இருந்தும் இந்த நூல் பொது மக்களுக்கு சென்று அடையாமைக்கு காரணம் என்ன?
சைவ சமய உரை நிகழ்த்தும் யாரும் இந்நூலை ஓத பொது மக்களை தூண்டவில்லை.
இது ஒரு மறை நூல், நமது வாழ்க்கைக்கு தேவையான அறம் கூறும் நூல், இதை ஓதி உணர்ந்து பிறருக்கு கூறி நாமும் வழிபடுதல் என்பது ஒவ்வொரு தனிமனிதனுக்கும் கட்டாயம் என்கிற கருத்து நிலைநிறுத்தப்படாமை ஓர் காரணம்.
தெய்வ சிந்தனைக்கு பெரும்பாலும் புராண இதிகாச கதைகளையும் சோதிடத்தையும் கருத்தில் கொள்ளும் நாம், வேதத்தை ஒரு பொருட்டாக கருதாமல் இருக்கும் அறிவீனம் ஒரு காரணம்.
தமிழர்களை பொறுத்த வரை வேதம் ஓதுதல் என்பது பிராமணர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் கடமையானது என்கிற தெளிவின்மை.
2000 ஆண்டு பழமையான இந்த நூலுக்கு, 19 நூற்றாண்டுக்கு பிறகு தான் பொழிப்புரை எழுதப்பட்டது. அவ்வாறு எழுதிய யாரும் மொழி இலக்கண அடிப்படையில் பொழிப்பு எழுதாமல், வேத வியாசர் எழுதிய புராண அடிப்படையில் விளக்கம் எழுதி இருப்பது உள்ளடக்கத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
மறை நூல்கள் இரண்டு வகை: உண்மை மறை நூல், பொய் நூல். மறை நூல் இரண்டு வகை: முதல் நூல், வழி நூல். ஆனால் நூல்களை அற நூல்கள், சமய நூலகள் மற்றும் இலக்கண நூல் என்று பிழையாக வகுத்தது இன்னுமொரு காரணம்.
இப்பொழுதும் எனது மொழி நூல் என்பதற்காக வாசிக்க ஆசைப்படுகிறார்களே தவிர, இது இறைவன் தந்த மறை நூல் இதை கற்று சத்தியத்தை அறிவோம் என்கிற நோக்கில் யாரும் கற்க விரும்புவது இல்லை.
இறுதியாக பெருகி இருக்கும் நாத்தீக சிந்தனையும், அரசியல் சூழ்நிலையும், உலகமயமாக்கலும், உலகத்தின் மீதுள்ள அதீத பற்றும் காரணங்களாகும்.