💥💥💥💥💥💥💥💥💥💥💥💥
🏵️🏵️🏵️🏵️🏵️♨️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️
🌹
🕉 🏵️ ஸ்ரீ மஹா பெரியவாளின்-நமக்கு வழிகாட்டும்-தினசரி வாக்கியங்கள்
👇👇👇👇
👇👇
👇👇
👇
🌸🌸🌸🌸🌸🌸☀️🌸🌸🌸🌸🌸
கால ஆராய்ச்சி சரியல்ல :
🌸🌸🌸🌸🌸🌸☀️🌸🌸🌸🌸🌸
வெள்ளைக்காரர்கள் விஷயத்துக்கு ஏன் வந்தேன் என்றால், வேதம் அநாதி என்பதைப் பற்றிச் சொல்லும்போது, வெள்ளைக்காரர்களின் அபிப்ராயத்தைச் சொல்ல வந்தேன். வேதம் அநாதி என்றால் அவர்களுடைய மனப்பான்மைக்கு அது ஏற்கும்படியாக இல்லை. என்னதான் நடுநிலைமை, scientific research என்றாலும், ‘இந்த ஹிந்துக்களின் புஸ்தகத்துக்கு இப்படி ஒரு ஏற்றம் தருவதா? என்று அவர்களில் சிலருக்கு மனஸுக்கு ஸம்மதப்படவில்லை. இன்னம் சில பேர் இப்படியில்லாவிட்டாலும் பகுத்தறிவுப்படி, ஸயன்டிஃபிக்காக ஆராய்ச்சி பண்ணித்தான் எதையும் ஒப்புக்கொள்ளலாம் என்ற அபிப்ராயத்தில் ரிஸர்ச் செய்திருக்கிறார்கள். அநாதி என்கிற வாதத்தை ஏற்கமுடியாமல், இதே ரீதியில் அநேகம் படித்த ஹிந்துக்களும் ஆராய்ச்சி பண்ணியிருக்கிறார்கள்.
இவர்கள் ஆராய்ச்சி மூலம் காலம் கணிப்பதில் முக்யமாக இரண்டு தினுசு இருக்கிறது. ஒன்று வானசாஸ்திர ரீதியில் (astronomical -ஆகப்) பண்ணுவது. இன்னொன்று பாஷையின் ரூபத்தை வைத்து நிர்ணயம் பண்ணுவது. இப்படிச் செய்து வேதத்துக்கு கால நிர்ணயம் பண்ணுவதில் முடிந்த முடிவாக ஒரு தீர்மானத்துக்கு வந்திருக்கிறார்களா என்றால், அதுதான் இல்லை. ஒவ்வொரு அறிஞர் ஒவ்வொரு அபிப்ராயத்தைச் சொல்கிறார். திலகர் கி.மு.6000-ல் வேதம் உண்டாயிற்று என்கிறார். வேறு சிலர் கி.மு. 3000 என்கிறார்கள். அதைவிடக் கிட்டத்தில் கி.மு. 1500-க்கு வேதகாலத்தை இழுத்து விட்டிருக்கிறவர்களும் உண்டு.மற்ற மதப் புஸ்தகங்களைப் பற்றி இப்படி அபிப்ராய பேதம் இல்லை. பௌத்தர்களின் த்ரிபிடகத்தை எடுத்துக் கொண்டால் அது அசோகன் காலத்தில் எழுதப்பட்டது என்றும், ஆனாலும் அதிலுள்ள புத்தரின் உபதேசங்கள் அசோகருக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முந்தி, அதாவது இன்றைக்கு 2500 வருஷத்துக்கு முன் புத்தர் சொன்னவை என்றும் ஏகமனதாக அபிப்ராயப்படுகிறார்கள். பைபிளின் ந்யூ டெஸ்ட்மென்ட் உண்டாகிக் கிட்டத்தட்ட 2000 வருஷம் ஆகிறது என்பதிலும் ஏகோபித்த அபிப்ராயம் இருக்கிறது. குரான் உண்டாகி சுமார் 1300 வருஷம் ஆகிறது என்று ஸகலரும் ஒப்புக் கொள்கிறார்கள். நம் வேதத்தின் விஷயத்தில் மட்டும் இப்படி ஒரு முடிவான தீர்மானம் ஏற்படாமலிருக்கிறது.
🌸🌸🌸🌸🌸☀️🌸🌸🌸🌸🌸🌸