TODAY'S POST- VISHWAVASU-UTHRAYANAM-SISIRA-KUMBA-SHUKLA-EKADESI-BIRUGU-ARUDRA

12 views
Skip to first unread message

sreemutt...@gmail.com

unread,
Feb 28, 2026, 5:58:19 AM (5 days ago) Feb 28
to

IMG-20260216-WA0230

அரசியல் சுதந்திரம் போல் ஆன்மிய சுதந்திரத்திற்காகவும் மக்களே போராட வேண்டும். -

தெய்வத்தின் குரல்- ஏழாம் பகுதி

ஆயினும் போகிற போக்கைப் பார்க்கும்போது, 'இதையெல்லாம் புதிய பாரத சுதந்திர அரசாங்கத்தார் செய்வார்களா? அந்த விதத்திலேயே நமது தேசத்தின் அரசியல் நிர்ணயச் சட்டம் வகுக்கப்படுமா? என்ற வினாக்கள் எழத்தான் செய்கின்றன. நவீனப் புரட்சிக் கருத்துக்கள் கொண்ட தேசத் தலைவர்களிடமே முக்கியமாக ஆட்சிப் பொறுப்பு போயிருப்பதால், செக்யூலரிஸம் என்பதற்கு அரசாங்கம் எந்த மதத்தின் சம்பந்தமும் எவ்விதத்திலுமின்றி உலகியல் முன்னேற்றம் என்ற ஒன்றையே கருதி நடப்பது என்றுதான் தப்பர்த்தம் செய்துகொள்ளப்பட்டு, அந்த அனர்த்தமே காரியமாகப் போகிறதோ என்றுதான் தோன்றுகிறது.

எனவே இப்போது பொது ஜனங்களேதான் குறிப்பாக அவர்களில் ஏனைய நாடுகளின் உலகியல் சார்ந்த கொள்கைக்கு மாறாக பாரதத்திற்கேயான ஆத்மிக மரபில் நாட்டம் கொண்டோராக இன்றைக்கும் மிஞ்சியுள்ள அறிஞர் பெருமக்களேதான் - செயற்களத்தில் முழுமூச்சுடன் குதித்து, சகப் பிரஜைகளையும் தட்டியெழுப்ப வேண்டுமென வற்புறுத்துகிறோம். பாரதம் சுதந்திரம் பெற்றுள்ள இப்போதே அதை உண்மையான ஸ்வ-தந்திர ஆத்மிக நாடாகப் புத்துயிர் கொளச் செய்யும் அரிய வாய்ப்புக் கிட்டியுள்ளது. ஆனால் புதிய அரசாங்கம் அவ்வாய்ப்பை மனமறிந்து பறிகொடுக்கக்கூடிய நிலையே ஏற்படுமோ எனத் தோன்றுவதால் இந் நாட்டில் இன்றுமுள்ள உண்மையுணர்கிற மேன்மக்களே இவ்வாய்ப்பை அந்தரான்மப்பூர்வமாய் ஏற்று, மற்றோரையும் தட்டியெழுப்பும் பணிக்குத் தம்மை அர்ப்பணித்துக் கொண்டு ஆர்வமுடன் ஈடுபடவேண்டுமென வற்புறுத்துகிறோம். அரசியல் சுதந்திரத்திற்கென ஆர்வத்துடன் போராடத் தொண்டர்படை திரண்டது போலவே, நமது ஆன்மிகச் சுதந்திரத்திற்கும் ஒரு சாத்துவீகப் படை திரள வேண்டுமெனக் கூவியழைக்கிறோம்!இதற்கு உறுதுணையாக என்றும் உடனிற்க ஈசனையும் கூவியழைத்து வேண்டுகிறோம் நன்மக்கள் யாவரையும் அவ்வாறு வேண்டவும் தூண்டுகிறோம்.

