இந்துமதம் தொடர்பாக வாசிக்கும்பொழுது ஏற்படும் ஐயங்களை கேள்வியாக எழுப்பும்பொழுது, வேத ஆதாரத்துடன் பதில் தரப்படுவது இல்லையே, ஏன்?

7 views
Skip to first unread message

அறம் - கற்க கசடற

unread,
Nov 2, 2024, 12:44:29 PM11/2/24
to அறம் கற்க கசடற
முன்னாள் பணி ஓய்வு (1989–2002)மார். 9
முதலில் பதிலளிக்கப்பட்டது: இந்துமதம் தொடர்பாக வாசிக்கும்பொழுது ஏற்படும் ஐயங்களை கேள்வியாக எழுப்பும்பொழுது, வேதஆதாரத்துடன் பதில் தரப்படுவது இல்லையே, ஏன்? பதில் அளிப்பவர்களும் அதை தேடி வாசித்து கற்காமல் மனம்போன போக்கில் (அ) வார பத்திரிகையில் வரும் செய்திகளை பதிலாக கொடுப்பது ஏன்?

//இந்துமதம் தொடர்பாக வாசிக்கும்பொழுது ஏற்படும் ஐயங்களை கேள்வியாக எழுப்பும்பொழுது, வேதஆதாரத்துடன் பதில் தரப்படுவது இல்லையே, ஏன்? பதில் அளிப்பவர்களும் அதை தேடி வாசித்து கற்காமல் மனம்போன போக்கில் (அ) வார பத்திரிகையில் வரும் செய்திகளை பதிலாக கொடுப்பது ஏன்?//

முதலில் கேள்வி கேட்டவர் புரிந்து கொள்ளவேண்டியது : “இந்து மதம்” என்ற ஒன்றே கிடையாது! “இந்து மதம்” என்ற பெயர் மிலேச்சர்களால் சூட்டப்பட்டது.

இன்று மதவியாபாரிகளால் மதம் மாற்றப்பட்ட மதவாதிகள் “இந்து மதம்” தொடர்பாக கேள்வி கேட்கின்றனர். அவர்கள் “ஆர்வம்” பாராட்டிற்குரியதா என்பதை Quora அன்பர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.

யூதர்களுக்கு தோரா, கிருத்துவர்களுக்கு விவிலியம், இஸ்லாமியர்களுக்கு குர் ஆன் என்ற வகையில், மிலேச்சர்களால் பெயரிடப்பட்ட “இந்துக்களுக்கு” புனித நூல்கள் பல உண்டு. உங்களுடைய 99 சதவீத “இந்துக்களுக்கு” வேதங்களின் பெயர்களோ, வேதக் கருத்துக்களோ தெரியாது. ஏன் தெரியாது?

ஆபிரகாமிய மதவிதிகளின் படி அந்தந்த மதத்தினருடைய புனித நூல்கள் அந்தந்த மதத்தினரால் ஓதப்பட்டாக வேண்டும்; தவறாது ஓதுதல் ஆபிரகாமிய மதத்தினருக்கு இடப்பட்ட கட்டளை.

“இந்துக்களுக்கு” இது மட்டுமே புனித நூல் என்று ஒன்று கிடையாது; “இந்துக்களுக்கு” புனிதநூல்களாலான ஒரு நூலகமே உள்ளது! எந்த ஒரு புனித நூலும் ஒரு “இந்து” மேல் ஒருபோதும் திணிக்கப்படவில்லை, ஓதப்படவேண்டும் என்ற கட்டளையுமில்லை.

ஆபிரகாமிய மதத்தினரைப் போல் திணிக்கப்பட்ட ஓதுதல் “இந்துக்களுக்கு” விதிக்கப்படவில்லை ஆதலால் பெரும்பான்மையானவர் மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை.

எவரும் வேதங்களை "வழிபடுவதில்லை" - வடமொழி வேதங்கள் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப்படவில்லை, மேலும் அவை பிராமணர்களின் நினைவாற்றலால் செவி வழித் தகவலாக அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அன்று பிராமணர்கள் மட்டுமே வேதங்களை ஓதினார்கள்; மற்றவர்கள் வேதங்களைப் படித்ததில்லை, அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.

இன்றைய பிராமணர்களுக்கு வேதம் ஓதுவது தொழிலல்ல; வேறு வேறு தொழில்களில் - வழக்கறிஞர், மருத்துவர், பொறியியலாளர், அறிவியலாளர், தணிக்கையாளர், ஊடகவியலாளர் என்று பரந்துபட்டுள்ளனர்.

