
☀️☀️☀️☀️☀️🌺☀️☀️☀️☀️☀️☀️
☀️. அனந்தனுக்கு ஆயிரம் திருநாமங்கள்!
விஷ்ணு ஸஹஸ்ரநாம!
வேதவிதே நமஹ (Vedhavidhe namaha)
திருநாமம்
ஆயர்பாடியில் கண்ணன் ஒரு வீட்டில் வெண்ணெய் திருடச் சென்றான்.
🐂🐂🐂🐂🐂🌻🐄🐄🐄🐄🐄🐄
அங்கிருந்த வெண்ணெய்ப் பானைக்கு அருகே
ஒரு மணி இருந்தது.
அந்த மணியைப் பார்த்து, “மணியே! நீ இப்போது மணியடித்து ஓசை எழுப்பினால் நான் மாட்டிக்கொள்வேன்.
அதனால் அமைதியாக இருக்க வேண்டும்! சரியா?” என்றான் கண்ணன்.
“அடியேன்!” என்றது அந்த மணி.
கண்ணன் வெண்ணெயை எடுத்து வாயில் போட்டுக் கொண்டான்.
உடனே மணி அடித்து விட்டது.
“ஏன் ஒலி எழுப்புகிறாய்?” என மணியிடம் கேட்டான் கண்ணன்.
“நீ பிரசாதம் உண்ணும் போது ஒலி எழுப்ப வேண்டியது என் கடமை அல்லவா?” என்றது மணி.
“முதலில் ‘அடியேன்’, அதாவது ‘அடிக்க மாட்டேன்’ என்று எனக்கு வாக்களித்தாயே!” என்று கேட்டான் கண்ணன்.
“கண்ணா! அடிக்க மாட்டேன் என்ற பொருளில் அடியேன் என்று சொல்லவில்லை.
‘உனது அடியவன் நான்’ என்று குறிப்பதற்காக அடியேன் என்று சொன்னேன்!” என்றது
அந்த மணி.
“மணியே! பேச்சாற்றலில் உன்னை அடித்துக்கொள்ள யாருமில்லை.
நீ கலியுகத்தில் ஒரு ஆசார்யனாக அவதாரம்
செய்து வேதத்துக்குத்
தவறான பொருள் கூறுபவர்களை உன் பேச்சாற்றலைக் கொண்டு வாதம் செய்து வெல்ல வேண்டும்!” என்றான் கண்ணன்.
பின்னாளில் ஆயர்பாடியில் இருந்து திருமலையை
அடைந்த அந்த மணி, அங்கே திருவேங்கடமுடையானின்
பூஜைக்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தது.
காஞ்சிபுரத்தில் இருந்து அனந்தசூரி, தோத்தாரம்பா தம்பதிகள் குழந்தை
வரம் வேண்டித் திருமலைக்கு வந்தார்கள்.
அன்றிரவு தோத்தாரம்பா, தான் திருமலையப்பனின் மணியை
விழுங்குவதாகக் கனவு கண்டாள்.
அடுத்த நாள் காலை திருமலையப்பனின் கருவறையை அர்ச்சகர் திறந்தபோது,
அங்கு மலையப்பனின் மணியைக் காணவில்லை.
இது பெரும் சர்ச்சையாகிச் செய்தி ஊரெங்கும் பரவியது.
அப்போது அங்கு வந்த ஜீயர் ஸ்வாமி, “பெருமாளே ஒரு பக்தைக்குத் தன் மணியைப் பரிசளிப்பதாக நான் கனவு கண்டேன்!” என்று கூறினார்.
அடுத்த சில நாட்களில் தோத்தாரம்பா கருவுற்றாள்.
புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் திருமலையப்பனின் மணியின்
அம்சமாக ஒரு ஆண் குழந்தையை ஈன்றாள். ‘
வேங்கடநாதன்’ என அக்குழந்தைக்குப் பெயர் சூட்டினார்கள்.
இவ்வாறு ஆயர்பாடியில் இருந்த மணி, திருமலையை அடைந்து, பின் காஞ்சியில் வேங்கடநாதனாக அவதரித்தது.
வேங்கடநாதன், தன்னுடைய இருபதாவது வயதுக்குள் அனைத்து வேத சாஸ்திரங்களையும் தன்னுடைய தாய்மாமாவான
அப்புள்ளாரிடம் கற்றுத் தேர்ந்தார்.
வேதாந்த ஞானத்தில் ஒப்புயர்வற்றவராக அவர் விளங்கியபடியால்,
திருவரங்கநாதனே அவருக்கு ‘வேதாந்தாச்சாரியார்’ என்ற பட்டத்தை வழங்கினார்.
