ஸத்யத்தில் பற்றும், ப்ரியமுந்தான் ஸத்யகாமம். அந்த அம்மாள் ஸத்யகாமையாகவே நிஜத்தைச் சொல்லயிருக்கிறாள். புத்ரனிடம் இன்ன கோத்ரம் என்று பொய்யாகச் சொல்லவில்லையோல்லியோ? தாயைப் போலவே பிள்ளையாக அந்தக் குழந்தையும் இருந்தான்.
அவன் ஹாரித்ரும கௌதமர் என்ற ரிஷியிடம் போய் ஸத்யகாமன் என்ற பேருக்கேற்க அம்மா சொன்னதை அப்படியே எழுத்துக்கெழுத்து அவரிடம் ஒப்பித்து, "ஸத்யகாமோ ஜாபாலோ (அ) vI போ" ('நான் ஸத்யகாம ஜாபாலன் என்ற பெயருடையவனாக இருக்கிறேன். ஐயனே!') என்று சொல்லி நமஸ்காரம் பண்ணினான்.
உடனே KS, "உசந்த குலத்தில் பிறக்காதவன் இப்படிப் பேச முடியாது. ஆகையினாலே, உனக்கு உபநயனம் பண்ணிவைக்கிறேன்" என்று சொல்லி அவனை சிஷ்யனாகச் சேர்த்துக் கொண்டார் என்று கதை போகிறது.
அம்மா பேரில் வம்சம் சொல்கிறதும் அபூர்வமாக அங்கங்கே காணப்படுகிறது என்று காட்ட வந்தேன். அதிலேயே சிஷ்யன் எப்படி ஸத்ய்ஸந்தனாக இருக்கணும், மானாபிமானம் விட்டு இருக்கணும், வித்யைக்காக தாஹம் எடுத்தவனாக இருக்கணும் என்பதெல்லாமும் வந்து விட்டன. அப்படிப்பட்ட, ஒருவன் உபதேசம் (வேண்டும்) என்று ஆச்ரயிக்கிறபோது, தயங்காமல் அவனுக்கு உபதேசம் கொடுப்பது குரு லட்சணம் என்பதும் தெரிகிறது. அப்பா யார், கோத்ரம் என்ன என்று சொல்லத் தெரியாதவன் என்றால் தப்பாக நினைக்கவும் இடமிருக்கோல்லியோ? ஆனாலும் அதை அப்படி நினைக்காமல் அந்த KS அந்தப் பையனைச் சேர்த்துக் கொண்டார் என்கிறபோது - திருக்குறள்தான் ஞாபகம் வருகிறது 'சான்றோர்க்குப் பொய்யாவிளக்கே விளக்கு'.
WITH PRANAMS
N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536