வேதம் ஓதும் பிராமணர்கள் 1 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே! வேதம் ஓதும் பிராமணர்கள் உங்களுடை கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்காக இணையத்தில் விழிவைத்துக் காத்துக் கிடக்கவில்லை!

இன்று வேதங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன; உங்களுடைய ஐயங்களை இணையத்தில் சொடுக்கி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளளலாமே!

அயல் நாட்டவர்களின் ஆதிக்கத்திற்கு முன்பு பாரத துணைக்கண்டத்தில் வடக்கில் வாழ்ந்தவர்கள் சநாதன தர்ம நெறிமுறைகளை வழிகாட்டியாகக் கொண்டிருந்தனர்.

தமிழகத்தில் நீதி நூல்களான திருக்குறள், நாலடியார், ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், உலக நீதி, வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி, ஆகியவற்றை வாழ்வாங்கு வாழ்வதற்கு படித்தார்கள், ஓதினார்கள்.

மேலும், உடல் உள்ளம் செயல் கடந்த மாபெரும் சக்தியைப் பரம்பொருளை சிவன், பெருமாள், அம்பிகை முருகன், விநாயகர், இராமர் என்று அவரவர் விருப்பத்திற்கேற்பப் பெயரிட்டு, ஆகமங்களின் துணைகொண்டு கோயில்கள் சமைத்து, உருவங்கள் வடித்துத் துதித்தும் போற்றியும் விழாக்கள் எடுத்தும் வழிபடுகின்றனர்.

சைவத் தமிழர்கள் ஓதுவது நாயன்மார்கள்/அருளாளர்கள் அருளிய பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், திரு அருட்பா; வைணவத் தமிழர்கள் ஓதுவது ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யபிரபந்தம் போன்றவையாகும்.

இறையருளால் முகிழ்த்து வந்த தோத்திரப் பாடல்களுக்கு - திருமுறை, திவ்யபிரபந்தம் - தமிழ்ப் புலவர்களாலேயே எளிதில் பொருள் காணமுடியாது; இன்றைய தமிழர்கள் தமிழையே சரியாகப் படிக்கவும், எழுதவும், பேசவும் தெரியாதவர்கள் என்ற வருத்தத்திற்குரிய நிலையில், “தேடி வாசித்து கற்காமல் மனம்போன போக்கில்” என்ற குற்றச்சாட்டிற்கு என்ன பதில் சொல்வது?

“வார பத்திரிகையில் வரும் செய்திகள்” பாமர்கள் எளிதில் புரிந்து கொள்ள உதவும்; திருப்திப்பட்டுக் கொள்ளுங்கள்.

248 பார்வைகள்
7 ஆதரவு வாக்குகளைப் பார்க்கவும்
 மூலம் பதில் கோரப்பட்டது
17 பதில்களில் 1
ஆதரவு வாக்கு
7
2
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

கருத்திடுக
அறம் கற்க கசடற இன் தற்குறிப்பு போட்டோ

மிக்க நன்றி ஐயா.

//முதலில் கேள்வி கேட்டவர் புரிந்து கொள்ளவேண்டியது : “இந்து மதம்” என்ற ஒன்றே கிடையாது! “இந்து மதம்” என்ற பெயர் மிலேச்சர்களால் சூட்டப்பட்டது.//

இந்த உண்மை அறியாதவர்கள் இன்று குறைவு.

//இன்று மதவியாபாரிகளால் மதம் மாற்றப்பட்ட மதவாதிகள் “இந்து மதம்” தொடர்பாக கேள்வி கேட்கின்றனர். அவர்கள் “ஆர்வம்” பாராட்டிற்குரியதா என்பதை Quora அன்பர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்.//

மாதவியாபாரிகள் என்று சைவ வைணவத்திலிருந்து இந்து மதம் என்கிற பெயரில் சனாதன மதத்துக்கு மாற்றப் பட்டவர்களை கூறுகிறீர்கள் என்று நினைக்கிறன்.