அந்த வேதாந்தாச்சாரியார் தான் ‘வேதாந்த தேசிகன்’ என்று நாம் பிரசித்தியாக அழைக்கும் வைணவ மத குரு ஆவார்.
ஆயர்பாடியில் கண்ணன் வழங்கிய உத்தரவின் படி, வேதாந்த தேசிகன் வேத நெறியை நாடெங்கும் பரவச் செய்வதற்கும், பாமரர்களும்
வேதப் பொருளை அறிவதற்கும் பல முயற்சிகள்
மேற்கொண்டார்.
வேதத்துக்குத் தவறான பொருள் கூறுவோரை வாதம் செய்து வென்றார்.
அந்த வகையில் கிருஷ்ண மிச்ரர் என்றொரு
பண்டிதர் தேசிகனை எதிர்த்து வாதம் செய்ய வந்தார்.
அவர் தேசிகனிடம், “சுவாமி! நீங்கள் மட்டும் என்னை வாதில்
வென்று விட்டால் நான் என்னுடைய சித்தாந்தத்தையே விட்டுவிட்டு உங்களது சித்தாந்தத்துக்கு வந்து விடுகிறேன்!” என்றார்.
“சரி! வாதத்தைத் தொடங்குவோமா?” என்று கேட்டார், தேசிகன்.
“சற்றுப் பொறுங்கள் சுவாமி! நான் தோற்றால் உங்கள்
சித்தாந்தத்துக்கு வருவதாகப் பந்தயம் கட்டினேன்.
நீங்கள் தோற்றால் என்ன செய்வீர்கள் என்று பந்தயம் கட்டவே இல்லையே!” என்று
கேட்டார் கிருஷ்ண மிச்ரர்.
“நான் தோற்கமாட்டேன்! அதனால் பந்தயம் கட்டவேண்டிய அவசியமில்லை!” என்றார்,
தேசிகன்.
“அதெப்படி வாதம் தொடங்குமுன்பே தோற்கமாட்டேன் என அவ்வளவு உறுதியாகச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார் கிருஷ்ணமிச்ரர்.
“நான் எனது சொந்தக் கருத்தைச் சொல்லி வாதம் செய்தால் தானே வெல்வேனா தோற்பேனா என்ற விசாரம் ஏற்படும்?
கீதையில் கண்ணன் ‘வேதவிதேவ சாஹம்’ என்கிறான்.
அனைத்து வேதங்களையும் ஐயமில்லாமல் அறிந்தவன் தான் ஒருவனே
என்று கூறியிருக்கிறான் கண்ணபிரான்.
அந்தக் கண்ணனின் திருவுள்ளத்திலுள்ள கருத்துக்களையும்,
அவற்றைப் பிரதிபலிப்பவரான ராமானுஜரின் திருவுள்ளத்திலுள்ள கருத்துக்களையும் கொண்டு இப்போது அடியேன்
வாதம் செய்யப் போகிறேனே ஒழிய எதுவுமே என் சொந்தக் கருத்தில்லை.
எனவே தோல்வி என்ற பேச்சுக்கே இடமில்லை!” என்றார்.
வியந்து போனார் கிருஷ்ண மிச்ரர். அவ்வாறே வாதத்தில் கிருஷ்
ண மிச்ரரை வென்று தமது சீடராக்கினார் தேசிகன்.
அனைத்து வேதங்களின் கருத்துக்களையும் ஐயமின்றி அறிந்தவர் திருமால் ஒருவரே.
மனித புத்தியால் வேதக் கருத்துக்களை முழுமையாக அறிய முடியாது.
வேதவேத்யரான திருமாலே, நம்மாழ்வார், ராமானுஜர், வேதாந்த தேசிகன், மணவாள மாமுனிகள் போன்ற மகான்களுக்கு
அந்த வேதங்களின் பொருளை ஐயம் திரிபறத் தானே உணர்த்தி அவர்களைப் பேச வைக்கிறார்.
இவ்வாறு சந்தேகத்திற்கு இடமில்லாமல் வேதங்களின் பொருளை அடியார்களுக்கு உணர்த்துவதால்
திருமால் ‘வேதவித்’ என்றழைக்கப்படுகிறார்.
அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 130-வது திருநாமம்.
*வேதவிதே நமஹ*என்று தினமும் சொல்லி வரும் வாசகர்களுக்கு வாழ்வில்
எந்த விஷயத்திலும்
சந்தேகமில்லாமல் தெளிவான ஞானம் பிறக்கும்படித் திருமால் அருள்வார்.
☀️☀️☀️☀️☀️🐂☀️☀️☀️☀️☀️☀️