அனைவருக்கும் வணக்கம்...
சாலை விபத்தில் சிக்கி உயிருக்கு போராடி வரும் வேளாண்மை அறிவியல் இறுதியாண்டு மாணவரின் மருத்துவ சிகிச்சைக்கு உங்களால் முடிந்த உதவியினை அளித்து மாணவரின் உயிர் பிழைக்க உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்..
உங்களால் முடிந்த தொகையினை ”CHRISTIAN MEDICAL COLLEGE VELLORE ASSOCIATION” எனும் பெயருக்கு டிடி அல்லது செக் மூலமாக வேலூரில் மாற்றும் வகையில் அளித்து உதவிடுங்கள்.
நன்றி...
-வேளாண்மைத் தகவல் ஊடகம்
அழைக்க: 77 08 77 09 77
----------------------------------------------------------------
வேலூர் ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரியில் இறுதியாண்டு வேளாண்மை அறிவியல் பயிலும் மாணவர் கடந்த 19 ம் தேதி நடந்த சாலை விபத்தில் சிக்கி வேலூர் CMC மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முதுகெலும்பு மற்றும் தண்டுவடம் பகுதி பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. மிக மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
உணர்ச்சியினை உணர்த்தும் நரம்பு மண்டலம் பாதிப்படைந் துள்ளதாகவும், உயிரினைக் காப்பாற்ற அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரையிலும் சுமார் 3 இலட்சம் ரூபாய் மருத்துவ செலவிற்காக செலுத்தப்பட்டுள்ளது.
உயிரினை காப்பதற்காக ஒரு அறுவைச் சிகிச்சை செய்திட மேலும் ரூபாய் இரண்டு இலட்சம் (Rs.2,00,000/-) செலுத்த மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.
ஏழ்மை விவசாய குடும்பத்தினைச் சார்ந்த எங்கள் வகுப்பு மாணவரின் உயிர் பிழைப்பிற்காக உங்களால் முடிந்த தொகை யினை அளித்து மாணவர் சிவா-வின் உயிர் பிழைப்பிற்கு உதவிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இணைப்பு: மருத்துவ சான்று நகல்.
இப்படிக்கு…
மாணவ-மாணவியர்.
இளங்கலை வேளாண்மை அறிவியல்.