தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க சட்டமன்ற தீர்மானம் இயற்றுக : முதல்வருக்கு தமிழ் அமைப்புகள் கட்சிகள் கோரிக்கை!
சில நாட்களுக்கு முன் வடநாட்டு பாஜக எம்.பி ஒருவர் பாராளுமன்றத்தில் தமிழ் மொழியை இந்தியாவின் இரண்டாம் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். அவர் பாராளுமன்றத்தில் கூறியபோது
தமிழ் மொழியின் அருமை பெருமைகளை பற்றி வடநாட்டு மக்கள் உணராது , அதற்கு உரிய இடம் அளிக்காதது அவர்களின் கடும் போக்கையே காட்டுகின்றது. ஏழ்கடல் தாண்டி தன்மனம் வீசி புகழ்கொண்டு வாழும் தமிழ் மொழி உயர்தனிச் செம்மொழியாக பன்னெடுங்காலமாக நம் நாட்டில் வாழ்ந்து கொண்டு வருகிறது.
மேலும் தமிழ் மொழியில் வேலை செய்யும் திறன் பெற்றவர்களுக்கு சிறப்பு சலுகைகள் , சம்பள உயர்வு , பதவி உயர்வு கொடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி , அனைத்து இந்திய பல்கலைக் கழகங்களிலும் தமிழுக்கு சிறப்பு பிரிவு ஒரு உருவாகப்படவேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்திய நடுவண் அரசு , தமிழை அனைத்து வடநாட்டு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளிலும் பாடமாக படிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார் தருண் விஜய். ஆகவே தமிழ் மொழியை இந்தியாவின் இரண்டாம் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.
இந்தியாவின் பண்பாட்டு புரட்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் காரணியாக விளங்கும் தமிழ் மொழிக்கு உரிய மரியாதையும் , இடமும் இது வரை இந்த நாட்டில் கிடைக்க வில்லை என்பதையும் சுட்டி காட்டியுள்ளார் தருண். திரு. தருண் விஜய் அவர்களுக்கு தமிழக தமிழர்கள் சார்பாக எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு வடநாட்டு மொழியான இந்தி மொழியை ஆட்சி மொழியாக தேர்ந்தெடுத்தனர். ஒரு சில மாநில மக்களின் தாய் மொழியான இந்தி மொழி இந்தியாவின் ஆட்சி மொழியாயிற்று. இதனால் பல வழிகளில் இந்தி எல்லா மாநிலங்களிலும் திணிக்கப்பட்டது. நடுவண் அரசுத் துறைகளில் தமிழுக்கு இடமில்லாமல், இந்தியை மட்டுமே அலுவல் மொழியாக வைத்த காரணத்தால் தமிழர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். இந்தியாவின் தொன்மையான தென்னிந்திய மொழியான தமிழுக்கும் இந்தி ,மொழிக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அப்படி இல்லாமல் ஒரே ஒரு இந்தி மொழிக்கு மட்டும் எல்லா அதிகாரமும் வழங்கப்பட்டு வருகிறது. இதை தமிழர்கள் தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றனர்.
வடநாட்டு எம்.பியான தருண் விஜய் அவர்களுக்கு நாம் நன்றி கூறும் அதே வேளையில் மாண்புமிகு தமிழக முதல்வரும் தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற இந்த கோரிக்கையை சட்டமன்ற தீர்மானமாக இயற்றி நடுவண் அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் . இதன் மூலம் தமிழக மக்களின் நெடு நாள் கோரிக்கை நிறைவேறும். தமிழக முதல்வர் தமிழ் மொழியை அரியணையில் ஏற்ற உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம். இப்படியான சட்டமன்ற தீர்மானத்தை தமிழக முதல்வர் நிறைவேற்றினால் அது முதல்வருக்கு தமிழக வரலாற்றில் நிலையான புகழை தேடித் தரும் என்பதில் ஐயமில்லை. இந்த சட்டமன்ற தீர்மானத்தை காலம் தாழ்த்தாமல் தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் என்று அனைத்து தமிழ் அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
ஏன் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் ?
