யூத மதம் இல்லாமல் போய் இருந்தால் ஏசுவும் முகமதுவும் ஹிந்து மத கதைகளை காப்பி அடித்து இருப்பார்களா?

2 views
Skip to first unread message

அறம் - கற்க கசடற

unread,
Jul 20, 2024, 5:10:20 AM7/20/24
to அறம் கற்க கசடற

கிண்டலான கேள்விக்கு கிண்டலாக பதில் அளிப்பது எந்த வகையிலும் வாசிப்போருக்கு பயனளிக்காது என்பதால் சில கேள்விகளை கேட்டு முடித்து கொள்கிறேன்.

  • ஏசுவும் முகம்மதுவும் யூதமதத்தை காப்பி அடித்தார்கள் என்றால், யூத மதம் அவர்களுக்கு முன் இருந்த ஆபிரகாமின் மதத்தை காப்பி அடித்ததா?

ஏனென்றால், யூதமத வேதங்கள் ஆப்ரஹாமின் உபதேசங்களையும் சம்பவங்களையும் உள்ளடக்கியது.

  • ஏசுவும் முகம்மதுவும் யூதமதத்தை காப்பி அடித்தார்கள் என்றால், மாணிக்கவாசகர் அவருக்கு முன் இருந்த திருமூலரையும் அப்பரையும் சுந்தரரையும் காப்பி அடித்தாரா?

ஏனென்றால் திருவாசகம் அதற்கு முன் இருந்த சைவ சமய பாரம்பரியத்தை உள்ளடக்கியது.

  • ஏசுவும் முகம்மதுவும் யூதமதத்தை காப்பி அடித்தார்கள் என்றால், சைவம் சமணம் பௌத்தம் வைணவ மதங்களை இந்துமதம் காப்பி அடித்ததா? அல்லது இது போன்ற முரண்பட்ட வெவ்வேறு மதங்களை உள்வாங்கிக்கொண்டதா?

ஏனென்றால் இந்து மதம் என்பது மற்ற மதங்களை போல சமய பெரியார்களாகிய சித்தர்கள், முனிவர்கள் அல்லது ரிஷிகளால் முன்மொழியப்பட்ட பெயர் இல்லை. ஏசுவும் முகம்மதுவும் யூதமதத்தை காப்பி அடித்தார்கள் என்று வைத்து கொண்டால் கூட, அவர்கள் காலத்தில் யூத மதம் இருந்தது, ஆனால் இந்து மதம் வெள்ளைக்காரன் பெயர் வைத்ததில் இருந்து அதாவது சில நூறு வருடத்துக்கு முன் உருவானது. அதற்கு முன் சைவ வைணவர்கள் உள்ளிட்ட மதங்கள் அனைத்தும் வெவ்வேறு மதங்கள், அவைகளுக்கு முரண்கள் இருந்தது, சண்டைகள் இருந்தது என்று வரலாறு சொல்கிறதே. எனவே இல்லாத மதத்தை காப்பி அடிக்க வாய்ப்பில்லை.

  • எல்லா மதங்களும் எல்லா காலத்துக்கும் உள்ள, உலகம் முழுமையையும் படைத்த கடவுளை பேசும் பொழுது அது வேற்று மொழியில், வெவ்வேறு இடத்தில் இருந்து வந்தால் அது காப்பி என்று எவ்வாறு முடிவு செய்யப்படுகிறது? அது நமது நாட்டில் வழிவழியாக வரும் சமய பெரியாரை போல ஏன் அவைகள் ஒரு தொடர்ச்சியாக இருக்க கூடாது?
  • இவ்வாறு சமய பெரியார்கள் வருவது குறித்த தீர்க்க தரிசனம் நமது மொழியில் உள்ள வேத நூல்களில் உண்டா என்று ஆய்வது யார் பொறுப்பு?
80 பார்வைகள்
1 பகிர்வைப் பார்வையிடுக
12 பதில்களில் 1
ஆதரவு வாக்கு
2
1
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

