பாகீரதி ஸுகதாயினி மாதா , தவ ஜல மகிமா நிகமே க்யாதா , நாஹம் ஜானே தவ மகிமானம், த்ராஹி க்ருபாமயி மாம் அஜ்ஞானம்.
அம்மா சகல வேதங்களாலும் தவறாமல் புகழப்படும் தாயே. உன் மகிமையை நான் முழுமையாக அறியும் சக்தி இல்லாதவன் என்றாலும் என்னை, காருண்யத்தோடு, தாய் சேயின் மேல் கொண்ட பாசத்தோடு, என் குறையை லட்சியப்படுத்தாமல் உன் கருணையை வழங்கி காப்பாற்று.
3.हरिपादपद्म तरंगिणि गंगे, हिमविधुमुक्ता धवलतरंगे ।, दूरिकुरु मम दुष्कृतिभारं, कुरु कृपया भवसागरपारम् ॥
Haripada Padma Tarangini Gange,Hima Vidhu Mukta Dhavala Tarange, Doori Kuru Mama Dushkriti Bharam, Kuru Kripaya Bhava Saagara Paaram
ஹரிபாத பத்ம தரங்கிணி கங்கே. ஹிம விது முக்தா தவள தரங்கே , தூரி குரு மம துஷ்க்ருதி பாரம்
குரு க்ருபயா பவசாகர பாரம்
அம்மா, கங்காமாதா, நீ விஷ்ணுவின் தூக்கிய திருவடியில் இருந்து தோன்றிய புனிதவதி. அப்பழுக்கற்ற, களங்கமற்ற, பனி வெண்மையோடு, சந்திர ஒளிபோன்ற பால் வண்ணத்தோடு தோன்றுபவளே, என்னிடம் குடிகொண்டுள்ள பாபங்களை நீக்கி இந்த சம்சார சாகரத்தை கடக்க உதவி செய்யவேண்டுமம்மா.
4. तव जलममलं येन न पीतं, परमपदं खलु तेन न गतम् । मातर्गंगे त्वयि यो भक्तः किल तं द्रष्टुं न यमः शक्तः ॥
Tava Jalam Amalam Yena Na Peetam , Parama Padam Khalu Tena Na Gatam, Matar Gange Tvayi Yo Bhaktah
Kila Tam Drashtum Na Yamah Shaktah
தவ ஜலம் அமலம் யேன ந பீதம், பரமபதம் களு தேன ந கதம், மாதர் கங்கே த்வயி யோ பக்த:
கில தம் த்ரஷ்டும் ந யம: சக்த:
அம்மா ஒவ்வொரு ஹிந்துவுக்கும் உன் மஹிமை, பெருமை, புனிதம் கட்டாயம் தெரியும். வாழ்வில் ஒரு முறையாவது ஒரு உத்ரணி கங்கா ஜாலம் பருகாமல் மோக்ஷம் அடைய வாய்ப்பில்லையே. கங்கையை வணங்கி ஸ்னானம் செய்து, பரமேஸ்வரனை, விஸ்வநாதனை தியானிப்பவனை யமன் அணுக பயப்படுவான். ஆமாம், கங்கை நீரை அருந்தாதவன் முக்தி அடைய மாட்டான். உன்னை நம்பும் பக்தனை யமனும் அணுக முடியாது.
5.पतितोद्धारिणि जाह्नवि गंगे, खण्डितगिरिवरमण्डितभंगे । भीष्मजननि मुनिवरकन्ये पतितनिवारिणि त्रिभुवनधन्ये ॥
Patitoddharini Jahnavi Gange, Khandita Girivara Mandita Bhange, Bhishma Janani Munivara Kanyey, Patita Nivarini Tribhuvana Dhanye
பதிதோத்தாரிணி ஜாஹ்னவி கங்கே , கண்டித கிரிவர மண்டித பங்கே, பீஷ்ம ஜனனி முனிவர கன்யே
பதித நிவாரிணி த்ரிபுவன தன்யே;
கங்காமாதா, உனக்கு ஜான்யவி என்று தந்தை ஜானு மஹரிஷியின் பெயர் கொண்டவளே, வாழ்வில் வீழ்ந்தவர்களை உயர்த்துபவளே, பீஷ்மனுக்கு தாயாக பெருமை அளித்தவளே, உன்னால் பரிசுத்தமடையாதவர் யார், மூவுலகங்களிலும் புனிதமாகாதது எது?