இந்தியாவின் ஆட்சி மொழியான இந்தி மொழி கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளையும் அழித்து வருகிறது என்று மொழியியல் ஆய்வாளர்கள் கண்டறிந்து கூறியுள்ளனர்
இந்தியாவை பொறுத்தவரை , தேசிய மொழி என்று எதுவும் கிடையாது . ஆனால் இந்தி தான் ஆட்சி மொழி அலுவல் மொழி. ஆங்கிலம் துணை அலுவல் மொழியாக உள்ளது .
உண்மையில் திரு. தருண் கோரியது போல தமிழ் மொழிக்கு ஆட்சி மொழி அதிகாரம் வந்து விட்டால் , தமிழ் மொழியை அழிவில் இருந்து காப்பாற்றி விடலாம். இங்குள்ள தமிழர்கள் பிழைப்புக்காக இந்தியை கற்க வேண்டிய கட்டாயம் ஏற்படாது. தமிழ் மொழியிலேயே அனைத்து நடுவண் அரசு அலுவல்களையும் பார்க்கலாம். நடுவண் அரசின் நாணயங்கள், அஞ்சல் தலைகள் , கடவுச் சீட்டுகள் , அடையாள அட்டைகள் அனைத்திலும் தமிழ் இடம் பெரும்.
விமான சேவை துறை, தொடர்வண்டித் துறை, வங்கித் துறை, வருமானவரித் துறை , ராணுவத் துறை, கடவுசீட்டு வழங்கும் துறை , அஞ்சல் துறை, கப்பல் துறை, வெளியுறவு துறை என பல நடுவண் அரசுத் துறைகளிலும் இந்தி மொழியே ஆட்சி மற்றும் அலுவல் மொழியாக உள்ளது . இங்கெல்லாம் தமிழ் மொழி இல்லவே இல்லை. இந்தி அல்லாத மாநிலங்களில் இந்த துறைகளில் வேலை செய்யும் ஊழியர்களிடம் இந்தியை கொண்டு சேர்க்க நடுவண் அரசு பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவு செய்கிறது . அதற்காக ஒவ்வொரு அலுவலகங்களிலும் இந்தி வளர்ச்சித் துறை அமைத்து அதில் உயர் அதிகாரி , துணை அதிகாரி, கீழ் அதிகாரி , மேல் அதிகாரி என பல அதிகாரிகளை நியமித்து இந்தியை திணித்து வருகிறது. அந்த நிறுவன ஊழியர்களுக்கு மக்கள் வரிப்பணத்தில் இந்தி வகுப்பெடுக்கிறது இந்திய அரசு. இந்தியில் பெயர் பலகைகள், சின்னங்கள் ஆங்காங்கே நிறுவி இந்தி மொழியை பரப்பி வருகிறது. எல்லா மொழிகளையும் சமமாக வளர்க்க வேண்டிய இந்திய அரசு இந்தியை மட்டும் சிறப்பாக வளர்கிறது . இதனால் மற்ற மொழி பேசும் மக்கள் எல்லாம் தங்களுடைய அடையாளத்தை இழந்து வருகின்றனர்.
இந்தியாவை தாண்டி வெளிநாடுகளுக்கு சென்றாலும் , இந்தியர் அனைவருக்கும் தாய் மொழி இந்தி தான் என தவறாக வெளிநாட்டினர் நினைக்கின்றனர். அதற்கு காரணம் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தி மட்டும் இருப்பதால் தான். இதனால் 5000 ஆண்டுகள் வரலாறு கொண்ட தமிழினத்திற்கு மொழி அடையாளம் என்று எதுவும் இல்லாமல் போய்விட்டது. தமிழ் மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கினால் எல்லா நடுவண் அரசுத் துறைகளிலும் தமிழ் மொழி பயன்பாட்டில் வரும். இதனால் தமிழ் பேசும் மக்கள் பெருமளவில் பயன்படுவர். இந்திய அரசு இந்திக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவம் தமிழ் மொழிக்கும் கொடுக்க நேரிடும். இதன் மூலம் தமிழர்கள் தாங்கள் இழந்த அடையாளத்தை மீண்டும் பெறுவார்கள். தமிழ் மொழியின் சிறப்பை வடநாட்டவரும் உணர்வாளர்கள். இதன் மூலம் இந்தியாவில் மொழிப் புறக்கணிப்பு என்ற நிலை மாறி உண்மையான வேற்றுமையில் ஒற்றுமை என்ற நிலை ஏற்படும். இந்த நிலை அடைய இந்திய அரசு உதவவேண்டும். உலகின் மூத்த தொன்மையான மொழிகளும் ஒன்றான தமிழ் மொழியை இந்திய அரசின் ஆட்சி மொழியாக்க வேண்டும்.
