Re: மனுஷரை பிடிக்கிறவர்கள் - 22nd March 2010

29 views
Skip to first unread message

அனுதின மன்னா

unread,
Mar 21, 2010, 6:08:24 PM3/21/10
to Anudhinamannah - அனுதின மன்னா
கீழே உள்ள லிங்கை (Link) அழுத்தி (Click)இன்றையமன்னாவைநீங்கள்படிக்கலாம்.

Click on http://groups.google.com/group/anudhinamannah/web/re-----22nd-march-2010
- or copy & paste it into your browser's address bar if that doesn't
work.


********************************************************************

Anudhinamannah - அனுதின மன்னா

22nd March 2010 - Monday

மார்ச் மாதம் 22-ம் தேதி – திங்கள் கிழமை

மனுஷரை பிடிக்கிறவர்கள்

கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து நான் வெட்கப்படேன்;
முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு
இரட்சிப்பு உண்டாவதற்கு அது
தேவபெலனாயிருக்கிறது. - (ரோமர் 1:16).

ஒரு மீன் பிடிக்க சொல்லி கொடுக்கும் ஆசிரியர், சாம் என்னும் வாலிபன்
மாத்திரம் அதிக மீன்களை பிடித்து வருவதையும்,
மற்ற மாணவர்கள் நான்கு அல்லது ஐந்து மீன்களை மாத்திரம் பிடிப்பதையும்
கண்டார்.

ஓவ்வொரு முறையும் சாம் மாத்திரம் படகு நிறைய புதிதாய் பிடிக்கப்பட்ட
மீன்களை பிடித்து வருவதை கண்ட அந்த
ஆசிரியர், அவனிடம் சென்று, 'நீ மாத்திரம் எப்படி அத்தனை மீன்களை
பிடிக்கிறாய்? ' என்று கேட்டார். அப்போது சாம்
நாளை தன்னோடு வந்து பார்க்குமாறு கேட்டு கொண்டான்.

அடுத்த நாள் காலையில் அந்த ஆசிரியர் அந்த
மாணவனோடு படகில் சேர்ந்து கொண்டார். நடு ஏரியில்
படகை நிறுத்தியவுடன், அந்த ஆசிரியர் நன்கு சாய்ந்து
உட்கார்ந்து கொண்டு சாம் என்ன செய்ய போகிறான்
என்று கவனிக்க ஆரம்பித்தார்.

சாம் ஒரு எளிய முறையை கையாள ஆரம்பித்தான்.
தன்னிடம் இருந்த ஒரு டைனமெட் குச்சியை எடுத்து,
பற்ற வைத்து காற்றில் வீசினான். அது எடுத்து
வீசியவுடன், அதனுடைய விளைவு அந்த ஏரியில்
மோதி உடனே அநேக மீன்கள் செத்து ஏரியில் மிதந்தன.
உடனே சாம், தன்னுடைய வலையை வீசி அந்த
மீன்களை பிடித்து, படகில் கொட்டினான். இதை கண்ட
ஆசிரியருக்கு அதிர்ச்;சியாக இருந்தது. ' நீ எப்படி இந்த
மாதிரி செய்ய முடியும்? உன்னை போலீசில் பிடித்து
கொடுக்க போகிறேன்' என்று கத்த ஆரம்பித்தார்.

சாமோ, திரும்பவும் ஒரு டைனமெட் குச்சியை எடுத்து,
பற்ற வைத்து, காற்றில் எறிந்து விட்டு, மெதுவாக
ஆசிரியரிடம், ' நீங்கள் நாள் முழுக்க உட்கார்ந்து குறை
சொல்லி கொண்டு இருக்க போகிறீர்களா? அல்லது படகு
நிறைய மீன்களை பிடிக்க போகிறீர்களா?' என்று
கேட்டான்.

கிறிஸ்தவர்களுக்குள் இந்த இரண்டு காரியங்களே
காணப்படுகிறது. நாள் முழுக்க அந்த ஊழியக்காரர்
இப்படி, அந்த ஊழியக்காரர் அப்படி என்று குறை சொல்லி
கொண்டு உட்கார்ந்திருக்கிறோமா? அல்லது இயேசு
கிறிஸ்து சொன்னது போல மனுஷரை பிடிக்கிறவர்களாக
இருக்க போகிறோமா? அதற்கு நாம் உபயோகிக்க போவது, டைனமெட் குச்சியல்ல,
தேவன் நமக்கு கிருபையாக
அருளி இருக்கிற டுனாமிஸ் (Dunamis) (வல்லமை) ஆகிய
பரிசுத்த ஆவியானவரின் வல்லமையே! அவருடைய
பெலத்தினால் நாம் ஆத்துமாக்களை கர்த்தருக்கு நேராக
வழிநடத்த தேவன் கிருபை செய்வார். கிறிஸ்துவின் சுவிசேஷத்தைக் குறித்து
நான் வெட்கப்படேன்; முன்பு
யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் விசுவாசிக்கிறவனெவனோ அவனுக்கு இரட்சிப்பு
உண்டாவதற்கு அது
தேவபெலனாயிருக்கிறது என்று பவுல் அப்போஸ்தலன்
கூறியது போல நாம் கிறிஸ்துவின் சுவிசேஷத்தை
குறித்து வெட்கப்படாமல் நமக்கு கர்த்தர் அருளும்
நேரங்களில் பரிசுத்தாவியானவரின் கிரியை நடத்தும்படி
ஜெபித்து, சுவிசேஷத்தை மற்றவர்களுக்கு கூறி,
அவர்களை கர்த்தருக்கு நேராக வழிநடத்த வேண்டும்.

