🌹 எம்பெருமான் மாணிக்கவாசக சுவாமிகள் திருவடி சரணம் 🌹 🌿 திருப்பள்ளியெழுச்சி பாடல் - 9 -10 🌹விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொருளே! உன் தொழும்பு அடியோங்கள் 🌹மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே! வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம் 🌹கண்ணகத்தே🌹 நின்று களிதரு தேனே! கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார் எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்! எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே! �

6 views
Skip to first unread message

Ramakrishnan K S

unread,
Nov 12, 2025, 4:38:52 AM (yesterday) Nov 12
to Abridged Recipients
Inline image
🌹 எம்பெருமான் மாணிக்கவாசக சுவாமிகள் திருவடி சரணம் 🌹

 🌿 திருப்பள்ளியெழுச்சி பாடல் - 9 -10

 🌹விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
விழுப்பொருளே! உன் தொழும்பு அடியோங்கள்

 🌹மண்ணகத்தே வந்து வாழச் செய்தோனே!
வண் திருப்பெருந்துறையாய்! வழியடியோம்

  🌹கண்ணகத்தே🌹 நின்று களிதரு தேனே!
கடலமுதே! கரும்பே! விரும்பும் அடியார்
எண்ணகத்தாய்! உலகுக்கு உயிரானாய்!
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே!

🌹பொருள்:🌹

விண்ணுலகிலுள்ள தேவர்களாலும் நெருங்க முடியாத சிறந்த பொருளான சிவபெருமானே! உன்னை வணங்கும அடியவர்களுக்காக நீ இந்த மண்ணுலகிற்கு வந்து அருள்செய்து வாழ வைத்தாய். வளம் நிறைந்த திருப்பெருந்துறையில் வசிப்பவனே! பரம்பரை பரம்பரையாக உனக்கு பணிவிடை செய்யும் அடியவர்களின் கண்களுக்கு மட்டும் தெரியும் இனிய தேனே! பாற்கடலில் கிடைத்த அமுதமே! கரும்பே! உன்னை அணுகும் அடியவர்களின் எண்ணங்களில் நீக்கமற நிறைந்திருப்பவனே! நீயே இந்த உலகின் உயிர். எம்பெருமானே! நீ கண் விழித்தால் இந்த உலகம் வாழும்.


திருப்பள்ளியெழுச்சி பாடல் 10

🔥புவனியில் போய் பிறவாமையில் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக்

🔥 கொள்கின்றவாறென்று நோக்கி
திருப்பெருந்துறையுறைவாய் திருமாலாம்
அவன் விருப்பெய்தவும் மலரவன் 

 🔥ஆசைப்படவும்
நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!

 🔥பொருள்:🔥

திருப்பெருந்துறையில் வசிக்கும் சிவனே! பூமியில் பிறந்த அடியார்களெல்லாம் சிவனால் ஆட்கொள்ள படுகிறார்கள். ஆனால், நாம் பூமியில் பிறக்காத காரணத்தால் வீணாக நாளை போக்குகின்றோம் என்று திருமாலும், அவனது உந்தித்தாமரையில் பிறந்த மலரவனான பிரம்மாவும் வருந்துகின்றனர்.

 எனவே நீ, உண்மையான கருணையுடன் இந்த உலகிற்கு வந்து எங்களை ஆட்கொள்ள வல்லவனாய் இருக்கிறாய். எவருக்கும் கிடைக்காத அமுதமே! நீ பள்ளி எழுந்தருள்வாயாக!

சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம்  .சிவனே சரணாகதி

🙏🔱❤️அப்பனே  அருணாச்சலா உன் பொற் கழல் பின்பற்றி

🌹சித்தமெல்லாம்🌹
🌹சிவ மயமே🌹

Reply all
Reply to author
Forward
0 new messages