மகாநதிக்கு வேத காலத்தில் “சித்ரோத்பலா” (Chitrotpala) என்ற அழகான பேர்.ஒரிஸ்ஸா, கலிங்க நாட்டுக்கு ஜீவாதார நதி.அசோகர் போன்ற மௌரிய ராஜாக்கள்,
சோமவம்சி, கங்கா வம்ச ஆட்சி ராஜாக்கள் நிறைய இதன் கரையில் கோவில்கள் கட்டியவர்கள்.
ஸ்கந்த புராணம் மஹாநதியை “பாவநாசினி” என்கிறது. பரமேஸ்வரன் தலை சடை யிலிருந்து ஒரு துளி கங்கை பூமியில் விழுந்தது. அதுவே மகாநதி என்று ஒரு புராணக் கதை.
உலகின் நீளமான மண்அணைகளில் ஒன்றான ஹிராகுட் அணை மஹாநதியின் குறுக்காக 1957 ல் கட்டப்பட்டது. நேரு காலத்திய சுதந்திர இந்தியாவின் முதன்மை பன்முகத் திட்டங்களில் ஒன்று.
ஒரு கிசுகிசு விஷயம் சொல்லட்டுமா ? மஹா நதியின் அடியில் ஒரு பழைய நகரம் மூழ்கியிருக்கிறது. வெள்ள காலத்தில் கோயில் மணிகள் கண கண என்று ஒலிக்கும் சப்தம் இரவில் கேட்கிறது. நாகர்கள் அங்கே வாழ்கிறார்கள் என்று பேசிக்கொள்கிறார்கள். நான் இரவு நேரத்தில் ஒருநாளும் அங்கே போவதாக உத்தேசம் இல்லை. மகாநதி கரை பிரதேசம் செழிப்பானது. அரிசி விளைகிறது. காடுகள் நிறைய இருக்கிறது. விதவிதமான பறவைகள் விலங்குகள் உள்ளன. ஒருகாலத்தில் அடிக்கடி வெள்ளம் பெருக்கெடுத்து கிராமங்களை அழித்ததால் மஹாநதிக்கு ஒரிஸ்ஸாவின் துயரம் Sorrow of Odisha” என பட்டப்பெயர். சப்த நதி ஸ்தோத்ரம் இதன் பெயர் இல்லை.
महापुण्या महा नदी पाप नाशिनि शुभप्रदा। स्नानमात्रेण मानवो मुक्तिं लभते निश्चितम्॥ என்று ஒரு ஸ்லோகம் உண்டு. அதவாது மஹாநதி புண்யம் தருவது. பாவங்களை அழிப்பது. அதில் ஸ்னானம் பண்ணினால் முக்தி.
चित्रोत्पला महाभागा सर्वतीर्थफलप्रदा। गङ्गासमा स्मृता लोके पापनाशनकारिणी॥
சித்திரோத்பலா எனப்படும் இந்த மஹாநதி ,அனைத்து தீர்த்தங்களின் பயனை தருகிறது. கங்கைக்கு நிகரானது....