//யூதர்களுக்கு தோரா, கிருத்துவர்களுக்கு விவிலியம், இஸ்லாமியர்களுக்கு குர் ஆன் என்ற வகையில், மிலேச்சர்களால் பெயரிடப்பட்ட “இந்துக்களுக்கு” புனித நூல்கள் பல உண்டு. உங்களுடைய 99 சதவீத “இந்துக்களுக்கு” வேதங்களின் பெயர்களோ, வேதக் கருத்துக்களோ தெரியாது. ஏன் தெரியாது?

ஆபிரகாமிய மதவிதிகளின் படி அந்தந்த மதத்தினருடைய புனித நூல்கள் அந்தந்த மதத்தினரால் ஓதப்பட்டாக வேண்டும்; தவறாது ஓதுதல் ஆபிரகாமிய மதத்தினருக்கு இடப்பட்ட கட்டளை.//

வேதத்தை ஓதி வீடு பெற முடியுமா? முடியும்.

வேதத்தை விட்ட அறமில்லை; வேதத்தின்
ஓதத் தகும் அறம் எல்லாம் உள; தர்க்க
வாதத்தை விட்டு, மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே.
 - (திருமூலரின் திருமந்திரம் 51)

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்

ஞாலம் அறியவே நந்தி அருளது

காலை எழுந்து கருத்தறிந் தோதிடின்

ஞாலத் தலைவனை நண்ணலும் ஆமே. (பாடல் எண் : 36)

பொழிப்புரை: மூலன் உரைசெய்த மூவாயிரம் பாடலையுடைய இத்தமிழ் நூல் நந்தி பெருமானது அருள் உணர்த்திய பொருளை உடையதே. அதனால், நாள்தோறும் காலையில் இதனைப் பொருளுணர்ந்து ஓதுவோர் உலகத்தின் தலைவனை நெருங்கலாமே.

//“இந்துக்களுக்கு” இது மட்டுமே புனித நூல் என்று ஒன்று கிடையாது; “இந்துக்களுக்கு” புனிதநூல்களாலான ஒரு நூலகமே உள்ளது!//

நூறுகோடி ஆகமங்கள் நூறுகோடி மந்திரம்

நூறுகோடி நாள்இருந்து ஓதினால் அதுஎன்பயன்?

ஆறும்ஆறும் ஆறுமாய் அகத்தில்ஓர் எழுத்துமாய்

ஏறுசீர் எழுத்தைஓத ஈசன்வந்து பேசுமே! - (சிவவாக்கியம் 140)

வேதம் உரைத்தானும் ஆகிலன்

வேதம் உரைத்தாலும் வேதா விளங்கிட

வேதம் உரைத்தானும் வேதியர் வேள்விக்காய்

வேதம் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே. - (திருமந்திரம் 3. வேதச் சிறப்பு - 2)

பொருள்: வேதத்தை சொல்வதானால் மட்டும் ஒருவன் வேதம் அறிந்த வேதியன் ஆகிவிட மாட்டான். வேதத்தை உரைத்த இறைவன் மக்களுக்கு அறத்தை நன்கு விளக்கவும், வேதியர்கள் வேள்வி ("வேள்விஎன்பதற்கு அறச்செயல் என்று பொருள்) செய்வதற்காக, உண்மைப் பொருளை உணர்த்துவதற்காகவும், வேதத்தைக் கூறி அருளி உள்ளான்.

எனவே ஒரு நூலக அளவு நூல் இருந்தாலும் வேதத்தை வாசித்து அதன் பொருளை உணராததே தவறு என்கிற பொழுது ஓதாமல் இருப்பது எப்படி பிழை இல்லாததாகும்?

//எந்த ஒரு புனித நூலும் ஒரு “இந்து” மேல் ஒருபோதும் திணிக்கப்படவில்லை, ஓதப்படவேண்டும் என்ற கட்டளையுமில்லை.

ஆபிரகாமிய மதத்தினரைப் போல் திணிக்கப்பட்ட ஓதுதல் “இந்துக்களுக்கு” விதிக்கப்படவில்லை ஆதலால் பெரும்பான்மையானவர் மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை.//

இந்து என்ற பெயர் மிலேச்சர்களால் வைக்கப்பட்டது என்று நீங்களே கூறிவிட்டு பிறகு அப்பெயரை ஏன் குறிப்பிடுகிறீர்கள்? சனாதனமா சைவமா அழைத்து வைணவமா என்று கூறுங்கள். முறையான ஆதாரத்தை கொடுக்க வசதியாக இருக்கும். இல்லையே என்றால் கொடுக்கும் ஆதாரம் தவறு என்று நீங்கள் கூற அது வழிவகுக்கும்.

ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம் - உலக நீதி

//எவரும் வேதங்களை "வழிபடுவதில்லை" - வடமொழி வேதங்கள் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதப்படவில்லை, மேலும் அவை பிராமணர்களின் நினைவாற்றலால் செவி வழித் தகவலாக அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லப்பட்டது.

அன்று பிராமணர்கள் மட்டுமே வேதங்களை ஓதினார்கள்; மற்றவர்கள் வேதங்களைப் படித்ததில்லை, அவ்வாறு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.//

மறைநூலை வழிபட தேவை இல்லையா? வேதத்திற்கு வழிபடுவது அதாவது கட்டுப்படுவது கட்டாயம் ஆகும்.

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்

பெருமிறை தானே தனக்கு. (குறள் 847: புல்லறிவாண்மை அதிகாரம்)

பொருள்: அரு மறை – மறை நூல்களை; சோரும் – கடைபிடிக்காது தவறும்; அறிவிலான் – பேதையர், அறிவீனர்கள்; செய்யும் – செய்து கொள்வர்; பெரு மிறை – பெரிய துன்பத்தை; தானே தனக்கு – தாமே தமக்கு (வேறு யாருமே செய்யவேண்டாம்)

ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல். - 
(திருக்குறள் : பொருட்பால் : பேதைமை 834)

பொருள்நூல்களைக் கற்றறிந்தும் அவற்றைப் பிறர்க்கு இசையச் சொல்லியும், தான் அதை செய்யாத பேதையார் போலப் பேதையார் உலகத்தில் இல்லை

கற்க கசடறக் கற்பவை கற்றபின்

நிற்க அதற்குத் தக. - (குறள் 391)

பொருள்கல்வி கற்க நல்ல நூல்களைக் குற்றமறக் கற்க வேண்டும், அவ்வாறு கற்ற பிறகு, கற்ற கல்விக்கு தக்கவாறு நெறியில் நிற்க வேண்டும்.

//இன்றைய பிராமணர்களுக்கு வேதம் ஓதுவது தொழிலல்ல; வேறு வேறு தொழில்களில் - வழக்கறிஞர், மருத்துவர், பொறியியலாளர், அறிவியலாளர், தணிக்கையாளர், ஊடகவியலாளர் என்று பரந்துபட்டுள்ளனர்.

வேதம் ஓதும் பிராமணர்கள் 1 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களே! வேதம் ஓதும் பிராமணர்கள் உங்களுடை கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்காக இணையத்தில் விழிவைத்துக் காத்துக் கிடக்கவில்லை!//

வேதம் ஓதுவது பிராமணர்களுக்கு மட்டுமே உரியது என்பது பிலியான வாதம் அல்லவா? மறுமையில் வீடுபேற்றை பெறவும், இம்மையில் பின்பற்றப்படவேண்டிய அறத்தை கூறும் மறைநூல் பிராமணர் மட்டுமே செய்ய வேண்டும் என்று எந்த தமிழ் மறையில் கூறப்பட்டு உள்ளது?

//இன்று வேதங்கள் இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன; உங்களுடைய ஐயங்களை இணையத்தில் சொடுக்கி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளளலாமே!//

இக்கேள்விகள் உங்கள் வேதத்தை நீங்க வாசிக்க தூண்டும் விதமாக கேட்கப்பட்டது. அது உங்களுக்கு புரிந்து இருந்தால் நான் வெற்றி பெற்றதாக கருதி இருப்பேன்.

//அயல் நாட்டவர்களின் ஆதிக்கத்திற்கு முன்பு பாரத துணைக்கண்டத்தில் வடக்கில் வாழ்ந்தவர்கள் சநாதன தர்ம நெறிமுறைகளை வழிகாட்டியாகக் கொண்டிருந்தனர்.

தமிழகத்தில் நீதி நூல்களான திருக்குறள், நாலடியார், ஆத்தி சூடி, கொன்றை வேந்தன், உலக நீதி, வெற்றி வேற்கை, மூதுரை, நல்வழி, நன்னெறி, ஆகியவற்றை வாழ்வாங்கு வாழ்வதற்கு படித்தார்கள், ஓதினார்கள்.