6. कल्पलतामिव फलदां लोके , प्रणमत यः त्वां न पतति शोके । पारावार विहारिणि गंगे विमुखयुवताकृततरलापाङ्गे ॥
Kalpalataam Iva Phaladaam Loke , Pranamati Yah Tvam Na Patati Shoke , Paraavara Viharini Gange,Vimukha Yuvati Krita Tarala Apange.
கல்பலதாம் இவ பலதாம் லோகே , ப்ரணமதி யஹ் த்வாம் ந பததி ஷோகே , பாராவார விஹாரிணி கங்கே
விமுக யுவதா க்ரித தரலாபாங்கே
அம்மா, நீ தான் நினைத்ததெல்லாம் அளிக்கும், வேண்டியதெல்லாம் தரும் கல்ப தரு. உன்னை தொழுது பணிந்து வேண்டியவர்கள் குறையற்றவர்கள். துக்கம் நெருங்காதவர்கள்.
तव चेन मातः स्त्रोतः स्नानं पुनरपि जठरे सोऽपि न जातः । नरकनिवारिणि जाह्नवि गंगे कलुषविनाशिनि महिमोत्तुङ्गे ॥
Tava Chen Matah Strotah Snaanam , Punarapi Jathare So’pi Na Jaatah, Naraka Nivaarini Jahnavi Gange ,Kalusha Vinaashini Mahimottunge
தவ சேன் மாத: ஸ்த்ரோதஸ் ஸ்நானம், புனரபி ஜடரே சோபி ந ஜாத:, நரக நிவாரிணி ஜாஹ்னவி கங்கே
கலுஷ விநாஶினி மகிமோத்துங்கே;
கங்கையில் ஒரு முறை ஸ்னானம் பண்ணினவர்கள் மறு பிறவி அற்றவர்கள். அவள் தான் அவனுடைய எல்லா ஜென்மங்களிலும் செய்த பாபங்களை அழித்துவிடுவாளே. அவன் எதற்கு கர்ம வினை தீர மீண்டும் பிறவி எடுக்கவேண்டும். அவனுக்கு பழைய பாக்கி ஒன்றுமே இருக்காதே.
8. पुनरपि जननं पुनरपि मरणं, पुनरपि जननी जठरे शयनम् । इह संसारे बहुदुस्तारे कृपयापारे पाहि मुरारे ॥
Punarapi Jananam Punarapi Maranam, Punarapi Janani Jathare Shayanam. Iha Samsaare Bahu Dustare, Kripaya Paare Paahi Murare
புனரபி ஜனனம் புனரபி மரணம், புனரபி ஜனனி ஜடரே ஷயனம் , இஹ ஸம்சாரே பஹு துஸ்தாரே
க்ருபயாபாரே பாஹி முராரே
இந்த கடைசி ஸ்லோகம், ஏற்கனவே நாம் ஆதி சங்கரரின் பஜகோவிந்தத்தில் அறிந்தவர்கள். அதை மீண்டும் இங்கே அழகாக இணைத்திருக்கிறார் ஆதி சங்கரர்.
வாழ்க்கை என்பதே பிறப்பு, இறப்பு, ஜனன மரண வட்டம். முரனை ஸம்ஹாரம் செய்த முராரி, கிருஷ்ணா, உன் அருளால் நான் இந்த ஸம்ஸார சாகரத்திலிருந்து .விடுதலை பெறவேண்டும். உன் அருளின்றி இதை கடப்பது துர்லபம்.