கருத்திடுக

ஹாஹாஹா நான் உங்கள் நகைச்சுவையை நன்றாக ரசித்தேன்.. நான் உண்மையாகவே கேள்வி கேட்டேன் கிண்டலுக்காக அல்ல உண்மையாகத்தான் கேட்டேன். நீங்கள் இந்து மதத்தைப் பற்றியும் பேசுவதை நான் வியப்புடன் பார்க்கிறேன் ஒரு மதத்தைப் பற்றி ஒரு கேள்வி கேட்டால் அதற்கு இன்னொரு மதத்தை காட்டி இதில் இப்படி இருக்கிறது அதனால் என் மதமும் இப்படி இருக்கிறது என்று சொல்வது பெரியோர்க்கு அழகு அல்ல. இரண்டு மதங்களும் யூதத்தின் அத்தனை தத்துவங்களையும் திருடி தனக்கென்று ஒரு அடிமை கூட்டத்தை உலகம் முழுவதும் உருவாக்கி இருக்கிறது பணத்துக்காக என்று சொன்னால் அதற்கு பதில் அளிக்காமல் இந்து மதம் பிற மதங்களில் காப்பியா என்று கேட்பது அவ்வளவு சரியாக தோன்றவில்லை. சரி கிறிஸ்தவ மதம் தோன்றி 2000 ஆண்டுகள் ஆயிற்று இஸ்லாம் தோன்றிய 1400 ஆண்டுகள் ஆயிற்று இப்பொழுது யூத மதம் தோன்றி 3220 ஆண்டுகள் ஆயிற்று யூத மதத்தின் அத்தனை கொள்கைகளும் சுன்னத் செய்வது உட்பட நீங்கள் காப்பியடித்து இருக்கிறீர்கள் நீங்கள் ஒரு இஸ்லாமியர் என்று எனக்கு நன்றாக தெரியும் இப்படி எல்லாமே காப்பி என்று தெரிந்தும் உங்கள் மதம் பொய் என்று தெரிந்தும் நீங்கள் நம்புகிறீர்கள் நம்புங்கள் நாங்கள் ஏன் நம்ப வேண்டும்? இந்து மதம் எப்பொழுது எந்த நூற்றாண்டில் தோன்றியது என்று உங்களால் அறுதி இட்டு கூற முடியுமா புத்தர் ஒரு ஹிந்து மன்னர் தான் பிறகு புத்த மதத்திலிருந்து எப்படி இந்து மதம் தோன்றி இருக்க முடியும்? உலகில் மிகப் பழமையான மதம் இந்து மதம் என்பது உலக ஆராய்ச்சியாளர்களே ஒத்துக் கொண்ட உண்மை இதில் நீர் ஒரு முல்லா நீர் ஒத்துக் கொள்ளாவிட்டால் என்ன ஒத்துக்கொண்டால் என்ன? Moses பற்றி கேட்டுள்ளதால் நானும் ஒரு கேள்வி கேட்கிறேன் மோசஸ் இஸ்லாமியர் என்றால் அப்பொழுது என் குரானை கடவுள் கொடுக்கவில்லை யூத மதத்தை தோற்றுவித்தது யார் கிறிஸ்துவ மதத்தை தோற்றுவிக்க ஆண்டவன் என் அனுமதி கொடுத்தார் உங்கள் நபி தான் கடைசி நபி என்று அவரே தான் சொன்னார் ஒழிய வேறு யாராவது சொன்னார்களா அதற்கு சாட்சி இருக்கிறதா மற்ற மதங்களை அறிவு கொண்டு ஆராய்ந்து நமது மதத்தில் இருக்கும் முட்டாள் தனத்தில் மூழ்கிளைப்பது ஏனோ?

பதில் அளியுங்கள்
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

உலகில் உள்ள வேதங்கள் அனைத்தும் ஒரே மரத்தின் கிளைகள்.

புனிதநூல்கள்

நான்மறை

பொய் நூல் உண்டா?

வேதத்தை ஓதி வீடு பெற முடியுமா?

வேதங்களை ஒப்பு நோக்க வேண்டும்!

மறை நூல்கள் மூடனுக்கு பயனளிக்காது

உங்களுக்கு இவைகளில் குறிப்பிட்ட வேதவரிகள் பயனளிக்கும் என்று நம்புகிறேன். இவைகள் நகைச்சுவை என்று நீங்கள் கருதினால்… உங்க விருப்பம். நன்றி.

Reply all
Reply to author
Forward
0 new messages