நாம் தமிழர் கட்சி (திரு. சீமான் )
உலகத் தமிழர் பேரவை (ஐயா. திரு.நெடுமாறன்)
தமிழர் எழுச்சி இயக்கம் (திரு. வேலுமணி )
தமிழர் முன்னேற்ற கழகம் (திரு. அதியமான் )
மனித நேய மக்கள் கட்சி (திரு. ஜவஹருல்லா )
தமிழக வாழ்வுரிமை கட்சி (திரு. பண்ருட்டி வேல்முருகன் )
தமிழர் நலம் பேரியக்கம் (திரு. களஞ்சியம்)
உலகத் தமிழ் அமைப்பு (திரு. செழியன் )
தமிழ் நாடு மாணவர் பேரவை
தமிழ் தேசிய கூட்டணி (திரு. குப்பன்)
தமிழ்நாடு விடுதலைப் புலிகள் ( திரு. சே. குணா )
முனைவர் அருகோ, ஆசிரியர் எழுகதிர் நாளிதழ்
கயல்விழி அங்கயர்க்கண்ணி, உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் (திரு. ராஜா ஸ்டாலின்)
தமிழர் பண்பாட்டு நடுவம் (திரு. இராஜ்குமார் பழனிசாமி)
தமிழர் உலகம் (திரு. அருட் கண்ணனார் )
Press meet
Tamil associations urge
Tamil Nadu Government to pass a resolution seeking official status for Tamil in
the Indian Union:
The Press Meet will be
held on 20.09.2013 at Chepauk, Chennai at 4pm Madras Time.
Recently Hon Member of
Parliament Mr. Tarun Vijay from Uttarakhand demanded Tamil be made a second
official language of India there by giving Tamil it's respect and recognition
that it deserves. It's over six decades since India's independence and a
regional language like Hindi is chosen as the Indian Union's official language.
It not only gives an unfair advantage to a section of people but is also
imposed on non native Hindi speakers. It must be noted that India is home to
two completely different linguistic groups and Tamil is perhaps the only
language which has very little or no similarities to other Indian languages.
Classical Tamil is one of the oldest languages in the world and it certainly
deserves the same position as that of Hindi in modern India. While thanking the
Uttarakhand MP Mr. Tarun Vijay for raising this demand, we request the Tamil
Nadu Chief Minister to pass a resolution in the Tamil Nadu Assembly demanding Tamil
as an official language of the Indian Union. The long desire of the Tamil
speaking Indians will then be fulfilled. This is being supported by various
Tamil parties and associations. So far the following have extended their
support and expressed similar views:
Ulagath Thamilzhar Peravai
Tamizhar Yezhuchchi Iyakkam (Velumani)
Tamizh Naadu Maanavar Peravai
Tamizhar Munnetra Kazhagam (Athiyaman)
Manidha Naeya Makkal Katchi
Global Tamil Organisation (Sezhiyan)
Thamizhaga Vaazhvurimai Katchi
Naam Tamizhar Katchi (Seeman)
Tamil Nadu Viduthalai Puligal (Se. Guna)
Thamizhar Ulagam (Arutkannanar)
Thamizhar Nala Periyakkam (Kalanjiyam)
AruKo - Editor Ezhukathir Monthly Magazine
Thamizh Thesiya Munnani
Thamilar Panpattu Naduvam (Rajkumar Palaniswamy)
We Calling upon Tamils to unite not just for a common cause but for a legitimate aspiration of over 75 million Tamil speaking Indians.
Mobile number: 9566224027