From:
santha ram <santha...@yahoo.co.in>Date: 2014-06-12 19:40 GMT+05:30
Subject: Dinam oru Divyaprabandham (தினம் ஒரு திவ்ய பிரபந்தம்) - 23
To:
amrithava...@gmail.comDinam oru Divyaprabandham (தினம் ஒரு திவ்ய பிரபந்தம்) - 23
Dear Bhakthas, Today posting is on 23rd Divyaprabandam from Erandam Thirumozhi Written by Periazhwar…In this Periazhwar is narrating the beauty of Little Krishna
இரண்டாம் திருமொழி - சீதக்கடல்
(கண்ணனது திருமேனியழகைப் பாதாதிகேசாந்தமாக அனுபவித்தல்)
வெண்டளையால் வந்த கலித்தாழிசை
சீதக்கடல் உள்ளமுதன்னதேவகி
கோதைக்குழலாள் அசோதைக்குப்போத்தந்த
பேதைக்குழவி பிடித்துச்சுவைத்துண்ணும்
பாதக்கமலங்கள் காணீரே
பவளவாயீர். வந்துகாணீரே. 1
seethakkadaluL* amuthanna dhEvaki*
kOthaik kuzhalaaL* asOthaikkup pOththandha*
pEthaik kuzhavi* pitiththu suvaiththuNNum*
paathak kamalaNGgaL kaaNeerE*
pavaLa vaayeer! vandhu kaaNeerE. (2) 1.
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
வேதத்தில் எம்பெருமானுடைய சிறந்த திருவடியில் தேன் வெள்ளமுன்டு என்று சொல்லப்பட்டுள்ளது. இதை யடியொற்றி ஆழ்வார்களும் ‘‘தேனே மலரும் திருப்பாதம்’’ என்கிறார்கள். இப்படிப்பட்ட தனது திருவடியிலுள்ள தேனைப் பருகுவதற்காகவும், தனது திருவயிற்றில் கிடக்கும் உலகங்கட்கெல்லாம் உஜ்ஜீவநமுண்டாகும்படியாகவும் ஸ்ரீக்ருஷ்ணன் தனது திருவடிகளில் ஒன்றையெடுத்து வாயிலே
வைத்துச் சுவை பார்த்துக் கொண்டிருக்க, அதைக் கண்ட யசோதைப் பிராட்டி தான் மிக மகிழ்ந்து, இதைப் பிறகும் கண்டு மகிழவேணும் என்றெண்ணித் தன்னருகிலுள்ளாரைக் கொண்டாடியழைத்து, ‘நீங்கள் இக்குழந்தை சுவைத்துண்ணும் இப்பாதக் கமலங்களைப் பாருங்கள்’ என்று அவர்கட்குக் காட்டுகின்றாள்.
கடலில் இரண்டு அமுதம் பிறந்தன; ஒன்று தேவர்களுக்கு போக்யமான உப்புச்சாறாகிய அம்ருதம்; அது புறவமுதமாம். மற்றொரு அம்ருதம். ‘‘அமுதில் வரும் பெண்ணமுது’’ எனப்பட்ட பிராட்டி: இவளே உள்ளமுதம். ஆகவே இங்கு ‘‘உள்ளமுதன்ன’’ என்றது பிராட்டியைப் போன்ற என்றபடியாயிற்று. ‘‘திருவின் வடிவொக்குந் தேவகி’’ என்று மேலுங் கூறுவர். பிராட்டியைப் போலே பரோபகாரமே சீலமாகவுள்ள தேவகி
என்க.
யசோதை தானே சொல்லுகிற பாசுரமாக அமைந்தவிதனில் ‘‘கோதைக்குழலா ளசோதைக்குப் போத் தந்த’’ என்னலாமோ வென்னில்; யசோதையின் சொல்லாக அருளிச்செய்தாலும் இடையில் தமது தன்மையுந்தோன்ற அருளிச்செய்வாரென்க.
English Translation
O, Coral-lipped ladies, come here and see. Here is the darling child which nectar-sweet Devaki gave to the coiffure dame Yasoda. See the innocent child grab his foot and such his toe!