐந்தும் காளா மணிவிளக்கே
திருமூலர்//
சீவனே அதாவது உயிர்தான் சிவ லிங்கம் அதாவது சிவனின் குறியீடு (லிங்கம் = குறியீடு) என்பது சரிதான், அதற்கான ஆதாரம் தான் இந்த பாடல். தமிழ் ஆகமங்களில் இருந்து ஆதாரம் கொடுப்பவர்கள் ஒருவரும் இல்லை. எனவே வேத ஆதாரம் கொடுத்தமைக்கு மிக மிக நன்றி.
//சீவனே சிவனாக இருக்க சீவன் உறையும் இந்த உடலே நந்தி அதுவே சிவ வாகனம்//
இதேபோல, மனித உடல் தான் நந்தி என்பதற்கான திருமந்திர பாடலையும் நந்தி என்பது அவனது வாகனம் என்பதற்கான ஆதாரமாக உள்ள திருமந்திர பாடலையும் கொடுக்கப்பட்டால் மிக உதவியாக இருக்கும்.
லிங்கம் என்பது ஆண் குறி அல்ல, ஏனென்றால் சிவன் பாலினமற்றவன். பாலினம் இல்லாதவனுக்கு ஆண்குறி இருக்க வாய்ப்பில்லை. எனவே குறியீடு என்ற சொல்லை ஆண்குறி என்று திரித்து கூறியது தவறு.
பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்
உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்
அண்ணல் பெருமையை ஆய்ந்தது மூப்பே. - (7ம் தந்திரம், 14 அடியார் பெருமை, பாடல் 4)
சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே வேர்த்துஇரைப்பு வந்தபோது வேதம்வந்து உதவுமோ மாத்திரைப் போதும்முளே மறிந்து நோக்கவல்லிரேல் சாத்திரப்பை நோய்கள்ஏது சத்திமுத்தி சித்தியே. - சிவவாக்கிய சித்தர் 14 வெறும் வேதம், உயிர் காக்காது. உள்ளே இறைவன் இருப்பதை ஒரு நொடியாவது அறிந்தால் நோயே வராது. சக்தியும் முக்தியும் சாத்தியமாகும்.
ஐயா நீங்க குறிப்பிட்ட சிவவாக்கியர் பாடல் சொல்லும் கருத்து என்னவென்றால் வேதத்தை புரியாமல் ஒத கூடாது என்பதாம்.
விளக்கவுரையை இங்கே வாசியுங்கள்.
இறைவன் மனிதனின் உள்ளே இருப்பதை யாரும் மறுக்கவில்லை. அதாவது அவனது பௌதிக வடிவில் இருப்பதாக கருதுவது பிழை. அவனது ஞானத்தால் அவன் எங்கும் நிறைந்து இருக்கிறான். ஆனால் பாவங்கள் அதிகம் செய்யப்படும் பொழுது ஊனுடம்பு அவனது ஆலயமாக இருப்பதில்லை.
ஆனால் நமது உரையாடலில் இங்கே நாம் சரிகன வேண்டிய விடயம்
என்பதற்கு என்ன வேத ஆதாரம்?
வேதத்தை பொருள் அறியாமல் ஓதுவதில் எந்த பலனும் இல்லை. ஏனென்றால் வேதம் என்பதுதான் அறம். அறம் என்றால் நமது தினசரி செயல்களில் சரி எது, பிழை எது என்று வரையறுத்து கூறுவதாகும். நீங்க "வெறும் வேதம் உயிர் காக்காது" வேதம் கூறுவது அல்லாத எதுவும் அறம் அல்ல என்கிறது திருமந்திரம்.
வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள; தர்க்க
வாதத்தை விட்டு, மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே. - (திருமூலரின் திருமந்திரம் 51)பொருள்: வேதம் கூறியது அல்லாமல் வேறு அறம் எதுவும் இல்லை. நாம் ஓதத் தகுந்த எல்லாம் வேதத்தில் உள்ளன. வாதங்களை விட்டு, வேதங்களை ஓதிய அறிஞர்கள் அதன் மூலமே முக்தி அடையும் பேறு பெற்றார்கள்.
இந்த வரையறைகள் வெறும் அறத்தொடு நிற்பதில்லை. இது இறைவன் யார் என்றும் வரையறுத்து கூறுகிறது. ஏனென்றால் இறைவனை மனிதர்களால் உரைசெய்ய முடியாது.
உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்றிருந்தான் புரிசடையோனே (திருமந்திரம் 2915)பொருள்: கடவுளை மனிதர்கள் விருப்பப்படி வரையறுத்து வருணித்து உரை செய்துவிட முடியாது. உரை செய்ய முடியாத ஒன்றை உரை செய்ய முயன்று திணறிப் போய் ஊமையர் போல நிற்பவர்களே, எல்லையற்ற ஒன்றுக்கு கரை எப்படி இருக்கும்? இல்லாத கரையை காண முடியுமா? அவ்வாறு உறையில்லா கடவுளுக்கு உரை செய்ய முடியுமா? அப்படி செய்தால் அந்த உரை கடவுளைக் குறிக்குமா? அலையற்ற தெளிந்த நீரைப்போன்ற அறிவுடையோருக்கு ஒப்பற்றவனாய் இருந்தான் எங்கும் நிறைந்தவன்.
அப்போ சிவன் தன்னை தானே உரைசெய்து உள்ளானா? அதாவது தன்னை தானே வரையறுத்து கூறி உள்ளனா? ஆம்!
தமிழர் தெய்வம் - சிவன் யார்?
