இரு ஸபைகளும் மௌன அகண்டமே!-தெய்வத்தின் குரல்
ஏழாம் பாகம்)
ஜகத் என்பது நிஜமேயில்லை, ‘பொய்ம்மாயை’ தான்1
என்கிற இதே தத்வத்தைத்தான் சித்ஸபையிலே ஆட்டக்காரரும் காட்டுகிறார். பரமாத்மாவின்
சித்த ஸபைக்குள்ளே முளைத்த ஜகத்தையே தன்னுடைய ஆட்டத்தினால் உண்டாக்குவதாக நமக்குப்
புரியும்படி, கண்ணுக்குத் தெரியும்படி பரம க்ருபையோடு – ‘க்ருபாநிதி இவரைப் போலக்
கிடைக்குமோ?’ என்றே கோபாலக்ருஷ்ண பாரதி கேட்கிறாரே,2 அப்படிப்பட்ட க்ருபையோடு –
ஆனந்த நடனமாக, வெளிநாட்டு அநுபவிகளும் கலாரஸிகர்களுங்கூட, ‘இதற்கு மேலே ஒரு
மூர்த்தியில்லை!’ என்று கொண்டாடும்படியான ரூபத்தோடு ஆடிக்
காட்டுகிறார்!
அத்தனை சித்தங்களும், அவருடைய திவ்ய சித்தமுமேகூட
அடங்கிப் போய், வெளியிலே தெரிகிற சிவனும் உள்ளுக்குள் உள்ளே இருக்கும் சிவமாக
இருக்கிற பரப்ரஹ்மமான ஞான ஆகாசமே இத்தனைக்கும் அடி ஆதாரம். அது ஒன்றே பரம ஸத்யம்.
அது ஆடாமல் அசையாமல் இருந்து கொண்டே இத்தனை ஆட்டத்துக்கும் ஆதாரமாக இருக்கிறது.
‘சிதம்பரம்’ என்றால் அந்த ‘ஞானாகாசம்’ தான். ‘சித்’ – ஞானம்; ‘அம்பரம்’ – ஆகாசம்.
அதையே தம் ஆட்டத்துக்கான ஸபைமேடை – dias – ஆகக்
காட்டுகிறார்.
அதே மௌன அகண்டத்தையே நித்திரை என்ற ரூபத்தில்
அரங்கத்தின் தூக்கக்காரர் காட்டுகிறார்.
‘பொய்ம்மாயப் பெருங்கடலில்’ என்ற அப்பரடிகளின்
திருவாக்கு ஸ்ரீசரணர் மிகவும் உகந்த ஒன்று. எனவே போலும், இவ்வுரையில் ‘பொய்ம்மாயை’
என்று புணர்ச்சி ‘ம்’மை அழுத்தியே ஒவ்வொரு முறையும்
கூறினார்.
’ஸபாபதிக்கு’ என்ற பாடல்.
ஆகக்கூடி மொத்தத்தில், மறக்கக் கூடாத பெரிய
தத்வமாக, ஸத்யமாக நாம் தெரிந்து கொள்வது, ‘அந்த இரண்டு ஆஸாமிகளும் வெளிப்பார்வைக்கு
அடியோடு வித்யாஸமான வெவ்வேறே கார்யங்களைப் பண்ணினாலும் உள்ளே ஒருத்தரே தான்! ஒரே
தத்வத்தைத்தான் அவர்கள் இரண்டு விதமாக ரூபகம் செய்து காட்டுகிறார்கள்’
என்பதுதான்.
திருப்பாவை பாசுரம் 19
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கைமேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய் நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லையால்
தத்துவம் அன்று தகவு ஏல் ஓர் எம்பாவாய்
19.
திருவெம்பாவை
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன்று உரைப்போம் கேள்
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கு எங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய்.
19
WITH PRANAMS
N.RAMESH NATARAJAN(SRI
KARYAM,COIMBATORE--98422 92536
TIRUPUR RAMANATHAN-63816 83335