பவுல் அப்போஸ்தலன் அத்தேனே பட்டணத்தில்
சீலாவுக்காவும், தீமோத்தேயுவுக்காகவும் காத்திருந்தபோது,
அந்த பட்டணத்தில் சுற்றி நடந்து திரிந்தார். அப்போது,
' அந்தப் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறதைக்
கண்டு, தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்து,
ஜெப ஆலயத்தில் யூதரோடும், பக்தியுள்ளவர்களோடும், சந்தைவெளியில்
எதிர்ப்பட்டவர்களோடும் தினந்தோறும் சம்பாஷணைபண்ணினான் ' - (அப்போஸ்தலர்
17:16).
பவுல் பட்டணம் விக்கிரகங்களால் நிறைந்து இருப்பதை
கண்டு, குறை சொல்லி கொண்டு அமர்ந்திருக்கவில்லை.
இந்த ஜனம் இப்படிதான், வீதிக்கு வீதி விக்கிரகம் வைத்து
வணங்கி கொண்டிருப்பார்கள் என்று குறை சொல்லி
கொண்டு உட்கார்ந்திருக்கவில்லை. தனக்கு
எதிர்பட்டவர்ளோடு தினந்தோறும் சம்பாஷணை
பண்ணி, கர்த்தருக்குள் வழிநடத்த ஆரம்பித்தான்.

நம் நாடும் விக்கிரகங்களால் நிறைந்து இருக்கிறது.
ஒவ்வொரு தெருவிலும் விக்கிரகங்களை வைத்து
வணங்கி கொண்டிருக்கிறார்கள். நாமும் ஆவியில்
வைராக்கியம் கொள்ள வேண்டும். தேவனுக்காக
எழும்பி நிற்க வேண்டும். என் தேச மக்கள் மாயையானதை
நம்பி, நரகத்திற்கு நேராக சென்று கொண்டிருக்கிறார்களே
என்று வைராக்கியம் கொள்ள வேண்டும். அவர்களுக்காக
திறப்பிலே நின்று ஜெபிக்க வேண்டும். என் ஜனம் தடவி பார்த்தாகிலும்
கர்த்தராகிய உம்மை கணடு கொள்ள
வேண்டுமே என்று கண்ணீரோடு கர்த்தரிடம் மன்றாட
வேண்டும். இந்த ஜனம் பக்தி வைராக்கியமுள்ள ஜனம்,
இவர்கள் கர்த்தரை ஏற்று கொள்ள மாட்டார்கள் என்று
நாமாகவே கற்பனை செய்து கொண்டிருக்காமல், குறை
சொல்லி கொண்டிருக்காமல், அவர்களுக்காக ஊக்கமாக ஜெபிப்போம். கர்த்தர்
அவர்களை சந்திப்பார். கர்த்தர்
அவர்களை இரட்சிப்பார். நம் தேசம் கர்த்தருக்கு
சொந்தமாகும். ஆமென் அல்லேலூயா!

இருளில் வாழும் மாந்தர்
பேரொளியை கண்டு
இரட்சிப்பு அடைய வேண்டும்
இயேசு என்று சொல்ல வேண்டும்
இயேசு என்று சொல்ல வேண்டும்

ஜெபம்: எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் நல்ல
தகப்பனே, உம்மை துதிக்கிறோம். நீர் எங்களை கிருபையாய் இரட்சித்தீரே,
எங்கள் ஜனமும் இரட்சிக்கப்பட வேண்டும்
தகப்பனே. உம்மை அறியாத மக்கள் உம்மை அறிய
வேண்டுமே, இரட்சிக்கப்பட வேண்டுமே, தடவி
பார்த்தாகிலும் என் ஜனம் உம்மை அறிய வேண்டும்
தகப்பனே, அவர்களை கிருபையாய் இரட்சிப்பீராக.
அதற்காக திறப்பில் நின்று ஜெபிக்கிறவர்களை
எழுப்புவீராக. குறை சொல்லிகொண்டிருக்காமல்,
மனுஷர்களை பிடிக்கிறவர்களாக ஒவ்வொரு
கிறிஸ்தவர்களையும் மாற்றுவீராக! எங்கள் ஜெபத்தை
கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பவரே உமக்கே நன்றி.
இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள்
ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.

இந்த அனுதின மன்னாவை உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்.
கர்த்தர் உஙகள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

கர்த்தரின் பணியில்
அனுதின மன்னா குழு
Send all your Query / Reply to :
anudhi...@gmail.com

Reply all
Reply to author
Forward
0 new messages