சிவனை பற்றி அவனே சொன்ன நூல்கள் மறைநூல்கள் ஆகும், அதில் ஒன்றான திருமந்திரம், சிவனின் வரைவிலக்கணமாக கூறுவது,
சிவன் ஒருவனே கடவுள்
ஒன்றவன் தானே - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1)
ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் - (திருமந்திரம் 2104)
சிவன் ஈடு இணையற்றவன்
சிவனொடு ஒக்கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை - (திருமந்திரம் 5)
அவன் தானாக தோன்றியவன்
ஒன்றவன் தானே - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1)
இருந்தார் சிவமாகி எங்குந் தாமாகி - (திருமந்திரம் - 126)
பொருள்: அவன் தானாக உருவான ஒருவன்
ஆதியும் அந்தமும்
ஆதியோ டந்தம் இலாத பராபரம் போதம தாகப் புணரும் பராபரை - (திருமந்திரம் - 378)
பொருள்: அவனுக்கு தொடக்கமும் முடிவும் இல்லை
அந்தமும் ஆதியு மாகிப் பராபரன் - (திருமந்திரம் - 1927)
பொருள்: படைப்புகளின் தொடக்கமும் முடிவுமானவன்
சிவன் சொர்கத்தில் உள்ளான்
ஆறு விரிந்தனன் எழும்பர்ச் சென்றனன் - (திருமந்திரம் கடவுள் வாழ்த்து பாடல் 1)
பொருள்: ஆறு நாட்களில் உலகை விரித்து, ஏழாவது வானத்திற்கு (உம்பர்) சென்றான்.
சிவனை மனிதர்கள் வரையறுத்து கூற முடியாது
உரையற்றது ஒன்றை உரை செய்யும் ஊமர்காள்
கரையற்றது ஒன்றைக் கரைகாணல் ஆகுமோ
திரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்
புரையற்றிருந்தான் புரிசடையோனே (திருமந்திரம் 2915)
எனவே அவனை மனிதன் என்று கூறுவதன் மூலம் அவனுக்கு உரை செய்கிறோம். அதை தவறு.
சிவன் ஆணுமல்ல, பெண்ணுமல்ல, அலியுமல்ல
பெண்ணல்லன் ஆணல்லன் பேடல்லன் மூடத்துள்
உண்ணின்ற சோதி ஒருவர்க் கறியொணாக்
கண்ணின்றிக் காணும் செவியின்றிக் கேட்டிடும்
சிவனே முத்தொழிலையும் செய்பவன்
ஒருவனு மேஉல கேழும் படைத்தான்
ஒருவனு மேஉல கேழும் அளித்தான்
ஒருவனு மேஉல கேழும் துடைத்தான்
ஒருவனு மேஉல கோடுயிர் தானே. - (திருமந்திரம் 404)
சிவனுக்கு மனைவி, மக்கள் உண்டா?
சிவன் என்பவன் சக்தி என்கிற மனைவியோடு இருப்பவன் என்கிற கருத்தை "சத்தி" என்கிற வார்த்தை பிரயோகத்தை கொண்டு இவர்கள் நிறுவுகிறார்கள். ஆனால் சத்தி என்பதன் பொருளாக திருமந்திரம் இவ்வாறு கூறுகிறது.
சத்தியை வேண்டிச் சமயத்தோர் கள்ளுண்பர்
சத்தி அழிந்தது தம்மை மறத்தலால்
சத்தி சிவஞானம் தன்னில் தலைப்பட்டுச்
சத்திய ஞான ஆனந்தத்திற் சார்தலே. - (திருமந்திரம் 332)
பொழிப்புரை: ஆற்றலை பெற சமயத்தோர் கள்ளுண்பார்கள். கள்ளுண்ட பின் அவர் நினைவிழந்து செயலற்றுக் கிடத்தலால் இயல்பாகத் தமக்கு அமைந்த வலிமையும் அழிந்தது. ஆற்றல் என்பது, சிவன் வழங்கும் ஞானத்தில் தோன்றி, அந்த சத்திய ஞான ஆனந்தத்தை சார்ந்து இருத்தல் ஆகும்.
பதவுரை: சத்தி - ஆற்றல்; தலைப்பட்டு - தோன்றி;
குறிப்பு: சிவனின் மனைவி சக்தியை பெற ஒருசில சமயத்தை சேர்ந்தவர்கள் மதுபானம் குடித்தார்கள் என்பது எவ்வாறு பொருளுடையதாகும். எனவே "சத்தி" என்பது ஒரு நபரோ பெண்ணோ தெய்வமோ அல்ல. அது மனிதன் இயங்க தேவையான ஆற்றல் ஆகும் அது சிவன் வழங்கும் ஞானத்தால் கிடைக்கிறது. இந்த பொருளில் "சத்தி" என்கிற வார்த்தையை திருமந்திரத்தில் கையாண்டால், இவர்கள் கூறும் அனைத்து புராணங்களும் பொய்த்துப் போகும். மட்டுமல்ல, சிவன் என்றால் யார் என்கிற வரையறையை திருமந்திரம் தருவது போல கையாண்டால் இவர்களின் மொத்த சமயமும் பொய்த்துப் போகும். சிவனை அடிபணிவதுதான் நோக்கம் என்றால் இதைத்தான் அவர்கள் செய்ய வேண்டும், அவனால் ஏற்படுத்தப்படாத சமயத்தை (சிவன் சொல்லாத பொருளில் கையாண்டால் அது சிவ சமயமல்ல) காப்பதுதான் நோக்கமென்றால் அப்படியே கடந்து செல்லலாம்.
மேலும் சிவனின் பாலின வரையறையும் சத்தி என்ற சொல்லின் வரையறையும் அவனுக்கு பிள்ளைகள் இல்லை என்று கூறுவதை நாம் உணரவேண்டும்.