மேலும், உடல் உள்ளம் செயல் கடந்த மாபெரும் சக்தியைப் பரம்பொருளை சிவன், பெருமாள், அம்பிகை முருகன், விநாயகர், இராமர் என்று அவரவர் விருப்பத்திற்கேற்பப் பெயரிட்டு, ஆகமங்களின் துணைகொண்டு கோயில்கள் சமைத்து, உருவங்கள் வடித்துத் துதித்தும் போற்றியும் விழாக்கள் எடுத்தும் வழிபடுகின்றனர்.

சைவத் தமிழர்கள் ஓதுவது நாயன்மார்கள்/அருளாளர்கள் அருளிய பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், திரு அருட்பா; வைணவத் தமிழர்கள் ஓதுவது ஆழ்வார்கள் அருளிய நாலாயிர திவ்யபிரபந்தம் போன்றவையாகும்.

இறையருளால் முகிழ்த்து வந்த தோத்திரப் பாடல்களுக்கு - திருமுறை, திவ்யபிரபந்தம் - தமிழ்ப் புலவர்களாலேயே எளிதில் பொருள் காணமுடியாது; //

நீங்கள் கூறியவற்றில் எல்லா நூல்களும் சரி என்றால், சமய நூல்கள் ஏன்

பொய் தெய்வங்கள்

பொய் நூல்

பொய் குரு

ஆகியவற்றை பற்றி பேசுகிறது. வேதம் ஓதாமல் விளங்காமல் பின்பற்றாமல் இவைகளை எப்படி கண்டறிந்து களைவது?

//இன்றைய தமிழர்கள் தமிழையே சரியாகப் படிக்கவும், எழுதவும், பேசவும் தெரியாதவர்கள் என்ற வருத்தத்திற்குரிய நிலையில், தேடி வாசித்து கற்காமல் மனம்போன போக்கில்” என்ற குற்றச்சாட்டிற்கு என்ன பதில் சொல்வது?//

படைக்கத்தவர்களை பற்றிய கேள்வி அல்ல இது. உங்களைப்போன்ற படித்தவர்களுக்கான கேள்வி. கேள்வியில் உள்ள பொருளையும் நோக்கத்தையும் எதிர்மறையாக புரிந்து மாற்று சமயத்தினரை பற்றி விஷம் கக்கும் நோக்கத்தில் பேசாமல் இருந்து இருந்தால் இந்த கேள்வி கேட்கப்பட்ட நோக்கம் நிறைவேறி இருக்கும்.

ஆனால் நீங்களே மனம் போன போக்கில் தான் பதில் கொடுத்து உள்ளீர்கள். எனவே இந்த கேள்விக்கு பதில் கொடுப்பது கடினம்தான்.

//“வார பத்திரிகையில் வரும் செய்திகள்” பாமர்கள் எளிதில் புரிந்து கொள்ள உதவும்; திருப்திப்பட்டுக் கொள்ளுங்கள்.//

மறை நூல்களுக்கு எதிரான பொய்களை குறை ஞானிகள் பேசும் பேச்சை மக்கள் வாசிப்பதில் எப்படி திருப்தி கொள்ள முடியும்?

1
பதில் அளியுங்கள்
சீனிவாசன் சொக்கலிங்கம் இன் தற்குறிப்பு போட்டோ

சார் மிக்க நன்றி சார் அந்த வேதத்திலிருந்து பேசுகிறேன் இந்த ஆகம விதியை சொல்லுகிறேன் இவை ஆபாசமாக இருக்கிறது இது சரி இல்லை இதற்கு ஆதாரம் இல்லை என்று இந்த மதத்தை தூற்றுபவர்களை நானும் எந்த வேதத்தையும் படிக்காமல் இல்லை எந்த புராணத்தையும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல் எப்படி பதில் அளிப்பது என்று கிணறி இருக்கிறேன் திணறிக் கொண்டும் இருக்கிறேன் இதற்கான விளக்கங்களை சரியாக சொன்னீர்கள் சார் ஆகவே என் ஆதங்கம் அடங்கியது இந்து மதத்தை வேண்டுமென்றே பழிப்பவர்களை சரியான பதில் கொடுப்பவர் இங்கு யாரும் இல்லை என்ற ஆதங்கம் என்னுள் இருக்கிறது சார் எந்த மதத்தையும் கேள்வி கேட்கலாம் ஆனால் பன்மத்துடன் குதர்க்கமாக ஆபாசமாக விமர்சிப்பதை தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை நன்றி சார்

Reply all
Reply to author
Forward
0 new messages