அரசியல் சுதந்திரப் போராட்டத்திற் போலவே இவ்வான்மியச் சுதந்திரப் போராட்டத்திலும் நமது நாட்டின் சகல மக்களும் ஜாதி, மத பேதமின்றி ஒற்றுமையாக ஒன்றுகூடிச் செயற்புரிதல் வேண்டும். அந்நியராட்சியை அகற்றியது சுயாட்சியில் நாட்டைச் செவ்வனே உருவாக்குவதற்குத்தான். அந்நியராட்சியை அகற்றுவதில் ஒரே சமுதாயமாக ஒற்றுமை காட்டிய பாரத மக்கள் நாட்டை நல்லுருப்படுத்தும் பெரும் பொறுப்பினைப் பெற்றுள்ள இன்று தமக்குள் பேதங்கள் பாராட்டிப் பிரிந்து பிரிந்து நிற்கின் சுதந்திரம் பெற்றதன் பயனையே இழந்துவிட நேரிடும்

 

WITH PRANAMS 

N.RAMESH NATARAJAN(SRI KARYAM,COIMBATORE--98422 92536

TIRUPUR RAMANATHAN-63816 83335
 Untitled
IMG-20260216-WA0230[1].jpg
Untitled[1].jpg

sreechakr...@gmail.com

unread,
Mar 2, 2026, 11:30:13 PM (3 days ago) Mar 2
to
IMG-20260217-WA0191
சிறுபான்மைச் சமூகத்தினரும் தேசப் பற்றுக் கொள்ளச் செய்வது பெரும்பான்மையினரின் அன்புக் கடமையாகும் -தெய்வத்தின் குரல்- ஏழாம் பகுதி
 
இவ்வறிக்கையில் நாம் சில சமூகத்தினர் கைக்கொண்ட முறை தவறுகளை எடுத்துக்காட்ட வேண்டியிருந்தது எதிர்காலத்திற்குப் படிப்பினை காட்டி எச்சரிக்கும் பொருட்டுத்தானேயன்றி, இன்று அச்சமூகங்களின் வழிவந்தோரிடம் ஹிந்து சமூகத்தினர் மன வேற்றுமை பாராட்டிப் பூசலிடுவதற்குத் தூண்டு முகமாகவல்ல. தங்களைப் போலவே இந்நாட்டில் வாழும் ஏனைய சமூகத்தினரும் சம உரிமை பெற்ற சகப் பிரஜைகளே என்ற உணர்ச்சியை நாட்டின் பெரும்பான்மைச் சமூகத்தினரான ஹிந்துக்களே முன்நின்று நடத்திக் காட்ட வேண்டுமென்பதே நமது விருப்பம். பிற மதத்தினர்களிடமும் அன்போடு பழகி இந்நாட்டிலுள்ள எல்லா மதப் பிரஜைகளும் ஒரே போல பாரதீயர்தாம் என்று அவர்கள் உணருமாறு செய்வதை ஹிந்துக்கள் ஒரு கடமையாக மதித்துப் பொறுப்புணர்ச்சியுடன் ஆற்ற வேண்டுமென்பது நமது விருப்பம். அவ்விதம் செய்தால் தான் சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்தோருக்கும் பாரதமே தமது தாயகம் என்ற சுதேசாபிமானம் உறுதியாக உருவாகி நிலைக்கும். சுதந்திரப் போராட்டத்தின் கடைசிக் கட்டத்தில் ஒரு சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தோரில் பலருக்கு இதற்கு மாறான உணர்ச்சி அச் சமூகத் தலைவர்களாலேயே தூண்டப்பட்டு அதனால் நிகழ்ந்த உற்பாதங்களை நாம் மறவாதிருப்பின் இவ்வாறு சிறுபான்மையினருக்குச் சதேசாபிமானம் பாரதத்திடம் உறுதிப்படாவிடில் எதிர்காலத்தில் எத்துணை அபாயம் ஏற்படக்கூடுமென்று காண்போம். மனிதகுலம் முழுவதற்கும் பொதுவான ஒரே ஈசனின் குடிமக்களாகவும் குழந்தைகளாகவும் நாட்டின் சகலப் பிரிவினரும் ஒன்றுகூடி உழைத்தால்தான் இந்நாட்டை உலகுக்கே உதாரணமானதோர் ஆன்மிய மையம் கொண்ட அமைதி நாடாக உருவாக்கவியலும்.
IMG-20260217-WA0191[1].jpg
Untitled[1].jpg
Reply all
Reply to author
Forward
0 new messages