ஆதி சங்கரர்

6 views
Skip to first unread message

amritha varshini

unread,
Dec 3, 2014, 8:19:22 PM12/3/14
to amrith...@googlegroups.com
From: uma kbs <uma...@yahoo.com>
Date: 2014-12-03 23:46 GMT+05:30
Subject: aathi sankarar
To: "amrithava...@gmail.com" <amrithava...@gmail.com>



    நமக்கு கடவுள் மூளையையும் கொடுத்து அதில் செய்திகளைச் சேகரித்து வைக்கும் திறமையையும்    அளித்திருக்கிறார் ஆனால் நாம் வேண்டாதவைகளை  மூளையில் இருத்தி வேண்டியவைகளை அப்புறப்படுத்தி விடுகிறோம் . விளைவு , மற்றவர்களுடன் எழும் வாதம் , விவாதம் , சச்சரவு போன்றவைகளே. அதனால் பல கேடுகள் விளையக் காராணமாகிவிடுகிறது
      
`    ஆனால் சான்றோர்கள் அப்படியல்ல வேண்டாதவைகளை ஒதுக்கி வைத்து வேண்டியவைகளை , ஒரு பார்வையின் மூலமே மூளையில் பதித்து விடுகின்றனர் இதற்கு ஓர் உதாரணம் ஆதி சங்கரர் ஆவார். .

    சக்தி பத்ரர் என்பவர் கி.பி.7ம் நூற்றாண்டில் வாழ்ந்த வடமொழிப் புலவர்.ஆவார். இவர்  ஆதிசங்கரரின் சீடர். ஆவார். இவர் எழுதிய" ஆச்சாரிய சூடாமணி" என்ற க்ரந்தத்தை , ஆதிசங்கரருக்கு வாசித்துக்  காண்பித்த போது, சங்கரர் மௌன வ்ரதமிருந்தார். அதையறியாத இவர் தன் நூலைப் பற்றிப்  பெரியவர் ஒன்றும் கூறவில்லையே எனக் குறை பட்டுகொண்டார். அதனால் மனம் நொந்து  அந்நூலை எரித்துவிட்டார். மறு நாள் ஆதிசங்கரர் அந்நூலைக் கொண்டுவா  என்று கேட்க,  தான் எரித்து விட்ட்தாக்க் கூறினார் சக்தி பத்ரர்   ஆனால் என்ன அதிசயம் ஆதிசங்கரர் அந்த நூல் பூராவும் அப்படியே ஒப்பித்தார்!!!

    நாமும் ஆதி சங்கரர் போல மேதாவியாக இல்லாமல் இருந்தாலும் யாரேனும் நல்ல விஷயங்களைக் கூறினால் அதை காது கொடுத்துக் கேட்கும் பயிற்சியையாவது மேற்கொள்ள வேண்டும் . ---- உமாபாலசுப்ரமணியன்


Reply all
Reply to author
Forward
0 new messages