
பங்கு உண்டு எனும்போதே கூர்த்த ஜாக்கிரதையுடன் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமும் கூற வேண்டும். என்னவெனில், நாட்டைச் சேர்ந்த பிரஜைகளின் உள்ளவுயர்வுக்கு உபாயமான மதாபிமானத்தை வளர்த்துக் கொடுப்பதில் அரசாங்கத்திற்கு ஒரு பங்கு மட்டுந்தான் உண்டு என்பதேயாகும். அதாவது மதத்துறையில் அரசாங்கமே முற்றிலும் பொறுப்பேற்பது ஒருபோதும் ஏற்கத் தக்கதல்ல. மத வளர்ச்சியில் தன் பங்கை ஓர் அரசாங்கம் மறக்கலாகாது என்பது எவ்வளவு முக்கியமோ, அதனினும் முக்கியம் அப்பங்கின் வரம்பைக் கடந்து அது செயலாற்றலாகாது என்பதாகும்.
மதக் கொள்கைக்கு முரணான சட்டங்கள் கூடாது -அதாவது எல்லா மதங்களுக்கும் ஒரே போல் ஆதரவளிப்பதான சரியான செக்யூலரிஸமோ, எம்மதத்திலும் சம்பந்தம் கொள்ளாத தவறான செக்யூலரிஸமோ, எதனை அரசாங்கம் ஏற்கின்ற போதிலும் அரசியலாரின் சமூகக் கொள்கைகளுக்குப் பொருந்தும் வகையில் மதங்களில் வகுத்துள்ள விதிகளுக்கு முரணாகச் சட்டமியற்றும் அதிகாரத்தை அரசாங்கம் கைக்கொள்ளலாகாது. எம் மதத்திலும் சம்பந்தப்படுவதில்லை என்ற தவறான செக்யூலரிஸத்தை மேற்கொண்ட பின்பும் எதிர்மறை சம்பந்தமாக மத விதிகளில் இவ்வாறு துர்பிரவேசம் மட்டும் செய்யலாம் என அரசாங்கம் கருதுமேயாகில் அதனை நாம் ஏற்பதற்கில்லை.
இதன்படி மத விஷயங்களில் கோட்பாடுகளில், பழக்கவழங்களில் ஒர் அரசாங்கமே நேரடியாகப் பிரவேசித்து எதுவும் செய்தல் அறவே கூடாது. சில மதஸ்தரின் மத விதிகளில் மட்டும் புகுந்து மாற்றுவது, மற்றவர்களைத் தொடாமல் விடுவது எனப் பாரபட்சம் செய்தால் ஜனநாயகக் குடியரசு என்பதன் அஸ்திவாரக் கொள்கையிலேயே ஒன்றான சகலருக்கும் சம cF என்பதை அரசாங்கமே முறித்த மாபெரும் தவறாகும்.
மதக் கொள்கையை மீறினால் அதிலும் சமநீதி காட்டவேண்டும்.எனினும் தவிர்க்க முடியாமல் அவ்வாறான ஒரு நிலையைத் தாங்கிக் கொள்ள நேரிடின், அப்போது ஒரு விஷயத்தை வலியுறுத்த விரும்புகிறோம். அதாவது மத விதிக்கு முரணாகவும் தமது சமூகக் கொள்கைக்கு ஏற்பச் சட்டமியற்றலாமென ஓர் அரசாங்கம் கருதுகையில் இக்கருத்தை நாட்டின் சகலப் பிரஜைகள் குறித்தும் ஒரே போல் அமல் செய்து, அதாவது நாட்டில் வழங்கும் எல்லா மதங்களின் விதிகளையும் கருதாது சமமாக அமல் செய்து, பிரஜைகள் அனைவருக்கும் சம cF வழங்குதல் என்ற ஆதாரக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.
திருப்பள்ளியெழுச்சி
WITH PRANAMS
N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536
